நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
தமிழ் மூளைகள் தமிழ்த் தேசியம் சார்ந்த சமூக சிந்தனையைக் கைக்கொள்ளாது உத்தியோகம் சார்ந்த திரவியம் தேட புறப்பட்டன… ஆய்வாளர் மு.திருநாவுகரசின் பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூல்வெளியீடு இன்று(24) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. ஆய்வாளர் நிலாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.. தமிழாய்வு மையம் இலங்கை- பிரித்தானிய…
-
- 3 replies
- 1.7k views
-
-
பூக்கள் பறப்பதில்லை – அ.முத்துலிங்கம் அ முத்துலிங்கம் அமெரிக்கப் பெண் ஒருவர் சிறுவயதில் இருந்தே நிறைய வாசிப்பார். எத்தனைப் பெரிய புத்தகமாயிருந்தாலும் ஒரே நாளில் வாசித்து முடித்துவிடுவார். இவர் மணமுடித்த பின்னர் கணவர் இவருக்குத் தினமும் நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொண்டு வந்து கொடுப்பார். அவர் முடித்து விட்டு அடுத்த நாளே கணவரிடம் கொடுப்பார். கணவர் மாலை திரும்பும்போது புதுப் புத்தகங்கள் கொண்டுவரவேண்டும். மனைவிக்குப் புத்தகங்களில் திருப்தியே கிடையாது. கணவரிடம் தினமும் சொல்வார், ’இந்தப் புத்தகம் சரியில்லை. வேறு நல்ல புத்தகங்கள் கொண்டுவாருங்கள்.’ ஒருநாள் கணவர் வெறுத்துப்போய் சொன்னார், ‘உனக்குத்தான் நான் கொண்டு வரும் புத்தகங்கள் பிடிப்பதில்லையே. நீயே உனக்குப் பிடித்த …
-
- 0 replies
- 531 views
-
-
சென்னை: இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது தமிழ் எழுத்தாளார் பூமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரின் 'அஞ்ஞாடி' என்ற நாவல் இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். இவர் 1947 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். பூமணி பல்வேறு இலக்கியப் பங்களிப்பை தமிழில் தொடர்ந்து செய்து வருகிறார். இவரின் வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், வெக்கை, நைவேத்தியம், பிறகு, வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்கள் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவை. அஞ்ஞாடி நாவல் 19 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் சமணர் கழுவேற்றம், பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி, நாயக்க மன்னர்களின் வருகை, பாளையக்காரர்களிடை…
-
- 0 replies
- 1.8k views
-
-
பெய்ததும் பெய்வதும் பனிதான் : சாம்ராஜ் பனிவிழும் பனைவனம் நூலை முன்வைத்து தாண்டிச் சென்றதும் பாலத்தைத் தகர்க்க தங்கள் ஆணையை என் ரத்தத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன் மேன்மை தங்கியவரே குதிரைகளின் புட்டங்களில் குதிரைகளின் முகங்கள் உரச தாண்டிக் கொண்டிருக்கிறோம் கடைசிக் குதிரை தாண்டியதும் பாலம் பறந்து நதியில் மூழ்கும். தாண்டாமல் காத்திருக்கிறான் ஒரு வீரன் தங்களிடம் சேதி சொல்ல எப்படி மீண்டும் சேர்ந்து கொள்வேன் என்று அவன் கேட்கவில்லை. தான் செல்லப் பாலங்கள் இருக்குமா செய்தி சொன்ன பின் நான் இருப்பேனா என்று அவன் கேட்கவில்லை தன் குதிரை இருக்குமா என்று அவன் கேட்கவில்லை தாங்கள் இருப்பீர்களா என்று அவன் கேட்கவில்லை -சுந்தரராமசாமி ”உள…
