சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
ஒருவரை நாம் பார்த்துப் பழகிய சில நிமிடங்களிலேயே கேட்பது, ‘‘ஃபேஸ்புக் அக்கவுன்ட் இருக்கா?”... ‘‘வாட்ஸ் அப் நம்பர் தர முடியுமா?” என்பதுதான். செல்போனில் வாட்ஸ் அப் இல்லை என்றாலோ, ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் இல்லை என்றாலோ, அவர்களை ஒரு மாதிரியாகத்தான் பார்க்கிறார்கள். சமூக வலைதளங்களில் நாம் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் இருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம்முடைய தகுதி, ஸ்டேட்டஸ் இருக்கும் என மற்றவர்கள் நினைக்கும்படி இவை நம் வாழ்க்கையில் ஓர் அங்கம் ஆகிவிட்டன. சமூக வலைதளங்களால் பல நன்மைகள் இருந்தாலும், இதனால் ஏற்படும் தீமைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன, குறிப்பாகப் பெண்களுக்கு. சேலம் சந்தித்த கொடுமை! சேலத்தில் வினுப்ரியா என்ற இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். அவரது …
-
- 1 reply
- 3.9k views
-
-
இளமைக்காலத்தில் கனவுகளுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், சில சமயங்களில் இக்காலப்பகுதியில் எழும் அற்ப ஆசைகளுக்கும். உணர்வுகளுக்கும் அடிபணிந்து எடுக்கும் முடிவுகள் பலரின் கனவுகளைச் சிதைத்து, எப்படியெல்லாமோ வாழவைத்து விடுகின்றன. ஒரு வேளை அந்த நேரத்தில் அவர்கள் நன்கு ஆராய்ந்து, சிந்தித்து சரியானதொரு முடிவினை எடுத்திருந்தால் வாழ்வின் கனவுகளையும், உறவுகளையும் தொலைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்காது. அந்த வகையில் சிறைச்சாலைச் கதவுகளுக்கு முன்னால் தான் கருவில் சுமந்து பெற்றெடுத்த மகனைக் காண வேண்டும், அவனைக் கட்டித்தழுவி சுக, துக்கங்களை அறிய வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுடன் கால் கடுக்கக் காத்திருந்தாள் சுது நோனா. நாம் அவருடன் கதைக்க முற்பட்ட போது விரக்தி கலந்…
-
- 0 replies
- 563 views
-
-
"Happy Birthday" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன்படுத்துவோம். நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் வானம் தீண்டும் தூரம் வளர்ந்து வாழ வேண்டும் அன்பு வேண்டும் அறிவு வேண்டும் பண்பு வேண்டும் பணிவு வேண்டும் எட்டுத்துக்கும் புகழ வேண்டும் எடுத்துக்காட்டு ஆக வேண்டும் உலகம் பார்க்க உனது பெயரை நிலவுத் தாளில் எழத வேண்டும் சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி வாழ்த்துக்கிறோம் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் …
-
- 0 replies
- 673 views
-
-
