நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
810 topics in this forum
-
1) காமதேனுவின் முத்தம் இன்று தான் படித்து முடித்தேன் கோவூர் எனும் கிராமத்தில் பெரியவீட்டுகாரர் என அழைக்கப்படும் குடும்பத்தில் கற்பிணிப்பெண்களின் கண்ணில் காம தேனு காட்சிகொடுக்கும் அக்கற்பிணிப்பெண்களுக்கு காமதேனு அம்சம் உள்ள பெண்குழந்தை பிறக்கும் அதன் பின் உள்ள மர்மங்கள் பற்றிய கதை காலசக்கரம் நரசிம்மா எழுதியது 2) ரோலெக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன் 3) மாயப்பெருநிலம் - சென் பாலன் 4) 5 முதலாளிகளின் கதை - ஜோதியி 5) வஜ்ரவியூகம் 6)சாம்ராட் 7) மஹாபாரதத் தேடல் அலெக்ஸாண்டர் இரகசியம் 8)வெண்முரசு ( பாரதப்போரின் துரியோதனன் இறப்பு வரையான பகுதிகள் (கார்கடல்..இருட்கனி.மற்ற பகுதிகளின் பெயர் நினைவில்லை) 9)கௌரவன் ( இன்னும் முடிக்கவி…
-
- 1 reply
- 1.2k views
-
-
புத்தக வாசிப்பு என்பது பெரும்பாலும் ஒருவித தூண்டலின் பேரில் வருவதாக எண்ணுகிறேன். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்க மிக முக்கியக் காரணிகளாக நான் கருதுவது அதன் ஆசிரியர், நாவலின் வகை, தலைப்பு, முன்னிருத்தப்பட்ட விமர்சனங்கள் மற்றும் நண்பர்களின் பரிந்துரைகள் போன்றவைகள் ஆகும். 6174 நாவலை நான் வாசிக்கக் காரணம் அதன் தலைப்பும், நாவலைப் பற்றி இணையத்தில் பரவியிருந்த நல்ல விமர்சனங்களாகும். தமிழில் இது போன்று அறிவியல் சார்ந்த த்ரில்லர் நாவல்களை வாசித்தது நினைவில்லை. வாசகர்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் இணைக்குமாறு வேண்டுகிறேன். அறிவியல் புனைவு சார்ந்த தலைப்பில் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல் 6174. இந்…
-
- 10 replies
- 1.7k views
-
-
கிளிநொச்சியில் இனிதே அரங்கேறிய செந்தூரனின் ’மனப்பாரம்’ சிறுகதை நூல்.! ஈழத்தின் இளம் எழுத்தாளர் கனகபாரதி செந்தூரன் எழுதிய மனப்பாரம் சிறுகதை நூல் வெளியீடு கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (14.12.2019) சிறப்பாக இடம்பெற்றது. கிளிநொச்சி கண்ணகைநகர் இந்து வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய கனகபாரதி செந்தூரன் கொட்டகல ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் கல்வியை பயின்று வருகிறார். கிளிநொச்சி பரந்தனை பூர்வீகமாகக் கொண்ட இவர் கனகரத்தினம் செந்தூரன் என்ற இயற்பெயரை கொண்டவர். இவர் எழுதிய பத்து சிறுகதைகளின் தொகுதியே மனப்பாரம். இந் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சிவஞானம் சிறிதரனும் சிறப்பு …
-
- 0 replies
- 879 views
-
-
-
The Road of Lost Innocence எனது பெயர் சோமாலி மாம்..சோமாலி என்றால் “ கன்னி வனத்தில் தொலைந்த பூச்சரம்” பெயரின் அர்த்ததைப்போலவே எனது வாழ்க்கையும் என்று ஆரம்பிக்கிறது இந்த புத்தகம். கடும் போக்ககுடைய கம்னீயூஸ்ட கட்சி ஆட்சியிலிருந்த (Khmer Rouge) சமயத்தில் பிறந்த சோமாலி(1971?), பெற்றோர்களை தெரிந்திருக்கவில்லை, தாய்வழிப்பாட்டியும் இவரை காட்டில் விட்டுவிட்டு மாயமாகிவிட, Taman எனும் முஸ்லீம் வீட்டில் வளர்க்கப்படுகிறார். 9 வயதாகும் சமயத்தில் திடீரென பாட்டனார் எனக்கூறி வந்த ஒருவரால் கூட்டி செல்லப்படுகிறார், பின்பு பாட்டனாரினாலும் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு சீன வியாபாரியால் பலாத்காரப்படுத்தபடுகிறார். அப்போது இருந்த கம்போடியாவில் பெண்களை சிறுவர்களை(பெரும்பாலும் சி…
