உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26678 topics in this forum
-
சவுதி அரேபியாவின் முதலீட்டு மாநாட்டை புறக்கணிப்போர் பட்டியல் வெளியானது! ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலையில் சவுதி அரேபியாவின் ஈடுபாட்டைத் தொடர்ந்து அங்கு இடம்பெறவுள்ள மிகப் பிரமாண்டமான முதலீட்டு மாநாட்டில் கலந்துகொள்வத்திலிருந்து வணிக உலகின் மிக சக்திவாய்ந்த முதலாளிகள் மற்றும் பல நாடுகளின் அரச அதிகாரிகள் விலகியுள்ளனர். ஆனாலும் ரியாத்தில் நடைபெறவுள்ள இம்மூன்று நாள் நிகழ்வானது நூற்றுக்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களின் வருகை எதிர்பார்ப்புடன் முன்னோக்கி செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செவ்வாயன்று ஆரம்பிக்கவுள்ள இம்மாநாட்டைப் புறக்கணிப்போரின் பட்டியலை கீழே காணலாம். சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் (Christ…
-
- 0 replies
- 417 views
-
-
3 மணி நேரம் முன் இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர் படகு விபத்துக்குள்ளானதில் 41 பயணிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துனிசியாவிலிருந்து இத்தாலியை நோக்கி பயணித்த படகில் பயனித்த புலம்பெயர் பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் குறித்த விபத்தில் என உயிருடன் மீட்கப்பட்ட 4 பேர் வழங்கிய தகவலுக்கமையவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 1800 பேர் உயிரிழப்பு மேலும் உயிருடன் தப்பியவர்களில் 3 ஆண்கள் மற்றும் 1 பெண் உள்ளடங்குகிறார்கள். மேலும், மூழ்கிய படகில் மூன்று குழந்தைகள் உட்பட 45 பேர் சென்றதாக மீட்புப் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். லம்பேடுசா பகுதியானது இத்தாலியின் தெற்கே…
-
- 1 reply
- 207 views
- 1 follower
-
-
நிறவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய ஒலிவியா 103 வயதில் மரணம் November 25, 2018 அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய 103 வயதுப் பெண்ணான ஆபிரிக்க மற்றும் அமெரிக்கருமான ஒலிவியா கூக்கர் மரணமடைந்துள்ளார் சுமார் 70 வருடங்கள் போராடிய இவர் அமெரிக்க கடலோரப்படையில் அமெரிக்காவில் இதுவரை நடந்த நிறவெறி கொண்ட தாக்குதல் சம்பவங்களிலேயே மோசமானதாக கருதப்படும், 300 கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்ட 1921ஆம் ஆண்டு நடந்த துல்சா நிகழ்விலிருந்து உயிர் தப்பித்த ஒலிவியா தொடர்ந்து கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிறவெறிக்கு எதிராக போராடி வந்தார். நீதி மற்றும் சமத்துவத்திற்காக ஓயாமல் ஒலிக்கும் குரல் என ஒலியாவின் செயல்பாட்டை அமெரிக்காவின் முதல் க…
-
- 1 reply
- 664 views
-
-
மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சிறப்பாகப் பணியாற்றிய போதும், தாம் தேர்தலில் தோற்றுப் போனதாக திராவிட முன்னேற்றக்கழகம் ஆதங்கம் வெளியிட்டுள்ளது. தோல்வி ஏற்பட்டதாக யாரும் உணரவில்லை என்று முன்னாள் துணை முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சமச்சீர் கல்வி தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். எனவே சட்டசபை தேர்தலில் தாம் தோற்றாலும், தற்போது வெற்றிகளைப் பெற ஆரம்பித்துள்ளதாக ஸ்டாலின் கூறினார்.அடுத்ததாக புதிய தலைமைச் செயலக வெற்றிக்கு தயாராகிக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், 2016ல், கலைஞர் கருணாநிதி தலைமையில் மீண்டும் திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி அமை…
