மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
"மெய்யெனப் படுவது" இப்பகுதியிலே ஆழமான பல கருத்துக்கள் சிறந்த முறையில் எம் யாழ் கள உறவுகளால் ஆராயப்பட்டு வருவது சிறப்பாக இருக்கிறது. சிலவற்றைப் படித்தேன், பல இன்னும் படிக்க வேண்டியிருக்கிறது. ஆராய்வதே மனிதனுக்கு உள்ள ஆறாவது அறிவின்(6வது அறிவு என்று நாமே செல்லிக்கொண்டிருப்பது) சிறப்பு. காரணம் இல்லாமலோ அல்லது காரணம் தெரியாமலோ எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டிருப்பன் சிந்திக்கும் மனிதனாக இருக்க முடியாது. மனிதானாய் வாழ்வதற்கும், மந்தையாய் இருப்பதற்கும் இதுதான் வேறுபாடு. இங்கு தற்போது எனது சந்தேகம்: தமிழகத்தில் பொதுவாக பார்த்தால் எமது ஈழப்பிரச்சினைக்கு நீண்ட காலமாகவே குரல் கொடுத்து வரும் அமைப்புக்களின் பின்னணியில் திராவிடக் கொள்கை இருப்பது தெ…
-
- 9 replies
- 1.9k views
-
-
தமிழ்நாடு என்பது திராவிடநாடு என்றும், திராவிடநாடு என்பதானது இன்னது என்றும், வெகுகாலமாகவே அய்ரோப்பிய அறிஞர் முதல் பல உலக ஆராய்ச்சிக்காரர்களாலும், இந்திய சரித்திர ஆராய்ச்சியாளராலும் எல்லை காட்டி வகுக்கப்பட்டிருக்கிறது என்றும் நான் இது விஷயமாகப் பேசுகிற இடங்களில் எல்லாம் இதைப்பற்றி விளக்கிப் பேசியே வந்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளைத்தாய் மொழியாகப் பேசிவந்த மக்களையே மிகுதியாகக் கொண்ட நாடுகள் - இது திராவிடம் என்று சொல்லப்படுவது யாவரும் அறிந்ததேயாகும். அந்தத் திராவிடம் என்பது பெரிதும் சென்னை மாகாணமாகவே இருக்கிறதுடன் மற்றும் சிறிது சென்னை மாகாணத்தைத் தொட்ட சுற்றுப்புற நாடாகவும் இருக்கிறது. இந்த விஸ்தீரணத்திற்குட்பட்ட முஸ்லிம்களும், கி…
-
- 0 replies
- 851 views
-
-
யூதர்கள் ஒரு கடவுள் என்றும் அவர் தான் இவ்வுலகத்தை படைத்தார் ,எல்லாம் வல்லவர் என்றும் கருணை படைத்தவர் என்றும் கூறுகின்றது. " தோரா", என்பது பைபிள்,குர் ஆன்,திருக்குறள் போன்று,யூதர்கட்கு ஒரு புனித நூலாகும். தோரா என்பது கற்பித்தல் என்று பொருள் படும். யூதர்கள் இயேசு கிறிஸ்துவை ஒரு "மெசாயாவாக" என்று நம்புவதில்லை.அவர்கள் (யூதர்)மெசாயா ஒரு மனிதர் என்றும்,மெசாயா கடவுள் அல்லவென்றும்,அவரே உலகத்தின் அமைதிக்கும்,ஒற்றுமைக்கும் தலைவன் என்றும் அவர் அரசன் டேவிட்டின் குடும்பத்தில் இருந்து வருவார் என்றும் கூறுகிறது. Judaism is a monotheistic religion. Jews believe there is one God who created and rules the world. This God is omnipotent (all powerful), omniscient (all knowing) and …
-
- 7 replies
- 2.5k views
-
-
தமிழ் மொழிப்பற்று! தாய்மொழிப்பற்று பற்றி தந்தை பெரியார் சொன்ன கருத்துக்கள்! *** "ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கோண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை." *** "தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்லுகிறேன். வங்காளிக்கு வங்கமொழியில் பற்றுண்டு; மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு; ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு; ஆனால், தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை. தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதவரையில் தமிழர்கள் முன்…
-
- 3 replies
- 9.8k views
-
-
