உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26859 topics in this forum
-
அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் ஸவாஹிரி உயிரிழந்ததாகத் தகவல்! November 21, 2020 அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஸவாஹிரி (Ayman al-Zawahiri) உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2011ல் பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் ஸவாஹிரி அல்கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதனைத் தொடர்ந்து இவரின் தலைக்கு 25 மில்லியன் டொலர்களை விலையாக வைத்தது அமெரிக்கா. ஆனால் ஆப்கானிஸ்தானில் பதுங்கி வாழ்ந்த அய்மான் அல் ஸவாஹிரி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடும் மூச்சிரைப்பு காரணமாக ஜவாஹிரி உயிரிழந்ததாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/913…
-
- 0 replies
- 825 views
-
-
சிலியில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை சிலி நாட்டின் தெற்குப் பகுதியில் இன்று மாலை 7.6 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேதம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. http://www.vikatan.com/news/world/75892-tsunami-alert-in-chile-after-76-richter-earthquake.art
-
- 0 replies
- 358 views
-
-
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில்- ’’இலங்கையில்இ போர் நடைபெறும் பகுதியில் இருந்து 58 ஆயிரத்து 600 பேர் வெளியேறி பாதுகாப்பு பகுதிக்கு வந்திருப்பதாக சற்று முன்தான் டெல்லியில் இருந்து எனக்கு ஃபேக்ஸ்' மூலம் தகவல் வந்துள்ளது. எனவே தற்காலிக போர்நிறுத்தம்' செய்யும்படி இந்திய அரசு விடுத்த கோரிக்கையை இலங்கை ஏற்கவில்லை என்று கூறுவது தவறு. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பொது மக்களை மீட்க நடவடிக்கை எடுத்ததால்தான் இவ்வளவு பேர் அரசு பகுதிக்கு வந்துள்ளனர். இலங்கையில் தீவிரவாதிகளிடம் (விடுதலைப்புலிகள்) எங்களுக்கு அனுதாபம் இல்லை. பொதுமக்கள் மீதுதான் அனுதாபம் உள்ளது. அவர்கள் பாதுகாப்பாக வெளி…
-
- 13 replies
- 2.4k views
-
-
சென்னையில் நேற்று அதிகாலை மர்ம மனிதன் ஒருவன் மின்சார ரெயிலை கடத்தி சென்று சரக்கு ரெயில் மீது மோத செய்து நாசவேலையில் ஈடுபட்டான். இதில் அவனையும் சேர்த்து 4 பேர் உயிரிழந்தனர். 11 பயணிகள் காயம் அடைந்தனர். பலியான 4 பேரில் ஒருவர் வில்லிவாக்கம் ராஜமங்கலத்தை சேர்ந்த ஜோசப் அந்தோணிராஜ் (40) என்று தெரிய வந்தது. மற்றொருவர் ஈரோடு ரெயில்வே மருத்துவமனையில் பணிபுரியும் ஆரோக்கிய நாதன் என்று கண்டுபிடிக்கப்பட்டது. 3-வது நபர் ஆவடியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்று அவரது அடையாள அட்டை மூலம் தெரிந்தது. 4-வது நபர்தான் இன்னும் யார் என்று தெரியவில்லை. அவர்தான் ரெயிலை கடத்தி சென்று நாசவேலையில் ஈடுபட்ட தீவிரவாதியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த மர்ம ஆசாமி…
-
- 2 replies
- 2.2k views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெரூசலத்துக்கு மாற்றுவதற்கான பேச்சுக்களை டொனால்ட் டிரம்ப் ஆரம்பித்துள்ளார். * தாய்வானில் வெளிநாட்டு பணியாளர்களின் வாழ்க்கையில் இருண்ட பக்கங்கள். தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து ஒரு இந்தோனேசிய பெண் பேசுகிறார். * இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட போர் விமானம் ஒன்றை, ஒரு குடும்பம் மீள உருவாக்க முனைகிறது.
