மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
சிக்கல் மிகுந்த உலக வாழ்வினை சமாளிப்பதற்கு உதவியாக எறும்புகளும், தேனீக்களும், பறவைகளும், மந்தைகளும் எளிய வழிகளை நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றன. பொறியியல் அறிவோ, படை நடத்தும் தளபதி அறிவோ, கட்டுமான அறிவோ ஒரு தனி எறும்புக்கு நிச்சயமாக இல்லை.. ஆனால் எறும்புக் கூட்டத்திற்கு உண்டு! "தனி ஒரு எறும்பு ஒரு காரியத்தில் ஈடுபட்டிருக்கும் போது அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் 'திரு திரு' என்று விழிக்கும் தனி எறும்பின் 'சாமர்த்தியம்' எத்தனை பரிதாபமானது என்பதை தனியாக நிறுத்திப்பார்த்தால் தெரியும் என்று ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்து பெண் அறிஞர் டெபொரா கோர்டான் சொல்லுகிறார். "எறும்புக்கு விவரம் பத்தாது ஆனால் எறும்புக் கூட்டத்தின் அறிவுக்கு ஈடு இணை இல்லை" 140 மில்லியன் ஆண்டுகளாகப்…
-
- 6 replies
- 2.4k views
-
-
மிக நல்ல நாள் இன்று மிகப் பெரிய வெகுமதி மன்னிப்பு மிகவும் வேண்டாதது வெறுப்பு மிகவும் தேவை சமயோசித புத்தி மிகவும் கொடிய நோய் பேராசை மிகவும் சுலபமானது குற்றம் காணல் கீழ்த்தரமான விடயம் பொறாமை நம்பக் கூடாதது வதந்தி ஆபத்தினை விளைவிப்பது அதிக பேச்சு செய்யக் கூடாதது உபதேசம் செய்ய வேண்டியது உதவி விலக்க வேண்டியது விவாதம் உயர்வுக்கு …
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
வாழ்க்கை சிறு கதையாக.. . ஒரு மனிதன் வண்ணத்துப் பூச்சியின் கூட்டுப் புழு ஒன்றைக் கண்டான். ஒரு நாள் அதில் ஒரு சிறு துளை தோன்றியது. அவன் அமர்ந்து வண்ணத்துப் பூச்சியை பல மணி நேரம் கவனித்தான். அது அதன் உடலை சிறு துளை வழியாக வெளி வர போராடிக் கொண்டிருந்தது. மேலும் வெளி வர முடியாததால் அது சற்று நிறுத்தியது. ஆகவே அவன் வண்ணத்துப் பூச்சிக்கு உதவ முடிவெடுத்தான். ஒரு கத்திரிக் கோலை எடுத்தான். கூட்டுப் புழுவின் பிரிவு படாத துகள்களை வெட்டினான். வண்ணத்துப் பூச்சி எளிதாக வெளியேறியது, ஆனால் அதன் உடல் வீங்கியும், இறக்கைகள் சுருங்கியும் இருந்தன. எந்த நிமிடத்திலும் அதன் இறக்கைகள் பெரிதாகியும், விரிந்தும் அதன் உடலைத் தாங்கிப் பறக்குமென்று, அந்த மனிதன் தொடர…
-
- 1 reply
- 1.6k views
- 1 follower
-
-
எதைக் காப்பாற்றாவிட்டாலும் நாக்கைக் காக்க வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். ஆனால், இன்று உலகம் முழுக்க பேச்சுமயமாகவே மாறிவிட்டது. * பேச்சைக் குறைத்தால் சண்டை சச்சரவு மறையும்.மேல்நாட்டில் கூட ""பேச்சு வெள்ளி என்றால் மவுனம் தங்கம்'' என்று தான் குறிப்பிடுகிறார்கள். * பேசும்போது ஒரு வார்த்தை கூட அதிகமாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். "கொட்டி விடலாம்! ஆனால், அள்ளமுடியுமா?' என்று பாமர ஜனங்கள் கூட கேட்பதுண்டு. * மவுனத்தை ஞானத்தின் எல்லை என்பர். ஒரேயடியாக நம்மால் மவுனமாக இருக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவுக்கு பேச்சை குறைக்க முயற்சிக்கவேண்டும். * எப்போதுமே இனிமையாகப் பேச வேண்டும். மற்றவர் மனதைப் புண்படுத்தும் விதத்தில் பேசுவது நல்லதல்ல. நம்மையும், நம்மைச் சார்ந்தவர…
-
- 5 replies
- 1.9k views
-
-
இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. அதாவது ஐந்து ஆதார சக்திகளால் ஆனது. அது நமக்குத் தெரியும். வாழ்க்கையில் வெற்றியடைய விரும்புகிறவர்களுக்கு இந்த பஞ்ச பூதங்களும் சில பாடங்களை, சில ரகசியத் தத்துவங்களைச் சொல்கின்றனவே, அது தெரியுமா? 1. நிலம் தங்கம், தாதுப்பொருட்கள், பெட்ரோல் என்று பலப்பல வளங்களைத் தன்னுள் வைத்திருக்கிறது நிலம். அந்த வளங்களை, அந்த மூலப் பொருள்களை எடுத்துத்தான் மனிதன் இன்று ஆயிரக்கணக்கான அற்புதப்பொருட்களைப் படைத்துப் படைத்து தனது வாழ்க்கையைச் சுகமாகவும் சொகுசாகவும் அமைத்துக் கொண்டிருக்கிறான். மனிதனிடமும் பல்வேறு வகையான திறமைகள் பதுங்கிக் கிடக்கின்றன. ஒரு திறமைகூட இல்லாத மனிதன் உலகில் யாராவது உண்டா? ஆனால், எத்தனையோ திறமைகளைத் தன்னுள் வைத்தி…
-
- 2 replies
- 1.8k views
-
-
மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுந்ததைக் கண்ட நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். நியூட்டன் காலத்துக்கு முன்னும் கூட மரங்களில் இருந்து ஆப்பிள்கள் விழுந்து கொண்டு தான் இருந்தன. எத்தனையோ நூற்றுக் கணக்கான ஆண்டுகள் உலகமெல்லாம் கோடிக்கணக்கான மக்கள் அதைப் பார்த்துக் கொண்டு தானிருந்தார்கள். மரத்திலிருந்த ஆப்பிள் தலையிலேயே விழுந்தாலும் தலையைத் தடவிக் கொண்டு 'எல்லாம் நேரம்' என்று நொந்து கொண்டு ஆப்பிளைப் பொறுக்கி சாப்பிட்டபடி எத்தனையோ பேர் நடையைக் கட்டியிருப்பார்கள். அப்படி தலையிலேயே விழுந்தாலும் 'உதிரும் ஆப்பிள் ஏன் கீழே விழ வேண்டும்' என்ற கேள்வி அந்த மனிதர்களிடம் எழாத போது நியூட்டனுக்கு மட்டும் ஏன் அந்த சாதாரண நிகழ்ச்சியைக் கண்டு அச…
-
- 1 reply
- 1.4k views
-
-
. http://www.youtube.com/watch?v=in2rjiTN-hw மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன், ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன். கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன், பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்.. நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன். ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன். பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன், பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன், தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன், மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன். நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன். ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன். சொல்லானாலும் ஓம் எ…
-
- 4 replies
- 5.2k views
-
-
மனிதன் தன் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறானோ அதையே அதிகம் காண்கிறான், அதுவே அவன் வாழ்வில் அதிகம் பெருகுகிறது என்று ஞானிகள் சொல்கிறார்கள். எதில் ஈடுபாடு அதிகமாகிறதோ, எதை அவன் மிக முக்கியம் என்று நினைக்கிறானோ அது குறித்த அவன் எண்ணங்களும், உணர்வுகளும் சக்தி வாய்ந்தவைகளாகின்றன. தன்னைச் சுற்றிலும் அதை ஈர்க்கும் ஒரு காந்த மண்டலத்தை அவன் உருவாக்கிக் கொள்கிறான். அது சம்பந்தமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் அவன் தன்னிடத்தே ஈர்த்துக் கொள்கிறான். ஒவ்வொரு துறையிலும் நிறைய சாதனை புரிந்தவர்களைக் கேளுங்கள். அந்தந்த துறையில் அவர்களுக்கு மகத்தான ஈடுபாடு இருந்திருக்கிறதென்று அவர்கள் சொல்வார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் அதுவாக இருந்திருக்கிறதென்றும், அது மற்ற எல்லாவற்றையும் …
