Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. திருச்சியில் வசித்து வரும் இலங்கை பெண், 16.5 இலட்சம் ரூபா கடன் வாங்கியதற்கு கந்துவட்டி ௭ன்ற பேரில் ரூபா 59.4 இலட்சம் பணத்தையும், காணியையும் மிரட்டி வாங்கிக் கொண்ட குற்றச்சாட்டில் அங்கு நிதி நிறுவனமொன்றை நடத்தி வந்த இலங்கை நபர் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி, கே.கே.நகர் பகுதியிலுள்ள சுந்தர் நகரில் வசிப்பவர் ஜெயலட்சுமி ௭ன்கிற மனோராணி. இலங்கையைச் சேர்ந்த இவர், பல ஆண்டுகளுக்கு முன் திருச்சி வந்து சுந்தர் நகரில் வசிக்கிறார். கடந்த 2001 ஆம் ஆண்டு மனோராணியின் தம்பி லண்டன் செல்ல பணம் தேவைப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், அதே பகுதியில் வசித்த இலங்கையரும், நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவருமான சாந்தகுமார் ௭ன்பரை அணுகி பணம் கேட்டுள்ளார். இதனைத்தொட…

  2. தமிழகத்தில் கூலிப்படைகள் உருவாக மதுவே காரணம் என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டினார்.தமிழகத்தில், பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, 2வதுநாள் விழிப்புணர்வு பிரசார நடைபயணத்தை, தூத்துக்குடிமாவட்டம் காந்திநகரில், நேற்று காலை வைகோ துவங்கினார். சொக்கன்குடியிருப்பு, வடக்குஉடைபிறப்பு,மணிநகர், நெய்யூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக, தொண்டர்களுடன் வந்த அவர், வழியில், ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் பள்ளி மாணவ,மாணவியரை சந்தித்து, மதுவின் தீமை குறித்தும், அதை ஒழிக்கவேண்டியதன் அவசியம் குறித்தும், துண்டுபிரசுரம் தந்து வலியுறுத்தினார். மதுஒழிப்பு கொள்கையில் உறுதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். உடன்குடியில் வைகோ பேசியதாவது: தி.மு.க.,- அ.தி.மு.க., அரசுகள் மது…

    • 0 replies
    • 516 views
  3. தமிழகத்தில் சனத் ஜயசூரியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் 20 பேர் கைது கொழும்பு நிருபர் புதன்கிழமை, ஏப்ரல் 7, 2010 இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரியவுக்கு எதிராக தமிழகத்தில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டக்காரர்கள் 20 பேர்வரை தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. மும்பை இந்தியன் அணிக்காக விளையாடும் சனத் ஜயசூரிய சென்னையில் விளையாட அனுமதிக்கக்கூடாது எனக்கோரியே புதிய தமிழகம் கட்சியின் ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் சனத் ஜயசூரிய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். போர்க்குற்றம் புரிந்துள்ள அ…

  4. இந்திய பெருங்கடல் பகுதியில் எதிரி நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதத்தில், தென்பிராந்திய விமானப்படை பிரிவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. "சுகோய்-30' உள்ளிட்ட போர் விமானங்களை கையாளும் விதத்தில், சூலூர் விமான படை தளம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டில், இது முழு அளவில், செயல்பாட்டுக்கு வரும்,'' என, தென்பிராந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஆர்.கே.ஜாலி தெரிவித்தார். கோவை அருகேயுள்ள சூலூர் விமானப்படை தளத்தில், ஏர்மார்ஷல் ஜாலி நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய பெருங்கடல் பகுதி, 4000 கி.மீ., நீளத்தில் மிகப்பெரிய கடற்கரையை கொண்டது. இப்பகுதியில் 97 சதவீத வர்த்தகமும் கடல் போக்குவரத்தை நம்பி உள்ளது. நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த …

