சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
[size=5]தம் பிள்ளைகள் எதிர்காலத்தில் மற்றையவர்களை விட பெரியவர்களாக, வாழ வேண்டும் என்றும், அதனால் தாங்களும் மதிப்பும், மரியாதையுமுடன் வாழலாம் என்ற அவாவில், ஒளிதரும் மெழுகு வர்த்திபோல் தம்மை உருக்கி உருக்கி உழைத்த முதியவர்கள் பலர் கவனிப்பாரற்று முதியோர் இல்லங்களிலும், கருணை இல்லங்களிலும், உறவினர் வீடுகளிலும் தஞ்சம் புகுந்து வாழ்வதை இன்று நாம் பார்க்கின்றோம்.[/size] [size=5]வயதான காலத்தில் தம் பிள்ளைகள் தம்மை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை அனேகமாக எல்லா பெற்றோர்களிடத்திலும் ஏற்படுவது இயற்கையே. தாம் தம் பெற்றோருக்கு செய்ததை தமக்கும் தமது பிள்ளைகள் செய்வார்கள் என்ற நம்பிக்கையுடனே அவர்கள் வாழ்லின்றார்கள். பெற்றோர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பிள்ளைகளுடன் வாழ்வதையே விரு…
-
- 6 replies
- 3.1k views
-
-
அனைவருக்கும் வணக்கம் இத் தலைப்பில் மன அழுத்தம் எனப்படும் டிப்பிரசன் [dipression] பற்றி எனக்குத் தெரிந்ததை,நான் கேள்விப்பட்டதை எழுதுகிறேன் நீங்களும் இது சம்மந்தமாக உங்களுக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள். மன அழுத்தம் அநேகமாக தனிமையில் இருப்பவர்களைத் தான் அதிகம் தாக்கும்...இது ஆண்,பெண் வேறுபாடு,வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் வரும்...தங்களை மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை என்று அதீத கோபத்திற்கு ஆளாகுவார்கள் ,வாழ்க்கையில் அதிக தோல்விகளை சந்தித்தவர்கள்,பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாதவர்கள்,தனிமையில் இருப்பவர்கள்,தங்களது சுக,துக்கங்களை பங்கிட்டு கொள்ள ஒரு வித விரக்தி நிலைக்கு சென்று மன நோய்க்கு ஆளாகின்றனர். இத்தகைய நிலை கொலை செய்யும் அளவிற்கு க…
-
- 69 replies
- 7.6k views
-
-
ஒரு சமூகம், காதலைக் குற்றமென்று சொன்னால், நாம் அதை விவாதிக்கலாம்; அதற்கு எதிராகப் போராடலாம். ஆனால், காதலே குற்றங்களின் களமாக மாறிவிட்ட ஒரு காலத்தில், அன்பு என்பது இன்று, நஞ்சு தடவிய ஒரு வாள் போல, நம் முன் பளபளத்துக் கொண்டிருக்கிறது. அந்த வாள், எந்த நேரம் நம்மை பலிகொள்ளும் என்று தீர்மானிக்க முடியாத அளவுக்கு, நாளுக்கு நாள் ஆண், பெண் உறவுகள் வன்முறையின், குற்றத்தின் நிழல் படிந்ததாக மாறி வருகிறது.சில தினங்களுக்கு முன், சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில், பொதுமக்கள் முன்னிலையில், ஒரு இளை ஞர், தான் காதலித்த பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் காதல் குற்றங்களை மறுபடியும் நி…
-
- 1 reply
- 865 views
-
-
[size=4]இதை இங்கு பதிவது சரியா தெரியவில்லை. சரியான இடத்திற்கு மாற்றிவிடுவீர்களா?[/size] [size=4]நன்றி[/size] புரட்டாதிச் சனி புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் சனி பகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரிய பகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித் தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று…
-
- 5 replies
- 1.7k views
-
-
