மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது.இதில் ஒருவர் பெரியவர் இன்னொருவர் சிறியவர் என்ற பாகுபாடு இல்லை.ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு.ஒருவரிடம் உள்ள திறமை மற்றொருவரிடம் இருக்காது. ஆனால் சிலர், "நான் அவன் போல் இல்லையே..! இவன் போல் இல்லையே...!!" என்று பொறாமைப் படுகின்றனர். "நான் அவனைப் போன்று அறிவாளியாக இல்லையே!" என்று தங்கள் மீதே ஒரு தன்னம்பிக்கை அற்ற ஒருவர்களாக உள்ளனர். எலி ஒன்று, ஒரு பெரிய மரத்தின் அடியில் உள்ள வலையில் வாழ்ந்து வந்தது. அதற்கு அந்த மரத்தை மிகவும் பிடிக்கும்.ஏனென்றால், அது எண்ணற்ற உயிர்களுக்கு அடைக்கலம் தருகிறது.அந்த மரத்தை அதில் உள்ள பறவைகள் தினமும் வாழ்த்திச் சென்றன. இதையெல்லாம் பார்த்த அதற்கு, “நாம் இதைப் போன்று ஒரு மரமாக இ…
-
- 7 replies
- 1.3k views
-
-
மாதவச் சிவஞான சுவாமிகள் http://www.mediafire.com/?uriloxzpq76s2lr
-
- 1 reply
- 1k views
-
-
விதி என்பதும் சதி என்பதும் ஒன்றே !!! விதி இறைவனால் மனிதனுக்கு கொடுக்கபடுவது சதி மனிதனால் மனிதனுக்கு கொடுக்கப்படுவது நீ .......இரண்டையும் எதிர் கொள்.......! விதி என்று எதையும் விட்டு வைக்காதே...!
-
- 34 replies
- 3.1k views
-
-
குங்குமத்தால் உண்டாகும் பயன்கள் குண்டலினி ஆற்றல் புருவங்களின் மத்தியில் உள்ளது. உடலில் உள்ள ஆற்றலைத் தக்கவைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. குங்குமப் பொட்டு நெற்றியைக் குளிர்வித்து நம்மை பாதுகாக்க வேண்டியும் மற்றும் ஆற்றல் இழப்பையும் தடுக்கிறது. சில நேரங்களில் முழு நெற்றியும் சந்தனம் அல்லது (விபூதி)பஸ்மத்தால் மூடப்பட்டிருக்கும். அக்குப்ரஷர் பாயிண்ட்-டான நெற்றி வகிடு மற்றும் புருவ மத்தியை மனஅழுத்தம் அதிகமாக இருக்கும் போது ஆட்காட்டி விரலால் அழுத்தித் தொடும் போது மனச்சோர்வு குறைகிறது. குங்குமம் பொதுவாக மஞ்சள், படிகாரம், கறையம் (அயோடின்), கற்பூரம், முதலியன கலந்து செய்யப்படுகிறது. இதில் கஸ்தூரி திரவியமும் சந்தனமும் கலந்தும் செய்து கொள்ளல…
-
- 0 replies
- 3.9k views
-
-
வரிசைப் படுத்தி எண்களைக் கணக்கிட்டால் 5 சிறியது 6 பெரியது. ஆனால் இங்கே ஐந்து பெரிதென்றும் ஆறு சிறிதென்றும் குறிப்பிடுவதற்குக் காரணம் ஆறறிவு உயிரான மனிதர்களை விட ஐயறிவுயிர்களான விலங்குகளும் பறவைகளும் பண்பில், பழகும் தன்மையில், பாசம் காட்டுவதில், தொலைநோக்குச் சிந்தனையில் மனிதனைக் காட்டிலும் உன்னதமானதாக விளங்குகின்றன. நுகர்வுக் கலாசாரத்தின் நுகர்தன்மையில் பூட்டப்பட்ட மனிதன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தன் இயல்பை இழந்து இருப்பைத் தொலைத்து மீண்டும் அவன் பழைய கற்காலத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறான். காலம் எத்தனை கோலம் போட்டாலும் ஐயறிவுயிர்கள் தத்தம் இயல்பை இழந்துவிடாமல் தங்களைத் தற்காத்துக் கொள்கின்றன. இதை சம கால மனிதனுக்கு உணர்த்தத்தான் விருதுகள் பல பெற்று தமிழுக்…
-
- 4 replies
- 984 views
-
-
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்: பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை ந…
-
- 22 replies
- 5k views
-
-
காற்றில் மிதந்து வருகின்ற புத்தரின் கருணை மனதை நிறைக்கட்டும் அமைதி நிலவட்டும் !