-
- 0 replies
- 642 views
-
-
-
நூல் அறிமுகம்: ஒரு புது வெளிச்சம் யசோதா.பத்மநாதன் காலம் செதுக்கிய சிற்பி தாமரைச் செல்வி. வன்னி மண் கடைந்தெடுத்துத் தந்த காலத்தின் கண்ணாடி. அவர் கடதாசிக்காலத்திலும், கணனிக்காலத்திலும் வன்னியின் வாழ்வைச் செவ்வனே செதுக்கும் கைதேர்ந்த கதைச்சிற்பி என அறியப்படுபவர். வன்னியின் போருக்கு முன் - போர் காலம் - போருக்குப் பின் - என்ற பெரு மாற்றங்கள் நிகழ்ந்த முக்கிய காலகட்டத்தின் தவிர்க்க முடியாத இலக்கியப் பிரதிநிதி. வயலும் வாழ்வும்; காடும் களனியும்; உழைப்பும் உறுதியும்; தன்மானமும் அடங்காத் தன்மையும்; வன்னி மண்ணின் தனித்துவமான அழகு. அது யுத்தத்திற்கு முன்பும்; யுத்த காலத்தின் போதும்; யுத்தத்தின் பின்பும்; எவ்வாறாகத் தன்னை அடையாளப்படுத்தியதோடு தக்கவைத்தும் கொண்…
-
- 0 replies
- 816 views
-
-
#மாயப்பெருநிலம் கிண்டிலின் உதவியினால் வாசித்து முடித்தாயிற்று வாசித்து முடிக்கும் வரையிலும் உண்மையில் மிக விறு விறு ப்பா இருந்தது அதுவும் அந்த போலியானவர்களின் கையில் போய்ச்சேர்ந்துவிடுமோ, இவர்களை இலகுவாக நம்பி விட்டாரே பேராசிரியர் ஜெயச்சந்திரன் என்ற தவிப்பு இருந்து கொண்டே வந்தது. நம்பர் 002 உண்மையில் இருக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு அநேகமானவர்களிடம் இருப்பது போல் பேராசிரியரிடமும் இருந்ததில் வியப்பு இல்லை. எங்களவர்கள் எழுதும் கதைகளில் போராட்டத்தின் இழப்புகள் சார்ந்த ஒருவித சோக இழையோடும் கதைகள் அதிகமாக வந்திருக்கின்றன அல்லது நான் படித்திருக்கிறேன் அவற்றுடன் ஒப்பிடும் போது இப்படியான கதைகள் புதிய களத்தினை திறந்து வைத்திருக்கின்றது எனலாம்.. கதாசிரியர் இடையிடையே…
-
- 7 replies
- 1.4k views
-
-
குலாத்தியாச்சே போர்( ஒரு குலாத்திக் குழந்தை) இந்த புத்தகம் மிகவும் வினேதமான சமூகத்தை அறிமுகப்படுத்தியதால் அதை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன். குலாத்தியாச்சே போர்: மராத்திய மொழியில் உருவான ஒரு தலித் காவியம். ஆசிரியர்: மறைந்த டாக்டர் கிஷோர் சந்தாபாய் காலே. ஆங்கில மொழிபெயர்ப்பு: சந்தியா பாண்டே தமிழில்: குலாத்தி ( தந்தையற்றவன்). ஆங்கிலம் வழி தமிழில்: வெ. கோவிந்தசாமி. “ வித்தியாசமான முரசொலியை கேட்பதால்தான் ஒரு மனிதனால் தன் சக நண்பர்களுடன்சமநடை போடமுடியவில்லை போலும்” என்று தோரோ எழுதியுள்ளார். வித்தியாசமான முரசொலியை கேட்கும் திறன் பெற்ற, அதன் இசைக்கு எதிர்வினை செய்கின்ற, மனிதர்களால் மட்டுமே தாங்கள் …
-
- 0 replies
- 766 views
-
-
புளியமரத்து அடியிலே, புஷ்பலதா மடியிலே.... தங்கதுரையின் தற்கொலை ஜோக் புக் வெளியீடு. கலக்கப்போவது யாரு புகழ் புளியந்தோப்பு தங்கதுரை தன்னுடைய ஜோக்குகளை தொகுத்து தங்கதுரையின் தற்கொலை ஜோக்குகள் என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார் தங்கதுரை. பொதுவாக கவிஞர்கள், எழுத்தாளர்கள் புத்தகம் வெளியிடுவார்கள் அவர்களுக்கு மத்தியில் தங்கதுரை நகைச்சுவை புத்தகம் வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம் ஆகும். புளிய மரத்து அடியிலே, புஷ்பலதா மடியிலே என்ற ஒரு அர்த்தம் புரியாத ஜோக்கை சொல்லி வேற லெவலில் ரீச் ஆன காமெடி நடிகர் யார் தெரியுமா. விஜய் டி.வியின் கலக்கப்போவது யாரு ஷோவின், முதல் சீசன் ம…
-
- 0 replies
- 2.3k views
-
-
நந்தி கடல் பேசுகிறது நூல் அறிமுக விழா.
