உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26643 topics in this forum
-
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 39வது முறையாக நடந்த விபத்தில் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வானிலை அறிக்கை.. வெப்பநிலை அறிக்கை சொல்வது போல ஆகிவிட்டது சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் விபத்து குறித்த செய்தி. ஒருநாள் கண்ணாடி உடைந்தால் மறுநாள் கிரானைட் சுவர் பெயர்ந்து விழுகிறது.. மற்றொரு நாள் மேற்கூரை சரிகிறது... இப்படி நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏதாவது ஒரு விபத்துக்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவரை வெளியில் தெரிந்து 39 விபத்து நடந்து விட்டது. இனி தெரியாமல் எத்தனை நடந்துள்ளதோ. ஆனால் அனைத்து விபத்துகளுக்கும் அசால்டாகவே பதில் சொல்கின்றனர் விமான நிலைய அதிகாரிகள் என்பது பயணிகளின் புகாராக இருக்கிறது. உடைந்த கண்ணாடி கதவு இதுவரை பல விபத்துக்கள் நடந்திருந்தா…
-
- 2 replies
- 494 views
-
-
Published By: RAJEEBAN 27 OCT, 2023 | 11:20 AM சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஈரான் இராணுவம் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்களின் இரண்டு நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஈராக் சிரியாவில் உள்ள அமெரிக்க படையினரின் தளங்கள் மீது சமீபத்தில் ஆளில்லா விமானதாக்குதல்கள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார். ஈராக் சிரியாவில் உள்ள அமெரிக்க படையினரை பாதுகாப்பதற்காக இந்த துல்லிய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க படையினருக்கு எதிரான ஈரான் ஆதரவு தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை அவ…
-
- 0 replies
- 575 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 5 நவம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்தை எட்டும் நிலையில் அங்குள்ள மக்களின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் அரபு நாடுகளில் மக்களிடையே கொந்தளிப்பு அதிகரித்து வருகிறது. அந்த பிராந்தியத்தில் நிலைமை மேலும் மோசமாகி விடாமல் தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்காக, அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கில் முகாமிட்டுள்ளார். அவர் மத்திய கிழக்கு நாடுகளில் மூன்று நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். எந்த நேரத்திலும் மோசமடையக் கூடிய ஆபத்தில் உள்ள போர்…
-
- 2 replies
- 324 views
- 1 follower
-
-
நாடற்ற நிலையில் 12 மில்லியன் மக்கள் தென்கிழக்காசியா, மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் 12மில்லியன் மக்கள் நாடற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிரிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரியின் கூற்றுப்படி இவர்கள் மிக மோசமான நாட்டுச் சூழலில் வாழ்வதால் உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர் என்கின்றனர். குடிமகன்களாகப் பதியாததால் இம்மக்கள் சொத்துக்களைச் சொந்தமாக்குவதிலும் வங்கிக் கணக்குகளைத் திறப்பதிலும் சட்டரீதியாகத் திருமணம் செய்வதிலும் பிள்ளைகளின் பிறப்பைப் பதிவதிலும் சிக்கல்…
-
- 0 replies
- 410 views
-
-
2019 ஆம் ஆண்டில் மனிதாபிமான பேரழிவு ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியல்! சர்வதேச மீட்புக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டில் மனிதாபிமான பேரழிவு ஆபத்தில் உள்ள முதல் பத்து நாடுகளின் பட்டியலில் யெமன், கொங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன. போர்கள், பஞ்சம் மற்றும் பிற பேரழிவுகள் பல நாடுகளிலும் அதிகரித்து வரும் நிலையில் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களுக்கு மற்றுமொரு கடினமான ஆண்டாக 2019 அமைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பட்டியலிலுள்ள மற்றைய ஏழு நாடுகளாக ஆப்கானிஸ்தான், வெனிசுவேலா, மத்திய ஆபிரிக்க குடியரசு, சிரியா, நைஜீரியா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் சர்வதேச மீட்புக் குழுவால் பெயரிடப்பட்டுள்…