இயற்கை உணவு உண்டால்...300 வயது வாழ முடியும்..! - பொன்.செந்தில்குமார், படங்கள்:வி.நாகமணி [size=1]செ[/size]ன்னை அண்ணா ஆர்ச் எதிரில் உள்ள குறுக்கு சந்துக்கு பெயர் துரைசாமி ராஜா தெரு. அங்குள்ள ஏ.வி.ஜி ரெட்டி இயற்கை நல மருத்துவமனையில் மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை இலவசமாக இயற்கை மருத்துவ முகாம் நடப்பதாக கேள்விப்பட்டோம். என்னதான் நடக்கிறது என்று பார்க்க நாமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சென்றோம். நமக்கு முன்பு நாற்பது பேர் அங்கே ஆஜராகி இருந்தார்கள். ஒரு பக்கம் வாழைப்பழத் தார் தொங்கிக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் முளைக்கட்டிய பயறுகள், பேரீச்சம் பழம், திராட்சை போன்றவை வைத்திருந்தார்கள். அந்த இடமே விநோதமாக காட்சியளித்தது. சுவையான தாமரை டீ, தேநீர் இடைவேளையி…
-
- 4 replies
- 15k views
-
-
குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர் செய்யக் கூடாதது என்னென்ன? கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, ”உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே” என்று நீங்கள் உங்கள் கணவனிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, ”அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்” என்று சொல்ல நேரிடலாம். தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிறு குழந்தைகளை …
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=4]"மரணத்தை எதிர்பார்த்து மருந்துகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்” [/size] [size=4] எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் அங்கொடை பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வருகிறார்கள்.[/size] [size=4]சொந்த வீடுகளில் இருந்து அனுப்பப்பட்டவர்களும், தங்களுக்கு இவ்வாறானதொரு நோய் இருக்கிறது என்பதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாதவர்களும் அந்த வீட்டில் இருக்கிறார்கள். ஐ.டி.எச் பகுதிக்கு அண்மித்ததாக அங்கொடையில் ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கிறது அந்த வீடு. பெண்கள் சிலரும் ஆணொருவரும் அலி ஒருவரும் இருந்தார்கள். இவர்கள் சுமார் 25 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்டவர்கள். ஆரம்பத்தில் எம்மோடு பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை. எதற்காக வந்திருக்கிறோம…
-
- 14 replies
- 1.5k views
-
-
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன…? 1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக்கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது. 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும். 12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும். …
-
- 4 replies
- 1.2k views
-
-
தம்பதியரிடையேயான உறவு தனித்துவமானது. அவர்கள் இருவரைத் தவிர வேறு வேறு எவராலும் அந்த அன்பின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. நேசத்தை தெரிவிக்க ‘ஐ லவ் யூ' என்று வார்த்தைகள் தான் வேண்டும் என்றில்லை. ஒவ்வொரு செயலிலும் நேசத்தை உணர்த்தலாம். உணர்வு பூர்வமான அந்த நிகழ்வுகள் வார்த்தைகளை விட வலிமையானவை. சொற்கள் இல்லாமல் காதலை தெரிவிக்கும் விதம் பற்றி நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன். பூக்கள் சொல்லும் காதல் அலுவலகம் முடிந்து வருகிறீர்களா? உங்கள் டிபன் பாக்ஸ் அல்லது பையில் மனைவிக்கு பிடித்த மல்லிகையோ, ரோஜாவோ வாங்கி வைத்திருங்களேன். அதை மனைவியின் கண்ணில் படுமாறு கவனமாய் வைத்துவிட்டு மறைந்திருந்து பாருங்கள். டிபன்பாக்ஸ் திறக்கும்போது அந்த பூக்களை விட உங்கள் மனைவிய…
