சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
மனிதர்கள் எல்லோரும் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தான் தங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் எந்த மனிதனுக்கும் வாழ்க்கையின் அத்தனை கணங்களும் முற்றுமுழுதாக மகிழ்ச்சியாக இருந்தது கிடையாது. மனிதர்கள் பலரின் வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டையும் ஒரு தராசில் இட்டால் துன்பப்பக்கம் தாளாத மனிதர்களைக் காணவே முடியாது.எனினும் எங்கள் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் விடயங்களை துன்பங்களாகவும் இன்பங்களாகவும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களுக்கு மனிதர்கள் வேறுபடுகின்றது. சிலர் துன்பமாக நோக்கும் விடயங்களைச் சிலர் இன்பமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை உடையவர்களாக இருக்கின்றார்கள். இன்பமாக எடுத்துக்கொள்ள வேண்டிய பல விடயங்களையே துன்பங்களாக நினைத்து எதிர்கொள்ளும் பல மன…
-
- 0 replies
- 1k views
-
-
வழமையாக பார்த்துள்ளேன் தும்மினால் நூறாண்டு வாழ்க என குழந்தைகளை வாழ்த்துகின்றனாங்கள் அதே மாதிரி வெள்ளையலும் தும்மின உடனே "bless you" என்பார்கள் இப்படி வாழ்த்துவதனால் என்ன பயன்?
-
- 6 replies
- 1k views
-
-
Age of sexual consent குறித்து உடல், உளவியல் மற்றும் சமூகவியல் நோக்கோடு திறந்த உரையாடலை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். `செக்ஸ்’ என்கிற சொல்லே மிகுந்த பதற்றத்துக்கு உரியதாக இருக்கிற நம் இந்திய மன அமைப்பில், கடந்த சில ஆண்டுகளில் சிறிதளவு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. பாலியல் குறித்து முழு புரிந்துணர்வுடனான உரையாடல் தேவை என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. பாலியல் கல்வி அவசியம் என்கிற குரல் தொடர்ச்சியாக எழுவதைக் கேட்க முடிகிறது. அவ்வரிசையில், பாலுறவுக்கு இசைவு தெரிவிக்கும் வயது (Age of sexual consent) குறித்தும் சில விவாதங்கள் எழுந்து வருகின்றன. பாலுறவுக்கு இசைவு தெரிவிக்கும் வயதை 18 என நிர்ணயித்திருக்கிறது இந்திய அரசு. உலக நாடுகளில் …
-
- 1 reply
- 1k views
-
-
ரயில் நகரத் தொடங்கியது. வவுனியா வரை ரயில்ப் பிரயாணம். பின்னர் பேரூந்தில் புகழ்பெற்ற A-9 வீதியூடாகப் பயணம். 2002 சமாதான உடன்படிக்கையை அடுத்து மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்கும் சாத்தியமாகியிருந்த தரைவழிப்பயணப் பாதை அது. A-9 என்கிற யாழ்-கண்டி வீதி. தாண்டிக்குளம், வவுனியா. காலை மணி ஐந்தரை. யாழ் செல்லும் பேரூந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. பயணிகள் தேநீர் அருந்திக்கொண்டும், சிலர் வீதியோரத்து கை பம்ப் அடிக்கும் குழாய்க் கிணற்றில் நீர் இறைத்து பல் விளக்கிக்கொண்டுமிருந்தார்கள். டீ குடித்துவிட்டு யன்னலோரம் என் இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ரயில்வே பாதையில் இரண்டு மயில்கள் சாவகாசமாக நடைபோட்டன. தூரத்தில் மய…
-
- 2 replies
- 1k views
-
-
பிறந்ததில் இருந்து பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் நாய்கள் மத்தியில் வளர்ந்த பெண் குழந்தை இன்று நாயாகவே வாழ்கிறாள். இப்படியான கொடூரங்களும் இந்த உலகில் குழந்தைகளுக்கு நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன.