-
- 7 replies
- 2.1k views
-
-
அரசியல்வாதிகள் மேடையேறி விட்டாலே மடை திறந்த வெள்ளம் போல பேசுவார்கள். அவர்கள் பேச்சில் ஈட்டிகள் பறக்கும். வாள்கள் மோதும், பீரங்கிகள் முழங்கும். கேட்பவர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து விதிர்விதிர்த்து போவார்கள். சிலபேருக்கு உணர்ச்சி என்ற பாம்பு படமெடுத்து ஆடி வீரம் என்ற மாணிக்கத்தை கூட கக்கும். அதே அரசியல்வாதி மேடையை விட்டு இறங்கினால் பழம் வெட்டும் கத்தியை கூட கண்டு படபடத்தும் போவார்கள். மேடையில் வந்த வீரம் எங்கே போனது என்று நமக்கு தோன்றும். அவரிடமே உங்கள் வீரமெல்லாம் வெறும் வார்த்தை தானா? நடைமுறையில் கிடையாதா? என்று கேட்டால் சிரித்து மழுப்பி விடுவார்கள். அதற்கு காரணம் என்ன? மேடை மீது ஏறிவிட்டால் சுற்றிலும் மக்கள் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்களை கோபப…
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்று விபூதிப்புதன் (சாம்பல் புதன்) உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களால் இன்று விபூதிப்புதன் (09.03.2011) அனுஷ்டிக்கப்படுகின்றது. இன்று முதல் 40 நாட்கள் வரையான உயிர்ப்பு ஞாயிறு வரையான தினம் தவக்காலமாக கணிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. தவக்காலம் கத்தோலிக்கர்களுக்கு தவக்காலம் மிகவும் முக்கியமான ஒரு காலம். விபூதிப் புதன் தொடங்கி கிறீஸ்துவின் உயிர்ப்பு பெருநாள் வரை இந்த தவக்காலம் அமைகிறது. கத்தோலிக்கர்கள் தாங்கள் வாழும் வாழ்க்கையை அலசி ஆராய்ந்துப் பார்த்து, அவ்வாழ்வில் உள்ள குறைகளை, தீமைகளை, பாவங்களை எல்லாம் எண்ணி, மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு வேண்டும் ஒரு புனிதமான காலம். இவ்வாறாக வாழ்வை அலசி ஆராய்ந்து பார்க்க செபமும், தவமும் உதவி புரிகின்றன. தவம் இது எல்லா மதத…
-
- 24 replies
- 6k views
-
-
விடைகள் இல்லாதவரை…..! நீதிபதி:- உமது பெயர் என்ன? கடவுள்:- கடவுள் நீதிபதி:-உம்மை கல்லிலும் ,மண்ணிலும் ,உலோகத்திலும் மனிதர் செய்யலாமா? கடவுள்: எனது சக்தியை ஒருவராலும் ஒன்றுக்குள் அடக்க இயலாது.சிந்திக்காமல் மனிதன் செய்கிறான். நீதிபதி:- மனிதர்களைப் படைத்தது நீர்தானே? கடவுள்:- ஆமாம்! நீதிபதி:-சாதிப் பிரிவினை உருவாக்கியவர் நீதானே? கடவுள்:ஆம். செய்யும் தொழிலே தெய்வம் என்று இந்துகளுக்கு மட்டும் சாதிப்பிரிவினை உண்டாக்கினேன். இந்துத் தத்துவங்களில் ஒன்று வர்ணாச்சிரமக்க கொள்கை இதைக் கடைப்பிடிக்காமல் போனால் நீ மறுபிறப்பில் வெளவால் இனத்தை சேர்ந்த வாயாலை உண்டு வாயாலை மலம் கழிக்கிற இனமாக பிறப்பாய். நீதிபதி:- மனிதர்களில் பணக்காரர்கள் என்றும் ஏழைகள் என்ற…
-
- 2 replies
- 1.6k views
-
-
