Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆண்டவரே ஆறாவடுவை வாசித்து விட்டேன் சயந்தனின் ஆறாவடு கைகளில் கிடைத்ததும் முதலில் எனக்கு ஏமாற்றம் காரணம் புத்தகம் பெரியதாய் இருக்குமென்று எதிர்பார்த்திருந்தேன். அடுத்ததாக நான் அந்த புத்தகத்தினை பத்து மணிநேர இரயில் பயணம் ஒன்றில் படிக்கத்திட்டமிட்டிருந்தேன் புத்தகத்தை பார்த்தால் குறைந்தது ஒரு இரண்டு மணிநேரத்திற்குள் படித்து முடித்து விடலாம்போல் இருந்தது மிகுதி நேரம் என்ன செய்யலாமென்கின்ற கவலை..இரயில் ஏறி ஆறாவடுவை பிரித்தேன். சயந்தனின் சிறியதொரு உரையுடனும் சு.வில்வரத்தினத்தின் கவிதையோடும் ஆரம்பமாகின்றது. எம்மவர் பொதுவாக கவிதைத் தொகுப்போ அல்லது நாவலோ வெளியிடும்பொழுது யாராவது ஒரு பிரபலத்தின் முன்னுரையோடு ஆரம்பிப்பதே வழைமை.பத்து நாளில் எழுதி முட…

  2. மெசப் பெத்தோமிய சுமேரியரின் நூல் வெளியீடும் சில ஆலோசனைகளும் http://www.yarl.com/forum3/index.php?showtopic=139970 வாழ்த்துக்கள், சுமே. புத்தகம் வெளியிடுவதும், அதனை விற்று பணத்தினை கையில் எடுப்பதில் உள்ள வலியினை அறிவேன். இலகுவானதல்ல. பகிடியாக இருந்தாலும், ரதி அக்கா சொன்னது உண்மைதான். யாழ் களம் தந்த மேடையிலே, நான் ஆரம்பத்தில் சில ஆக்கங்களை எழுத, எல்லோரும் ஆகா, ஓகோ என்று சொல்ல, சரி முயல்வோமே என, தமிழிலொரு ஆக்கமும், ஆங்கிலத்தில் ஒரு ஆக்கமும் எழுதி பிரசுரித்தேன். ஆங்கில ஆக்கத்தினை ஆங்கில புனை பெயருடன் பிரசுரித்தேன், கல்வியுடன் தொடர்பானதால் நல்ல வரவேற்பு. இதன் மூன்றாவது பதிப்பு இந்த கோடை காலத்தில்.... இப்போது ஒரு முக்கியமான ஆக்கமொன்றினை ஆங்கிலத்தில் முயல்கின்றேன். …

    • 2 replies
    • 743 views
  3. திரு. பழ. நெடுமாறன் அவர்களின் "உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்" - இளங்கோ (இலண்டன்) அமரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார சுரண்டல்கள் தேசிய இனமக்களின் வாழ்வியல் நலன்களை அச்சுறுத்தி வரும் காலச் சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் மற்றுமொரு பேரபாயம் இந்தியத் தேசியம் என்ற போர்வைக்குள் உருவாகிய இந்து பாசிசம். ஈழத்தில் சிங்கள பேரினவாதத்தால் தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்டது சாட்டையடி, அதன் வலியை தமிழர்கள் நேரடியாகவே நன்றாக உணர்ந்து கொண்டதால் தமிழீழ விடுதலைப்போர் தொடங்கியது. ஆனால் இந்துத்துவம் என்ற பெயரில் பார்ப்பனியம் செலுத்திய மயக்க ஊசி தமிழ் இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை வேரறுத்து தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்க முற…

