Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. லண்டன், பிரிட்டனில் ஐ.எஸ். தீவிரவாதிகள் காலூன்ற அதிகளவில் முயற்சி செய்துவருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அங்குள்ள முக்கிய அரசியல்வாதிகளை கொல்ல தனியாக ஒரு தற்கொலைப்படையையே ஐ.எஸ். தீவிரவாதிகள் உருவாக்கியிருப்பதாக சண்டே எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிரியாவுக்கு சென்று மீண்டும் திரும்பியுள்ள சந்தேகத்திற்குரிய 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பிரிட்டனில் சர்வ சாதாரணமாக வீதிகளில் உலா வருவதாக அங்குள்ள பாதுகாப்பு ஏஜென்ஸிகள் எச்சரித்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான கொள்கைகளை கொண்டு வரும் எம்.பி.க்களை குறிவைத்து பட்டியல் போட்டு கொலை செய்ய ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் மெட்ரோபோலிடன் பகுதிகளில் உள்ள மந்திரிகளுக்கு உச்ச…

  2. பெண்களின் "ஜொள்' சிக்னல்களை ஆண்கள் புரிந்து கொள்வதில்லை லண்டன்: "ஜொள்' அடிப்பதில், ஆண்களுக்குப் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல; ஆனால், இவர்கள் கொடுக்கும், "ஜொள்' சிக்னல்களை ஆண்கள் புரிந்து கொள்வதில்லை' என்று, லண்டன் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆய்வறிக்கையில் வெளியான தகவல்: அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக் கழகத்தில், இளைஞர்களிடையே ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பெண்கள் கொடுக்கும் சங்கேத சிக்னல்களை ஆண்கள் புரிந்து கொள்கின்றனரா என்பது குறித்து ஆய்வு அது. இப்பல்கலையைச் சேர்ந்த 300 ஆண் மற்றும் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், பெண்கள் சிலரை, பலவித சங்கேத சிக்னல்களை செய்ய வைத்து, வீடியோ படம் எடுத்து, ஆண்களிடம் காட்டி, அந்த சிக்னல்கள் மூலம் பெண்கள் என்ன…

    • 13 replies
    • 4k views
  3. இவரின் கோபம்தான் பதன்கோட் தாக்குதலுக்கு காரணம்? புதுடெல்லி/இஸ்லாமாபாத்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி உள்ளதாகவும், நரேந்திர மோடிக்கும், நவாஸ் ஷெரீப்புக்கும் இடையேயான நட்பால் கோபமுற்றே அவர் தீவிரவாதிகளை தூண்டிவிட்டு இந்த தாக்குதலை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில் திடீரென பாகிஸ்தான் சென்றார். கடந்த டிசம்பர் 25 -ம் தேதியன்று நவாஸ் ஷெரீஃபுக்கு 66-வது பிறந்த நாளாகும…

  4. அரிசோனா மாநிலத்தில் தனியார் விமானம் விபத்து ஒருவர் உயிரிழப்பு. இரு சிறிய தனியார் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழ்ந்து இருவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். விபத்தில் சிக்கிய ஒரு விமானம் பிரபல் பாடகர் Mötley Crüe பாடகர் Vince Neil க்கு சொந்தமானது. இறந்த காயமடைந்தவர்களின் விபரங்கள் இன்னமும் வெளியிடவில்லை. மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்துங்கள். https://www.yahoo.com/news/arizona-plane-crash-ntsb-investigating-121701206.html

  5. ஜோசப் கோனி (Joseph Kony) என்பவருக்கு எதிராக 2005ம் ஆண்டு அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் அவர் புரிந்த போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல்களுக்காகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர் இதுவரை பிடிபடாமல் இருக்கிறார். அவரைக் கைது செய்து நெதர்லாந்து, ஹேக் நீதி மன்றத்தில் நிறுத்தும் நோக்கில் தேடுதல் நடத்தப்படுகிறது. இறைவனுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கும் இராணுவம் (Lord’s Resistance Army) என்ற பெயர் பூண்ட உகன்டா நாட்டு கெரில்லா அமைப்பின் தலைவனாக ஜோசப் கோனி இடம்பெறுகிறார். இந்த அமைப்பு எல்ஆர்ஏ (LRA) என்ற மூன்று எழுத்துக்களால் அறியப்படுகிறது. வடக்கு உகன்டாவில் 1961ம் ஆண்டு பிறந்த கோனி அச்சோலி (Acholi) இனக்குழுவைச் சேர்ந்தவர். அவர்…