-
- 0 replies
- 394 views
-
-
சர்ச்சைக்குரிய சட்டமூலத்தினை நிறைவேற்றியது பிரான்ஸ்! பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கமைய இனி வெறுப்பூட்டும் விதமாக பேசுவோரை தடை செய்யவும், இஸ்லாமிய பாடசாலைகளை மூடுவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் அளிக்கப்படவுள்ளது. நேற்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் முன்வைக்கப்பட்ட குறித்த சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை ஆதரித்து 347 பேரும் எதிர்த்து 151 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். இனி, குறித்த சட்டமூலம் மேலவையில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. பிரான்சில் இஸ்லாமியர்கள் பெருமளவில் வசித்தாலும், அவர்கள் மற்றவர்களுடன் இணைந்து வாழ்கிறார்களா என்பது குறித்த விவகாரம் பல ஆண்டுகளாக பிரிவி…
-
- 2 replies
- 722 views
-
-
பாராளுமன்றத்துக்கு 2004, 2009-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி 2014-ம் ஆண்டு தேர்தலிலும் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஓசையின்றி காய்களை நகர்த்தி வருகிறார். இந்த தடவை தனிப்பெரும்பான்மை பெறும் வகையில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் நினைக்கிறார். தனது திட்டத்தை நிறைவேற்ற அவர் கடந்த சில தினங்களாக காங்கிரஸ் முதல்-மந்திரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் தற்போது 15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி உள்ளது. 2 மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி உள்ளது. இந்த மாநிலங்களில் கூடுதல் எம்.பி.க்களை பெற்றாலே போதும் தனி மெஜாரிட்டி பெற்று விடலாம் என்று…
-
- 3 replies
- 638 views
-
-
ஒபாமாவின் நம்பிக்கையைத் தகர்த்த கைதி! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவால் விடுவிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கைதியொருவர் மீண்டும் அதே குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார். 1992ஆம் ஆண்டு, ரொபர்ட் எம்.கில் (68) என்பவர் மீது சுமத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு நிரூபணமானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்த பொதுமன்னிப்பின் பேரில் 1,385 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுள் இவரும் ஒருவர். இந்த நிலையில், கடந்த வாரம் 500 கிராமுக்கும் மேற்பட்ட கொக்கைன் போதை மருந்தை வினியோகிக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ர…
-
- 2 replies
- 479 views
-
-
சூயஸ் கால்வாயில் டிராபிக் ஜாம்.. 400 மீட்டர் ராட்சத கப்பல் தரைதட்டியது.. உலகின் மிகவும் பிசியாக இருக்கும் சூயஸ் கால்வாயில் தைவான் நாட்டின் எவர்கீரின் நிறுவனத்திற்குச் சொந்தமான எவர் கிவன் என்ற 400 அடி நீளம் கொண்டு ராட்சத சரக்கு கப்பல் இக்கால்வாயின் இரு பக்கத்தின் தரையில் மோதி சிக்கிக்கொண்டு உள்ளது. இதனால் உலகக் கடல் வழி போக்குவரத்தில் பெரும் பாதிப்பு உருவாகியுள்ளது மட்டும் அல்லாமல் இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் கொண்டு வரும் சரக்குக் கப்பல்கள் இந்தக் கால்வாயில் செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது.சூயஸ் கால்வாயில் சரக்குகள் தேக்கம் சுமார் 2.20 லட்சம் டன் எடை கொண்ட இந்தக் கப்பலைத் தரையில் இருந்து விடுவிக்கவும், போக்குவரத்து வழியை…
-
- 43 replies
- 3.3k views
-
-
இன்றோடு விடைபெறுகிறது தந்தி... கடைசித் தந்தி கொடுப்போரை படம் பிடிக்க ஏற்பாடு. சென்னை: கடந்த 160 ஆண்டுகளாக இந்தியாவில் அரும் சேவையாற்றி வந்த தந்தி சேவைக்கு இன்றோடு விடை கொடுக்கப்படுகிறது. கடைசித் தந்தி கொடுக்க வருவோரை வீடியோவில் படம் பிடித்து ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவில் தந்திதான் மிகப் பெரிய சேவையாக இருந்து வந்தது. அவரசத் தகவல்களைத் தெரிவிக்க அத்தனை பேருக்கும் இருந்த ஒரே சேவை தந்தி மட்டுமே. உடல் நலக்குறைவு, அவசரமாக வர வேண்டும், மரணச் செய்தி என முக்கியத் தகவல்களை ஒருவருக்குத் தெரிவிக்க தந்தியைத்தான் அனைவரும் நாடினர். ஆனால் பேஜர் வந்ததும் தந்தியின் சேவை முதலில் மெதுவாக குறைந்தது. பின்னர் இன்டர்நெட் வந்தது, இமெ…
-
- 8 replies
- 1.1k views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பர்மிய இராணுவம் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக ஐநா அதிகாரி குற்றச்சாட்டு; ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்து பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி * ஊழல்புகாரில் தென்கொரிய அதிபர் பார்க் குய்ன் ஹை நீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்டார்; நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து பெரும் கவலை. * லண்டனின் புகழ்பெற்ற டாக்ஸிகளை புகையை வெளியிடா வாகனங்களாக்கும் முயற்சி மும்முரம்; காற்றின் மாசை கட்டுப்படுத்த இன்னும் ஒரு தொழில்நுட்ப முன்னெடுப்பு.