  4. ஊழல், உளவு, அரசியல் சங்கர் எழுதிய ‘ஊழல் – உளவு – அரசியல்’ நூலை வாசித்து முடித்தேன். ஒரு துப்பறியும் நாவலை வாசிப்பது போன்ற சுவாரசியத்துடன் ஏறத்தாழ ஒரே மூச்சில் வாசிக்க முடிந்தது. ஆனால் இது புனைவு அல்ல. மூர்க்கமான அரசு இயந்திரத்துடன் மோதி ஜெயித்த ஒரு சாமானியன் எதிர்கொண்ட திகிலும் பயங்கரமும் கொண்ட அனுபவங்களின் தொகுப்பு. அரசு இயந்திரத்தின் ஒரு உதிரியே அந்த இயந்திரத்தின் மோசடியை வெளிப்படுத்தத் துணிந்த துணிச்சலும் நேர்மையும் இந்த நூலின் பக்கங்களில் பதிவாகியுள்ளன. தந்தையின் மறைவு காரணமாக 16 வயதிலேயே அரசுப் பணியில் இணையும் சங்கர், ஒரு விடலை இளைஞனின் அப்பாவித்தனமான பார்வையில் வ…

  5. அறிவடைந்த குரங்கின் கதை- ராகவேந்திரன் சேப்பியன்ஸ் வாங்க ஜெ யுவல் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ் குறித்து. மனித குலம் தனது வரலாற்றை பல காரணங்களுக்காக வியப்புடன் பரிசீலித்து வந்திருக்கிறது. நாம் இன்று சந்திக்கும் சிக்கல்கள் நம் முன்னோராலும் எதிர்கொள்ளப்பட்டவையா என்ற வினா எப்போதும் எழுந்து வந்துள்ளது. வெறும் ஐம்பது வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட நாம் இருக்கும் ஊரின் படத்தைப் பார்க்கும்போதே ‘ எப்படி இருந்த்து இப்படி ஆகி விட்டது ‘ என்று வியக்கிறோம். . நம் முன்னோர்கள் நடந்த பாதையில் நடந்து அவர்கள் நுகர்ந்த காற்றை சுவாசித்து அவர்களின் மரபணுத் தொகுப்புடன் வாழும்போதும் வரலாற்று வாழ்வை நினைவு படுத்தும் ஒவ்வொரு கல், மணி, எலும்பு, ஓவியக் கிறுக்கல்கள், பழம்பொருள…

  6. தர்மினி பிப்ரவரி 17, 2013 பன்னிரண்டு சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு பிரண்டையாறு. கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மெலிஞ்சிமுத்தன் ஒருகவிஞரும் ஓவியங்களை வரைவதில்ஆர்வமுடையவரும்கூட. ஏற்கனவே ‘சிதையும் என்னுள்’ -’என் தேசக்கரையோரம்’ -’முட்களின் இடுக்கில்’ ஆகிய கவிதைத் தொகுதிகளும் கனவுகளின் தொகுப்பென ‘வேருலகு’ பிரண்டையாறைத் தொடர்ந்து இந்த வருடம் ‘அத்தாங்கு ‘ என்ற நாவலும் மெலிஞ்சிமுத்தனால் எழுதப்பட்டுள்ளன. 1990 இல் பெரும் எடுப்பில் தீவுப்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்ட சிறீலங்கா இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளினால் ஊர்காவற்றுறையின் மெலிஞ்சிமுனைக்கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து ஓர்அகதியாக அலைந்து இறுதியாக ஒரு நாட்டைக் கண்டு விட்ட போதும் தன்நினைவுகளில்,ஏன…

  7. இது முற்றிலும் பெண்களால் நிரப்பப்பட்ட நாவல். பெண்ணின் அகவுலகை ஆணின் பார்வையிலிருந்து பார்த்துப் பழகிய நமக்கு இதுவொரு புது அனுபவமாக இருக்கும். நாவலின் மையக்கருத்தை பின்னட்டையிலிருக்கும் குறிப்பிலிருந்து ஓரளவு அறிய முடிகிறது. இஸ்லாமிய சமூகத்தைப் பற்றிய படைப்பாக்கப் பிரதிகள் தமிழில் அதிகம் வெளியாவதில்லை, வெளிவந்தவையும் ஓர் ஆணின் பார்வையிலிருந்தே அமைந்து வந்துள்ளது. முன்னுரையில் குறிப்பிட்டது போன்று "முதல் ஜாமத்தைக் காட்டிலும், விபரீதமானது - கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்". அது எல்லைகளற்றது, கட்டுப்படுத்த முடியாதது, தணல் போன்றது, ஆழ்ந்த நினைவுகளைக் கிளறிக் கொணர்வது. நாவலில் வரும் பகுதிகளைக் குறிப்பிடாமல், என்னுள் உணர்ந்தவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன். ராபியா என்ற…

