சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
நவீன குழந்தை வளர்ப்பின் பிரச்சனைகள் ஆர். அபிலாஷ் கேள்வி: இன்றைய உலகில் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். அவற்றை சமாளிக்கும்படி சிறுவயதில் இருந்து அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து தன்னம்பிக்கையாக வளர்ப்பது நல்லதல்லவா? பதில்: தன்னம்பிக்கை, சுதந்திரம், துணிச்சல் ஆகியன பயனுள்ள இயல்புகளே. ஆனால் இவை ஒரு குழந்தையின் தன்னுணர்வு, தன்னிலையில் இருந்து தோன்றும் அசலான இயல்புகளாக இருக்க வேண்டும். தன்னுணர்வு ஒருவருக்கு உள்ள வாழ்க்கைப் பார்வையில் இருந்து, அனுபவத்தில், அறிவில், நம்பிக்கைகளில் இருந்து தோன்ற வேண்டும். நான் இப்படியானவன், இப்படியானவள் என ஒரு குழந்தையால் சுலபத்தில் ஒரு முடிவுக்கு வர முடியாது. வளர்ந்தவர்களால் ஓரளவுக்கு இது முட…
-
- 0 replies
- 805 views
-
-
திருமண வாழ்க்கையில் மன ரீதியான மற்றும் உடல் ரீதியான தாக்குதல்கள் பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் ஏற்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் சித்ரவதைகளை வெளிச்சம் போட்டு காட்டும் இந்த சமுதாயமே, ஆண்களுக்கு திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை திரையிட்டு மறைத்துக்கொள்வதற்கான காரணங்களை வழிவகுத்துவிடுகிறது. வரதட்சணை பிரச்சனை, பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான சித்ரவதைகள் இவையெல்லாம் பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சனைகள், ஆனால் அவற்றை ஆண்களும் சந்திக்கும் பிரச்சனைகள் என்றால் ஏளனசிரிப்பு தான் இங்கு தீர்வாக கிடைக்கும், அல்லது இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆண்களுக்கு எதிராகவே திரும்பி விடுகிறது. அப்படி தனது குடும்ப வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் விழிப்புணர…
-
- 16 replies
- 3.1k views
-
-
போலியான செய்திகளை எவ்வாறு அடையாளம் காண்பது? ஊடக அறிவு (உண்மையான செய்திகளை, படங்களை, வீடியோக்களை அடையாளம் காண்பதற்கான கல்வியை) தொடர்பாக ‘மாற்றம்’ வெளியிடவுள்ள இன்போகிராபிக்ஸ் வரிசையில் இது முதலாவதாகும். கடந்த மார்ச் மாதம் கண்டி, திகனை பகுதிகளில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் வீடுகளையும் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் கலவரங்களை அடுத்தே ஊடகக் கல்வியறிவு என்ற விடயம் கவனத்திற்கு வந்தது. சிங்கள பௌத்த இனவாதிகளின் வன்முறை நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, அதனைத் தூண்டும் வகையிலான பொட்ஸ்கள் டுவிட்டரில் பிழையான தகவல்களை பரப்ப ஆரம்பித்தன. அதேபோல போலியான கணக்குகள், பக்கங்களைக் கொண்டு பேஸ்புக் ஊடாக இனவாதத்தைப் பரப்பும் நடவடிக்கைகளிலும் இனவாதிகள் ஈடுபட்…
-
- 0 replies
- 879 views
-
-
'ஏதாவது ஓர் அதிசயம் நிகழ்ந்து உன் துன்பமான வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் எனக் காத்திருக்கிறாயா... எந்த அதிசயமும் இதுவரை நிகழவில்லையா? எனில், நீயே அந்த அதிசயமாக மாறிவிடு!’ இன்று உலகின் மிக முக்கியமான தன்னம்பிக்கைப் பேச்சாளராகக் கருதப்படும் நிக் வ்யூஜெஸிக், அடிக்கடி உச்சரிக்கும் உத்வேக வரிகள் இவை. இந்த வார்த்தைகளை நிக், வெறுமனே உதடுகளால் உச்சரிக்கவில்லை. தன் வலி மிகுந்த பிறவியில், வளிமண்டலத்தில் எப்படியேனும் வாழ்ந்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் வழி தேடி, போராடி, உச்சம் தொட்ட பின், உணர்ந்து உச்சரித்தவை. 1982-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி... ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஒரு மருத்துவமனையில் நிக் பிறந்திருந்தான். பிரசவ மயக்கம் தெளிந்த அவனது தாய் துஸிகா, குழந்தையைத் தேடி…