-
- 9 replies
- 1k views
-
-
தப்பான புரிதல்களுக்கு இது ஒர நல்ல எடுத்துக்காட்டு................ இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.வெகு நாட்கள் பழகிய பிறகு அவன் காதலிப்பதாக சொன்னான்.அது தெரிந்த விஷயம்தான்.பெண் பதில் எதுவும் சொல்லவில்லை.நன்றாகவே பேசிக் கொண்டிருந்தார்.ஒரு நாள் ஊருக்குச் செல்வதாக கூறி சென்றுவிட்டார். அடுத்த நாள் பையனுக்கு ஒரு போன் வந்த்து.அந்த பெண்ணுக்கு உறவினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.” அவனே,இவனே! யாரென்று நினைத்தாய்? உன்னை ஒழித்து விடுவோம் என்பதில் ஆரம்பித்து வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார்.பையனுக்கு குழப்பம்.நன்றாகத்தானே பேசிவிட்டு போனார்.? அப் பெண்ணுக்கு போன் செய்து பார்த்தார்.எடுத்த்து பெண் அல்ல!…
-
- 1 reply
- 1k views
-
-
புலம்பெயர் நாடுகளில் மூன்றாவது தலைமுறையில் தமிழ் வாழ்வியல் மொழியாக இருக்குமா?இருக்காதா?
-
- 0 replies
- 1k views
-
-
மனைவியிடம் நாலு வார்த்தை மனம் விட்டுப் பேசுங்கள்...தி மு க பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எம்.பியின் அருமையான பதிவு சற்று நீளம் தான் முடிந்தால் படியிங்கள் ..... இதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த, அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை. காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான். ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது. வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள். 1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன ' என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்…
-
- 7 replies
- 1k views
-
-
இந்தியத் திருமணங்களில் ஒரு மாற்றம் வேண்டும்! - பிரீத்தி கும்பரே திருமணம் என்றால் சுபச் செலவுதான். தங்கள் வீட்டுக் கல்யாணத்தை பிறர் வியக்கும் அளவுக்கு நடத்த வேண்டும் என்றுதான் எல்லாரும் விரும்புவர். வரதட்சணை, இலை நிறைய விதம் விதமான அறுசுவை உணவு... பூக்களால் ஜோடனை, மேளம், கச்சேரி அல்லது மெல்லிசை, தாம்பூலம்... மொய் இல்லாமல் இந்தியக் கல்யாணங்கள் நடப்பதில்லை. இவை எதுவும் இன்றி சென்ற ஜுலை 3 ஆம் நாள் நடந்த திருமணம் அகில இந்தியாவுக்கு ஒரு முன்மாதிரியான திருமணமாக அமைந்து விட்டது. திருமணச் செலவை குறைத்து, ஆடம்பரம் ஆரவாரம் இல்லாமல் அந்தத் திருமணம் நடந்ததினால் மட்டும் பிரபலம் அடையவில்லை. திருமணம் முடிந்ததும், கடனை அடைக்க முடியாமல் தற்க…
-
- 0 replies
- 1k views
-
-
குடும்ப அமைப்பில்… பாரபட்சத்திற்கு உள்ளாகியுள்ள பெண்களின் தனிக் குடும்பங்கள்! Tuesday, November 13, 2018 -பிரியதர்ஷினி சிவராஜா- “வருடங்கள் பல உருண்டோடி விட்டன. ஆனால் கடந்து சென்ற விடயங்களைப் பற்றி நினைத்து என் நிகழ்கால வாழ்வின் நிம்மதியினை நான் இழக்க விரும்பவில்லை. வாழ்வை தனித்து கடப்பது என்பது வித்தியாசமான அனுபவமாக தான் இருக்கின்றது” என்று கூறும் அந்தப் பெண்ணுக்கு 41 வயது. கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட அவர் 16 வயதான மகளுடனும் வயோதிப பெற்றோருடனும் வசித்து வருகின்றார். அவரது வீட்டில் இரண்டு தையல் இயந்திரங்கள் இருக்கின்றன. ஆடைகள் தைப்பதற்காக வெட்டப்பட்ட துணித் துண்டுகள் வீட்டின் பிரதான அறையில் ஆங்காங்கே இறைந்து கிடக்கின்றன. குவிந்து கிடக்கும் தைக்கப்பட்ட…
