மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
அடியார்களின் புகழ் பாடும், கிருபானந்த வாரியார் சுவாமிகள்.
-
- 0 replies
- 960 views
-
-
இந்துகளின் முக்கிய விரதங்களின் ஒன்றான ஆடி அமாவாசை விரதம் இன்றாகும். தந்தையை இழந்தவர்கள் பிதிர் கடன் செய்யும் புனித ஆடி அமாவாசை தினமாக ஆடி அமாவாசை விளங்குகிறது. பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்கம் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இன்று இலங்கையில் முக்கியமாக வடக்கு கிழக்கில் உள்ள ஆலயங்களில் ஆடி அமாவாசை விசேட பூசைகள் நடைபெறுகின்றன. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் , மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் கோவில், திருக்கோவில் முருகன் கோவல் ஆகியவற்றில் இன்று தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் இன்று மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆகிய ஆலயங…
-
- 3 replies
- 960 views
-
-
கிறிஸ்துமஸ் சிறப்புக் கட்டுரை: திண்டாடினாலும் கொண்டாடுவோம் ‘இந்த விழா ஆண்டுக்கு ஒருமுறை தானே வருகிறது. இரண்டு, மூன்று முறை வரக் கூடாதா?’ என்ற ஏக்கம் எதிரொலிக்கும் பிரபலமான ஆங்கில வாசகம் ஒன்று இருக்கிறது. ‘கிறிஸ்மஸ் கம்ஸ், பட் ஒன்ஸ் எ இயர்’. ஆமாம், கிறிஸ்துமஸ் பண்டிகை ஓர் ஆண்டில் ஒருமுறைதான் வருகிறது. உலகெங்கும் உள்ள 240 கோடிக் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, மற்ற சமயங்களைச் சார்ந்த மக்களும் இணைந்து மகிழ்ந்து கொண்டாடும் பெருவிழா கிறிஸ்துமஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா. மேலை நாடுகளில் வாழாவிட்டாலும் இந்த விழாக் காலத்தின்போது, அங்கிருந்தவர்களுக்கு இந்த விழாவைச் சார்ந்த கொண்டாட்டங்களும், அவை உருவாக்கும் களிப்பும…
-
- 0 replies
- 959 views
-
-
சுப்பிரமணிய விரதம் 1. சுப்பிரமணிய விரதம் எத்தனை? சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், கந்தசட்டி விரதம் என மூன்றாம். 2. சுக்கிரவார விரதமாவது யாது? ஐப்பசி மாசத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிர வாரந்தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் இரவிலே பழம் முதலியன உட்கொள்ளக் கடவர். அதுவுங் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே போசனம் பண்ணக் கடவர். இவ்விரதம் மூன்று வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும். 3. கார்த்திகை விரதமாவது யாது? கார்த்திகை மாசத்துக் கார்த்திகை நக்ஷத்திரம் முதலாகத் தொடங்கிக் கார்த்திகை நக்ஷத்திரந் தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமா…
-
- 0 replies
- 959 views
-
-
இலங்கை உபன்யாசம் அய்ரோப்பா, ஆப்பிரிக்கா, ரஷ்யா முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, இலங்கை வழியாக இந்தியாவுக்குத் திரும்புகையில், 1932ஆம் வருடம் அக்டோபர் 17ஆம் தேதி கொழும்பு வந்திறங்கிய தந்தை பெரியார் அவர்களுக்கு இலங்கையில் கொழும்பு, கண்டி, நாவல்பட்டி, ஹட்டன், யாழ்ப்பாணம், பருத்தித் துறை முதலிய இடங்களிலும், இந்தியாவில் தூத்துக்குடி, மதுரை முதலாகிய இடங்களிலும் பல நிறுவனங்களின் பேரால் அளித்த பல வரவேற்பு நிகழ்ச்சிகளிலும், பொதுக் கூட்டங்களிலும் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரைகளிலிருந்து கடவுள் பற்றி திரட்டியது, (குடிஅரசு, 20.11.1932). தோழர்களே! கடவுள், மதம், ஜாதியம், தேசியம், தேசாபிமானம் என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக தானாகவே ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்…
-
- 0 replies
- 958 views
-
-
அழகு தெய்வம் முருகனின் நல்லூர் ஆலய வரலாறு...! அழகுத் தெய்வம் முருகனுக்கு கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் எண்ணுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. யாழ்ப்பாணத்திலும் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் யாழ்ப்பாணம் நல்லூரில் கோயில் கொண்டுள்ள நல்லைக்குமரன் ஆலயம் ஆகும். நல்லூர், இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழர்களின் இராசதானியாகவும், 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டு முற்பகுதிவரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாகவும் நல்லூர் விளங்கியது. யாழ்ப்பாண அரசிற்கு சிறப்புச் சேர்த்துள்ள நல்லூர், யாழ் நகரில் இருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்ச…