-
- 2 replies
- 1.2k views
-
-
குழந்தைகள் முன்பு பெற்றோர் முத்தமிட்டுக் கொள்வதன் விளைவுகள்... தேவை கவனம்! முந்தைய தலைமுறை, முத்தத்துக்கான எல்லைகளை மிகச்சரியாக வகுத்திருந்தது. இன்றைய தலைமுறைக்கு இதில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. வீட்டில் குழந்தைகளின் எதிரில் முத்தமிட்டுக்கொள்ளும் பெற்றோர், இன்று அதிகரித்து வருகிறார்கள். கணவனும் மனைவியும் முத்தமிட்டுக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? சரி, தவறு என்ற வாதத்துக்குள் போகும் முன்பு, இந்தச் செயல் குழந்தைகளின் மனத்தில் என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்க வேண்டும். ``இந்திய கலாசாரத்தில் இதுபோன்ற விஷயங்கள் இன்னும் பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. க…
-
- 0 replies
- 633 views
-
-
திருவள்ளுவர் வரலாறும் திருக்குறளும். முன்னுரை: தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல். உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கி தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்குறது. அறிவும் சிந்தனையும் தான் மனித வாழ்க்கைக்கு ஆதாரம் அவற்றிலிருந்தே எல்லாம் தோன்றுகின்றன. திருவள்ளுவர் வர…
-
- 4 replies
- 4.4k views
-
-
எம்மைச் சுற்றி இருப்பவர்கள் எம்மிடம் எப்போதும் கேள்விகள் கேட்டு தொல்லைப்படுத்துவது வழமை. இதில் கேட்கப்படும் கேள்விகளில் முக்கியமான ஒன்று எப்போது நீ கலியாணம் கட்டப்போறாய் என்பது. ஏதாவது கேட்கவேண்டும் என்பதற்காக, என்னிடமும் பலர் இந்த கேள்வியை அடிக்கடி கேட்டு செய்து தொந்தரவு செய்யத் தொடங்கியதால் நான் இவர்களிற்காக ஒரு Standard பதிலை உருவாக்கி வைத்துள்ளேன்.. "படிப்பு முதலில முடிய வேணும், பிறகு இன்னும் நல்ல ஒரு வேலை கிடைக்கவேணும், பிறகு நல்ல ஒரு வீடு வாங்க வேணும், இதவிட, எனக்கு கனகாலமா இங்கஇருந்து அலுத்துப் போச்சு! வேற ஏதாவது நாட்டுக்கு மூவ் பண்னுற ஐடியாவும் இருக்கு.." "ஓ அப்பிடியே?" இந்த பதிலோட கதை முடிவுக்கு வரும்... ஆனால், என்னை அண்மையில் இரண்டு பெரியவர்கள் சேர்ந்த…
-
- 26 replies
- 4.8k views
-
-
திருமணங்களின் நீண்ட ஆயுளுக்கு, 'அன்பு' எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு நம்பிக்கையும் அவசியம். இந்த இரண்டில், எது இல்லாமல் போனாலும் அந்தத் தாம்பத்யம் தடுமாற ஆரம்பித்துவிடுகிறது. பெயர் வெளியிட விரும்பாத நம் வாசகர் ஒருவர், விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வியொன்றைப் பதிவு செய்திருக்கிறார். "எனக்குத் திருமணம் நடந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. என் மனைவிக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பேயில்லை என்பது ஒரு பரிசோதனையில் தெரியவந்தது. அதைக் கேள்விப்பட்டதும் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், தனக்குக் குழந்தை பிறக்காது என்ற விஷயம், என் மனைவிக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். இப்போது நான் என்ன செய்வது..?" - இதுதான் அவரின் கேள்வி. …
-
- 2 replies
- 1.2k views
-
-
மனப்பொருத்தம்(Dating) அவசியமானதா? ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 18 replies
- 5.1k views
-
-
