மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
90:10 என்றொரு அடிப்படைக் கொள்கை 90:10 என்றொரு அடிப்படைக் கொள்கைஇருக்காமே?உங்கள் எல்லாருக்குமே அது தெரியுமோ? சத்தியமா எனக்கு இதுவரைக்கும் தெரியாது. அம்மா சொல்றவா நான் ஒரு அவசரக் குடுக்கையாம்.என்ன செய்யிறதெண்டாலும் எடுத்தேன் கவுத்தேன் என்று செய்து போட்டு பிறகு இருந்து யோசிக்கிறனாம். பதறாத காரியம் சிதறாதாம் என்று சொல்றவா தான் நான் கேட்டால் தானே.அப்பா ஒரு கதை சொன்னா நான் பத்துக் கதை சொல்லுவன் பிறகு வாய்க்கு வாய் காட்டதா என்று அப்பா பளார் என்று ஒன்று போட்டாப் பிறகு மூஞ்சையைத் துÖக்கி வைச்சுச்கொண்டு கொஞ்ச நேரம் திரிவன். சும்மா மாடு சொன்னா கேக்காட்டாலும் மணி கட்டின மாடு சொன்னாக் கேக்கேணும் தானே. ஒரு மணி கட்டின மாடு 90:10 கொள்கை பற்றி எனக்கு சொல்லிச்சுது அதான் நான் …
-
- 19 replies
- 4.4k views
-
-
மறுபேச்சின்றி கீழ்ப்படிதல் - விவேகானந்தர் யாருக்குக் கீழ்ப்படிதல் தெரியுமோ, அவனுக்குத் தலைமை தாங்கவும் தெரியும். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள். இந்த மேலை நாட்டினரிடையே சுதந்திர உணர்ச்சி தீவிரமானதாக இருந்தாலும், கீழ்ப்படிகிற உணர்ச்சியும் அதே அளவுக்குத் தீவிரமாக உள்ளது. நாமெல்லாம் மமதையுள்ளவர்கள். இந்த அகங்காரம் எந்த வேலையையும் நடக்க விடாது. மகத்தான துணிச்சல், வரம்பில்லாத தைரியம், அபாரமான சக்தித் துடி துடிப்பு இவை எல்லாவற்றையும்விட முக்கியமாகப் பரிபூரணக் கீழ்ப்படிதல் இந்தக் குணங்கள் தனி மனிதனையும் தேசத்தையும் மறுமலர்ச்சி நிலைக்கு இட்டுச் செல்கின்றன. இங்கே எல்லோரும் தலைமை தாங்க விரும்புகிறார்கள். கீழ்ப்படிய எவருமில்லை. பெரிய வேலைகளைச் செய்யும்போது…
-
- 15 replies
- 4.4k views
-
-
சமயதின் அடிப்படை நோக்கம்( பகுத்து அறியும் எல்லைக்குட்ட்பட்டதில் இருந்து) மனித உணர்வு, மனிதாபமே பார்க்காத ஒரு காலத்தில், ஆதிமனிதன் விலங்குகள் போல மனிதரையே அடித்துச்சாப்பிட்டு பிழைக்கும் நிலை ஒன்று இருந்தது. அவர்களினை விலங்குகளினை போல அல்லாது அவற்றின் அடிபற்றி வாழ எத்தனிக்கவிடாது, வாழும்போது ஏற்பட்ட அனுபவங்களினை ஒரு சில மனிதர்கள். தமது எல்லைக்குட்பட்ட பகுத்து அறிவினூடு கிரகித்து அதே நேரம் தன்னில் உள்ளே உள்ள ஒரு விசித்திரமான உந்து சக்தியினுடைய ஆளுமைகளின் தொழிற்பாடுகளினால் சில விசையங்களை அறியாமையினால், பகுத்து அறிந்தும், கோட்டை விட்டு உணர்வு பூர்வமாக அறிந்த போது, தமக்கு மேலே என்னுமொரு சக்தி ஒன்று உண்டு என்ற ஒரு கடவுள் கோட்பாட்டுக்கமைவாகவே ஒரு நடைமுறை காலம் காலமாக …
-
- 21 replies
