நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? M.K முருகானந்தன் வண்ணங்கள் இல்லாத உலகில் வாழ்வது பற்றி கற்பனை பண்ணவே முடியவில்லை. நீல வானம், வெண் மேகங்கள், பசுமை போர்த்திய தாவரங்கள், மாலையில் சூரியன் தாழும்போது மஞ்சள் சிகப்பு எனப் பரவும் நிறக்கலவைகள். ஆகா! என்ன தவம் செய்தோம் இந்த வையகத்தில் மானிடராய் பிறப்பதற்கே! வானவில் காட்டும் வண்ண ஜாலத்தில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற ஏழும் உள்ளத்தைக் களிகொண்டு ஆடச்செய்கிறது. ஆனால் சிவப்பு , நீலம், பச்சை ஆகிய மூன்று மட்டுமே அடிப்படை வண்ணங்கள் ஆகும். பாரதியின் உள்ளத்தையும் வண்ணஙகள் கிளந்தெறச் செய்தன. "என்னடி இந்த வண்ணத்தியல்புகள்! எத்தனை வடிவம்!எத்தனை கலவை…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஜெ.கிருஷ்ண மூர்த்தியின் சிந்தனைகள் என்ற நூலைப் படிக்க ஆரம்பித்தேன். அவர் சொல்கிறார்... வெளிப்படையாக, நாம் நாசூக்கானவர்களாக, கண்ணியமானவர்களாகத் தெரியலாம். ஆனால், உள் மனதில் வெறுப்பு, பொறாமை, துவேஷம், வன்முறை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம். மிருகத்தைத் தட்டிக் கொடுத்து நல்லவிதமாக நடத்தும் வரை, அது நம்மிடம் நட்புறவோடு இருக்கும். அதை பகைத்துக் கொள்ளும் போது, அதன் உண்மையான வன்முறை ரூபம் நமக்கு புலப்படும். நாமும் அத்தகைய மிருக சுபாவம்தான் அடிப்படையில் பெற்றிருக்கிறோம். நம் விருப்பும், வெறுப்பும்தான் வன்முறையின் அடிப்படை. "நீ கிறிஸ்தவன் - நீ இந்து - நீ இஸ்லாமியன்' போன்ற பிரச்சாரங்கள், ஆழ்மனதில், எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்ட…
-
- 2 replies
- 1.4k views
-
-
அடிக்கடி மூக்கை உறிஞ்சுவது, ஹாச்... என்று தும்முவது, தலையை பிடித்துக் கொள்வது எல்லாம் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. காரணம், ஏதோ வேலை பளு, குடும்ப பிரச்னை என்று எண்ணி, ஆண்களே, நீங்கள் புளகாங்கிதம் அடைய வேண்டாம். உண்மையில் ஆண்களுக்கு எதிர்ப்புச்சக்தி வெகுவாக குறைவாம். அதுபற்றி லண்டன் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வந்தாலும் குறிப்பாக எதிர்ப்பு சக்தி விஷயத்தில் புது தகவல்களை வெளியிட்டுள்ளனர். சிறிய வயதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாகத் தான் எதிர்ப்புச்சக்தி உள்ளது. ஆனால், வயது அதிகமாக அதிகமாக, ஆண்களிடம் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. பெண்களை விட அவர்களுக்கு குறைவாகவே உள்ளது. அதனால் தான் ஆண்களுக்கு அதிகமாக ஜலதோஷம், தொண்டைக்கட்டு, இருமல் …
-
- 0 replies
- 1.4k views
-
-
நான் அண்மையில் பார்த்த ஒரு அருமையான ஆவணப்படம். என்னை பாதித்த பலவிடயங்கள் இதில் உண்டு. supersize me http://video.google.com/videoplay?docid=-1432315846377280008&ei=yOflSrf5CKLwqAPui72vCQ&q=supersize+me&hl=en# முதலில் பாருங்கள்.தொடர்ந்து பேசுவோம்.
