உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
காபூல் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு - 10 பேர் பலி ; 42 பேர் காயம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படையினர் உட்பட 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 42 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. காபூலின் கிழக்குப் பகுதியில் அமெரிக்க தூதரத்துக்கு அருகே காரில் வைக்கப்பட்ட குண்டொன்றே இவ்வாறு வெடித்துள்ளது. சம்வத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.இதில் சில நாட்களுக்கு தலிபான்களின் தாக்குதல…
-
- 0 replies
- 663 views
-
-
இது எப்படி இருக்கு!!!!!!!!!!!! http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s320x320/550119_2975615395761_1423116401_32386650_1341140095_n.jpg நன்றி-முகநூல் காரட்டூனிஸ்ட் பாலா http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/463451_2975615395761_1423116401_32386650_1341140095_o.jpg
-
- 1 reply
- 677 views
-
-
ஸ்வீடன் கல்வி மையத்தில் துப்பாக்கி சூடு: 10 பேர் வரை பலி ஸ்வீடன் நாட்டின் ஓரேப்ரோ நகரில் உள்ள ஒரு வயது வந்தோர் கல்வி மையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. ஸ்டாக்ஹோம் நகருக்கு மேற்கே சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சம்பவ இடத்தில் பத்து பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. TV4 Nyheterna மற்றும் TT உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்கள், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், சம்பவத்திற்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கின்றன. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். காயமடைந்தவர்களின் காயம் எவ்வளவு தீவிரமானது என்பது இன்னும் தெரியவில்லை என்றாலும், அறிக்கைகள் ஒரு …
-
- 2 replies
- 238 views
- 1 follower
-
-
ஜெர்மனியின் முனீச் நகரில் இடம்பெற்ற போராட்டத்தில் கார் ஒன்று பாய்ந்தமையால் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முனீச் நகரில் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், உலகத் தலைவர்கள் பலர் அங்கு பங்குபற்றியுள்ளனர். குறித்த நகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு இந்நிலையில், போராட்டக் களத்திற்குள் வேகமாக உட்புகுந்த கார், மோதியதில் 28 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, காரினை செலுத்திய 24 வயதுடைய இளைஞன் ஒருவர் ஜெர்மனி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, சர்வதேச மாநாடு நடக்கும் இடத்தி…
-
- 1 reply
- 812 views
-
-
ஹிலாரியின் கருத்து தொடர்பில் ஈரான் ஐ. நா. விடம் முறைப்பாடு [02 - May - 2008] அமெரிக்க செனட்டரும் முன்னாள் முதற் பெண்மணியுமான ஹிலாரி கிளின்டன் கடந்த வாரம் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் ஈரான் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடுவாரென எதிர்பார்க்கப்படும் ஹிலாரி கடந்தவாரம் ஈரான் இஸ்ரேலை தாக்கினால் அமெரிக்கா ஈரானை அழிக்குமெனத் தெரிவித்திருந்தார். தனது அணுநிகழ்ச்சித் திட்டம் சக்தி தேவைக்கானது மட்டுமே எனத் தெரிவித்து வரும் ஈரான், ஹிலாரியின் கருத்து கோபமூட்டக் கூடியதும் பொறுப்பற்றதுமென குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், ஐ.நா. சாசனத்தை வெளிப்படையாக மீறும் கருத்து …
-
- 0 replies
- 680 views
-
-
ஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான குளிர், போக்குவரத்து பாதிப்பு ஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவின் ஷி ஜியாங் பகுதியில் பனியின் தாக்கம் தென் கொரியத் தீவான ஜேஜூவில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுகு பனிப்பொழிவு ஏற்பட்டதால அப்பகுதியில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல இடங்களில் சிக்கியுள்ளனர். தென் கொரியாவில் வீடும் கடும் பனிப் புயலால் பலர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கடும் பனி மற்றும் வேகமாக வீசும் காற்றின் காரணமாக ஜப்பானிலும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 395 views