    • 8 replies
    • 3.1k views
  8. புதியதோர் உலகம் ரவி (சுவிஸ்) – உள்ளும் புறமும் புதியதோர் உலகம் நாவலின் முதல் பதிப்பு 1985 இல் தீப்பொறி குழுவினரால் வெளியிடப்பட்டது. பின்னர் இந் நூலை பிரதிகள் செய்து, தானே அதை நூலாகக் கட்டி தோழர் சபாலிங்கம் பாரிஸ் இல் விநியோகித்தார். இதன் இரண்டாவது பதிப்பு 1997 இல் வெளிவந்தது. இதை தீப்பொறிக் குழுத் தோழர்கள் விடியல் பதிப்பகத்தினூடாக வெளியிட்டிருந்தார்கள். (புத்தக வடிவமைப்பை நான் செய்திருந்தேன்). இப்போ மூன்றாவது பதிப்பாக தமிழகத்தின் சிந்தன் புக்ஸ் 2023 இல் வெளியிடுகிறது. 37 வருட காலத்தின் பின்னும் இந்த நூல் மறுபதிப்பாக வருவது அதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது. இலக்கியத் தளம் என்பதைவிட அரசியல் தளத்தில் அதன் பேசு பொருள் இப்போதும் பொருந்துவனவாக இருப்பதே …

  9. ''நகரங்கள் காட்டில் மிதந்துகொண்டிருந்தன'' சுந்தரபுத்தன், ஷங்கர்ராமசுப்ரமணியன் சமகால தமிழ் எழுத்துலகின் முக்கியமான பெயர் எஸ். ராமகிருஷ்ணன். பத்திரிகை, சினிமா, இணையம் என பன்முக ஊடகங்களில் தனித்த ஆளுமையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் இயல் விருதுக்காக கனடா, அமெரிக்கா நாடுகளுக்குச் சென்றுவந்த அவரிடம் எழுத்துகள், பயணம், வாசிப்பு பற்றி தசஇ பேசியதிலிருந்து.... சிறுபத்திரிகை எழுத்தாளராக செயல்படத் தொடங்கியவர் நீங்கள். இப்போது தமிழகம் அறிந்த பிரபல எழுத்தாளுமைகளில் ஒருவர். உங்களிடத்தில் இந்த புகழ் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது? முதலில் நான் புகழ் என்று சொல்லமாட்டேன். மாறாக என்னுடைய வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. வாசிக்கும்…

  10. I AM CHANGE - புத்தக விமர்சனம் நேற்று மகளுடன் கதைக்கும் போது இந்த புத்த கத்தைப் பற்றி கூறினார், நல்ல புத்தகம் எல்லா பெண்களும் வாசிக்க வேண்டிய புத்தகம் என்றார், அப்ப விமர்சனத்தை எழுதி தருமென்றேன். அவரின் விமர்சனம் This novel is a beautiful story that takes on the perspective of a 15 year old Ugandan girl and powerfully describes the hardships many young girls around the world face. Living in first world countries its easy to forget that not everyone is as privileged and lucky as we are. I think its extremely important to never be ignorant of others suffering or be ungrateful for our own luxuries. We should be grateful to worry about p…