வயதுக் கட்டுப்பாட்டை மீறி சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சிறுவர்கள் சமுகவலைதளங்களை பாவிக்க வயது கட்டுப்பாடு உள்ளது பிரிட்டனில் 10 முதல் 12 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களில் முக்கால்வாசிக்கும் அதிகமான சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற சமுகவலைதளங்களில் கணக்குகளை வைத்துள்ளதாக, சிபிபிசி ( பிபிசியின் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி) மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சமுகவலைதளங்களில் 13 வயதிற்கு குறைந்தவர்கள் கணக்குகளை வைத்திருக்க முடியாத கட்டுப்பாடுகள் உள்ளன. பிரிட்டனில் 10 தொடக்கம் 12 வயதுக்கு இடைப்பட்ட வயது சிறுவர்களில், முக்கால்வாசிக்கும் அதிகமானோர் வயது எல்லை கட்டுப்பாட்டையும் மீறி சமுகவலைதளங்களை பாவிக்கின்றன…
-
- 0 replies
- 800 views
-
-
பல காலமாக நான் எழுதி வரும் ஒரு விஷயம், தமிழ்நாட்டின் சீரழிவுக் கலாச்சாரத்துக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பவர்கள் – தமிழ் தெரியாமல் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டிருக்கும் புத்திஜீவிக் கும்பல். (இன்னும் மோசமான வார்த்தைகளில் திட்டத்தான் கை இழுக்கிறது. லிங்கனையும் காந்தியையும் எண்ணிக் கொண்டு மனக்கட்டுப்பாட்டுடன் கும்பல் என்று மட்டுமே சொல்கிறேன். மற்றபடி நீங்கள் எல்லா கெட்ட வார்த்தைகளையும் போட்டுக் கொள்ளலாம்.) மிக முக்கியமாக, அந்த ஆங்கில அறிவுஜீவிக் கும்பலின் முட்டாள்தனம் சகிக்க முடிவதில்லை. அந்தக் கும்பலுக்கு எதுவுமே தெரியாது. தெரிந்த ஒரே விஷயம், நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள்; தெளிவான ஆங்கிலம் எழுதுவார்கள். அவ்வளவுதான். அவர்களின் புத்தி, அறிவு எல்லாம் ரொ…
-
- 0 replies
- 800 views
-
-
“விழிப்புலனிழந்தோர்க்கு வழி சமைப்போம்” – கிஸ்ணன் மகிந்தகுமார் 87 Views விழிப்புலனிழந்தோரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் வகையில் பிரெய்லி எனும் தொடுகை உணர்வு எழுத்துரு உருவாக்கப்பட்டு 196 ஆண்டுகளாகின்றன. இவ்வெழுத்துரு வடிவமைப்பை பிரெய்லி எனும் விழிப்புலனிழந்த பிரெஞ்சு கல்வியியலாளரால் 1824 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. விழிப்புலனற்றோரின் வாழ்விற்கு வழிகாட்டிய அவரை நினைவுகூரும் விதமாக அவரின் பிறந்த தினமான ஜனவரி 4ம் திகதி சர்வதேச பிரெய்லி தினமாக 2019 முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி இலங்கை வடகிழக்கு விழிப்புலனிழந்தோர் சங்க செயலாளர் கிஸ்ணன் மகிந்தகுமார் அவர்களின் நேர்காணல் இங்கு வழங்கப்படுகிறது. …
-
- 0 replies
- 516 views
-
-
`மகனுக்கு 18 வயது ஆனதும் தந்தையின் கடமை முடிந்து விடாது!' - ஜீவனாம்ச வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் மு.ஐயம்பெருமாள் Court (Representational Image) சம்பந்தப்பட்ட பெண் சம்பாதிக்கும் பணம், இரண்டு குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் செலவுகளுக்கே போதுமானதாக இருக்கிறது. இதனால் மகனின் படிப்புச் செலவுக்குப் பணம் இருப்பதில்லை. இரண்டு குழந்தைகளும் அம்மாவுடன் வசிக்கின்றனர். கணவன், மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளில் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு பெரும்பாலான நேரங்களில் அம்மாவிடமே வழங்கப்படுகிறது. இதுபோன்ற விவாகரத்துகளில் விவாகரத்து பெறும் பெண்ணுக்கு குடும்ப நல நீதிமன்றங்கள் சொ…
-
- 0 replies
- 846 views
-
-