பத்து திருமண பொருத்தம் 1.விட்டுகொடுக்கும் மனப்பான்மை, 2.சகிப்புத்தன்மை, 3.சொந்த பந்தம் மற்றும் பெரியவர்களை மதித்தல், 4.மனைவி சொல்வதை கணவன் கேட்டு நடத்தல், 5.கணவன் சொல்வதை மனைவி கேட்டு நடத்தல், 6.சீரான தாம்பத்ய வாழ்க்கை, 7.புத்திரபாக்கியம், 8.தாம்பத்ய உறவில் மனைவியினால் கணவனுக்கு கிடைக்கும் சுகம், 9.தாம்பத்ய உறவில் கணவனால் மனைவிக்கு கிடைக்கும் சுகம், 10.வருமானத்துக்குட்பட்டு செலவு செய்யும் இருவரின் மனப்பான்மை, ஆகிய இந்த பத்து பொருத்தங்களும் இருந்தால், ஜாதக பொருத்தமே தேவையில்லை திருமணம் செய்யலாம். http://eluthu.com/
-
- 3 replies
- 1.5k views
-
-
அரேபிய வசந்தமும், டிசம்பர் மழையும் வினுப்பிரியா தற்கொலையும்...! #SocialMediaDay அது டிசம்பர் 17, 2010 ம் தேதி, இந்திய இளைஞர்கள் ஆர்வமில்லாமல் இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உலகம், அதன் அதன் வேலையில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நிச்சயம் அந்த நாள் உலக வரலாற்றில், அதுவும் குறிப்பாக, அரேபிய வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கப் போகிறது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. அரேபிய வசந்தம்: அன்று காலை துனுசியாவில், தெருவோரத்தில் சிறிய காய்கறி கடை நடத்தும் முகமது பெளசீசி, மாவட்ட ஆளுநரை சந்திக்கச் செல்கிறான். தன்னிடம் மாநகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள் என்பதுத…
-
- 0 replies
- 1k views
-
-
பொதுவாக கலியாணவீடு சாமத்தியவீடு என்று செல்லும்போது நேரவிரயம் சார்ந்து ஒரு உள்ளுளார்ந்த ஒவ்வாமை எழுவதை மறைப்பதற்கில்லை. எனினும் இத்தகைய விழாக்களில் சுவாரசியங்கள் இல்லாமல் இல்லை. ஒரு குழந்தையினைப் பார்த்துக்கொள்வதைப் போல முற்றுமுழுதாகக் கவனத்தை விழாவிற்குள் போட்டு இயல்பாக இருந்தால் ஏகப்பட்ட சுவாரசியங்கள் இலகுவில் விரியும்;. அண்மையில் ஒரு சாமத்திய வீட்டிற்குச் சென்றபோது அவதானித்தவற்றை நான் பார்த்தபடியே பகிர்ந்துகொள்கிறேன். எனக்கு அவர்களோடு அறிமுகமில்லை. இருந்தும் அழைப்பை மறுக்கமுடியாத நிலை. அழைப்பை மறுக்க முடியாமைக்குக் காரணமானவளோடு சேர்ந்து சென்றேன். ஏனோ உட்சென்றதும் நிகழ்விற்;குள் இலகுவில் நுழைய முடிந்தது. குழந்தையினை அலங்கரித்து மணவறையில் நிறுத்தியிருந்தார்கள்.…
-
- 13 replies
- 995 views
-
-
தொழில்முனைவோராக வெற்றிபெற மன உறுதியும் வைராக்கியமும் முக்கியம் என்பதை உணர்த்து கிறார் திருச்சி துறையூரைச் சேர்ந்த மீனா ஹரிகிருஷ்ணன். பள்ளி கல்லூரிகளுக்கான போர்டுகளை தயாரித்து வரும் இவரது கல்வித்தகுதி பிளஸ் 2. மாதம் 5 ஆயிரம் ரூபாய் வருமானத்தில் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்ட இந்த குடும்ப தலைவி இன்று சொந்த வாகனம், வீடு, சொந்த கட்டிடத்தில் தொழிற்சாலை என வெற்றிகர மான தொழில் முனைவோராக வளர்ந்து நிற்கிறார். அவரது அனுபவம் இந்த வாரம் ’வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது. நான் என் கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இரண்டு வீட்டிலுமே கடுமையான எதிர்ப்பு இருந்தது. நான் பனிரெண்டாவதுதான் படித்திருக்கிறேன். என கணவர் எம்காம் வரை படித்திருந்தார். எ…
