நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி? ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும். அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும். அட. இப…
-
- 0 replies
- 997 views
-
-
பட மூலாதாரம்,PERSONAL FILE 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு முக்கியமான பயணம் செய்வதற்கு ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்ததால், பயணத்திற்கு முந்தைய நாள் ‘Facial’ எனப்படும் அழகு சிகிச்சை செய்துகொள்வதற்காக பார்லருக்கு சென்றார் டையானே லிமா என்ற 27 வயது பெண். ஆனால் அந்த ‘Facial’ தனக்கு மிகப்பெரும் உதவி செய்யப்போகிறது என்பதை அப்போது அவர் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார். ஏனெனில் முகப்பொலிவுக்காகச் செய்யப்படும் அந்த அழகு சிகிச்சை, டேயின் லிமாவிற்கு அவர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள உதவியது. எப்படி தெரியுமா? முகப்பொலிவுக்காக அவ்வபோது ‘Facial’ செய்துகொள்ளும் வழக்கம் உடையவர் லிமா. அந்த வகையில் 2022ஆம் ஆண…
-
- 0 replies
- 385 views
- 1 follower
-
-
உங்கள் நவீன கைத்தொலைபேசிகளை காற்சட்டை பொக்கட்டுக்குள் பதுக்கி வைக்கிறீர்களா.. பெரும்பாலன ஆண்கள் செய்வது இதையே.. என்பதால்.. இதனை தொடர்ந்து படியுங்கள். மொபைல் போன்களில் இருந்தான கதிர்ப்புக்களின் தாக்கம் காரணமாக விந்தணுக்களின் இயங்கும் ஆற்றல் குறைவடைவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இருப்பினும்.. இந்த ஆய்வுகள் இன்னும் கூடிய திருத்தமாக செய்யப்பட்ட வேண்டும் என்று பிற விஞ்ஞானிகள் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி மறுதலித்துள்ளனர். It analysed 10 separate studies on sperm quality involving 1,492 men. These included laboratory tests on sperm exposed to mobile phone radiation and questionnaires of men at fertility clinics. Lead res…
-
- 0 replies
- 519 views
-
-
இந்து தமிழ்: 'இன்ஹேலரில் ஆல்கஹால்' இன்ஹேலரில் ஆல்கஹால் இல்லை. வாகன சோதனையின் போது குடித்திருந்ததாக காட்டாது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி. "நடிகையும், பாஜக இளைஞரணி நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் கடந்த வாரம் குடிபோதையில் கார் ஓட்டி வந்ததாக அடையாறு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர். இச்சம்பவம் திரையுலகிலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் 'காமதேனு' வார இதழுக்கு காயத்ரி ரகுராம் அளித்த பேட்டியில், "எனக்கு இருக்கும் வீஸிங் பிரச்சனைக்காக இன்ஹேலர் அடித்திருந…
-
- 0 replies
- 871 views
-
-
வெண்குஷ்டத்திற்கு புதிய மருந்து லியூகோடெர்மா என்றும், விடிலிகோ என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வெண்குஷ்ட நோய்க்கு இந்தியாவின் ராணுவ விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிறுவனம் ஆயுர்வேத மருந்து ஒன்றை கண்டுபிடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக இந்திய ராணுவ தேவைகளுக்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்த நிறுவனம், அவ்வப்போது புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகளையும் செய்கிறது. வெண்குஷ்ட நோயின் பாதிப்பு இதன் ஒரு பகுதியாக, மனிதர்களின் உடல் தோலின் நிறம் சில இடங்களில் உருமாறி வெள்ளைத்தழும்புகளாக பரவிப்படறும் வெண்குஷ்டநோய்க்கு மூலிகை அடிப்படையிலான புதிய மருந்து ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மூலிகைகள…