-
- 0 replies
- 957 views
-
-
சூரிய பகவான் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் நேரத்தில்தான் தமிழ்மாதம் பிறக்கிறது. இதை வடமொழியில் சங்கராந்தி என்பர். தை மாதப் பிறப்பு மகர சங்கராந்தி எனக் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு மாத சங்கராந்தியும் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்பட்டு, அன்று செய்ய வேண்டிய பூஜைகள், தானங்கள் பற்றி முன்னோர்கள் ஒரு நெறிமுறையை வகுத்துள்ளனர். தான்ய சங்கராந்தி: சூரியன் மேஷராசியில் நுழையும் சித்திரை மாதத்தின் முதல் நாள், தான்ய சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. அன்று சூரியபகவானை பூஜித்து தானிய வகைகளை தானம் செய்தால் ஆயிரம் யாகங்கள் செய்த பலன்கள் கிட்டும். தாம்பூல சங்கராந்தி: வைகாசி, ரிஷபராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம். இம்மாதப் பிறப்பு, தாம்பூல சங்கராந்தி எனப்படுகிறது. அன்…
-
- 1 reply
- 956 views
-
-
படத்தில் இருப்பவர் கோபிநாதன். மறைந்த ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் பள்ளித் தோழர். இந்தியாவில் 37வது தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் தந்தை என்ற பெருமைக்குரியவர். கே.ஆர்.நாராயணனை போல் உழைத்து தன் மகன்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று அறிவுரை கூறி வந்தார். கேரளாவில், "புலயன்' என்ற பின்தங்கிய ஜாதி, பிற்காலத்தில், "சேரமர்' என்று அரசாங்கத்தால் மாற்றப்பட்டது. பொதுச் சாலைகளில் இவர்களால் நடமாட முடியாத நிலைமை இருந்தது. இந்த இனத்தில் பிறந்தவர் தான் கே.ஜி.பாலகிருஷ்ணன். இதை எதிர்த்து போராடினார் திருவனந்தபுரம் வெங்ஙானூரைச் சேர்ந்த அய்யங்காளி என்ற இளைஞர். படிப்பு அறிவே இல்லாத இவர், உயர் ஜாதியினரை எதிர்த்து, சினிமா பாணியில் அடிதடியில் இறங்கினார். "அய்யங்காளியின்…
-
- 0 replies
- 952 views
-
-
கேவலமான வட்டி தொழில்,கொடுமை பற்றி இஸ்லாம் http://www.youtube.com/watch?v=xokkPGbwN0s&feature=player_embedded
-
- 0 replies
- 949 views
-
-
மலேஷியா பத்துமலை முருகன் கோயில்! உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை ( 140 அடி ) மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் பத்துமலை என்ற இடத்தில் உள்ளது. திருவாரூரைச் சேர்ந்த சிற்பி தியாகராசன் மற்றும் 14 உதவியாளர்களுடன் 3 ஆண்டு கடின உழைப்பில் உருவானது இந்த முருகன் சிலை. மலேஷியாவின் கின்னஸ் புத்தகத்தில் இச்சிலைப் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 29-1-2006ம் ஆண்டு சிலை திறப்பு நடைபெற்றது. தரையில் இருந்து 400 அடி உயரத்தில் குகையில் அமைந்திருக்கும் முருகனை தரிசிக்க 272 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். குகையில் வேலாயுதம் கோயிலும் அலுவலகமும் உள்ளது. கோயில் வரல…
-
- 2 replies
- 947 views
-
-
[size=3]ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்.[/size] [size=3]"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்[/size] [size=3]அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி[/size] [size=3]ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்[/size] [size=3]நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன[/size] [size=3]இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய[/size] [size=3]சிறியவாகப் பெரியோன் தெரியின்"[/size] [size=3]விளக்கம்:[/size] [size=3] பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எ…
-
- 3 replies
- 946 views
-
-
வாழ்க்கையில் முன்னேற ஏழு வழிகள் நன்மை தரும் 7 விடயங்கள் 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி 4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம் 5) துன்பத்திலும் துணிவு 6) செலவத்திலும் எளிமை 7) பதவியிலும் பணிவு வழிகாட்டும் 7 விடயங்கள் 1) சிந்தித்து பேசவேண்டும் 2) உண்மையே பேசவேண்டும் 3) அன்பாக பேசவேண்டும். 4) மெதுவாக பேசவேண்டும் 5) சமயம் அறிந்து பேசவேண்டும் 6) இனிமையாக பேசவேண்டும் 7) பேசாதிருக்க பழக வேண்டும் நல்வாழ்வுக்கான 7 விடயங்கள் 1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள் 2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள் 3) பிறருக்கு உதவுங்கள் 4) யாரையும் வெறுக்காதீர்கள் 5) சுறுசுறுப்பாக இருங்கள் …