  5. தமிழகத்தில் தமிழர் விடிவெள்ளி என்ற புதிய புரட்சிகர இயக்கம் ஆரம்பம் Thursday, May 5, 2011, 11:08 இந்தியா தமிழீழ விடுதலையை முதன்மை படுத்தியும் தமிழக மக்களின் விடுதலையை பேணிய வாறும் புதிய புரட்சிகர தமிழ் தேசியவிடுதலை இயக்கம் ஒன்று தமிழகத்தில் பிரவாகம் எடுத்துள்ளது . இந்த இயக்கத்தில் அடுத்த மதாம் பதிவு செய்ய உள்ளதாக அதன் பொறுப்பாளர் தமிழ்மாறன் அவர்கள் தெரிவித்துள்ளார் . இதன் எதிர்கால திட்டம் ,நகர்வு .செயல் .பற்றியும் அவர் தெரிவித்துள்ளனர் . அந்த இயக்கத்தின் தலைவர் தமிழ் மாறன் வழங்கிய செவ்வியினை இங்கு இணைத்துள்ளோம். http://www.youtube.com/watch?v=uTZ-PIV71h0&feature=player_embedded tamilthai.com

    • 1 reply
    • 1.1k views
  6. இந்துத்வ பண்பாடு என்ன என்பதனை மக்களுக்கு வெட்டவெளிச்சமாகிக் கொண்டிருக்கிறன, தற்போதைய அரசியல் நிலவரங்கள். 'மதம் ஒரு அபின்' என்ற மார்க்சின் கூற்றுக்கு ஏற்ப மதத்தையே மூலதனமாக்கிக் கொண்டு அந்த அபினின் மூலம் வரும் போதையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள விழையும் மதவெறி சக்திகள் தற்பொழுது அதனை செய்து கொண்டிருக்கின்றன. அன்பையும் பண்பையும் போதிக்க வந்தவை மதங்கள் என இனியும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. மாற்றுக் கருத்து சொன்னவரின் தலையையும், நாக்கையும் துண்டு துண்டாக வெட்டுவதும், அவரது உறவினர் வீட்டைத் தாக்குவதும், பேருந்துக்களை எரிப்பதும் தான் அந்த மதம் சொல்லிக் கொடுத்த "பண்புகள்" போலும். குஜராத் மாநிலத்தில் குழந்தைகளை கூட விட்டுவைக்காமல் கொன்று குவித்த "இந்து"மத …

  7. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி ஆட்சி: கருணாநிதி மீண்டும் முதல்-அமைச்சர் ஆகிறார் சென்னை, மே. 11- தமிழக சட்டசபைக்கு கடந்த திங்கட்கிழமை தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 4.63 கோடி வாக்காளர்களில் 3 கோடியே 27 லட்சம் பேர் வாக்களித்தனர். இது 70.22 சதவீத ஓட்டுப் பதிவாகும். ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு பலத்த பாது காப்புடன் தொடங்கியது. 60 நகரங்களில் உள்ள 82 மையங்களில் விறுவிறுப்பாக ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 5 ஆயிரத்து 888 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். "சீல்'' வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்கள் சரி யாக 8 மணிக்கு அனைத்து கட்சி வேட்பாளர்கள், ஏஜெண் டுகள் முன்னிலையில் திறக் கப்பட்டன. பிறகு ஒவ் வொரு மேஜையிலும் ஒரே சமயத்தில் 14 எந்திரங்கள் வ…

    • 5 replies
    • 1.7k views
  8. தமிழகத்தில் திருச்சி, சேலம், பெரம்பலூர் உள்பட 7 மாவட்டங்களில் நில நடுக்கம்- மக்கள் பீதி, ஓட்டம் தமிழகத்தில் இன்று முற்பகலில் திருச்சி, சேலம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று லேசான நில அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 ரிக்டராக பதிவானது. இந்த நில அதிர்ச்சி காரணமாக மக்கள் பெரும் பீதியடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறினர். பள்ளிகளுக்கும் பல இடங்களில் விடுமுறை விடப்பட்டது. அரியலூரை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திருச்சியில்... திருச்சியில் இன்று முற்பகல் 11.20 மணியளவில் நில அதிர்ச்சி ஏற்பட்டது. திருவெறும்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 20 விநாடிகளுக்கு நிலநடுக்கம் நீடித்தது. …