-
- 0 replies
- 1k views
-
-
perceptions காரணமே இல்லாமல் ஒருவரை பிடிக்கல; காரணமே இல்லாமல் ஒருவரை பிடிச்சி போச்சு, இதற்கு பின்னால் ஒரு காரண காரிய இருக்கும். அது ஏதேனும் ஒன்றை காரணமாக அமைந்து இருக்கும். இது பெரும்பாலும் உணர்வு சார்ந்த காரணமாக இருக்கலாம். ஒருவரைப் பார்க்கின்றோம். நம்முள் சட்டென ஒரு நிலைப்பாடு உருவெடுக்கும். அந்நபரின் தோற்றம், ஆடை அணிகலன்கள், பேச்சுநடை, அங்க அசைவுகள் இவற்றின் பேரிலான நம் கடந்தகால நினைவுகளின் அடிப்படையிலான யூகங்கள் அந்த நிலைப்பாட்டைத் தோற்றுவிக்கும். பின் அது சேமிப்பிலும் பதிவாகும். இப்படிப் பதிவாகும் நின…
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
வடக்கில் ஐஸ் எனும் ஆபத்தான போதை - எச்சரிக்கை.! காசு அனுப்பும் அப்பா அம்மா .. வடக்கு முழுக்க காசு மழை .. அனைவரும் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்.. ஒரு இனத்தை அழிப்பது என்பது கல்வி கலாச்சாரம் பண்பாடு என்பனவற்றை அழிப்பது ஆகும். வடக்கில் திட்டமிட்டு நடத்தப்படும் போதைக்கு அடிமைகள் ஆக்கல் நிகழ்ச்சி திட்டம் தற்போது வெற்றிகரமாக திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது. ******************************** வடகிழக்கு மாகாணத்தை தற்போது சூழ்ந்துள்ள ஐஸ் எனும் ஆபத்து.!💊 ❎ #அறிமுகம்: இளைஞர்களின் தற்போதைய Trend இல் இருப்பது, ஐஸ் எனும் போதைப்பொருள்(Methamphetamine) எனப்படும் இப்போதைப்பொருள் எமது பிரதேசத்தில் மாணவர்கள் முதல் உத்தியோகத்தர்கள் வரை தனது கால்களை அகல …
-
- 2 replies
- 1k views
-
-
நான் செய்வது தான் சரி, என்னுடைய வார்த்தை தான் கடைநிலையாக இருக்க வேண்டும், மற்றவர்கள் எனக்கு அடங்கித் தான் போக வேண்டும், என்னை யாரும் குற்றம் சொல்வது எனக்குப் பிடிக்காது, நான் எப்போதும் அடுத்தவரை குறை சொல்லிக்கொண்டே குற்றம் சுமத்திக்கொண்டே இருப்பேன் என்ற மனோநிலை உங்களுக்குள் இருக்கிறதா? ஒருமுறைக்கு பலமுறை இது சரியா என உள்மனதைக் கேளுங்கள். உங்கள் திறமையின் அடிப்படையில் செயல்களின் அடிப்படையில், அதன் விளைவுகளின் அடிப்படையில் அனைத்தும் சரியாகவே இருந்தால் நீங்கள் பாராட்டத்தக்கவர். ஆனால் துரதிருஷ்டவசமாக பெரும்பாலோனோர் அப்படி இருப்பதில்லை. இப்படித்தான் எனில் நீங்கள் மற்றவரை ஆதிக்கம் செலுத்தியே காலத்தைக் கழிப்பவர், மற்றவரை மதிக்கத் தெரியாதவர்.. இன்னும் சொல்லப்போனால் பெரும்பால…
-
- 0 replies
- 1k views
-
-
வெற்றியடைய 10 சுலபமான வழிகள் வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !!! நேரத்தை நன்றாகத் திட்டமிட்டுச் செலவு செய்ய, அப்படிச் செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கின்ற 10 முத்தான வழிகள் : 1.ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை நிறுத்துங்கள்: சமீப காலங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது அடிப்படையில், அறிவியல்ரீதியாகப் பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்குத் தாவுவது/ மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது. …
-
- 0 replies
- 1k views
-
-
ஒரே பாலினத்தரிடம் எதாவது வேண்டுகோள் விடுத்தால் மறுக்கின்றனர். அதையே ஒரு எதிர் பாலினத்தினர் கேட்டால் உடன் நிறைவேற்றுகின்றனர். இதுதான் பால் கவர்ச்சியோ?