-
- 0 replies
- 946 views
-
-
மறைதல் திபெத்திய பௌத்த எமன் நான் சொல்லப் போவது ஒரு பிரபலமான கருத்தாக இருக்கப் போவதில்லை எனத் தெரியும். ஆனால் இவ்விசயத்தில் இது தான் என் பார்வை. ஒருவர் காலமாவது அத்தனை கொடூரமான விசயம் இல்லை. எங்கிருந்தோ, சில ‘சார்புநிலைகளால்’ ஆன சூழல்களால் பூமியில் தோன்றியவர் அதே போல போய் விட்டார். காலமின்மையில் இருந்து வந்தவர் காலமின்மைக்குள்ளே போய் விட்டார் என்றே புரிந்து கொள்கிறேன். வாழும் போதும் நாம் அந்த காலமின்மையை உணர தத்தளித்தபடியே இருக்கிறோம், நீருக்குள் மீன் காற்றுக்காக தன் செவுள்களைத் திறந்து திறந்து மூடுவதைப் போல. காலமானவர் நாம் அனுதினமும், ஒவ்வொரு நொடியும் திறந்து திறந்து பார்க்…
-
- 0 replies
- 945 views
- 1 follower
-
-
கடவுள்மறுப்புக்கொள்கை எதோ இன்று தோன்றியது அல்ல. கடவுள்மறுப்புக்கொள்கைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனிதர்களால் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கடந்தநூற்றாண்டில் அம்பேத்கார், பெரியார் போன்றோர்கள் இந்தியாவில் கடவுள்மறுப்புகொள்கைகளை பெரிதும் உறுதிபடுத்தினர். மார்க்ஸிய தத்துவமும் கம்யுனிசமும் கடவுள்மறுப்புகொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. டார்வினின் பரிணாம வளர்ச்சித்தத்துவம் கடவுள்மறுப்பை மேலும் உறுதிபடுத்தியது. புத்தர் மற்றும் சக்கிரடிஸ்-ன் தத்துவங்கள் கடவுள் மற்றும் கடவுள் சார்ந்த சாத்திரங்களை எதிர்த்தன. பொதுவாக, கடவுள்மறுப்பும் பகுத்தறிவும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை. ஆனால் பகுத்தறிவு முழுமையாக செயல்படாவிட்டால், கடவுள்மறுப்பு நிச்சயமாக நீர்த்த…
-
- 0 replies
- 942 views
-
-
இலங்கை சரித்திர பிரசித்தி பெற்ற வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் இன்று காலை 9.15 மணியளவில் தேரில் எழுந்தருளியுள்ளார். கடந்த மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆழ்வாரின் பெருந்திருவிழாவில் இன்று காலை 8 மணியளவில் வசந்தமண்டப பூஜைகள் இடம்பெற்று தொடர்ந்து ஆழ்வார் தேரேறி பக்தர்களிற்கு அருள் பாலித்துள்ளார். தொடர்ந்து நாளை 8 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறும் சமுத்திர தீர்த்த திருவிழா பூரண சந்திர கிரகணத்தை முன்னிட்டு இம்முறை வழமையை விடவும் முன்னதாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை பிற்பகல் 1 மணிக்கு வசந்தமண்டபப் பூஜைகள் நடைபெற்று 2.30 மணிக்கு ஆழ்வார் தீர்த்தமாட புறப்பட்டுச்செல்வார். 3.30 மணிக்கு தீர்த்தமாடி முடித்துக்கொண்டு 5.00 மணியளவில் ஆலயம் திரும்ப…
-
- 3 replies
- 942 views
-
-
http://www.bbc.co.uk/tamil/meta/dps/2012/01/bb/120106_nimalaiw_au_bb.asx இலங்கையில் தமிழர் தலைமைகளும் தமிழ் சிவில் சமூகமும், முஸ்லிம்களை ஒன்றிணைத்துச் செல்லவேண்டும் என்றும், வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்து தங்கள் வாழ்வைத் தொடங்க உதவ வேண்டும் என்றும் சுமார் 70 புத்திஜீவிகள் கையொப்பமிட்டு கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசும் அரசியல் தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகளை நடத்திவரும் பின்னணியில் இந்த அறிக்கை வந்திருக்கிறது. இந்த அறிக்கையின் காலப்பின்னணி குறித்து அதில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான, நிர்மலா ராஜசிங்கம் அவர்கள் தமிழோசையிடம் பேசுகையில், தமிழர்கள் தாம் பெரும்பா…
-
- 1 reply
- 942 views
-
-
கடவுளைக் காண..! ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான். "ஐயா! பெரியவரே..! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்'' என்றான். "தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.'' "ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா..! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?'' "தம்பீ, காண முயலுகின்றேன்.'' "கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?'' "இல்லை.'' "கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்ற…
-
- 4 replies
- 941 views
-
-
