நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
802 topics in this forum
-
வேகமாய் வாசிப்பது எப்படி? ஆர். அபிலாஷ் நேற்று “எப்படி வாரம் ஒரு புத்தகம் படிப்பது?” என்றொரு ஆங்கிலக் கட்டுரை படித்தேன். எழுதினவர் புத்தகம் என்பது அபுனைவுகளையே. தான் ஒரு மெதுவான வாசகன் என்று கூறும் அவர் எப்படி கல்லூரியில் தன் பேராசிரியர் கூறிய அறிவுரை அவரது வாசிப்பை பன்மடங்காக்க பெருக்க உதவியது என விளக்குக்கிறார். ஒருமுறை அவர் வகுப்பில் தன் வரலாற்று பேராசிரியரிடம் பாடத்திற்கான துணை நூல்களை வாசித்து முடிப்பதற்கு தான் திணறுவதாய் கூறுகிறார். பேராசிரியர் உடனே வகுப்பை பார்த்து “எத்தனை பேருக்கு இந்த பிரச்சனை?” எனக் கேட்கிறார். கிட்டத்தட்ட அத்தனை பேரும் கையை தூக்குகிறார்கள். அடுத்து அவர் அபுனைவு நூல்களை எப்படி படிக்கலாம், எப்படி படிக்க கூடாது என விளக…
-
- 4 replies
- 922 views
- 1 follower
-
-
கருணாகரனின் ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள் – ராகவன் அனைவருக்கும் வணக்கம். இரண்டு டீ வீ அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் என்னையும் இணைத்து கருணாகரனின் கவிதை தொகுப்பு பற்றி பேசுமாறு பௌசர் கேட்டிருக்கிறார். அறிவிப்பாளர்களின் பேச்சுவன்மை எனக்கு இல்லை. எனினும் நான் முடிந்தவரை முயற்சிக்கிறேன். நடந்துமுடிந்த கோரமான யுத்தத்தின் அனுபவத்தை, அதன் துயரத்தை ஒரு பயணியாக மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவராகவும் அம்மக்களுக்குள்ளேயே நின்று, பாதிக்கப்பட்ட கைவிடப்பட்ட மக்களின் ஆத்திரம் அவமானம் ஆதங்கம் அனைத்தையும் கவிதையாக வடித்திருக்கிறார் கருணாகரன். இது வெறும் சோகம் ததும்பிய தோல்வியின் வரலாறல்ல. இருள்சூழ்ந்த அந்தகாரத்தில் ஒரு சிறிய மின்மினிப்பூச்சியின் வழித்துணைகூட இன்றி யுத்த பேரிகைகளி…
-
- 1 reply
- 922 views
-
-
மிக பிரபலமானவர்களை கொண்டு வெளியீடு செய்கின்றீர்கள் .வாழ்த்துக்கள் சாத்திரி .
-
- 7 replies
- 918 views
-
-
- ஜெயபாலன் த - 28 ஆண்டுகளுக்கு முன் இன்றைய இதே நாளான யூலை 12 1990இல் தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சிலவற்றை இடைமறித்து அதில் பயணித்த 69 முஸ்லீம்களைப் மட்டக்களப்பில் குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்தனர். ஏற்கனவே கீழ் நிலையில் இருந்த தமிழ் – முஸ்லீம் இனங்களுக்கு இடையேயான உறவை இப்படுகொலைகள் மிக மோசமான நிலைக்குத் தள்ளியது. இப்படுகொலைகள் இடம்பெற்று 28 ஆண்டுகளின் பின் இப்படுகொலையை ஆவணப்படுத்தும் ‘குருக்கள் மடத்துப் பையன்” என்ற நூலை சையது பஷீர் எழுதி உள்ளார். நிச்சாமம் வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் யூலை 14 சனிக்கிழமை தேசம் வெளியிட்டு வைக்க உள்ளது. கிழக்கு லண்டன்; ஈஸ்ற்ஹாமில் நடைபெற உள்ள இந்நிகழ்வுக்கு அரசியல் ஆய்வாள…
-
- 8 replies