  11. கழுகு நிழல் -புதிய அரசியல் பத்தி எழுத்து பாரம்பரியத்தின் தொடக்கம் யோ.கர்ணன் தமிழில் புனைவெழுத்துக்கள் அச்சாகும் அளவிற்கு புனைவுசாரா எழுத்துக்கள் அச்சாகின்றனவா என்பது தெரியவில்லை. இதற்கான பதில் பெரும்பாலும் இல்லையென்பதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக ஈழத்தமிழ் சூழலில் புனைவுசாரா எழுத்துக்களின் தொகுப்பென்பது கோடைமழையை ஒத்த நிகழ்வென்பதே என் அபிப்பிராயம். பொதுவாகவே ஈழத்தில் பதிப்பக முயற்சிகள் சிரமமான விடயமென்று ஆகி வருகின்றன. இந்திய சூழலுடன் ஒப்பிடுகையில் புத்தகங்களிற்கான சந்தை வாய்ப்பு, விநியோக வலையமைப்பு, அச்சு தரம் என்பனவற்றில் வெகுவாக பின்தங்கியிருப்பதும் இதற்கான குறிப்பிடத்தகுந்த காரணங்கள். இப்பொழுது சொல்லிக் கொள்ளும்படியான பதிப்பக முயற்சிகள் இ…

  12. ஜி. நாகராஜன் குறத்தி முடுக்கு - உடலின் ஆன்மா. - பிரவீண் நாவல் என்பதே ஒரு மத்தியதர வர்க்க வடிவம் என அறியப்பட்ட காலம் ஒன்று உண்டு.இங்கு மத்தியதர வர்க்கம் என்பது ஒரு பொருளியல் மட்ட மக்கள் திரளை குறிக்கவில்லை. மத்தியதர வர்க்கம் என்பது அது சார்ந்த ஒரு மன நிலை, உறைந்த மதிப்பீடுகள் , , தினசரித்தன்மை முதலியவற்றையும் சுட்டுகிறது. தமிழ்ப் புனைவு வெளியில் குறிப்பாக மணிக்கொடி – எழுத்து என்ற தடத்திலான ஒரு நவீனத்துவ உருவாக்கத்தில் இந்த மத்தியதர வர்க்க மனோபாவத்தின் மேலாண்மையை மறுப்பதற்கில்லை.குறிப்பாக தமிழ் நாவல் வெளியில் மனம் சார்ந்த நெருக்கடிகளின் நூற்றுக் கணக்கான கோலங்கள் காணக்கிடைக்கும் அளவுக்கு உடல் சார்ந்த வன்முறைகள் , அதன் மீதான சமூக கலாச்சார நிறுவனங்ளின் ஒடுக்குமு…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் சிந்துச் சமவெளி நாகரிகம் குறித்த சமீபத்திய புத்தகமான அஹிம்சா (Ahimsa), அந்த நாகரிகம் வணிகத்தை மையப்படுத்திய, வன்முறையை நாடாத ஒரு சமூகமாக இருக்கலாம் என்கிறது. வேறு பல சுவாரஸ்யமான தகவல்களையும் கருத்தாக்கங்களையும் இந்தப் புத்தகம் முன்வைக்கிறது. அது 4,500 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர்கள் பிரமிடுகளைக் கட்டிக்கொண்டிருந்த காலகட்டம். அவர்கள் 'லாபிஸ் லாஸுலி' எனப்படும் நீல நிற கற்களை வாங்கிக் குவித்தார்கள். இந்தக் கற்கள், அந்த காலகட்டத்தில் தற்போதைய ஆஃப்கானிஸ்தானில் மட்டுமே கிடைத்தன. அங்கிருந்து தோண்டியெடுக்கப்பட்ட இந்தக் கற்கள் ஐயாயிரம் கிலோ …

