Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. Started by தமிழீழன்,

    [size=3][/size] [size=3][size=4]உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் தம் கவிதைகளால் உலகத்தமிழர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவராவார். இவர் கவிதைகளில் உள்ள வேகம் சற்றும் குறையாமல் கதையும் சொல்லும் திறன் கொண்டவராவார். இவர் எழுதிய கதைகளில் ஒன்று இன்றைய சிந்தனைக்காக...[/size][/size] சொரணை [size=3][size=4]நெருஞ்சிப்புல் வருகிறவர் போகிறவர் கால்களையெல்லாம் தன் முள்ளினால் குத்திப் புண்ணாக்கிக் கொண்டிருந்தது. “மனிதர்களின் காலைக் குத்தி அவர்களுக்குச் சினத்தை உண்டாக்குகிறாயே – பார்... பார்... அவர்கள் என்றோ ஒருநாள் வேரோடு உன்னைப் பிடுங்கி எங்காவது பயிர்களுக்கு எருவாய்ப் புதைத்துவிடப் போகிறார்கள் என்றது அறுகம்புல். நெருஞ்சி சூடானது. “என்னைக் காலால் மிதி…

  2. ''Lizzie Velasquez'' இப்பெயரை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? : உலகின் அசிங்கமான பெண் இவர்தான் என இணையத்தில் வீடியோ வெளிவந்து 4 மில்லியன் ஹிட்ஸை பெற்றபோது "Lizzie, உங்களிடம் ஒரு வேண்டுகோள், முடிந்தால் ஒரு துப்பாக்கி கொண்டு நீங்களே உங்களைச் சுட்டு தற்கொலை செய்துகொள்ளுங்கள்" என்று கூட இவருக்கு ஆலோசனை வழங்கி காமெண்ட்ஸ் அடித்திருக்கிறார்கள். மனமுடைந்து போகவில்லை Lizzie Velasquez. இதோ அப்படிச் சொன்னவர்களுக்காகவே இந்த வீடியோவில் பதில் அளிக்கிறார் அவர். (உரையாடல் ஆங்கில மொழியில் உள்ளது) வாழ்நாள் முழுவதும் 62 pounds களுக்கு மேல் உடலின் எடை அதிகரிக்கமுடியாத வினோதமான நோயினால் பாதிக்கப்பட்டவர் Lizzie Velasquez . இப்படி ஒரு வினோத நோயினால் பாதிக்கப்பட்டு உலகில் இதுவரை அடையாளம் க…

  3. Started by sudalai maadan,

    புகழ்பெற்ற ஜென் குரு ஒருவரைத் திரளாக மக்கள் வந்து தரிசித்து அவர் கருத்துக்களைக் கேட்பது வழக்கம். அவர் இருந்த ஊரில் ஒரு இசைக் கலைஞன் இருந்தான். மிகத் திறமைசாலி. அதே சமயம் அவனிடம் எல்லாவித கெட்ட பழக்கங்களும் இருந்தன. குருவிடம் வந்த ஒருவர் அந்தக் கலைஞனைப் பற்றி மிகக் கேவலமாகப் பேசினார். உடனே குரு,''அவன் சிறப்பாக இசை வாசிப்பானே! நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாமே!'' என்று புகழ்ந்து பேச ஆரம்பித்தார். உடனே அங்கிருந்த இன்னொருவர், ''ஆமாம்,அவன் இசைக்க ஆரம்பித்தால் அந்தக் கடவுளே வந்த மாதிரி இருக்கும். சங்கீதமே அவனுக்கு அடிமையாக இருக்குமே,''என்று குருவின் கருத்தை ஒத்துப் பேசினார். அப்போது குரு,''அப்படியா, அவன் ஒரு ஏமாற்றுக்காரன் ஆயிற்றே! அவனை யாரும் நம்ப முடியாதே,''என்றார்.…