-
- 2 replies
- 814 views
-
-
ஒரு குழந்தையின் அப்பாவை அறிமுகம் செய்வது அம்மா. ஆனால் அப்பா யார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் மரபணு சோதனை செய்து கொள்ளுங்கள் என்ற அறிவிப்புடன் நியூயார்க் நகரை வலம் வந்து கொண்டிருக்கிறது ஒரு வாகனம். இந்த வாகனத்தில் மரபணு சோதனை நடத்த ுவதற்கான அனைத்து பரிசோதனை வசதிகளும் உள்ளன. நிபுணர்களும் தயாராக உள்ளனர். மரபணு சோதனை நடத்துவதற்காக, ஒரு நபருக்கு 32 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தினமும் நியூயார்க் நகரின் முக்கிய சாலைகளை சுற்றி வரும்போது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் இந்த வாகனம் நிறுத்தப்படுகிறது. ஏராளமான ஆண்கள், தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து இந்த குழந்தை தங்களுக்குப் பிறந்தது தானா? என்று பரிசோதனை செய்கின்றனர். அந்த ஆய…
-
- 10 replies
- 2.3k views
-
-
'ஸ்வீட் கேர்ள்ஸை'க் கவருவதற்கு சில 'க்யூட் டிப்ஸ்'...! . உண்மையான காதல் என்பது அவ்வளவு எளிதில் வந்துவிடாது. அதிலும் ஒரு நல்ல பிகரை மடக்க வேண்டும் என்றால் மிகவும் கடினமானது. ஆனால் அவர்களை மடக்குவது என்பது அவ்வளவு பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. டேலண்ட் இருந்தா கண்டிப்பாக மடக்கி, சந்தோஷமாக காதல் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். அது என்ன டேலண்ட் என்று கேட்கின்றீர்களா? பெண்களை கவர நிறைய வழிகள் இருக்கிறது. எப்படியெனில் இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் மிகவும் பிடித்தது என்று ஏதாவது ஒன்று இருக்கும். அதிலும் பெண்களுக்கு சொல்லவா வேண்டும். மேலும் பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்தது என்று நிறைய உள்ளது. இப்போது அதில் ஆண்கள் என்ன செய்தால், எப்படி இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் எ…
-
- 1 reply
- 1.9k views
-
-
70 களில் இலங்கையில் மிகவும் பிரபலமான விடயங்களில் இதுவும் ஒன்று. வானொலிகள் நாடகங்கள் தனியார்நகைச்சுவைகள் ஏன் பாட்டிலும் கூட அது முதலிடம் பிடித்திருந்தது. "லண்டனிலே மாப்பிள்ளையாம் பொண்ணு கேட்கிறாங்க" மிகவும் பிரபலமானது. கிட்டத்தட்ட இது ஒரு போலி நாடகம். இதில் பலர் சிக்கி கண்ணீர்விட்டதை காணமுடிந்தது. பெரும் செல்வந்தர்கள் மற்றும் பெரும் படிப்பு படித்தோரே அதிகளவில் இதற்குள் புகுந்து ஏமாற்றப்பட்டது பழைய கதை. இனி தற்பொழுது........... எனக்குத்தெரிந்தே பல புலம் பெயர் நாட்டிலிருக்கும் பெண்களை, தற்பொழுது படிக்கவென்று லண்டன் வந்து விசா முடிவடைந்து நாட்டுக்கு திரும்பிச்செல்ல வேண்டிய நிலையை சமாளிப்பதற்காக இன்ரநெற் மூலமாக ஏமாற்றி திருமணம் வரை க…
-
- 62 replies
- 6.5k views
-
-
கார் ஒடும் போதோ அல்லது வேறு ஏதாவது வேலை செய்ய முதலும் ( கட்டில் காலையும் சரி பார்க்கவும் ) சார்ளியை நினைத்துப் பார்க்கவும். வேலை சொய்ய முதல் நீங்கள் செய்யப் போகும் வேலைகேற்ற பாதுகாப்பு அங்கிகள் அணிந்து செய்யவும் உறவுகளே மன்னிக்கவும் வீடியோவை இணைக்க முடியவில்லை முழுவதும்
-
- 28 replies
- 3.6k views
-
-
