நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
பித்தவெடிப்பு, பாதத்தின் தோல் உரிதல் போன்றவற்றிக்கு..... எலுமிச்சம் பழத்தின் பலன்களில் ஒன்று...... ''சித்த வைத்தியத் திலகம் '' வைத்தியர் C.P. தண்டபாணி ற்.ஈ.M.Pயின் மருத்துவக் குறிப்பிலிருந்து. கால் பாதத்தில் வெடிப்புக்கள் இருந்தாலும், பாதம் சொரசொரப்பாக இருந்தாலும், பாதம் தோல் உரிந்து இருந்தாலும் புதிய எலுமிச்சை பழத்தை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி காலில் ஒவ்வொரு நாளும் தேய்த்துவர வெடிப்புக்கள் நீங்குவதோடு பாதமும் கன்ணாடிபோல் அழகு பெரும். குறிப்பு: பல ''கிறீம்''கள் இப்படியான பிரச்சனைகளை தீர்க்க இருந்தாலும் இது இயற்கை வைத்தியம் என்பதால் உடலுக்குத் தீங்கில்லை. இளங்கவி
-
- 24 replies
- 12.9k views
-
-
மேலதிக அறிவுக்கு மூலம் (Reference) கீழே இணைக்கபட்டுள்ளது. பட்டர்: பழைய ஆய்வுகளின் படி நினைத்து கொண்டு இருப்பது: பட்டர் தவிர்க்க பட வேண்டியது. குறைந்த கொழுப்பு கொண்ட (polyunsaturated) பாவிக்கலாம். இறுதி ஆய்வின் முடிவு: சிறிய அளவிலான பட்டர் உடம்புக்கு நன்று. பால் பழைய ஆய்வுகளின் படி நினைத்து கொண்டு இருப்பது: ஆடை நீக்கிய பால் உடம்புக்கு நன்று. இறுதி ஆய்வின் முடிவு: ஆடை நீக்காத பால் உடலுக்கு நன்று. இதில் உள்ள நல்ல கொழுப்பு உடம்புக்கு நன்று. முட்டை பழைய ஆய்வுகளின் படி நினைத்து கொண்டு இருப்பது: முட்டை முழுவதும் கொழுப்பு. முட்டை உண்பதை மட்டுபடுத்தவேண்டும். இறுதி ஆய்வின் முடிவு: தொடர்சியான ஆய்வுகளின் படி, முட்டையில் உள்ள கொழுப்பு சிறிய அளவிலான பாதிப்பை தான்…
-
- 0 replies
- 1.5k views
-
-
[size=4]இன்றைய அவசர காலத்தில் விரைவிலேயேஅனைவருக்கும் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதற்கு முதற்காரணம், சுவைக்காக உணவில் அதிகமான அளவு உப்பை சேர்க்கின்றனர். ஏனெனில் உப்பில் சோடியம் என்னும் பொருள் அதிகமாக உள்ளது. இந்த பொருள் உடலில் அதிகம் சேர்வதால், இரத்தத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் இரத்த அழுத்தம் இருக்கும் போது, மேலும் மேலும் உப்பை சேர்த்தால், உடல் மற்றும் உயிருக்கு தான் பாதிப்பு ஏற்படும். அதிலும் தற்போது உடலில் எல்லா நோய்களுமே அழையா விருந்தாளிகளைப் போல வந்துவிடுகிறது. அதில் முதலில் வருவது தான் இரத்த அழுத்தம்.[/size] [size=4][size=4]பிபி-யை கட்டுப்படுத்தும் உணவுப் பொருட்கள்!!![/size][/size] [size=4]1/6[/size] [size=4]எலுமிச்சை[/size][s…
-
- 0 replies
- 1.8k views
-
-
[size=4]பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா? பியர் அருந்தினால் உடல் கூல் ஆகும், மற்ற சரக்குகளில் இருப்பது போல் இதில் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதால் உடலுக்கு நல்லது என்றெல்லாம் 'குடி'மகன்கள் தங்கள் இஷ்டத்திற்கு நியாயங்களை வழங்கி கொண்டு பியர், மற்ற சரக்குகளை விட உடலுக்கு நல்லது என்பது ஏதோ வேதவாக்கு போல் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் நடுநிலையாகப் பார்த்தோமானால் அதன் உண்மையான ஆரோக்கிய விளைவுகள் என்ன என்பதைப் பார்த்தால் நமது மாயைகள் முடிவுக்கு வரும். உண்மையில் பியரில் சற்றே குறைவான அளவுகளில் சில வைட்டமின்கள் உள்ளது. ஆனால் அதுவும் தயாரிப்பில் காணாமல் போய்விடும். சிறிதளவே அதில் பி- 6 வைட்டமின் மற்றும் பிற கனிமங்கள் உள்ளன. ஆனால் அது பியர் தயாரிப்பு முறையில் க…