  14. Nadarajah Muralitharan இன்று காரில் சென்று கொண்டிருந்த பொழுது 99.1 FM இல் சிபிசி வானொலியை திருகி விட்டேன். பேசிக் கொண்டிருந்தவர் இலங்கையில் பிறந்து வளர்ந்து 1983களில் கனடாவுக்கு இடம்பெயர்ந்த "ஷியாம் செல்வதுரை". இவர் கனடாவில் ஆங்கிலத்தில் எழுதும் பிரபல எழுத்தாளர். இவரது Funny Boy, The Cinnamon gardens ஆகிய நாவல்களைப் பலரும் அறிந்திருப்பார்கள். "ஷீலா றோஜர்ஸ்" என்ற அறிவிப்பாளர் அவரைப் பேட்டி கண்டு கொண்டிருந்தார். "ஷியாம்" புதிதாக எழுதி வெளியிட்டுள்ள நாவல் (Hungrey Ghosts) குறித்து "ஷீலா" வினாக்களைத் தொடுத்துக் கொண்டிருந்தார். அவரது சுயசரிதைப் பாணியில் அமைந்த நாவல் தமிழ், சிங்கள உறவுகள் பற்றியதாகவும் அமைந்துள்ளது என்பதை அவரது நேர்காணலில் இருந்து அறிந்து கொண்டேன். நான் இன்று…

  15. உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு - நூல் வெளியீட்டு விழா - சாதுர்யன் - ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கவிசிரேஷ்டராக விளங்கிய சிவசம்புப் புலவரின் பிரபந்தங்கள் அடங்கிய “உடுப்பிட்டிச் சிவசம்பு புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு - தேவபாகமும் மானிடபாகமும் எனும் பெருந் தொகுதி வெளியீட்டு விழா. 2014ஆம் ஆண்டு தை மாதம் 5ஆம் திகதி அன்று உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூhயில் அமைந்துள்ள பேராசிரியர் அழகையா துரைராஜா மண்டபத்தில் நகரபிதா வல்வை ந. அனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. மண்டபத்தில் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னதாகப் புலவர் இல்லத்திற்கு முன்னால் உள்ள யோகர் சுவாமிகள் போற்றிய துவாளிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட ப10ஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பின்னர் அவ…

    • 1 reply
    • 1.9k views
  16. நவீன இந்திய நாவல்கள்- எனது பார்வை - அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2018 இல், இடம்பெற்ற நாவல் இலக்கிய அரங்கில் சமர்ப்பித்த கட்டுரை - நீலகண்டப்பறவையைத்தேடி - வங்காளம் ஹோமரின் இலியட் மற்றும் ஓடிசியையும் சேர்த்து பார்த்ததை விட பத்து மடங்கு பெரியது மகாபாரதம். காவியங்கள் தோன்றி காலங்கள் சரியாக கணக்கிட முடியாத போதிலும் புராதன இலக்கிய பாரம்பரியத்தின் உரிமையாளர்களைக் கொண்டது அக்காலப் பாரதம், இக்காலத் தென்னாசியா. மிருகங்களை பாத்திரமாக்கிய ஐதீகக் கதைகள் இங்கேயே தோன்றின. அதன் தொடர்ச்சியாகவே உலகெங்கிலும் மிருகங்களைக் கொண்ட ஈசாப் நீதிக்கதைகளில் தொடங்கி மிக்கி மவுஸ் எனும் வால்ட் டிஸ்னியின் கதைகள் உருவாகின. மகாபாரதத்தில் தருமருடன் இ…

  17. ஜனநாயக வரி - நிலாந்தன் 14 ஏப்ரல் 2013 அ .இரவியின் புதிய நூல் ஆயுதவரி காலச்சுவடு வெளியீடாக விரைவில் வருகிறது அதில் நிலாந்தன் எழுதிய முன்னுரை படைப்பு ஒரு மாறிலி. ஆனால், படைப்பாளி மாறிலி அல்ல. படைப்பு ஒரு தூலமான உயிரி அல்ல. ஆனால், படைப்பாளி ஓர் உயிரி. எனவே, வளரி. வளரக்கூடியது மாறும். படைப்பாளியும் மாறுபவர்தான். படைப்பாளி மாறும்போது மாறிலியான அவரது படைப்பு சில சமயம் அவரைத் துரத்திக் கொண்டுவரும் அல்லது அவரைச் சுற்றி வளைக்கும். அல்லது அவரைத் தோற்கடிப்பதுமுண்டு. படைப்பாளியின் வாழ்க்கை படைப்பைத் தோற்கடிக்கும் தருணங்களில் இதுவும் ஒன்று. அதேசமயம் மாறக்கூடிய படைப்பாளி தனது மாறாப்படைப்பை கடந்து புதிய உச்சங்களை நோக்கிப் போவதும் உண்டு. ஒரு கலை இலக்கியச் செயற்பாட்டாளரான இரவியும் ஒ…