-
- 1 reply
- 255 views
-
-
பெருமாள் முருகன் ஏற்படுத்தும் நம்பிக்கை நேற்று நண்பர் பௌத்த ஐயனாருடன் பெருமாள் முருகனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். ஜெய்ப்பூர் புத்தக விழாவில் பெருமாள் முருகனின் மொழியாக்க நாவல்களை வாங்கி அவரிடம் கையெழுத்துப் பெற (ஆங்கிலத்தில் மட்டும் வாசிக்கும்) வாசகர்களின் ஒரு நெடிய வரிசை நின்ற காட்சியைப் பற்றி ஐயனார் என்னிடம் குறிப்பிட்டார். இன்று பெருமாள் முருகனுக்கு உலகம் முழுக்க வாசகர்கள் தோன்றி விட்டார்கள். வாஷிங்டன் டைம்ஸில் அவருடைய நாவல்களுக்கு மதிப்புரை வருகிறது. இந்திய ஆங்கில படைப்பாளிகளான அருந்ததி ராய், அமிதாவ் கோஷ் கூட அடையாத இடத்தை ஒரு தமிழ் எழுத்தாளர் அடைந்திருப்பது ஒரு சாதாரண விசயம் அல்ல. நாம் இதை பொறாமையால் கவனிக்காததைப்…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
பேசாப் பொருளை பேசத் துணிந்த நூல் பீட்டர் துரைராஜ் லதா எழுதிய இந்த நூல் பாலியல் கல்வி தொடர்பான நூல்.பொய்மைகளை, போலித்தனங்களை தவிர்த்து, பெண் குழந்தைகள் தொடர்பான உண்மையான அக்கறை சார்ந்து நேர்பட எழுதப்பட்ட நூல்! இந்த நூலின் தாக்கம் ஆண்,பெண் பாலியல் உறவில், சமூக உறவில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் ‘காமம் குறித்த உரையாடலை ஒப்பனைகள் இல்லாமல் முகத்தில் அறைந்த மாதிரி பேசிச் செல்லும் புத்தகம்’ என்கிற குங்குமம் தோழி ஆசிரியரான மகேஸ்வரியின் கூற்று சரியானதே! ‘எனக்கான தாக்கங்கள், மற்ற மனிதர்களுடனான என் விவாதங்கள், என் அனுபவங்கள், என்னுடன் மனம் திறந்து பகிர்ந்த சில நண்பர்களின் அனுபவங்கள் இவையே இந்தப் புத்தகத்தின் அடித்தளம்’ என்று முன்னுரையில…
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்தின் மீது சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பினை ஆவணமாக பதிவு செய்துள்ள SRI LANKA : HIDING THE ELEPHANTஎனும் புத்தகத்தின் அறிமுக நிகழ்வு பிரான்சில் இடம்பெறுகின்றது. சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை தலைவரும் பேராசிரியரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளஅறிஞர் குழுவின் பிரதிநிதிகளில் ஒருவரான இராமு.மணிவண்ணன் அவர்களால் இந்த ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது. சாட்சியங்கள், ஆதாரங்கள், புள்ளிவிபரங்கள், ஒளிப்படங்கள் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் உருவாக்கப்பட்டுள்ள இப்புத்தகம் 900 பக்கங்களுக்கு மேல் கொண்டுள்ளது. பிரான்சில் இடம்பெறவுள்ள நிகழ்வரங்கில் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் நேரடியாக வருகை தரஇருப்ப…