-
- 0 replies
- 525 views
-
-
பிரசவத்தின் படிமுறைகளும் பிறப்பின் வழிமுறைகளும் பிரசவம் எவ்வாறு நிகழ்கிறது என்று யாரையாவது கேட்டால் திரைப்படங்களில் காட்டப்படும் காட்சியைப் போல தாய் ஒருவர் பெரும் வேதனையுடன் (வயிற்று வலியுடன்) வைத்தியசாலையில் அனுமதிக்க்படுவது போலவும் உடனே அவர் பிரசவ அறைக்கு எடுத்துச் செல்லப்படுவது போலவும் சில நிமிடங்களில் ஒரு தாதி வெளியே ஓடி வந்து உங்களுக்கு ஒரு பையன் அல்லது பெண் பிறந்திருக்கிறார் என்று சொல்வது போலவும் காட்சிகள் ஓடலாம் ஆனால் குழந்தைப் பேறு என்பது திரைப்படங்களில் காட்டப்படுவது போல் அவ்வளவு வேகமாகவும் சாதாரணமாகவும் நிகழ்ந்து விடுவதில்லை . சாதாரணமாக யோனிவழிப் பிரசவம் (Normal Vaginal Delivery)என்பது பிரசவ வலி வந்தவுடன் பிரசவ அறைக்குள் தாய் குழந்தையைப் …
-
- 0 replies
- 2.5k views
-
-
பிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி நம் எல்லாருக்கும் பல வருடங்களாக வெள்ளை அரிசிதான் தெரியும். அதுதான் சமைக்க சுலபம். வெள்ளை வெளேரென்று மெத்தென்று பார்க்கவே அழகாக இருக்கும். சீக்கிரம் வெந்துவிடும். ஆனால் சத்துக்கள் என்று எடுத்துக் கொண்டால் அதிலிருந்து நமக்குக் கிடைப்பது மிக மிகக் கொஞ்சம். தற்போது சிவப்பு அரிசியின் நன்மைகளை அறிந்துக்கொண்டு பல நாடுகளிலும் மக்கள் சிவப்பு அரிசியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சிவப்பு அரிசியை தீட்டப்படாத அரிசி (unpolished) என்றும், முழு அரிசி என்றும் சரக்கு அரிசி என்றும் சொல்லுகிறார்கள். அதன் நிறம் பிரவுன் அல்லது சிவப்பாக இருக்கும். இதன் கெட்டியான மேல்தோல் (உமி) எனப்படுகிறது. இதற்கு அடுத்த மேல்தோல் மெல்லியதாக பிரவுன் நிறத்தில்…
-
- 0 replies
- 685 views
-
-
வீட்டுக்கு வீடு வாசல்படி இருக்கிறதோ இல்லையோ.. உடல் பருமன், சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம் இருக்கிறது. ‘எதை தின்றால் பித்தம் தெளியும்’ என்று ஆராய்ச்சிகளும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவின் சதர்ன் குவீன்ஸ் லேண்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் மருத்துவத்துறை விஞ்ஞானிகள் சமீபத்தில் இதுதொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர். பெரிய வெங்காயத்தில் இருந்து எடுக்கப்பட்ட சத்துக்களை எலிகளுக்கு செலுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து மனிதர்களிடமும் அடுத்தகட்ட சோதனை நடத்தப்பட்டது. அதிலும் வெற்றி. இந்த ஆய்வு பற்றி ஆராய்ச்சி யாளர்கள் கூறுவதாவது: உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து பருமனை கட்டுப்படுத்துவதிலும் சர்க்கரை நோய் பாதிப்பு களை…
-
- 3 replies
- 828 views
- 1 follower
-
-
பிரா அணியாவிட்டால் மார்பகங்கள் தளருமா? பெரிய மார்பகங்கள் சிக்கலை ஏற்படுத்துமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 16 மார்ச் 2023, 03:23 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பெண்களின் மார்பக ஆரோக்கியம் குறித்து, பலரிடமும் ஏராளமான குழப்பங்களும் சந்தேகங்களும் நிலவுகின்றன. குறிப்பாக ‘பிரா’ அணிவது குறித்த வதந்திகள் அதிகம் காணப்படுகின்றன. பெண்கள் தங்களது உடைகளை சௌகரியமாக அணிவதற்கு பிராக்கள் உதவி செய்கின்றன.நடைமுறையில் பார்க்கும்போது, பள்ளி & கல்லூரி மாணவிகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்க…