- 917 views
- 1 follower
-
-
மார்க்சியப் பார்வையில் அத்வைதம் விமர்சனம்.! இடதுசாரிகளிடையே தத்துவ விவாதங்கள் மிகமிகக் குறைவாக நடக்கின்ற இக்காலத்தில் தோழர் பி.இளங்கோ சுப்பிரமணியன் எழுதிய “மார்க்சியப் பார்வையில் அத்வைதம்” என்ற நூல் வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கதே. தொடங்கினால் தான் நிறைகுறையை அறிந்து நீக்கிக் கொள்ள முடியும். தோழர் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி. இந்தியத் தத்துவங்களில் ஒன்றான அத்வைதத்தை இந்நூலில் விமர்சித்துள்ளார். அத்வைதம் ஒரு முன்னாள் தத்துவம். அது நவீன உலகின் தத்துவம் அல்ல (பக்கம் -47), என்பதே தோழரின் கருத்தாக இருக்கிறது. அப்படி இருக்க நவீன உலகில் காணப்படும் தத்துவத்தை விடுத்து இந்த அத்வைதத்தை ஏன் எடுத்து விமர்சித்துள்ளார் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. “பிரம்மம் ஒன்ற…
-
- 0 replies
- 914 views
-
-
மனப்பிறழ்வின் நாட்குறிப்பேடு அஷேரா – தி.லலிதகோபன் அறிமுகம் சயந்தன் கதிர் என்று அழைக்கப்படும் சயந்தன் அவர்களின் மூன்றாவது நாவல் பிரதி அல்லது ஆதிரைக்கு பின்னரான பிரசவம் என்றோ இந்த அறிமுகத்தினை சுருக்கமாக நான் கடந்து விடலாம். ஆனால் அதற்கு அப்பாலும் சில செய்திகளை சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. முதன்முதலாக “ஆதிரை” என்ற பெயரினை முகநூலின் மூலமாக கேள்வியுற்றதன் பின்னர் நான் அந்த நூலினை வாசிப்புக்காக தேட முற்பட்டதன் காரணம் “ஆதிரை” என்ற பெயர் என்னுள் ஏற்படுத்தியிருந்த மயக்கமே. இதை பிரமிள் அவர்களின் மொழிதலில் குறிப்பிடுவதானால் “இடையறாத உன்பெயர் நிலவிலிருந்திறங்கி என்மீது சொரியும் ஓர் ரத்தப் பெருக்கு.” எனலாம். ஆனாலும் ஆதிரைக்கான எனது காத்திருப்பின் நாட்கள் சுமார் ஐ…
-
- 0 replies
- 905 views
-
-
தர்மினி பிப்ரவரி 17, 2013 பன்னிரண்டு சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு பிரண்டையாறு. கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மெலிஞ்சிமுத்தன் ஒருகவிஞரும் ஓவியங்களை வரைவதில்ஆர்வமுடையவரும்கூட. ஏற்கனவே ‘சிதையும் என்னுள்’ -’என் தேசக்கரையோரம்’ -’முட்களின் இடுக்கில்’ ஆகிய கவிதைத் தொகுதிகளும் கனவுகளின் தொகுப்பென ‘வேருலகு’ பிரண்டையாறைத் தொடர்ந்து இந்த வருடம் ‘அத்தாங்கு ‘ என்ற நாவலும் மெலிஞ்சிமுத்தனால் எழுதப்பட்டுள்ளன. 1990 இல் பெரும் எடுப்பில் தீவுப்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்ட சிறீலங்கா இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளினால் ஊர்காவற்றுறையின் மெலிஞ்சிமுனைக்கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து ஓர்அகதியாக அலைந்து இறுதியாக ஒரு நாட்டைக் கண்டு விட்ட போதும் தன்நினைவுகளில்,ஏன…
-
- 3 replies
- 891 views
-
-
திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களின் பார்வையில் வரலாற்றைத் தொலைத்த தமிழர் எங்கிருந்து எது வரை பார்க்கலாம் தலைப்பினைப் பார்க்கையில் வேறு உணர்வு ஏற்பட்டது . உள்ளே நுளைந்து பார்க்கையில் இன்னோர் உணர்வு ஏற்படும். வரலாற்றைத் தொலைத்த தமிழர் வாணாள் பூராவும் அலைந்து உலைந்து அவர்களுக்கென்றிருந்த ஆற்றலையும் அதோடு தொலைத்தார்களா ?என்பதை நூலினுள் நுழைந்து பாருங்கள் .ஆழமாக சுவைத்துப் பாருங்கள். வரலாறு என்றால் என்ன ?அதற்கான விளக்கம் தருகிறார் ஆக்கதாரர்.. இதுவொரு துணிகரத் தேடல் பாராட்ட வேண்டியது ..பல பெரும் முனைப்பின் தேடல் கள் ..இதன் தகவல் சேமிப்பும் சிரமங்களும் ..தொடர்புகள் மூலம் பெறத்துடித்த ஆவணங்களும் படைப்பாளியின் பாரிய முயற்சிகள் . இக்காலப் பாட நூல்களி -சிற்சில பாகமாக மெல…
-
- 1 reply
- 874 views
-
-
சிறிலங்கா தேசியத்திற்காக இதையும் நாங்கள் செய்கிறோமல்ல.....நமோ நமோ மாதா நம்மட மாதா...................................................................................................... அவுஸ்திரேலியா ஒரு பல்கலாசார நாடு. குடியேற்றநாடாக விளங்குவதனால் பலதேச பல்லின மக்களும் இங்கு வாழ்கின்றனர். அண்மையில் மெல்பனில் கிரகிபேர்ண் என்னுமிடத்தில் அமைந்துள்ள பொது நூலக மண்டபத்தில், இங்கு நீண்டகாலமாக வாழும் இலங்கைத்தமிழர்கள் இருவருடைய தாய்மொழி இலக்கியப்படைப்புகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டன. இந்த நூலகம் அமைந்துள்ள பிரதேசத்திலும் அதற்கு அண்மித்த நகரங்களிலும் சுமார் 120 மொழி பேசுகின்றவர்கள் வாழ்கின்றார்கள் என்பது அதிசயம். ஆனால் அதுதான் உண்மை. கிரகிபேர்ன் நகரத்தில் இலங…
-
- 2 replies
- 867 views
-
-
உடலில் விழும் அடியைவிட மனதில் விழும் அடி வலி மிகுந்தது. அதுவும் சின்னஞ்சிறு வயதில் யாராவது மிக மோசமாக திட்டிவிட்டால், அது மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். எத்தனை வயதானாலும் அந்த வலி மறப்பதே இல்லை. அப்படிதான் மேரி மெக்லியோட் பெத்யூனுக்கும் நடந்தது. அமெரிக்காவில் 125 ஆண்டுகளுக்கு முன்பாக கருப்பின மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அவர்களுக்கு வாக்கு உரிமை, சொத்து உரிமை, கல்வி உரிமை எதுவும் கிடையாது. திருமணம் செய்துகொள்வது கூட எஜமானர் அனு மதித்தால் மட்டுமே நடக்கும். குடும்பமே பண்ணை முதலாளிக்கு அடிமைப் பணி செய்ய வேண்டிய கட்டாயம். எதிர்த்துப் பேசினால் பட்டினி போட்டு அடித்து வதைப்பார்கள். தப்பி ஓடினால் பிடித்து வந்து சிறையில் அடைத்து கொடுமைப் படுத்துவார்கள். அதன் பிறகு வாழ்நாள் …
-
- 0 replies
- 865 views
-
-