-
- 0 replies
- 478 views
-
-
பேராசிரியர் சி.க.சிற்றம்பலத்தின் "தடம் பதித்த தமிழ்த் தேசியம்' என்னும் நூலின் அறிமுகவிழா வவுனியா நகரசபை மண்டபத்தில் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. வவுனியா தமிழ்ச்சங்கத்தின் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து தமிழ் வாழ்த்தை திருமதி பராசக்தி ஜெகநாதன் பாட, தொடக்கவுரையை தமிழ்மணி கே.கே.அருந்தவராஜா (மேழிக்குமரன்) நிகழ்த்துவார். தலைமையுரையை அடுத்து நூல் அறிமுகத்தை தமிழருவி த.சிவகுமாரன் வழங்குவார். சிறப்புப் பிரதிகள் வழங்கலைத் தொடர்ந்து ஆய்வுரையை யாழ். பல்கலைக்கழக அரச அறிவியல்துறைத் தலைவர் கலாநிதி கே.பி.கணேசலிங்கம் நிகழ்த்த, ஏற்புரையை நூலாசிரியர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வழங்குவார். நன்றியுரை…
-
- 0 replies
- 382 views
-
-
பல வருடங்கள் முன்பே எண்ணற்றவர்கள் படித்து இருக்கும் அற்புத நாவலான “பொன்னியின் செல்வனை” தற்போது படிக்கிறேன் என்று ஃபேஸ்புக்கில் கூறினேன். “என்னது இப்பத்தான் படிக்கறியா?! நிஜமாவா?!” என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இது போல ஒரு நாவலை இவ்வளவு தாமதமாகப் படித்ததற்குக் கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. அதனால் என்ன?! எப்போது படித்தாலும் அதன் சிறப்புக் குறைந்து விடப்போகிறதா என்ன! புத்தகம் எடுத்தால் வைக்கவே முடியாது என்று நண்பர்கள் கூறிய போது நம்பச் சிரமமாக இருந்தது, மிகைப்படுத்திப் பேசுகிறார்களோ! என்று நினைத்தேன். ஆனால், அது 100% உண்மை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. Image Credit– ponniyin-selvan-translation.blogspot.com படிக்கத் தோன்றவில்லை தம்பி ராஜ்குமார் சிங்கப்பூர் வ…
-
- 0 replies
- 1.7k views
-
-
போகன் சங்கரின் ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ – அனோஜன் பாலகிருஷ்ணன் November 14, 2018 கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் தொகுப்பை வாசித்து முடித்தபின் உடனடியாக எனக்குத் தோன்றியது பதற்றம் சுரக்கும் புதிர் நிறைந்த துயர்தான். சிக்காகிய நூல் பந்திலிருந்து நூலை விடுவிப்பது போல இந்தத் துயர் கழன்று கழன்று மேலும் சிக்காகியது. போகன் சிருஷ்டிக்கும் உலகம் மிதந்தலையும் துயருக்குள் புறக்கணிப்பின் விளிம்பில் சுரக்கும் தாழ்வு மனப்பான்மையாலும் அன்பின் நேர்மறை சிடுக்குகளுக்குள் சிக்குண்டு அவஸ்தைப்படுபவர்களின் பதற்றம் கொண்ட அகவுலகத்தாலும் நிரம்பியுள்ளது. ஒருவகையில் அம்மானுடர்கள் அவ்விருத்தலை தத்தளிப்புடன் சிறுதயக்கத்துக்குப் பின் ஏற்கவும் செய்கிறார்கள். ‘பாஸிங் ஷோ’ கதையில் இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