-
- 0 replies
- 693 views
-
-
வணக்கம் கள உறவுகளே!! ஒரு குறுந்தொடர் ஊடாக உங்களை சந்திக்கின்றேன் . நான் படித்த , கேட்ட சிறு நீதிக்கதைகளை இத்தொடர் ஊடாக உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் . வழமை போலவே உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன் . நேசமுடன் கோமகன் ***************************************************************** அதிசயம் பான்கெய் என்ற ஜென் மாஸ்டர். தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு பூசாரி வந்தார். உள்ளூர்க் கோவிலில் வழிபாடு நடத்துகிறவர் அவர். புத்தர்மீதோ ஜென்மீதோ அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே, அவர் புத்தரை இழிவுபடுத்திப் பேசினார். ‘ஜென் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ என்றார். பான்கெய் அவரைக் கண்டிக்கவோ மறுக்கவோ இல்லை. ‘ஐயா, உங…
-
- 208 replies
- 21.7k views
-
-
மார்கழி குளிரில் அதிகாலை எழும்பி குளித்துவிட்டு ஊர் பெரிசுகள் இளசுகளுடன் திரும்பாவை பாடாத யாரும் இந்த களத்தில் இருக்கமாட்டார்கள், அந்த நேரம் காதலிகளை காண்பதற்கு எத்தனை விதமா செயற்பாட்டிருப்போம், அது ஒரு பெற்காலம், ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் அருளிய திருவெம்பாவை பாடல்கள்: ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே, விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே ஈதேஎம் தோழி பரிசுஏலோர் எம்பாவாய் !!…
-
- 9 replies
- 3.5k views
-
-
பீட்டர் புரூக் என்பவரால், படமாக்கப் பட்ட 'மகாபாரதம்' படத்திலிருந்து, கீதோபதேசம் பகுதி பற்றிய இணைப்பு! தேர்களும், மணி முடிகளும் இல்லாமல், வெறுமனே மனிதர்களாகவும், சாதாரண போர்வீரர்களாகவும் தான் பாத்திரங்கள் வருகின்றன. தனியே கீதையின் சாராம்சத்தை மட்டுமே, கவனியுங்கள்!
-
- 2 replies
- 1.1k views
-
-
ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன், அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையைக் கொடுத்தான். "நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ, அப்போதெல்லாம் ஒரு ஆணியை எடுத்து இந்த சுவற்றில் அடிக்கவும்" என்றான். இளைஞனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 ஆணிகள் என படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமைப் பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன், அவனிடம் அடித்த ஆணிகளை மறுபடியும் பிடுங்கச் சொன்னான். இளைஞனும் அப்படியே செய்தான். அதைப் பார்த்த அவன் நண்பன், அவனிடம் சொன்னான். …
-
- 3 replies
- 1.1k views
-
-
அறை வாங்கினேன் மறு கன்னத்திலும் ஏசுவே இனி என்ன செய்ய??????? (காசி ஆனந்தன் நறுக்குகள்) விசுகு அண்ணா ஏசுநாதர் ""ஒருகன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு என்று கூறியது"" ......ஒருவர் அடிக்கும் போது மறு கன்னத்தை காட்டு என்று இயேசுவை சிலுவையில் அறைந்த மனித இனம் மேலோட்டமாய் புரிந்து கொண்டு பைபிளை கற்பிப்பதால் தான் இவ்வளவு பிரச்னையும் ..................உண்மையில் அவர் கூறிய கருத்தின் ஆழத்தை பார்த்தால் இன்னொருவன் உனக்கு தீங்கு செய்யும்போது அவனுக்கு நீ செய்தது தீங்கு என்று உணர்த்தி அவனை நல்வழியில் நடாத்தி அவனுடன் சமாதானம் செய் என்பதாகும் ..................அவனை பழி வாங்காதே என்னும் அர்த்தத்தையே கூறி நிற்கிறது ................இதையே நான் படித்தேன் .......ஆனால்…
-
- 2 replies
- 963 views
-
-
அன்பு வணக்கம், நேற்றிரவு மூன்று விடயங்கள் பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை கருத்துக்களத்தில் வினவலாம் என்று நினைத்தேன். அம்மூன்றில் இன்றுகாலை ஒன்று மறந்துவிட்டது. நினைவில் வராதுபோனதற்கு மாற்றீடாய் ஒன்றையும் சேர்த்து மூன்றுவிடயங்களை இங்கு இணைக்கின்றேன். இதுபற்றிய உங்கள் கருத்தைக்கூறுங்கள். எனக்கு வேறு எவரினுடையதாவது கட்டுரை இணைப்புக்களோ, பொன்மொழிகளோ தேவையில்லை. உங்கள் வாழ்வியலின் உண்மையான அணுகுமுறைகளை மாத்திரம் இவ்விடயங்கள் சம்மந்தமாக அறிந்துகொள்ளவிரும்புகின்றேன். விடயம் ஒன்று: உங்களுக்கு ஒருவர் உதவி செய்கின்றார் என வைப்போம். உதவிசெய்தவர் உதவிபெற்றவரிடம் தான் முன்பு செய்த உதவியை நினைவுபடுத்தி அல்லது அடிக்கடி குத்திக்காட்டி "தற்போது ஏதும் தவறு இழைக்கும்போது அல்லது தற்போது…
-
- 12 replies
- 1.5k views
- 1 follower
-
-