  6. இன்றைய நிகழ்ச்சியில்… - கொசுவால் பரவும் ஸீகா கிருமி பிரசிலிலில் ஒரு பெரிய சுகாதார நெருக்கடியை உருவாக்கிவரும் நேரத்தில், அங்கு லட்சக்கணக்கான புதிய கொசுக்கள் காற்றில் விடப்படுவது ஏன்? வாருங்கள் விடை காணலாம்! - லிபிய புரட்சி ஆரம்பித்த பெங்காஸி நகரம் பெரும் போர்க்களமாக மாறியுள்ளது! ஐ எஸ்ஸின் கை ஓங்கிவரும் ஒரு மோதல்களத்திலிருந்து பிபிசி பிரத்யேகத் தகவல்! - பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப, வாழும் விதத்தை மாற்றிக்கொள்ளும் பென்குவின்கள்! தென் துருவக் கண்டத்தில் கண்காணிப்பு கேமராக்களைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் ஆய்வு!

  7. அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது `எப்படி வாழ்ந்த குடும்பம்' என்று ஒரு நிமிடம் உடம்பை உலுக்கிப் போட்டது. சென்னை சூளைமேட்டில், தெருக் கோடியில் ஒரு பழைய வீட்டின் மாடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் போர்ஷனில்தான் தமிழ்த்திரை மற்றும் இசையுலகின் ஏகபோக சக்கரவர்த்தியாக ஒரு காலத்தில் ராஜாங்கம் நடத்திய எம்.கே. தியாகராஜ பாகவதரின் மனைவி, வாழ்க்கை யோடு போராடிக் கொண்டிருக்கிறார்! ஒரே ஒரு சிறிய ரூம், இரண்டாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் கெரசின் ஸ்டவ் அடுப்பும் சில பாத்திரங்களும் இறைந்து கிடக்கின்றன. தடுப்புக்குப் பின்னே பழைய கட்டிலில் சுயநினைவின்றி முனகிக் கொண்டே பரிதாபமாக படுத்திருக்கிறார் பாகவதரின் மனைவி ராஜம்மாள். அவருக்கு அருகே சுவரோரமாக குட்டையான அழுக்கு ஸ்டீல் பீ…

  8. அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இன்று அதிபர் டிரம்ப்புக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் சபாநாயகர் நான்சி பெலோசிக்கு டிரம்ப் எழுதிய நீண்ட கடிதத்தில் தம்மை கூட்டுச் சதிக்கு ஆளானவர் என்று விளக்கம் அளித்துள்ளார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட உள்ள ஜோ பிடனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசிடம் டிரம்ப் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், தேசிய பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு டிரம்ப் ஆபத்து விளைவித்து விட்டார் என்று ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியது. இதை அடுத்து டிரம்ப்பை பதவியை விட்டு நீக்க திட்…

  9. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி, 20 பேர் காயம் கோப்புப் படம் அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் குறித்து கன்சாஸ் நகர ஷெரீஃப் டி.வால்டன் கூறும்போது, "கன்சாஸில் உள்ள எக்ஸெல் இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார் செட்ரிக் ஃபோர்டு (38). இவர் தனது தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இச்சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். முன்னதாக, தொழிற்சாலைக்கு வரும் வழியில் நியூட்டன், ஹெஸ்டன் ஆகிய நகரங்களிலும் இரண்டு பேர…

  10. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் – ட்ரம்ப் June 28, 2025 1:01 pm இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதென நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். காங்கோ-ருவாண்டா ஒப்பந்தத்தைக் கொண்டாடும் ஓவல் அலுவலக நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நெருங்கிவிட்டதை தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் வெள்ளை மாளிகையில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், “இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் நெருங்கிவிட்டது என்று நினைக்கிறேன். தொடர்புடைய சிலரிடம் நான் கலந்துரையாடியுள்ளேன்.அடுத்த வாரத்துக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் என்று …

