நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
[size=5]கொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...![/size] தமிழ்மகன் வாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கிறான் என்பதை அப்போதுதான் வாசகனால் முழுதாகச் சிலாகிக்க முடியும்; அதன் மூலம் ஒரு அனுபவத்தை வாசகன் அடையமுடியும். வாசிப்பது என்பது எழுத்துக்களின் மீது கண்களை மேயவிடுவது என்பதல்ல. பயிற்சியுள்ள எழுத்தாளனை பயிற்சியுள்ள வாசகன் சுலபமாக அணுகுகிறான். ரஷ்ய நாவல்களை பலர் அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களுக்காகவும் ஊர்களின் பெயர்களுக்காகவுமே ஒதுக்கி விடுவதை அறிவேன். அந் நாவல்களைப் படிப்பது கை வரும்போது ரஸ்கோல்னிகோவும்…
-
- 2 replies
- 1.2k views
-
-
எனது பார்வையில் ஷோபாசக்தியின் BOX கதைப் புத்தகம் by கோமகன் அண்மையில் கறுப்புப் பிரதி வெளியீடான ஷோபாசக்தியின் ‘BOX கதைப் புத்தகம்’ நாவல் வாசிக்க நேர்ந்தது. பொதுவாகவே எழுத்தாளர்கள் தங்கள் கதையைச்சுற்றி வரும் சுற்றுப்புறச் சூழல்களை உவமானத்துக்காகவே பயன்படுத்துவார்கள். இந்த உவமான உவமேயங்கள் அச்சுப்பிசகாமல் சங்ககால இலக்கியத்தில் இருந்து இன்றுவரை இருந்து வந்துள்ளது. ஆனால் ஷோபாசக்தியின் BOX கதைப் புத்தகம் வாசிக்கும் பொழுது முதன் முறையாக முதலாவது கதை சொல்லியாக வானத்தில் இருக்கும் நிலாவும், இரண்டாவது கதைசொல்லியாக ஓர் குழந்தையும் நாவலினூடாக கதைசொல்லிகளாக நகர்ந்து சென்று கொண்டிருந்தன. நாவல் ஒருபக்கத்தில் இருந்து மட்டும் வாசகரை நோக்கிச் சுழலாது, கதைக்களத்திலே இருந்த பலதரப்புக் க…
-
- 2 replies
- 4.4k views
-
-
வன்னி வரலாறும் பண்பாடும் என்ற நூலின் அறிமுக விழா பாரிசில் எதிர்வரும் 18.01.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10. மணி முதல் பிற்பகல் 13.30 மணி வரை 5 RUE PIERRE L'ERMITE 75018 PARIS (லா சப்பல் மெத்ரோ நிலையத்திற்கு அருகில் ) என்றமுகவரியில் நடைபெறவுள்ளது. இந்த நூல் அறிமுக விழாவில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள வர்கள் தொர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இல. 0652176260
-
- 2 replies
- 796 views
-
-
வணக்கம் ஆயுத எழுத்து.பாகம் 2.அடுத்த வாரத்திலிருந்து அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். பக்கம் .288 அட்டை.நூல் வடிவமைப்பு. ஜீவமணி விற்பனை உரிமை பூபாளம் புத்தகப் பண்ணை பிரதியின் விலை. 350 இந்திய ரூபாய்கள். ஐரோப்பா இங்கிலாந்து தபால் செலவுடன் 15 யூரோக்கள் கனடா, அமேரிக்கா தபால் செலவுடன் 25 டொலர்கள். அவுஸ்திரேலியா. நியூசிலாந்து தபால் செலவுடன் 25 அவுஸ்திரேலிய டொலர்கள். தொடர்புகளுக்கு. சிராஜுதீன். வாட்ஸ் அப். +91 94430 66449 வங்கி கணக்கிலக்கம். Mohammed sirajudeen, INDIAN BANK, ASHOK NAGAR BARANCH, A/C NO: 786149344 IFSC CODE: IDIB000A031 கனடாவில் காலம் செல்வம் அவர்களிடமும். இலங்கையில் வடக்கில் கவிஞர் கருணாகரனிடமும். கிழக்கு மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகள் அனைத்துக்கும் பாத்திமா புத்தக…
-
- 2 replies
- 350 views
- 1 follower
-
-
