உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, இன்று காலை சுட்டு வீழ்த்தியது. எச்சரிக்கை விடுத்ததையும் மீறி, துருக்கி வான்வெளிக்குள் நுழைய முயன்றதால் போர்விதிகளுக்குட்பட்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்தது. இந்நிலையில், ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் “முதுகில் குத்திவிட்டார்கள் என்று தான் கூறவேண்டும். இதை வேறு மாதிரி சொல்லமுடியாது. இன்று நடைபெற்ற சம்பவம் துருக்கி - ரஷ்ய இட…
-
- 3 replies
- 1.4k views
-
-
டோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 என்ற அளவில் இருந்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.கடந்த மாதம் சுனாமியால் பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் தற்போது அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
-
- 8 replies
- 1.4k views
-
-
சுயமரியாதையை இழந்து சீட் பெறத் தேவையில்லை-தேர்தலைப் புறக்கணிக்கிறோம்: வைகோ சென்னை: சுயமரியாதையை இழந்து, அதிமுக தரும் தொகுதிகளைப் பெற்று தேர்தலில் போட்டியிட மதிமுக விரும்பவில்லை. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் பங்கு பெறவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். வைகோவின் இந்த முடிவு அரசியல் அரங்கில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. வைகோவின் இந்த முடிவால், வைகோ மூலம் அதிமுகவுக்கு ஆதரவான நிலையை எடுத்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் தேர்தலைப் புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அரசியலில் மிகவும் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான வைகோவையும், அவரது மதிமுகவையும் ஜெயலலிதா …
-
- 10 replies
- 1.4k views
-
-
இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே நாட்களில்தான் முள்ளிவாய்க்காலில் இலங்கை ராணுவம் தன்னுடைய வெறியை தீர்த்துக் கொண்டது. போரின் கடைசி மூன்று நாட் களில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். உலகமே வேடிக்கை பார்க்க நடந்து முடிந்த இந்த இனப்படுகொலை, இப்போது ஐ.நா. அறிக்கை மூலம் வெளியே வந்திருக்கிறது. இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது நிகழ்த்திய போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட குழு விசாரித்து சமீபத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அதில் ராஜபக்ஷே மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் மீது சரியான விசாரணை நடைபெற்றால் அவருக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஐ.நா. குழு அறிக்கை …
-
- 0 replies
- 1.4k views
-
-
நியூசிலாந்து பாராளுமன்றத்தில் 21 வயதான இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஆற்றிய உரை தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ஹக்கா (haka) எனப்படும் பாரம்பரிய வெற்றி முழக்கத்துடன் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. Hana-Rawhiti Maipi-Clarke எனும் குறித்த பெண் கடந்த 170 வருடங்களில் நியூசிலாந்து வரலாற்றில் பதிவான முதல் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். நியூசிலாந்தின் ஆக்லேண்ட் மற்றும் ஹெமில்டனுக்கு இடையில் உள்ள Huntly எனும் சிறிய நகரத்தை சேர்ந்த இவர், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். மாவோரி பழங்குடி இனத்தை சேர்ந்த இவர் நியூசிலாந்தின் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறார். …
-
- 9 replies
- 1.4k views
- 1 follower
-
-