போக்காளி (நாவல்) sudumanal எனது வாசிப்பு ஒரு போரின்போது மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு நாட்டுக்குள் மாறிமாறி இடம்பெயர்கிறார்கள். அயல் நாட்டுக்கு இடம்பெயர்கிறார்கள். தூர தேசங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். இலங்கையிலும் போர் துரத்திய தமிழ் பேசும் மக்கள் இவ்வாறே ஆனார்கள். மேற்குலகுக்கு புலம்பெயர்ந்தோர் எல்லோரும்அரசியல் அகதிகளா பொருளாதார அகதிகளா என பலர் கேள்வி எழுப்புவதுண்டு. வெறும் பொருளாதாரக் காரணிகளால் போர்ப் பிரதேசத்திலிருந்து மேற்குலகுக்கு இடம் பெயர்பவர்களை அரசியல் அகதிகள் எனலாமா என்ற விவாதம் இங்கும்கூட நடைபெறுகிற ஒன்று. பொருளாதாரப் பிரச்சினை என்பதும் ஓர் அரசியல் பிரச்சினைதான் என்ற எதிர்வாதமொன்றும் வைக்கப்படுவதுண்டு. (எனக்கு இதில் உடன்பாடு உண்டு). இந் நாவல் இதற்கான ஒரு விடைய…
-
- 0 replies
- 281 views
-
-
போதையில் பல வகை ஆர். அபிலாஷ் போன வாரம் இங்கே ஒரு கூட்டம் நடந்தது. இணைய (போர்னோகிரபி, சமூக வலைதளங்களின்) போதை பற்றி ஒருவர் விரிவாக பேசினார். ஏற்கனவே நாம் கேள்விப்பட்டது தான். இணையம் நமது நரம்பணுக்களின் சர்க்யூட்டை மாற்றி அமைக்கிறது. உடனடி கிளர்ச்சிக்காய் மனம் ஏங்கத் துவங்குகிறது. எதையும் ஊன்றி பொறுமையாய் கவனிக்க முடியாமல் மனம் சிதறுகிறது, தத்தளிக்கிறது, அலைபாய்கிறது. இது தான் இணைய போதை. இது நம்மில் கணிசமானோருக்கு மிதமான அளவில் உண்டு. நான் ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் சென்னைக்கு படிக்க வந்த போது ஜெயமோகன் என்னிடம் இணைய போதை பற்றி எச்சரித்தார். அப்போதெல்லாம் ஸ்மார்ட் போன்கள் இல்லை. கணினி மையங்களுக்கு போய்காளைவண்டி போல் ஓடும் இணையத்தை மேய வேண்டும். ஆன…
-
- 8 replies
- 1.9k views
-
-
போராளியின் காதலி எமது இறுக்கமான சமூகத்திற்குள்ளிலிருந்து, தன்னையும் ஒருவித குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிக்கொண்ட ஒரு பெண்ணின் வாழ்வு எப்படி போராட்டத்தினூடு விரிகின்றது என்பதை இப்புனைவு பேச முனைக்கின்றது. பெற்றோர்/உறவுகளோடு அவ்வளவு ஒன்றமுடியாத, சாதியத்தை ஏதோ ஒருவகையில் எதிர்க்கின்ற இப்பெண், தன்னோடு வைத்தியசாலையில் இணைந்து பணியாற்றிய போராளிக் காதலனைத் தேடி புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த வன்னிக்குள் செல்கின்றார். பல சாதாரண மக்களுக்கு, போராளிகள் மீது ஒருவகை வெறுப்பும், அந்நியத்தன்மையும் இருப்பதை மட்டுமின்றி எமக்கிடையேயிருக்கும் சாதியமும் இப்புனைவின் தொடக்கப்பகுதிகளில் விரிவாகச் சொல்லப்படுவதை முக்கியமாகக் குறிப்பிடவேண்டும். போராட்டத்தை ஒருவகை வீரதீர சாகசமாக மட்டும் …
-
- 0 replies
- 614 views
-
-
ஈழ அகதியின் துயர வரலாறு . என்னை பொறுத்தவரை ஒவ்வொரு ஈழத்தமிழனும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு உண்மைப்பதிவு .தமிழகத்தில வாழும் அகதிகள் பற்றிய கதை .