-
- 3 replies
- 4.4k views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 26 ஜூலை 2024 புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் தமிழர் உணவு மரபில் ‘பழைய சோற்றுக்கு’ எப்போதும் தனித்த இடம் உண்டு. சர்வதேச அளவில் பழைய சோறு விளைவிக்கும் நன்மைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் வந்துள்ளதை அண்மைக் காலமாகக் காண முடிகிறது. பழைய சோறு உள்ளிட்ட நொதித்த உணவுகள் நம் உடலுக்கு வழங்கும் நன்மைகள் என்ன? அவை எப்படி நம் உடலுக்குள் செயலாற்றுகின்றன? நொதித்த உணவுகள் என்பது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை …
-
- 0 replies
- 841 views
- 1 follower
-
-
காசநோய் உலகெங்கும் மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. கொழும்பு மாவட்டதிலிருந்து மாத்திரம் வருடாவருடம் 2000 புதிய காச நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். ஏனைய மாவட்டங்களில் இருந்து வருடாவருடம் 10,000 புதிய காச நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதாக அறியப்படுகிறது. யாழ்ப்பாணத்திலும் குறைவில்லை. போரில் குண்டுத்தாக்குதல்கள் ஏராளமாக நடந்த காரணத்தால் அந்த விசக் காற்றுகளினால் பல விதமான சுவாச நோய்களுக்கு வடக்கு கிழக்கு மாகாண மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக வன்னி மக்கள் மோசமாக ஆட்பட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இந் நிலையில் காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் யாழ் சுகாதாரப் பகுதியின் காசநோய் ஒழிப்புப் பிரிவு மருத்துவ அதிகாரியான டொக்…
-
- 0 replies
- 765 views
-
-
1. யோகாசனத்தை முதன்முதலாகப் பழக விரும்பும் ஒருவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். 2. காலையில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்ததாகும். மாலையில் செய்வதாயின் சாப்பிட்டு, மூன்று மணித்தியாலங்களின் பின்னரே செய்தல் வேண்டும். காலையில் எழுந்தவுடன் தேநீர் அருந்தும் பழக்கமிருப்பவர்களாயின் தேநீர் அருந்தி அரை மணித்தியாலங்களின் பின்னரே ஆசனங்களைச் செய்தல் வேண்டும். 3. ஆசனங்களைச் செய்வதற்கு முன்பு உடலைத் தயார் நிலைப்படுத்துவதற்காக சில எளிய முன் பயிற்சிகள் செய்தல் வேண்டும். 4. உடல் உபாதைகள் உடையவர்கள் சில ஆசனங்களைச் செய்தலாகாது. இருபது வயதுக்குட்பட்டவர்கள் சிரசாசனம் செய்யக் கூடாதென தற்போது யோகிகள் கூறுகிறார்…
-
- 9 replies
- 5.3k views
-
-
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. 5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவை…
-
- 10 replies
- 1.1k views
-
-
சர்க்கரை நோய் அல்லது இருதய நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அது ஆயுசுக்கும் பாடாய்படுத்தி விடும். இந்நிலையில் இந்த இரண்டு நோயையுமே கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக ஆய்வை நடத்திய மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பாதம் பருப்பு மட்டுமல்லாது இதர கொட்டை பருப்புகளும் கூட டைப் 2 வகை சர்க்கரை நோயை குணப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பாதாம் மற்றும் இதர கொட்டை பருப்புகள் உடல் பருமனை எதிர்த்து போராடுஅதில் முக்கிய பங்காற்றுகிறதாம். மேலும் உடற் பயிற்சி இல்லால் இருப்பவர்களுக்கு இருதய நோய் ஏற்படுவதற்கு …
-
- 3 replies
- 3.6k views
-
-