-
- 1 reply
- 1.3k views
-
-
FB ல வஜ்ர வியூகம் பற்றிய பகிர்வுகளை பார்த்து கிண்டிலில் தேடியபோது ப்ரீ என காட்டியது . டவுன்லோடியதும் என்ன தான் இருக்கு என சில பக்கங்களை பார்ப்பம் என உள்நுழைந்ததுதான்..பரவாய் இல்லையே என தொடர்ந்து முடித்து விட்டு தான் நிமிர்ந்தேன்.. ரொம்ப நல்லது என்றும் இல்லை சுமார்என்றும் இல்லாமல்.. ஓகே ரகம் எனலாம்.. அதிக கதாபாத்திரங்கள் வருவது கொஞ்சம் ஆர் எவர்கள் என நினைவில் வைத்திருப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. கதை என்று பார்க்கும் போது ரவுடிகளால் துரத்தப்படும் ஒரு பிச்சைகாரன் ,ரோட்டினை கடக்கும் போது ஒருபெண் பொலிஸ் அதிகாரியின் வாகனத்துக்கு முன் விபத்துக்குள்ளாகி் இறக்கிறான் அவன் உடமைகளை சோதனை செய்யும் போது ஒரு செல்போனும் மெமரிகாட்டும் கிடைக்கிறது அன்றிரவு அந்தப்பெண…
-
- 0 replies
- 1.1k views
-
-
அலெக்ஸாண்டரின் இந்தியா நோக்கிய படையெடுப்பு உண்மையாகவே அவனின் உலகத்தை பிடிக்கும் ஆசையின் பகுதியா? அல்லது வேறு ஏதோ ஒரு இரகசியத்தை தேடி வந்தானா? அப்படி 25000 மைல்கள் வரை வந்தவன் சிந்து நதி தீரம்(இன்றைய பஞ்சாப் /பாகிஸ்தான் பகுதிகள்?) உடன் திரும்பியதற்கான காரணம் என்ன? அவன் தேடி வந்த இரகசியத்தை அவன் கண்டறிந்து அதை அடைந்து விட்டதனாலா? அல்லது அவனின் படையினரின் எதிர்ப்பா? களைப்பா? ####################### ஒலிம்பியாஸிடம் ( அலெக்ஸாண்டரின் அம்மா) தூரதேசத்து துறவி ஒருவரினால் 5 கட்டளைகள் எழுதப்பட்ட கன சதுரமும் ஆட்டு தோலில் எழுதிய குறிப்பு மற்றும் வரை படங்களும் கொடுத்து இவற்றை அவன் சரியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அப்படி நிறைவேற்றுவானாயின் அவள் எதிர்பார்ப்பதை அவன் அடைவான் அ…
-
- 0 replies
- 608 views
-
-
-க. அகரன் இறுதி யுத்த காலத்தில், குடும்பத்தினருடன் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் சிலரது விவரங்கள் அடங்கிய நூல் ஒன்று, வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், இன்று (01) வௌயிடப்பட்டது. சிறுவர் தினத்தை முன்னிட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி, வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களால், வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்னால், இன்று (01) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே, இந்த நூல் வெளியிடப்பட்டது. http://www.tamilmirror.lk/வன்னி/உறவுகளால்-நூல்-வெளியீடு/72-239430
-
- 0 replies
- 371 views
-
-
ஈழப்போரின் இறுதிநாட்கள் இளங்கோ - டிசே Monday, September 30, 2019 90களில் இயக்கத்தில் இணைந்து, அடுத்த சில ஆண்டுகளில் போராட்டத்தின் நிமித்தம் ஒரு கையையும், கண்ணையும் இழந்து கிட்டத்தட்ட 18 வருடங்கள் போராளியாக இருந்த ஒருவர் ஈழப்போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நேரடியாகச் சாட்சியாக இருந்து எழுதிய ஒரு வரலாற்றுப் பதிவு இது. ஈழத்தில் இறுதி யுத்தம் நமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு நிகழ்ந்து பெரும் கொடூரத்துடன் நடந்து முடிந்திருக்கின்றது. போர் நிகழ்ந்துகொண்டிருந்தபோது பெரும் அழிவுகளைச் சந்தித்தவர்கள், போர் முடிந்தபின்னும் இன்னும் பெரும் உளவியல் நெருக்கடிகளை இராணுவம்/தடுப்புமுகாம் வாழ்க்கை என அனுபவிக்க வேண்டியிருந்தது.போராளியாக இருந்த வெற்றிச்செல்விக்கு புலிக…