-
- 2 replies
- 1.4k views
-
-
நூலறிவோடு உலக அனுபவத்தைப் பெற ஊன்று கோலாயிருப்பது. நல்லனவற்றைக் கேட்டு பெருமைபடச் செய்வது. தீயவழியில் தூண்டல்களையும் உணர்கிறது. எனவே, செவிகள் கேட்பதற்கும், சமநிலைக்குமான உறுப்புகளாகத் திகழ்கின்றன. செவியில் புறச்செவி (வெளிச்செவி), இடைச்செவி(நடுச்செவி), உட்செவி என்ற மூன்று பகுதிகள் உள்ளன. வெளியில் தெரிவது புறச்செவி, இது புனல் மாதிரி ஒலி அலைகளைச் சேர்த்து இடைச்செவி மற்றும் உட்செவிக்கு அனுப்புகிறது. காது கொடுத்து கேளுங்கள்! உங்கள் காது கேட்கிறதா? கேட்பதின் மூலம் அறிவு தெளிவு பெறுகிறது. நிலைத்த அறிவுச் செல்வமே எல்லாவற்றிலும் சிறந்தது. தீங்கு பயக்காத இன்பத்தைக் கொடுப்பது. செவிக்கு உணவாக விளங்குவது கற்றலின் ஆயினும் கேட்க வாய்ப்பளிப்பது. புறச்செவியில் மடலும்,…
-
- 2 replies
- 1.4k views
-
-
தன்னம்பிக்கை- மகிழ்ச்சி வளரணுமா? ஸ்மைல் ப்ளீஸ்... மனிதனின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணாடியாக முகம் உள்ளது. சோகம், மகிழ்ச்சி, விரக்தி, கோபம், அருவருப்பு என பல வகையான உணர்வுகளை ஒருவன் பூட்டிக் கொள்ள நினைத்தாலும் அது முடியாது. இப்படிப்பட்ட முகத்துக்கு அழகு தருவது எது? சிரிப்பு தான். சிரிப்பு இல்லாத முகம் தெய்வம் இல்லாத கோவில் போன்றது என்று சொல்லலாம். கள்ள கபடமற்ற குழந்தைகள் சிரிப்பதை பார்த்தால் சகல சோகங்களும் ஓடி விடும். அதை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். அதுபோல சிலர் எப்போதும் சிரித்த முகத்துடன் பொலிவுடன் காணப்படுவர். இத்தகைய நபர்களிடம் பழகுவதற்கும் அனைவரும் விரும்புவர். சிரித்த முகம் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. …
-
- 2 replies
- 1.4k views
-
-
அறுபதிலும் வாழ்க்கையை ஆள.. வாழ..! உங்களுக்கு சொந்தமான இடத்திலேயே வாழுங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு சுதந்திரமும், தனியுரிமையும் இருக்கும். வங்கிகளின் நீண்டகால் வைப்பு நிதிகளையும், சொத்துக்களையும் உங்கள் பெயரிலேயே, உங்களுடனேயே வைத்து கொள்ளவும். உங்கள் குழந்தைகளின் வாக்குறுதிகளை நம்பி இருக்க வேண்டாம், ஏனெனில் உங்களுக்கு வயதேற அவர்களின் முன்னுரிமைகள் காலத்திற்கேற்றவாறு மாறும். காலத்தை வென்று வாழும் உங்களின் உண்மையான நண்பர்களை அடையாளம் கண்டு தொடருங்கள். எதையும் மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து வாழ வேண்டாம். உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள், அவர்களின் வாழ்க்கையை வாழ விடுங்கள். உங்கள் வயதை ஒரு பாதுகாப்பான காரணமாகக் காட்டி, சிறப்பையோ,…
-
- 13 replies
- 1.4k views
-
-
தினமும் இரண்டு மிளகு சாப்பிடுங்கள்....! நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி... பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளன என்பதே கசப்பான உண்மை. இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை உணவுப்பொருட்கள் தான்.* ஆதலால், நாம் சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. முதலில் கீரை வகைகளை பார்க்கலாம். கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார…
-
- 5 replies
- 1.4k views
-
-
-