    • 0 replies
    • 519 views
  9. வேலையின்மை, வறுமை காரணமாக தமிழகத்தில் ஆண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. அதிலும் தீக்குளித்து உயிரை விடும் வழிமுறையை தேர்ந்து எடுப்பதில் பெண்களுக்கு ஈடாக ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணைய கணக்கெடுப்பின்படி கடந்த 5 ஆண்டுகளில் தீக்குளித்து இறக்கும் ஆண்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வந்துள்ளது. இந்திய அளவில் பார்க்கும்போது, இருபாலரின் தற்கொலையிலும், தமிழகம்தான் முன்னிலையில் இருந்து வருகிறது. தீக்குளித்து மரணம் தமிழகத்தில் கடந்த 2005-ல் 875 பெண்களும், 384 ஆண்களும் தீக்குளித்து இறந்துள்ளனர். 2010-ம் ஆண்டில் 1,625 பெண்களும், 863 ஆண்களும் தீக்குளித்து உயிர…

    • 2 replies
    • 773 views
  10. ஜூலை 12, 2002 தமிழகத்தில் தீவிரவாதிகளுக்கு புலிகள் உதவி: ஜெயலலிதா சென்னை: தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து வரும் மதிமுகவை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். வைகோ மீதான பொடா வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றார். மேலும் தமிழகத்தில் இயங்கி வரும் தமிழ் தீவிரவாத அமைப்புகளுக்கு விடுதலைப் புலிகள் உதவி செய்து வருவதாகவும் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். சென்னையில் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, வைகோவைக் கைது செய்ததில் அரசியல் காரணங்கள் ஏதும் இலலை. கொடூரமான இயக்கமான விடுதலைப் புலிகளை வைகோ ஆதரித்ததால் தான் கைது செய்யப்பட்டார். எனக்கோ அல்லது அதிமுகவுக்கோ மதிமுக ஒரு அரசியல் எ…

  11. தமிழகத்தில் துப்பாக்கிச் சூடு மூன்று பேர் பலி. 11 செப்டம்பர் 2011 பரமக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானர்களின் எண்ணிக்கை நான்காக உயந்துள்ளது. சம்பவ இடத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் மதுரை மருத்துவமனையில் சிறிது நேரத்தின் முன்னர் உயிரிழந்தார். இதனால் கடும் பதட்டம் நிலவுகிறது. ஆங்காங்கே பேருந்துகள், வணிக நிறுவனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால் தென் மாவட்டங்கள் முழுக்க கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் ஓட வில்லை. தென் மாவட்டங்களில் கலவர அபாயம் - முழு பதட்டம். இமானுவேல் சேகரனின் நினைவு நாளான இன்று பரமக்குடியிலும் மதுரையிலும் எழுந்த கலவரத்தில் மூன்று தலித்துக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் …

  12. தமிழகத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படும் தாலி அகற்றும் விழாவுக்கு கடும் கண்டனங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் கைப்பேசி மூலம் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகம் சார்பில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் வருகிற ஏப்ரல் 14ம் திகதி, தாலி அகற்றும் விழா நடத்தப்படும் என்று கி.வீரமணி அறிவித்திருந்தார். தி.க. சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 10 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தாலி அகற்றும் போராட்டம் தொடர்பாக திராவிடர் கழகத்தின் மகளிர் பாசறை சார்பில் தற்போது அறிவிப்பு ஒன்று வெளி…

    • 20 replies
    • 2.5k views
  13. தமிழகத்தில் நேற்றும் பரவலாக வன்முறைகள்! – இயல்பு நிலை பாதிப்பு. [Monday 2014-09-29 09:00] சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றம்,ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கியதை கண்டித்து மாநிலம் முழுவதும் பல இடங்களில் அதிமுகவினர் நேற்றும் கடையடைப்பு, பஸ்சுக்கு தீ வைப்பு, கல்வீச்சு என கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் ஆங்காங்கே சாலைமறியல், ஆர்ப்பாட்டம் மற்றும் சிறு சிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்தன. இதனால், பல மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்தும் தடைபட்டது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மதியம் காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சு…

  14. கரூர்: கல்லூரி மாணவி ஒருவர் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள பயங்கர சம்பவம் கரூரில் நடந்துள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள பிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகள் வினிதா (17). பிளஸ் 2 முடித்திருந்த வினிதா, வரும் 1ஆம் தேதி கல்லூரியில் சேர இருந்தார். இதனிடையே, குடும்ப வறுமை காரணமாக வினிதா, கரூரில் உள்ள கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கிராமத்தில் இருந்து சைக்கிளில் வரும் வினிதா, கிருஷ்ணராயபுரத்தில் சைக்கிளை வைத்து விட்டு, பேருந்தில் சென்று கரூரில் 5 ஆயிரம் ஊதியத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வேலை முடிந்து பேருந்தில் கிரு…