பொன்மொழிகள் இணைக்கிறேன், நீங்களும் இணையுங்கள்.... நன்றிகள் - http://www.nithus.ch/Ponmoli.htm பத்துவயதில் பெண் தேவகன்னியாக இருப்பால் பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போல இருப்பாள் நாற்பதில் சைத்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள் பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும் அவள் காதல் கொண்ட சமயம்,தலை நரைக்கத் தொடங்கும் சமயம் ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள் பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள் நாக்கு தான் பெண்ணிற்கு வாள்,அது ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான் மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,ஆனால் நீ எப்போதும் தனித்திரு உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெ…
-
- 23 replies
- 37.5k views
-
-
[size=3]தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது.[/size] [size=3]எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம்.[/size] [size=3] நமக்கு சௌகரியமான முறையில். அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம். தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம். வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள். இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள். கண்களை மேதுவாக மூடுங்கள். அமைதியாக சகஜ நிலைக்கு வா…
-
- 3 replies
- 4.9k views
-
-
உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி(Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றால் உற்பத்தி செய்யப்படும் தே…
-
- 9 replies
- 3.5k views
-
-
[size=2] [size=1]19.12.12 [/size]திருவெண்பாவை[size=1] ஆரம்பம் புதன்;மாலை 23.12.12 சுவர்க்கவாசல்ஏகாதேசி [/size]...[size=1] 28.12.12 [/size]திருவெண்பாவை[size=1] பூர்த்தி வெள்ளி;மாலை மாதசதுர்த்தி [/size]...[/size][size=2] [/size][size=2] [size=3]மார்கழி மாதத்தில் இந்துக்களால் சிவனை நினைத்து திருவெண்பாவை விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. திருவெண்பாவை விரதம் அனுஷ்டிக்கப்படுகின்ற பத்து நாட்களிலும் கோவில்களில் அதிகாலை வேளையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறும். அத்துடன், மார்கழி மாதம் பீடை நிறைந்த மாதமாக கருதப்படுவதால் திருவெண்பாவை விரத நாட்களில் வைகறையில் துயிலெழுந்து நீராடி இறைவனை தரிசித்த பின் திருவெண்பாவைப் பாடல்களை இசைத்தவாறு ஊர்கள் தோறும் சென்று பள்ளியெழுப்புவத…
-
- 0 replies
- 5.6k views
-
-
[size=3]ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்.[/size] [size=3]"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்[/size] [size=3]அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி[/size] [size=3]ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்[/size] [size=3]நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன[/size] [size=3]இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய[/size] [size=3]சிறியவாகப் பெரியோன் தெரியின்"[/size] [size=3]விளக்கம்:[/size] [size=3] பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எ…
-
- 3 replies
- 946 views
-
-
108 ன் மகிமை. பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு. சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தைப் போல் 108 மடங்கு, பூமிக்கும் சூரியனுக்கும் இடைய உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு. வேதத்தில் 108 உபநிடதங்கள், நடராஜரின் கரணங்கள் (Postures) 108, தாளங்கள் 108, அர்ச்சனையில் 108 நாமங்கள். அரசமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை. பஞ்ச பூதத்தலங்கள் அறுபடை வீடுகள் என்பதுபோல் சைவ, வைணவ திவ்ய க்ஷேத்திரங்கள் 108. தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள். திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108. ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வ…
-
- 2 replies
- 1.1k views
-
-