அறிவடைந்த குரங்கின் கதை- ராகவேந்திரன் சேப்பியன்ஸ் வாங்க ஜெ யுவல் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ் குறித்து. மனித குலம் தனது வரலாற்றை பல காரணங்களுக்காக வியப்புடன் பரிசீலித்து வந்திருக்கிறது. நாம் இன்று சந்திக்கும் சிக்கல்கள் நம் முன்னோராலும் எதிர்கொள்ளப்பட்டவையா என்ற வினா எப்போதும் எழுந்து வந்துள்ளது. வெறும் ஐம்பது வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட நாம் இருக்கும் ஊரின் படத்தைப் பார்க்கும்போதே ‘ எப்படி இருந்த்து இப்படி ஆகி விட்டது ‘ என்று வியக்கிறோம். . நம் முன்னோர்கள் நடந்த பாதையில் நடந்து அவர்கள் நுகர்ந்த காற்றை சுவாசித்து அவர்களின் மரபணுத் தொகுப்புடன் வாழும்போதும் வரலாற்று வாழ்வை நினைவு படுத்தும் ஒவ்வொரு கல், மணி, எலும்பு, ஓவியக் கிறுக்கல்கள், பழம்பொருள…
-
- 0 replies
- 863 views
-
-
௦௦௦௦ கனடிய எழுத்தாளரான ஜான் மார்டெல் (Yann Martel) எழுதிய புகழ்பெற்ற நாவல் ‘பை’யின் வாழ்வு (Life Of Pi). இந்த நாவல் 2002ஆம் ஆண்டுக்குரிய ‘புக்கர்’ விருதினைப் பெற்றதுடன் பிரான்சின் புக்கர் விருதினை இதன் பிரெஞ்சிய மொழிபெயர்ப்பிற்காகப் பெற்றது. அத்துடன் தென்னாபிரிக்க நாவல் விருது, இலக்கியத்திற்கான ஆசிய/பஸிபிக் அமெரிக்க விருது (2001-2003)எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த நாவல் ஐந்து தடவைகள் பிரித்தானிய பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நான் வாசித்த நாவல்களில் மட்டுமல்ல, இதுவரையில் நான் வாசித்த நாவல்களில் எனக்குப் பிடித்த நாவல்களிலொன்றாக இந்நாவலும் அமைந்து விட்டதென்று கூறினால் அது மிகையான கூற்றல்ல. ஜான் மார்டெல்லின் இந்த …
-
- 3 replies
- 863 views
-
-
பெண்களும் குழந்தைகளும் வயதானவர்களும் எல்லையை நோக்கி செல்ல வேண்டும் என்று எங்களிற்கு உத்தரவு வந்தது.நாங்கள் சரியாக சிந்திக்கும் சக்தியை இழந்திருந்தோம். ஏசு, புத்தர், முகமது, காந்தி, ஆப்ரகாம் லிங்கன் என எல்லோரிடமும் எங்கள் மக்களை காப்பாற்ற வரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. எங்களை முற்றிலுமாக கைகளுவி விட்டார்கள். விரக்தியில் பல போராளிகள் தற்கொலை செய்துகொள்வதைப் பார்த்தேன். சிலர் மலைகளில் பதுங்கிக்கொண்டு போராடிப்பார்க்க விரும்பினார்கள். வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடன் ஒரு லாரியில் நெருக்கிக்கொண்டு எல்லையை நோக்கி பயணம் செய்தோம். வெளியேற வேறு பாதையே இல்லை. எங்களை சுற்றி படைவீரர்கள் நின்றுகொண்டார்கள். நாங்கள் நீர்மூலமாகிவிட்டோம். இது எங்களிற்கு ஜக்கி…
-
- 0 replies
- 861 views
-
-
சாட்சியின் மீதி? த. அகிலன் ‘சிலுவை யேசுவைச் சிலந்தி சூழ்ந்தது பிள்ளையார் பலிபீடத்தில் களிம்பு படர்ந்தது மாமர ஊஞ்சல்கள் இற்று வீழ்ந்தன சருகடர்ந்த முற்றத்தில் பாம்புகள் ஊர்ந்தன’ சுமார் பத்து வருடங்களிற்கு முன்பு, நான் கருணாகரனைச் சந்தித்த முதலாவது நாள். கருணாகரன் இடம்பெயர்ந்திருந்த அகதி வாழ்வின் கூடாரத்தில் வைத்து “ஹம்சத்வனி”யின் இந்த வரிகளை என்னிடம் சொன்னார். ஏதோ சின்னப்பெடியன் முதல் கவிதையை அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகைக்கு அனுப்பிவிட்டேன் என்ற காரணத்தினால் அதையெல்லாம் மதித்து தன்னைச் சந்திக்கச் சொல்லியனுப்பி, சந்தித்த வேளையில் கவிதை குறித்தும், வாசிப்பின் திசைகள் குறித்த அறிமுகங்களையும் கொடுத்து, நிறையப் புத்தகங்களைத் தந்து, இலக்கிய நண்பர்களை அ…