போத்துக்கேயர் 1505ம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கைக்கு வந்து படிப்படியாக கரையோரப் பகுதிகளையும் பின்னர் கொழும்பையும் கைப்பற்றி ஆட்சி புரிந்த போது தமது கத்தோலிக்க மதத்தினைப் பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். 1623ம் ஆண்டு யாழ்ப்பாணத் திலும், திருகோணமலையிலும் இருந்த பாரிய சைவக் கோயில்களை இடித்து தரைமட்டம் ஆக்கி கத்தோலிக்க ஆலயங்களை கட்டினார்கள். 1658ம் ஆண்டு இலங்கையின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றிய டச்சுக்காரர் தமது கிறீஸ்த்தவ மதத்தினைப் பரப்பும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். மதமாற்றத்துக்கு பாடசாலைகளை முக்கியகளமாக இவர்கள் பயன்படுத்தினார்கள். பிரித்தானியர்கள் 1795ம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றினர். இவர்களும் டச்சுக்காரர்களைப் போ…
-
- 11 replies
- 3.5k views
-
-
பெரியார் சிலைகளை உடைத்தது ஏன்? பெரியார் ராமர், பிள்ளையார் சிலைகளை செருப்பால் அடித்தம், போட்டு உடைத்தும் போராட்டம் நடத்தினார் என்பது வரலாறு. இதைய யாரும் மறுக்க முடியாது. பெரியார் செய்தது சரியா? அவர் இப்படி செய்து கோடானகோடி இந்துக்களின் மனதை புண்படுத்தியது நியாயமா என்று சிலர் கேட்கிறார்கள். அதற்கு என்னுடைய கருத்தை சொல்கிறேன். பெரியாருடைய சிலை உடைப்பு போராட்டம் போன்றவைகள் ஒரு எதிர்விழைவாகத்தான் இருந்தன. இராமர், பிள்ளையார் போன்றவைகள் தமிழர்களின் சுயமரியாதையை புண்படுத்துவதை பெரியார் உணர்ந்தார். இந்தக் கடவுள்கள் ஆபாசமான, அருவருப்பான கதைகளின் மூலம் உருவாக்கப்பட்டிருப்பதையும், அந்தக் கதைகளை நம்பி மக்கள் அதன் அடிப்படையில் விழா எடுப்பதையும் கண்டார். ஒரு சிற…
-
- 26 replies
- 11k views
-
-
சமண - பௌத்த மதங்களை அழித்த சைவம்! கி.பி.ஐந்து ஆறு ஏழாம நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பௌத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில்பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பௌத்த மதங்களைத் தழுவியிருந்தனர். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் 'பக்தி' இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பௌத்த மதங்களை அழித்திட முற்பட்டனர். 'சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்த…
-
- 102 replies
- 217.5k views
-
-
பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழர்களின் பொருளாதார நடவடிக்கைகள் அவர்களிடையே செல்வம் சேர்வதற்கு வழிவகுத்தது. 17 யாழ்ப்பாணக் குடா நாட்டில் புகையிலை, நெல் உற்பத்தி என்பனவே பிரதான தொழில்களாக இருந்தன. இக்காலப்பகுதியில் புகையிலை உற்பத்தி தொடர்ந்து அபிவிருத்தி அடைந்து வந்தது. இதற்குக் காரணம் யாழ்ப்பாணச் சுருட்டுக்கு இலங்கையின் மேற்கு தெற்குப் பகுதிகளில் மாத்திரமல்லாமல் இந்தியாவின் திருவாங்கூர், கொச்சின் பகுதிகளிலும் பெரும் கிராக்கி இருந்ததே. இந்து சாதனம் குறிப்பிட்டது போல் இலங்கைத் தீவின் செழிப்புக்குக் கோப்பி எப்படிக் காரணமோ அவ்வாறே யாழ்ப்பாணக் குடாநாட்டுச் செழிப்புக்குப் புகையிலை காரணமாயிற்று.18 பொருளாதார இலாபமற்ற நிலவுடமை காணப்பட்ட குடாநாட்டில் சனத்தொகை அ…
-
- 0 replies
- 11.5k views
-
-
இதனை எழுதுவதற்கான பல நூல்களையும் கட்டுரைகளையும், பேராதனைவளாக நூலகத்திலும், யாழ்ப்பாணவளாக நூலகத்திலும் பயன்படுத்தியுள்ளேன். குறிப்பாக பேராதனைவளாக நூலகத்தினைச் சேர்ந்த நண்பர் திரு. எம். துரைசுவாமி அவர்கள் இவ்விடயம் பற்றிய தகவல் தேட்டத்திற்கு அரும்பெரும் உதவி செய்துள்ளார்.இந்நூலைப் பிரசுரித்தற்கான தாள்களைக் குறைவின்றிப் பெறுவதற்கு அனுமதி வழங்கிய கிழக்கு இலங்கைக் கடதாசிக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு. கே. சி. தங்கராஜா அவர்களும். இதனை அச்சிட்டு உதவிய கலைவாணி அச்சகத்தாரும், குறிப்பாக முன்னின்று முகமலர்ச்சியுடன் உதவிய நண்பர் திரு. க. முருகேசு அவர்களும் நினைவுக்குரியவர்கள்.நூலாக்க