  11. கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகின்றது. அந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நாடுகளும் பல வழிமுறைகளை கையாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் பேருந்து நிலையம் , ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மக்கள் தங்கள் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்வதற்காக சிறியரக வாஷ் பேசின்களை வைத்திருக்கிறது. SEEN IN KIGALI: To prevent the risk of #Coronavirus outbreak, passengers at the Kigali Bus Park have to wash their hands before getting onto buses.#Rwanda has recorded NO case of the epidemic but the country has stepped up vigil…

    • 0 replies
    • 479 views
  12. நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசுக்கு 2½ நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருகின்றனர். கோப்புபடம் வாஷிங்டன்: அமெரிக்காவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நியூயார்க் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியது. நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1½ லட்சத்தை நெருங்கி வருகிறது. நியூஜெர்சி, மிச்சிகன், கலிபோர்னியா, லூசியானா, புளோரிடா, மசாசுசெட்ஸ், பென்சில்வேனியா ஆகிய…

  13. சீன வென்டிலேட்டர்களை பயன்படுத்தினால் மரணம் நிச்சயம்: பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை! சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட செயற்கை சுவாச கருவிகளை (வென்டிலேட்டர்) பயன்படுத்தினால், ‘மரணம் உட்பட குறிப்பிடத்தக்க நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கப்படும்’ என பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவின் முக்கிய வென்டிலேட்டர் உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றான ‘பெய்ஜிங் ஏயன்மெட் கோ லிமிடெட்’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 250 இற்க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்களை பிரித்தானியா கொள்வனவு செய்துள்ளது. இந்த நிலையில், குறித்த வென்டிலேட்டர்கள் குறித்து பிரித்தானிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மேலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சீனாவிலிருந்து பெறப்பட்ட வென்டி…

  14. 500களை கடந்து நிற்கும் UKயின் மரணங்களும் -200களில் குறைந்து நிற்கும் ஐரோப்பிய மரணங்களும்… கடந்த 24 மணித்தியாலத்தில் பிரிட்டனில் +539 ஏற்பட்டுள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது. கடந்த வார இறுதியில் இருந்து குறைவை நோக்கி கீழிறங்கிய பிரிட்டனின் மரணங்கள், மீண்டும் 500 களைக் கடந்த எண்ணிக்கையை தக்கவைத்துள்ளமை புள்ளிவிபரங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரிட்டனின் மொத்த மரணங்களும், அமெரிக்காவின் 76,290 என்ற எண்ணிக்கைக்கு அடுத்த நிலையில், 30,615 ஆக உயர்ந்துள்ளன. புதிதாக அடையாளம் காணப்பட்ட +5,614 தொற்றாளர்களுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206,715 உயர்ந்துள்ளது. இதேவேளை, பிரான்ஸ…

  15. ஒரு சொட்டு தண்ணீர்கூட தர முடியாது என்று கூறிவிட்டது கர்நாடகம்: ஜெயலலிதா பெங்களூர்: கர்நாடக முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு சொட்டு தண்ணீர்கூட திறந்துவிட முடியாது என்று கூறிவிட்டதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். பெங்களூரில் நடந்த தமிழ்நாடு-கர்நாடக முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில்,செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா கூறியதாவது: சம்பா சாகுபடிக்காக 14.93 லட்சம் ஏக்கர் நிலத்தில் விதைப்பு நடந்து,பயிர்கள் வளர்ந்து நிற்கின்றன.ஆனால், தற்சமயம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 6.3 டி.எம்.சி.அடியில்தான் இருக்கிறது.எங்களிடம் 16 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது.ஆனால், இதில் நாங்கள் 5 டி.எம்.சி.ய…

    • 3 replies
    • 691 views
  16. இன்றைய நிகழ்ச்சியில் * பிரான்ஸ் தேவாயலத்துக்குள் மதகுரு ஒருவர் படுகொலை; நார்மாண்டியில் தேவாலய பூஜைக்குள் புகுந்த இரண்டு ஆயுததாரிகள் பணயக்கைதிகளை பிடித்து வைத்த விபரீதம். * ஜப்பான் மாற்றுத்திறனாளிகளின் மையத்திலிருந்த பத்தொன்பது பேர் கத்தியால் குத்திக்கொலை; மையத்தின் முன்னாள் பணியாளர் கைது. * சூரிய ஒளி மின்சார விமானத்தின் முதலாவது உலக சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்தது; பதினாறு மாதங்களின் முடிவில், பயணத்தைத் துவக்கிய அபுதாபியிலேயே பயணத்தை முடித்து சாதனை.