-
- 1 reply
- 861 views
-
-
-
ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல் வெங்கட் சாமிநாதன் ஈழத் தமிழ்க்குரல் என்றுமே ஒரு வேதனையும் போராட்டமும் கொந்தளிக்கும் குரல்தான். என்றுமே. அதுவும் உரத்த குரலாகத்தான் இருந்து வந்துள்ளது. அப்படித்தான் இருப்பதும் சாத்தியம். அது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து வெளிக்கிளர்வது. வேறு எப்படியாகவும் அது இருக்க முடியாது. இலங்கை சுதந்திரம் பெற்று, சேனனாயக தமிழருக்கு குடியுரிமை மறுக்கத் தொடங்கி, பின் வந்த பண்டாரநாயக சிங்களத்திற்கு முதலிடம் கொடுக்கத் தொடங்கி, பின் அடுத்தடுத்து வந்த தமிழ் இனத்தையே குறி வைத்த அடக்கு முறை இன்றும் தொடர்கிறது. யாழ்ப்பாண நூலக எரிப்பும், வன்முறைகளும், 1983-லிருந்து ஈழத்தமிழர் புலம் பெயரத்தொடங்கிய வரலாறும், பின் வந்த போரின் பயங்கரங்…
-
- 0 replies
- 857 views
-
-
கிளிநொச்சியில் இனிதே அரங்கேறிய செந்தூரனின் ’மனப்பாரம்’ சிறுகதை நூல்.! ஈழத்தின் இளம் எழுத்தாளர் கனகபாரதி செந்தூரன் எழுதிய மனப்பாரம் சிறுகதை நூல் வெளியீடு கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (14.12.2019) சிறப்பாக இடம்பெற்றது. கிளிநொச்சி கண்ணகைநகர் இந்து வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய கனகபாரதி செந்தூரன் கொட்டகல ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் கல்வியை பயின்று வருகிறார். கிளிநொச்சி பரந்தனை பூர்வீகமாகக் கொண்ட இவர் கனகரத்தினம் செந்தூரன் என்ற இயற்பெயரை கொண்டவர். இவர் எழுதிய பத்து சிறுகதைகளின் தொகுதியே மனப்பாரம். இந் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சிவஞானம் சிறிதரனும் சிறப்பு …
-
- 0 replies
- 857 views
-
-
ஊடகக் கறையான்கள் ஜெயமோகன் தமிழில் ஆனந்தவிகடன் வழியாகவே கேளிக்கை இதழ் x இலக்கிய இதழ் என்னும்வேறுபாடு உருவானது. அதைப் பழித்தும் இழித்தும் உரைப்பது சென்றகாலத்தில்சிற்றிதழ்களில் ஒரு மரபாக இருந்தது. ஆனால் நான் ஒரு சமூகப்பரிணாமநோக்கில் அவை இன்றியமையாத நிகழ்வுகள் என்றே அணுகிவந்தேன், அதையேஎழுதியிருக்கிறேன். சென்றநூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வி மிகச்சிறுபான்மைக்குரியதாகஇருந்தது. ஆகவே இலக்கியமும், கருத்துச்செயல்பாடும் அவ்வண்ணமே நீடித்தன. அக்காலகட்டத்தில் உருவான செய்தி இதழ்களும் இலக்கிய இதழ்களும்அறிவுப்பரிமாற்றத்தை மட்டுமே இலக்காகக் கொண்டவை, ஆகவே சிறியவட்டத்திற்குள் புழங்கியவை. அவை வாசக அளவால் சிற்றிதழ்கள். அன்றையஅச்சுமுறையும், வினியோக அமைப்புகள் விரிவாக இ…