-
- 0 replies
- 224 views
-
-
இளம்வயது மக்கள் தொகை கடும் சரிவு: மூன்று குழந்தைக் கொள்கையை அறிவித்தது சீனா! சீனாவில் இளம்வயது மக்கள் தொகையின் சரிவை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என சீனா அரசாங்கம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பின்னர் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகளைப் பெற அனுமதித்து சீனா தனது குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையைத் தளர்த்தியுள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில், ஏறக்குறைய 40 ஆண்டுகளாக, ‘தம்பதிக்கு ஒரு குழந்தை’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இது உலகெங்கிலும் உள்ள கடுமையான …
-
- 7 replies
- 817 views
-
-
2012-க்குள் இந்தியா மீது சீனா போர் தொடுக்கும் இந்தியா மீது 2012-க்குள் சீனா போர் தொடுக்கும் என பாதுகாப்புத் துறை நிபுணர் பரத் வர்மா எச்சரித்துள்ளார். இது குறித்து இந்தியன் டிபென்ஸ் ரெவியூ பத்திரிகையில் அதன் ஆசிரியரான பரத் வர்மா எழுதியுள்ளதாவது: ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இந்தியாவுக்கு இறுதியாகப் பாடம் புகட்ட வேண்டும் என சீனா நினைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக சீன ஏற்றுமதி நிறுவனங்கள் பல மூடப்பட்டுவிட்டன. இதனால், முன்னெப்போதும் இல்லாதவகையில் சீனாவில் சமூக அமைதி சீர்குலைந்து வருகிறது. இதனால் சமூகத்தின் மீது இருந்து வந்த கம்யூனிஸ்டுகளின் பிடி தளர்ந்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகி வரு…
-
- 17 replies
- 3.7k views
-
-
டெல்லி: தமிழக மீனவர்கள் 90 பேரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் விவகாரம் தொடர்பாக இலங்கை தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி வரவழைத்து கண்டனம் தெரிவித்தது. தமிழக மீனவர்கள் கடந்த ஒரு சில வாரங்களில் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுவது தொடர் கதையாகிவிட்டது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இலங்கை அரசின் தூதரை நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து இன்று மத்திய அரசு, இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. இதேபோல் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகத்திடமும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரும் இந்த விவகாரம் தொடர்பாக…
-
- 1 reply
- 395 views
-
-
சிங்கப்பூர் நாட்டின் மிக உயரிய விருதான தெமாசெக் விருது (Order of Temasek) அந்நாட்டின் 6 வது அதிபராக இருந்த திரு S.R. நாதன் (செல்லப்பன் ராம நாதன்) அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ( This award was last given to former Chief Justice Yong Pung How in 1999).திரு நாதன் சிங்கப்பூரின் அதிபராக இருந்ததற்கு மட்டும் இவ்விருது வழங்கப்படவில்லை, மாறாக பொதுச் சேவையில் தமது வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டு நாட்டிற்கு ஆற்றிய சேவைக்காக திரு நாதனுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவர் 1999 மற்றும் 2005 ஆகிய இரண்டு முறையும் சிங்கப்பூரின் அதிபராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்.மூன்றாவது முறையாக தான் போட்டியிட விரும்பவ…
-
- 4 replies
- 627 views
-
-
மத்திய தரைக்கடலில் கடந்த சில நாட்களில் ஏழாயிரத்துக்கும் அதிகமான குடியேறிகள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் லிபியாவில் இருந்து பயங்கரமான கடலைக்கடந்து ஐரோப்பாவில் நல்ல எதிர்காலத்தை நோக்கி வருவதாக கூறப்படுகின்றது. கடந்த வருடம் இதேகாலப்பகுதியை விட இந்த வருடத்தில் இதுவரை வந்தவர்களின் எண்ணிக்கை ஐம்பது வீதத்திலும் அதிகமாகும். ஒரு பிபிசி குழு இவர்களை மீட்பதற்கான கப்பலில் கடந்த வாரத்தை கழித்தது. BBC
-
- 0 replies
- 320 views
-