மெல்போர்ன்: "பெண் என்றால் அழகு' என்ற காலம் போய், தற்கால இளைஞர்கள், அறிவான பெண்களையே மணக்க விரும்புவதாக, சமீபத்திய, ஆய்வுகள் மூலம், தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து, வெளியாகும், "தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை, உலகின், 30 நாடுகளை சேர்ந்த, 12 ஆயிரம் பேரிடம் நடத்திய, சர்வே மூலம், தற்கால ஆண், பெண் விருப்பங்கள் பற்றி, பல்வேறு, ருசிகர தகவல்கள் தெரிய வந்துள்ளன. சர்வே முடிவில், கூறப்பட்டுள்ளதாவது: சமீப காலமாக, பெண்களை, அவர்களின் தோற்றத்தின் மூலம், ஆண்கள் மதிப்பிடுவதில்லை. மாறாக, பெண்களின் அறிவுத் திறன், பண்பான குணங்கள் போன்றவையே, ஆண்களை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன.அதே சமயத்தில், ஆண்களிடம், வசதியை எதிர்பார்க்கும் பெண்கள், வெகுவாக குறைந்து விட்டனர். வாரிசுகளுக்கு, தன் கண…
-
- 7 replies
- 1.3k views
-
-
ஆபீஸூக்கு செக்ஸி டிரஸ் போடாதீங்க அது ஆபத்தாயிடும்! வீடோ, அலுவலகமோ உடை உடுத்தும் விதத்தில் நேர்த்தி இருக்க வேண்டும். நாம் உடுத்தும் உடைதான் நம் மீதான மதிப்பினை அதிகரிக்கும். பணி இடங்களில் நம்முடைய உடல் அழகை காட்டும் விதமாக உடை உடுத்திச் செல்வது ஆபத்தாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். லோ கட் ப்ளவுஸ் க்ளிவேஜ் காட்டும் லோ கட் ப்ளவுஸ் அணிந்து செல்வது என்றைக்கும் ஆபத்தானதுதான். வி நெக், யு நெக் என போட்டுக்கொண்டு சிங்கிள் பிளீட்ஸ் விட்டு புடவை உடுத்திக் கொண்டு அலுவலகத்திற்குச் செல்வது பார்ப்பவர்களுக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்திவிடும் என்கின்றனர் நிபுணர்கள். வெளிநாடுகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் கூட இன்றைக்கு முன்னழகின் அழகை வெளிக்காட்டுவதை பெண்கள் ப…
-
- 18 replies
- 4k views
-
-
[size=2] [size=4]இந்தியா போன்ற மக்கள் தொகை பெருக்கமுள்ள ஒரு நாட்டில் அரசாங்கத்தால் எல்லோருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கமுடியாது. இந்த இடைவெளியைத் தொழில்முனைவோர்தான் நிரப்பவேண்டும். அந்தத் தார்மிகக் கடமை அவர்களுக்கு இருக்கிறது. இந்த உணர்வை அவர்கள் எப்பொழுதும் மறக்கக்கூடாது. அதனால் எத்தனை சவால்கள் வந்தாலும் எப்பாடுபட்டாவது தொழில் முயற்சியைத் தொடரவேண்டும்.[/size][/size] [size=2] [size=4]ஆரம்பித்த ஒரு தொழில் முயற்சியை எக்காரணம் கொண்டும் கைவிடவே கூடாதா? [/size][/size][size=2] [size=4]நான்கு காரணங்களுக்காகச் செய்யலாம். முதல் காரணம், தொழில் நடத்துபவரின் மரணம். இரண்டாவது காரணம், பெரிய அளவிலான உடல் ஊனம். மூன்றாவது, அரசாங்கத்தின் அநாவசியக் குறுக்கீடு. நான்காவது,…
-
- 0 replies
- 1.1k views
-
-
எல்லோரும் Fast Food கடைக்கு செல்வதை ஒரு பொழுது போக்காகவும் ஒரு நாகரிகமாகவும்(?), அல்லது ரசனைக்காகவும் செல்வோம். எப்போதாவது செல்வதில் தப்பில்லை. ஆனால் அடிக்கடி போனால் சொந்த செலவில் சூனியம் வைக்கும் கதையாக தான் அமையும் Fast Food பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் ஒரு குறிப்பு. 1 .வரலாறு 1921 - முதலாவது Fast Food Chain நிறுவனமாக White Castle உருவானது. 1948 -McDonald 's Fast Food மார்க்கெட் இல் தன்னை இணைத்தது. 1951 - "Fast Food " என்ற பதம் Merriam Webster அகராதியில் சேர்க்கப்பட்டது. 1951 - Jack In The Box "Drive Through" ஐ அறிமுகப்படுத்தியது 2 .சந்தை நிலவரம் McDonald 's இன் வருமானம் 31 000 locations களில்இருந்து $23 Billion YUM! B…
-
- 3 replies
- 2.5k views
-
-