-
-
மீண்டும் வந்த 'பிரபாகரன்'..! அதிர்ந்து போன ருவிட்டர் நிர்வாகம்..! இலங்கையில் இருந்து ஈழத்தை பிரித்து தனிநாடு அமைப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அதன் தலைவர் பிரபாகரன் தலைமையில் போராடி வந்தனர். இறுதியாக 2009 ம் ஆண்டு நடைபெற்ற நான்காம் கட்ட போரில் புலிகள் முற்றிலும் அளிக்கப்பட்டு விட்டதாகவும் அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும் இலங்கை ராணுவம் அறிவித்தது. எனினும் உலககெங்கும் வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் நிச்சயம் அவர் திரும்பி வருவார் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 65 வது பிறந்தநாள் கடந்த 26 ம் தேதி தமிழர்களால் உற்சாகம…
-
- 1 reply
- 1.3k views
-
-
அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென சூறாவளி ஏற்பட்ட நிலையில் கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கென்டக்கி, மிசோரியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இதுவரை சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிசோரி மாகாணத்தில் சென்ட் லூயிஸ் (St. Louis) நகரில் மாத்திரம் சுமார் 5,000 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் சூறாவளி தாக்கியதில் ஏராளமா…
-
- 1 reply
- 187 views
-
-
பாப்பராசிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஹரி – மேகன் தீர்மானம் கனடாவில் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கும் நேரத்தில் தாம் தொடர்ந்தும் பாப்பராசி எனப்படும் ஒளிப்படம் எடுப்பவர்களால் துன்புறுத்தப்படுவது குறித்து இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோர் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளனர். வன்கூவர் தீவில் உள்ள ஒரு பொது பூங்கா வழியாக மேகன் உலா வருவதைக் காட்டும் படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்ட பின்னர் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். மகன் ஆர்ச்சியுடனும் மற்றும் தனது இரண்டு நாய்களுடன் மேகன் நடந்து செல்லும்போது அந்தப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தம்பதியினரின் சட்டவல்லுனர்கள் இந்த விடயம் குறித்துக் கூறுகையில்; இப்படங்கள் அவர்களது அனுமதியின்றி எடுக்கப்பட்டதாகக் கூறி…
-
- 1 reply
- 525 views
-
-
கனடா நாட்டில் முதன் முதலாக மருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்துகொள்ள நோயாளி ஒருவருக்கு நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் நகரில் பெயர் வெளியிடப்படாத நோயாளி ஒருவர் கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நபருக்கு ஏற்பட்டுள்ள நோயை குணப்படுத்த முடியாது என்பதால், மருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்துக்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இவரது கோரிக்கையை மருத்துவர்கள் நிராகரித்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நோயாளியின் உடல்நிலை அவர் அனுபவிக்கும் வேதனை உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு மனிடோபா மாகாணத்திலேயே முதன் முறையாக மருத்துவர் உதவியுடன் தற்கொலை ச…
-
- 0 replies
- 360 views
-
-
மாருதி சிறைச்சா(ஆ)லை திறப்பு! புது டில்லி - ஒரு மாதமாக மூடியிருந்த மாருதி நிறுவனத்தின் மானேசர் தொழிற்சாலை இன்று (ஆகஸ்டு 21, 2012) திறக்கப்பட உள்ளது. “2,500 தொழிலாளர்கள் பணி புரிந்த தொழிற்சாலையில் இப்போது 300 தொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு வருவார்கள் என்றும் ஒரு ஷிப்ட் மட்டும் உற்பத்தி நடக்கும்” என்றும் நிறுவனம் சொல்லியுள்ளது. ஏற்கனவே 500 தொழிலாளிகள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். தொழிற்சாலைக்கு பாதுகாப்பாக போலீஸ் படையினரையும் தனியார் குண்டர் படையினரையும் ஏற்பாடு செய்துள்ளது நிர்வாகம். முன்னாள் தேசிய பாதுகாப்பு படையினரையும், டில்லியை சேர்ந்த பெரிய மனிதர்களுக்கான பாதுகாப்பு அளிப்பதில் புகழ் பெற்ற ஹோலிஸ்டிக் செக்யூரிட்டி நிறுவனத்தின் 50 ஆயுதம் தாங்கிய காவலர்…