  4. மகிஷாசுரனின் அராஜகம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கியது. எல்லாவற்றினுள்ளும் நிறைந்த சக்தி ஒன்றாகத் திரண்டது. பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவருக்குள் பொலிந்திருக்கும் அளப்பரிய ஆற்றல் பின்னிப் பிணைந்தது. சட்டென்று பிரபஞ்சத்தையே மறைத்து நிற்கும் பேரொளி உதயமாயிற்று. அது மங்களமான பெண் உருவில் திகழ்ந்தது. அரக்கர்கள் அதிர்ந்தனர். தேவர்கள் சந்தோஷத்துடன் ‘துர்க்கா... துர்க்கா...’ என்று தலைமீது கரம் கூப்பித் தொழுதனர். ‘து’ எனும் எழுத்திலுள்ள ‘த்,’ சத்ரு நாசத்தையும், ‘உ,’ கர்மவினை அழிவையும், ‘ர்,’ நோயை விரட்டுவதையும், ‘க,’ பாவங்கள் பொசுங்குவதையும், ‘ஆ’ பயத்தை வெற்றிகொள்வதையும் குறிக்கின்றன. மகிஷனை அறைந்து தனது சூலத்தை பாய்ச்சி, தலையை வெட்டி அதன்மீதேறி நின்றாள் தேவி. அவளே மகிஷாசுரமர…

  5. கதிர்காம பள்ளிவாசலில் ஓங்கி ஒலித்த முருகனுக்கு அரோகரா.... தெரியாத பல காரணங்கள்

  6. உண்மையான பக்தன் யார்? நாராயணா.. நாராயணா.. என்று நாரயணன் நாமம் பாடும் நாரதர், வைகுண்டவாசியான விஷ்ணுவைக் காண சென்றிருந்தார். மகாவிஷ்ணு, இருக்காரே மிகவும் வில்லங்கமானவர். கர்வம் மிக்க பக்தர்களாக இருந்தாலும், பதுசாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றிவிடுவார். நாரதருக்கு நாராயணனின் சிறந்த பக்தன், தான் ஒருவர் மட்டுமே என்னும் மமதை இருந்தது. அதை அடக்குவதற்கு சரியான சமயம் எதிர்பார்த்திருந்தார் விஷ்ணு. நாரதரின் அழைப்பு கேட்டும் காது கேட்காதது போல் பூலோகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். ”நாராயணரே நான் அழைத்தது கூட கேளாமல் என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். ”வேறொன்றுமில்லை நாரதரே பூலோகத் தில் எனக்கு பிடித்த பக்தன் ஒருவன் இருக்…

  7. ஆய்வு: யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்க வடிவங்கள்! - ராகவன் - - ராகவன், லண்டன் சமூக வளர்ச்சி பற்றி சிந்திப்பவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் சாதியம் பற்றிய ஆழமான புரிதல் அவசியமாகிறது. சாதியம் சமூகத்தின் மொழி, அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், பண்பாடு, நடைமுறை போன்ற அனைத்து தளங்களிலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் எவ்வாறு தனது ஆதிக்கத்தை செலுத்துகின்றதென்பதை அவதானித்தல் அதற்கெதிரான செயல்பாடுகளை பல்வேறு தளங்களில் முன்னெடுத்தல் அவசியமானதொன்று. இக்கட்டுரை யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்கம் பற்றிய ஒரு அறிமுகம். தென்னாசிய சமூகங்களில் சாதியத்தின் இருத்தல் பற்றிய பல்வேறு ஆய்வுகள் வந்திருக்கின்றன. சாதியத்தில் இருத்தலை இவ்வாய்வுகள் பெரும்பாலும் ஏற்றுக் கொண்டிர…

  8. திருக்கோணஸ்வர கோவில் ரத பவனி... வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரர் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (19) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கோவிலில் கடந்த மூன்றாம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது. (படங்கள்: எஸ்.சசிகுமார்) http://www.tamilmirror.lk/144237#sthash.zjcXAiaR.dpuf

  9. இன்றைய விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துள்ள நிலையில் மூளையின் செயல்பாடு பற்றிய மர்மத்தை இன்றுவரை 5%வரைகூட அறிய முடியவில்லை. அமெரிக்காவில் டுவின் டவர் விபத்து நடந்த பின் அமெரிக்க அரசு கோடிக்கான பணத்தை மூளை பற்றி ஆராய்ச்சிக்கு ஒதுக்கியுள்ளது. என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களோடு கலந்து வெளிவராத பல ஆய்வு கருத்துக்களை பார்க்கும்போது மூளையின் செயல்பாடுகள் பற்றிய செய்திகள் மிகவும் பிரம்மிப்பாகவும் பயங்கரமாகவும் உள்ளது. 1%க்கு குறைவான குழந்தைகள்தான் மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் பிறக்கின்றன. 99% குழந்தைகள் சாதாரணமாகத்தான் பிறக்கின்றனர். ஆராய்ச்சியில் பார்த்தால் நமக்குத் தரப்பட்டுள்ள அபாரமான சக்தி மூளைதான். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் நமக்கு யாரும் கற்றுக் கொடுப்பதில்லை. நாலெட்ஜ்…