-
- 1 reply
- 731 views
-
-
இறைவிக்குப் பதிலாக மனிதி என்றே பெயர் வைத்திருக்கலாம். ஏனெனில் எம் சமூகத்தில் பெண்ணைத் தம்மைப் போல் விருப்பு, வெறுப்பு, ஆசைகள், உணர்ச்சிகள், இலட்சியங்கள் உடைய சகமனிசியாக அங்கீகரிக்கப் பின்வாங்குபவர்கள் பலர் அவள் தன் சுயமிழந்து முற்றிலும் கணவனைச் சார்ந்து குடும்பத்துக்காகத் தம்மை இழக்கும் பெண்களை இறைவிகளாக்க ஓடிவருவார்கள். அவர்களின் சிந்தனையைத் தூண்ட இப்படத்தில் வரும் பெண்கள் சக மனித உயிர்கள் என அடித்துச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். உலகம் உனதாய் வரைவாய் மனிதி! மனிதி வெளியே வா! மனிதன் என்ற சொல்லுக்குள்ளே அடங்காதே பெண்ணே! உயரம் உனதே தான்! அமர்ந்தால் உயரம் தெரியாது - நீ நிமிர்ந்தே வா பெண்ணே! மனிதி வெளியே வா! பாட்டு நன்றாக எழுதப்பட்டுள்ளது. அதைக் கடைசியில…
-
- 0 replies
- 884 views
-
-
மனைவி அமைவதெல்லாம்....? திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒருவித உற்சாகத்துடனும், பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாளே கிடையாது. வரப்போகும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும், கற்பனைகளும் சுவாரசியத்தை இன்னும் கூட்டியது. நிறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன்...வருகிறவளுக்கு படிக்கக் கொடுக்க வேண்டும்..ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது. கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து, பார்வையில் படும்படி வைத்தேன்.. இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன். எஸ்.ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன். கேரம், செஸ்…
-
- 18 replies
- 2.3k views
-
-
தோல் நிற அரசியலும்;( Skin Color Politics) இரு ஆவண குறும்படங்களும் – மேமன்கவி தோல் நிற வேறுபாட்டை முன் வைத்து உலகச் சமூங்களிடையே ஒதுக்கும் மனப்பான்மையும் ஒடுக்கு முறையும் இற்றைவரை வளர்த்தெடுக்கப்பட்டமை நாம் அறிந்த ஒன்று. இந்த ஒதுக்கும் மனப்பான்மைக்கும் ஒடுக்கு முறைமைக்கும் நீண்டதொரு வரலாறு உண்டு. இந்த வரலாற்றின் நவீன யுகத்தில் ஒரு பகுதியாக தெரிந்த வரலாறாக ஆப்பிரிக்க அமெரிக்க கறுப்பின மக்கள் எதிர் கொண்ட அவலமும் துயரமும் அவர்தம் விடுதலை போராட்டமும் மாறிய பொழுதும், உலகளாவிய ரீதியாக, தம்மை வெள்ளையர்கள் என சொல்லிக் கொண்ட மேற்கத்திய காலனியங்கள், தம் ஆட்சிக்கு உட்பட்ட ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மக்களை பின்காலனியச் சூழல் வரை வெள்ளையர் அல்லாத கறுப்பர்கள் என்று ஒதுக்கும் ம…
