உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை! இராணுவப் புரட்சிக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி குற்றவாளி என்று தீர்ப்பளித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு மேற்கண்ட தண்டனையை வழங்கியது. 2022 தேர்தலில் இடதுசாரி போட்டியாளரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த பின்னர், ஆட்சியில் தொடர்ந்தும் இருப்பதை நோக்காக் கொண்டு ஒரு சதித்திட்டத்தை வழிநடத்தியதற்காக அவர் குற்றவாளி என்று அவர்கள் தீர்ப்பளித்தனர். நான்கு நீதிபதிகள் அவரை குற்றவாளி எனக் கண்டறிந்தனர், ஒருவர் அவரை விடுவிக்க வாக…
-
- 2 replies
- 175 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 1 22 Sep, 2025 | 10:01 AM லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் குழந்தைகள் மீதான தாக்குதலை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் இன்று அதிகாலை தெற்கு லெபனானில் தாக்குதலொன்றை நடத்தியதாகக் கூறுகிறது. அதில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. லெபனானின் தெற்கு நகரமான பின்ட் ஜபீலில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக லொபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலின் இலக்கு ஒரு ஹிஸ்புல்லா உறுப்பினர் என்றும், அவரும் கொல்லப்பட்டதாகவும் அறிக்கையொன்றில், குறிப்பிடப்பட்டுள்ளது. இ…
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
02 Oct, 2025 | 01:05 PM பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் பெய்து வரும் தொடர் மழையாலும், அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்காலும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 1,006ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு, கைபர் பக்துன்குவா, பஞ்சாப், சிந்த், கில்ஜித்-பல்திஸ்தான், பலுசிஸ்தான், ஆசாத் ஜம்மு காஷ்மீர் மற்றும் இஸ்லாமாபாத் தலைநகர் பிரதேசம் ஆகிய மாகாணங்களை கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் பலியானவர்களில் 275 குழந்தைகள், 163 பெண்கள் மற்றும் 568 ஆண்கள் அடங்குவர். வெள்ளம் தொடர்பான அனர்த்தங்களில் மொத்தம் 1,063 பேர் காயமடைந்துள்ளனர…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
உலகளாவிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த தவறினால் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகும் உலக நிறுவனங்களின் தலைவர்கள் கூறி உள்ளனர் இது குறித்து உலக சுகாதார அமைப்பு , உலக வர்த்தக அமைப்புஉள்ளிட்ட தலைவர்கள் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பல தங்களின் மக்களின் நலனை காக்கும் வகையில் நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக உணவு விநியோகத்தொடரில் மந்தநிலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல நாடுகளில் சூப்பர் மாக்கெட்டுகள் காலியாக உள்ளன. ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் உலக சந்தையில் பற்றாக்குறையை உருவாக்கும் என ஐ.நா.,வுக்கான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைவர் கியூ டோங்யு தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 386 views
-
-
2030 ஆம் ஆண்டுக்குள், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள் காரணமாக உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஆண்டுக்கு சுமார் 560 பேரிடர்களை எதிர்கொள்ளும் என அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. பேரிடர் அபாயக் குறைப்புக்கான உலகளாவிய கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 13 ஆம் திகதி சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தைக் கடைப்பிடிக்கிறது. ஒற்றுமையின் மூலம் மட்டுமே உலகைப் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என்பதே சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தின் கருப்பொருளாகும். https://…
-
- 0 replies
- 105 views
- 1 follower
-
-
மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,662ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 179 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4 பேர் உயிரிழந்ததை அடுத்து, கொரோனா கிருமித் தொற்றால் இறந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டவர்களின் எண்ணிக்கை 1,005 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 90 பேர் சிகிச்சைக்குப் பிறகு முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா கிருமித் தொற்று பரவியுள்ளதால் வெளிநாடுகளுக்குச் சென்று…
-
- 0 replies
- 407 views
-
-
உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி நகர்த்திய அமெரிக்கா உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி ஐக்கிய அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. USS Gerald R Ford என்று பெயரிடப்பட்ட இந்த விமானம் தாங்கி கப்பல், 90 விமானங்கள் வரை கொண்டு செல்லக்கூடிய உலகின் மிகப் பெரிய அமெரிக்கப் போர்க் கப்பலாகும். சமீப வாரங்களாக கரீபியன் தீவுகளில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்து வருவதாகவும், இதில் மேலும் 8 போர்க் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் F-35 விமானங்கள் ஆகியவையும் உள்ளடங்குவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தக் கப்பல் மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா அத்து…
-
- 2 replies
- 172 views
-
-
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் அந்நாட்டின் மிகப்பெரிய விமானப்படை தளம் ஒன்று அமைந்துள்ளது. இதன் அருகாமையில் சுமார் பத்துமைல் தொலைவில் உள்ள டேட்டன் நகரில் வசிக்கும் தம்பதியினர் கடந்த 25-ம் தேதி மாலைநேரத்தில் தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்தபடி, சூரியன் மறையும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது, விமானப்படைத்தளத்தின் மேல்பகுதியில் வானத்தில் ஒரு மர்மப்பொருள் வட்டமிட்டபடி மிதந்து கொண்டிருந்ததை கண்டு அவர்கள் வியந்தனர். அந்த காட்சியை மிக நெருக்கமாக வீடியோவாக பதிவு செய்துள்ள அவர்கள், வேற்றுகிரகவாசிகளான ‘ஏலியன்ஸ்’ குறித்த ஆராய்ச்சிகளை நடத்தி வரும் ‘செக்யூர் டீம் 10’ என்ற குழுவிற்கு அந்த வீடியோ பதிவை அனுப்பி வைத்துள்ளனர்.இத…
-
- 0 replies
- 602 views
-
-
இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகிக்க 3 நாடுகள் எதிர்ப்பு 45 நாட்டு பிரதிநிதிகளிடம் இந்தியா விளக்கம் அளித்தது வியன்னா, இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகம் செய்யுமாறு 45 நாட்டு பிரதிநிதிகளிடம் இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால் இந்தியாவுக்கு அணு எரி பொருள் வினியோகம் செய்ய 3 நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு, 45 நாடுகள் அடங்கிய அணு எரிபொருள் வினியோக நாடுகள் அமைப்பு, அணு எரிபொருளை வினி யோகம் செய்து வருகிறது. இந்தியா - கடந்த 1974 ஆம் ஆண்டு, முதன்முறையாக பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. இத னால், இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகிக்க தடை விதிக்கப்பட்டது. 34 ஆண்டுகளாக இத்தடை அம லில் …
-
- 0 replies
- 923 views
-
-
தேடுதல் வசதி வழங்கும் இணையதளங்கள், அவை வழங்குகின்ற தேடல் முடிவுகளில் விளம்பரத்திற்கு பணம் கொடுப்போரை இனம்காட்டுவதற்கு தேவைப்படுகின்ற விதிமுறைகளை சீனா முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.உடல்நல பராமரிப்பு பொருட்களுக்கான லாபகரமான விளம்பரங்கள் பற்றி இணைதள பயன்பாட்டாளர்கள் முக்கியமாக கருத்தில் கொண்டுள்ளதாக சீனாவின் இணையவெளி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இந்த சட்டத்திற்கு முற்றிலும் இணங்கி நடப்போம் என்று சீனாவின் மிக பெரிய தேடுதல் வசதி அளிக்கும் இணையதளமான `பெய்து' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அரிதான புற்றுநோயால் அவதியுற்ற மாணவர் ஒருவர், பெய்து, இணையதளத்தில் தேடி கிடைத்த முடிவுகள் வழியாக கண்டறிந்த சிகிச்சையை சோதித்து பார்த்து, இ…
-
- 0 replies
- 450 views
-
-
அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று அமெரிக்காவில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் புளோரிடா மற்றும் டெக்சாஸ் போன்ற மாகாணங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் சேர்க்கை அதிகரித்து அங்குள்ள மருத்துவமனைகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளன. அலபாமா மாகாணத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தெற்கு கரோலினா மாகாணத்தில் சுமார் 77% மருத்துவ சேர்க்கை நிறைவடைந்துவிட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,000 பேருக்கு …