அசிங்கமான ரகசியம் வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில்கள் தேய ஆரம்பித்தவுடன் டூத் பிரஷை மாற்றுவது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள் . அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணையாக இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிலும் மூடி வைக்கப்படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அட…
-
- 1 reply
- 1.1k views
-
-
தோல் புற்றுநோயால் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 1985 ஆம் ஆண்டு முதல் அபிவிருத்தியடைந்த நாடுகளில் தோல் புற்றுநோயால் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளதாகவும் கிளாஸ்க்கோவில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் அயர்லாந்து மற்றும் குரோஷியாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதுடன் ஸ்பெயினிலும், இங்கிலாந்திலும் 70 சதவிகிதமும், நெதர்லாந்தில் 50 சதவிகிதமும் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் 60 சதவிகிதமும் அமெரிக்காவில் 25 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியிலிருந்து ஆண்கள் தம்மை பாதுகாப்பதற்…
-
- 0 replies
- 286 views
-
-
கடந்த பல மாதங்களுக்கு முன் இடப்பக்கத்தில் உள்ள மேற்பகுதியின் மூலையில் இருக்கும் கொடுப்புப் பல் ஒன்றில் வலி ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக பெரிசாகி இப்ப அடிக்கடி கடுமையாக வலிக்குது. பெரிய சாப்பாடு (இறைச்சி, ஆட்டு எலும்பு போன்றன) எல்லாம் சாப்பிடும் போது அப்பாவியாக தானுண்டு தன் பாடுண்டு என இருக்கும் பல் கடுகு, தானியங்களின் தோல், பர்கர் துண்டு, கடலை போன்ற சின்ன உணவு சாப்பிடும் போது மட்டும் உயிரே போற மாதிரி வலிக்குது. சின்ன உணவுகள் மாவாக அரைபடும் போது, அவை போய் பல்லில் அடையும் போதுதான் இந்த வலி கடுமையாக வருகுது. என்னடா சாப்பாட்டு ராமன் எனக்கு இப்படிச் சோதனை வந்துட்டுதே என்று பல் வைத்தியரிடம் போய் பல்லைக் காட்டினால், அந்தாள் இதுதான் சாக்கு என்று பல X-Ray களை எடுத்துப் பார்த…
-
- 27 replies
- 18.6k views
-
-
-
பொதுவாக பெண்களின் கைகளில் குறிப்பாக உள்ளங்கைகளில் ஆண்களை விட 50% அதிகமான நோய் விளைவிக்கும் பக்ரீரியாக்கள் வாழ்வதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு மனிதனின் கையில் 150 இனங்களைச் சேர்ந்த பக்ரீரியாக்கள் வாழ்வது இனங்காணப்பட்டுள்ளது. இருப்பினும் மனிதர்களின் கைகளில் மொத்தமாக 4700 க்கும் மேலான வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த பக்ரீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள் பல நோயாக்கிகள் ஆகவும் விளங்குகின்றன. ஆண்களின் கைகள் அதிகம் அமிலத்தன்மை உடையவையாக இருப்பதால் பெண்களோடு ஒப்பிடும் போதும் ஒப்பீட்டளவில் அங்கு பக்ரீரியாக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றன. இருந்தாலும் ஆண்களும் பெண்களைப் போலவே பல வகை பக்…
-
- 21 replies
- 3.7k views
-
-
பெண்ணின் இதயத்தில் தோட்டா: ஆறு மாதங்களுக்குப் பிறகு மீட்ட மருத்துவரின் அசராத முயற்சி மொஹம்மத் ஜுபைர் கான் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/PTIOFFICIAL படக்குறிப்பு, மருத்துவமனை ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையை இணைக்கும் மாகாணமான கைபர் பக்தூங்க்வாவில் பெண்ணின் இதயப்பகுதியில் துளைத்த தோட்டாவை பல மாத முயற்சிக்குப் பிறகு மீட்டுள்ளார் அங்குள்ள மருத்துவர் ஒருவர். மிகவும் நுட்பமான அந்த அறுவை சிகிச்சை அனுபவத்தை பிபிசியிடம் விளக்கினார் அம்மருத்துவர். "ஒரு பெண் நோயாளியின் திறந்த நெஞ்சுப்பகுதியில் குண்டு இருக்கும் இடத்தை நாங்க…