-
- 0 replies
- 1.1k views
-
-
'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூலுரையாடல் 'Fear: Trump in the White House' என்கிற நூல் வெளிவந்து ஓராண்டு கூட ஆகவில்லை. 2 மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்துவிட்டது. இதில் முதல் ஒரு மில்லியன் முதல் வாரமே விற்றது. இப்போது அடுத்த தேர்தலுக்கு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் இந்த நூலைப் பற்றிய பேச்சு மீண்டும் கூடும். டிரம்ப் அரசு எப்படிப் பட்டது, டிரம்பும் டிரம்பின் ஆட்களும் எப்படிப் பட்டவர்கள் என்பதை அவர்களுடனேயே பேசி வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வேலையைச் செய்திருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் பாப் வூட்வர்ட் (Bob Woodward). பாப் வூட்வர்ட் யார்? இவர் ஓர் எழுபது வயதுக்கும் மேலான, அமெரிக்க அரசியலைப் பழம் தின்று கொட்…
-
- 0 replies
- 720 views
-
-
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி அகலினி எழுதிய “A CITY WITHOUT WALLS” (சுவர்களற்ற ஒரு நகரம்) ஆங்கிலக் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா இன்று (27) பிற்பகல் 03.30 மணிக்கு, யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் துளசி முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் மொழிவழக்கு யாவுமே ஆங்கில மொழி பயன்படுத்துகையில் நடைபெற்றன. இதன்போது வரவேற்புரையினை நூலாசிரியர் அகலினியின் தாயார் ரஞ்சிதமலர் வழங்கினார். ஆசியுரையினை எழுத்தாளர் அருட்பணி அன்புராசா (அமதி) அடிகளார் வழங்கினார். தலைமை உரையினைத் தொடர்ந்து பெண் படைப்பாளினி வெற்றிச்செல்வி வெளியீட்டுரை நிகழ்த்தினார். நூலினை அகலினிய…
-
- 1 reply
- 1.1k views
-
-
கலாதீபம் லொட்ஜ் சக இனமொன்றின் மீது தேவையற்ற காழ்ப்புணர்வுடன் முதல் நாவலை எழுதிய ஒருவர், தனது அடுத்த நாவலில் மீண்டு வருவது என்பது எல்லோருக்கும் நிகழ்வதில்லை. அந்த வகையில் வாசு முருகவேலுக்கு 'கலாதீபம் லொட்ஜ்' மூலம் சாத்தியமாகியிருப்பது சற்று வியப்பாக இருக்கிறது. யாழ்ப்பாணத்தின் தீவுகளில் ஒன்றான நயினாதீவிலிருந்து, போர் நிமித்தம் கொழும்புக்கு வந்து தங்கி கனடாவுக்கு வந்து சேரும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையை, சிறுவன் சந்திரனின் பார்வையிலிருந்து இந்தப் பனுவல் பேசுகிறது. சாதாரண பாதைகளினால் வரமுடியாது, கப்பலினால் திருகோணமலைக்கு சென்று, அங்கிருந்து கொழும்புக்கு வந்து லொட்ஜியில் தங்கிநிற்கும்போது சந்திரனின் அனுபவங்களினூடாக 90களின் பிற்பகுதியிலான ஒரு காலம் இங்கே பேசப்படுகின்றத…
-
- 0 replies