-
- 0 replies
- 1.6k views
-
-
பார்ப்பனர்கள் அரங்கேற்றும் ஆரியக்கூத்து அ. மார்க்ஸ் 1. முன்னுரையாக ‘இது ஒரு ஆழமான ஆராய்ச்சிப் படைப்பு’ என்கிற அறிமுகத்தை அட்டையிலேயே தாங்கிய வண்ணம் ‘தமிழக அந்தணர் வரலாறு’ என்னும் ஒரு நூல் சென்ற ஜனவரி 2004இல் வெளிவந்தது. அக்டோபரில் இரண்டாம் பதிப்பும், ஜூன் 2005இல் மூன்றாம் பதிப்பும் வெளியாகியுள்ளது(1). நூலைத் திறந்தவுடன் இன்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணையிலுள்ள காஞ்சி சங்கராச்சாரிகள் இருவரின் படங்களும் காட்சியளிக்கின்றன. “பிராமணர்கள் இந்தியாவின் பழங்குடி மக்கள் என்பதைப் பல ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி, சமுதாய மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று கூறும் ‘தமிழக அந்தணர் வரலாறு’ என்ற மாபெரும் நூல் ஸ்ரீமடத்தின் அத்யந்த ப்ரியர் ஸ்ரீ கே.சி. ல…
-
- 124 replies
- 12.4k views
-
-
இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம் சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலம் இடிக்கப்படுவது அமெரிக்க மற்றும் விடுதலைப் புலிகளின் கூட்டுச் சதி என்று விஸ்வ இந்துப் பரிஷத் குற்றம் சாட்டியுள்ளது. ராமர் பாலம் இடிக்கப்படுவதைக் கண்டித்து எதிர்வரும் 12ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாகவும் விஸ்வ இந்துப் பரிஷத் அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று விஸ்வ இந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர் எஸ்.வேதாந்தம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இதன்போது இக்கருத்தை வெளியிட்டார். அவர் கூறியதாவது: ராமர் பாலம் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமைய…
-
- 265 replies
- 30.5k views
-
-
பாரதியார் - பாரதி யார்? செப்டெம்பர் 11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினமாகும். 11 டிசம்பர் 1882ம் ஆண்டு பிறந்து 11 செப்ரெம்பர் 1921ம் ஆண்டு மறைந்த இந்த உண்மையான உணர்வு பூர்வமான கவிஞன் தன் வாழ்வில் சந்தித்த சோதனைகள் தாம் எத்தனை? வேதனைகள் தாம் எத்தனை? தான் வாழ்ந்த நாட்களில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறாமல் பசியில் பட்டினியில் வாழ்ந்தவன் தான் பாரதி என்கின்ற மகாகவி! பசியாலும், பிணியாலும் வாடி இறந்தவனை 'யானை அடித்து கொன்றது" என்ற கட்டுக்கதையைக் கட்டி தன் அவமானத்திற்கு தமிழ்நாடு திரைபோட்டுள்ளது. யானையால் பாரதி தள்ளுண்ட நிகழ்வு ஒரு யூன் மாதத்தில் நிகழ்ந்தது. அச் சம்பவத்தின் பின்பு அவர் வழக்கம் போல 'சுதேச மித்திரன்" பத்திரிகை அலுவலகம் சென்று தனது வேலைகளைச் செய்து …
-
- 0 replies
- 2.9k views
-
-
கடவுள் நம்பிக்கை இந்து மதம் போதிப்பவற்றை விஞ்ஞானத்தினால் நியாயப்படுத்த முனைவதில் புகழ் பெற்ற இன்னுமொருவனும் வெற்றி வேலும் இந்த மோட்சம் மீள்பிறப்பு, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் பற்றி இந்து மதத்தை நம்புபவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை நிலைப்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது சரியானதா? அதை எப்படி அறிவியல் ரீதியில் விஞ்ஞானரீதியல் எப்படி விளங்கப்படுத்தலாம் என்று சொல்ல முடியுமா?