த்தியானந்த குருவும் சீடர்களும் ஆர்.அபிலாஷ் ஆத்திகனும் இல்லை நாத்திகனும் இல்லை - இந்தியன் ஐந்து வருடங்களுக்கு முன் சத்யசாயி பாபாவை விமர்சனம் செய்யும் ஜி.ஆர்.ஆர். பாபுவின் “Sex,Lies, and Video Tape” என்கிற கட்டுரையை புதியகாற்று என்கிற பத்திரி கைக்காகத் தமிழாக்கம் செய்து கொண்டிருந்தேன். ஒருநாள் அது பற்றிக் குறிப்பிட்ட போது என் காதலி “தயவுசெஞ்சு அதைப் பண்ணாதே” என்று கெஞ்சினாள். அதனால் ஏதேனும் கேடு நேரும் என்று அவள் அஞ்சினாள். எனக்கு விநோதமாக இருந்தது. அவள் தீவிர சாய் பக்தை ஒன்ற…
-
- 3 replies
- 2.7k views
-
-
[size=2][size=4]எது நமக்கான தொழில் என்று தீர ஆராய்ந்து முடிவெடுத்த பிறகு கீழ்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.[/size][/size] [size=2][size=4]உங்களுடையது முதல் தொழில் முயற்சி என்றால், உங்களுக்கு ஏற்ற முதலீட்டை மட்டும் போட்டு ஆரம்பியுங்கள். அகலக்கால் நினைப்பு வேண்டாம். மேலும், உங்கள் முயற்சி தனி முயற்சியாக இருப்பது உத்தமம். உறவினருடனோ, நண்பருடனோ சேர்ந்து தொழிலில் ஈடுபடுவதாக இருந்தால், உங்களைப் போலவே அவர்களும் உண்மையான, நேர்மையான வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் உள்ளவர்களாக இருத்தல் மிக அவசியம். அப்படி இல்லாவிட்டால் ஆரம்பக் கட்டத்திலேயே மன வருத்தம் உண்டாகிவிடும். இதனால் செய்யும் தொழில் பாதிக்கும். லாபமோ, நஷ்டமோ உங்கள் தனித்திறமைகளை முன்வைத்துத் தொடங்கும் போது,…
-
- 3 replies
- 890 views
-
-
[size=4]மனைவிக்கு உதவியாக, பாத்திரம் கழுவாததாலும், அழுக்கு துணிகளை துவைத்து தராததாலும், 30 சதவீத விவாகரத்து ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[/size] [size=4]லண்டனை சேர்ந்த, டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற நாளிதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:[/size] [size=4]தற்போதுள்ள அவசரமாக சூழ்நிலையில், வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பும் பெண், மீண்டும் வீட்டு வேலைகளை தொடர சிரமப்படுகிறார். அந்த நேரத்தில் கணவனின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார். இது நிறைவேறாத பட்சத்தில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்தில் முடிகிறது.[/size] [size=4]பாத்திரங்களைகழுவாமல் வைத்திருப்பது, அழுக்கு துணிகளை அதற்குரிய கூடையில் போடாமல், கண்ட இடத்தில் போடுவது,போன்ற பிரச்னைகளால், ஒரு ம…
-
- 25 replies
- 2.6k views
-
-
சாதிய விடுதலைக்கான முன்நிபந்தனை? மீராபாரதி லண்டனில் 2008 ஆண்டு பிப்ரவரி மாதம் 16 - 17 தேதிகளில் நடைபெறவுள்ள இரண்டாவது தலித் மாநாட்டிற்கான இந்த கட்டுரை எழுதப்படுகின்றது. பொருளாதார காரணங்களினால் மாநாட்டில் நேரடியான பங்குபெற முடியாமையினால் இக்கட்டுரை மாநாட்டிற்கும் மற்றும் பிற சஞ்சிகைகளுக்கும் அனுப்பப்படுகின்றது. சுமூக விடுதலைப் போராட்டமோ அல்லது தேசிய விடுதலைப் போராட்டமோ சாதியின் பெயரால் அடக்கப்பட்ட மக்களுக்கு எந்தவகையிலும் விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை. இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆயுதங்தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டம் கடைசிவரை சாதி விடுதலையை முன்னெடுத்து விடுவிக்கும் என்பதற்கான எந்த சாத்தியப்பாடுகளும் இல்லை. தேசிய விடுதலையையே பெற்றுத்தராது விடப்போகும்…
-