-
- 0 replies
- 921 views
-
-
எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்? ஆர். அபிலாஷ் ஒரு நண்பர் தனக்கு உரையாட தோழிகளே இல்லை. நெருங்கிப் பழக நினைக்கும் பெண்கள் ஏதாவது காரணம் சொல்லி விலகி விடுகிறார்கள். ஏன் அப்படி என கேட்டிருந்தார். அவருக்கான என் பதில் கீழ் வருவது: அன்புள்ள நண்பருக்கு ஒரு ஆண் தன் சமவயது பெண்ணுடன் தோழியாய் இருப்பது சிரமமான காரியமே. எந்த வகை நட்பிலும் ஒரு பாலியல் கோணம் இருந்தே தீரும். அதனால் தான் ஏற்கனவே காதலன் உள்ள பெண்கள் ஒரு புது ஆணின் நட்பு கோரலை ஏற்க தயங்குவார்கள். உங்களை விட வயது அதிகமான பெண்களிடம் இது சாத்தியமாகலாம். இன்றைய அலுவலகங்களில் ஆண் பெண் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருக்கும் போது நீங்கள் எதிர்பார்க்கும் காஷுவல் நட்புறவுகள் இரு சாராருக்கும் இடையே…
-
- 6 replies
- 1.3k views
-
-
மனித உரிமை ஆர்வலர் குந்தன் ஸ்ரீவஸ்தவ தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. குறித்த வீடியோவில், ஒருவர் வீட்டின் முன் பொதுமக்கள் முன்னிலையில் தனது மனைவி மற்றும் ஒரு வாலிபரை கயிற்றில் கட்டி வைத்து சரமாரியாக தாக்குகின்றார். இருவரும் வலியால் கதறுகின்றனர். அந்த வாலிபர் அவரது மனைவியின் கள்ளக்காதலர் என குற்றம்சாட்டப்படுகிறார். அவர்களின் கள்ள உறவை கண்ட கணவன் இருவருக்கும் தண்டனை வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வீடியோவில்அந்து எந்த மாநிலம் ஊர் என குறிப்பிடப்படவில்லை., ஆனால் அது வட மாநிலமாக இருக்கலாம் என ஆர்வலர்கள் நம்புகின்றனர். அந்த பெண்ணின் குரலை கேட்கும் போது பீகார், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர…
-
- 20 replies
- 1.8k views
-
-
கடவுள் தாமதப்படுத்துகிறார் என்றால் அவர் தரமாட்டார் என்று அர்த்தமல்ல!!!!
-
- 1 reply
- 488 views
-
-
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம். அமெரிக்கா, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பைக்கில் செல்லும்போது, அந்த இரவில், சுயநினைவின்றியும், ஆடைகள் பாதி அகற்றப்பட்டும் கிடந்த பெண்ணை, ஒருவன் பாலியல் தீண்டல் செய்துகொண்டிருப்பதைக் காண்கிறார்கள். அந்தப் பெண் மீட்கப்பட, தப்பி ஓட முயற்சித்த அந்த ஆண், 20 வயதான பிராக் ஆலன் டர்னர் என்று தெரியவருகிறது. வழக்குப் பதிவுசெய்யப்படுகிறது. டர்னர் ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்காக சிறை சென்றவன். இந்நிலையில், 2016, ஜூன் 2ம் தேதி இவ்வழக்கின் தீர்ப்பில், ‘கடுமையாக பாதிக்காத வண்ணம்’ டர்னருக்கு 6 மாத காலம் சிறை தண்டனை அளித்தார் நீதிபதி. ஆனால், அந்தத் துன்புறுத்தலால் தன் உடலும், மனமும் எவ்வளவு ‘கடுமையாகப் பாதிக்கப்பட்டது’ என்பதை மிகவும் உணர்வுப்பூர்…