-
- 2 replies
- 1.3k views
-
-
மனமே! சிந்தனை செய் 1. திருவருட்பா பாடிய இராமலிங்கர் அருளாளரா? 2. அப்பாடல்களை அருட்பா என்று சொல்லலாமா? 3. சொன்னால் பாபமில்லையா? 4. படித்தால், பாடினால் ஆன்மலாபம் கிட்டுமா? தெளிந்து செயலாற்று
-
- 26 replies
- 6.6k views
-
-
நான் என் கீதையை நியாயப்படுத்த முயலவேண்டும் ? அவசியமே இல்லை. ஒரு சிந்திக்கும் தனிமனிதனாக நான் தூக்கிச்சுமக்கவேண்டிய நூல் என்று ஏதும் இல்லை . நான் நியாயப்படுத்தியாகவேண்டிய எந்தநூலும் , எந்த தத்துவமும் இல்லை. இந்தச் சுதந்திரத்தையே சிந்திக்கும் ஒருவன் அடிப்படையான விதியாக தனக்கு விதித்துக் கொள்ளவேண்டும். உலகிலுள்ள எந்த நூலைச்சார்ந்தும் என் இருப்பு நிர்ணயிக்கப் பட்டிருக்கவில்லை. எதன் மீதும் நான் விட இயலாத பிடிப்பு கொண்டிருக்கவில்லை. அந்தரங்கமாகச் சொல்லப்போனால் என் சொந்த படைப்புகள், இன்னும் குறிப்பாக 'விஷ்ணுபுரம் ' 'பின்தொடரும் நிழலின் குரல் ' என்ற இருநாவல்கள் ஆகியவற்றைச் சார்ந்தே எனக்கு அப்படி ஒரு பிடிப்பு உள்ளது. அது அசட்டுத்தனமானது என நான் அறிவேன். ஆனால் மனம் அதை ஏற்க மற…
-
- 4 replies
- 1.7k views
-
-
உயிர் என்பதும் ஓர் நிலை சக்தி தான். எமது உடல் என்ற இரசாயனத் தொகுதி.. சிக்கலான வெப்ப இரசாயனத் தொகுதி ( complex thermodynamic system (open). எமது உடல் எனும் இரசாயனத் தொகுதிக்குள் மீளக் கூடிய மீள முடியாத ( reversible and iireversible) என்று இரண்டு வகைத் தாக்கங்களும்.. உடலளவில் நிகழும் disorders தங்கி இருக்கின்றன. அந்த குழப்பங்கள் ஒரு சமநிலைக்குள் இருக்கும் வரை உடல் தானாகவே தொகுதிகளை இயக்க ஆரம்பிக்கிறது. இப்போ.. தொலைக்காட்சிப் பெட்டிக்கு மின்சாரத்தை வழங்கியதும் அது இயங்குவது போல. தொலைக்காட்சிப் பெட்டியையே சுமார் 80 பாகை வெப்பநிலை உள்ள சூழலில் வையுங்கள்..என்னாகும்.. அதன் இயக்கம் நிறுத்தப்படும். எங்கெல்லாம் இரசாயனம் இருக்கோ ( அது இல்லாம் உலகில் உள்ள ஒன்று வெற்றிடம் மட்டும் தான்…
-
- 1 reply
- 1.4k views
-
-
ராமர் காட்டும் ராமராஜ்யம் சின்னக்கருப்பன் மாலன் தான் எழுத என்று 'வலைக்குறிப்புகள் ' வைத்திருக்கிறார். அதில் கீழ்க்கண்ட வரிகள் இருந்தன. 'உலக சரித்திரத்தை நேரு இந்திராவிற்குக் கடிதங்களாக எழுதினார். அதில் அவர் எழுதுகிறார்: ' ராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போராட்டம் பற்றிய கதை. அது திராவிடர்களுக்கு எதிராக எழுதப்பட்ட கதை ' ராமர் சரித்திர நாயகன் என்று சொல்லும் வி.எச்.பி இன்னொருபுறம் அவர் மனிதகுலத்தின் மேலான குணங்களின் அடையாளமாகத் திகழ்ந்தவர், இந்தப் பிரபஞ்சம் எந்த தர்மத்தின் அடிப்படையில் இயங்குகிறதோ அந்த தர்மத்தின் வடிவம் ( மரியாத புருஷோத்தம்) என்றும் வாதிடுகிறது. ராமாயணம் அறிந்தவர்களுக்குத் தெரியும். தன் கணவன் அல்ல என்று தெரிந்த பின்னும் தானே விரும…
-
- 2 replies
- 3.1k views
-
-