-
- 0 replies
- 743 views
- 1 follower
-
-
பிராண வாயுவை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் எளிய யோக - வர்மப் பயிற்சிகள்! மு.ஹரி காமராஜ் யோகா பூரக, ரேசக, கும்பக, தம்பன எனும் நால்வகை சுவாசப் படி நிலைகளில் கால நிர்ணயத்தோடு செய்யப்படும் சுவாசப் பயிற்சியால் பிராண சக்தி பெருகும். இதனால் நிச்சயம் நம் ஆரோக்கியம் மேம்படும். உடலுக்கு உயிர் ஆதாரம் என்றால், உயிருக்குப் பிராணனே ஆதாரம். வாதம், பித்தம், கபம் என்ற மூன்று அடிப்படை உடல் காரணிகளில் வாதமே ஆன்மாவையும் இயக்கக் கூடியது. நாம் சுவாசிக்கும் காற்றில் பெரும்பங்கு கொண்ட ஆக்சிஜன் நாசியில் தொடங்கி உள்ளே சென்று நலம் பயக்கிறது. பிறகு வெளியேறும் ஆக்சிஜன் நாபியில் எழுந்து நுரையீரல் கடந்து விஷ்ணு பாதம் எனும் வெட்டவெள…
-
- 0 replies
- 572 views
-
-
பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு: நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது. ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாததுதான். 6 மாதத்தில் மு…
-
- 3 replies
- 11.1k views
-
-
ரோபோவின் மூலம் இருதய சத்திரசிகிச்சையொன்றை வெற்றிகரமாக மேற்கொண்டு பிரித்தானிய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 'டாவின்சி' என்று பெயரிடப்பட்ட 4 கைகளைக் கொண்ட ரோபோ மூலம் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சத்திரசிகிச்சையின் போது 'டாவின்சி' ஆனது வைத்தியர்களினால் ரிமோட் ஒன்றின் ஊடாகக் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் நோயாளியின் இதயத்தினை அதி துல்லியமான, முப்பரிமாண கெமராவின் ஊடாக வைத்தியர்கள் அவதானித்து வந்தனர். இருதய சத்திரசிகிச்சைகள் மார்புக்கூட்டைத் திறந்து செய்யப்படுவது வழமையாகவுள்ள நிலையில் இந்த அறுவைச்சிகிச்சைகள் ரோபோ கரங்களை நோயாளியின் விலா எலும்புகளுக்கிடையே செலுத்தி மேற்கொள்ளப்பட்டன. உல்வர்ஹெம்டன் பகுதியில் அமைந்துள்ள நிவ் குரஸ்…
-
- 1 reply
- 791 views
-
-
தற்போது உள்ள கொரோனா தடுப்பு மருந்து புதிய வைரசிடமிருந்து பாதுகாக்குமா? Digital News Team பிரித்தானியாவிலிருந்து குடும்பநல மருத்துவரும், தமிழர் நலவாழ்வு நிறுவனத்தின் தலைவருமான மருத்துவர் ஆ.புவிநாதன் நேர்காணல் கோவிட் 19 ன் தாக்கம் சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில் கொரோனா வைரஸின் திரிபில் (strain) மாற்றம் ஏற்பட்டு ஒரு புதிய திரிபு உருவாகி இருப்பது இங்கிலாந்தில் அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மக்கள் நடமாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெரும்பாலான உலக நாடுகள் இங்கிலாந்து டனான விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்தன. மேலும், இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகள் பரிசோதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வ…
-
- 0 replies
- 380 views
-
-
பிறந்த மகளுக்கு தன் மார்பில் பாலூட்டிய தந்தை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தங்களின் குழந்தையை பெற்றெடுக்க விஸ்கான்ஸின் ஜோடி ஒன்று மருத்துவமனைக்குச் செல்லும்போது தாய்க்கு மட்டும் அது மறக்க முடியாத இரவாக அமையவில்லை. அக்குழந்தையின் தந்தைக்கும்தான். கனவில் கூட நினைத்துப்பார்க்காத செயலைச் செய்தார் அந்த தந்தை. படத்தின் காப்புரிமைMAXAMILLIAN KENDALL NEUBAUER ஏப்ரல் …
-