புத்தகக் கண்காட்சியில் ” துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” நூல் அறிமுகம் நூல்: துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” புதிய கலாச்சாரம் வெளியீடு. விலை ரூ. 20.00 நூலிலிருந்து: “மே, 2009 இல் ஈழப்பிரச்சினை தொடர்பாக புதிய ஜனநாயகம் இதழின் சார்பில் மூன்று வெளியீடுகள் கொண்டுவரப்பட்டன. தமிழக ஓட்டுக் கட்சிகளின் தமது தேர்தல் சந்தர்ப்பவாதத்துக்கு ஈழப் பிரச்சினையைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதையும், தமிழ்நாட்டின் தமிழ்த்தேசியவாதிகள் எனப்படுவோரும் புலிகளும் இந்திய மேலாதிக்கத்துக்கு ஈழப்போராட்டத்தை பலியிட்டிருப்பதையும், ஈழப்போராட்டம் குறித்த ஒரு மீளாய்வின் அவசியத்தையும் அந்த மூன்று வெளியீடுகளும் பேசின. இந்த வெளியீடுகளுக்கு புலிகள் …
-
- 2 replies
- 1.9k views
-
-
ஒரு கூர்வாளின் நிழலில் என்ற நூலில் தனக்குத் தெரிந்த தமிழினியைக் காணவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச் செல்வி தெரிவித்துள்ளார். அந்த நூலில் அவரால் கூறப்பட்டவைகள் எனச் குறிப்பிடப்பட்டிருப்பவைகளுக்கும் அவர் வாழ்ந்த நடைமுறை வாழ்க்கைக்கும் வேறுபாடு உள்ளதாகவும் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் முன்னாள் அரசியல் துறைப் போராளி வெற்றிச்செல்வி எழுதிய பம்பைமடு பெண் போராளிகள் தடுப்பு முகாம் தொடர்பாக எழுதப்பட்ட 'ஆறிப்போன காயங்களின் வலி' புத்தக வெளியீட்டு விழா கொழும்பில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய தமிழினி குறித்து நிறையவே தெரியும் என்றும் அவர் சாதாரண போராளியாக இருந்த காலத்திலிருந்தே அவருடன் தான் நெருங்கிப் பழகி…
-
- 2 replies
- 536 views
-
-
"கள்ளத்தோணி" : வரலாற்றை கற்க முனைபவர்களுக்கு ஓர் சிறந்த உசாத்துணைகளில் ஒன்று - பிரகாஷ் சின்னராஜா ஓர் எழுத்தாளர் ஓர் விடயத்தை தகுந்த மூல ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும்பொழுதே அது வலிமையான ஆவணமாக உருமாற்றம் பெறும். சமூக, அரசியல், வரலாற்று விடயங்களை எழுதுபவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டிய மிகமுக்கியமான விடயமாக இது உள்ளது. அவ்வகையில் இலங்கையின் சமூக, அரசியல், வரலாற்றுத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு பேசாப் பொருளை பேசுபொருளாக்கிப் பல விடயங்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிக்கொணரும் சரவணன் அவ்வாறான வலுவான நூல்களை எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றார் என்றால் மிகையல்ல. இவரது படைப்புகளில் "கண்டிக் கலவரம் 1915", "தலித்தின் குறிப்புகள்" வரிசையில் இ…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஈழத்தைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ள "பயங்கரவாதி" நாவல் இன்னும் புத்தக வடிவில் எனக்குக் கிடைக்கவில்லை, ஆனாலும் அமேசான் கிண்டல் தளத்தில் வாங்கிப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஈழ மண்ணிலிருந்து இப்படி ஒரு படைப்பை, உள்ளிருந்த படைப்பாக எழுதுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல, அது கத்தி முனையில் நடப்பதற்குச் சமமானது. இருந்தும், தான் கொண்ட கொள்கையில் எந்த சமரசமும் செய்யாமல் 2005 - 2009 வரையான 4 ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்த நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியான முறையில் கதையாகச் சொல்லியுள்ளார். தீபச்செல்வன் ஒரு சிறந்த கவிஞர் என்பதைத் தாண்டி ஒரு சிறந்த யதார்த்த எழுத்தாளர் என்பதை அவரின் "நடுகல்" நாவல் படித்தவர்கள் புரிந்துகொ…