    • 3 replies
    • 733 views
  18. கார்டன் வைஸ் எழுதிய "கூண்டு - இலங்கை போரும் விடுதலைப்புலிகளின் இறுதி நாட்களும்" என்ற சர்ச்சைக்குரிய புத்தகத்தை பற்றிய எனது பார்வை. யாழில் இந்த புத்தகம் பற்றி ஏற்கனவே வேறொரு திரி இருந்ததை அவதானித்திருந்தேன். அதில் பல கருத்துக்குள் கத்தரிக்கப்பட்டுள்ளன. ஒரு சூடான விவாதம் நடந்தற்கான அடையாளமாகவே அதனை பார்க்கின்றேன். நான் இங்கு புத்தகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய விடயங்களை கேள்விக்குறியாக்க விரும்பவில்லை. இந்த நூலின் பின் அட்டையில் தெளிவாக ஒன்றை சொல்லியிருக்கிறார் கார்டன் வைஸ். "பக்கச்சார்பின்றி அறக்கடப்பாட்டோடு எழுதப்பட்டுள்ள இந்த நூலின் கருத்துக்கள் எல்லாவற்றோடும் ஒருவர் உடன்பட வேண்டியதில்லை...." எனவே அவர் முன்வைத்த கருத்துக்கள் மற்றும் குறிப்புகள் பற்றி நாம் ஆரா…

  19. நமது விருப்பத்திற்குரிய அங்கமாயிருக்கும் காதலென்னும் சிலுவையும், பெருந்திணையின் வசீகரமும். – உமா வரதராஜனின் ‘மூன்றாம் சிலுவை’. கதைகள் எப்போதும் தன்னகத்தே ஒரே முகத்தைக் கொண்டிருப்பதில்லை, அதிலும் குறிப்பாக காதல் கதைகள். அவை அனேக முகங்களைக் கொண்டவை. பெருந்திணையும் சேர்ந்துவிட்டால் எண்ணிக்கையில் இன்னும் கொஞ்சத்தைக் கூட்டிக் கொள்வது ஒன்றும் சமூகக் குற்றமில்லை. தமிழில் சொற்கள் அனேகமாய் இருப்பதாலோ என்னவோ நம்மவர்கள் கைக்கிளை, பெருந்திணை, என பல்வேறு வகையாய் காதலைக் கூறுபோட்டு வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு காதல் கதை ஏதோவொரு வகையில் சுவாரஸ்யமானதாகவும், எல்லோருக்கும் பொருந்திப்போகக் கூடியதாகவும் இருக்க வேண்டுமென்பதையே நாம் விரும்புகிறோம். நாம் வாசிக்கும் புத…

    • 4 replies
    • 1.1k views
  20. 700 அரங்குகள் | 5,00,000 தலைப்புகள் | 20,00,000 வாசகர்கள் புத்தகக் காதலர்கள் ஆவலுடன் காத்திருந்த திருவிழா கொண்டாட்டத்துடன் நேற்று தொடங்கியது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் 38-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. 38 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்வமும் அக்கறை யும் மிக்க சில பதிப்பாளர்கள், புத்தக விற்பனை யாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி). வாசகர்களிடம் புத்தக வாசிப்பு தொடர்பான ஆர்வத்தை விதைப்பதற்கும், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் என்று பலரையும் ஊக்கத்துடன் இயங்…