-
- 2 replies
- 679 views
-
-
முடிதிருத்தும் பணி செய்து தனது குடும்ப வறுமையை போக்க முயற்சி செய்து வரும் எட்டாம் வகுப்பு மாணவி பிந்து பிரியா, பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்
-
- 0 replies
- 510 views
-
-
நேற்றுக் காலமை கடையைத் திறந்து இரண்டு மணிநேரம் வேலை செய்கிறேன் என்று முதலாளி நம்பிக்கொண்டு இருக்க முகநூலையும் யாழ் இணையத்தையும் ஓடிஓடிப் பாத்துக்கொண்டு வாறவர்களையும் கவனிச்சுக்கொண்டு இன்னும் ஆறு மணித்தியாலம் இருக்கே என்று மனதுள் நொந்துகொண்டு வேலை செய்துகொண்டிருக்க, கடைக் கதவைத் தள்ளிக்கொண்டு ஒரு பெண். பார்க்கப் புதிதாக இருக்கிறாரே எண்டு எண்ணிக்கொண்டே வணக்கம் எண்டன். ஆளிட்டையிருந்து பதில் வணக்கம் வராமல் ஒரு முறைப்புத்தான் வந்திது. சரி ஆரோ ஒரு பழக்க வழக்கம் தெரியாத மூதேவி இது என்று மனதுள் எண்ணிக்கொண்டு என்ன வேணும் என்று நைசாத்தான் கேட்டன். "அண்ணை இல்லையோ" என்றார். இந்தப் பெரிய ஆள் முன்னுக்கு நிக்கிறன். உனக்கு அண்ணையைத்தான் கேக்குதோ எண்டு மனதில் எண்ணிக்கொண்டே அண்ணை பின்னேரம்…
-
- 8 replies
- 1.4k views
-
-
“ஒருவனோடு ஒருத்தி ஒன்று என்று உரைத்திடும் உலகமெல்லாம்....” என்ற சிவஞானசித்தியாரில் உள்ளவாக்குக்கு இணங்க அன்றையகால சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்றே மக்களது இல்லற வாழ்வு அமைந்தது. மேலும் பெண்களின் ஒழுக்கமே சமூகத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் இருந்தது. அந்த ஒருவனும் ஒருத்தியும் பிறன்மனை நேக்கா பெருவாழ்வு வாழவேண்டும் என்பதை வள்ளுவர் திருக்குறளில் அழுத்திக் கூறியுள்ளார். ஆணோ பெண்ணோ இதை நெறியில் இருந்து வழுவினால் சமூகத்திற்கே பெரும் கேடு விளையும் என்பதை சிலப்பதிகாரமும் வலியுறுத்துகின்றது. இன்று அந்நிலை மாற ஆண், பெண் என்ற இருபாலர் இடத்திலும் நெறி பிறழ்வு சர்வசாதாரணமாகி விட்டது. இன்றைய சமுதாயத்தில் நலிந்து வரும் சமூக, கலாசார சீர்கேடுகளில் விபசாரமு…
-
- 0 replies
- 566 views
-
-
அனுபவம் தரும் துணிச்சல்: போனவாரம் லோங்வீக்கென்ட் எனது அக்காவின் மகள் போன்பண்ணி எங்கேயாவது லாங்ட்ரிப் போவோமா என்று கேட்டார், அதற்கு நான் எங்கே போகலாம் என்றதற்கு அவர் Illinois, Indiana. Kentucky என்று சில பெயர்களை சொன்னார் அதில் எனக்கு இந்தியானா என்ற பெயர் பிடித்திருந்தது. காரணம் இந்தியா என்ற பெயர் மேலும் Indiana Jones பெயரில் வந்த படங்கள் பார்த்த பாதிப்பு. ஒருவழியாக கடைசி rental கார் கிடைத்துவிட்டது, பின் ஹோட்டல் booking, அது இன்டியானாவில் மாத்திரம் கிடைத்தது. பென்சில்வேனியா சென்று அங்கு Grovecity இல் ஷாப்பிங் செய்துவிட்டு அங்கிருந்து இந்தியானா செல்வோம் என்று அக்காவின் மகள் விரும்பினார். நான், அக்கா, அக்காமகள், அண்ணன் மகள், நான்கு பேரும் சனி இரவு 8.30pm புறப்படோம். போகும்…