-
- 3 replies
- 758 views
-
-
எகிப்து அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவை இந்து கடவுள்களின் சிலைகளா? #Factcheck 3 மணி நேரங்களுக்கு முன்னர் படத்தின் காப்புரிமை AFP/Getty images இந்து கடவுள்களின் சிலைகள் எகிப்தில் உள்ள அகழ்வாராய்சித் தலம் ஒன்றில் கிடைத்துள்ளது என்று கூறி புகைப்படம் ஒன்று வலதுசாரி அமைப்புகளின் சமூகவலைதளங்களின் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. …
-
- 0 replies
- 1.4k views
-
-
.சென்னையில் நடந்த "குறள்' வழி திருமணம் அமைச்சர்கள், அறிஞர்கள் வாழ்த்து சென்னை :சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் தனது மகன் திருமணத்தை திருக்குறள் வழியில் நடத்தினார். அறிஞர் பெருமக்கள் கூடி திருக்குறள் வாசிக்க, மணமக்களும் திருக்குறள் வாசித்து இல்லற வாழ்வைத் துவக்கினர்.சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆராய்ச்சித் துறைப் பேராசிரியராக இருப்பவர் மோகனராசு. இவரது மகன் இளங்கோ. டாக்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் டாக்டர் அனிதாவுக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது.காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை ஆறு அறிஞர்கள், எந்தவித நுõலும் குறிப்பும் கையில் இன்றி ஆயிரத்து 330 குறள்களையும் ஒப்புவித்து அதற்கு விளக்கமும் அளித்தனர். வரவேற்புரை ஆற்றியவர் முதல் நன்றியுரை தெரி…
-
- 2 replies
- 6.1k views
-
-
ரஷ்யா புதிய அணுசக்தி ஏவுகணைகளை தயாரிக்க தயாராக உள்ளது – புட்டின் ரஷ்யா தனது முதல் படைப்பிரிவை அடுத்த ஆண்டு அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளுடன் பல்வேறு இடங்களுக்கு அனுப்பும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற பாதுகாப்பு அதிகாரிகளுடனான கூட்டு சந்திப்பில் கருத்து வௌியிட்ட அவர், இந்த நகர்வானது தனது நாடு ஒரு புதிய வகையான மூலோபாய ஆயுதத்தை கொண்டது என்று பொருள் என குறிப்பிட்டார். இந்த புதிய முன்நிலை ஏவுகணை சோதனைக்கு அவன்காட் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கிரெம்ளி ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. புதிய ஏவுகணை முறைமையானது, மார்ச் மாதத்தில் ஜனாதிபதி புட்டினால் அறிவிக்கப்பட்ட பல புதிய ஆயுத கட்டமைப்புகளை சார்ந்ததாகும். …
-
- 0 replies
- 522 views
-
-
புதுடெல்லியிலிருந்து சிகாகோவுக்கு செல்லும் ஏர் இந்தியா (Flight AI-127) விமானத்தில் 270 பயணிகள் பயணம் செய்ய காத்திருந்தனர். புதுடெல்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து (இன்று அதிகாலை 2.20 மணிக்கு) புறப்பட தயாராக இருந்த இந்த விமானத்தை இயக்க போதுமான விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் 15 மணி நேரம் தாமதமாக சென்றது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை உண்டாக்கியது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கொச்சிக்கு செல்லும் விமானத்தில் விமானி ஒருவர் தூசிகள் படிந்த ஆக்ஸிஜன் மாஸ்கை அணிய மறுத்ததால் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது ஏர் இந்தியா பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. - See more at: http://www.canad…