-
- 0 replies
- 501 views
-
-
பிரேசிலில் அணை உடைவு – 7 பேர் பலி – 150 பேரை காணவில்லை January 26, 2019 பிரேசிலில் அணை ஒன்று உடைந்துள்ளமையினால் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் 150 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலின் புரு மாடின்கோ நகரத்தின் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான இரும்புதாது சுரங்கத்தில் ஒரு அணை பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று இரவு அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அந்த அணை உடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதில் இருந்த தண்ணீரும், சேறும் வெள்ளமாக பெருக்கெடுத்து வெளியேறியதனால் சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் 150 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல…
-
- 2 replies
- 775 views
-
-
லண்டனில் காரல்மார்க்ஸின் கல்லறை சேதப்படுத்தப்பட்டுள்ளது February 6, 2019 லண்டனில் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வந்த தத்துவமேதை காரல்மார்க்ஸ் கல்லறையை இனந்தெரியாதோர் சேதப்படுத்தியுள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த புரட்சிகர தத்துவமேதை காரல் மார்க்ஸின் கருத்துக்கள் கம்யூனிசத்தை அடிப்படையாக கொண்டவை. இவர் கடந்த 1849-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேறி தங்கியிருந்த நிலையில் 1885-ம் ஆண்டு 64-வது வயதில் மரணமடைந்திருந்தார். இதனையடுத்து வடக்கு லண்டனில் உள்ள கல்லறை அங்கு நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருவதுடன் பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மார்க்ஸ் கிரேவ் டிரஸ்டுக்கு சொந்தமான இந்த கல…
-
- 0 replies
- 571 views
-
-
- 30.10.11 ஹாட் டாபிக் அழுகை, வருத்தம், கெஞ்சல், ஆறுதல் என உணர்ச்சிகரமாக நடந்து முடிந்துள்ளது கருணாநிதி-கனிமொழியின் மூன்றாவது சிறைச் சந்திப்பு. இந்தமுறை கொஞ்சம் பிடிவாதமாக, மகளுடன்தான் சென்னை திரும்புவேன் என டெல்லியிலேயே தங்கியிருக்கிறார் கருணாநிதி. உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை சந்தித்த இறுகிய முகத்துடன், கடந்த 21-ம் தேதி மாலை கனிமொழியை சந்திக்க டெல்லி சென்றார் கருணாநிதி. அவருடன் து ணைவி ராஜாத்தி அம்மாளும், பேரன் ஆதித்யாவும் சென்றனர். வழக்கமாக தங்கும் ‘லீலா பேலஸ்’ நட்சத்திர விடுதியில்தான் தங்கினார். டெ…
-
- 3 replies
- 2.8k views
-
-
'ஜமால் உடல் எரிக்கப்பட்டுவிட்டது' Published : 04 Mar 2019 17:55 IST Updated : 04 Mar 2019 17:55 IST ஜமால் கஷோக்ஜி - Getty Images ஜமால் கஷோகி உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி இல்லத்தில் எரிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், ''மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கும் அல்- ஜசிராவின் விசாரணையில் சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல் துருக்கியில் உள்ள சவுதி தூதரக அதிகாரி வீட்டில் எரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், இறுதியில் உண்மை கண்டறியப்பட…
-
- 0 replies
- 506 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி வியட்நாம் பதவி, பாங்காக்கில் இருந்து 13 ஏப்ரல் 2024, 15:38 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள காலனித்துவ கால நீதிமன்றத்தில், ஒரு அதிசயக் காட்சி அரங்கேறியது. அப்போது நீதிமன்ற அறை முழுவதும் ஒரு பெயர் எதிரொலித்தது. அது ட்ரூங் மை லான். வியட்நாமின் மிகவும் பரபரப்பான வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, உலகின் மிகப்பெரிய வங்கி மோசடிகளில் ஒன்றைத் திட்டமிட்டதற்காக செவ்வாயன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட 67 வயதான வியட்நாமிய ரியல் எஸ்டேட் அதிபரின் சுரண்டல்களை வெளிப்படுத்தியது. அத்தகைய வ…
-
- 0 replies
- 475 views
- 1 follower
-
-