-
- 2 replies
- 1.1k views
-
-
சேப்பியன்ஸ் யுவால் நோவா ஹராரி மின்நூல் April 15, 2021 மிக அதிக எண்ணிக்கையில் வேகமாக விற்பனையாகும் நூல்களின் மீது தீவிர இலக்கிய வாசகனுக்கு ஒருவித ஒவ்வாமை இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை தமிழ்ச்சூழலில் மறுப்பதற்கில்லை. தயக்கத்துடன் வாசிப்பிற்கு தேர்வு செய்த இந்நூலை தீவிர இலக்கிய நூல்களுக்கு இடையே ஒருமாத காலஅளவு எடுத்துக்கொண்டு வாசித்து நிறைவு செய்ய முடிந்தது. ‘கடந்த காலங்களைப் பற்றிய தெளிவான, தர்க்கபூர்வமான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் பணி வரலாற்று ஆசிரியர்களுக்கு உண்டு’ என்ற ரொமிலா தாப்பரின் கூற்று சேப்பியன்ஸ் போன்ற நூல்களை நாடிச் செல்ல வைக்கிறது. கால எந்திரமும், மாயக் கம்பளமும் யுவால் நோவா ஹராரிக்கு கிடைத்து விட்டது போலும். பலகோடி ஆண…
-
- 2 replies
- 525 views
-
-
கடந்த மூன்று வார இறுதியிலும் வேறுபட்ட சில நிகழ்வுகளுக்கு போயிருந்தேன் . இலக்கிய சந்திப்பு ,தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பிற்கு எதிரான கண்டன கூட்டம்,லண்டனில் இருந்து வருகை தந்திருந்த யமுன ராஜேந்திரனின் ஈழஅரசியல் பற்றிய பார்வை ,தமிழ் சினிமா பற்றிய பார்வை ,வெள்ளி வேலை முடிய குயின்ஸ் பாக்கையும் எட்டி பார்த்துவிட்டு (சனமில்லை ) வந்தேன் . புத்தகங்கள் சில வாங்கினேன் . கூண்டு -இலங்கை போரும் விடுதலைப் புலிகளின் இறுதிநாட்களும் ,(ஆங்கில மொழிபெயர்ப்பு ) -இப்போது தான் வாசிக்க தொடங்குகின்றேன் . மேலிஞ்சி முத்தனின் -பிரண்டையாறு (சிறுகதை தொகுப்பு ) .வாசித்து முடித்துவிட்டேன் .எனக்கு மிகவும் பிடித்திருந்தது .மிக யதார்த்தமாக தனக்கே உரிய பாணியில் எமக்கு துளியும் அறிமுகம் இல்லாத ஒ…
-
- 2 replies
- 1k views
-
-
படித்தோம் சொல்கின்றோம் : நடேசனின் "எக்ஸைல்" குறித்து ஒரு பார்வை! சார்பு நிலையெடுக்காத மனிதநேயவாதியின் குரல்! " ஈழப்போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்குகொண்டவர்கள் எல்லோரும் தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவருமே வெல்லாத அந்தப்போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்" இந்த வரிகளை நடேசனில் எக்ஸைல் நூலில் படித்தபோது, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்தான் நினைவுக்கு வந்தன. அவற்றில் பெரும்பாலானவை சுயவிமர்சனப்பாங்கில் எழுதப்பட்டிருந்தவை. இலங்கை - இந்திய பாதுகாப்புத் தரப்பைச்சேர்ந்தவர்களும் ஐக்கியநாடுகள் சபைக…
-
- 2 replies
- 1.5k views
-
-
சென்னை புத்தக கண்காட்சி: தமிழ்ப் புத்தகங்களுக்கு விரியும் உலக சந்தை ஆர்.மணி மூத்த பத்திரிகையாளர் The India Today Group (இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் கருத்துகளே. பிபிசியின் கருத்து அல்ல -ஆசிரியர் ) சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றான புத்தக கண்காட்சி இன்று வெள்ளிக் கிழமை, ஜனவரி 4ம் தேதி தொடங்கி விட்டது. இது '42 வது சென்னை புத்தக கண்காட்சியாகும். சென்னை நந்தனம் பகுதியில் ஒய்எம்சி திறந்தவெளி விளையாட்டரங்கில் புத்தக கண்காட்சி நடக்கிறது. ஜனவரி 4-ம் தேதி முதல் 20 ம் தேதி வரையில் இந்த கண்காட்சி நடக்கிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், Booksellers and Publishers Association of South India (B…
