Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஒன்பது பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு! ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரு வயதான பெண் உட்பட ஒன்பது பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களை ஆம்புலன்ஸ்கள் அணுக முடியவில்லை எனவும் பலஸ்தீன சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேவேளை உள்ளூர் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு இஸ்ரேலிய கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் தாக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். பலஸ்தீன போராளிக் குழுக்களான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அவர்கள் இஸ்ரேலிய துருப்புக்களுடன் ஃப்ளாஷ் பாயிண்ட் நகரத்தில் போரிட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

  2. ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைக்கைதிகளின் தலையை துண்டித்து கொடூர கொலை செய்து வருகின்றனர். அந்த இயக்கத் தில் சிறுவர்களை அதிக அளவில் சேர்த்து பயிற்சி அளித்து வருகின்றனர். உலக முழுவதும் இருந்து சிரியா சென்று அந்த இயக்கத்தில் சேருகின்றனர். சமீபத்தில் அந்த இயக்கத் தினர் வழக்கம் போல் ஒரு கொலையை அரங்கேற்றும் வீடியோ காட்சியை வெளி யிட்டனர். அதில் வழக்கத்துக்கு மாறாக 10 வயது சிறுவன் ஒருவன் பிணைக்கைதியை துப்பாக்கியால் சுட்டு கொல்லும் கொடூர காட்சி இடம் பெற்றிருந்தது. அந்த பிணைக்கைதியின் பெயர் முகமது சயீத் இஸ்மாயில் முசலாம் (19). இவர் இஸ்ரேலை சேர்ந்த அரபி ஆவார் . பாலஸ்தீனத்தில் உளவு பார்த்ததாக கூறி இவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து பிணைக்கை…

    • 0 replies
    • 446 views
  3. இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல்: உண்மைகளை அறிய முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவிப்பு உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இஸ்ரேல் நாட்டின் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, உண்மைகளை அறிய முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 300 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு பகுதியில் உள்ள மாசிரா தீவுக்கு அருகே அரேபியன் கடலில் சென்று கொண்டிருந்த இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீது நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பிரித்தானிய மற்றும் ரோமேனியாவைச் சேர்ந்த இரண்டு கப்பல் ஊழியர்கள் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். இந்தநிலையில் இத்தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான் இருப்…

    • 1 reply
    • 387 views
  4. இஸ்ரேல் எல்லையில் பாலஸ்தீனியர்களின் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி Published by Dharshini.S on 2019-03-31 14:58:27 கடந்த வருடம் ஜெருசலேம் நகருக்கு, அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை இடம் மாற்றியது. இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக வாரந்தோறும் பாலஸ்தீனியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதில் கடந்த மே 14ஆம் திகதி 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதன்பின் எகிப்து தலைமையிலான பேச்சுவார்த்தையினை தொடர்ந்து பதற்றம் குறைக்கப்பட்டு, போராட்டக்காரர்கள் பலியாவது தடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் முதலாம் ஆண்டுதினத்தினை முன்னிட்டு பாலஸ்தீனியர்கள் ஆயிரக்கணக்கில் இன்று இஸ்ரேல் மற்றும் காசா…

  5. இஸ்ரேல் ஐ.நா மனித உரிமைப் பேரவை உறவைத் துண்டித்தது இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஐ.நா. மனித உரிமை அமைப்புடனானஅனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. பலஸ்தீனத்தின் உரிமையை அபகரிக்கும் வகையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றனவா? என்பது குறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமிய நாடுகள் கடந்த வாரம் இத்தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அமெரிக்கா மட்டுமே தீர்மானத்தை எதிர்த்தது. இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. ___ http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37317

  6. லாபாஸ்: காஸா மீது இனப்படுகொலை நடத்தி வரும் இஸ்ரேலை ஒரு பயங்கரவாத நாடாக பொலிவியா பிரகடனப்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை அரபு நாடுகள் மவுனமாக வேடிக்கை பார்த்து வருகின்றன. அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. பொலிவியா, சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கான தூதர்களை வாபஸ் பெற்றன. இந்த நிலையில் இஸ்ரேலை பொலிவியா, ஒரு பயங்கரவாத நாடாக பிரகடனம் செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு அதிபர், இஸ்ரேலை ஒரு பயங்கரவாத நாடாக அறிவிக்கிறோம். அந்த நாட்டுடனான விசா நடைமுறைகள் ரத்து செய்யப்படும் என்றார். அதாவது 1972ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி, பொலிவியாவுக்குள் இஸ்ரேலியர்கள் விசா இன்றி செல்ல முடியும். ஆனால் தற்…