  17. கனடாவின் சுற்றுப்புற சூழல் நலத்துறை அமைப்பு இன்று காலை வெளியிட்ட ஒரு அறிக்கையில் கனடாவின் GTA பகுதிகளிலும், தெற்கு ஒண்டோரியோ பகுதிகளிலும் பனிப்புயல் தாக்கக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவில் தாக்கிய பனிப்புயலின் தாக்கம் வரும் வியாழன் வரை தொடர இருப்பதால், அதன் பாதிப்பு தெற்கு ஒண்டோரியோவில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள்து. இந்த பனிப்புயலால், 10-20 செ.மீ வரை பனி சாலைகளில் படியும் வாய்ப்பு இருப்பதாகவும், எனவே சாலைகளில் வாகனங்கள் உபயோகப்படுத்துபவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பனிப்புயலின்போது குறைந்த காற்றழுத்தமும் காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அவ்வப்போது தட்ப…

  18. அமெரிக்க அரசியல் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார தடை உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நீடிக்கிறது. இரு நாடுகளின் உறவும் மிகவும் மோசமடைந்துள்ளது. இதனிடையே ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் உள்பட சீனா மற்றும் ஹாங்காங் அதிகாரிகள் 11 பேர் மீது அமெரிக்கா கடந்த வாரம் பொருளாதார தடை விதித்தது. இந்த நிலையில் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக கூறி அமெரிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார த…

  19. கொச்சி: "நாட்டிலேயே, கொச்சியில்தான், உடல் பருமனானவர்கள் அதிகம் உள்ளனர்' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பருமனானவர்கள், எந்த நகரத்தில் அதிகமாக உள்ளனர் என்பது தொடர்பாக, அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றின் சார்பில், ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு, டில்லி, லூதியானா, ஜெய்ப்பூர், மும்பை, கோல்கட்டா, ஆமதாபாத், நாக்பூர், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கொச்சி என, 11 நகரங்களில் நடந்தது. தனி நபர்கள் மற்றும், 8,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கொச்சி நகரில், உடல் பருமனானவர்கள் அதிகம் வசிப்பது தெரிய வந்துள்ளது. கொச்சியின், மொத்த மக்கள் தொகையில், 46 சதவீதம் பேர், உடல் பருமனானவர்கள். இவர்களில், 42 சதவீதம் பேர், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய நோய…

  20. பத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய வைரசாக கொரோனா புதிய மரபணு மாற்றம் அதிர்ச்சி தகவல் கோலாலம்பூர் பத்து மடங்கு அதிக தொற்றும் தன்மை உடைய கொரோனா வைரஸ் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரசின் மரபணு மாற்றத்தால் உருவாகியுள்ள இந்த வைரசுக்கு டி614டி என்று பெயரிடப்பட்டுள்ளது. மலேசியாவில் 45 பேர் அடங்கிய குழு ஒன்றிடம் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் 3 பேரிடம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து மலேசியா திரும்பி 14 நாட்கள் தனிமை படுத்துதல் விதியை மீறி வெளியில் நடமாடிய உணவக உரிமையாளர் ஒருவரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதால் இப்போது நடக்கும் …