பாலின சமத்துவம்: 129வது இடத்தில் இந்தியா! உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவக் குறியீட்டில் இந்தியா 129வது இடத்தை பிடித்துள்ளது. பொருளாதாரம், கல்வி, ஆரோக்கியம், அரசியல் பங்களிப்பு ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில் உலகப் பொருளாதார அமைப்பு, பாலின சமத்துவத்தை மதிப்பீடு செய்து வருகின்றது. அந்தவகையில் 146 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 129வது இடம் கிடைத்துள்ளது. அதேசமயம் குறித்த பட்டியலில் முதல் 5 இடங்களையும் முறையே ஐஸ்லாந்து, ஃபின்லாந்து, நோர்வே, நியூசிலாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. மேலும் 146 ஆவது இடத்தில் சூடான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1387601
-
- 0 replies
- 259 views
-
-
பிரான்ஸ் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்.. அதிபர் மக்ரோனின் கட்சி மரண அடி வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டபடியுள்ளன. அதேவேளை பிரான்ஸ் தேசியவாத வலது சாரிகள் அமோக வெற்றிகளை பெற்று வருகின்றனர். ஏலவே அமெரிக்காவில் பைடனின் உளறல் தேர்தல் பேச்சு அவரின் வெற்றியை கேள்விக்குறியாக்கிவிட்டுள்ள நிலையில்.. மேற்குலக புட்டின் எதிர்பாளர்கள் நடப்பு தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டு வரும் நிலையே காணப்படுவதோடு.. தேசியவாதம் எழுச்சி பெற்று வருகிறது. https://www.bbc.co.uk/news/live/cn087x77g1dt
-
-
- 11 replies
- 942 views
- 1 follower
-
-
வாஷிங்டன்: பாரசீக வளைகுடா கடல் பகுதிக்கு, அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த இரு விமானம் தாங்கி கப்பல்கள் விரைகின்றன. இதனால், அப்பகுதியில் பதட்டமான நிலைமை நிலவி வருகிறது. ஹோர்முஸ் நீரிணையில் போர்ப் பயிற்சி மேற்கொண்ட கையோடு, அப்பகுதிக்கு அமெரிக்காவின் போர்க் கப்பல் இனி வரக்கூடாது என, ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், பாரசீக வளைகுடா கடல் பகுதிக்கு, அமெரிக்க கப்பல் படையைச் சேர்ந்த யு.எஸ்.எஸ்., கால் வின்சன் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் விரைந்துள்ளது. ஏற்கனவே, வளைகுடா கடல் பகுதியில் யு.எஸ்.எஸ்., ஜான் ஸ்டென்னிஸ் என்ற போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அலுவலக அதிகாரி கேப்டன் ஜான் கிர்பி கூறுகையில், "இது ஏற்கனவே திட்டமிடப…
-
- 2 replies
- 717 views
-
-
ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 1 ஆப்கானிஸ்தானில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெவ்வேறு விதமான தலைப்பாகைகளுடன் பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள். (கோப்பு படம்) ஆப்கானிஸ்தான் நமக்கு அப்படியொன்றும் அந்நியப் பிரதேசம் அல்ல. ஒரு காலத்தில் அதன் ஒரு பகுதி நம் நாட்டை ஆட்சி செய்தவர்கள் கையில் இருந்தது. வேறொரு காலத்தில் இந்தியாவின் சில பகுதிகள் ஆப்கானியருக்கு வசப்பட்டது. பாகிஸ்தான் மட்டும் உருவாகவில்லை என்றால் ஆப்கானிஸ்தான் நமது அண்டை நாடு! துரியோதனனின் மாமன் சகுனியைத் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? அவன் இன்றைய ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தார தேசத்து இளவரசன். ரிக்வேதம் தோன்றியது ஆப்கானிஸ்தானில் என்கிறார்கள். கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட கஜினி முகம்மது …
-
- 11 replies
- 2.3k views
-
-
லண்டன் மேயரை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர்! மூன்று நாள் இங்கிலாந்து விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் லண்டன் வந்தடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் லண்டன் மேயர் சாதிக் கானை ‘எதற்கும் மதிப்பற்றவர்’ எனவும் ‘முட்டாள்’ எனவும் விமர்சித்துள்ளார். சாதிக் கான் லண்டன் மேயராக மிகவும் மோசமான முறையில் பணியாற்றுள்ளார். இங்கிலாந்தின் மிக முக்கிய கூட்டாளியான அமெரிக்காவின் ஜனாதிபதியான எனது விஜயம் தொடர்பாக அவர் மிகவும் முட்டாள்தனமாக விமர்சித்துள்ளார் என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் பதிவு செய்துள்ளார். டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கைகள் தவறானவை எனவும் இங்கிலாந்து அவரை மரியாதையான முறையில் வரவேற்க தேவையில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதியின் இங்க…