- 0 replies
- 667 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 25 ஏப்ரல் 2024, 15:11 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சமீபத்தில் பாட்டியாலாவை சேர்ந்த 10 வயது சிறுமி தனது பிறந்தநாளில் ஆர்டர் செய்த கேக்கை சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறையில் கொடுத்த தகவலின் அடிப்படையில், `சம்பவத்தன்று, சிறுமியின் பிறந்தநாளையொட்டி உணவு விநியோக செயலி மூலம் கேக் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கேக் வெட்டிக் கொண்டாடிய பின்னர், அனைவரும் அந்த கேக்கை சாப்பிட்டனர். கேக் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, குடும்பத்தில் இருந்த அனைவருக்கும் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமானது. மருத்துவமனைக்குக்…
-
- 0 replies
- 486 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கியூலியா கிராஞ்சி பதவி, பிபிசி செய்திகள், பிரேசில் 11 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சிலருக்குப் பிறப்புறுப்புகளில் அரிப்பு ஏற்படும். பொதுவாக பெண்களுக்கு இது அதிகமாக ஏற்பட்டாலும், ஆண்களுக்கும் இது ஏற்படக்கூடும். இது கேன்டிடா அல்பிகான்ஸ் (Candida albicans) என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது. இதன் பெயர் கேன்டிடியாஸிஸ் (Candidiasis). கேன்டிடா அல்பிகான்ஸ் பூஞ்சை, பொதுவாக மனித உடலில் வாழும் நுண்ணுயிரிகளோடு இணைந்து வாழும். இது உடலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணுயிரிகளில் ஒன்றாகும். ஆனால் இந்த உயிரினம் ‘சந்தர்ப்…
-
- 0 replies
- 851 views
- 1 follower
-
-
பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை.... ஏன் ஷேவிங் செய்யக்கூடாது என்று தெரியுமா? தற்போது ஆண்கள், பெண்கள் என இருபாலரும் மென்மையாக ரோமம் இல்லாத சருமத்தின் மீதுள்ள மோகத்தால், தங்கள் சருமத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் முடியை அகற்றி வருகின்றனர். அதில் கை, கால், அக்குள்களில் மட்டுமின்றி, பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியையும் அகற்றுகின்றனர். அந்தரங்க முடியை ஷேவிங் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!! மேலும் உடலில் வளரும் முடியை அகற்றுவதற்கு பல வழிகள் உள்ளன. அதில் ஷேவ் செய்வது, ட்ரிம் செய்வது, வேக்ஸ் செய்வது போன்றவை பொதுவான வழிகள். இதில் ஷேவிங் முறையைத் தான் நிறைய பேர் பின்பற்றுகின்றனர். ஏனெனில் இந்த வழியால் நமக்கு வலி இருக்காது. அந்தரங்க பகுதியில் …
-
- 13 replies
- 15.7k views
-
-
பிறவிக் குறைபாடுகளுடன் அதிக குழந்தைகள் பிறக்கும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. பிறவிக் குறைபாட்டில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி? அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.. இந்தியாவில், ஆயிரம் குழந்தைகளில், 61 முதல் 70 குழந்தைகள் பிறவிக் குறைபாட்டுடன் பிறப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. குழந்தை கருவில் இருக்கும் போது, தாய் எடுத்துக் கொள்ளும் உணவு, மரபணு, சுற்றுச்சூழல் ஆகியவை பிறவிக் குறைபாடுகளுக்கு காரணமாக அமைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தாளசீமியா, டவுன் சிண்ட்ரோம், சார்ஜ் சிண்ட்ரோம் உள்ளிட்ட 5,000 மருத்துவப் பெயர் கொண்ட நோய்கள் மரபணுக் கோளாறால் மட்டும் உண்டாவதாகச் சுட்டிக் க…