- 4.3k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் தட்சிணாமூர்த்தி "கல்லாலின் புடையமர்ந்து நான்மறைஆறங்க முதற்கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டிச் சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைத்து பவத்தொடக்கை வெல்லாம்" - பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடற் புராணம். சிவபெருமான், யோகம் இசை மற்றும் ஏனைய அறிவியற் கலைகளைக் கற்பிக்கும் திருக்கோலத்தில் ஞானாசிரியனாக - தட்சிணாமூர்த்தி என வழிபடப் பெறுகிறார். தட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு, ஞானம், சாமர்த்தியம் என்ற பொருள் உண்டு. தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். இறைவன் தெற்கு நோக்கி அமர்ந்து…
-
- 3 replies
- 4.3k views
-
-
நான் இணயத்திலிருந்து முன்பே இறக்கியவைகளில் சில தருகிறேன். கோனேரி ராஜபுரம் அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான். பெரியதிருவாசியை தனியே வார்த்தாகி விட்டது. சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது. சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும். மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமான ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது. திரும்பி மனைவி…
-
- 3 replies
- 4.3k views
-
-
தினம் ஒரு மந்திரம்... தை பிறந்ததும் வழி பிறந்தது; ஒளியும் பிறக்கட்டும்! #Manthra தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இதோ தை மாதமும் பிறந்துவிட்டது. வழியும்கூட பிறந்திருக்கும். ஆனால், வழி மட்டும் பிறந்துவிட்டால் போதுமா? பிறந்துள்ள வழியில் செல்ல ஒளியும் பிறக்கவேண்டும் அல்லவா? ஒளி என்றால் வெளிச்சம் என்பது மட்டுமே பொருள் அல்ல; ஒருவரிடம் இல்லாததை எது தருகிறதோ அதுவே ஒளி!வறுமையில் வாடும் ஒருவனுக்கு பொருட்செல்வம் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி;கல்வி அறிவு இல்லாதவனுக்கு அறிவுச் செல்வம் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி; கண்களின் பார்க்கும் திறன் இல்லாதவர்களுக்கு பார்க்கும் திறன் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி. மொத்தத்தில், ஒருவனுக்குத் தேவையான ஒன்று அவனுக்குக் க…
-
- 5 replies
- 4.3k views
-
-
கணேசரும் சிவபெருமானும் ஒருவரே தேவர்களை வருத்திய நஞ்சை அடக்கி இடரை நீக்கிய மகேசுரமூர்த்தியின் திருவருளாகிய திருக்கண்டத்தினின்றும், பிரதம சிருட்டியாரம்பத்தில் அடியார்களுடைய இடரை நீக்குங் காரணமாக, விநாயகக் கடவுள் தோன்றியருளினாரென வாதுளாகமம் கூறுகின்றது, அவர் யானை முகத்தையும், மூன்று திருக்கண்களையும், ஐந்து திருக்கரங்களையும், அவைகளில் தந்தம், பாசம், அங்குசம், பண்ணியமாகிய இவைகளைத் தரித்தவராயும், கிம்புரிப்பூணணிந்த ஒற்றைத்தந்தத்தையும், இச்சா சத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி யென்னும் மும்மதத்தையும், இரண்டு திருவடிகளையும் உடையவராய் இருந்தருளுகின்றனர். கயமுக சம்மாரத்தின் பொருட்டு முரிக்கப்பட்டதாகிய ஒரு கொம்பை ஏந்தியருளியது, மும்மலங்களையும் நீக்கியருளுபவர்தா மென்பதை…
-
- 21 replies
- 4.3k views
-
-