-
- 1 reply
- 1.3k views
-
-
மலரவனின் போர் உலா என்ற பயனக்கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு பென்குயின் பதிப்பகத்தால் WAR JOURNEY என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.ஏற்கனவே போர் உலா என்ற நூல் ஐந்து தடவைகள் அச்சிடப்பட்டு வெளியாகியிருந்தது.போர் உலா இலங்கை இலக்கியப்பேரவையின் 1993 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்தேர்வில் சிறந்த நாவலுக்கான பரிசை பெற்றது.இலங்கையில் வெளியான சிறந்த நாவல்களுக்குள் ஒன்றாகவும் ஆய்வாளரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவம் கட்டைக்காட்டில் இருந்து ஆனையிறவு முகாம் நோக்கி இராணுவ நடவடிக்கையின் (பலவேகயா 2- 1992) இராணுவ ஆய்வை மலரவன் செய்யப்பணிக்கப்பட்டு அவன் அதை பூர்த்தி செய்திருந்தான். அந்த ஆய்வு மிக அழகாக செய்யப்பட்டிருந்ததாக தலைவர் அவர்களால் சொல்லப்பட்டது.இராணுவம்,புலி…
-
- 3 replies
- 1.9k views
-
-
நண்பர்களை உருவாக்குவதற்கான போர்… அகரன் வீட்டின் பின்புறத்தில் மூங்கில் தடிகளை வெட்டி வீட்டுத்தோட்டத்திற்கு வேலி போட்டபடி இருந்தேன். மகள் என்னுடன் நிற்பதற்கு விரும்பினாள். அப்படி நிற்பதென்றால் நான் செய்யும் வேலையை நிறுத்தவேண்டும். வீட்டில் உள்ள சேவல் தன்னை கொத்திவிடும் என்று கத்துவாள். ஒரு சேவலுக்கு ஆறு பேடுகள் அவசியம் என்று எமக்கு கோழிகளை விற்ற பிரெஞ்சுப்பெண் சொன்னாள். இளம்பருவ சேவல் வளர்ந்து வர்ணங்களை வளர விட்டதோடு சண்டித்தனத்தை எங்களிடமும் காட்ட ஆரம்பித்திருந்தது. மகளைக்கண்டால் திரத்த ஆரம்பித்துவிடும். மகள் பெரிய தடியை வைத்திருந்தாலும் அதை தாக்கப் பயன்படுத்த மாட்டாள் என்பதை சேவல் எப்படியோ அறிந்து விட்டது. மகளுக்கு எப்போதும் ‘நீ பயம் கொள்வதை அறிந்…
-
-
- 7 replies
- 835 views
-
-
போர்க்கால வாழ்வியலின் ஆவணமாக மிளிரும் ‘பங்கர்’ நூல் – பி.மாணிக்கவாசகம் 54 Views போர்க்காலத்தில் உயிர்ப் பாதுகாப்பு என்பதே பொதுமக்களின் ஒரே இலக்கு. மோதல்களில் ஈடுபட்டிருந்த தரப்பினர் எப்படியேனும் வெற்றியடைந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தனர். ஆனால் இடையில் அகப்பட்டிருந்த பொதுமக்களை உயிரச்சமே ஆட்கொண்டிருந்தது. மரணம் எந்தவேளையிலும் எந்த வடிவத்திலும் வரலாம் என்பதே அன்றைய நாளின் நிரந்தர விதியாக இருந்தது. இதனை அவர்கள் நிதர்சனமாக உணர்ந்திருந்தார்கள். உயிர்களைக் கொல்வது பாவம் என்பது மனுக்குலப் பொது நியதி. ஆனால் போர்க்களங்களில் எதிரியாகக் களத்தில் இருப்பவர்களைத் தாக்கிக் கொல்கின்ற உயிர்க்கொலை அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருந…
-
- 0 replies
- 1.3k views
-
-