சென்னையில் இருந்து திருப்பதிக்கு காரில் செல்கிறார் ராஜபக்சே இந்தியா இலங்கை இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியை பார்க்க இலங்கை அதிபர் ராஜபக்சே மும்பை வருகிறார். முன்னதாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். இதற்காக ராஜபக்சே இன்று சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகிறார். பின்னர் சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி கோவிலுக்கு செல்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் ஏழுமலையானை தரிசனம் செய்து சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார். பின்னர் இரவில் திருப்பதி மலையில் ரிலையன்ஸ் நிறுவனம் கட்டிக் கொடுத்த ஸ்ரீகிருஷ்ணா பிரமாண்ட விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். பின்னர் காலை அங்கிருந…
-
- 3 replies
- 1.4k views
-
-
லடாக்: லடாக் பகுதியில் ஊடுருவியுள்ள சீன படையினர், ’இது சீனாவிற்கு சொந்தமான இடம்’ என்ற அறிவிப்பு பலகையுடன் 5வது கூடாரத்தை அமைத்து இந்திய ராணுவத்திற்கு சவால் விடுத்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில், கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதியன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன படையினர், முதலில் 10 கி.மீ. தூரத்தில் முகாம் அமைத்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் 19 கி.மீ. தூரம் வரை ஊடுருவி இருப்பதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சீன படையினர் தற்போது லடாக் பகுதியில் 5வது கூடாரத்தை அமைத்துள்ளதாகவும், கூடாரம் அமைக்கப்பட்ட இடத்தில் சீனாவிற்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. …
-
- 17 replies
- 1.4k views
-
-
இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது. நவீன உலகம் பெருமையாக பேசிக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதன் எதிர்விளைவுகள் டிஜிட்டல் துறையில் அதிகரித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். டீப்பேக் என்ற ஏ.ஐ. வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவரின் முகத்தை வேறு ஒருவரின் உடலோடு பொருத்தி வீடியோ வெளியிடுவது அதிகரித்து வருகிறது. அவ்வகையில், இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் டீப்பேக் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச த…
-
- 0 replies
- 1.4k views
- 1 follower
-
-
குவைத் செல்லும் பணிப்பெண்களிற்கு காத்திருக்கும் புதிய ஆபத்து- அடிமைகளாக சமூக ஊடகங்கள் மூலம் விற்பனை பணிப்பெண்களை சமூக ஊடங்கள் மூலம் அடிமைகளாக விற்க முயன்ற நபர்களை விசாரணைகளிற்கு வருமாறு குவைத் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். பிபிசியின் அராபிய செய்தி பிரிவு பணிப்பெண்கள் அடிமைகளாக சமூக ஊடகங்கள் மூலமாக விற்கப்படுவதை அம்பலப்படுத்திய பின்னரேகுவைத் அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அடிமை சந்தை குறித்த அப்ஸ் காணப்படுவதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது. பணிப்பெண்கள் மாற்றம் ,பணிப்பெண்கள் விற்பனைக்கு போன்ற ஹாஸ்டாக்குகள் மூலமாக பணிப்பெண்களை அடிமைகளாக விற்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக பிபிசிதெரிவித்துள்ளது. பிபிசி இதனை அம்பலப்படுத்த…
-
- 0 replies
- 1.4k views
-
-
"பன்ச் மேல் பன்ச்" வசனம் பேசி சிலிக்கான் வேலியை சிலிர்க்க வைத்த மோடி சான் ஜோஸ்: டிஜிட்டல் புரட்சி பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஒற்றை வரிகளில் பல பஞ்ச் வசனங்கள் பேசி சிலிக்கான் வேலியைச் சேர்ந்த ஐடி பெரும்தலைகளை கவர்ந்துள்ளார். அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சிலிக்கான் வேலி சென்றுள்ளார். அங்கு அவர் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சிஇஓக்களை சந்தித்து பேசினார். மேலும் இன்று நடந்த டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவரது உரையின் சிறப்பு அம்சங்கள், நான் உங்களில் பலரை டெல்லி, நியூயார்க், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சந்தித்துள்ளேன். ஃபேஸ்புக் மட்டும் ஒரு நாடாக இருந…