நான் துவக்கிய தலைப்பு தலைப்பிற்குச் சம்பந்தம் அற்ற விடயங்களால் திசை திருப்பட்டு, இப்போது பூட்டப்படுள்ளது. நிர்வாகத்திற்க்கு ஒரு வேண்டு கோள் இவ்வாறு வேண்டுமென்றே திசை திருப்பித் தலைப்பைப் பூட்ட வைப்பது யாழ்க் களத்தில் எந்தவிதமானா ஆரோக்கியமான விவாத்தையும் நடத்தமுடியாமால் செய்துகொண்டு இருக்கிறது.இதனைக் குறிப்பிட்ட சில பேர் வேண்டுமென்றே செய்துகொண்டிருகிறார்கள். நிர்வாகாம் விதிமுறைகளுக்கு அமைவாக மட்டுறுத்தல்களைச் செய்யாது விடின் இங்கே மினக்கெட்டு கட்டுரைகளையோ விவாதங்களையோ நடாத்துவதில் ஒரு பிரயோசனமும் இல்லை.இவர்கள் எல்லாவற்றையுமே நிர்வாகத்திற்கு நகர்த்தும் வண்ணமே செயற்படுவார்கள்.முன்னரும் இப்படி ஒரு வழக்கம் சிலரால் இங்கே கைக் கொள்ளப்பட்டு வந்திருந்தது.இப்போது மீண்டும் துவங்கி இ…
-
- 29 replies
- 4.3k views
-
-
கொஞ்சப் பேர் சொல்லினம் விதியை மதியால் வெல்லலாம் என்று இதை நம்புகிறீர்களா?...நான் சொல்றன் முடியாது என்று இது பற்றிய உங்கள் கருத்து என்ன? அது,அது நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தே தீரும்...அழுது,புலம்பி கடவுளை வேண்டினால் பாவ,புண்ணியத்தை கொஞ்சம் கூட்டி குறைக்கலாம் ...சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருத்தல் என்பதும்,இல்லாமல் தவிர்த்தல் என்பதும் விதியின் விளையாட்டு அல்லவா! நான் கடுமையான நோயின் பிடியில் இருந்து போராடி தப்பித்து விட்டேன் என்பார்கள்...தப்பித்து வரணும் என்பது தான் விதியாக இருந்தால்? ... காதலித்து திருமணம் செய்து நன்றாக வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் தாங்கள் எந்த வித சாதகமும் பார்க்காமல் திருமணம் செய்தோம்.நன்றாய்த் தானே இருக்கிறோம் என்பார்கள் ..அப்படி…
-
- 22 replies
- 4.3k views
-
-
கோயில் சிற்பங்களில் ஆபாச சிலைகள் இருப்பது ஏன்?..!! on: மே 05, 2017 *கோயில் சிற்பங்களில் ஏன் ஆபாச சிலைகள் இருக்கிறது ?* *01. கோவில்களில் உடலுறவுக் காட்சிகளை சித்தரிக்கும் சிலைகள் அமைந்து இருப்பது மிக மிக வியப்பையும் குழப்பத்தையும் தருகிறது. இதன் மூலம் என்ன தெரிவிக்கிறார்கள்?* *02. கோவிலுக்கு வரும் பொழுது அந்த மாதிரி சிற்பங்களைப் பார்த்தால் மனம் அலைபாயும் அல்லவா?* *03. பிறகு எப்பிடி முழு மனமும் தெய்வீகத்தில் ஈடுபடும். ஒரு வேளை காமமும் தெய்வீகம் என்று சொல்கிறார்களா?* *04. ஏதோ ஒரு மிகப் பெரிய மர்மம் இந்தக் காமத்துக்கும் நம்ம தெய்வீக நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கற மாதிரி இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க?* *பல அன்பர்களின் …
-
- 0 replies
- 4.2k views
-
-