-
- 2 replies
- 1.3k views
-
-
படித்து பாதுகாக்க வேண்டிய அருமையான EBOOKS இலவசமாக டவுன்லோட் செய்ய.., 06:00 TAMIL PDF 15 COMMENTS உங்கள் மனதுக்குப் பிடித்த இன்பமயமான ஓர் இடத்தின் பெயரைச் சொல்லுங்கள் என்று ஆப்ரகாம் லிங்கனிடம் கேட்ட போது என் மனதிற்குப் பேரின்பத்தை அள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகமே என்று கூறியுள்ளார். அதேப்போல் வீடு தோறும் நூலகம் வேண்டும் என்றார் அண்ணா. இந்த மின்னணு யுகத்தில் கூட கணினி, இணையம், இணைய தளம், மின்னணு நூலகம் ஆகியவற்றின் மூலம் தேவையான செய்திகளையும், புத்தகங்களையும் படித்து பயன் பெற முடியும். விரிவான பொருளில், அறிவைப் பெற ஒரு திட்டமிட்ட செயலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் யாராயினும் அல்லது சிந்தனைக் கருத்துக்கள் அல்லது தத்துவம் தொடர்புடைய விஷயங்…
-
- 2 replies
- 19.8k views
-
-
'கூடார நிழல்' கவிதைத் தொகுப்பு உயிர்மை பதிப்பகத்தால் வெளிவந்துள்ளது. http://www.uyirmmai.com/
-
- 2 replies
- 843 views
-
-
-
- 2 replies
- 832 views
-
-
ஆங்கில மாயை, நலங்கிள்ளி, விஜயா பதிப்பகம், டிசம்பர் 2012, பக்கம் 160, விலை ரூ. 80 நலங்கிள்ளியின் மின்னஞ்சல் முகவரி enalankilli@gmail.com விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்கிறார் நலங்கிள்ளி. ‘தமிழ்மொழியில் ஆங்கிலக் கலப்பு சரிதானா, கூடாதா?’ என்பதுதான் தலைப்பு. பிற மொழி கலப்பதால் தமிழ் மொழி ஒன்றும் அழிந்துவிடாது என்பதாக மீனா கந்தசாமி, இளங்கோ கல்லாணை ஆகிய பிறர் பேசுகிறார்கள். மக்கள் தொலைக்காட்சியில் ‘புதுமைக்குத் தடையாகுமா தமிழ்?’ என்ற தலைப்பில் ஓர் உரையாடலில் கலந்துகொள்கிறார் நலங்கிள்ளி. அதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் என்ற இதழில் ‘ஆங்கிலத்தின் முற்போக்கு: பகுத்தறிவா மூடநம்பிக்கையா?’ என்ற தலைப்பில் 12 இதழ்களுக்கு தொடர் கட…
-
- 2 replies
- 1.3k views
-
-
[size=5]இந்தி மொழிப்பதிப்பு வெளியீடு: [/size] [size=5]" ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம் "[/size] [size=5][size=6]Date: 2012-11-26 at 00:00 pm[/size][/size] [size=5][size=6]Address: India Islamic Cultural Centre, 87-88, லோதி ரோடு, நியூடெல்லி - 110 003, New Delhi, Delhi India[/size][/size] [size=5] தலைமை: அ.கணேசமூர்த்தி எம்.பி.,[/size] [size=5]வரவேற்புரை: டாக்டர் சி.கிருஷ்ணன்[/size] [size=5] [/size] [size=5]வெளியிடுபவர்: நீதிபதி ராஜேந்திர சச்சார் (டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி)[/size] [size=5] [/size] [size=5]முதல் படியைப் பெறுபவர்: குல்தீப் நய்யார் - எழுத்தாளர்[/size] [size=5] [/size] [size=5]வாழத்துரை: யஷ்வந் சின்ஹா எ…
-
- 2 replies
- 553 views
-
-
நியூசிலாந்தில் வசிக்கும் ந.மாலதி அவர்கள் எழுதிய நூல் இது. ஒரு ஆவணம் என சொல்லலாம். “விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசின் இறுதி நான்கு வருடங்கள்“ என அவர் குறிப்பிடுகிறார் இந்த நூலின் உள்ளடக்கத்தை. புலிகளை அரசியல் ரீதியில் விமர்சிக்கும் ஒரு தொகை எழுத்துக்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். இது மிக அவசியமானதும்கூட. அதேநேரம் அவர்கள் வன்னியில் நிகழ்த்திய நிழல் அரசொன்றின் உள் அமைப்புகள் எப்படி இயங்கின என்ற புரிதலை தனது பார்வையில் இந்த நூல் தருகிறது. இதை ஒரு முழுமையான ஆவணமாக கொள்ளத் தேவையில்லை என்றபோதும் நாம் உள்நுழைந்து பார்க்க வேண்டிய இடங்களை சுட்டிநிற்கிறது. இந்தவகையில் குறிப்பிடத்தக்க ஓர் அவணமாக இதை கொள்ள முடியும். வெளியிலிருந்து ஊடகவியலாளர்கள் வன்னிக்குள் வருவதை இல…