- 510 views
-
-
ஈழப்போராட்டம் தொடர்பான மூன்று முக்கிய நூல்களின் அறிமுக நிகழ்வு! தொகுப்பாசிரியர்- தோழர் ரகுமான் ஜான் காலம்- 17 ஆகஸ்ட் 19 . சனி -மாலை 3 மணி இடம்- Trinity Centre Eastham -London ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர், ஈழப்போராட்டம் அதன் குறுகிய எல்லைகளைக் கடந்து ஒடுக்கப்பட்ட மக்களின் தரப்பில் அரசியல் தலையீடு செய்ய வேண்டும் என்பதில் தெளிவுடன் செயற்பட்டவர். விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தீப்பொறி, தமிழீழ மக்கள் கட்சி போன்ற பல அமைப்புகளினூடாகத் தொடர்ந்த இவரது அரசியல் பயணத்தில் கோட்பாட்டு செயற்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்தவர். உயிர்ப்பு, வியூகம் ஆகிய கோட்பாட்டு இதழ்களின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். தொடர்ச்சியாக அர்சியல் உ…
-
- 0 replies
- 825 views
-
-
ஈழத்தில் பிரபல எழுத்தாளர் சர்மிலா வினோதினியின் மொட்டப்பனையும் முகமாலைக் காத்தும் என்கின்ற சிறுகதைத் தொகுப்பு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் இன்றைய தினம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மன்னார் நகர சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த நூலை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்போது, வவுனியா தேசிய கல்வியற் கல்லாரியின் நிதி நிர்வாக உப பீடாதிபதி பொ.சத்தியநாதன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் ஒய்வு நிலை கல்வியலாளர் க.தர்மராசா மற்றும் ஓய்வு நிலை அதிபர் மணலாறு விஜயன் உற்பட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குற…
-
- 1 reply
- 789 views
-
-
இமையத்தின் 'செல்லாத பணம்' இளங்கோ-டிசே வாழ்க்கை நாம் நினைத்த எந்த ஒழுங்கிலும் போவதில்லை. எவையெல்லாம்அடுத்து நிகழும் என்பதும் நமக்குத் தெரிவதில்லை. சம்பவங்கள் ஒவ்வொன்றும்நடந்தபின்னும் இப்படி நடந்திருந்தால் அல்லது நடக்காதிருந்தால்என்னவாகியிருக்குமென பின்னோக்கிப் பார்க்க மட்டுமே மனிதர்களாகிய நம்மால்முடியும். 'செல்லாத பணத்திலும்' ரேவதி தீக்குளித்து வைத்தியசாலைக்குக்கொண்டுவரப்படும்போதுதான் நமக்குத் தெரிகிறது. அவ்வாறு ரேவதி தீக்குளிப்புடன்போராடும்போது அவரோடு சம்பந்தப்பட்ட மனிதர்கள் தீக்குளிப்பு நடக்க முன்னர்நடந்த நிகழ்வுகளை ஒவ்வொரு திசைகளிலிருந்து அசைபோடுகின்றனர், உரையாடுகின்றனர். ரேவதியின் இந்த நிலைக்காகக் கோபப்படுகின்றனர், பரிதாபப்படுகின்றனர், இரக்கம் கொள்கின்றனர், இற…
-
- 0 replies
- 709 views
-
-
இன்று கரு பழனியப்பன் பேச்சு கேட்டேன். வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் என்பது குறித்தது. கேரள நடிகர் மம்முட்டி சிறந்த எழுத்தாளர் கூட. அவர் ஒரு கார் வாங்கினார். கேரளாவில் இருந்து காரை இரவோடிரவாக ஓடி சென்னைக்கு அரக்க பரக்க படத்தில் நடிக்க ஓடிவந்தால், அவர் நடிக்கும் படத்தின் இயக்குனர் செல்வமணி மிகவும் மெதுவாக செட்டுக்கு வருகிறார். அவரிடம் புறுபுறக்கிறார் மம்முட்டி. அட, நீங்களா ஓடு ரீங்க. டிரைவர் தானே. ரிலாக்ஸ் பண்ணி தூங்கி வர வேண்டியது தானே என்கிறார் இயக்குனர். அடப்போய்யா .... டிரைவர் ஓடவா 60 லட்ச்சத்துக்கு காரை வாங்கினேன் என்கிறார். அப்ப என்ன புறுபுறுப்பு.... நீங்க தான் ஓடுனீர்கள் என்றால், என்ஜோய் பண்ணி ஓட வேண்டியது தானே என்கிறார் டைரக்டர். அ…