  10. திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுக்குத் தெற்கே உள்ள பகுதியை மானவீர வளநாடு என்று சொல்கின்றனர். அந்தப் பகுதியில் உள்ளது அருஞ்சுனை காத்த ஐயனார் கோயில். ஐயனார் பலர் இருந்து வருகின்றனர். அவர்களுள் ஒருவர் அருஞ்சுனை காத்த ஐயனார். மானவீர வளநாட்டில் இடையர் குலத்தில் ஒரு விதவைப் பெண் இருந்தாள். அவள் சிறுவயதிலேயே தன் கணவனை இழந்தவள். அது முதற்கொண்டு வேறு ஆணைப் பார்த்துக் கூட அறியாதவள். விடிவதற்கு முன்பாகவே எழுந்து ஊருக்கு அருகில் இருக்கும் சுனைக்குச் சென்று குளித்து அங்கிருக்கும் ஐயனாரை வழிபட்டு, சுனையில் இருந்து குடத்தில் தண்ணீர் எடுத்து வந்துவிடுவாள். அந்தச் சுனையில் கரையில் ஒரு மாமரம் இருந்து வந்தது. அதில் ஒரே ஒரு மாங்கனி இருந்தது. அதை மிகவும் கவனமாகக் காத்து வந்தனர் அந் நாட்டுக…

  11. Started by akathy,

    http://www.youtube.com/watch?v=Si-X_EDfGzU

    • 0 replies
    • 856 views
  12. அர்ச்சனைக்கு பெயரையும் ராசியையும் சொல்லி விட்டு கேட்டதை எல்லாம் சாமி கொடுப்பார் என்று காத்திருக்கும் அடியார்களுக்கு தெரிவதில்லை அர்ச்சனை செய்யும் பூசகர் சமஸ்கிருதத்தில் சொல்லும் மந்திரத்தின் அர்த்தங்கள். அதை விடக் கொடுமை, கலியாணம் கட்டும் போது உச்சரிக்கப்படும் மந்திரங்களில் இருக்கும் அருவருக்கத்தக்க ஆபாசம். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

  13. ஒரு அம்மாக் குருவி நெல் வயலில் கூடு கட்டியிருந்தது. கூட்டில் அது முட்டையிட்டு அடைகாத்தது. அப்பாக் குருவி துணையாக இருந்தது. முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவந்தன. அப்பாக் குருவியும், அம்மாக் குருவியும் குஞ்சுகளைப் போற்றி வளர்த்தன.நாட்கள் கடந்தன. நெற்பயிர் நன்றாக விளைந்துவிட்டது. அறுவடை செய்வதற்கு விவசாயி எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் பெரிய குருவிகள் இரண்டும், குஞ்சுகளுக்கு இரை தேடிப் போகவேண்டும். இருவரும் இல்லாத நேரத்தில் அறுவடை செய்வதற்கு ஆட்கள் வந்து, கூட்டைக் கலைத்து குஞ்சுகளைக் கொன்றுவிட்டால் என்ன செய்வது? இதுதான் பெரிய குருவிகளின் கவலை.ஒரு நாள் அம்மாக் குருவி தன் குஞ்சுகளிடம் சொன்னது: “பிள்ளைகளே, விவசாயி வயலுக்கு வந்தால், அவர் என்ன சொல்கிறார் என்று …

  14. இனக்ப்படுகொலை (Genocide) ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த , இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது. இது குறித்து 1948 ல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யபட்ட, தண்டணைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2 ன்படி அறிவித்துள்ளது. இதன்படி ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தை பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் …

  15. ஞானி ஒருவரை சந்தித்த பணக்காரன் ஒருவன் ” சுவாமி என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. விளை நிலங்களும் ஏராளம் உள்ளது, உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது. எனவே நான் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை எவரிடமிருந்தும் எந்த உதவியையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை?” என பெருமையடித்துக்கொண்டான். புன்சிரிப்போடு கேட்ட ஞானி ” வா சற்று தூரம் நடந்து விட்டு வரலாம் ” என்றார். ” கடுமையான வெயிலில் போகவேண்டுமா? என தயங்கினாலும் ஞானி கூப்பிடும்போது மறுப்பது நன்றாக இருக்காது என்பதால் கிளம்பினான். சிறிது தூரம் சென்றதுமே வெப்பம் தாங்காமல் தவித்த செல்வந்தன் ஏதாவது நிழல் இருந்தால் சற்று ஒதுங்கலாமே என எண்ணி சுற்றும் முற்றும் பார்த்தான். எந்த நிழலும் தென்பட வில்லை ஞானி கேட்டார் ” என்ன தேடு…