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் வருகிற 9-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இப்போராட்டத்தில் பங்கேற்போர் பட்டியலை அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா- சென்னை.சென்னையில் நடைபெற உள்ள உண்ணாவிரத அறப் போராட்டத்தில், அனைத் துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் டி. ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொள்வார்) அதிமுக.அவைத் தலைவர் மது சூதனன்- விழுப்புரம் தெற்கு, கழக அரசியல் ஆலோசகர் பொன்னையன்- தூத்துக்குடி. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம்- தேனி, தலைமை நிலைய செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன்- ஈரோடு வடக்கு, விசாலாட்சி நெடுஞ்செழியன்- திருவள்ளூர், முத்துசாமி- ஈரோடு தெற்கு, சுலோசனா சம்பத்- காஞ…
-
- 4 replies
- 1.4k views
-
-
மத்திய லண்டன் பகுதியில் ஹைமார்க்கெட் எனும் இடத்தில் வெடிக்க வைக்கத் தயார் செய்யப் பட்ட நிலையில் கார் ஒன்று இன்று அதிகாலை பொலீசாரினால் கண்டு பிடிக்கப் பட்டது. காரினுள் பெற்றோல் மற்றும் காஸ் சிலிண்டர்கள் போன்றவை நிரப்பப் பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://news.bbc.co.uk/player/nol/newsid_62...bw=bb&mp=wm
-
- 4 replies
- 1.4k views
-
-
பிரபல எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை சனிக்கிழமை, மார்ச் 1, 2008 சென்னை: பிரபல தமிழ் எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் சென்னையில் இன்று தற்கொலை செய்து கொண்டார். எழுத்தாளர் சுஜாதாவின் மறைவினால் தமிழ் எழுத்துலகம் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் இன்னொரு பெரும் அதிர்ச்சியாக பிரபல எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் 67 வயதில் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி வந்துள்ளது. ராம் மோகன் என்ற இயற்பெயர் கொண்ட ஸ்டெல்லா புரூஸ் இளமை ததும்பும் பல சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார். சுஜாதாவைப் போலவே இவரது எழுத்துக்களிலும் இயல்பும், இளமையும் நளினமாக நடைபோடும். 67 வயதான ஸ்டெல்லா புரூஸ், சமீப காலமாக வறுமையில் வாடி வந்தார். கோடம்போக்கம் யுனைட்டெட் இந்தியா காலனியில் தனத…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிரியாவில் அரசுப்படைகள் இரசாயனக் குண்டுகளை வீசி ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களைக் கொன்றுள்ள நிலையில், அமெரிக்காவின் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் ஒன்று மத்தியத்தரைக்கடல் விரைகிறது. ஏற்கனவே அப்பிராந்தியத்தில் மூன்று அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல் மூலம் அதன் எண்ணிக்கை நான்காக உயர்கிறது. இருந்தும் சிரியாவிற்கு எதிராக எந்த தாக்குதலையும் தொடுக்க ஆயுத்தமாக இருக்கும்படி எங்களுக்கு உத்தரவும் வரவில்லை என்று அங்குள்ள அமெரிக்க கப்பற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராக ரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா சிரியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த தீர்மானித்துக் …
-
- 22 replies
- 1.4k views
-
-
பொலிஸாரின் விசாரணையில் பிரான்ஸ் பங்குசந்தை வியாபாரி பிரான்சில் பங்கு சந்தை வியாபாரத்தில் மாபெரும் மோசடியில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெரோம் கெர்வீல் என்ற நபரை பொலிஸார் விசாரணைக்காக கொண்டு சென்றுள்ளனர். இவர் பிரான்சின் இரண்டாவது மிக பெரிய வங்கியான சோசியதே ஜெனரலுக்கு பங்கு வியாபாரத்தில் சுமார் ஏழுநூறு கோடி டாலர் நஷ்டத்தை ஏற்படுத்தியதோடு, அதனை மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை காவல்துறையினர் விசாரிக்கின்றனர். பொலிஸார் வங்கியின் தலைமை அலுவலகம் மற்றும் ஜெரோம் கெர்வீலின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர், அதன் போது அவருடைய கணிணி கோப்புகள் சிலவற்றை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முழுத்தகவல்களும் வேண்டும் …