  15. தமிழகத்தில் தீயாக பரவிய மெகந்தி பீதியால் விடிய விடிய மக்கள் அவதி!! சென்னை: மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்துக் கொண்டால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைவார்கள், தோல்வியாதி ஏற்படும், கை, கால்கள் பாதிக்கப்பட்டு அவற்றைத் துண்டிக்கும் நிலை ஏற்படும் என தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கும் பெண்களும், குழந்தைகளும் படையெடுத்து வந்தனர். இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று பெண்களும், குழந்தைகளும் கைகள் மற்றும் கால்களில் மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்து அலங்கரித்துக் கொண்டனர். பெரும்பாலானோர் கோன் வடிவில் உள்ள ரெடிமேட் மெஹந்தியால் அலங்காரம் செய்து கொண்டனர். இந…

  16. தமிழகத்தில் பாஜக, விஎச்பியினர் நடமாட முடியாத நிலை ஏற்படும்-திமுக கடும் எச்சரிக்கை சனிக்கிழமை, செப்டம்பர் 22, 2007 சென்னை: முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என விஎச்பி தலைவர் அறிவித்துள்ளதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக, விஎச்பியைச் சேர்ந்த தமிழகத்தில் தெருக்களில் நடமாட முடியாத அளவுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என திமுக எச்சரித்துள்ளது. முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி, ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்…

  17. தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கருத்து வெளியிடுவதற்கு தமிழக அரசாங்கம் தடை தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கருத்து வெளியிடுவதற்கு, தமிழக மாநில அரசாங்கம் அதிகாரபூர்வமாக தடை விதித்துள்ளது. இன்று தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய மாநில பொதுப்பணி - சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட இந்தியாவில் தடை செய்யப்பட்ட சகல அமைபப்புக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் கருத்து வெளியிடுவதற்கு, 1967ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்ட விரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் இன்று முதல் தமது அரசாங்கம் தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். மாநில முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களின் தலைமையில், இன்று இடம்பெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தின் பொழுது, இதற்கான தீர்மா…

  18. தமிழர்கள் ஆவேசம் : பாதுகாப்புடன் வெளியேறினார் இலங்கை பேராசிரியை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கருத்தரங்கு நடந்தது. ’போதை பழக்கமும், குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியை ஜீவா நீரல்லா, இங்கிலாந்தின் லங்காஷயர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ஹெலன்காட் உள்ளிட்ட பெண் பேராசிரியைகள் பங்கேற்றனர். கொழும்பு பல்கலை பேராசிரியை ஜீவா நீரல்லா, இலங்கையில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கவில்லை என்றும் அவ்வாறு நடப்பதாக சித்தரிப்பது சரியல்ல என்றும் பேசியதாக கூறப்படுகிறது. இலங்கை பேராசிரியை பங்கேற்பது குறித்து ஏ…

  19. வேதாரண்யம், ஆக. 24- தமிழகத்தில் 63 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் மரணப்படுக்கையில் உள்ளது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். வேதாரண்யத்தில் மத்திய அரசைக் கண்டித்து பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட இல. கணேசன் பேசியதாவது, இந்தியாவில் ஊழல் மலிந்து கிடக்க காங்கிரஸ்தான் காரணம். நேரு ஆட்சியில் இருந்த காலத்தில் இருந்து இன்று வரை ஊழல் மலிந்துவிட்டது. தமிழக மக்கள் ஆட்சி மாற்றம் விரும்பி திமுகவை நீக்கிவிட்டு அதிமுக அரசை கொண்டு வந்தனர். இதேபோன்று மத்தியிலும் வரும் 2014 அல்லது அதற்கு முன்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர வாக்காளர்கள் தயாராக இருக்க வேண்டும். தமிழகத்தில் நடந்…