  21. நன்றி: https://samugammedia.com/ Advertisement தனது இருப்பைத் தக்கவைப்பதற்காக எல்லா வழிகளிலும் போராட நிர்பந்திக்கப்பட்டுள்ள தமிழினத்தின் வரலாற்றை, வாழ்வியலை, உணர்வுநிலைகளைப் பேசும் பல்வேறு படைப்புகளை தமிழ்த் தேசியத் தளத்தில் நின்று படைத்தளிக்கும் தியா காண்டீபன் போன்ற இளம் எழுத்தாளர்களின் உருவாக்கம் நிறைவைத் தருகிறது. அத்தகைய படைப்பாளர்களின் படைப்புத்தளம் என்பது எமது இனத்தின் இருப்புக்கு வலுச்சேர்ப்பதாய் தொடர்ந்து விரிவடைய வேண்டும். அதற்குக் களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் பேரவை தனது பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (20) கரைச்சிப் பிரத…

  22. கோமகனின் தனிக்கதை - மதிப்பீடு அனோஜன் பாலகிருஷ்ணன் கோமகனின் தனிக்கதை சிறுகதைத்தொகுப்பில் பதினாறு சிறுகதைகள் அடங்குகின்றன. ஈழத்து வட்டார வழக்குடன் வழமையான ஈழத்து எழுத்தாளர்களின் கற்பனை நுட்பத்துடன் கோமகனின் தனிக்கதைகள் இடம் பிடித்துள்ளது. பெரும்பாலும் எழுத்தென்பது வாழ்வின் சிக்கலானபோக்கை, அதன் தடுமாற்றங்களை இயல்பான போக்குடன் வாசகனுக்கு கொண்டு செல்வதினை அடிப்படையாக கொண்டிருக்கவேண்டும். வாசகனின் வழமையான எதிர்பார்ப்புக்களை தகர்த்து நுட்பமாக பயணிக்கவேண்டும். நல்ல கதையென்பது படித்துமுடித்த பிற்பாடு வாசகனை அக்கதை சிறிதுநேரம் யோசிக்கவைக்கும். அதன் பாதிப்புக்கள் வாசகனைவிட்டு நீங்காமல் சிலநேரம் தொந்தரவு கொடுக்கவேண்டும். கோமகனின் இத் தொகுப்பில் சிலசிறுகதைகள் அதற்கான தன்மைய…

  23. தடங்களில் அலைதல் sudumanalMay 8, 2023 நூல் அறிமுகம் “உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல. அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள். ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல” என்ற கலீல் ஜிப்ரானின் புகழ்பெற்ற கவிதையுடன் ஆரம்பித்து, வளரும் குழந்தைகளின் முதல் கண்டுபிடிப்பு “என் தந்தை என்பவர் எவ்வளவு முட்டாள் என்பதே” என பேச்சின் நடுவில் எடுத்துவிட்டேன். என் பேச்சு முடிய கீழே இறங்கினேன். வாட்டசாட்டமான ஒருவர் “நான் உம்மோடு பேச வேண்டும். வாரும் வெளியே பேசுவோம்” என்றார். “எங்கடை பிள்ளையள் எங்களுக்குப் பிறக்காம என்னடா வம்பிலா பிறந்தவங்கள்” என தொடங்கி சிங்கள இராணுவத்தின் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் வழியாக தனது …

  24. பலாலித்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தற்கொலைத்தாக்குதலில் படையினரிடம் அகப்பட்ட கெனடியை மீட்பதற்காக, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்டவர் "சாகரவர்த்தனா" கப்பல் கப்டன் அஜித் போயகொட. 1994 ஆம் ஆண்டு மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகள் மேற்கொண்ட கரும்புலித்தாக்குதலில் பிடிக்கப்பட்ட அஜித் போயகோட, ஏழு வருடங்களின் பின்னர் விடுதலைப்புலிகளினால் விடுவிக்கப்பட்டார். போயகொட சொல்ல சுனிலா கலபதி எழுதிய A Long Watch என்ற தன்வரலாற்றுக்குறிப்பு 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நூல் தமிழில் தேவாவின் மொழிபெயர்ப்பில் 'வடலி' பதிப்பகத்தின் ஊடாக "நீண்ட காத்திருப்பு" என்ற பெயரில் தற்போது வெளிவந்திருக்கிறது. யுத்த களத்தில் எதிரிகளால் பிட…

    • 4 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.