-
- 0 replies
- 855 views
-
-
அச்சுப்பணி, தகவல் தொழில்நுட்பம் என்னும் இரண்டுக்கும் உதவும் கணினி, அலைபேசி, இணையம் எனப் பல ஊடகங்களிலும் செயல்படும் முக்கியக் கருவியான தமிழ் மென்பொருள்கள் குறித்த பல கருத்துகளை விளக்கு வதாக இந்நூல் உருவாக்கப் பட்டுள்ளது. இந்நூல் மூன்று இயல் களைக் கொண்டுள்ளது. தமிழ் மென்பொருள்களுக்கு அடிப்படையான எழுத்துரு (Font), குறியீட்டாக்கம் (Enco ding), விசைப் பலகை (Keyboard) குறித்தும் இம்மூன்று அடிப் படைக் கூறுகளுக்கான ஒருங் குறி (Unicode) பங்களிப்பு குறித் தும் விரிவான பல கருத்துகள் ஆராயப்பட்டுள்ளன. கணினியைத் தமிழில் இயங்கவைக்கும் தமிழ் மென் பொருள்களின் அவசியம், உரு வாக்கம், பயன்பாடு குறித்து விரிவான செய்திகள் தரப்பட் டுள்ளன. இந்நூல் தமிழ் மொழி வளர்ச்சியில் தமிழ் மென் பொருள்களின் …
-
- 0 replies
- 855 views
-
-
ஆவா குறூப்பா நாமா? திருமறை கலாமன்றத்திற்கு வாருங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை! யோ.கர்ணன் இப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணத்தில் இலக்கிய கூட்டங்களிற்கு செல்ல மிகுந்த தயக்கமாகவும் அச்சமாகவும் இருக்கின்றது. அச்சம் குறித்த விரிவான பதிவொன்று எழுதலாம் என திட்டமிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் தயக்கம் குறித்து உடனடியாக எழுத வேண்டியதாகி விட்டது. இலக்கிய கூட்டங்களிற்கு செல்வதற்கு எதனால் தயக்க வேண்டியுள்ளது என்பது குறித்து இப்பொழுது சிறிய குறிப்பொன்று. அச்சம் குறித்து பின்னர் விரிவாக எழுத வேண்டும். அண்மையில் நண்பரொருவரிற்கு நேர்ந்த துயரமிது. யாழ்ப்பாணத்தில் அவர் புத்தக வெளியீடு நடத்தினார். அவர் பிறப்பில் ஒரு இந்துவாக இருக்க வேண்டும். இலக்கியவாதியாகிற்றே. இப்பொழுது ஒரு மதமும் கிடையா…
-
- 0 replies
- 854 views
-
-
சிட்னியில் வாங்கிய கத்தி Sydney Macquarie அங்காடியின் முதல் தளத்திலுள்ள மின்னூட்டும் தரிப்பிடத்தில் வாகனத்தை கொழுவிவிட்டு அங்காடிக்குள் நுழைந்தேன். வார விடுமுறைக்கு ஏற்ற வளமான கூட்டம். சிட்னியில் அண்மையில் இடம்பெற்ற கொடூரமான கத்திக்குத்து சம்பவங்களால், அங்காடிக்குப் போவதில் அதிகம்பேருக்கு அச்சமிருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால், அப்படித் தெரியவில்லை. Dymocks புத்தக் கடைக்குள் சென்று, நான் வாங்கவிருந்த புத்தகத்தை எவ்வாறு கேட்பது என்பதை ஓரளவுக்கு மனதுக்குள் தயார் படுத்திக்கொண்டேன். புத்தக விற்பனை நிலையத்திலும் நல்ல கூட்டம். வரிசையில் நின்று எனது முறை வந்ததும், "சல்மா…
-
-
- 3 replies
- 854 views
-
-