-
- 0 replies
- 579 views
- 1 follower
-
-
ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் எவ்வளவு பாடுபடுகிறாள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குழந்தையை நல்ல படியாக வளர்க்க தன் உயிரை கொடுத்து சிரத்தை எடுக்கிறாள். மகப்பேறு விடுப்பு முடிந்து வேலைக்கு திரும்பும் பாலூட்டும் தாய்களுக்கு ஒரு நடுக்கம் இருந்தே தீரும். ஏனென்றால் பலவற்றை சமாளிக்க வேண்டும். ஆனால் கவனமாக திட்டமிட்டால், இந்த மாற்றங்கள் சீராக இருக்கும். குழந்தை பெற்றப் பின் அலுவலகம் செல்வது பாலூட்டும் தாய்களுக்கு ஒரு சவாலான விஷயமே. குழந்தை பெற்றப் பின் சீக்கிரமே வேலைக்கு செல்வதினால் ஏற்படும் சங்கடங்கள் ஏராளம். அவைகளில் சில, குழந்தையை பிரிய வேண்டிய கவலை, அவர்களுக்கு தேவைப்படும் வேளையில் அவர்களுடன் இருக்க முடியாமல் போவதால் ஏற்படும் குற்ற உணர்வு போன்றவைகள். மகப்பேறு …
-
- 0 replies
- 1.5k views
-
-
உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட் களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆ…
-
- 1 reply
- 857 views
-
-
" 'யாரையும் பார்க்கப் பிடிக்கலை. என் முகத்துல யாரும் முழிக்காதீங்க. என்னை நானே வெறுக்கிறேன்' என்ற என்னுடைய குரல்தான் இந்த வீட்டுச் சுவர் முழுக்க ஒலிச்சுட்டு இருந்துச்சு. என் தோற்றமும் உடல் ஏற்படுத்திய வலியும் என்னைச் சுற்றியுள்ள அன்பானவர்களை அடையாளப்படுத்திச்சு'' எனத் தன்னம்பிக்கை ததும்ப பேசுகிறார் வைதேகி. புற்றுநோயிலிருந்து மீண்டுவந்துள்ள மங்கை. அன்பான கணவர், குறும்புக்கார மகள் எனச் சராசரி குடும்பத் தலைவியாக சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்த வைதேகியின் வாழ்க்கை, 2014-ம் ஆண்டில் தடம் மாறியது. வலி மிகுந்த அந்த நாள்களைக் கண்ணெதிரே கொண்டுவருகிறார். ''நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில். படிப்பு முடிஞ்சதும் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. காலையில் எழுந்து…
-
- 2 replies
- 449 views
-
-
புற்றுநோயின் பத்து பகைவர்கள் புகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவற்றையெல்லாம் புற்றுநோய் தோன்றுவதற்குரிய காரணங்களாக கூறமுடியும். இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்றுநோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளும் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன. இந்தக்கட்டுரையில் பத்துவிதமான உணவுப்பொருட்கள் புற்றுநோயில் இருந்து நம்மை காக்கக்கூடியவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1. மாதுளம்பழம், ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற கனிகள் ellagic acid மற்றும் polyphenol antioxidants ஆகிய வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளன. இந்த வேதிப்ப…
-
- 1 reply
- 699 views
-
-
மூலிகையே மருந்து! 01: பாடாத நாவும் பாடும்! ‘ஆடாதோடையைக் கண்டால் பாடாத நாவும் பாடுமே’ என்ற மருத்துவப் பழமொழி, ஆடாதோடையின் மூலம் குரல் ஒலி கரகரப்பின்றி இனிமையாகும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது. கூடவே குரல்வளைப் பகுதியில் மையமிடும் நுண்கிருமிகளை அழிக்கும் என்ற அறிவியல் உண்மையை மறைமுகமாக எடுத்துரைக்கிறது. சளி, இருமல் போன்ற கபம் சார்ந்த நோய்களுக்கு ஆடாதோடை முக்கியமான எதிரி. ‘இருமல் போக்கும் ஆடாதோடை’ என்ற வாய்மொழியின் நீட்சியாக, கிராமங்களில் இதன் பயன்பாடு இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கைப்பு சுவையைக் கொண்டிருந்தாலும் இதனால் கிடைக்கும் பயன்களோ மிகவும் இனிமையானவை. கப நோய்களைப் போக்குவதற்கு இயற்…