-
- 1 reply
- 563 views
-
-
[size=5]பிளம்ஸ்(plums) பழங்கள்..![/size] மிகுந்த இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை, செண்பகனூர் உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் விரைகின்றன. பல்வேறு சுவைகளில் பல்வேறு பெயர்களில் இப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிளம்ஸ் பழ விளைச்சல் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் ஜூலை மாத வரை நடைபெறும்.சீசன் சமயத்திலேயே இப்பழங்களின் விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் இ...வற்றினை விரும்பி பயிரிடுகின்றனர். தற்போது முதல் தர பிளம்ஸ் பழங்கள் கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. பிளம்ஸ் பழத்தின் நன்மைகள் !! சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை…
-
- 0 replies
- 2.4k views
-
-
Posted Date : 08:46 (31/07/2014)Last updated : 12:22 (31/07/2014) நியூ யார்க்: தேநீர், காபி குடிப்பதற்கு பயன்படும் பிளாஸ்டிக் கோப்பைகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 'ஸ்டைரீன்' என்ற வேதி பொருள் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும் என்று அமெரிக்க அறிவியலாளர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய ஆய்வு அமைப்பு ஒன்று வேதியியல், நச்சு வேதி பொருள் கண்டறியும் அறிவியல் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளை சேர்ந்த 10 நிபுணர்களை கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், வேதி பொருளான 'ஸ்டைரீன்' மனிதர்களிடையே புற்றுநோயை உண்டாக்க கூடிய ஆற்றலை கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளது. ஆய்வின் தலைவர் டாக்டர் ஜேன் ஹென்னே கூறும்போது, இது துன்பம் விள…
-
- 3 replies
- 1.1k views
-
-
FILE வீடுகளில், அலுவலகங்களில், துரித உணவகங்களில், பிக்னிக் செல்லும் குடும்பத்தினரின் கைகளில் என்று பிளாஸ்டிக் தட்டுகளில் உணவு அருந்துவது என்பது மிகவும் சௌகரியமாக உணரப்பட்டு வருகிறது. ஆனால் அது கிட்னியில் கல் உருவாக வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பிளாஸ்டிக் தட்டுகளில் சூடாக உணவை வைத்துக் கொண்டு சாப்பிட்டால் கிட்னி கல் உருவாகும் என்பதே அவர்களது ஆய்வின் முடிவாகும். தைவான் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் படி பிளாஸ்டிக்கில் சூடாக எதையாவது வைப்பது என்பது மெலாமைன் என்பதின் அளவை அதிகரிக்கும். இது கிட்னியில் கல் உருவாக வழிவகுக்கும். இது பற்றிய கட்டுரை டெய்லி மெயில் பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது. சூப்களை பிளாஸ்டிக் கப்களில் அருந்தியவர்கள் மற்றும் செராமிக் கப்க…
-
- 1 reply
- 690 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி 2 மார்ச் 2025, 08:44 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் உணவகங்களுக்குச் செல்லும் போது இட்லி மிகவும் பாதுகாப்பான உணவாக பலராலும் எப்போதும் நம்பப்படுகிறது. ஆனால் கர்நாடக அரசு, வெறும் இட்லியில் புற்றுநோயை உருவாக்கும் நச்சுத்தன்மை இருப்பதை கண்டறிந்துள்ளது. 241 உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது 52 உணவகங்களில் துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள்கள் மீது இட்லி மாவு ஊற்றி இட்லி சமைக்கப்பட்டதை அம்மாநிலத்தின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். பொதுவாக, இட்லியை நீராவியில் வேக வைக்க, இட்லி தட்டில் சுத்தமான துணியை பயன்படுத்துவார்கள். ஆனால் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் ந…