-
- 2 replies
- 2.1k views
-
-
நடந்த இறுதிப் போரில் சிறைபிடிக்கப்பட்ட போராளிகள் அனுபவித்த சித்திரவதைக் கொடுமைகளின் பின்னணியில் ‘விடமேறிய கனவு’ என்ற நாவலை எழுதியிருக்கிறார் குணா கவியழகன். ஈழத்தில் களத்தில் நின்று போராடியவர்கள் கடைசியில் இயக்கத் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்திக்குக்கூடக் காது கொடுக்காமல் தங்களது உயிரைக் காத்துக்கொள்வதற்காகச் சோற்றுப் பொட்டலங்களுக்கும் தண்ணீர் பாட்டிலுக்கும் கையேந்தி நிற்கிறார்கள். ஐ.நா.அமைப்போ, செஞ்சிலுவைச் சங்கமோ தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையும் பொய்த்துப்போனது. எதிரிகளாக இருந்தவர்களிடமே சரணடைந்து அவர்களிடம் உயிரை இரந்து நிற்கும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். இரவில் விலங்கிடப்பட்டும் பகலில் சித்திரவதைகளுக்கு ஆளாகியும் மரணத்தின் முன்னால் அவர்களது வாழ்…
-
- 2 replies
- 1.5k views
-
-
"எனவே உமது பாவங்கள் நிலைக்கின்றன" - பைபிள் - ஆமென் புத்தக மதிப்புரை – கவிதா முரளிதரன் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் வந்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஆமென் தன்வரலாறு நூலின் தமிழ் பதிப்பு வெளியீட்டையொட்டி கடந்த ஜனவரி சென்னை வந்திருந்தார் புத்தகத்தை எழுதிய சிஸ்டர் ஜெஸ்மி. ஆங்கிலத்தில் அந்த நூலை ஏற்கனவே படித்திருந்ததால் அவரைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. எளிமையான ஒரு சுடிதாரில், பார்த்தவுடன் பிடித்துப்போகும் இயல்புடையவராக இருந்தார். அவருடன் இருந்த பத்து நிமிடங்களும் பேச்சும், உற்சாகமும் சிரிப்புமாகவே கழிந்தது. “நேற்று ரயிலில் சில கன்னியாஸ்திரிகளைப் பார்த்தேன், என்னைப் பார்த்து முணுமுணுப்பாக பேசிக் கொண்டு வந்தார்கள். அனேகமாக எனது புகைப்படத்தை எதாவது ஊடகத்தில் பார…
-
- 2 replies
- 935 views
-
-
சிறிலங்கா தேசியத்திற்காக இதையும் நாங்கள் செய்கிறோமல்ல.....நமோ நமோ மாதா நம்மட மாதா...................................................................................................... அவுஸ்திரேலியா ஒரு பல்கலாசார நாடு. குடியேற்றநாடாக விளங்குவதனால் பலதேச பல்லின மக்களும் இங்கு வாழ்கின்றனர். அண்மையில் மெல்பனில் கிரகிபேர்ண் என்னுமிடத்தில் அமைந்துள்ள பொது நூலக மண்டபத்தில், இங்கு நீண்டகாலமாக வாழும் இலங்கைத்தமிழர்கள் இருவருடைய தாய்மொழி இலக்கியப்படைப்புகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டன. இந்த நூலகம் அமைந்துள்ள பிரதேசத்திலும் அதற்கு அண்மித்த நகரங்களிலும் சுமார் 120 மொழி பேசுகின்றவர்கள் வாழ்கின்றார்கள் என்பது அதிசயம். ஆனால் அதுதான் உண்மை. கிரகிபேர்ன் நகரத்தில் இலங…
-
- 2 replies
- 867 views
-
-
இந் நிகழ்வு ஜூன் 6 ஆம் திகதி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கனடா கந்தசாமிக் கோவிலில் இடம்பெறும். இங்கு விடமேறிய கனவு நாவலும், நஞ்சுண்ட காடு நாவலும் விற்பனைக்கு வரும் என்பதை அறிய முடிகின்றது.