இன்று சந்தையில் புகழ்பெற்றுள்ள ஐ போன் என்கின்ற புதிய கைத்தொலைபேசி வடிவமைப்பில், மற்றுமொரு வசதியாக அந்த நிறுவனம் புதிதாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் கத்தோலிக்கர்கள் தமது பாவங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கோரும் சம்பிரதாயத்தை முன்னெடுக்க தொழிநுட்பத்தின் உதவியுடன் வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய தொழிநுட்பம், ஒருபோதும் பாதிரியார் ஒருவரிடம் நேரடியாக சென்று பாவமன்னிப்பு பெறும் நடைமுறைக்கு ஈடாக அமைந்துவிட முடியாது என போப் ஆண்டவர் உத்தியோகபூரவ பேச்சாளர் அருட்தந்தை ஃபெட்ரிகோ லொம்பார்டி எச்சரித்துள்ளார். பாவமன்னிப்பு என்ற இந்த கத்தோலிக்க நடைமுறையை டிஜிடல் தொழில்நுட்பத்தின் மூலம் செய்யக்கூடியதாக் மாற்றுவது குறித்து கத்தோலிக்க உலகிலேயே கருத்த…
-
- 9 replies
- 1.5k views
-
-
தேசிய தலைவரின் படத்தை அவரோடு கூட அவரின் தோற்றத்தில் இருந்த ஒருவருடன் ஒப்பிட்டு ஆராயும் சிங்கள இராணுவம். இது தேசிய தலைவரின் இல்லம் பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட பெப் 2009 நடந்துள்ளது. தேசிய தலைவரின் முகத்தை ஒப்பீடு செய்வதன் நோக்கம்..???! இதில் தற்போது ஐநா அதிகாரியாக பதவி உயர்வு பெற்றிருக்கும் பெரும் போர் குற்றவாளி சமிந்திர சில்வா இடம்பெற்றிருக்கிறார். இது தலைவர் இருக்கிறாரோ இல்லையோ என்ற ஆராய்ச்சிக்காக அல்ல. சிங்களத்தின் நோக்கங்கள் எந்த வகையில் இருந்திருக்கிறது என்பதை ஊகிக்க உதவும் என்பதால் இணைக்கப்படுகிறது.
-
- 4 replies
- 2k views
-
-
-
- 14 replies
- 2.8k views
-
-
எம்மக்களிடையே பல சம்பிரதாயங்கள்,பழக்கவழக்கங்கள்,நம்பிக்கைகள்,மூட நம்பிக்கைகள் ஊறிப் போய் கிடக்கிறது...சிலவற்றில் உண்மை இருந்தாலும் பல்வற்றில் உண்மை இல்லை என நினைக்கிறேன்.உதாரணமாக யாருடைய வீட்டுக்குப் போனாலும் சப்பாத்தை,செருப்பை வாசலில் கழட்டி வைத்து விட்டு உள்ளே செல்ல வேண்டும் காரணம் வீதியில் உள்ள அழுக்குகள் எல்லாம் வீட்டுக்குள் வந்து விடும் என்ட காரணத்தால் ஆகும் இது நல்லதொரு பழக்கமாகும் ஆனால் சில பேர் சொல்வார்கள் இரவு லைட் போட்டு விட்டால் ஒன்டுமே ஆத்திர அவசரத்திற்கு மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது என சொல்கிறார்கள் இதில் உண்மை இருக்கா எனக்குத் தெரியவில்லை? தெரிந்தவர்கள் சொல்லவும். நாங்கள் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களில் எது நல்லது?...எது மூட நம்பிக்கை என கருதுகிறீர்க…
-
- 23 replies
- 8.7k views
-
-
கல்வாரி மலையில் எதற்கு ஐம்பதாயிரம் வீடுகள்… ? - கல்வாரி மலை கொண்டு செல்லப்பட்டு நயவஞ்சகமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இயேசுபிரான் பாலனாக பிறந்த நாளை மக்கள் மகிழ்வாக கொண்டாடும் திருநாள் இன்று.. அன்று, மக்கள் இல்லாத ஒரு பெரும் கற்குவியல் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மக்களாக வாழ்வோர் செய்யக் கூசும் நயவஞ்சகங்களை எல்லாம் செய்து அவர் கொல்லப்பட்ட காட்சிகள் கண்முண் நிழலாடுகின்றன. நிராயுதபாணியாக இருந்த ஒருவருடைய தலையில் முள்முடி மாட்டி கைகளிலும் கால்களிலும் ஆணி அடித்து, வக்கிரங்களை செய்தார்கள். அதுமட்டுமல்ல தாகத்தால் அவர் துடித்தபோது புளிங்காடியில் இருந்த அழுக்கடைந்த பாசியை வாயில் இடித்து சிரித்து கெக்கலித்தனர்… பொல்லாத யூதர்களும், போர்ச் சேவகர்களும், அரச ஆளு…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=bbUtvtA4BLk http://www.youtube.com/watch?v=CfV85aZl--k http://www.youtube.com/watch?v=2lk0X6mgE_E