-
- 0 replies
- 407 views
-
-
சென்னை: தர்மபுரி கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 7.32 கோடி இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உததரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் 7 ஆம் தேதி, தர்மபுரி மாவட்டத்தில் நத்தம் காலனி, நாயக்கன்கொட்டாய் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகள் எரிக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் இரு வேறு சமூகத்தை சேர்ந்த இருவர் காதல் திருமணம் செய்துக்கொண்ட நிலையில், அம்மாவட்டத்திலுள்ள நத்தம் காலனி, நாயக்கன்கொட்டாய் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகள் கடந்த நவம்பர் 7 ஆம் தேதியன்று தீ வைத்துக்கொளுத்தப்பட்டன. இந்நிலையில் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க கோரி செங்கொடி என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வ…
-
- 0 replies
- 595 views
-
-
பிரான்ஸ் குடியேறிகள் பிரிட்டனில் தஞ்சம் கோரலாமா? பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்பர் ராட் பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்பர் ராட், பிரெஞ்சு உள்துறை அமைச்சரான பெர்னார் காஸ்நோவை இன்று சந்திக்கும் போது, குடியேறிகள் பிரான்ஸில் இருக்கும்போது ஜக்கிய ராஜ்யத்தில் தஞ்சம் கோரி விண்ணப்பம் செய்கின்ற கருத்தை நிராகரிப்பார் என்று மூத்த பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விவாதிக்க இவ்விரு அமைச்சர்களும் பாரிஸில் சந்திக்கின்றனர். பிரெஞ்சு உள்துறை அமைச்சரான பெர்னார் காஸ்நோவ் நகரத்திற்கு வெளியே இருக்கும் முகாம் ஒன்றில் வாழ்ந்து வரும் குடியேறிகள், பிரான்ஸ் மண்ணில் இருந்து கொண்டே பிரிட்டனில் தஞ்சக் கோரிக்கை வ…
-
- 0 replies
- 687 views
-
-
டெல்லி: ஏர்டெல், வோடபோன் செல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை இரு மடங்கு அதிகரித்துள்ளன. ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் என்பது 2 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஐடியா நிறுவனம், ஒரு நொடிக்கு 1.2 பைசா என்று இருந்ததை 2 பைசாவாக அதிகரித்து உள்ளது. செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இதுவரை கட்டணத்தை உயர்த்தாமலே இருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்ட பிறகு ரூ.23,000 கோடி கட்டணம் செலுத்தும்படி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. ஸ்பெக்ட்ரம் அனுமதி கட்டணம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவைக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 633 views
-
-
நம்புங்கள்... இப்படியும் ஒரு முதலமைச்சர்! கையிருப்புத் தொகை ரூபாய் 1,080.00 வங்கி இருப்பு ரூபாய் 9,720.00 மொத்தச் சொத்து மதிப்பு - ரூபாய் 2,20,000.00 இது, திரிபுரா மாநிலத்தை ஆளும் முதல்வர் மாணிக் சர்க்கார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), சொத்துக் கணக்கு! வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மாணிக் சர்க்கார், வேட்பு மனுவில் இந்தத் தகவல்களை தந்திருக்கிறார். இதில் மொத்த சொத்து என்று குறிப்பிடப்பட்டிருப்பது, இவருக்குச் சொந்தமாக இருக்கும் தகரக் கூரை வேயப்பட்ட 432 சதுர அடி வீடுதான். இதனுடைய மதிப்புதான் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். இது அவருடைய தாயார் வழியில் வ…
-
- 1 reply
- 821 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * கொலம்பியாவில் சமாதானத்துக்கான புதிய நம்பிக்கை; ஐம்பதாண்டுகால ஆயுதமோதலை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. * ஹிலரி கிளிண்டன், டொனால்ட் ட்ரம்புக்கு இடையிலான முதல் நேரடி விவாதத்துக்கு தயாராகிறது அமெரிக்கா; அதிபர் தேர்தலுக்கான நேரடி விவாதங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது எது?—ஆராய்கிறது பிபிசி. * விவசாய நெருக்கடிக்கு புதுவகை தொழில்நுட்பத்தீர்வு; கென்யாவின் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் செல்பேசி விவசாயம்.