-
- 2 replies
- 747 views
-
-
கிளிநொச்சி – போர் தின்ற நகரம் - எதற்கு ஈழம்? PRAY FOR MY LAND ஈழத்து கவிஞரும் ஊடகவியலாளரும் குளோபல் தமிழ்செய்திகளின் எழுத்தாளருமான தீபச்செல்வனின் மூன்றுபுத்தகங்கள் தமிழகத்தில் சென்னையில் தற்பொழுதுநடைபெற்று வரும் 36ஆவது சென்னைப் புத்தகக்கண்காட்சியில் வெளிவந்துள்ளன. ஈழத்து மக்களின்பிரச்சினைகளைப் பற்றிய இந்தப் புத்தகங்கள் முக்கியத்துவம் கொண்டவையாக அமைந்துள்ளன. கிளிநொச்சி – போர் தின்ற நகரம் தனது சொந்த நகரான கிளிநொச்சியின் யுத்தத்திற்குப் பின்பானஅழிவு நிலையை உண்மையின் பதிவுகளாக குளோபல் தமிழ்செய்திகள் (www.globaltamilnews.net) இணையத்தில் தீபச்செல்வன்எழுதியிருந்தார். அவ்வாறு, கிளிநொச்சியில் சந்தித்தமனிதர்களையும் சம்பவங்களையும் பற்றி வெவ்வேறுசந்தர்ப்பங்களில் அவர் எழு…
-
- 2 replies
- 958 views
-
-
பிறந்துவிட்டது புத்தாண்டு... புதுப்பொலிவுடன் வருகிறது சென்னை புத்தகக் காட்சி..! எந்தப் பதிப்பாளர், என்ன புத்தகம், யார் எழுத்தாளர், புத்தகத்தின் 'ஹைலைட்' என்ன என்பது பற்றி பிரபல பதிப்பகங்களில் அடித்த ஒரு ரவுண்ட் அப் இது... புரட்சி, சிவப்புச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்களை வெளியிடுவதில் அதிக சிரத்தையுடன் செயல்படும் 'விடியல்' பதிப்பகம் சுமார் 27 புத்தகங்களை வெளியிட இருக்கிறது. அதில் வரலாற்றாசிரியர் டி.டி.கோசாம்பியின் 'இந்திய வரலாறு', பிடல் கேஸ்ட்ரோ தன் கைப்பட எழுதிய சுயசரிதை ஆகியவை முக்கியமானதாம்! ''இந்தியாவின் புகழ்பெற்ற வராலாற்றாசிரியர்களில் டி.டி.கோசாம்பியும் ஒருவர். இந்திய வரலாறு பற்றி இதற்கு முன் புத்தகங்கள் எழுதியிருந்தாலும் இந்தப் புத்தகம் அவற்றி…
-
- 2 replies
- 1.4k views
-
-
மெசப் பெத்தோமிய சுமேரியரின் நூல் வெளியீடும் சில ஆலோசனைகளும் http://www.yarl.com/forum3/index.php?showtopic=139970 வாழ்த்துக்கள், சுமே. புத்தகம் வெளியிடுவதும், அதனை விற்று பணத்தினை கையில் எடுப்பதில் உள்ள வலியினை அறிவேன். இலகுவானதல்ல. பகிடியாக இருந்தாலும், ரதி அக்கா சொன்னது உண்மைதான். யாழ் களம் தந்த மேடையிலே, நான் ஆரம்பத்தில் சில ஆக்கங்களை எழுத, எல்லோரும் ஆகா, ஓகோ என்று சொல்ல, சரி முயல்வோமே என, தமிழிலொரு ஆக்கமும், ஆங்கிலத்தில் ஒரு ஆக்கமும் எழுதி பிரசுரித்தேன். ஆங்கில ஆக்கத்தினை ஆங்கில புனை பெயருடன் பிரசுரித்தேன், கல்வியுடன் தொடர்பானதால் நல்ல வரவேற்பு. இதன் மூன்றாவது பதிப்பு இந்த கோடை காலத்தில்.... இப்போது ஒரு முக்கியமான ஆக்கமொன்றினை ஆங்கிலத்தில் முயல்கின்றேன். …
-
- 2 replies
- 731 views
-