வெற்றிக்கு வழி வெற்றிக்கு வழி என்பது மலர் தூவிய பாதை அன்று அது முட்களாலும், புதர்களாலும் நிரம்பியது. எந்த வெற்றியாளனும் பிறக்கும் போதே வெற்றியைக் கையில் பிடித்துக் கொண்டு பிறப்பது இல்லை. பின்னர் எது அவனை பிற்கால வாழ்க்கையில் வெற்றியாளனாக மாற்றுகிறது என்று கேட்டால், தன்னம்பிக்கையும் இடைவிடாத முயற்சியுமேயாகும். தன்னுள் இருக்கும் திறமைகளை அடையாளம் காணுதல் இதற்கு அவசியம். இந்தத் தேடலும் புரிதலும் ஒரு நாளில் வந்துவிடுவதில்லை. தன்னுடைய முன்னவர்களை, அவர்களுடைய எண்ணங்களை, அவர்கள் கடந்து வந்த பாதைகளைப் பற்றிய புரிதல்தான் அவனுள்ளே நம்பிக்கை விதையை விதைக்கிறது. அந்த நம்பிக்கை காலம் செல்லச் செல்ல சிறிய செடியாகி மரமாகி நிலைக்கிறது. அதன் பயனாக வாழ்க்கையின் கனியை அவன் சுவைத…
-
- 0 replies
- 1.5k views
-
-
சோதிடப்புரட்டுக்கள்!!! சோதிடம் புவியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் தலைவிதியை அந்த நேரத்தில் விண்ணில் காணப்படும் சில குறிப்பிட்ட கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் ஆகியன தீர்மானம் செய்கின்றன என்று சொல்லுகிறது. இதனை அறிவியல் அடிப்படையில் காண்பிக்க முடியாது. சோதிடத்தின் அடிப்படை மத நம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை போல் வெறும் மனத்தளவிலான நம்பிக்கை மட்டுமே.சோதிடம் - சாதகம் என்பவை போலி அறிவியலே என்பதை சுருக்கமாகக் காண்போம்.. (1) சோதிட சாத்திரம் நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் வேறுபடுகின்றன. (2) வெப்ப மண்டல சோதிடம் நெப்தியூன், யுறேனஸ் மற்றும் புளுட்டோ கோள்களைக் கணக்கில் எடுக்கிறது. ஆனால் இராகு, கேது கோள்கள…
-
- 3 replies
- 1.9k views
-
-
இயேசுநாதர் தெரிந்தெடுத்த 12 சீடர்கள்! இம்மானிட குலத்தின் மீட்பராக இவ்வுலகில் தோன்றியவர் இயேசுபிரான் என்பதை அறிவோம். இவரை பின்பற்றும் கோடிக்கணக்கானோர் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளனர். இயேசுநாதரின் தோற்றம், பின்னர் அவரது போதனைகளைப் பொறுக்காமல் அவர் சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்தது குறித்தும் ஏற்கனவே அறிந்தோம். இந்த கட்டுரையில் இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் அவருடன் வாழ்ந்து, அவரது போதனைகளைப் பின்பற்றிய 12 சீடர்கள் பற்றியும், அதன்பின் வந்த 2 சீடர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். இஸ்ரேலின் பெத்லகேம் என்னும் ஊரில் சுமார் இரண்டாயிரத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் இயேசுநாதர் இவ்வுலகில் பிறந்தார். இவரின் தந்தை யோசேப்பு, தாயார் மரியாள் ஆவர். …
-
- 10 replies
- 38.7k views
-
-
`இந்துக்கள் அனைவரும் மதத்தால் ஒன்றுபட்டிருந்தாலும் அவர்களுக்கு போதிய ஒழுங்கமைப்பு இல்லை' [08 - August - 2007] * கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றத்தின் கலைவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை பல வேற்றுமைப்பட்ட சமயக் கூறுகளை உள்ளடக்கிய மக்கட் பிரிவினர்களைத் தன்னுட் கொண்டதே இந்து மதம். இந்து மதம் என்ற சொல்லைப் பாவிக்காதீர், சைவசமயம் என்று கூறுங்கள் என்று பெரும்பான்மை இந்து சமயிகள் இலங்கையில் காலங்காலமாகப் பின்பற்றிய மதத்தின் பெயரால் எல்லா இந்து சமயத்தவரும் அழைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விட்டுக் கொண்டிருப்பவர்கள் பலர் இன்று…
-
- 0 replies
- 1.2k views
-
-
இருட்டைக் கண்டு பயப்படும் குழ்ந்தகளை தட்டிக் கொடு. வொளிச்சத்துக்கு வர பயப்படும் பொரியவர்களை முட்டி விடு. ---அயன்சைடின்.