  16. தமிழ்நாடு என்பது திராவிடநாடு என்றும், திராவிடநாடு என்பதானது இன்னது என்றும், வெகுகாலமாகவே அய்ரோப்பிய அறிஞர் முதல் பல உலக ஆராய்ச்சிக்காரர்களாலும், இந்திய சரித்திர ஆராய்ச்சியாளராலும் எல்லை காட்டி வகுக்கப்பட்டிருக்கிறது என்றும் நான் இது விஷயமாகப் பேசுகிற இடங்களில் எல்லாம் இதைப்பற்றி விளக்கிப் பேசியே வந்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளைத்தாய் மொழியாகப் பேசிவந்த மக்களையே மிகுதியாகக் கொண்ட நாடுகள் - இது திராவிடம் என்று சொல்லப்படுவது யாவரும் அறிந்ததேயாகும். அந்தத் திராவிடம் என்பது பெரிதும் சென்னை மாகாணமாகவே இருக்கிறதுடன் மற்றும் சிறிது சென்னை மாகாணத்தைத் தொட்ட சுற்றுப்புற நாடாகவும் இருக்கிறது. இந்த விஸ்தீரணத்திற்குட்பட்ட முஸ்லிம்களும், கி…

  17. நன்றி சொல்வேன் தெய்வமே..! காயத்தில் இருந்து குணமடைந்த சிம்பன்ஸி குரங்கை மறுபடி காட்டுக்குள் விடும்போது நிகழும் சம்பவம்.. நன்றி மறந்த மனிதர்களுக்கு மத்தியில், நன்றியுடன் தன் காயத்தை குணப்படுத்திய மனிதர்களுக்கு ஒரு சிம்பன்ஸி கட்டி அணைத்து தன் நன்றியை தெரிவிக்கும் இக்காணொளி, உங்கள் மனதையும், கண்களையும் கலங்க வைக்கும். https://www.facebook.com/video.php?v=749300595104208 sourec:FB.

  18. யாழ் தோழர்களே, நலமா..? வேறொன்றும் இல்லை, நாலு பக்கமும் தமிழனுக்கு சோதனை மேல் சோதனையாக வந்தவண்ணம் இருக்கிறதே என மனச்சோர்வுடன் இணையத்தில் துழாவியபோது தினமலரில் இத்துரும்பு செய்தியை படித்தேன்.. மனதிற்கு சிறிய ஆறுதல்.. இங்கேயும் பதிகிறேன்.. அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான். மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன். "ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து ப…

  19. விடிமுன் எழுமின்! ஒரு நாள் மீனவன் அதிகாலையிலேயே எழுந்துவிட்டான்.. போதிய வெளிச்சம் இல்லாததால் கடலுக்கு செல்ல இயலவில்லை.. இருளில் அருகே ஒரு சிறு பொதியில் கற்களைக் கண்டான்.. அவற்றை எடுத்து ஒவ்வொன்றாக கடலில் வீசத் தொடங்கினான்.. கடைசிக் கல் அவன் கைக்கு வந்தபோது சூரிய வெளிச்சம் வந்தது.. கையில் கிட்டிய அந்தக் கடைசி கல்லை பார்த்து திடுக்கிட்டான்.. அவன் கையில் இருந்ததோ விலை பதிப்பற்ற வைரக் கல்! இதுவரை கவனிக்காமல் அனைத்தையும் கடலில் எறிந்த தன் துர்பாக்கியத்தை எண்ணி நொந்தான்..! வருந்தினான்..!! அழுதான்...!!! .... .... .... .... இக்கதை சொல்லும் சமூக நீதி என்ன....?..... …

  20. கார்த்திகை தீபம்! தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்பட்டுவரும் கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்துவருவதால், இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது. தமிழ் இலக்கியங்களிலும், சங்க இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. திருக்கார்த்திகை நாள், தமிழர்கள் தமது இல்லங்களிலும், கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனுக்கும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவுக்கும் இடையே யார் பெரியவன் என்ற போர் பல வருடங்களாக நடந்துவந்தது. இவர்களின் கர்வத்தை அட…