‘கடைசிக் கட்டில்’ (நூல் அறிமுகம்) — அகரன் — அவன், அவளது கண்களை தின்றுகொண்டிருந்தபோது, அவள் அவன் இதயத்தை சுவைத்துக் கொண்டிருந்தாள். அப்போது நான் அந்த உணவகத்தின் தலமைச் சமையலாளனாக இருந்தேன். அவர்களின் உணவை என் கையாலேயே பெறவேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருந்தார்கள். இருவரும் மேற்படிப்பிற்கான இடைக்காலத்தில் அந்த உணவகத்திற்கு காசு சம்பாதிக்க வந்தவர்கள். தமக்கு உணவு தருபவன் என்று என்மீது நேசம்கொண்டவர்கள். அந்த இளம் காதலர்களை பார்த்தே என் இளமையை கடத்திக்கொட்டிருந்தேன். அந்த ஆண்டு கடந்து போக இருந்தபோதுதான் அவளுக்கு மூளையில் புற்றுநோய் என்று அறிந்துகொண்டார்கள். பின்பு ஓர் ஆண்டுக்குள் அவள் இறந்து போனாள். அவளின் இறப்பு வரை எங்கும் நகராமல்…
-
- 1 reply
- 853 views
-
-
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபொழுது சென்னை மாகாணத்தில் அடங்கியிருந்த மாவட்டங்கள் குறித்த கையேடுகளை (Gazetteer) வெளியிட்டனர். அவ்வகையில் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, செங்கற்பட்டு, வடார்க்காடு, தொன்னார்க்காடு முதலிய 9 மாவட்டங்களுக்குக் கையேடுகள் வந்துள்ளன. அந்தவகையில் இலங்கையின் வன்னி மாவட்டத்துக்கு ஒரு கையேடு வெளிவந்துள்ளது. அதனை எழுதியவர் ஜே.பி.லூயிஸ்(J.P.Lewis). இவர் எழுதிய நூல் வன்னி மாவட்டங்கள் (A Manual of the vanni Districts) என்பதாகும். இந்தக் கையேடு 1895 இல் வெளிவந்துள்ளது. இந்தக் கையேட்டில் வன்னி, முல்லைத்தீவு மாவட்டங்கள் குறித்த அரிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலத்தில் முதல்பதிப்பு கண்ட இந்த நூலினை மொழிபெயர்த்து இரண்ட…
-
- 1 reply
- 851 views
- 1 follower
-
-
வணக்கம் பிரான்ஸ் - ஜேர்மனி - சுவிஸ் ஆகிய நாடுகளில் சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை தலைவர் மதிப்புக்குரிய பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் ஆவணப்பதிவாக்கிய இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்தின் மீதான இனப்படுகொலை தொடர்பான புத்தக அறிமுக நிகழ்வு தொடர்பான அறிவித்தல் நன்றி ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு
-
- 0 replies
- 851 views
-
-
நினைவு நதியின் மேல் வீசப்பட்ட கல் - எஸ்.வி.வேணுகோபாலன் மூன்றாம் பிறை, வாசித்துவிட்டு அடுத்த வேலைக்குச் செல்ல வைக்கிற புத்தகம் அல்ல. யாரிடமாவது அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதில்லை என்று ஆக்கி வைத்துவிட்ட அந்தப் பிரதியைப் பற்றி என்ன சொல்ல.... அல்லது சொல்லாது எப்படி இருக்க? மலையாள நடிகர் மம்முட்டி (பிரபல என்ற வழக்கமான அடைமொழியை அந்த நூலின் வாசிப்பு தவிர்க்க வைத்திருப்பது அவரது நூலின் ஆளுமை!) அவர்களது சுயசரிதைப் பிரதியான காழ்ச்சப்பாடு நூலின் மொழிபெயர்ப்பு தான் மூன்றாம் பிறை. வம்சி புக்ஸ் வெளியீடு. மம்முட்டியின் எளிமை எப்போதும் பேசப்படும் ஒன்று. அதை அவரது நூலும் பேசுவதுதான் ரசமானது. அடிக்கொருதரம் தான் யார் என்று தன்னை அகக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும…
-
- 1 reply
- 850 views
-