-
- 14 replies
- 2.7k views
-
-
ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை மறை பரப்பு நாடுகளின் பாதுகாவலி என்றழைக்கப்படும் குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலயம் வட சென்னை பகுதியில் கே.கே.ஆர். அவின்யூ செம்பியம் பகுதியில் உள்ளது. 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ம் நாள் அப்போதைய சென்னை மயிலை பேராயராக இருந்த மேதகு அருள்தாஸ் ஜேம்ஸ் ஆன்டகை அவர்களால் பெரம்பூர் புனித லூர்து (ஸ்ட். தொமச்) அன்னை திருத்தல பங்கிருந்து தனி பங்கிற்கான அந்தஸ்து பெற்று முதல் பங்கு தந்தை அருள் திரு. பேசில் ஸ்DB அடிகளார் தலைமையில் செயல்பட்டது. அதன் பிறகு 2003 ம் ஆண்டு மே மாதம் 25 ம் நாள் சென்னை மயிலை உயர் மறை மாவட்டம் தன் பொறுப்பில் ஏற்று பங்கு தந்தையாக (Pஅரிஷ் Pரிஎச்ட்) அருட்திரு. இனிகோ (றெவ். Fர். ஈனிகொ) அடிகளார…
-
- 1 reply
- 1.1k views
-
-
கிறிஸ்துமஸ் சிறப்பு : இயேசு கிறித்துவின் பிறப்பு டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே நம் நினைவுக்கு வரும் பண்டிகை கிறிஸ்துமஸ். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இப்பண்டிகையைப் பற்றிய சிறப்புக் கட்டுரைகளை வெப்உலகம் வாசகர்களுக்காக ஆன்மீகம் - கிறிஸ்துமஸ் சிறப்பு பகுதியில் அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இப்பகுதியில் இயேசு கிறித்துவின் பிறப்பு, இயேசு பிறப்பின் தூது, இயேசுவின் பொன்மொழிகள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், விசேஷ ஆல்பம்..... என இன்னும் பல சிறப்பு பகுதிகள் ஒவ்வொன்றாக இடம் பெற உள்ளது. இனி, கட்டுரைக்குச் செல்வோமா... உலக வரலாற்றில் புகழ்பெற்ற பேரரசர்களில் இஸ்ரவேலை (ஈச்ரஎல்) ஆண்ட சாலமோன் (Kஇங் ஸொலொமொன் - 975 BC) ஒருவர் என்பதை யாவரும் அறிவோம். அவருக்குப் பின் இஸ்ரவேல…
-
- 0 replies
- 1.9k views
-
-
குருவிடம் வந்தான் ஒருவன். ‘‘குருவே, என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு’’ என்றான் வந்தவன். ‘‘அப்படியா?’’ ‘‘ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப சந்தோஷமா இருக்கான். எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.’’ குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார். ‘‘இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்கஹீ£ரன் வாசலில் போடு. அதன்பிறகு என்ன நடக்கிறது என்று சொல்’’ என்றார். குரு சொன்னபடியே செய்தான் வந்தவன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான். ‘‘குருவே, அவன் நிம்மதியே போச்சு.’’ ‘‘அப்படியா, ஏன்? அவனுக்குத்தான் ஒன்பது தங…
-
- 0 replies
- 872 views
-