-
டமாஸ்கஸ்: சிரியா மீது இன்று 2 பேலிஸ்டிக் வகை ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், ஆனால் அவை இரண்டுமே மத்திய தரைக் கடல் பகுதியில் விழுந்துவிட்டதாகவும், சிரியாவைத் தாக்கவில்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரையடுத்து அங்கு பொது மக்கள் மீது ராணுவம் ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. ஆனால், சிரியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு தந்து வருகிறது. சிரிய அதிபர் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஆதரவாக நிற்கிறது ரஷ்யா. இதனால், ஐ.நா. சபையில் சிரியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தால் அதை ரஷ்யா தனது வீடோ அதிகாரம் மூலம் முறியடிக்கும் ந…
-
- 3 replies
- 573 views
-
-
தமிழை ஏன் இன்னும் கெளரவிக்கவில்லை மத்திய அரசு.. ? ராஜ்யசபாவில் சீறிய 'இந்தி' எம்.பி! சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் சிலரே தமிழின் பெருமையை மதிக்காமல் இருக்கும் நிலையில், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட, அதுவும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி. ஒருவர் தமிழை நாட்டின் 2வது தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும், நாடு முழுவதும் தமிழை ஒரு கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முழங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கோரிக்கையுடன் நில்லாமல் தமிழின் பெருமைகளையும் அவர் விளக்கி விரிவாகப் பேசியதும் தமிழர்களை பெரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. அந்த சிறப்புமிகு எம்.பி.யின் பெயர் தருண் விஜய். பாஜகவைச் சேர்ந்தவர். உத்தரகாண்ட் ம…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை அதிரவைத்த ட்ரம்ப்பின் பேச்சு! ட்ரம்ப் அதிபரான பிறகு ஜெர்மனியுடன், தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார். குறிப்பாக கடந்த மார்ச் மாதம் ட்ரம்ப், ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கலன் இருவரும் சந்தித்தனர். அப்போது, ஏஞ்சலா, ட்ரம்புடன் கைக்குலுக்க வர, ட்ரம்ப் அதை கண்டுகொள்ளவில்லை. ஏஞ்சலாவின் முகத்தைக் கூட ட்ரம்ப் பார்க்கவில்லை. இதனால், பயங்கர நோஸ் கட்டுடன் ஏஞ்சலா திரும்பினார். இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் ட்ரம்ப் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, ட்ரம்பின் பேச்சால் ஜெர்மனி மேலும் சூடாகியுள்ளது. முக்கியமாக, "ஜெர்மனியர்கள் கெட்டவர்கள். மிகவும் கெட்டவர்கள். அமெரிக்காவில் அவர்கள், மில்லியன் கணக்கில்…
-
- 5 replies
- 735 views
-
-
பப்புவா நியூ கினியாவுடனான... சர்ச்சைக்குரிய புகலிடம் தடுப்பு ஒப்பந்தத்தை, அவுஸ்ரேலியா முடிவுக்குக் கொண்டுவந்தது சர்ச்சைக்குரிய புகலிடம் தடுப்பு ஒப்பந்தத் நிறைவுக்கு வரும் நிலையில் புகலிடம் கோருவோரை பப்புவா நியூ கினியாவுக்கு அனுப்புவதை நிறுத்த அவுஸ்ரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. படகு மூலம் அவுஸ்ரேலியா வை அடைய முயற்சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக கான்பெர்ராவால் வழங்கப்பட்ட இரண்டு பசிபிக் நாடுகளில் பப்புவா நியூ கினியாவும் ஒன்றாகும். இந்நிலையில் குறித்த நாட்டுடனான ஏற்பாடு இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என அவுஸ்ரேலியா கூறியுள்ளது. இருப்பினும் அவுஸ்ரேலியாவின் வலுவான எல்லை பாதுகாப்பு கொள்கைகள் மாறவில்லை என உள்து…
-
- 0 replies
- 239 views
-
-
பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு! பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்ததில் குறைந்தது 27பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில், புலம்பெயர்ந்தவர்கள் தொடர்புப்பட்ட சமீபத்திய ஆண்டுகளில் பதிவான மிக மோசமான விபத்து இதுவாகும். நேற்று (புதன்கிழமை) குளிரான நீரில் மூழ்கிய புலம்பெயர்ந்தவர்களின் சடலங்கள், பிரான்ஸின் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்கள் மற்றும் ஒரு சிறுமி அடங்குவதாக பிரான்ஸின் உட்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் அறிக்கை தெரிவிக்கின்றது. இரண்டு பேர் மீட்கப்பட…
-
- 9 replies
- 841 views
-
-
இந்திய சீன எல்லை --- புதிய ராணுவப் பிரிவு உருவாக்க இந்தியா உத்தரவு இந்தியா ,சீனாவுடனான தனது எல்லை நெடுகே புதிய ராணுவப் பிரிவொன்றை உருவாக்கி நிலை நிறுத்தும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இதன் மூலம் 50,000 கூடுதல் படையினர் இந்த எல்லையில் நிறுத்தப்படுவார்கள். இந்தப் புதிய பிரிவு மேற்கு வங்க மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும். கடந்த ஆண்டில், சீனத்துருப்புக்கள், இந்திய நிலப்பரப்புக்குள் பல முறை ஊடுருவிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சீனாவும் இந்த எல்லை நெடுகே துருப்புக்களை குவித்திருக்கிறது. இமாயலப் பகுதிகளில் பல இடங்களில், எல்லைப் பிரச்சினை கொண்டிருக்கும் இந்த இரு நாடுகளும், 1962ல் ஒரு சுருக்கமான போரில் ஈடுபட்டன. http://www.bbc.co.uk/tami…
-
- 3 replies
- 645 views
-
-
சீனா அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகளை ஆயுத போட்டியில் முந்தப்போவது எப்படி? - விரிவான வரைகலை விளக்கம் டேவிட் பிரவுன் பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சீனா தனது படைகளை அதிவேகமாக பெருக்கிக் கொண்டிருக்கிறது. ஏவுகணை தொழில்நுட்பம், அணு ஆயுதங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் அதன் முன்னேறும் வேகம் பல மேற்கத்திய நிபுணர்களிடையே தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளன. ராணுவ ஆற்றல் அடிப்படையிலான உலகளாவிய சமநிலையில் திட்டவட்டமான மாற்றம் நடந்து வருவதாக அவர்கள் நம்புகிறார்கள். 2035-ஆம் ஆண்டுக்குள் சீனாவின் படைகளை நவீனமயமாக்குமாறு அதிபர் ஸீ ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். 2049ஆம் ஆண…
-
- 0 replies
- 449 views
- 1 follower
-
-
புதுடெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி மற்றும் நரேந்திர மோடி குறித்து ட்விட்டரில் வெளியிட்ட கருத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இசை அமைப்பாளர் விஷால் தாத்லானி, தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியை , 'கயவன்' என்றும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை 'கொலைக்காரன்' என்றும், 'இந்தியா இப்போது கொலைக்காரனுக்கும், கயவனுக்கும் இடையில் சிக்கி கொண்டுள்ளது என்றும் பதிவு செய்துள்ளார். நேற்று இரவு தாத்லானியின் இந்த பதிவை அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுபதிவு செய்துள்ளார். இதனால் மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். http://news.vikatan.com/article.php?module=news&aid=238…
-
- 2 replies
- 482 views
-
-
வைசிய புராணமும்- வளையாபதியும் எது உண்மை? வளையாபதியின் சிறப்பு; வட மொழியில் தோன்றிய ரகுவம்சம் குமார சம்பவம் சிசுபால வதம் நைடதம் கிராதர்ஜீனியம் ஆகிய 5 நூல்களை பஞ்ச காவியம் என்று அழைப்பர்.அதே போல தமிழில் தோன்றிய சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம்,மணிமேகலை,வளையாபதி ,குண்டல கேசி ஆகிய 5 நூல்கள் ஐம்பெரும்காப்பியம் எனப்பட்டன. இந்த பாகுபாட்டை யார் வகுத்தது என்று தெரியவில்லை.. நன்னூலுக்கு உரை வழங்கிய மயிலை நாதர் ஐம்பெரும்காப்பியம் எண் பெரும்தொகை,பத்து பாட்டு எட்டு தொகை பதினொண்கீழ்கணக்கு என இலக்கியங்களை வகைபடுத்தியுள்ளார்..ஆனால் அவர்க் கூட ஐம்பெரும்காப்பியம் எவை எவை என்று வகைப்படுத்தவில்லை.. பிற்காலத்தில் ஆசிரியர் பெயர்தெரியா பாடலென்று ஐம்பெரும் காப்பியத்…
-
- 0 replies
- 3.8k views
-