-
-
- 2 replies
- 374 views
- 1 follower
-
-
பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் இப்போது கொரோனா நோய்த் தொற்று காரணமாக குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள். ஆனால், வழக்கமாக பள்ளிகளுக்குச் செல்லும்போது லஞ்ச் பாக்ஸில் உணவு எடுத்துச் செல்வார்கள். அந்த லஞ்ச் பாக்ஸ் அவர்களுக்குப் பிடித்த விதமாக இருந்தால் ரொம்பவே மகிழ்ச்சியோடு மட்டுமல்ல மறக்காமலும் எடுத்துச் செல்வார்கள். இப்ப்போது பல நகரங்களில் லாக்டெளன் தளர்த்தியிருப்பதால் பல அலுவலகங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. அதனால் பெரியவர்கள் லஞ்ச் பாக்ஸில் விருப்பமான …
-
- 0 replies
- 633 views
-
-
ஆரோக்கியப் பெட்டகம்: பீட்ரூட் பீட்ரூட்டின் நிறம், மணம், குணம் என எல்லாமே அதை ருசிக்கத் தூண்டுபவை. செக்கச் சிவந்த அதன் நிறத்தைப் பார்த்து, ‘பீட்ரூட் சாப்பிட்டா ரத்தம் ஊறும்’ என்கிற அளவுக்கு மட்டுமே தெரிந்து வைத்திருப்போருக்கு பீட்ரூட்டின் அறியப்படாத பக்கங்களையும் காட்டி, சாப்பிட வைக்கும் இங்கே பகிரப்பட்டிருக்கும் தகவல்கள்! ‘‘பீட்ரூட் ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்ந்து வரும் பண்டைய காயாகும். அந்த காலத்தில் பீட்ரூட்டின் கீரையை மட்டுமே சாப்பிடுவார்கள். பீட்ரூட் பல முறைகளில் சமைத்து உண்ணப்படுகிறது. அதை ஜூஸ் ஆக செய்தால் அதில் தானாக இனிப்பான சுவை வரும். அந்த ஜூஸில் சில மூலிகைகளைச் சேர்த்தும் பருகலாம். பீட்ரூட் பல க…
-
- 1 reply
- 955 views
-
-
பீட்ரூட் பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை தணிக்கவல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.ஒரு தேநீர் கோப்பை அளவு, அதாவது சுமார் 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம் எம் அளவால் குறைவதாக லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்வதனால் இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். பீட்ரூட் மலச்சிக்கலைப் போக்கும்.* பித்தத்தைக் குறைக்கும் அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும். 100 கிராம் பீட்ரூட்டில் C…
-
- 13 replies
- 1.3k views
-
-
பீட்ரூட் ஜூஸ் குடிங்க! சுருசுருப்பா இருங்க! பீட்ரூட் ஜூஸ் பருகினால், முதுமையிலும் சுறுசுறுப்புடன் வாழ முடியும் என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. மனிதர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை, நைட்ரேட் சத்து வெகுவாக குறைப்பதாக, ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெரிந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு, நைட்ரேட் சத்து நிறைந்த பீட்ரூட் ஜூசை முதியவர்களுக்குக் கொடுத்து, பிரிட்டன் எக்ஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதில், வாரத்திற்கு ஆறு நாட்கள் பீட்ரூட் ஜூஸ் அருந்தியவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பது தெரிந்தது. இதுகுறித்து ஆய்வுக்கு தலைமை வகித்த விஞ்ஞானி கேட்டி லான்ஸ்லி கூறியதாவது: முதியவர்கள் சிறிய வேலை செய்தாலும், அவர்கள் மிகுந்த சோர்வடைந்த…
-
- 0 replies
- 663 views
-