-
- 0 replies
- 862 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸில் பயங்கரவாத தாக்குதல். நகரின் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் கட்டமைப்பில் நடந்த தற்கொலைத் தாக்குதல்களில் முப்பத்து நான்கு பேர் பலி; நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயம். விமான நிலைய குண்டு வெடிப்பை நேரில் பார்த்த பிரஸ்ஸல்ஸ் வாழ் தமிழரின் நேரடித் தகவல்கள். பயங்கரவாத சந்தேகநபரின் ஐஃபோனை அன்லாக் செய்ய ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ள நிலையில், அதற்கு புதிய வழி ஒன்று கிடைத்திருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான நீதிமன்றத்திடம் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள் ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 336 views
-
-
செங்கடல் பகுதியில் கப்பல் மீது ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - மூவர் பலி Published By: RAJEEBAN 10 JUL, 2025 | 09:31 AM செங்கடல் பகுதியில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் கப்பலொன்றின் மீது மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். லைபீரிய கொடியுடன் 25 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த கிரேக்கத்தை சேர்ந்த எட்டேர்னிட்டி சி என்ற சரக்கு கப்பல் மீது சிறிய படகுகளில் இருந்து ஆர்பிஜி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செவ்வாய்கிழமை முழுவதும் இந்த தாக்குதல் இடம்பெற்றது அதன் பின்னரே மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகின என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலை நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பலையே தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ள ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் பலரை கைதுசெய்துள்ள…
-
- 1 reply
- 192 views
-
-
புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து! புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், யாத்திரிகர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய உம்ராவுக்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும், உம்ரா செய்வதற்காக உலக நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மக்கா, மதீனா நகரங்களுக்குச் செல்வது வழக்கம். இதேவேளை, குவைத், பஹ்ரேன் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ளவர்க…
-
- 0 replies
- 368 views
-
-
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என அம்மாநில சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புதின் நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் அவர்கள் நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் வரும் திங்கள் முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்படுகின்றன. இதனால் ஒரு பத்து லட்சத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவர். அமெரிக்காவின் ஏழு மாநிலங்களில் பள்ளிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் 36 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவ…
-
- 0 replies
- 353 views
-
-