  20. தமிழகத்தில் மாற்று அணி ; காலத்தின் கட்டாயம் [02 - July - 2008] பழ நெடுமாறன் அண்மையில் தனது கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேற்றி உள்ளது கொள்கை அடிப்படையிலான முடிவல்ல. பா.ம.க.வைச் சேர்ந்த ஒருவர் தி.மு.க. தலைமையைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பா.ம.க.வுடன் உள்ள உறவை தி.மு.க. தன்னிச்சையாகத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூடி இம்முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். கட்சிகளுக்கு இடையே உள்ள உறவுகளை முறித்துக் கொள்வதற்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகளே போதுமானவை என்றால் தி.மு.க. தலைவரும் அவரது கட்சியைச் சேர்ந்த பிறரும் பல்வேறு கட்சி…

    • 0 replies
    • 727 views
  21. எங்களுடைய வாக்கை வாங்கி ஆட்சி அமைத்து, எங்களையே முடக்குவது என்பது எவ்வளவு கொடுமை: சீமான் 19 11 2011 முதல் இனம் காக்க உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை போற்றும் வகையில் தமிழர் எழுச்சி வார நிகழ்வை ஒரு வாரத்திருக்கு நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்து இருந்தது, இதன் முதற்கட்டமாக 19 11 2011 அன்று வில்லிவாக்கத்தில் நடைபெற இருந்த பொது கூட்ட அனுமதியை திடீரென ரத்து செய்தது தமிழக காவல்துறை. அது மட்டுமல்லாமல் டிசம்பர் 6ம் தேதி வரை நாம் தமிழர் நடத்தும் எந்த கூட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை, தடை செய்யப்பட்ட இயக்கத்தை பற்றி பிரச்சாரம் செய்வது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் என காவல்துறை காரணம் கூறியும் பல்வேறு காரணங்களை கூறியும் நாம் தமிழர் எழுச்சி வார நி…

    • 3 replies
    • 1.1k views
  22. கூட்டணி, தேர்தல் வியூகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக, வரும் 22ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னை, மதுரை, திருச்சி, விழுப்புரம், நெல்லை, திருப்பூர் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்யும் ராகுல் இந்த முறையாவது தங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக தலைவரான முதல்வர் கருணாநிதியை சந்திப்பாரா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் 13 லட்சம் பேர் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நடந்த நிர்வாகிகள் தேர்தலில் பல்வேறு பதவிகளுக்கு 60,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும், கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்கவு…

    • 0 replies
    • 426 views
  23. தமிழகத்தில் வன்முறை கலாச்சாரம் - இளங்கோவன் ஜூலை 16, 2007 சென்னை: தமிழ்நாட்டில வன்முறை, கலவரங்கள் அதிகளவு நடந்து வருவதாக மத்திய அமைச்சர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். காமராஜரின் 105வது பிறந்த நாள் விழாவில் பேசிய மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழகத்தில் வன்முறையும், கலவரங்களும் தலைதூக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்கு முன்பு வன்முறை என்றால் அரிவாள் வீச்சு, வெட்டுக்குத்து, தாக்குதல் என்றுதான் இருந்தது. ஆனால் தமிழகம் நன்றாக தேர்ச்சி பெற்று விட்டது. அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் தான் குண்டு வெடிப்பு நடப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தமிழ்நாடு, அஸ்ஸாமை விட குண்டு வெடிப்பு தாக்குதலில் பல மடங்கு முன்னேறியுள்ளது என்…

  24. தமிழகத்தில் விடுதலைப் ‘புலிகள்’ நடமாட்டம் பெருகி விட்டது. தி.மு.க. அரசு அவர்களுக்கு ஆதரவாக உள்ளது’ என்று மீண்டும் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளார் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி. தி.மு.க. அரசுக்கு எதிராகக் காய் நகர்த்துகிறார் என்ற பேச்சுக்கு நடுவே, கடந்த சனிக்கிழமை மதியம் தமிழக கவர்னரை, சந்தித்தார் சுவாமி. அன்று மாலையே ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசினார். கொஞ்ச காலமாகவே ஜெ.வும் சு.சுவாமியும் அடிக்கடி டெலிபோனில் ஆலோசிப்பதாகக் கூறுகிறார்கள். என்னதான் நடக்கிறது? என்று அறிய, ஜனதா கட்சித் தலைவரான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியை நேரில் சந்தித்தோம். வழக்கம் போலவே தனது அதிரடிகளைத் தொடர்ந்தார் அவர்... தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டாலே நீங்கள் ‘விடுதலைப் புலிகள் நடமாட்டம்... த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.