லாக்டவுன் காலகட்டத்தில் பெருகி வரும் பாலியல் சீரழிவுகள் ! ஒருபுறம் வி.பி.என். மூலம் ஆபாசத் தளங்கள் இளைஞர்களைச் சுரண்ட, டிக்டாக் போன்ற செயலிகள், யூ-டியூப் மூலம் இரட்டை அர்த்த வசனங்களில் பேசுவது, ஆபாச நடன அசைவுகள் போன்றவற்றின் மூலம் பெண்கள் நுகர்வுப் பண்டமாக காட்டப்படுகின்றனர். July 9, 2021 பத்ம சேஷாத்திரி பள்ளியின் ஆசிரியர்களான ராஜகோபால், கெவின் ராஜ் ஆகிய பாலியல் பொறுக்கிகளை பள்ளியில் படிக்கும் இன்னாள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அம்பலப்படுத்தத் துவங்கிய நாள் முதல் அடுத்தடுத்து பல்வேறு பள்ளிகளிலும் நடந்து வந்த இத்தகைய பாலியல் பொறுக்கித்தனங்கள் அனைத்தும் அம்பலமாகத் துவங்கின. சிவசங்கர் பாபா எனும் ஆன்மிகக் கிரிமினல், தாம் நடத்தும் பள்ளியின் ஆசிரியர்களின் உதவியு…
-
- 5 replies
- 627 views
-
-
கடந்த வாரம் என் கணவர் வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பும்போது இன்னொருவரையும் ஏற்றிக்கொண்டு அவரின் தங்கை வீட்டில் விட்டுவிட்டு வரவேண்டி இருந்தது. வானுக்குள் ஏறியவுடன் பெரிதாகச் சத்தம். கணவருக்கு விளங்கவில்லை. சைலென்சரில் ஓட்டை விழுந்துவிட்டுதாக்கும் என்று இருவரும் கதைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாச்சு. அடுத்த நாள் காலை எழுந்தவுடன் எமக்குத் தெரிந்த வாகனத்தைப் பழுது பார்ப்பவரிடம் போன் செய்துவிட்டு வாகனத்தைக் கொண்டுபோய்க் காட்டினால், அவர் வாகனத்தை ஓடிப் பார்த்த்துவிட்டு பின்னர் குனிந்து கீழே பார்த்துவிட்டு எழுந்தார். என்னக்கா, அண்ணை சைலென்சரை நடுவால வெட்டி வீட்டில வச்சிட்டு உங்களிட்டை வானைத் தந்துவிட்டவரோ?? என்று கேட்டபோதும் விளங்கவில்லை எனக்கு. அவர் ஒண்டும் செய்யவ…
-
- 22 replies
- 2k views
-
-
போலீஸுக்குப் போன புகார் ஆபாசத்தின் எல்லை எது? ''எழுத்தாளர் லீனா மணிமேகலை ஆபாசக் கருத்து களை புத்தகங்களிலும் இணையதளத்திலும் எழுதி வருகிறார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்!'' என சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந் திரனிடம் கடந்த வாரம் 'இந்து மக்கள் கட்சி' அமைப்புச் செயலாளர் கண்ணன் புகார் கொடுக்க... அதை சட்டப் பிரிவின் பார்வைக்கு அனுப்பி இருக்கிறார் ராஜேந்திரன். இலக்கிய வட்டாரத்தில் இந்த விவகாரம் விவாதக் கனலை சூடாக்கி இருக்கிறது. புகார் கொடுத்த கண்ணன் என்ன சொல்கிறார்? ''ஆபாசப் புத்தகங்கள் விற்பது சட்டப்படி தவறு. இலக்கியவாதி என்கிற போர்வையில் உடலுறவு நிகழ்வுகளையும், அந்தரங்க உறுப்புகளையும்பற்றி லீனா மணிமேகலை எழுது வதும் ஆபாசம்தான். 'உலகின் அழகிய முதல் பெண்' …
-
- 0 replies
- 3.2k views
-
-
தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு.... தலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான் ஒரு பயம் எனக்கு எப்போதாவது ஒருநாள் என் விசயத்தில் தலையிடாதே என்று சொல்லிவிடுவானோ என்று மகனே மறந்தும் அப்படி சொல்லிவிடாதே மரணித்து போய்விடுவேன் சின்ன வயதில் நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் நான் சலிக்காமல் பதில் சொல்வேன் என் வயதான காலத்தில் நானும் உன்னிடம் குழந்தை போல் வினா எழுப்பக்கூடும் கத்தாதே வாயை மூடு என்று சொல்லிவிடாதே வலி தாங்க முடியாத பாவி நான் வீடெல்லாம் நீ இறைத்து வைத்த சோற்றுப் பருக்கையை என் விரல்களால் கூட்டி அள்ளுவேன் என் முதிர் வயதில் என் வாய்க்கொண்டு செல்லும் உணவ…
-
- 0 replies
- 390 views
-
-