-
- 7 replies
- 1k views
-
-
அகிலா இளஞ்செழியன் பிபிசி தமிழுக்காக படத்தின் காப்புரிமை Getty Images பாலின சமத்துவம் என்பது அடிப்படை உரிமை மட்டுமல்ல, அது சமூக நீதி. இன்று சர்வதேச மகளிர் தினம். இது கொண்டாட்டமாக கட்டமைக்கப்படுகிறது அனால் இது கொண்டாடப்படுவதற்காக உருவாக்கப்பட்ட நாள் அல்ல, ஒரு போராட்டத்திற்கான, புரட்சிக்கான விதை விதைக்கப்பட்ட நாள். டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் , 1910 ம் ஆண்டு உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கிளாரா ஜெட்கின் , அனைத்து நாட்டில் உள்ள பெண்களும் சேர்ந்து தனி சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தினைக் கடைப்பிடிக்க வேண்…
-
- 0 replies
- 1k views
-
-
பாடசாலையிலேயே “கட்டிப்பிடி“: பால் சமத்துவத்திற்காக வித்தியாசமாக சிந்திக்கும் அதிபர்! July 4, 2018 பெண்களை பாலியல் பொருட்களாக பார்க்காமல், அவர்களையும் சக மனிதர்களாக பார்க்கவும், ஆண் -பெண் சமத்துவத்தை புரிய வைக்கவும், வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பாடசாலை அதிபர் ஒருவர். இடதுசாரிய சிந்தனையுள்ள கருணாகரன் என்ற அதிபரே இந்த வித்தியாசமான- முன்னுதாரண முயற்சியில் இறங்கியுள்ளார். நாவலப்பிட்டிய கந்தலோயா தமிழ் வித்தியாலயத்தில் இந்த முயற்சிகள் ஆரம்பித்துள்ளன. அந்த பகுதியில் அவரது முற்போக்கான நடவடிக்கைகளால் அவரை பெரிதும் மக்கள் மதிப்பதும் குறிப்பிடத்தக்கது. யட்டியாந்தோட்ட கருணாகரன் என்ற பெயரில் இலக்கியம், சமூகம், அரசியல் என பல துறைகளில் தீவிரம…
-
- 0 replies
- 1k views
-
-
தினமும் இதனை பாடுங்கள் அனுகூலம் நிச்சயம் ------------------------------------------------------------------------ வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் ...............மிகநல்ல வீணை தடவி ...................... மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் ...............உளமே புகுந்த அதனால் .................... ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி ...............சனிபாம்பி ரண்டும் உடனே .............. ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல .............அடியா ரவர்க்கு மிகவே .................... அனைத்து கிரக தோஷங்களும் நிச்சயம் நீங்கும் எல்லா கிரகங்களும் எப்போதும் நன்மையே புரியும் நம்புங்கள் நல்லதே நடக்கும்
-
- 2 replies
- 1k views
-
-
மகனின் மனைவியை வீட்டில் வைத்து கத்தியால் குத்தியும்,வெட்டியும் கொன்றனர் என்கிற சந்தேகத்தில் புத்தளம்-கந்தயாய பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபத் தம்பதிகள் புத்தளம் பொலிஸ் நிலைய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஸ்ரீமதி அனுராதிகா (வயது 29) என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார். சம்பவம் இடம்பெற்றபோது அனுராதிகாவின் கணவன் வீட்டில் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இப்படுகொலைக்கு குடும்பப் பிரச்சினையே காரணம் என்று பொலிஸார் நம்புகின்றனர் http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=10755:2010-09-21-13-56-07&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410.
-
- 2 replies
- 1k views
-
-
இணையத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை - ஐநா எச்சரிக்கை மொபைல் தொலைபேசி மற்றும் இணையம் போன்றவை சக்தி வாய்ந்த கருவிகள் மட்டுமல்ல அவை பெரிய ஆயுதங்களாகவும் இருக்கக்கூடும். ஐ.நா மன்றம் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உருவாகும் வன்முறையைப் பற்றி எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது. இந்த வன்முறை உடல் ரீதியான துஷ்பிரயோகத்தைப் போலவே அதே அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது . குறிப்பாக உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் தொழில் நுட்பம் நுழையக்கூடிய இந்த நேரத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று ஐ.நா கூறுகிறது. இளம் பிரிட்டிஷ் நடிகை, எம்மா வாட்சன் , ஐநா மன்ற கூட்டம் ஒன்றில், பாலின சமத்துவம் குறித்துப் பேசியபோது, அவர் தன்னை உலகளாவிய கும்பல் ஒன்றின்…
-
- 0 replies
- 1k views
-
-
https://www.youtube.com/watch?v=Ypes1C203Bc வாகனத்தை விட்டு, இறங்க முன்... ஒரு வினாடி சிந்தியுங்கள்!!! அத்துடன், குழந்தைகள் வாகனத்தில் பயணித்தால்..... அவர்களால் உள்ளிருந்து கதவை திறக்க முடியாதவாறு... செய்து விடுங்கள்.