  21. காங்கிரஸை அழிக்கவேண்டும் -பொன்சேகா ஒரு அரக்கன் : திருமா ஆவேசப்பேச்சு இலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்இ சென்னையை அடுத்த மறை மலைநகரில் கடந்த 15-ந் தேதி உண்ணாவிரதம் தொடங்கினார். இன்று நான்காவது நாட்களாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இந்நிலையில் இன்றூ மாலை பாமக நிறுவனர் ராமதாஸ்இ ஈழ போராட்டத்திற்கு உண்ணாவிரதம் சரியல்ல. வேறு வகையில் போராடுவோம் என்று சமாதானப்படுத்தி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். உண்ணாவிரத மேடையில் திருமாவளவன் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார். ''உலகத்திலேயே சிறந்த தளபதி என்று இலங்கை…

  22. ஈரான் ஜனாதிபதி மீது கெய்ரோவில் சப்பாத்து வீச முயன்றவர் கைது கெய்ரோ: எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு விஜயம் செய்திருந்த, ஈரானிய ஜனாதிபதி முகமட் அகமதி நிஜாத் மீது சப்பாத்து வீச முயன்றவரை அவருடைய பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஒரு ‘கோழை’ எனக் கத்திக்கொண்டு சப்பாத்து ஒன்றை ஈரானிய ஜனாதிபதி மீது எறிந்தவரை, பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்கும் காட்சியடங்கிய ஒளிநாடா வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியவராத போதிலும், சப்பாத்து வீசியவர் ஈரானுக்கு எதிரியானவர் எனவும், சிரிய அரசிற்கு ஆதரவாகச் செயற்படுபவர் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவருகின்றது. 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியின் பின் முதன்முதலாக ஈரான் ஜனாதிபதியாக முகமட் அகமதி நிஜாத் எகிப்திற்கு …

  23. அப்சல்குரு தூக்குக்கு பழிவாங்குவோம்: லஷ்கர் மிரட்டல்! மும்பை: அப்சல்குருவுக்கு தூக்கிலிடப்பட்டதற்கு பழிக்கு பழிவாங்க தாக்குதல் நடத்துவோம் என லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல்குரு நேற்று காலை தூக்கிலிடப்பட்டார். இந்நிலையில் அப்சல் குருவை தூக்கிலிட்டதற்காக பழிக்கு பழி வாங்க இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. அந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா என்பவர் பத்திரிகை அலுவலகம் ஒன்றை தொடர்பு கொண்டு இந்த மிரட்டலை விடுத்துள்ளார். "அப்சல்குருவை தூக்கிலிட்டதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை.பழிக்குப…

  24. 2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, காங்கிரசைச் சேர்ந்த, பி.சி.சாக்கோ தலைமையிலான, பார்லிமென்ட் கூட்டு குழுவும் விசாரித்து வருகிறது. இந்த குழுவில் காங்கிரஸ் உள்ளிட்ட, முக்கிய கட்சிகளைச் சேர்ந்த, உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் அறிக்கை பார்லிமென்டில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், ராஜா, "இந்த விசாரணையில் என் தரப்பு வாதத்தையும் தெரிவிக்க விரும்புகிறேன். எனவே, என்னையும் சாட்சியாக அழைத்து விசாரிக்க வேண்டும்' என, லோக்சபா சபாநாயகர், மீரா குமாருக்கும், கூட்டு குழு தலைவர் சாக்கோவுக்கும் கட…

    • 1 reply
    • 439 views
  25. Arizona மலைப்பகுதியில் காணாமல் போன டொரண்டோ பெண் டாக்டர் மிட்புக்குழுவினரின் தீவிர முயற்சியால் உயிருடன் மீட்கப்பட்டார். Arizona பகுதியில் மலைப்பகுதிக்கு சென்ற டொரண்டோ பெண் டாக்டர் Elise Héon என்பவர் மலைப்பகுதியில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வந்ததை அடுத்து, மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டரில் சென்று அவரை தேடிவந்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின் அவரை மலைப்பகுதியில் கண்டுபிடித்த அவர்கள் பெரிய கயிறு ஒன்றின் மூலம் அவரை காப்பாற்றினார்கள். அவரைக் காப்பாற்றிய சம்பவதம் இண்டர்நெட்டில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அவருடைய் குடும்பத்தின் அவர் மீட்கப்பட்டதை நேரடியாக இண்டர்நெட்டில் பார்த்தனர். தற்போது Elise Héon சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கபப்ட்டதாகவு…

    • 0 replies
    • 464 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.