வில்வத்தில் அர்ச்சனை... வெண்பொங்கல் பிரசாதம்... நவராத்திரி முதல்நாள் வழிபாடு! #AllAboutNavratri சிவனை வணங்குவதற்கு மிக முக்கியமான நாள் சிவராத்திரி. அதுபோலவே அம்பிகையைப் பூஜிப்பதற்கு மிகவும் உகந்தது நவராத்திரி. சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது இந்த நவராத்திரி விரதம். 'நவ' என்ற சொல்லுக்கு 'ஒன்பது' என்று பொருள். 'ராத்திரி' என்றால் இரவு என்று பொருள். இவ்வாறு ஒன்பது இரவுகளைக் கொண்ட தினங்களையே நாம் 'நவராத்திரி' யாகக் கொண்டாடுகிறோம். பொதுவாக இரவு என்றால் இருள் என்று பொருள். ஒரு குழந்தை, இரவு வந்துவிட்டால் அம்மாவின் அணைப்பைத் தேடும். அதுபோல் இரவுப் பொழுது அதிகமாக இருக்கும் மழைக்காலத்தின் தொடக்கத்தில் நாம…
-
- 8 replies
- 4.2k views
-
-
முருக வழிபாடு சமய வாழ்க்கையில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள் எங்கும் முருகன் எதிலும் முருகன் என்ற நம்பிக்கையுடன் முருக வழிபாட்டில் ஈடுபடுவர். தேவர் குலமும், மனித குலமும் உய்வடைய முருகப் பெருமானின் தோற்றமும், விழுமிய துணையாக அமைந்தது. பண்டைய தமிழ் இலக்கியங்கள் முருகனைக் குறிஞ்சித் திணைக்குரிய தெய்வமாகப் போற்றினாலும் அப் பெருமான் உலகம் முழவதும் நிரம்பியிருக்கிறான். ஆவனது திருவருள் எங்கணும் பரவி அருள் பாலிக்கின்றது. இயற்கையழகுடன் கூடிய இடங்களில் அவனது கோயில்கள் எழுந்துள்ளன. காடு, மலை, சோலை, அரங்கம் எங்கணும் அவனுக்குக் கோயில்கள் உண்டு. அதுவே முருகனது தெய்வீகப் பெருமைக்குச் சான்று. மக்களுக்கு உயித்துணையாக விளங்கும் கடவுள் முருகப்பெருமான்,அம்மை அப்பனோடு எழுந்தருளி அருள் பாலிக்க…
-
- 11 replies
- 4.2k views
-
-
இன்று பல கிறிஸ்தவர்கள் சைவ சமயத்தை பல வேறாக நிந்தனை செய்து வருவதைக் காண்கிறோம். அவர்கள் விபூதி அணிவதையும், உருத்திராக்கம் அணிவதையும் நிந்தனை செய்வர். அவர்களுக்கு தக்க மறுப்பு கொடுத்த புத்தகம் யாழ்ப்பாணத்து ஸ்ரீலஸ்ரீ நா.கதிரைவேற் பிள்ளை எழுதிய "சைவ பூஷண சந்திரிகை" என்னும் புத்தகம். அந்த புத்தகத்தின் ஒரு பகுதி உங்களது பார்வைக்கு கிறிஸ்தவர்கள் "மாட்டுச் சாம்பர் பாவத்தைப் போக்குமா" என்றும், "இலந்தைக் காய்போன்ற உருத்திராக்கக் காய்கள் மோக்ஷத்தைக் கொடுக்குமா" என்றும், உங்கள் ஞானிகளாகிய பட்டினத்தடிகள் முதலாயினோரே "நீற்றைப் புனைந்தென்ன நீராடப்போயென்ன" என்றின்னன போன்ற வாக்கியங்களால் நீறு உருத்திராக்கங்களாற் பிரயோசனமில்லை யென்றுங் கூறியிருக்கின்றனர் என்றும், நம்மவர்…
-
- 15 replies
- 4.2k views
-
-
மாசு , மருவற்ற நம் சம காலத்து மகாத்மா - தான் பதவியில் அமர்ந்ததால் , குடியரசுத் தலைவர் பதவிக்கே பெருமை சேர்த்த Dr . APJ அப்துல் கலாம் அவர்களின், பள்ளிப் பருவத்தில் நடந்ததாக கூறப்படும், ஒரு சுவையான நிகழ்ச்சி. நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில், பெரு மகிழ்ச்சி.. அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ....... அவரது ஆசிரியருடன்... ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா? கலாம்: கண்டிப்பாக ஐயா ஆசிரியர்: கடவுள் நல்லவரா? கலாம்: சந்தேகமேயில்லை ஆசிரியர்: கடவுள் அனைத்து சக்திகளும் பெற்றவரா? கலாம்: ஆமாம…