  21. மாயப் பொன்மான் மாயை என்னும் மான் நம் உடலில்- மனிதனின் உடலில் வசிக்கிறது. இது ஒரு தோற்ற மயக்கம். அது உண்மையில் அங்கு இல்லை; அது இருப்பதுபோல் தோன்றுகிறது. இத்தோற்ற மயக்கம் உங்களுக்குள் ஆசையை உருவாக்குகிறது. சீதை கேட்ட பொன்மானின் கதை உங்களுக்குத் தெரியும். சீதை காட்டில் தன் குடிசைக்கு வெளியே வந்து நிற்கிறாள்; அங்கு ஒரு பொன்மானைக் காண்கிறாள். இந்த கதையின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொன்மான் என்பது உண்மையாக இருக்க முடியாது (அது மனதில் தோன்றும் ஆசை). ஆனால் சீதை , “ அந்த பொன்மான் எனக்கு எப்படியும் வேண்டும்.” என்று கேட்டாள் . இராமன் அவள் அவ்வளவு ஆசையுடன் கேட்ட பொன்மானை துரத்திக் கொண்டு காட்டுக்குள் போனார். இராமன் உங்களுக்குள் இருக்கும் சாட்…

  22. - பாவண்ணன் 'வழிமயக்கம்' என்ற தலைப்பில் பாலகுமாரன் ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். அடுக்கப்பட்ட வாழைத்தார்களோடு சாலைவழியாக வண்டியை இழுத்துக்கொண்டு செல்வார் ஒரு வண்டிக்காரர். அதே சாலையில் ஓரமாக வேறொருவர் நடந்து செல்வார். அவருக்கும் வண்டிக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. இருவருமே வெவ்வேறு நோக்கங்களோடு தனித்தனியாகச் செல்கிறவர்கள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதுகூட இல்லை. எதிர்பாராதவிதமாக சந்திக்கிற நண்பரொருவர் பார்வையில் வாழைத்தார்களை வாங்கி வண்டியிலேற்றிவிட்டு கூடவே இவரும் நடந்துசெல்வதுபோலத் தோன்றுகிறது. என்ன விலைக்கு வாங்கினீர்கள், எங்கே வாங்கினீர்கள் என்றெல்லாம் கேட்கத் தொடங்குகிறார். நடந்துசெல்லும் நண்பர் குழப்பமும் கூச்சமுமடைகிறார். அது தன்னு…

  23. ரம்மியமான ரமலானே வருக, வருக!! இதோ இக்குவலயத்தை நிழலிடஆரம்பித்திருக்கும் ரமலான் மாதம் இஸ்லாமிய சரித்திரத்திலும் ஓர் தனிப்பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. நூற்றாண்டுகளாக நேரியதோர் மார்க்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மானிட கோடிகளுக்கு இறுதி நபி, முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தெய்வீக வழி முறைகளை ஒழுகி நடக்கும் சந்தர்ப்பத்தை வாய்க்கச் செய்ததும் இம் மாதமே. புனித ரமலானின் மகிமையை இறைவன் தன் திருவேதத்திலே எடுத்தியம்புகிறான் இவ்வாறு: ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவ மிக்க) மாதமென்றால்; அதில்தான் ‘குர்ஆன்’ எனும் (பரிசுத்த - வேதம்) அருளப்பெற்றது. அது மனிதர்களுக்கு நேர்வழியாகவும் (நன்மை தீமைகள் யாவை யெனப்) பிரித்தறிவித்து…

  24. காஞ்சிபுர சிவத் தலங்கள் காஞ்சி மற்றும் காஞ்சி புராணத்தில் இடம்பெற்றுள்ள சிவத் தலங்கள் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ள கோயில்கள் கச்சிநெறிக்காரைக்காடு புண்ணியகோடீசம் சிவாஸ்தானம் மணிகண்டீசம் சார்ந்தாசயம் அங்கீரசம் அத்திரீசம் - குச்சேசம் காசிபேசம் கௌதமேசம் பார்க்கவேசம் வசிட்டேசம் பராசரேசம் ஆதீபிதேசம் கருடேசம் பணாதரேசம் காயாரோகணம் சித்தீசம் அரிசாப பயந்தீர்த்ததானம் இஷ்டசித்தீசம் கச்சபேசம் சுரகரேசம் தான்தோன்றீசம் அமரேஸ்வரம் அனேகதங்காவதம் கயிலாயநாதர் கோயில் வீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.