  7. இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது. மேலும்..... Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital Israel has carried out a strike on senior Hamas leaders in Qatar's capital Doha A Hamas official says its negotiating team was targeted during a meeting Explosions are heard and smoke is rising above Doha Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital - BBC News

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபு அலூஃப் பதவி, பிபிசி செய்திகள், காசா 11 அக்டோபர் 2023, 11:22 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "நாங்கள் எங்கே போவோம்? இந்தப் பகுதியில் பாதுகாப்பான இடம் என்று ஒன்று இருக்கிறதா?" காசாவில் ரிமால் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் இப்படிக் கேட்டார்கள். சனிக்கிழமையன்று காசா பகுதியில் இருந்து தெற்கு இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் போராளிக் குழுவின் வரலாறு காணாத தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலியப் போர் விமானங்கள் மற்றொரு வான்வழித் தாக்குதலை நடத்தின. காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழி…

  9. இஸ்ரேல் சிறையிலிருந்து விடுதலையானார் பாலஸ்தீன சிறுமி அஹித் தமீமி பாலஸ்தீன சிறுமி அஹித் தமீமி இஸ்ரேல் ராணுவ வீரரை அறைந்ததற்காக சிறைத் தண்டணை விதிக்கப்பட்ட பாலஸ்தீன சிறுமி அஹித் தமீமி விடுவிக்கப்பட்டிருக்கிறார். சிறையிலிருந்து விடுதலையான அஹிம் தமீமிக்கு பாலஸ்தீனத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நில ஆக்கிரமிப்புகள் மற்றும் பாலஸ்தீன எல்லையில் இஸ்ரேல் வீரர்களின் அட்டூழியங்களை எதிர்த்து பாலஸ்தீன மக்கள் பல ஆண்டுகளாகவே போராடி வருகின்றனர். அம்மக்களின் பல ஆண்டுகால போராட்டம் உலக நாடுகளிடம் பெரிதான தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் 17 வயது சிறுமியான அஹித் தமீம் தனது போராட்டத்தின் மூலம் உலக நாட…

  10. இஸ்ரேல் சிறையில் இருக்கும் கணவரின் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பாலஸ்தீன பெண் [size=3] இஸ்ரேல் நாட்டு சிறையில் இருக்கும் தனது கணவரின் உயிர் அணுவை கடத்தி வந்த பாலஸ்தீன பெண் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அம்மர் அல் ஜப்ன்(37) என்பவர் ஹமாஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டு இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி தல்லல் ஜிபென்(32). அவர்களுக்கு பஷாயெர் என்ற மகள் உள்ளார்(16). பஷாயெர் 18 மாதக் குழந்தையாக இருந்தபோது அம்மர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 32 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜிபெனுக்கு தன் கணவர் மூலம் மகன் பிறக்க வேண்டும் என்று ஆசை. இதையடுத்து அவர் சிறையில…

    • 0 replies
    • 618 views
  11. இஸ்ரேல் தாக்குதலால் 50 பணயக் கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஹமாஸ் – தற்போதைய தகவல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 45 நிமிடங்களுக்கு முன்னர் காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் துவங்கியதில் இருந்து, சுமார் 50 இஸ்ரேலியப் பணயக் கைதிகள் கொல்லப்பட்டிருப்பதாக அக்குழு கூறியிருக்கிறது. இதுபற்றி, ஹமாஸ் ராணுவப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபேய்தா கூறுகையில், இஸ்ரேலின் தாக்குதல்களின் விளைவாக, தங்கள் குழுவினரால் காஸாவில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த சுமார் 50 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டனர், என்றார். கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, பலரைக் கொன்று, மேலும் பலரைச் பேரைச் சிறைபிடித்துச் சென்றது. …

  12. இஸ்ரேல் தாக்குதலில் 1360 பாலஸ்தீனர்கள் படுகொலை , ஹமாஸ் இயக்கமே பொறுப்பு: கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் குற்றச்சாட்டு! [Thursday 2014-07-31 09:00] இஸ்ரேல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1300-ஐ தாண்டியது. ஹமாஸ் தீவிரவாத இயக்கமே இதற்கு பொறுப்பு என்று கனடா குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் - காஸாமுனை இடையிலான போர் கடந்த 8-ந் தேதி மூண்டது. காஸா முனை மீது இஸ்ரேல் முதலில் வான்வழி தாக்குதலைத்தான் நடத்தியது. ஆனால் ராக்கெட் வீச்சை நிறுத்த மறுத்ததால், காஸா முனை மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலையும் தொடங்கியது. இந்தப் போர் நேற்று 24-வது நாளை எட்டியது. நேற்று வடக்கு காஸா முனையில் ஜெபல்யா என்ற இடத்தில் உள்ள வீடுகள், பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் பீரங்கித்தாக்குதலையும், வான்வழி தா…