போர்னோகிராபியும் இலக்கியமும் யமுனா ராஜேந்திரன பீடபைல்கள் இன்று எல்லாச் சமூகங்களிலும் பிரச்சினைக்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். இவர்கள் குழந்தைகளோடு பாலுறவு கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். குழந்தைகளை நைச்சியம் செய்து உறவு கொள்வார்கள். முடியாது போனால் தந்திரமான முறையில் கடத்திச் செல்வார்கள். இங்கிலாந்தில் இந்த மனநிலை கொண்டவர்கள் பல பெண்குழந்தைகளை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திப் பின் கொலை செய்து வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பொதுவாக இவர்கள் உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என உளவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கீத்தா ஸெரனி எனும் எழுத்தாளர், இரண்டு சிறுவர்களைக் கொன்ற ஒரு சிறுமி பற்றி நூலை எழுதியிருக்கிறார். மிகவும் சிறுவயதில் சிறுமி பாலியல் வன்முறைக்கு உட்பட்டி…
-
- 0 replies
- 2.6k views
-
-
மகாபாரதம் எனும் இதிகாசம் மீது தீராக் காதல் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய இணைப்புகள் இவை. இவற்றை இன்று எழுத்தாளர் ரஞ்சகுமார் தன் முகநூலில் பகிர்ந்து இருந்தார் முழுமையான மகாபாரதம்: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Purpose-of-translation.html மகாபாரதம் கும்பகோணம் ம.வீ.இராமானுஜாசாரியார் பதிப்பு 18 பர்வங்களும் முழுவதும் தமிழில் இங்கு கிடைக்கிறது, பெரும் பொக்கிசம்: http://books.tamilcube.com/tamil/ மகாபாரதத்தினைப் படிப்பது எப்படி?: http://www.sramakrishnan.com/?p=3337
-
- 3 replies
- 5.3k views
-
-
மகாவம்சத்தில்.. தமிழர் நிலை. துட்டகைமுனு சிறுவனாக இருந்த பொழுது, அவன் தந்தை காக்கவண்ண தீசன் பிக்குகள் உண்ட உணவின் மீதியை எடுத்து... உருண்டையாக்கி, அவனிடம் தமிழர்களுடன் சண்டை செய்யாதே என்று சத்தியம் கேட்கின்றான். அந்த உணவை தட்டிவிட்டு... ஓடிச்சென்று படுக்கையில், ஒடுங்கிப் படுத்துக்கொள்கிறான். அப்போதுஅங்கு வந்த விகாரமகாதேவி "ஏன் மகனே கைகால்களை நீட்டிக்கொண்டு வசதியாக படுக்கலாமே" என்கிறாள். அதற்கு அவன் "மகாவலிக்கு அப்பால் தமிழர்களும் மறுபுறம் கட்டுக்கடங்காத சமுத்திரமும் இருக்கும் போது எப்படி வசதியாகப்படுப்பது" என்கிறான். இந்த காட்சியை பிற்கால வரலாற்றாசிரியர்கள் திரிபுபடுத்தி "வடக்கே தமிழரும் தெற்கே சமுத்திரமும்" என்று திரிபு படுத்தி தமிழர்களின் செறிவை…
-
- 0 replies
- 416 views
-
-
மகாவம்சம் : தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகளின் வரலாறு | என்.சரவணன் ஐந்தாம் நூற்றாண்டில் வெளிவந்த முதலாவது மகாவம்சம் கி.மு 483 தொடக்கம் கி.பி 362 வரையான சுமார் 845 ஆண்டுகால இலங்கையின் சரித்திரத்தைக் கூறுகிறது. இவ்வாறு உலகிலேயே தொடர்ச்சியாக தன் வரலாற்றை எழுதிவரும் நாடாக இலங்கை திகழ்கிறது. பாளி மொழியில் மகாவம்சம் முதலில் எழுதப்பட்டது. உலகிலேயே தொடர்ச்சியாக சுமார் 2600 ஆண்டுகால சரித்திரத்தை எழுதிவருகிற ஒரே நாடாக இலங்கை திகழ்கிறது. அதன் மீதான விமர்சனங்கள், சரிபிழைகளுக்கு அப்பால் அது வரலாற்று மூலதாரங்களுக்கு துணை செய்திருக்கிறது என்பது உண்மை. அதன் பின்னர் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் அப்படி ஒரு வரலாற்று புனித நூல் இருப்பதை உலகின் கவனத்துக்கு கொண்டுவந்தார்கள் ஆங்கிலேய அ…
-
- 0 replies
- 137 views
-
-