-
- 4 replies
- 999 views
-
-
காசு காசு என்று பேயாய் அலைந்து தம் குழந்தைகளையும் புறக்கணிக்கும் தமிழ் பெற்றோர்களுக்கு சமர்பணம்
-
- 1 reply
- 998 views
-
-
பண்பாட்டு உடை அன்புள்ள ஜெயமோகன் சார், வணக்கம்! நலமா? ஒவ்வொரு இனக்குழுக்களுக்கும் ஆடை என்பது அதன் தனி அடையாளமாக உள்ளதை நாம் அறிவோம். மரப்பட்டைகளும் – தழைகளும் கட்டிக் கொண்டிருந்த காலம் முதல் ஜீன்ஸ், சல்வார் கமீஸ் போடும் காலம் வரையும்! நம் முன்னோர்கள், இடுப்பில் ஒரு 4 முழு வேட்டியும், தோளில் துண்டும் அணிந்தவர்கள். அப்புறம் 8 முழு வேட்டி – உடன் சட்டை. என் பாட்டி, முப்பாட்டிகள் ரவிக்கை அணிந்திருக்கவில்லை. அதிகபட்சம் ஒற்றைப் பிரியில் சேலை. நவீன தொழில் நுட்பமும், பஞ்சாலைகள் மற்றும் செயற்கை நூல் இழைகளின் வரவால்- ஆடைகளின் உபயோகமும், வடிவமும், பயன்பாடுகளும் மாறிவிட்டன. இச்சூழலில் எந்த ஒரு இனத்திற்காகவென்றும் தனித்த ஆடை அடையாளம் சாத்தியமா? உதாரணமாக, தமிழன் என்றால் வேட்டி,…
-
- 0 replies
- 998 views
-
-
கறுப்பராய் இருப்பதால் விபச்சாரி? தேனிலவில் நேர்ந்த அவலம் திருமணத்தின்போது மோனிகாவும், அவரது கணவரும் 47 வயதான மோனிகா வலேரியா கொன்சால்வஸ் இரண்டு பல்கலைக்கழகப் பட்டங்களுக்கு சொந்தக்காரர். பிரேசிலியாவில் சட்ட ஆலோசகராக பணிபுரியும் அவர் ஒரு நீதிபதியான கார்லோஸ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த அவர், அடிக்கடி விடுமுறையின்போது, பிரேசில் அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதுண்டு. விலை உயர்ந்த உணவகங்கள் மற்றும் பிரத்தியோக சமூக நிகழ்வுகளுக்கு அடிக்கடி செல்லும் அவர், பிரேசிலின் சிறந்ததொரு சுற்றுப்புறத்தில் வசித்து வருகிறார். சுருக்கமாக சொன்னால், ஒரு சதவீத உயர் வகுப்புக்கு பிரேசிலிய சமூகம் அனுபவித்து வருவதற்கு இணையான வாழ்க்கையை பெ…
-
- 2 replies
- 997 views
-
-
ஐயா கமல் சாரு!!!! சொந்த லாபத்திற்காக மதத்தை சாடும் உங்களுக்கு!!!! சந்திராயன் இன்னும் பல விண்வெளி ஆராய்சிகள் இந்தியாவுக்கு தேவையா? செவ்வாயில் கிடங்கு கிண்டி மிதேன்வாயு ஆராய்ச்சி தேவையா? பல கோடிகளில் திரைப்படம் எடுத்து மக்களை வசீகரப்படுத்த/களிப்பூட்டுவதன் அவசியம் என்ன? காஷ்மீர் விரயத்தனங்கள் உங்களுக்கு தெரியவில்லையா? உலகத்தையே தூக்கிப்போடும் அளவிற்கு ஊழல்கள் நடக்கின்றது.தமிழ்நாட்டிற்கு பத்து வருசம் சாப்பாடு போடும் பணத்தை கொள்ளை அடித்திருக்கின்றார்கள். இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? இதுபோன்று பல...... இவை எல்லாவற்றையும் இரு வருடங்களுக்கு தற்காலிகமாக நிறுத்துங்கள்!!!!! நீங்கள் சொன்ன பசி தானாக பறந்து போகும். இனிவரும் காலங்களில் யாழ் உறவுகளும் செய்திகளை…
-
- 3 replies
- 997 views
-