-
- 0 replies
- 371 views
-
-
சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் நிலநடுக்கத்தில் 220 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகவும் இருந்ததாகவும்10 கிமீ (ஆறு மைல்) ஆழத்தில் இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் நிலநடுக்கத்தில் 220 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூட…
-
- 5 replies
- 645 views
- 2 followers
-
-
கனடவில் மின்னணு பாதுகாப்பு ஏற்பாடுகள் அடங்கிய இ பாஸ்போர்ட்டுகள் அனைத்து கனடிய மக்களுக்கும் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் மாநாடு மாண்ட்ரீல் தலைமையகத்தில் நடந்தது. இதில் பேசிய கனடாவின் தலைமை பாஸ்போர்ட் நிர்வாக அதிகாரி திரு.கிறிஸ்டின் டெஸ்லோகஸ்கூறியபோது, "அடுத்த ஆண்டு இறுதிக்குள் இ பாஸ்போர்ட் முழுமையாக வழங்கப்பட்டுவிடும்" என்று உறுதியளித்தார். ஆனால், கனடாவில் பாதுகாப்பு நிபுணர்கள் இந்த இ பாஸ்போர்ட்டில் அனைத்து விதமான பாதுகாப்புகள் ஏற்பாடுகள் இருக்காது என அச்சுறுத்தியுள்ளனர். இ பாஸ்போர்ட் மாதிரிப் படம் பார்க்க.... http://www.thedipaar.com/news/news.php?id=33789
-
- 0 replies
- 451 views
-
-
ஞாயிறு 29-07-2007 23:38 மணி தமிழீழம் [மயூரன்] தியாகம் செய்த இந்திய அமைதிப் படையினரைக் கெளரவிக்க சிறீலங்கா அரசு தவறிவிட்டது - கல்கத் இலங்கையின் இறைமையை பாதுகாக்கும் நோக்கில் இந்திய அமைதிப்படை வீரர்கள் தமது உயிர்களை தியாகம் செய்துள்ள போதிலும் ஸ்ரீலங்கா அரசும் மக்களும் இந்திய அமைதிப்படையின் தியாகங்களை கௌரவிக்க தவறிவிட்டதாக இந்திய அமைதிப் படையின் தபதியாக பதவி வகித்த ஓய்வு பெற்ற லெப்ரினற் ஜென்ரல் கல்கத் விசனம் தெரிவித்துள்ளார். 1987 முதல் 1990 வரையான காலப்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த போராடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமது நாட்டின் இறைமைக்காக போராடிய அயல் நாட்டு படையினரின் திய…
-
- 8 replies
- 1.5k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டாலியா வென்ச்சுரா பதவி, பிபிசி முண்டோ 1 பிப்ரவரி 2024 உல்ஃப்காங் பௌலி 20ஆம் நூற்றாண்டில் இயற்பியல் துறையில் மிகவும் சிறந்து விளங்கிய ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். இருப்பினும் இயற்பியல் துறையில் அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்த மற்றவர்களைப் போல் அவர் நன்கு அறியப்படவில்லை. இயற்கையின் புதிய விதி ஒன்றை அவர் கண்டுபிடித்ததற்காக அவருக்கு 1945இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரது சகாக்களின் ஆய்வுகள் மற்றும் கோட்பாடுகள் பற்றிய அவரது கடுமையான விமர்சனங்களைக் கடந்து அவரை சமமாகப் பாராட்டினர். மேலும், அவர்கள் அவரை "இயற்பியலின் மனசாட்சி" என்று அழைத்தனர் என்ற தகவல்கள் தொடர…
-
- 0 replies