கைகள் அளவுக்கு மிஞ்சி வம்பு பேசினால்...! "செல்போன்களில் செய்திகளை (எஸ்.எம். எஸ்.,) அளவுக்கு மீறி அனுப்பினால், அது உடல் நலனைப் பாதிக்கும் என்று இத்தாலி நாட்டு டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். செல்போன்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் நண்பர்களுக்கும், உறவிர்களுக்கும் எஸ்.எம்.எஸ்., (ஷார்ட் மெசேஜ் சர்வீஸ்) மூலம் செய்திகளை அனுப்புவர். இளைஞர்களிடம்எஸ். எம்.எஸ்., அனுப்பும் பழக்கம் அதிகம் உண்டு. பரிமாறிக் கொள்ள செய்தியே இல்லாவிட்டாலும் கூட, பழமொழிகள், கடி ஜோக்குகளை, வாழ்த்துக்களை அனுப்பி இளைஞர்கள் சந்தோஷம் அடைவது வழக்கம். அளவுக்கு அதிகமாக எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பினால் அது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக கை விரல்களைப் பாதிக்கும் என்று இத்தாலி நாட்டு டாக்டர்…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ் திருநெல்வேலி விவசாய கண்காட்சி அழகான பூச்செடிகள் விவசாயக் கண்காட்சியைப் பார்ப்பதற்காக நேற்றையதினம் திருநெல்வேலி விவசாயப் பயிற்சி நிலையத்திற்குச் சென்றிருந்தோம். அருமையான ஏற்பாடுகள். விவசாயத்தின் மீது, வீட்டுத்தோட்டத்தின் பால் ஆர்வத்தை தூண்டக் கூடிய வகையில் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. ஏகப்பட்டோர் அந்தக் கண்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். உரைப்பைகளில் மண்ணையிட்டு, தக்காளி, கத் தரி, மிளகாய், உற்பத்தி செய்யப்பட்டிருந்ததை பார்த்த எவரும் மகிழாமல் இருக்க முடியாது. வீட்டுத் தோட்டம் செய்வதற்கு நிலம் போதாது என குறைபடுவோருக்கு இந்த உரைப்பை முறை அவர்களை ஆற்றுப்படுத்தியிருக்கும் என்ற நினைப்பு. கண்காட்சியின் நுழைவாயில் அதன் இரு மருங்கிலும் வற்றாளைக்கொடியின் இளம்…
-
- 0 replies
- 1.4k views
-
-
உலகத்தி்ன் மொத்த நிலப்பரப்பில் 75 சதவிகிதம் தண்ணீராக இருப்பது போல், மனித உடம்பிலும் உள்ளது வியப்பினைத் தருகின்றது. ஒவ்வொருவரது உடலமைப்பிற்குத் தகுந்தவாறு சிறிதளவு வேறுபாடுகள் இருக்கும். இரத்தத்தில் 90 சதவிகிதமும், தசைகளில் 60 சதவிகிதமும், எலும்புகளில் 22 சதவிகிதமும் நீராக வுள்ளது. சிறுநீராக 1500 மில்லியும்,வேர்வை-வியர்வையாக-400மில்லியும்,சுவாசத்தின் மூலமாக 400 மில்லியும், மலத்தின் மூலம் 100 மில்லியும் வெளியேற்றப் படுகின்றது. உலகில், ஏரி,குளம்,கிணறு்,ஆறு,கடல் என நீர்ப் பகுதிகள் இருப்பது போன்று, உடலிலும்வயிறு,மார்பு,மூளை முதலிய இடங்களிலும் நீர்ப்பகுதிகள் உள்ளன. வயிற்றுவலிக்கு வயிற்றில் நீ்ரினளவு குறைவதே காரணமாகின்றது. சளி,இருமல் தொல்லைகளுக்கு மார்பில் நீர் குற…
-
- 4 replies
- 1.4k views
-
-
மனிதனின் 6-வது அறிவு மனித மூளையின் செயல்பாடுகள் பற்றி இன்னமும் முழுமையாக புரிந்து கொள்ளப் படவில்லை. விலங்குகளிடம் இருந்து மனிதனை பிரிப்பது 6-வது அறிவு என்பது அறிந்தததே. அந்த 6-வது அறிவாக மூளையை தாரளமாக குறிப்பிடலாம். அந்தளவுக்கு எண்ணிலடங்காத புதிர்கள் நிறைந்த முக்கியமான உறுப்பாக உள்ளது. விஞ்ஞான வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேறி வருவதால் இந்த புதிர்களுக்கு விடை காணப்பட்டு வருகிறது. சில சமயம் சுற்றுப்புற சூழ்நிலைக்கு ஏற்றபடி நமது உடம்பு இயங்குகிறது. இது மூளையின் கை வண்ணம் தான். மூளையின் முன் பகுதியில் உள்ள anterior cingulated cortex என்ற பகுதி சுற்றுப்புற மாற்றங்களை உன்னிப்பாக கண்காணிக்கிறது. ஏதாவது விரும்பத்தகாத மாற்றங்கள் நடக்கும் போது அதற்கேற்றபடி உடம்புக்கு கட்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