-
- 25 replies
- 5.1k views
-
-
எமது இனத்தின் அர்பணிப்புக்கள் வீண்போன இரவு..... இறுதியாக இயங்கிவந்த முள்ளிவாக்கால் வைத்தியசாலையும் இன்று இரவுடன் செயல் இழக்கின்றது..... டாக்ரா் வாமன் நினைவுகளிலிருந்து.. இன்று நடு இரவுடன் எங்கள் மருத்துவமனை செயல் முடங்கி விடப் போகிறது. இன்று பகல் முடியுமானவர்களை மருத்துவமனையை விட்டு நகர்த்தியிருந்தோம். நான் என் சக மருத்துவப் போராளிகளோடு காயமுற்றவனாக ஒரு அறையில் இருக்கிறேன்! கடமையில் இருந்தபோது நெஞ்சில் ரவை துளைத்து காயமுற்ற பெண் மரத்துவப் போராளி அருகே இருக்கிறாள். அவளுக்காக மருத்துவ மனை அருகே தொடர்ந்து வந்துகொண்டிருந்த அவளது அப்பா சில நாட்களின் முன்னர்தான் கொட்டிலில் வீழ்ந்த குண்டால் சிதறிச் செத்து உருக்குலைந்து வீழ்ந்திருந்தார். எனது அணியில் இருந்த அவளிடம் இந…
-
- 1 reply
- 2.6k views
-
-
ஞாயிறு காலை 10 மணி. புளூ டிக்குகள் வாழ்வளிக்கும் லவ் சாட் தொடங்குகிறது. "ஏன்டா இவ்ளோ அழகா இருக்கே...?" ‘உனக்கே ஓவரா இல்ல? எங்க வீட்டுலயே நான்தான் சுமார் மூஞ்சி குமார்!’ "ஆனா, இந்த உலகத்துலயே நீதான்டா அழகன் எனக்கு!" "சரிடி அழகி. நாளைக்கு காலேஜுக்கு 15 நிமிஷம் முன்னாடி வந்துடு. லைப்ரரியில மீட் பண்ணிட்டு, அப்புறம் க்ளாஸுக்குப் போவோம்...!" "முடியாது. அரை மணி நேரம் முன்னாடி வந்துடுறேன்!" "லவ் யூ!" "தெரியும்!" ஞாயிறு மதியம் 1 மணி. "மிஸ் யூ... என்னடி பண்ணிட்டு இருக்க உயிரே?" "என்னனு சொல்லு?" "சொன்னேனே... மிஸ் யூ!" "அறிவில்ல? நாலு அரியர் மட்டும் இருக்கு. க்ளியர் பண்ற வழியப் பாரு." …
-
- 18 replies
- 3k views
- 1 follower
-
-
புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் கருவிகளை எளிதில் வாங்கக்கூடியவர்கள், வாங்கியபிறகு அதன் முழுபயன்பாட்டை தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள், அவர்களுக்கு உதவுபவர்தான் தாஸ் என்கின்ற தணிகாசலம் ஸ்ரீதர் தாஸ்.சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவரான தாஸ் அங்குள்ள அசோக் லேலண்டு நிறுவனத்தின் வெள்ளிவிழா ஊழியர். அங்கு வேலை பார்த்த நேரம் போக மீதி நேரம் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கிட்டாரில் ஆரம்பித்து போட்டோகிராபி வரை பல விஷயங்களை கற்றுக்கொண்டார். அதிலும் ஆப்பிள் ஐமேக் நிறுவனத்தில் இரண்டு வருடம் பைனல் கட் புரோ (fcp)வீடியோ எடிட்டிங் படித்து உயர் சான்றிதழ் பெற்றவர். இவருக்கு உள்ள நல்ல பழக்கம் தான் கற்றதை தனக்குள் வைத்துக்கொள்ளாமல் கேட்பவர்களுக்கு எல்லாம் சொல்லித்தருவார்.…
-
- 0 replies