- 0 replies
- 702 views
-
-
ஆண்பிள்ளை அம்மா செல்லமா, இருந்தால்... வரும் பிரச்சினைகள். இந்த உலகில் அனைவருக்கும் அம்மா என்றால் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவர்கள் தானே இந்த அழகான உலகிற்கு கொண்டு வந்தது. அத்தகைய அம்மாவை ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி மிகவும் பிடிக்கும். இருப்பினும் ஆண்களுக்கு தான் அம்மா என்றால் உயிர். பெண்களுக்கு அப்பா தான் உயிர். வேண்டுமென்றால் அனைத்து வீடுகளிலும் பாருங்கள், பசங்க எல்லோருமே, அவர்களது அம்மாக்களிடமே மிகவும் பாசமாக நடந்து கொள்வார்கள். இவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பசங்களுக்கு திருமணம் ஆனப் பின்பு தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. ஏனெனில் அப்போது மற்றொரு பெண் அவர்களின் வாழ்க்கையில் நுழைவது தான் காரணம். ஆகவே ஆண்கள் அம்மாவின் மீது மிகவும் பாசம் உள்ளவர்களா…
-
- 3 replies
- 1.8k views
-
-
[size=4][/size] [size=4]அஜ்மல் கசாப் நல்லவன், வல்லவன் என்றெல்லாம் சான்றிதழ் கொடுக்கவில்லை. எல்லோரும் சொல்வதைப் போல அவன் தீவிரவாதி, நூற்றுக்கணக்கானோரின் மரணத்துக்கு காரணமானவன் என்கிற நம்பிக்கை நமக்கும் உண்டு. இணையத்தளத்தில் கட்டுரை எழுதி மரணதண்டனையை நிறுத்த முடியும் என்று நினைக்குமளவுக்கு நாம் மனநலம் குன்றிவிடவில்லை. ஆனால் கருத்தியல்ரீதியாக மரணதண்டனைக்கு எதிரான நிலையில் இருப்பவர்கள், தூக்குத்தண்டனை என்கிற காட்டுமிராண்டித்தனமான நடைமுறை செயல்பாடுக்கு வரும் நிலையில் எல்லாம் அதை எதிர்க்கவேண்டிய கடமையில் இருக்கிறார்கள். [/size] [size=4]இதில் தமிழர்கள், தெலுங்கர்கள், பாகிஸ்தானியர்கள், அமெரிக்கர்கள் என்கிற பாகுபாடு எதுவும் தேவையில்லை. அவ்வாறு சிலருக்காக மட்டுமே த…
-
- 4 replies
- 723 views
-
-
[size=4]“இவ ஒன்றும் சாப்பிடறா இல்லை.” கடுப்பாகச் சொன்னான்.[/size] [size=4] RAJA RAVI VARMA'S PAINTING OF A NORTH INDIAN VILLAGE GIRL அவளில் அக்கறையும் கனிவும் காட்டுவதைவிட குற்றம் சாட்டும் தொனி ஓங்கியிருப்பதாகத் தெரிந்தது. ஷோ கேசில் உள்ள பொம்மைபோல அலங்கரிக்கப்பட்டிருந்தாள்;.[/size] உடைகளையும், நகைகளையும் பளிச்சென அணிந்திருந்ததைப் பார்த்தபோது புதுமணத் தம்பதிகளாகத் தோற்றினர். “எதைக் கண்டாலும் ஓக் ஓக் என ஓங்காளித்துக் கொண்டே இருக்கிறா. ஷி இஸ் நொட் ஈடிங் அட் ஓல். ஒண்டையும் விரும்பிச் சாப்பிடுகிறா இல்லை.” அவனது ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்புத் தொனி லண்டன்வாசி என்பதைக் கோடி காட்டியது. “…வயிறும் ஊதல…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். ஆண் தனக்குள் இருக்கும் பெண்வடிவத்தை காதலிக்கிறான். பெண் தனக்குள் இருக்கும் ஆண்வடிவத்தைக் காதலிக்கிறாள் என்கிறது உளவியல். ஆண்களுக்குப் பெண்தன்மை அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு ஆண்தன்மை அதிகரித்து வருகிறது. என்கிறது அறிவியல். ஆண்போல வீரம் நிறைந்த பெண்களையும், பெண் போல அச்சம் நிறைந்த ஆண்களையும் நடைமுறை வாழ்க்கையில் நாம் காணமுடிகிறது. 100 விழுக்காடு ஆண்தன்மையுள்ள ஆண்களும், 100 விழுக்காடு பெண்தன்மையுள்ள பெண்களும், இல்லை என்கிறது மருத்துவம். மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே ஆணுக்கும் பெண்ணுக்குமான போர் தீராது நடந்து வருகிறது. இந்தப் போருக்குப…
-
- 0 replies
- 854 views
-