மட்டக்களப்பில் இன்று ஏழு நூல்கள் வெளியீடு… கிழக்கு மாகாணத்தில் உள்ள எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட ஏழு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இந்த ஏழு நூல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் உள்ள எழுத்தாளர்களின் ஆக்கங்களை வெளியிட முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் அவர்களினால் எழுதப்பட்ட நூல்களை அச்சிட்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டு வைக்க முன்வந்துள்ளது. இதன் அடிப்படையில் ஏழு எழுத்தாளர்களின் ஏழு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பு,களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல…
-
- 0 replies
- 695 views
-
-
இன்று ஒரு புத்தக வெளியீட்டுக்கு நானும் போனேன். மண் மறவா மனிதர்கள் என 17 பேரைப்பற்றி வி.ரி. இளங்கோவன் அவர்கள் குறிப்பிட்டு எழுதி புத்தகமாக வெளியிட்டார். அணிந்துரையை பேராசிரியர் சோ. சந்திரசேகரனும் வாழ்த்துரையை கலாநிதி பண்டிதர் செ. திருநாவுக்கரசுவும் எழுதியிருக்க மேடையில் ஒவ்வொருத்தர் பற்றி ஒவ்வொருத்தர் பேசினர். 1- சர்வதேசரீதியில் புகழ்பெற்ற சண் பற்றி முன்னைநாள் ஈழநாட்டில் வேலைசெய்தவரும் ரிரின் மற்றும் தீபம்தொலைக்காட்சிகளின் செய்தி ஆசிரியருமான கந்தசாமி அவர்களும் 2- டானியல் பற்றி வண்ணை தெய்வம் அவர்களும் 3-பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் பற்றி நடிகர் கோமாளிகள்புகழ் அப்புக்குட்டி அவர்களும் 4- எல்லோருக்கும்இனிய மனிதர் சிவகுருநாதன் பற்றி அவர…
-
- 1 reply
- 1.2k views
-
-
எனது மூன்றாவது சிறுகதைத் தொகுதி தயாராகிறது. அட்டைப்படத்தை வடிவமைத்துத் தந்தவர் மூணா அண்ணா. அவருக்கு நன்றி. நிறம் தான் சிறிது மாறிவிட்டது. என்னுரை பத்து ஆண்டுகளின் முன்னர் என் முதலாவது சிறுகதைத்தொகுதியும் நான்கு ஆண்டுகளின் முன் என் இரண்டாவது சிறுகதைத்தொகுதியும் வெளிவந்தபின் ஐந்து ஆண்டு ஆண்டுகால இடைவெளியில் மூன்றாவது தொகுதி வெளிவருகிறது. பெண்களால் தொடர்ந்து எழுத முடியாதவாறு பல தடைகள் குடும்பச் சூழலில் இருந்தாலும் அதையும் தாண்டி நான் காண்பவற்றை, கேட்பவற்றை எழுதும் ஆற்றல் எனக்குள்ளும் இருக்கின்றது. யாரின் புக…
-
-
- 19 replies
- 1.4k views
- 2 followers
-
-
மயூரனின் கவிதைகள் நல்ல கவிதைகளுக்கான நம்பிக்கை! – ஓர் நூலாய்வு – கனகரவி 47 Views கவிஞர் இணுவையூர் மயூரனின் முதல் படைப்பாக “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்“ கவிதைத் தொகுப்பு படைக்கப்பட்டுள்ளது. இவரின் கவிதைகள் ஈழத்து வாழ்வியலையும் வலிகளையும் பேசுகின்றன. கவிதைகள் மனித மனங்களில் காட்சிகளை உருவாக்கும் சிந்தனையை மேம்படுத்தும் சக்தி மிக்கவையாகவே நான் பார்க்கிறேன். தற்காலத்தில் தமிழ் இலக்கியப் பரப்பில் ஏராளம் கவிதைகள் படைக்கப்படுகின்றன. மரபுக் கவிதைகளாகவும், புதுக்கவிதைகளாகவும் சிலவேளை மரபை விலக்கிவிட இயலாதவையாகவும் கவிதைகளை நாம் காணலாம். தொடர் வாசிப்பில்லாதோர் கவிதைகளை கண்டு கொள்வதில்லை என்பது போல் கவிதைகளைப் படைப்போரும் சிந்தனையைத…
-
- 0 replies
- 1.1k views
-