இஞ்சி சிகிச்சை: மருத்துவப் பலன்களை பெற்ற இஞ்சி குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் உட்கொள்ளப்படும் பொதுவான உணவாகும். இது ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக்கூடியது. இது குளிர்காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால், அது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை ஜீரணிக்க உதவி புரியும். மேலும், அசிடிட்டியை போக்குவதற்கும் உதவி புரியும். வேர்க்கடலைகள்: குளிர்காலங்களில் பிராணவாயுவின் அளவு குறைவாக இருக்கும். அதனால், இந்த குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும், இந்த வேர்க்கடலைகளை உங்கள் உணவில் சேர்த்து இவற்றை பெறலாம். இது குளிர்காலத்தில் வெப்பம் தரும் உணவுவகைகளில் ஒன்றாகும். தா…
-
- 0 replies
- 1.4k views
-
-
நீச்சல் பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்த விசையம் தான் ஆனால் நீச்சல் தெரிந்தவர்களை பார்த்து நீச்சல் தெரியாதவர்களுக்கு ஒரு விதமான ஏக்கமாகவே இருக்கும் . நாமும் சிறு வயதில் நிச்சல் கற்று இருந்தால் இன்று நாமும் நீச்சல் அடித்து இருக்கலாமே என்று . நீச்சல் என்பது மிக முக்கியமானது நம் வாழ்க்கையில் .ஆபத்தான தருனக்கலில் நம் உயிரையும் பிறர் உயிரையும் காப்பாற்றும் ஒரு கலை என்றால் அது நீச்சல் கலை தான் .கிராம புறங்களில் பெரும்பாலும் உள்ளவர்கள் நீச்சல் கற்று கொண்டவர்களாக இருந்தனர் ஆனால் இரு அது கூட மாறி கொண்டே வருகிறது. குளம் ,குட்டை ,கடல் ,நீச்சல் தொட்டி ஒவ்வொரு கிராமத்து இளைஞனும் அவனது சிறுவயதில் நீச்சல் கற்க தந்தையுடனே இல்லை மாமாவுடனோ இல்ல ஊர்ல இருக்கிற அண்ணன்களுடனோ அ…
-
- 0 replies
- 1.4k views
-
-
[size=4][/size] [size=4]மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட கிஸ் மிஸ்(உலர் திராட்சை) அது. புகை பிடிப்பவர்களை தடுக்கும் அறுமருந்து ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சி கரைத்து விடுகிறது, மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்து கிறது.[/size] [size=4]இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இந்த மருத்துவத்தை மாஸ்டர் பெங் மும்பை வந்த போது எனக்கு சொன்னது, நான் பலரிடம் சொல்லி அதற்கான பலனும் பார்த்திருக்கிறேன், இதை நீங்களும் உங்கள்…
-
- 4 replies
- 1.4k views
-
-
முயலிறைச்சியை மட்டும் வேறு எதையும் உண்ணாமல் தொடர்ந்து தின்றால் மரணம் சம்பவிக்குமாம். இன்று பிபிசி 2 - கியூ ஐ புரோக்கிராமில் சொன்னார்கள். நமது பிள்ளைகள் காடுகளில் அலைகிறார்கள். அவர்களுக்கு இந்தச்செய்தி பிரயோசனமாயிருக்குமென்று கருத்துக்களத்துக்கு எழுதுகிறேன். உணவில்லாமல் காடுகளில் நெடுநாள் இறைச்சிகளையே உண்பவர்கள் முயலிறைச்சியைத் தனியே தொடர்ந்து உண்பதைத் தவிர்க்கவும். வேறு உணவுகளோடு உண்டால் பிரச்சனையில்லையாம்.