பிரிட்டனில் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை 20,000ற்குள் கட்டுப்படுத்த முடியும் என்றால் அதனை வெற்றிகரமான நடவடிக்கையாக கருத முடியும் என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் தேசிய மருத்துவ இயக்குநர் பேராசிரியர் ஸ்டீபன் பொவிஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவும் இத்தாலியின் பாதையில் பயணிக்கின்றதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்புகளை 20,000ற்குள் கட்டுப்படுத்தினோம் என்றால் நாங்கள் இந்த உலகளாவிய நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயற்பட்டிருக்கின்றோம் என அர்த்தம் என அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மரணமும் துயரம் என்றபோதிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 20,000ற்குள் கட்டுப்படுத்தினால் அது சிறந்த…
-
- 16 replies
- 1.3k views
-
-
"உலகம் முழுவதும் வீடுகள் இருக்கின்றன. எல்லா வீடுகளிலும் ஜன்னல்கள் இருக்கின்றன. எல்லா ஜன்னலுக்கு பின்னும் ஒரு சிறுவனோ சிறுமியோ உலகை வியப்பு கலையாமல் பார்த்து கொண்டேயிருக்கிறார்கள்” -எஸ்.ராமகிருஷ்ணன் சிறுவயதில் நாம் வாசித்த புத்தகங்கள் நமக்குள்ளே நாம் மீண்டும் உணர முடியாத ஒரு அனுபவத்தை ஆழப் பதித்துச் சென்றிருக்கும். அப்போது நாம் மிகவும் நேசித்த சிறுவயது புத்தக கதைப்பாத்திரங்கள், நேற்று தான் நமக்கு அறிமுகமானவை போல இன்றும் நம் நினைவில் இருக்கக் கூடும். இப்படிச் சிறுவயதில் நம்மை மகிழ்ச்சியடையச் செய்வதோடு, இப்புத்தகங்கள் சில நல்ல கருத்துகளையும், நற்பண்புகளையும் சிறுவர்களுக்குள்ளே விதைத்து, அவர்களைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. சிறு குழந்தைகளுடைய அந்தத் து…
-
- 0 replies
- 519 views
-
-
திருமணமான முதல் வாரத்திலேயே பணத்துக்காக கணவனால் விரட்டியடிக்கப்படும் பெண்கள். தினமும் குடித்துவிட்டு வருகிற கணவனிடம் அடிவாங்கும் அபலைகள். கணவனின் ஒட்டுமொத்த குடும்பத்தால் திட்டம்போட்டு தீர்த்துக் கட்டப்படும் மனைவிகள். இவர்களைப் போன்ற துரதிர்ஷ்டக்காரப் பெண்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு உருவாக்கப்பட்டவைதான் குடும்ப வன்முறைச் சட்டமும் வரதட்சணை தடுப்புச் சட்டமும். இந்தச் சட்டங்களால் பல பெண்களின் வாழ்க்கைப் பிரச்னை தீர்ந்திருக்கின்றது. ஆனால் இன்று வரும் தகவல்கள் நமக்கு அதிர்ச்சி கொடுக்கின்றன. பல பெண்கள் தங்கள் அப்பாவிக் கணவர்களைப் பழிவாங்குவதற்குத்தான் இந்தச் சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்கின்றன புள்ளி விவரங்கள். உதாரணத்துக்கு ஒரு சின்ன தகவல். 2005-ம் ஆண்டு மட்டும் இந்த …
-
- 1 reply
- 1.8k views
-
-
பலூஜா நகரை கைப்பற்ற ஈராக் படை தீவிரம்; ஐ.எஸ். இற்கு பின்னடைவு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தம்வசப்படுத்தியிருந்த ஈராக்கின் பலூஜா நகர் மீது ஈராக் பாதுகாப்பு படையினர் கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். ஈாராக் பாதுகாப்பு படையினர் மற்றும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கிடையில் கடும் துப்பாக்கிப் பிரயோகங்களும் குண்டுத் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன. குறித்த தாக்குதல்களில் பலூஜா நகரின் தென் பகுதியிலுள்ள நய்மியா மாவட்டம் வரையில் ஈராக் பாதுகாப்பு படையினர் முன்னேறியுள்ளனர். இதேவேளை தீவிரவாதிகள் தப்பிச்செல்ல முடியாதவாறு பலூஜா நகரின் மூன்று பாகங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.எஸ் தீவிரவாதிக…
-
- 0 replies
- 354 views
-
-
கருப்புச் சந்தையில் விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 40 ஆயிரம் முகக்கவசங்களை கைப்பற்றியுள்ளதாக பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். தலைநகர் பாரிஸின் வடக்கே உள்ள செயின்ட் டெனிஸ் எனும் நகரில் உள்ள ஒரு வீட்டில் சரக்கு வாகனம் ஒன்றில் இருந்து எடுத்து வரப்பட்ட முகங்களை இறக்கி வைக்க முயன்றபோது தொழிலதிபர் ஒருவர் பிடிபட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். முகக் கவசங்களை விற்பனைக்கு வைத்துள்ளவர்கள் அவற்றை சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்குமாறு கடந்த மாதம் பிரான்ஸ் அரசு கோரியிருந்தது. https://www.bbc.com/tamil/live/global-52429391
-
- 4 replies
- 1k views
-
-
சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்! 20 Dec, 2025 | 10:16 AM அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பு மீது அமெரிக்க இராணுவம் பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய சிரியாவில் உள்ள 70க்கும் மேற்பட்ட ஐஎஸ் ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பு குழுக்களை குறிவைத்து போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் பீரங்கிகள் தாக்கியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி பால்மைரா நகரில் நடந்த ஐஎஸ் ஐஎஸ் தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவிலியன் மொழிபெயர்ப்பாளரும் கொல்லப்பட்டனர். இதைத்…
-
- 0 replies
- 139 views
-
-
இலங்கை அகதிகளுக்கு உதவ சர்வதேச அமைப்புகளுக்கு இந்தோனேஷியா அனுமதி தற்காலிக முகாமில் இலங்கை அகதிகள் | படம்: ஏ.பி. இந்தோனேஷியாவில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 44 பேருக்கும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன. இருப்பினும், மோசமான வானிலை காரணமாகவே படகு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டு அகதிகள் தரையிறக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை நின்று வானிலை சரியானதும் அகதிகள் வந்த படகை சர்வதேச கடல் எல்லையில் விட்டுவிடுவோம் என இந்தோனேஷிய அரசு தெரிவித்துள்ளது…
-
- 0 replies
- 321 views
-
-
சீனா மீது நடவடிக்கை தொடங்கியது?- சீனா முதலீட்டிலிருந்து பலநூறு கோடி டாலர்கள் பென்ஷன் நிதியை அமெரிக்கா வாபஸ் ஏற்கெனவே அமெரிக்கா-சீனா இடையே இருந்து வந்த வர்த்தகப் போர் பேச்சு வார்த்தைகள் மூலம் சரியாகாமல் இழுபறியில் உள்ள நிலையில் கரோனா பாதிப்பினால் இருநாடுகளின் உறவுகளில் பெரிய அளவில் விரிசல் விழுந்துள்ளது. இந்நிலையில் சீனாவில் அமெரிக்க பென்ஷன் நிதி முதலீடுகளாக உள்ள பலநூறுகோடி டாலர்கள் நிதியை வாபஸ் பெற ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. “பில்லியன்கள் அளவில் டாலர்கள், ஆம் பில்லியன்கள் ஆம் நான் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளேன்.” என்று உறுதிபடத் தெரிவித்தா அதே போல் அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் நாஸ்டாக்கில் சீன நிறுவனங்கள் லிஸ்ட் செய்யப்படுவதற்கு அனைத்து…
-
- 0 replies
- 637 views
-
-
EU-Mercosur மெகா வர்த்தக ஒப்பந்தம்: வெற்றியாளர்களும் தோல்வியுற்றவர்களும் மால்பெக்கை யார் அவிழ்க்கிறார்கள் - யார் அவர்களின் போர்டியாக்ஸில் அழுகிறார்கள் (இருமல், இம்மானுவேல் மக்ரோன், இருமல்) என்று POLITICO பகுப்பாய்வு செய்கிறது. கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகள் மீதான 90 சதவீதத்திற்கும் அதிகமான வரிகளை நீக்கும். | நடாலியா டெல்கடோவின் புகைப்படம்-விளக்கப்படம். ஜனவரி 9, 2026 மாலை 4:57 CET கார்லோ மார்டஸ்செல்லி , கோயன் வெர்ஹெல்ஸ்ட் மற்றும் டக்ளஸ் புஸ்வின் மூலம் 25 ஆண்டுகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஐரோப்பாவின் மிகப்பெரிய…
-
- 1 reply
- 225 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை தீர்மானிப்பதற்காக, பிரித்தானிய மக்களிடையே நடாத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 51.9% பிரித்தானியர்கள் பிரிந்து செல்வதென முடிவெடுத்துள்ளார்கள். இந்த முடிவானது, பிரித்தானியாவில் மட்டும் தாக்கத்தை செலுத்தப்போவதில்லை. மாறாக, சமகால உலக ஒழுங்கை மாற்றியமைக்கப்போகிறது. இதில் குறிப்பாக அரசியல், பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் பெரும்பங்கினை வகிக்கப் போகின்றன. பொது வாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்து அடுத்த சில மணித்தியாலங்களுக்குள், உலகளாவிய ரீதியில் சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளின் பங்குச்சந்தை ஆட்டம் காணத்தொடங்கியது. சீனாவின் சந்தை கூட ஜூன் 24ஆம் திகதி 1% வீழ்ந்தது. ஆயினும், ஜூன் 27ஆம் திகதி மீண…
-
- 0 replies
- 214 views
-