  13. இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் – ஐநா கடும் கண்டனம் August 12, 2025 10:28 am காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஆறு பத்திரிகையாளர்கள் படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் கொலைகள் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் அல் ஜசீரா நிருபர் ஒருவர் மற்றும் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். முக்கிய இலக்கான அல் ஜசீரா நிருபர் அனஸ் அல்-ஷெரிப், ஹமாஸ் பயங்கரவாதப் பிரிவின் தலைவர் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. ஊடக உரிமைக் குழுக்களும் கத்தார் உட்பட பல நாடுகளும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளன. இந்தத் தாக்குதலால் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக பிரி…

  14. இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் பேச்சாளர் பலி 01 September 2025 காசா நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் பேச்சாளரான அபு ஒபைடா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் ஹமாஸ் அவரது மரணத்தை உறுதிப்படுத்தவில்லை. இந்தநிலையில் காசாவில் ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்ததாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசா நகரத்தின் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட அல்-ரிமல் சுற்றுப்புறத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசா நகரத்தை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேலிய திட்டத்தின் ஒரு பகுதியாகவே இ…

  15. பலஸ்தீன காசாப் பகுதியில் இஸ்ரேலிய எப் 16 போர் விமானங்கள் கண்மூடித்தனமான ஏவுகணைத்தாக்குதல் நடத்தியதில் சுமார் 155 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் (400க்கும் மேல்) காயமடைந்துள்ளனர். கமாஸ் அமைப்புடன் போர் நிறுத்தம் முடிவடைந்ததை அடுத்து இஸ்ரேல் கண்மூடித்தனமான விமானத்தாக்குதலை தொடர்ச்சியாக காசா பகுதியில் மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் மிக மோசமாக மனித உரிமைகளை மீறும் நாடு என்பது பல காலமாக அறிக்கைகளின் வழி சொல்லப்பட்டு வந்தாலும் அதனை யாரும் உலகில் கட்டுப்படுத்த முனைவதில்லை. இஸ்ரேலிய யுத்த விமானங்கள்.. சிறீலங்காவிலும் பொதுமக்கள் இலக்குகள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்த சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்றும் இஸ்ரேலிய தயாரிப்ப…

  16. இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்தார் கட்டார் பிரதமர் 13 Sep, 2025 | 09:48 AM இஸ்ரேல் அண்மையில் கட்டாரின் தலைநகரான டோஹாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் சந்திப்பு ஒன்றை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலுக்குப், கட்டார் பிரதமர் ஷேக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை நியூயார்க்கில் சந்தித்துப் பேசினார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்மொழிந்த புதிய ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதற்காக, டோஹாவில் நடைபெற்ற ஹமாஸ் சந்திப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், காசாவில் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் என அமெரிக்கா கவலை தெரிவித்தது. இந்த வார தொடக்கத்தில…

  17. நேற்று முன்தினம் ஜேர்மனியின் முஞ்சன் நகரத்தில் கூடிய மூன்று தினங்களுக்கான மேலை நாடுகளின் முக்கிய இராஜதந்திரிகளின் கூட்டம் மிக ஆழமாக சில விவகாரங்களை அலசி ஆராய்ந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை பரிமாறியவர்களில் பதவி விலகிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிளரி கிளின்டன், இஸ்ரேலிய படைத்துறை அமைச்சர் எக்குட் பராக் ஆகிய இருவரும் முக்கியமானவர்களாகும். மிகவும் இரகசியமான முறையில் நடந்த இந்த சந்திப்பில் இரண்டு விடயங்கள் கூர்மையாக அவதானிக்கப்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. முதலாவது சிரியாவின் போக்கை கண்டிப்பது போலவும், சிரிய அதிபர் ஆஸாட்டின் நாட்கள் எண்ணப்படுவதாகவும் ரஸ்யா பேசுவது ஓர் உலக ஒப்பனை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இப்போதும் சிரிய அதி…

    • 0 replies
    • 556 views
  18. இஸ்ரேல் தூதரகம் மீதான தாக்குதலுக்கு அல்- ஹைதா உரிமைகோரியது [06 - February - 2008] மொரிடோனியாவிலுள்ள இஸ்ரேல் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அல்- ஹைதா தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. மொரிடோனியாவிலுள்ள இஸ்ரேலின் தூதரகம் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் காயமடைந்திருந்ததுடன் தூதரகமும் சேதங்களுக்கு உள்ளானது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக முதலில் செய்தி வெளியிட்ட அல்- ஜஸீரா தொலைக்காட்சிச் சேவை இஸ்ரேல் தூதரகம் மீது அல்-ஹைதா தாக்குதல் என்ற செய்தியை மட்டும் ஒளிபரப்பியது. இதனைத் தொடர்ந்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட ஒரு சில நாட்களின் பின்னர் அல்-ஹைதா அமைப்பு உரிமை கோரியுள்ளது thinakural.com