-
- 0 replies
- 1.4k views
-
-
தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது. தோற்றம் : அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும் அழைக்கப்படும். அடங்கியுள்ள பொருட்கள் : ஈரப்பதம் _ 73 ச…
-
- 5 replies
- 1.4k views
-
-
வேம்பு. வேம்பு இலை. வேம்பு. மூலிகையின் பெயர் -: வேம்பு. தாவரப்பெயர் -: AZADIRACHTA INDICA. தாவரக்குடும்பம் -: MELIACEAE. வேறு பெயர்கள் -: பராசக்தி மூலிகை, அரிட்டம், துத்தை, நிம்பம். பாரிபத்திரம், பிதமந்தம், மேலும் வாதாளி ஆகியன. பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, பழம், விதை, பட்டை மற்றும் எண்ணெய் முதலியன. வேதியல் சத்துக்கள் -: NIMBDIN, AZADIRACHTINE. வளரியல்பு -: வேம்பு என்பது வேப்ப மரம் தான். இதற்கு பராசக்தி மூலிகை என்ற சிறப்புப் பெயர் உண்டு. மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேம்பின் பூர்விகம் இந்தியாவும் பாக்கீஸ்தானும் தான். பின் உலகம் முழுதும் பரவிற்று. காப…
-
- 7 replies
- 1.4k views
-
-
உலகில் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே அவனோடு தொன்று தொட்டு உறவாடிக்கொண்டிருக்கும் மிகப்பழமையான எண்ணெய் வித்து எள் மட்டுமே. நம் அன்றாட வாழ்வில் நம்மை அறியாமல், ஜனனம் முதல் மரணம் வரை அது பின்னிப்பிணைந்து உள்ளது. குணங்கள் : கருப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, காவி, சாம்பல் மற்றும் பொன்நிறம் என எள் பல வகைகளில் உள்ளது. உஷ்ணகுணமுடையது. தோல், முடி, உடலுக்கு நல்ல உறுதி, மென்மை கொடுக்கக் கூடியது. நினைவாற்றலை பெருக்கி, ஜீரண சக்தியை அதிகரிக்கக்கூடியது. உடல் மெலிய எள் கலந்த மருந்து தயாரித்து வழங்குகின்றனர். உடல் பருமன் அதிகரிக்கவும், எள் கலந்தே மருந்து தயாரித்து தருகின்றனர். எள் இளைக்கவும், பருக்கவும் வைக்கும் திறன் கொண்டது. என்னென்ன சத்துக்கள் : அதிகளவு தாமிரச்சத்து, மக்னீசியம்,…
-
- 0 replies
- 1.4k views
-
-
நின்று கொல்லும் சோடா – Dr.சி.சிவன்சுதன் “அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்” என்பதன் உண்மையை நாம் எம் முன்னோர்களிடமிருந்தும், அனுபவரீதியாகவும் தெரிந்துவைத்திருக்கிறோம். ஆனால், நஞ்சு அன்று கொல்லும். சோடா நின்று கொல்லும் என்ற விடயம் எம்மில் பலருக்குத் தெரியாது. சோடா சக்தி தரும் ஓர் ஆரோக்கிய பானம் என்று நம்பி ஏமாந்துகொண்டிருக்கின்றோம். பெருகிவரும் சோடா குடிக்கும் பழக்கம் சுகாதாரத்துறைக்குப் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. இதன் காரணமாகப் பல சுகதேகிகள் இளம் வயதிலேயே பல்வேறு நோய்த்தாக்கங்களுக்கு ஆளாகிவருகிறார்கள். சோடா குடிப்பதால் முக்கியமாகப் பற்ச…
-
- 2 replies
- 1.4k views
-
-
குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தூங்கும் போது ஆண்கள் ஆனாலும் சரி, பெண்கள் ஆனாலும் சரி, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் குறட்டை வருவது வழக்கம். குறட்டை அவரவர் உடல் வாகுக்கு தகுந்தபடி இருக்கும். உடல் பருமனானவர்களுக்கு பொதுவாக குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும். ஒரு சிலர் விடும் குறட்டை சத்தத்தை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் தூங்க முடியாமல் வெளியில் செல்லவேண்டி வரும். இந்த நிலையை போக்க, பிரிட்டன் விஞ்ஞானிகள் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். இது தற்கால விஞ்ஞானத்தில் ஒரு புரட்சி என்று கருதப்படுகிறது. லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் தீப்பெட்டி போன்று ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதை தூங்குபவர் மார்பில் பொ…
-
- 7 replies
- 1.4k views
-
-
********
-
- 1 reply
- 1.4k views
-
-
நம்பர் ஒன் விஷயத்தை தள்ளிப் போடாதீர்கள்! வே.கிருஷ்ணவேணி ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்ப விழாக்கள்... என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுகளுக்காக செல்லும்போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்களில் பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. 'பாத்ரூம் சரியில்லை...', 'நேரமே இல்லை...', 'பாத்ரூமே இல்லை... ரோட்டுலயா போகமுடியும்?' என்பது போன்ற கேள்விகளைத் தங்கள் தரப்பு நியாயங்களாக எழுப்பி, தங்களை சமாதானப்படுத்திக்கொள்ளவும் இவர்கள் தவறுவதில்லை. இவர்களில் நீங்களும் ஒருவரா? "இத்தகைய போக்கு, மிகப்பெரிய ஆபத்தை நோக்கி உங்களை இழுத்துச் சென்றுவிடும்'' என்று உங்களை நோக்கி எச்சரிக்கை மணி அடிக்கிறார்... சென்னை, ராமச்சந்திரா மருத்துவமனையின் சிறுநீரகத்துறை தலைமை மருத்துவப் பேராசிரியர் டாக்டர…
-
- 9 replies
- 1.4k views
-
-
1. ஒலிவ் எண்ணெய்: Olive என்பதிலேயே Live என்று ஆசிர்வாதம் செய்வதும் பொதிந்துள்ளது. 40 வருடங்கள் மேலைநாடுகளில் செய்த ஆராய்ச்சிகளில் ஒலிவ் எண்ணெயில் செறிவற்ற கொழுப்பு இருப்பதால் அது நம் உடலில் ஆக்ஸிகரணம் ஏற்படுவதை தடுத்து மூப்பு ஏற்படாமல் தடுப்பது தெரியவந்துள்ளது. ஒலிவ் எண்ணெயை நாம் செய்யும் காய்கறி உணவுகளில் கலந்து சாப்பிடுவது நல்லது. 2. தயிர்: ஒரு உயிருள்ள உணவு. இதிலுள்ள லேக்டோடைசில்ஸ் மற்றும் லெபிடா என்ற நல்ல கிருமிகள் நம் வயிற்றில் தீய கிருமிகள் வராமல் தடுக்கிறது. கொழுப்பின் அளவை குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. மலச்சிக்கல் இல்லாமல் வாழ ரத்தக்கசிவை தடுக்கும் விட்டமின் கே உருவாக உதவி வழி வகுக்கிறது. வயிற்றில் அதிக வாயு ஏற்படுவதை தடுக்க…
-
- 3 replies
- 1.4k views
-