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழகத்தேர்தல் -யாரும் இங்கே சுத்தமில்லே மெரீனா கடற்கரை ஓரம். அண்ணா சமாதி அருகே அமர்ந்து கொண்டிருந்தது அலப்பறை டீம். உன்னைச் சொல்லி குத்தமில்லே. யாருமிங்கே சுத்தமில்லே என்று அலம்பல் செய்து கொண்டிருந்தார் சுவருமுட்டி சுந்தரம். "குடிமகனுக்கு அலம்பலைப் பாரு. இப்போ எதுக்குய்யா அந்தப் பாட்டைப் பாடற" என அதட்டினார் சித்தன். "வேற என்னய்யா பாட முடியும். அண்ணா உயிரோடு இருந்தபோது இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுத்தாரு. ஒரு விடிவு வரும்னு சொன்னாரு. எத்தனை வருஷமாச்சு. இன்னைக்கு அவரோட கைப்புள்ள கலைஞர் ஆட்சியிலேயும் அதான் நடக்குது. எந்த காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர் இன அழிப்புக்காக, சிங்களவனுக்கு துணை போகுதோ, அந்தக் கட்சிகூட கூட்டணி வச்சு குலாவுறாரு. அத நினைச்சேன். பாடு…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணம் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மரியம் பிச்சை, இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் காரில் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி காயமடைந்தார். சமீபத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் என்.மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேருவை வீழ்த்தியதால் இவரை பதவி தேடி வந்தது. இன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா சட்டசபையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மரியம் பிச்சை,திருச்சியிலிருந்து சென்னை கிளம்பினார…
-
- 3 replies
- 1.4k views
-
-
மதிமுக தொண்டரின் குமுறல் வை.கோ என்னுடய தலைவர். ஆனால் இன்று எங்களுக்கு ஏன் இந்த நிலை? ஏன் எங்களுக்கு இத்தனை சோதனைகள்? தோல்விகள்? தகுதியான வை.கோ அவர்கள் முன்னணி தலைவராய் தமிழகத்தில் ஆக முடியாமல் போனதற்கான காரணங்கள் சிலவற்றை பட்டியலிடுகிறேன ் பாருங்கள். 1. "மனைவி1/மனைவி2/துணைவி என்கிற இல்லறம் இல்லாதது. 2. வாரிசு அரசியல் செய்ய துணியாதது. 3. 18 ஆண்டுகள் டெல்லியில் இருந்தும் ஊழல் செய்யாமல் இருந்தது. 4. உலகில் எங்கெல்லாம் தமிழன் பாதிக்கப்பட்டால ும் அவனுக்காக குரலெழுப்பி போராடியது. 5. தன் அரசியல் வாழ்வையே ஈழத்து சொந்தங்களுக்காக இழந்து நிற்பது. 6. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்களின் வாழ்வுரிமையை காக்க 18 ஆண்டுகள் போராடி வென்றது. 7. முல்ல…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் 2016-09-04 20:39:41 மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதல் காரணமாக தலையில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத் தாக்குதலில் மலேஷியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் மற்றொரு சிரேஷ்ட அதிகாரியும் காயமடைந்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சு இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவு…
-
- 19 replies
- 1.4k views
-
-
Published By: RAJEEBAN 24 MAY, 2024 | 07:46 PM காசாவின் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என சர்வேதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் உடனடியாக ரபா மீதான தாக்குதலையும் ஏனைய நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மனிதாபிமான பொருட்களை காசாவிற்குள் கொண்டு செல்வதற்காக இஸ்ரேல் எகிப்து எல்லையில் உள்ள ரபா எல்லையைதிறக்கவேண்டும் விசாரணையாளர்களும் காசாவில் என்ன நடக்கின்றது என்பதை அறிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் காசாவிற்குள் செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றம் தனது உத…