-
- 0 replies
- 390 views
-
-
கனேடிய மாகாணங்களுக்குள் பரவிய அமெரிக்க காட்டுத் தீ அமெரிக்க மேற்கு கடற்கரையில் பரவி வரும் கடுமையான காட்டுத்தீயில் இருந்து வரும் புகை, மத்திய மேற்கு, கனடா மற்றும் வடக்கு நியூயோர்க்கின் சில பகுதிகளுக்கு கிழக்கு நோக்கி ஆயிரக்கணக்கான மைல்கள் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலிபோர்னியாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காட்டுத் தீ பரவி வருகிறது. இதன் காரணமாக இதுவரையில், 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கலிபோர்னியாவில் மட்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர் எரிந்துள்ளது. இந்த நிலையில், அந்த நெருப்பிலிருந்து வரும் புகை இரண்டு பெரிய சதுப்பு நிலங்களில் கிழக்கு நோக்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, அவற்றில் ஒன்று மேற்கு அமெரிக்கா முழுவ…
-
- 0 replies
- 421 views
-
-
கனடாவில் வோட்கா என நினைத்து வாஷிங் திரவத்தை குடித்து உயிரிழந்த பீர் ஸ்டோரில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக $175,000 வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. Brewers Retail Inc.,என்ற பீர் ஸ்டோர் கனடாவின் ஒண்டோரியா மாகாணத்தில் உள்ள மிஸ்ஸிஸூகா நகரத்தை தலைமையிடமாக கொண்டு, மொத்தம் 421 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில் பிராம்ப்டன் நகர கிளையில் பணிபுரியும், John Whitcombe என்பவர் வோட்கா என நினைத்து, வாஷிங் திரவத்தை குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். John Whitcombe மற்றும் அவருடன் பணிபுரியும் இன்னொருவரும், அன்று டெலிவரியான வாஷிங் திரவங்களில் ஒரு பாட்டில் மட்டும் வோட்கா லேபிளில் வந்துள்ளதை பார்த்து, இது உண்மையிலேய…
-
- 1 reply
- 502 views
-
-
பிரெக்ஸிட்: நம்பிக்கை, கோபம், நிச்சயமற்ற நிலை ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவானது நம்பிக்கை, கோபம், நிச்சயமற்ற நிலை ஆகியவற்றை உருவாக்கி யுள்ளது. சமீபத்திய நிகழ்வுகள் இதைத்தான் உணர்த்துகின்றன. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பிரிட் டன் பிரதமர் தெரசா மே, இதற்கு பதில் அளிப்பார் என எதிர்பார்த் தால் அதில் நிச்சயம் ஏமாற்றம் தான் மிஞ்சும். ஐரோப்பிய கூட்ட மைப்பிலிருந்து பிரிட்டன் வெளி யேறிய பிறகு அதன் நடவடிக் கைகள் எப்படி இருக்கும் என்பதை எவராலும் தீர்மானிக்க முடியாத சூழல்தான் தற்போது உள்ளது. பிரெக்ஸிட் தொடர்பாக பிரிட் டன் நாடாளுமன்றத்தின் இறை யாண்மையை…
-
- 0 replies
- 278 views
-
-
அல்-கொய்தாவின் 2 ஆம் தளபதி ஆப்கான் படையினர் நடத்திய தாக்குதலில் பலி! பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்த அல்கொய்தாவின் மூத்த தலைவரான அபு முஹ்சின் அல் மஸ்ரி உயிரிழந்துள்ளார். அமெரிக்க படையினரால் தேடப்படும் நபராக அறியப்பட்ட இவர் ஆப்கான் சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிய தேசிய பாதுகாப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. அல்-கொய்தாவின் இரண்டாவது தளபதி என்று நம்பப்படும் எகிப்திய நாட்டைச் சேர்ந்த அல்-மஸ்ரி, ஆப்கானின், மத்திய காஸ்னி மாகாணத்தில் நடந்த ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார் என்று ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பணியகம் சனிக்கிழமை தாமதமாக வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் அமெர…
-
- 0 replies
- 394 views
-
-