-
- 3 replies
- 1.3k views
-
-
நவீன உலகிற்கு ஒரு மீட்பர் தேவை மனித உயிர் மலிவானதாகவும் கிஞ்சித்தும் யோசனையின்றிச் செலவிடத்தக்கதாகவும் மாறியிருந்த படுபயங்கரமான காலகட்டத்தில் இருந்து இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவையடுத்து மீண்டு வந்துவிட்டது என்பது உண்மைதான். ஆனால், மனித வாழ்வுக்கான மதிப்பும் கௌரவமும் மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படக்கூடியதாக ஏனைய பிரச்சினைகள் இலங்கைச் சமுதாயத்தை படுமோசமாகப் பாதிக்க ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக பொருளாதார நெருக்கடி மக்களை நிலைகுலைய வைக்கிறது. வாழ்க்கைச் செலவின் தொடர்ச்சியான அதிகரிப்பின் விளைவான நெருக்கடிகளில் இருந்து மக்கள் ஓரளவுக்கேனும் விடுபடுவதற்கேதுவாக பண்டிகைக் காலத்திலேனும் அவர்களுக்கு நிவாரணத்தைத் தரக்கூடிய உருப்படியான நடவடிக்க…
-
- 1 reply
- 807 views
-
-
ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்? புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன. ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது. ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ர…
-
- 5 replies
- 1.7k views
-
-
கடும் குளிர் காலம். ராத்திரி நேரம். அந்த ஆசிரமத்தின் வாசலுக்கு வந்து சேர்ந்தார் ஒரு துறவி. ‘இந்த நேரத்தில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருப்பார்களே’ என்று யோசித்தார் அவர். ‘நான் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இங்கேயே படுத்துத் தூங்கிவிடுவதுதான் நல்லது.’ ஆனால் அவரிடம் போர்வையோ, கம்பளியோ எதுவும் இல்லை. இருக்கிற ஒற்றை ஆடையை முடிந்தவரை நீட்டிச் சுருண்டு படுத்துக்கொண்டு தூங்க முயன்றார். சிறிது நேரத்தில் குளிர் மிகவும் அதிகமாகிவிட்டது. கொஞ்சம் கதகதப்புக்காக ஏங்கினார் அந்தத் துறவி. ‘எங்கேயாவது கொஞ்சம் மரக்கட்டைகள் கிடைத்தால் நன்றாக இருக்கும். பற்றவைத்துக் குளிர் காயலாம்.’ தேடியபோது ஆசிரமத்துக்கு வெளியே சில புத்தர் சிலைகள் தென்பட்டன. அவற்றை உடைத்துப் போட்டு அங்கிருந்…
-
- 3 replies
- 1.4k views
-
-
மரணம் வருவதை முன் கூட்டியே அறிதல் எப்படி ?? மரணத்தை அண்மித்தவர்கள் உடலில் என்னென்ன அறிகுறிகள் காணப்படும் என்று சித்தர்கள் சொன்னவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம். "நாக்குச் சிவந்து முன்பிறந்த நன்னீரி னிறம்போல் சிவந்திருக்கும் தேக்கிக் காயும் தாகமுண்டு தெளிந்தே வேர்வு சிகமென்னே ஊக்கி உடலும் நொந்திருக்கும் உலகோர் அறிய உரைத்தோம் நாம் பாக்குத் தின்னும் துவர் வாய் பரிந்தே நாளும் ஏலேன்னே" - அகத்தியர் நயன விதி - நாக்கு சிவத்து மூளைக் கட்டுக்கள் முள்போலத் தோன்றி இரத்தம் போலச் சிவந்திருக்கும், காய்ச்சல் குறையாமல் தகிக்கும், அளவுக்கதிகமான தாகம் இருக்கும், உடல் வியர்க்கும் , உடல் முழுதும் வலிப்பது போல் இருக்கும் , பாக்கு தின்பது போல நாக்கில் …
-
- 5 replies
- 1.7k views
-
-