-
- 10 replies
- 6.5k views
- 1 follower
-
-
நூல் அறிமுகம்: முருகபூபதியின் "சொல்லத் தவறிய கதைகள்" இரண்டு தளங்களில் இயங்கும் படைப்பாளியின் வாழ்வியல் அனுபவங்களை பேசும் பதிவுகள் நான் மெல்பனில் வாழ்ந்த காலத்திலிருந்து ஏறத்தாழ முப்பது வருடங்களாக நண்பர் முருகபூபதி அவர்களை அறிந்திருக்கிறேன். அந்நாட்களிலிருந்து இன்று வரை அவரை ஒரு இலக்கியவாதியாகவே அறிந்தவன் நான். தொடர்ந்து அயராது எழுதிக் கொண்டிருக்கும் அவரின் பதிவுகளை நூல்களில் மட்டுமல்லாது இணையத்தளங்களிலும் இதழ்களிலும் நான் வாசித்திருக்கிறேன். பத்திரிகையாளனாகவும் இலக்கியவாதியாகவும் இரு ஆளுமை கொண்ட அவரது எழுத்துலக அனுபவங்கள், அவரது இலக்கியப்படைப்புகளுக்கு உதவுகின்றன. இந்தச் சொல்லத் தவறிய கதைகள் என்ற புனைவு சாரா இலக்கியத்திலும் இந்த அனுபவ முத்திரைக…
-
- 0 replies
- 429 views
-
-
பொதுவாக புத்தக வாசிப்பிற்குப் பிறகு அதைப் பற்றிய விமர்சனத்தை இவ்வலைப்பூவில் பதிப்பது வழக்கம். ஆனால் இம்முறை விமர்சனத்தை முன்வைக்காமல், நாவல் பற்றிய எனது அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். பிரபஞ்சம் என்பது ஒரு அதிர்வு. அந்த அதிர்வை வானம் சங்கீதமாக்குகிறது. காற்று மனம் ஆக்குகிறது. ஒளி வண்ணங்களாக ஆக்குகிறது. நீர் சுவைகளாக ஆக்குகிறது. ஜடம் வடிவங்களாக ஆக்குகிறது. விஷ்ணுபுரம் ஒரு கற்பனை நகரம், இதற்குப் பிறப்பும் இறப்பும் உண்டு. மகாவிஷ்ணு ஒருமுறைத் திரும்பிப் படுப்பது ஒரு யுகம் என்று ஐதீகங்கள் குறிப்பிடுகிறது. காலத்தின் சுழற்சியான யுகம் தொடங்கி அழிவது - இந்நாவலின் மூலம். பல விவரிக்க முடியாத கற்பனைகளையும் தத்துவ ஞானங்களையும் உள்ளடக்கிய பிரம்மாண்டம் விஷ்ணுபுரம். …
-
- 4 replies
- 1.2k views
-
-
அறிவடைந்த குரங்கின் கதை- ராகவேந்திரன் சேப்பியன்ஸ் வாங்க ஜெ யுவல் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ் குறித்து. மனித குலம் தனது வரலாற்றை பல காரணங்களுக்காக வியப்புடன் பரிசீலித்து வந்திருக்கிறது. நாம் இன்று சந்திக்கும் சிக்கல்கள் நம் முன்னோராலும் எதிர்கொள்ளப்பட்டவையா என்ற வினா எப்போதும் எழுந்து வந்துள்ளது. வெறும் ஐம்பது வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட நாம் இருக்கும் ஊரின் படத்தைப் பார்க்கும்போதே ‘ எப்படி இருந்த்து இப்படி ஆகி விட்டது ‘ என்று வியக்கிறோம். . நம் முன்னோர்கள் நடந்த பாதையில் நடந்து அவர்கள் நுகர்ந்த காற்றை சுவாசித்து அவர்களின் மரபணுத் தொகுப்புடன் வாழும்போதும் வரலாற்று வாழ்வை நினைவு படுத்தும் ஒவ்வொரு கல், மணி, எலும்பு, ஓவியக் கிறுக்கல்கள், பழம்பொருள…
-
- 0 replies
- 882 views
-