- 419 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,COLOMBIAN GOVERNMENT படக்குறிப்பு, கொலம்பிய ஆட்சித்தலைவர் குஸ்டாவோ பெட்ரோ, இக்கப்பலை மீட்டெடுப்பது தனது நிர்வாகத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், சாண்டியாகோ வனேகஸ் பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் 300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய `சான் ஜோஸ்`என்ற கப்பலில் தங்கம், வெள்ளி, நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் அடங்கிய சுமார் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான பொக்கிஷம் இருப்பதாக நம்பப்படுகிறது. அக்கப்பலில் உள்ள பொக்கிஷத்தைக் கைப்பற்ற ஆழ்கடலில் உயர் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கொலம்பிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இக்…
-
- 0 replies
- 403 views
- 1 follower
-
-
ஜப்பான் அரிசியில் அணுக்கதிர்வீச்சு பீ.பீ.சி தகவல் ஜப்பானில் சேதமடைந்த புக்குசீமா அணு உலையில் இருந்து பரவிய அணுக்கதிர் வீச்சின் தாக்கம் தற்போது ஜப்பானில் விளைந்துள்ள நெல்லில் காணப்படுவதாக பீ.பீ.சி தெரிவித்துள்ளது. புக்குசீமா அணு உலையைச் சுற்றிய சுமார் 60 கி.மீ ஆரையுள்ள பகுதிகளில் விளைந்த நெற்பயிரிலேயே இந்தத் தாக்கம் இருந்துள்ளது. இந்த அரசி ஏற்கெனவே விற்பனை சந்தைக்கு போய்விட்டது. இதை உண்டவர்களில் ஏற்படும் அணுக்கதிர் தாக்க விளைவுகள்பற்றி இனிமேல்தான் தெரிய வரும் என்றும் கூறியுள்ளது. அதேபோல முன்னரே ஜப்பானில் உற்பத்தியான இறைச்சி, சோளம், தேயிலை, காளான் போன்ற உப உணவுப் பொருட்களிலும் அணுக்கதிர் தாக்கம் சிறிய அளவில் இருப்பதாக முன்னர் கூறப்பட்டது, இப்போது நெல்லில் ஏ…
-
- 0 replies
- 473 views
-
-
வட கொரியா தலைவர் இறப்பு மாரடைப்பால் தலைவர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. N Korean leader Kim Jong-il dies North Korean leader Kim Jong-il has died at the age of 69, state-run television has announced. Mr Kim, who has led the communist nation since the death of his father in 1994, died on a train while visiting an area outside the capital, the announcement said. He suffered a stroke in 2008 and was absent from public view for months. His designated successor is believed to be his third son, Kim Jong-un, who is thought to be in his late 20s. http://www.bbc.co.uk...d-asia-16239693 http://www.youtube.com/watch?v=jkhMVmfrkgo
-
- 3 replies
- 1.1k views
-
-
கிடுகிடுத்த கியூபா - 1 கடந்த மாதம் பனாமாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவை சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா. (கோப்புப் படம்) மேற்கிந்திய தீவுகள் என்பது ஒரு நாடு - இப்படித்தான் தீவிர கிரிக்கெட் ரசிகர்களில் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. கியூபா, ஜமைக்கா, ஹைதி, டொமினிகன் குடியரசு, பியூர் போரிகோ, வாஜின் தீவுகள், செயின்ட் கிட்ஸ், நெவிஸ் போன்ற பல தீவுகளும் இணைந்ததுதான் மேற்கிந்தியத் தீவுகள். இப்படி ஒரு பொதுவான அரசியல் பெயர் இதற்குக் குறைந்த காலத்துக்குதான் இருந்தது. அதாவது பிரிட்டிஷ் காலனிகளாக இவை இருந்தபோது ஜனவரி 3, 1958 முதல் 1962 மே 31 வரை இப்படி அழைக்கப்பட்டது. இவையெல்லாம் கரிபியன் கடல் பகுதியில் உள்ளன. தோராயமாக தென் …
-
- 21 replies
- 7.6k views
-
-