சாய்பாபாவின் 85வது பிறந்த நாள் விழாவில், அவர் தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சாய்பாபாவின் 85வது பிறந்த நாள் விழா நேற்று புட்டபர்த்தி ஹில் வியூ ஸ்டேடியத்தில் நடந்தது. சாய்பாபா முன்னிலை வகித்தார். விழாவுக்கு, மத்திய வெளியறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா தலைமை வகித்து பேசியதாவது: இறைப்பணி, கல்வி, சுகாதாரம், மனிதநேயம், சமுதாய மாற்றத்தில் சாய்பாபாவின் பங்கு அதிகமாக உள்ளது. குறிப்பாக, கிராமங்களில் குடிநீர் வழங்கும் பெரிய பணியில் பாபா ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆந்திராவில் அனந்தபுர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னைக்கு குடிநீர் வழங்கியும், பெங்களூருவுக்கு ஆரோக்கியத்தை வழங்கும் வகையில் மருத்துவமனையும், கல்வி சேவையிலும் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் சுனாம…
-
- 3 replies
- 1.3k views
-
-
சுப்பிரமணிய விரதம் 1. சுப்பிரமணிய விரதம் எத்தனை? சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், கந்தசட்டி விரதம் என மூன்றாம். 2. சுக்கிரவார விரதமாவது யாது? ஐப்பசி மாசத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிர வாரந்தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் இரவிலே பழம் முதலியன உட்கொள்ளக் கடவர். அதுவுங் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே போசனம் பண்ணக் கடவர். இவ்விரதம் மூன்று வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும். 3. கார்த்திகை விரதமாவது யாது? கார்த்திகை மாசத்துக் கார்த்திகை நக்ஷத்திரம் முதலாகத் தொடங்கிக் கார்த்திகை நக்ஷத்திரந் தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமா…
-
- 0 replies
- 957 views
-
-
மகாசயர் என்னும் மேற்கு வங்காள பள்ளி ஆசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணருடனான தனது சந்திப்புக்களை நாட்குறிப்பில் எழுதி வந்தார். அதன் தொகுப்பே ஸ்ரீ இராமகிருஷ்ணரின் அமுத மொழிகளாகும். இத்தொகுப்பு 19ம் நூற்றாண்டுக்கு உங்களை அழைத்துச் செல்லும். இப்பயணத்தில் தூய்மை, அமைதி , நம்பிக்கை, இறை அனுபவம் என்பவற்றை ஆத்மார்த்தமாக அனுபவித்துக் கொண்டு செல்லலாம். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------- குருவும் சீடரும் மாசி 1882 "ம" முதல் முறையாக குருவை சந்தித்தல் அது ஒரு இளவேனிற்கால ஞாயிற்றுக் கிழமை, ஸ்ரீ இராமகிரு…
-
- 42 replies
- 13.6k views
-
-
ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு ஸ்ரீ கச்சியப்ப முனிவர் தொண்டை நாட்டுத் தணிகைத் திருப்பதியில் சைவ வேளாளர் குலத்தில் அபிஷிக்தர்மரபில் அவதாரம் செய்தருளினார். தக்க பிராயத்தில் கற்பவை கசடறக்கற்று, சிவஸ்தல யாத்திரை செய்யத் தொடங்கினார். சிதம்பரம் முதலிய திருப்பதிகளைத் தரிசித்து, ஸ்ரீ ஞானக்கோமுத்தியாகிய திருவாவடுதுறையைச் சார்ந்தார். திருமடாலயத்தில் திருக்கைலாச பரம்பரைச் சித்தாந்த சைவ ஞான பாநுவாகிய ஸ்ரீ நமச்சிவாய மூர்த்தி யைத் தரிசித்து, திருவருள் நோக்கஞ் சிந்திக்கப் பெற்றார். சிவாகமத்தில் இரண்டு லக்ஷ சுலோகமும், மெய்கண்ட சாத்திரம் பதினான்கும், பண்டாரசாத்திரம் பதினான்கும் ஆகிய ஞானநூல்களை நன்குணர்ந்த ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகராம் 12 ஆம் குருமஹாசந்நிதானம் அவர்களின் த…
-
- 10 replies
- 9.6k views
-