-
- 2 replies
- 4.1k views
-
-
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் உலகம் ஒரு புத்தகம். பயணமே செய்யாதவர்கள் அதில் ஒரே ஒரு பக்கத்தை மட்டும்தான் படிக்கிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறார் செயின்ட் அகஸ்டின். நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்த கிறிஸ்தவத் துறவி சொன்னது இன்றைக்கு மட்டுமல்ல... என்றென்றைக்கும் பொருந்தக்கூடிய பொன்மொழி. ஆதிகாலத்திலிருந்து மனிதனின் கூடவே நிழல்போல் தொடர்ந்து வருவது யாத்திரை. மனிதன் மட்டும் பயணம் செய்யாமல் ஓரே இடத்தில் இருந்திருந்தால், பல அரிய விஷயங்களைக் கண்டுபிடித்திருக்க மாட்டான். மனித இனம் முன்னேறியிருக்காது; நாகரிகம் அடைந்திருக்காது. யாத்திரை மனிதனுக்கு ஒருவகையில் ஆசிரியர்; நல்லவையோ, கெட்டவையோ பி…
-
- 13 replies
- 4.1k views
-
-
,உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க சைவ வைணவப் பாவைகள் (ஆராய்ச்சி) சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை -------------------------------------------------------------------------------- முன்னுரை சைவ சமயப் பிரமாண நூல்கள் இவையெனக் கண்டு அவற்றைச் சிறிதாவது படித்துணர வேண்டுவது சைவ சமயத்தாரின் முக்கிய கடமையாகும். அந்த எண்ணமில்லாத சைவ சமயிகள் பெருகிவிட்டனர். உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்களிலும் அப்பராமுகச் சைவர் பலருளர். ஆனால் அச்சமயப் பயிற்சி தமக்கிருப்பது போல் அவர் காட்டிக் கொள்வதுண்டு. ஆயினும் தமக்குத் தெரியாத துறையில் பேசாமலிருக்கும் மனவொடுக்கம் அவருக்கு வராது. அவருடைய சமயச் சொல்…
-
- 17 replies
- 4.1k views
-
-
தேங்காய் உடைப்பதன் தத்துவம் கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல். தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது. உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும். இளநீர் அதனால் …
-
- 8 replies
- 4.1k views
-
-
உன்னை எனக்குப் பிடிக்கும் என்னை உனக்குப் பிடிக்கும் நாங்கள் எல்லாருமே தினம் தினம் எத்தின பேரை பார்க்கிறம் பழகிறம் ஆனால் ஒரு சிலரைத்தான் நல்ல நண்பர்களாகவோ காதலன் காதலியாகவோ அல்லது இன்ன பிற உறவுகளாகவோ ஏற்றுக்கொள்ளுறம். ஏன் நாங்கள் சில பேரை மட்டும் நேசிக்கிறோம்? சில பேரை வெறுக்கிறோம்? எங்கட விருப்பு வெறுப்புகளைத் தீர்மானிக்கும் அகக்காரணிகள் புறக்காரணிகள் எவை? முதலாவது காரணம் பரிச்சயம்.ஒரு பொருளாயிருந்தாலும் நபராயிருந்தாலும் ஏற்கனவே பழக்கம் என்றால் கூடுதலான நாட்டம் காட்டுவம்.யாரையும் அடிக்கடி சந்திச்சா அவையிலுள்ள நேசம் மதிப்பு எல்லாம் அதிகமாகும் என்று உளவியல் ஆராய்ச்சியாளர்களான சொல்லினம். பல்கழைக்கழக மாணவர்கள் சிலர் ருசி பற்றிய ஒரு ஆராய்ச்சிக்கு என்று ச…
-
- 13 replies
- 4.1k views
-