  19. இஸ்ரேலின் 19வது நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு 22ஆம் நாளிரவு முடிவடைந்துள்ளது. பொது மக்களின் கருத்துக் கணிப்பின்படி, நெத்தன்யாஹு தலைமையிலான லிகுட் கட்சியும், எமது தாயகக் கட்சியும் இணைந்த கட்சிக் கூட்டணி, 31 இடங்களைப் பெற்று அமைச்சரவையை உருவாக்கும் என தெரியவந்துள்ளது. இக்கூட்டணி அடங்குகின்ற இஸ்ரேல் ஐக்கிய வலது சாரி கூட்டணி 61 அல்லது 62 இடங்களை மட்டுமே பெறக் கூடும். ஆனால் விதியின்படி, கூட்டணி அரசை உருவாக்க குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவைப்படும். எனவே, நெத்தன்யாஹு அமைச்சரவையை உருவாக்குவது மிக கடினமாக இருக்குமென மதிப்பிடப்படுகிறது. http://tamil.cri.cn/121/2013/01/23/104s124801.htm Israel elections: Benjamin Netanyahu declares victory http://www.youtube.com/watch?v…

  20. இஸ்ரேல் தேர்தல்: 5-வது முறையாக பிரதமரானார் பெஞ்சமின் நேதன்யாகு! இஸ்ரேலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பெஞ்சமின் நேதன்யாகு 5-வது முறையாக மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டில் ‘கென்னெசெட்’ என்றழைக்கப்படும் 120 இருக்கைகள் கொண்ட பாராளுமன்றத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.இதில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் பிரதமராக 4 முறை பதவி வகித்துள்ள பெஞ்சமின் நேதன்யாகு, இந்த முறையும் வெற்றிபெற்று ஐந்தாவது முறையாக அரியணை ஏறுவதில் தீவிர ஆர்வம் காட்டியுள்ளார். பெஞ்சமின் நேதன்யாகு 13 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்த காலத்தில் இஸ்ரேல் நாட்டின் இறையா…

  21. இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன் வடக்கு காஸாவின் ஒரு குடியிருப்பு பகுதி. நேரம்: மாலை 4.00 மணி மாலை 5.00 மணிக்கு தரைமட்டமான கட்டிடங்கள். காஸா பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருவதால், காஸா நகரம் தரைமட்டமாகி வருகிறது. கடந்த 23 நாட்களாக நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் மோதலில் இதுவரை 1,283 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும் பாலானவர்கள் பொதுமக்கள். வடக்கு காஸாவிலுள்ள ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் ஐ.நா. பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர்.ஜபாலியாவில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகமையின் பெண்கள் பள்ளியிலும் இஸ்ரேல் வீசிய குண்டுகள் விழுந்தன. தொ…

    • 1 reply
    • 430 views
  22. இஸ்ரேல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம்! பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதை 12 மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் 124 நாடுகளின் ஒப்பந்தத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு எதிராக 14 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தன. மேலும் கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400194

  23. இஸ்ரேல் நடத்தும் போர் மத்திய கிழக்கிற்கு அப்பாலும் பரவக்கூடும் – ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை. காசாவில் இஸ்ரேல் நடத்தும் போர் மத்திய கிழக்கிற்கு அப்பாலும் பரவக்கூடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். ஒருசிலர் செய்யும் குற்றங்களுக்காக பாலஸ்தீன பகுதியில் உள்ள அப்பாவி குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் தண்டிக்கப்படுவது தவறு என்றும் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் எஇரத்தக்களரி மற்றும் வன்முறையைத் தடுப்பதே அனைவரது நோக்கமாக இருக்க வேண்டும் என விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். நெருக்கடி மேலும் அதிகரித்தல் கடுமையானதும் மிகவும் ஆபத்தான மற்றும் அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். …

    • 1 reply
    • 557 views
  24. இஸ்ரேல் நிலைகளை நோக்கி லெபனானின் ஹிஸ்புல்லா படை ஏவுகணை தாக்குதல்! இஸ்ரேல் நிலைகளை நோக்கி ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா படையினர், ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் தங்கள் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா படையினர் தெரிவித்துள்ளனர். எனினும், தெற்கு லெபனானில் இருந்து முன்னதாக வீசப்பட்ட ஏவுகணை குண்டுகளுக்குப் பதிலடி கொடுப்பதற்காகவே தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது. இதுகுறித்து இஸ்ரேல் இராணுவ துணைத் தளபதி அம்னான் ஷெஃப்ளர் கூறுகையில், ‘லெபனானிலிருந்து தங்கள் பகுதிகளை நோக்கி 19 ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.