[size=3]“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்[/size] [size=3]தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..”[/size] [size=3] என்பது திருமூலரின் பெருமிதம் மிகுந்த பிரகடனம். சித்தர்கள் என்றால், ஏதோ மருத்துவத்தையும் ஆன்மீகத்தையும் மட்டுமே ஆய்ந்தும் தெளிந்தும் உலகுக்கு அளித்தவர்கள் என்ற கருத்துதான் பரவலாக இருந்து வருகிறது. முற்றிலும் தவறான பதிவு என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். மொழி இல்லாமல் எது நிலைக்கும்? தமிழின் முதல் இலக்கண நூலைத் தந்தவரே அகத்தியர்தான் என்பதை ஆன்றோரும் சான்றோரும் ஆணித் தரமாக சொல்லுகிறார்கள். ஞானமும் தமிழும் இணைந்த போதுதான் சித்தர்களின் தத்துவம் செழுமை பெற்றது. மொழியை இழந்த சமூகம் வரலாற்றையும் இழந்துவிடும். மொழி என்ற வேர்கள் இல்லாமல் சமூகவிருட்சம் தழைக்கவோ,…
-
- 6 replies
- 1.1k views
-
-
தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில் ஈழத் திருநாட்டின் புனிதம் மிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் தென்னாவரம் தொண்டீஸ்வரம் சிவன் திருக்கோயிலும் ஒன்று. (இன்று காலத்தின் கோலத்தாலும், பிற சமய விரோதிகளின் சதியாலும் இத் திருக்கோயில் உருமாறி, பெயர் மாறி, உருத்தெரியாமல் ஆகியிருந்தாலும், இத் திருக்கோயிலைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஈழத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும். காலத்தால் முற்பட்ட இந்த அழகுத் திருக்கோயில் இன்று அழிந்துவிட்டாலும், இதனைப் பற்றி அறிந்து வைத்திருந்தால், ஏனைய ஈழத்து இந்துத் திருக்கோயில்களும் இதே நிலையை அடைந்து விடாமல் விழிப்புடன் பாதுகாத்துக்கொள்ள இயலும் என்பதே உண்மை.) தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில், ஈழத் திருநாட்டின் ஏனைய நான்க…
-
- 9 replies
- 1.9k views
-
-
மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள் 1. சிறந்த வழி நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழி - ஸ்ரீ அன்னை 2. பெருந்தன்மையே முதல் படி 1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!. 2) நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!. 3) இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும். 4) தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும். - சீனப் பழமொழி 3. பயப்படாதீர்கள் நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல…
-
- 10 replies
- 12.9k views
-
-
[size=3]21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்[/size] [size=3]விஞ்ஞான நோக்கம்:[/size] [size=3]ஜெனிவா ஃப்ரான்ஸ் எல்லைப்பகுதியில் 27 கி.மீ சுற்றளவில் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ற துகள் முடக்கி சோதனைச்சாலை அமைந்துள்ளது. இதில் அணுவின் அடிப்படை துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) கட்டமைக்கும் “பரமாணு அதாவது கடவுள் துகள் (Higgs boson)” எது? என்ற சோதனை நடந்து வருகின்றது.[/size] [size=3]செயல்படும் முறை:[/size] [size=3]லார்ஜ்[/size][size=3] ஹாட்ரான் கொலைடரில் அணுவின் அடிப்படைத்துகளான ப்ரோட்டான்களை (நேர்மங்களை) கிட்டதட்ட ஒளியின் வேகத்தில் (வினாடிக்கு 300000கி.மீ) ஒன்றோடொன்று மோதவிட்டு, பிறகு வெளிப்படும் துகள்க…
-
- 4 replies
- 2.7k views
-
-
[size=3]அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.[/size] [size=3]வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த [/size][size=3] அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார். வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இ…
-
- 3 replies
- 1k views
-
-
பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நீண்ட போராட்டத்தின் பின் ஒரு மானை வேட்டையாடி இறையை துண்டிக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்டது. இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய சிங்கம் உடனே தாயின் வயிற்றிலிருந்து வெளியேறிய குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டது. இறுதியில் நீண்ட நேர முயற்சி பலனளிக்காது குட்டி இறக்க நேரிட்டது. இதைத் தாங்க முடியாத சிங்கமும் கீழே சாய்ந்து கொண்டது. சிறிது நேரத்தின் பின் இந்த நிகழ்வை முழுவதுமாக படம் பிடித்துக்கொண்டிருந்தவர் அருகில் சென்று பார்த்த போது சிங்கம் இறந்து கிடந்தது.. மனிதர்களிடம் தொலைந்து போன கருணை... குட்டி ஆடு தப்பிவந்தா குள்ள நரிக்குச் சொந்தம்; குள்ளநரி தப்பி வந்தா கொறவனுக்குச் சொந்தம்…
-
- 6 replies
- 4.9k views
-