-
ஸ்ரீ ஆஞ்சநேயர் பெயர்கள் 1. அப்யந்த் - பயமற்றவன் 2. அக்ஷன்த்ரே - ராவணனின் இளைய மகன் 3. அமித் விக்ரம் - எல்லையற்ற மற்றும் மிகைப்படுத்தக் கூடிய வீரம் 4. ஆஞ்சயா - தோல்வியில்லாதவன், முடிவில்லாதவன் 5. ஆஞ்சநேயா - அஞ்சனையின் மைந்தன் 6. அதுலித் - ஒப்பில்லாதவன் 7. பக்தவத்சல் - பக்தர்களைக் காப்பவன், பக்தர்களை நேசிப்பவன் 8. பவிஷ்ய சதுரனா - எதிர்காலத்தை அறிந்தவன் 9. சதுர் பஜன் - நான்கு கைகள் கொண்டவன் 10. சிரஞ்சீவி - இறப்பில்லாதவன் , ஹனுமான் இறப்பில்லாதவர் என்று அறியப்படுபவர். 11. தீன் பந்தவ் - ஒடுக்கப்பட்டவரின் பாதுகாவலர் மற்றும் காப்பாளர் 12.தீரா - தைரியம் மிக்கவன் 13. தியான் ஆஞ்சநேயா - தியானத்தில் இருப்பவன் 14. கு…
-
- 0 replies
- 4.1k views
-
-
"சமயமும் சமூகமும்" -------------------- சைவ சரபம் மா.பட்டமுத்து நாகரிகம் என்ற பெயரால் பண்பாடற்றசெயல்கள் பலவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வரும் காலமிது. சமயம் மாந்தரின் ஆன்ம லாபத்துக்குதவும் நெறிகளின் தொகுப்பு என்ற எண்ணம் மக்களிடையே மிகவும் குறைந்து வருகிறது. மதம் என்ற சொல்லைக் கேட்டவுடன் இன்றைய அரசியல்வாதிகளும், வாலிபர்களும் தங்கள் வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. இளைஞர் சமூகம் இலெளகிக விஷயங்களில் அதிக நாட்டம் கொண்டுள்ளமையால், கடவுள் பக்தி, மதம், ஆசார அனுஷ்டானங்கள் ஆகியவற்றைப் புறக்கணித்து விட்டது. இந்த இழிநிலைக்குக் காரணம் யாது? விஞ்ஞான படைப்புக்கள் இவ்வுலகை இன்பலோகமாக்கி விடும் என்ற பொய்க் கனவு, மனம் போன போக்கில் மாந்தரைச் செல…
-
- 18 replies
- 4.1k views
-
-
மரணத்தை வெல்லும் வழி ! மரணத்தை வெல்லும் வழி ! மரணத்தை வெல்லுவதற்கு .இந்திரிய ஒழக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம் ,ஆன்ம ஒழக்கம் என்ற நான்கு ஒழுக்கங்களை கடை பிடிக்க வேண்டும் என்று வள்ளலார் சொல்லுகின்றார் . உலகியல் வழியில் செல்லாமல் ,அருளைப் பெறும் இறுதி வழியாகிய , ஞான சரியை ஞான கிரியை ஞான யோகம் ஞானத்தில் ஞானம் என்னும் சுத்த சன்மார்க்க பெறு நெறியாகிய தனிநெறியைக் கடைபிடித்து பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும் என்கின்றார் . முன்பு ஞான சரியை ,ஞான கிரியை ,ஞான யோகம் .என்றால் என்ன ? என்பதைப் பார்த்தோம் .இப்போது "ஞானத்தில ஞானம்" என்றால் என்ன என்பதைப் பார்ப்போம் . ஞானத்தில் ஞானம் என்பது ஆன்ம ஒழுக…
-
- 3 replies
- 4.1k views
-
-
[size=5]02 செல்லப்பா சுவாமிகள் .[/size] http://inuvilkovil.w...690/1690831.jpg ஈழத்துச் சித்தர்கள் பாகம் ஒன்றைப் பார்க்க இங்கே அழுத்துங்கள் http://www.yarl.com/...howtopic=105328 செந்தமிழும் சைவநெறியும் வளர்த்த யாழ்ப்பாணத்தின் தலைநகராய் விளங்கியது நல்லூர். நல்லூர்க்கந்தன் இருந்து அருள் பாலிக்கும் இவ்வூரில் நல்லூர் தேரடிக்கு தென்புறத்தே வயல்நிலங்கள் பல இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த வல்லிபுரம் என்னும் வேளாளர் நல்லூரைச்சேர்ந்த பொன்னம்மா என்பாரை மணந்து இங்கே வேளாண்மை செய்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமாக நான்கு பிள்ளைகள். ஆண்களில் ஒருவரின் பெயர் செல்லப்பா. செல்லப்…