-
- 19 replies
- 9k views
-
-
உங்க எடை கூடிக்கிட்டே இருக்கா..? காரணங்கள் என்ன... கரை சேர்வது எப்படி? சா.வடிவரசு 'ஒபிஸிட்டி’ எனப்படும் உடற்பருமன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளதாக மருத்துவத் தகவல்கள் அலறுகின்றன. உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட ஒபிஸிட்டிக்கான காரணங்கள், இதன் விளைவுகள், குறிப்பாக பிசிஓடி (Polycystic Ovary Disease) எனப்படும் நோய் முதல் குழந்தைப்பேறின்மை வரை பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், ஒபிஸிட்டிக்கான தீர்வுகள் என்று நிபுணர்களின் வழிகாட்டலை விரிவாகப் பார்ப்போம்! பிழையாகிப் போன உணவுப் பழக்கம்! இந்த விபரீத நோய் பற்றி பேசும் பெண்கள் சிறப்பு மருத்துவர் பிரேமலதா, ''ஒபிஸிட்டி இன்று இந்தளவுக்கு அதிகரித்து வருவதற்குக் காரணம், மாறிவரும் வாழ்க்கை முறைதான் (Modi…
-
- 1 reply
- 3.8k views
-
-
புதியமுறையில் இருதய அறுவை சிகிச்சை: சென்னை மருத்துவர்கள் சாதனை 16 ஜூலை 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:14 ஜிஎம்டி இருதயப் பகுதியை திறக்காமலேயே வயதான பெண்மணி ஒருவருக்கு சென்னையிலுள்ள மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளதாகக் கூறுகிறார்கள். மேற்குலக நாடுகளில் இதுபோன்ற அறுவை சிகிச்சை மிகவும் அபூர்வமாகச் செய்யப்படும் சூழலில், இந்தியாவில் முதல் முறையாக நவீன முறையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அதைச் செய்த டாக்டர் ராஜாராம் அனந்தராமன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். சென்னியிலுள்ள ஃப்ராண்டயர் லைஃப்லைன் மருத்துவமனையில், 81வயது பெண்மணிக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காலில் ஒரு துளையிட்டு அதன் மூலம் சேதமடைந்த ரத்தக்குழாய்க்கு பதிலாக செயற்கை வால்வை மற்…
-
- 1 reply
- 242 views
-
-
பாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறுவகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா, இந்தோ - சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில்தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது. பாசிப்பயறில் உள்ள சத்துக்கள் 7 இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கரு…
-
- 1 reply
- 606 views
-
-
சீனாவின் ஹுபே மாகாணத்திலுள்ள வுஹான் நகரில் ஆரம்பித்த உயிர்கொல்லி கொரோனா வைரஸ் தாக்கம் இன்று முழு உலகத்துக்கும் ஓர் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச மருத்துவ அமைப்புக்கள் திணறிக் கொண்டிருக்கின்றன. எப்படி இதிலிருந்து மீண்டு வருவது என்பதே இன்று உலக வாழ் மக்கள் மத்தியில் பாரிய சவாலாகமாறியிருக்கின்றது. வுஹான் நகரில் நபரொருவர் ஒருநாள் காலையில் எழுந்தபோது மூச்சு விடுவதற்கு கஷ்டப்பட்டிருக்கின்றார். அவர் ஒரு வைத்தியரிடம் சென்று தன்னைப் பரிசோதித்திருக்கின்றார். அப்போது அவரை பரிசோதித்த வைத்தியர்கள் குறித்த நபரின் உடலில் தொற்றியிருக்கின்ற வைரஸ் குறித்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்போதிருந்து பரவிய இந்த உயி…
-
- 1 reply
- 809 views
-