ஜென் துறவி லீன்சீ படகில் பயணம் செய்வதில் மிகுந்த நாட்டம் உடையவர். அவரிடம் ஒரு படகு இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் பயணம் செய்வார். சில வேளைகளில் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான். ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது. தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அலட்சியமாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது. "என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன். அந்தப…
-
- 0 replies
- 941 views
-
-
வல்லிபுர மாயவ னின் கொடியேற்றம். http://youtu.be/W5KO5AoEpXQ
-
- 0 replies
- 937 views
-
-
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சிற்ப வேலைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோயில் சிறப்புப் பெற்று விளங்குகிறது. இக் கோயில் அறந்தாங்கியிலிருந்து 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் சிவபெருமான் ஆவுடையார் என்றும், ஆத்மநாதசுவாமி என்றும் அழைக்கப்படுவதால் அவ்வூர் ஆவுடையார் கோயில் என்றே வழங்கலாயிற்று. இவ்வூரைத் தமிழ் இலக்கியங்கள் திருப்பெருந்துறை என்றே குறிப்பிடுகின்றன. மாணிக்கவாசகரான வாதவூரர் இக் கோயிலின் வரலாறு மிகவும் சிறப்புடையதாகும். மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த இரண்டாம் வரகுண பாண்டிய மன்னனிடம் தமிழ் இதிகாசங்கள் கூறுகின்ற நாயன்மார்களில் ஒருவரான வாதவூரர் அமைச்சராக இருந்தபோது மன்னனுக்கு…
-
- 1 reply
- 933 views
-
-
திருமண வாழ்வின் வெற்றிக்கு வழி..! திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண நாளைக் கொண்டாடினார்கள். ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் பிரசுரிக்க விரும்பினார். நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, " 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது? உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன..? " என்று கேட்டார். இந்த கேள்வியை கேட்டத…
-
- 8 replies
- 931 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 4 நவம்பர் 2021 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா முழுவதும் பரவலான உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தீபாவளியின் பின்னணியில் இருக்கும் கதைகள் ஏராளம். தமிழ்நாட்டில் எப்போதிலிருந்து தீபாவளி கொண்டாடப்படுகிறது? இந்தியா முழுவதுமுள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, இந்துக்கள் வசிக்கும் பிற நாடுகளிலும்கூட உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தப் பண்டிகை எப்படித் தோன்றியது என்பது குறித்து நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறது. இந்தப் பண்டிகை தமிழ் மாத கணக்…
-
- 8 replies
- 929 views
-
-
மதம் என்றூ சொன்னாலும் மதம் இல்லா மதம் அன்பே மதம் என்று சொன்னாலும், நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் 1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம். 2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம். 3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம். 4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம். 5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம். 6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை. 7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு. 8. இயற்கையாய் தோன்றியவற்றில் …
-
- 0 replies
- 924 views
-
-
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், திருப்பதி ஏழுமலையான் கோயிலைப்போன்றே, மாதிரி கோயில் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி ஆகம முறைப்படி அக்கோயில் திறக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில், வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி முதல், கிருஷ்ணா ஆற்றில் புஷ்கரம் தொடங்க உள்ளது. இதனால் கிருஷ்ணா ஆற்றின் கரையோரம் முழுவதும் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. பல இடங்களில் பக்தர்கள் குளிக்க வசதியாகப் படித்துறைகள் அமைக்கப்பட்டும் வருகின்றன. சில கரையோரங்களில் நாட்டில் உள்ள புகழ்பெற்ற புனித ஸ்தலங்களின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், திருமலை திருப்பதி தேவஸ்தானமும் ஏழுமலையான் மாதிரி கோயிலை அங்கு ஏற்படுத்தத் திட்டமிட்டது. அதற்காக விஜயவாடாவில் உள்ள ப…
-
- 1 reply
- 920 views
-
-
நான் யார் .? நான் என்பது மனமா.. ஆன்மாவா .. அகங்காரமா..?
-
- 0 replies
- 920 views
-