டென்மார்க் செல்வந்தரின் பிள்ளைகளுக்கு, அரச மரியாதையுடன் இறுதி அஞ்சலி. இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின்போது உயிரிழந்த டென்மார்க் செல்வந்தரின் பிள்ளைகளின் இறுதிக் கிரியைகள் அரச மரியாதையுடன் நடைபெற்றது. டென்மார்க் அரச குடும்பத்தினர், டென்மார்க் பிரதமர் உள்ளிட்ட பலரும் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துக் கொண்டனர். டென்மார்க் செல்வந்தர் ஆண்டர்ஸ் ஹோல்ச் போல்சனின் (வயது – 46) நான்கு பிள்ளைகளில் மூன்று பிள்ளைகள் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தனர். போல்சன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் இந்த தற்கொலை தாக்குதலுக்கு முகங்கொடுத்திருந்தனர். அவர்களின…
-
- 1 reply
- 800 views
-
-
இஸ்ரேல் – காசா போரின் விளைவாக காசாவில் 5 வயதிற்குட்பட்ட 8,000ற்கும் அதிகமான சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காசாவில் 28 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்போது காசாவில் பட்டினியை எதிர்கொள்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/303632
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
படக்குறிப்பு,5 வயது சிறுமி தாலா, மற்றும் அவரது குடும்பத்தினர் கூடாரத்தில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், ஜான் டோனிசன் பதவி, பிபிசி நிருபர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐந்து வயது சிறுமி தாலா இப்ராஹிம் முஹம்மது அல்-ஜலத் கண் விழித்திருந்தார், ஆனால் உடலில் அசைவில்லை. தாலா கடுமையான நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் சிறுமியின் படுக்கைக்கு அருகில் அவரது தந்தை இப்ராஹிம் முஹம்மது அல்-ஜலத் அமர்ந்திருந்தார். சிறுமியின் மெல்லிய மணிக்கட்டில் டிரிப்ஸ் செலுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொந்தரவு செய்யாமல், சிற…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
டுபாயில் புதிய கடற்கரையை உருவாக்கும் திட்டம் ஆரம்பம். ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்ற நாடாக டுபாய் விளங்குகிறது. நாள் தோறும் பல்லாயிரம் கணக்கான மக்கள் துபாயை சுற்றி பார்ப்பதற்காக மட்டும் வேறு நாடுகளிலிருந்து வருகிறார்கள். மேலும் மக்களை கவரும் வகையில் உலகின் மிக உயரமான கோபுரம், ஆடம்பரமான உணவகங்கள் மற்றும் தங்குவதற்கான ஹோட்டல்கள் என அட்டகாசமான இடங்களும் தடுபாயில் இருக்கின்றன. அந்த வகையில் சுற்றுலா தளங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய திட்டத்தை டுபாய் முன்னெடுத்துள்ளது. பொதுமக்களுக்காக 6.6 கிலோ மீட்டர் தூரம் கடற்கரையை உருவாக்க உள்ளது. அதில் நீச்சல் அடித்து கொண்டே டுபாயின் அழகை ரசிக்க 2 கி.மீ வரை நீச்சல் குளமும் அமைக்கப்படவ…
-
- 0 replies
- 324 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 31 ஜூலை 2024 சர்வதேச அரசியலில் எப்போதுமே பதற்றமான பிராந்தியமான மத்திய கிழக்கில் அண்மைய நிகழ்வுகள் நிலைமை மேலும் மோசமாக்கியுள்ளன. ஒருபக்கம் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயின் ஹனியே, இரான் தலைநகர் டெஹ்ரானில் அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொரு பக்கம் லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் ஹெஸ்பொலா தளபதியை வான்வழி தாக்குதல் மூலம் இஸ்ரேல் கொலை செய்துள்ளது. ஹெஸ்பொலா தளபதி கொல்லப்பட்டதை இஸ்ரேல் அறிவித்த சில மணி நேரத்தில் ஹமாஸ் தலைவர் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியானது. காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மாதக்கணக்கில் நீளும் நிலையில் இந்த நிகழ்வுகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேலும் பதற்றத்தில் தள்ளியுள்ளன…