-
- 0 replies
- 4k views
-
-
பின்நவீனத்துவம் முதல் ‘பின்நவீனத்துவம் மீதான மார்க்சிய விமர்சனம்’ வரை : யமுனா ராஜேந்திரன் ≡ Category: யமுனா ராஜேந்திரன், கட்டுரைகள்/ஆய்வுகள் | ≅ 1 முக்கியமில்லாத வகையிலான ஒரு முன்குறிப்பு : “தத்துவ விளக்கும் ‘இல்லாததால்’ தான் ‘அவர்கள்’ கோபத்துடன் எழுதுகிறார்கள்” எனச் சொல்லும் சி ராஜேஸ்குமார் என்கிற ராகவனுக்கான ‘சிறப்பு’ அழைப்பு இது. நான் பேசுகிற விடயங்கள் குறித்து அவரது ‘தத்துவ விளக்கத்தினை’ முன் வைக்குமாறு நான் அவரை, ‘கோபத்துடன்’ அல்ல ‘பணிவுடன்’ கேட்டுக் கொள்கிறேன். மார்க்சியம் - பெண்ணிலைவாதம் - தலித்தியம் என்றெல்லாம் தத்துவப் பின்னணியுடன் பேசப் புறப்பட்டிருக்கும் எனது அன்புக்கும் ‘ப்ரியத்திற்கும்’ உரிய நிர்மலா ராஜசிங்கத்தையும் இவ்விவாதத்தில் பங்கேற…
-
- 1 reply
- 4k views
-
-
டார்வினிசம் என்பது அனைத்து விதமான மூடநம்பிக்கைகளையும் உள்ளடக்கிய பண்டைய ஷாமன மதம். ஷாமன மதம் 50,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. ஷாமன மதம் மழை, புயல், மின்னல், காற்று, மற்றும் சூரியன் போன்ற இயற்கை சக்திகளை வழிப்படும் முறையை கொண்டது. டார்வினிசம் என்பதும் இயற்கையை வழிப்படும் ஒருவகை மதம். அது இயற்கையை அற்புதமான சக்திகளை கொண்டது என்று வர்ணிக்கிறது. அது கல், பூமி, சூரியன், மின்னல் மற்றும் காற்று ஆகியவை இணைந்து உயிரினங்களை உருவாக்கியது என்று நம்புகிறது. ஷாமனர்கள் அவர்களது சமுதாயத்தில் தங்களை மருத்தவர்கள், முனிவர்கள், தலைவர்கள், ஆட்சியாளர்களாக இணங்காட்டி கொண்டனர். அதை போன்று டார்வினிஸ்டுகளும் தங்களை அதே முறையில் அறிமுகப்படுத்துகின்றனர். ஷமனர்கள் தங்களுக்குதான் இயற்கையின் இ…
-
- 13 replies
- 4k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் பாலபாடம் நான்காம் புத்தகம் முதற்பிரிவு ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்கள் கடவுள் உலகமாவது சித்தும் அசித்துமென இருவகைப்படும் பிரபஞ்சமாம். சித்து அறிவுடைய பொருள். அசித்து அறிவில்லாத பொருள். அசித்தொன்றாலும், சடமொன்றாலும், பொருந்தும். உலகம் தோன்றி நின்று அழியுங் காரியமாய் உள்ளது. ஆதலினால், உலகத்தைப் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று தொழில்களையுஞ் செய்தற்கு ஒரு கடவுள் இருக்கின்றார் என்பது, நன்றாக நிச்சயிக்கப்படும். கடவுள் என்றும் உள்ளவர், அவருக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை. அவர் எங்கும் நிறைந்தவர், அவர் இல்லாத இடம் இல்லை. அவர் எல்லாம் அறிபவர், அவர் அறிய…
-
- 13 replies
- 4k views
-