உலகத்தின் நம்பர் வண் யார்… முதலிடத்தைக் கைப்பற்ற வான்வெளியில் வெடித்திருக்கிறது அமெரிக்கா – சீனா இரண்டு நாடுகளுடைய சைபர் யுத்தம்.. 21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய பயங்கரவாதம் என்று வார்ணிக்கப்படும் சைபர்கிரைம் மோதல் ஆரம்பித்துவிட்டதை தமிழ் மக்கள் அவசரமாகவும் அவசியமாகவும் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் பேள்காபர் துறைமுகத்தை ஜப்பானியர் தாக்கியதைப் போல இப்போது சீனா அமெரிக்கா மீது நடாத்தியிருப்பது சைபர் பேள்காபர் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. இதுவரை சைபர்கிரைம் நடக்கிறது என்று பேசி வந்த அமெரிக்க அதிபர் முதல் தடவையாக சீனாவை நோக்கி கோபமாக கையை நீட்டியுள்ளார். சைபர் கிரைம் என்றால் என்ன..? இது சற்லைற் போர்.. சற்லைற்றை பயன்படுத்தி இணையம் மூலமாக நடைபெறும் போர…
-
- 1 reply
- 1.8k views
-
-
கொரோனா அச்சத்தால் டென்மார்க்கில் பலியாகப் போகும் 1.7 கோடி மிங்க்குகள் ! November 8, 2020 கொரோனாத் தொற்றுப் பரவலைத் தடுத்து நிறுத்த டென்மார்க் அரசு பண்ணைகளில் வளரும் 17 மில்லியனுக்கும் அதிகமான மிங்க் (( minks )) எனப்படும் கொறி வகை விலங்குகளைக் கொல்ல முடிவெடுத்துள்ளது. மிங்க் விலங்குகளின் ரோமங்கள் விலை உயர்ந்தவை என்பதாலும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களுக்கு மதிப்பு அதிகம் என்பதாலும் டென்மார்க்கில் 1,139 பண்ணைகளில் சுமார் 17 மில்லியன் மிங்க்குகள் வளர்க்கப்படுகின்றன. மிங்க்குகளிடமிருந்து பெறப்படும் ரோம வர்த்தகத்தில் டென்மார்க் உலகளவில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்நிலையில் டென்மார்க் பண்ணைகளில் வளர்க்கப்படும் மிங்க்குகள் பல கொரோனா நோய்த் …
-
- 3 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவின் கொள்கையில் உண்மையான மாற்றம் ஏற்பட்டால் ஈரானின் கொள்கையும் மாறும் [23 - March - 2009] * ஈரானின் உயர்மட்டத் தலைவர் ஹாமெனி அமெரிக்காவின் கொள்கையில் உண்மையான மாற்றம் ஏற்படுமானால் தமது கொள்கையிலும் மாற்றம் ஏற்படுமென ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதொல்லா அலிஹாமெனி தெரிவித்துள்ளார். ஈரானிய மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விடுத்த வீடியோ செய்திக்கு பதிலளிக்கும் முகமாகவே இதனைத் தெரிவித்துள்ள ஹாமெனி அமெரிக்காவிடமிருந்து இதுவரை உண்மையான மாற்றம் எதுவும் வெளிப்படவில்லையெனத் தெரிவித்துள்ளார். நீங்கள் மாறினால் எமது நடத்தையும் மாறுமெனக் குறிப்பிட்டுள்ள ஹாமெனி ஏனைய நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் தெர…
-
- 0 replies
- 631 views
-
-
தன்னை கேலி செய்த நிகழ்ச்சியை கடுமையாக சாடிய டிரம்ப் அமரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், நையாண்டி நிகழ்ச்சியான "சாட்டர்டே நைட் லைவ்" என்ற நிகழ்ச்சியில் அலெக் பால்ட்வின் என்ற நடிகர் தன்னை போன்று நடித்தது மிக மோசமாக இருந்தது என அந்நிகழ்ச்சியை கடுமையாக சாடியுள்ளார். அந்த நிகழ்ச்சி "பார்க்கதக்கதன்று" மற்றும் "முற்றிலும் ஒருதலை பட்சமானது" என்று டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் டிரம்ப். டிரம்ப் வெளியுறவு கொள்கைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக டிவிட்டரில் அதிக கவனம் செலுத்துவதாக சமீபத்திய நிகழ்ச்சியில் சித்தரிக்கப்பட்டது. முன்னதாக முக்கிய பிரசார நன்கொடையாளரின் வீட்டில் நடைபெற்ற "கதாநா…
-
- 1 reply
- 459 views
-
-
டிரம்பின் அதிகார வேட்டையை கட்டுபடுத்த ஓபாமா திட்டம் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் முஸ்லிம்கள் மீதான கொள்கையை நடைமுறைப்படுத்த விடாமல் தடுப்பதற்காக முஸ்லிம்கள் பற்றிய தரவுகளை அழிப்பதற்கு ஓபாமா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2001 ஆம் ஆண்டு இரட்டைகோபுர தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவிற்குள் வரும் மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டங்களை சேர்ந்த முஸ்லிம் மக்கள் பற்றிய தரவுகள் தேசிய குடிவரவு அடிப்படையின் கீழ் அமெரிக்காவால் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. அத்தோடு அவர்களை தீவிர கண்கானிப்பிற்கு உட்படுத்தி வரும் நடைமுறையும் பின்பற்றப்பட்டது. இந்நிலையில் முஸ்லிம்களின் வருகை க…
-
- 0 replies
- 454 views
-