-
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஈராக்கில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில், அமெரிக்க 'ஸீல்' என்ற புகழ் பூத்த படைப்பிரிவு ஒன்றின் குழுத்தலைவர் போர்குற்ற விசாரணையை எதிர்நோக்கி உள்ளார். 1. காயமடைந்த பதின்ம வயது ஐ.எஸ். போராளியை கொன்றது 2. இரண்டு ஆயுதம் தரிக்காத பொதுமக்களை கொன்றது இவரின் குழுவை சேர்ந்த ஒருவராலேயே இந்த குற்றத்திற்கு ஆதாரம் தரப்பட்டுள்ளது குறிப்பு : இவ்வாறு பல போர்க்குற்ற ஆதாரங்கள் இருந்தும் முள்ளிவாய்க்கால் உட்பட்ட இலங்கை போர்க்குற்றங்கள் எனது நீதி விசாரணையையும் கண்டதில்லை
-
- 1 reply
- 506 views
-
-
(தினத்தந்தி) 2048-ம் ஆண்டில் வால்நட்சத்திரம் ஒன்று பூமி மீது மோதும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அப்படி மோதும் போது 2- கி.மீ.பரப்புக்கு பள்ளம் ஏற்படும். 6 ஆயிரம் சதுர கி.மீ.-ல் வசிக்கும் மக்கள், உயிரினங்கள் அழிக்கப்படுவார்கள். 9 கோடி கி.மீ. தொலைவில் விண்வெளியில் விண்கோள்கள், மட்டும் அல்லாமல், லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இது தவிர வால் நட்சத்திரங்கள், எரிகற்கள் என்று ஏராளமானவை விண் வெளியில் சுற்றி வருகின்றன. இப்படி சுற்றி வரும் வால்நட்சத்திரங்களில் ஒன்று, 2007 வி.கே.184 ஆகும். இது பூமியில் இருந்து 9 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் நீள அகலம் 426 அடி ஆகும். இது 2048-ம் ஆண்டு பூமி மீது மோதும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். …
-
- 0 replies
- 1.5k views
-
-
உலகத் தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்ற ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையார் சிரியப் படைகளின் எறிகணை வீச்சில் பலியாகியுள்ளார்.பிரித்தானிய சண்டே ரைமஸ் வார இதழின் பத்தி எழுத்தாளரும், செய்தியாளருமான மேரி கொல்வின் அம்மையார், சிரிய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோம்ஸ் நகரில் தங்கியிருந்த பொழுது அவரது வீட்டின் மீது அரச படைகளின் பத்துக்கும் அதிகமான எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் உயிரிழந்துள்ளார். இதன்பொழுது அதே வீட்டில் தங்கியிருந்த பிறிதொரு ஊடகவியலாளரான பிரெஞ்சு நிழற்படவியலாளர் ரெமி ஒச்லிக் அவர்களும் பலியாகியுள்ளார். யுத்த களமுனைகளுக்கு துணிச்சலுடன் பயணம் செய்து வெளியுலகிற்கு செய்திகளை வெளிக்கொணர்ந்து வந்த மேரி கொல்வின் அம்மையார், 2001ஆம் ஆண்டின் இறுதியில் வன்னிக்கு …
-
- 40 replies
- 3k views
-
-
அமெரிக்காவின், நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பாலஸ்தீன கொடி முதல் முறையாக நேற்று (புதன்கிழமை) ஏற்றப்பட்டது.குறித்த கொடியேற்றும் நிகழ்வு, ஐக்கிய நாடுகளின் ரோஸ் கார்டனில் இடம்பெற்றது. குறித்த வரலாற்று நிகழ்வில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஐ.நா பொதுச் சபையின் தலைவர் மெஜான்ஸ் லீக்கன்டொப்ட் மற்றும் பாலஸ்தீன ஜனாதிபதி மொஹமூத் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த கொடி ஏற்றப்பட்டுள்ளதன் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பாலஸ்தீன கொடியை ஏற்றுவதற்கு உறுதுணையாக விளங…
-
- 0 replies
- 1.6k views
-