பயிரை மேயும் வேலிகள் - கேஷாயினி எட்மண்ட் சில நாட்களுக்கு முன் சிலி நாட்டிலிருந்து வந்திருந்த பெண் ஒருவரை சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. பெயர் வலேரியா. இவர் ஒரு நாடக கலைஞர். அண்மையில் இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் சென்று அங்கு பயில்கின்ற மாணவர்களையும் சந்தித்து பயிற்சிகளை வழங்கியிருந்தார். இந்தியர் ஒருவரை திருமணம் செய்துள்ள இவர் இரு பெண் குழந்தைகளின் தாய்;. கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது இந்தியாவில் வசித்து வருகின்றார். அவருடன் இப்போது கொழும்பில் வசித்து வருகின்றவரான அமெரிக்க பெண்ணான இவோன் என்பரும் என்னை சந்தித்தித்தார். இவோன் ஒரு எழுத்தாளர். தற்போதும் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கின்றார். இவருக்கு பிடித்த துறை பொர…
-
- 5 replies
- 1.2k views
-
-
வணக்கம் உறவுகளே, எனக்கு பரீட்சைகள் வருகிறது. வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பகலில் படிப்பது மிகவும் கடினம். இரவில் விழித்திருந்துதான் படிக்க வேண்டும். வேலையிலிருந்து லீவு எடுத்துப் படிக்கவுள்ளேன். இரவு முழுவதும் நித்திரை முழித்திருந்து படிப்பதற்கு என்னென்ன செய்யலாம் எனக் கூறுவீர்களா?
-
- 25 replies
- 7.2k views
-
-
மனைவியுடன் பேசுவது எப்படி என்று குறித்து என் சிறிய பார்வை. "ச்சே, என்ன இழவு இது? சாம்பார்ன்ற பேருல ஏதோ பண்ணி வச்சிருக்கே" என்று மனைவியைத் திட்டத் தெரிந்த நீங்கள் என்றாவது அடுக்களையில் அவர்களுக்கு உதவி செய்த அனுபவம் உண்டா? உங்கள் மீது அன்பு இருக்கும் காரணத்தால் எத்தனையோ தியாகங்களைச் செய்து உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் தன்னையே உருக்கிக் கொள்கிற அந்த ஜீவனுக்கு நீங்கள் உங்கள் தோலையே செருப்பாகத் தைத்துப் போட்டாலும் ஈடாகாது. யோசித்துப் பாருங்கள், யாரோ ஒருவர், உங்கள் நல்லது கெட்டது எதிலும் நாட்டமில்லாதவர் ஆனால் உங்கள் மேனேஜர் என்ற ஒரே காரணத்திற்காக அவர் திட்டும் எல்லா வார்த்தைகளையும் ஜீரணிக்கிற உங்களால் உங்களுக்காக மட்டுமே வாழ்கிற, உங்கள் சுக, துக்கங…
-
- 10 replies
- 3.2k views
-
-
மன அழுத்தம் காரணங்களும் அதிலிருந்து விடுபடும் முறையும்! Feb 04, 2023 10:17AM IST ஷேர் செய்ய : சத்குரு மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது, மன அழுத்தத்தில் உள்ளபோது உங்களுக்கு என்ன நேர்கிறது, மற்றும் மன அழுத்தத்திலிருந்து எப்படி மீள்வது, அதை எப்படி வளர்ச்சிக்கான பாதையாக்கிக்கொள்வது என்பது குறித்து சத்குரு விளக்குகிறார். உங்களுக்கு ஏன் மன அழுத்தம் ஏற்படுகிறது சத்குரு: மன அழுத்தம் எது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் சோர்வாக இருக்கும்போது உங்களுக்குள் என்ன நிகழ்கிறது? அடிப்படையில், நீங்கள் ஏதோ ஒன்று நடக்க வேண்டும் என்று எண்ணினீர்கள், ஆனால் அது நடக்கவில்லை. யாரோ, எதுவோ நீங்கள் நினைத்தபடி செயல்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீ…
-
- 0 replies
- 504 views
-
-
மிக அருமையான பதிவு. நான் கனடாவில் 35 வருடங்களுக்கு மேலாக வாழ்கிறேன். Visitors visaவை work permit ஆக மாற்றுவது ரொம்பக் கடினம். It is easy if you have specific skill. முயற்சி செய்து பாருங்கள். வாழ்த்துக்கள். (கருத்துக் சொன்னவர்.) கனடாவில் உள்ளவர் அழைப்பின்பேரில் வந்து ...அகதி கேடடால் ( " அகதி" என்பதை தை நிரூபிக்க என்ன காரணம் சொல்வீர்கள். நாட்டில் தான்பிரச்சனையே இல்லையே! ) உங்களை அழைத்தவர் மீண்டும் அவரது தேவைக்கு இன்னொருவரை அழைக்க முடியதுபோகும். இதனால் குடும்ப பகை ஏற்பட இடமுண்டு.