- 1.7k views
-
-
அண்மையில் காலை நேரத்தில் பொரளை ஆனந்த மாவத்தையின் நடை பாதையின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்தோம். சித்திரை மாத கடும் வெயில் எங்களின் உடலை சுட, வீதியோரத்தின் நிழல் படிந்த மரத்தின் அடியில் நின்றோம். அதே மரத்தின் அடியில் பரட்டைத் தலையுடன் அழுக்கு படிந்த சட்டை, சாரம் உடுத்திய நிலையில் ஒருவர் வெற்றுத் தரையில் உட்கார்ந்திருந்தார். அவர் எங்களைப் பார்த்து அட்டகாசமாய் சிரிக்க நாங்களும் எங்களின் கேள்விக் கொக்கியை அவர் மீது ஏவி விட்டோம். எங்களுக்கு நிழல் தந்த அந்த மரம் ஒரு வாதுமை மரமாகும். அம் மரத்தை ஆங்கிலத்தில் Almond Tree எனவும் சிங்கள மொழியில் கொட்டங்கா எனவும் அழைப்பர். தமிழர்கள் இம் மரத்தின் விதை களுக்குள் உள்ள பருப்பை வாதாங் பருப்பு அல்லது வாதும…
-
- 7 replies
- 5.6k views
-
-
இவர் என்ன சொல்கிறார் கேட்டுப்பாருங்கள். அம்மா !அம்மா! என்று சொல்லும் அதிமுகவை சோ்ந்தவர்களே அம்மாவின் உண்மையான அா்தத்ம் இதோ........
-
- 5 replies
- 1.8k views
-
-
[19:53] ஓதி உணர்ந்து பிறருக்கு உரைத்து தானடங்கா பேதையில் பேதயர் இல் (கேட்டெழுதியது) ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப், பேதையின் பேதையார் இல். [கற்கத்தக்கவற்றைக் கண்டு, அவற்றைக் குற்றமில்லாமல் கற்று, பின்பு கற்றவற்றின் கருத்துக்கேற்ப நல்வழிகளில் நின்று ஒழுகுதல் வேண்டும். அவ்வாறு கற்ற கல்வியின் பயனையும், பொருளையும் ஒருவர் உணர்ந்திருந்தும், அவற்றைப் பிறருக்கு உரைக்கும் பெரு நிலையில் அவர் வைக்கப்பட்டிருந்தும், ஒருவர் தாம் பிறருக்கு வழிநடத்தும் வழிகள் படி ஒழுகவில்லையாயின் அதைவிட அறிவீனம் வேறு என்ன இருக்க முடியும்? அவ்வாறிருப்பவனை, விட இழிந்த மடையன் (அறிவீனன்), அறிவை வீணடித்தவன் யாரும் இல்லை.] [https://ashoksubra.wordpress.com] [18:00] நாடது ந…
-
- 6 replies
- 1.7k views
-
-
முதற்கண் பாசம் உள்ள யாழ்கள் உறவுகளுக்கு நீண்ட நாட்களின்பின் என் வணக்கம் . உறவுகளின் இன்ப துன்பங்களில் உங்கள் ஆறுதல் வார்த்தைகள் சிறப்பு நிகழ்வுகள் பிறந்த நாள் மணிவிழா நாட்களில் உங்கள் ப வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மிகவும் சிறந்தவை . வேறு எந்த இணைய தளத்திலும் இல்லாத் ஒரு சிறந்த் பண்பு நம் யாழ் களத்தில் உண்டு. என் தற்போதைய வாழ்வில் எழுத் நேரம் இல்லத நிலைமை உங்களுக்குபுரியும் ஆனாலும் இடையில் நேரம் கிடைத்தால் ஒருபத்து நிமிடமாவது வாசிக்க ( சுவாசிக்க) வருவதுண்டு... என் நண்பி கோடைவிடுமுறைக்கு தாயகம் செல்ல உள்ளார் ...அவரது தயார் தனது நோய் வாய்ப்பட்ட மூத்தத் சகோதரனை பார்க்க விரும்புகிறார் . தன்னையும் யும் அழைத்து செல்லும்படி மன்றாட்ட்மாக் கேட்கிறார்…
-
- 8 replies
- 4.1k views
-