-
-
- 22 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஹா – ஹாங்காங் -1 பொருளாதாரத்தில் அப்படி யோர் அப்பப்பா வளர்ச்சி! எனவே அந்த நான்கு பகுதிகளையும் ‘ஆசியப் புலிகள்’ என்று கூறுகிறார்கள். ஆண்டுக்கு ஏழு சதவீதத்துக்கும் அதிகம் என்கிற அளவில் பொரு ளாதார வளர்ச்சி. வெகு வேகமான தொழில் முன்னேற்றம். சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் ஆகியவற்றுடன் கைகோத்து கர்வம் பொங்க இப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பகுதி ஹாங்காங்.ஹாங்காங் என்றால் சீன மொழியில் ‘‘நறுமணம் வீசும் துறைமுகம்’’ என்று பொருள். ஆனால் இன்று அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் ‘’எங்கள் மூச்சுக் காற்றே தடை பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் நறுமணத்தை எங்கே சுவாசிப்பது?’’ என்கிறார்கள் விரக்தியோடு. அவர்களைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பதுதான் இப்போதை க்கு அவர்களுக்கான சுவாசம். …
-
- 4 replies
- 1.4k views
-
-
[size=4]சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்?மொழி பெயர்ப்பால் மாணவர்கள் குழப்பம்[/size] பிரதமர் மடலில், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சரின் பெயர் பிழையாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது பள்ளி மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளான நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக மத்திய அரசு கடந்தாண்டு அறிவித்தது. இந்த நாளை, ஆண்டுதோறும் கல்வி உரிமை நாளாகக் கொண்டாட வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் தனது கையொப்பத்துடன் ஒரு மடல் அனுப்பினார். தமிழில் மடல்:இந்த மடல் ஆங்கிலத்திலும், அந்தந்த மாநில மொழியிலும் இருந்தது. தமிழகம், புத…
-
- 0 replies
- 1.4k views
-
-
வெறும் கையை வீசிக்கொண்டு வந்த சோனியா உலகின் 6வது பணக்காரர் ஆனது எப்படி? - மேனகா காந்தி கேள்வி. [saturday, 2014-03-22 17:45:53] பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான மேனகாகாந்தி கடந்த தடவை அனோலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.இந்த தடவை அவருக்கு பா.ஜ.க. மேலிடம், பிலிபிட் தொகுதியை ஒதுக்கியுள்ளது. நேற்று அவர் பிலிபிட் சென்று தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிறகு அவர் புரன்பூர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவரும், தனது அக்காள் முறையானவருமான சோனியாவை கடுமையாக தாக்கினார். அவர் கூறியதாவது:– சோனியாகாந்தி இந்த நாட்டின் மருமகளாக இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு வந்த போது எதையும் கொண்டு வரவில்லை. வெறும் கையை வீசிக் கொண்ட…
-
- 3 replies
- 1.4k views
-
-
அரபு லீக்கிலிருந்து சிரியா நீக்கப்பட்டது அரபு லீக் அமைப்பு சிரியாவை தனது அமைப்பிலிருந்து நீக்கியுள்ளது. மேலும், சிரியா மீது உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதிக்குமாறும் அது அழைப்பு விடுத்துள்ளது. அரபு ஒப்பந்தத்தை அதிபர் பாஷர் அல் அஸ்ஸாத் அமலாக்கும் வரை சஸ்பெண்ட் நடவடிக்கை தொடரும் என்றும் அரபு லீக் அறிவித்துள்ளது. மேலும் போராட்டம் நடத்துவோரை ராணுவத்தைக் கொண்டு அடக்குவதையும், ஒடுக்குவதையும் சிரியா கைவிட வேண்டும் என்றும் அரபு லீக் கூறியுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று சிரிய தூதர் யூசப் அகமது கூறியுள்ளார். அரபு லீக்குடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஏற்கனவே சிரியா அமல்படுத்தியுள்ளது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையின் பின்னால் அமெரிக்க அரசு உள்ளது என்று அவர் க…
-
- 5 replies
- 1.4k views
-