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
இருமல் மருந்துகளில் கலக்கப்பட்டுள்ள வேதிப்பொருட்கலான கோடின் மற்றும் டெக்ஸ்ட்ரோமெதொர்ப்ன் ஆகியவற்றுடன் சோடாவினைக் கலந்தால் ஒரு விதமான போதை ஏற்படுவதால் இருமல் மருந்துகளை வாங்கி போதைப்பொருளாக பயன்படுத்தும் மோகம் இளைஞர்களிடையே அதிகமாகி வருகிறது. இந்த மருந்துகளில் சோடாவுடன் சேர்த்து Jolly Rancher candy ஐக் கலந்தால் அதில் ஏற்படும் போதையே தனி என்கிறது இளைய சமுதாயம். அதிக விலை கொடுத்து போதை ஏற்படுத்தும் பானங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக விலை மலிவாக கிடைக்கும் இருமல் மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது சிறந்தது என்கின்றனர் இளையோர். 12 முதல் 20 வயதுள்ளோரிடையே அதிகப்படியாக தற்போது பரவி வரும் இந்தப் பழக்கம் உடலுக்கு மிகவும் தீங்கானது என்பதால் இருமல் மருந்துகளை விற்பனை செய்வதில…
-
- 0 replies
- 727 views
-
-
அறிவும் உணர்வும் தடுமாறும் காதல் written by காயத்ரி மஹதிJuly 25, 2022 காதலில் தமக்கே தமக்கான கனவுக்கன்னியோ, கனவு நாயகனோ தேவை என்று பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் இளைஞர்கள் கூட்டம் அதிகம் என அறிவோம். இங்கு கனவுக்கன்னி, கனவு நாயகன் என்று அறியப்படுபவர்களின் அழகு, உடை, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு, உண்ணும் முறைகள், அவர்களுடைய உடல் எடை, அவர்கள் செய்யும் அலங்காரங்கள் ஆகியவற்றைத் தாமும் செய்து அந்த நபரை அப்படியே நகலெடுப்பார்கள். இப்படியாகத்தான் ஒவ்வொரு கனவு நாயகனும், கனவுக்கன்னியும் உருவாக்கப்படுகிறார்கள். தற்போதைய யூட்யூப் சமுகத்தில் அவர்களுக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகப் பட்டாளத்தை உருவாக்கி வைத்தும் இருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் மீறி தற்போதைய கால…
-
- 0 replies
- 515 views
-
-
காலை ஆறு மணிக்கு என்னுடைய அலைபேசி ஒலிக்க, பாதி தூக்கத்தில் எடுத்தேன். ''நான் செல்வம் பேசுறேன். என்னைப் பார்க்கணும்னு சொன்னீங்களே. இப்போ சென்னைக்கு வந்திருக்கேன்' என்றது அந்தக் குரல். நான் பல நாள்களாக எதிர்பார்த்திருந்த குரல். தூக்கம் முற்றிலும் விலக, அவர் சொன்ன இடத்துக்கு 10 நிமிடங்களில் வருவதாகச் சொல்லிக் கிளம்பினேன். யார் இந்த செல்வம் அண்ணன்? அவ்வளவு சீக்கிரமாக சந்திக்க என்ன ஸ்பெஷல்னு கேட்கறீங்கதானே? செல்வம் அண்ணன், ஒரு திருநம்பி. தான் ஒரு திருநம்பி எனத் தைரியமாகப் பொது சமூகத்தில் அடையாளப்படுத்திக்கொண்டவர். இது தவிர அவரைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. ஆனால், அவரிடம் கேட்க நிறையக் கேள்விகள் என்னிடம் இருந்தன. பிறக்கும்போது ஆணாக இருந்து, பிறகு பெண் தன்மை அடைந்து, தன்…
-
- 1 reply
- 827 views
-