-
- 0 replies
- 602 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images இரண்டாவது காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிகக் குறைந்த வேகத்தில் செல்கிறது. 1990களுக்குப் பிறகு சீனாவில் பொருளாதார வளர்ச்சி வேகம் இவ்வளவு குறைவாக இருப்பது இப்போதுதான் என்பதை அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் சீனாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டைவிட 6.2 சதவீதம் வளர்ந்துள்ளது. வளர்ச்சியைத் தூண்டும் வகையில் செலவீடுகளை ஊக்குவித்து, வரிக் குறைப்புகளையும் அறிமுகப்படுத்தியது சீனா. …
-
- 0 replies
- 345 views
-
-
இஸ்ரேலிய பிரதமர் தனது அரசியல் எதிர்காலத்திற்காக யுத்தத்தை முன்னெடுக்கின்றார் - ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிப்பு - இஸ்ரேலில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் Published By: RAJEEBAN 06 OCT, 2024 | 12:45 PM ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டு ஒரு வருடமாகின்ற நிலையில் ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக இஸ்ரேலின் பெஞ்சமின் நெட்டன்யாகு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. காசாவில் தொடர்ந்தும் சிக்குண்டுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக மேலும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஆர்ப…
-
- 0 replies
- 493 views
- 1 follower
-
-
தைமூர் அதிபர் உயிர் தப்பினார் Monday, 11 February, 2008 10:48 AM . டிலி, பிப்.11: கிழக்கு தைமூர் அதிபர் ஜோஸ் ஹார்டாவுக்கு எதிராக நடைபெற்ற கொலை முயற்சியில் அவர் காயங்களோடு உயிர் தப்பினார். . இந்தோனேஷியா அருகே உள்ள கிழக்கு தைமூர் கடந்த 2002 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இந்தோனேஷியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற கிழக்கு தைமூர் அதிபராக ஜோஸ் ரமோஸ் ஹார்டா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு எதிராக போராளிகள் குழு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்குழுவை சேர்ந்த ரெய்னாடோ என்பவர் இன்று காலை அதிபரை கொல்ல முயன்றார். இரண்டு கார்களில் கூட்டாளிகளோடு வந்த அவர், அதிபரின் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதிபரின் பாதுகாவலர…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிரிய தாக்குதல்களில் 130 பேர் பலி சிரியாவில் பல இடங்களில் அரசாங்கப் படைகள் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் சாமானியர்கள் 130 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டிலுள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஹமா மாகாணத்திலுள்ள லாதம்னா நகரத்தில் முதலில் ஷெல் குண்டுகளை வீசிய துருப்பினர், பின்னர் அந்த ஊருக்குள் அதிரடியாக நுழைய முயன்றனர் என்று கூறப்படுகிறது. ஹோம்ஸ் நகரிலும் பல பகுதிகளில் தாக்குதல் நடந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நிறைய சடலங்கள் சிறு டிரக் வண்டிகளில் குவித்து வைக்கப்பட்டிருப்பதையும் சிறு பிள்ளை ஒன்றின் சடலம் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் வீடியோ படம் ஒன்று இணைய தளத்தில் வலம் வந்துகொண்டுள்ளது. ஹோம்ஸ் நகரில் நிறைய பேர் ஒட…
-
- 0 replies
- 283 views
-
-
கனடாவில் 25 வீத பெற்றோர்களுக்கு உணவில்லை – ஆய்வில் அதிர்ச்சி கனடா பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பணவீக்கம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கனடா மக்கள் மோசமான நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நடுத்தர வருமானம் உள்ள மக்கள் குடும்பம் நடத்தவே முடியாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு வங்கிகளிலும் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த சூழலில், அங்குள்ள மக்களிடம் சர்வதேச தொண்டு நிறுவனமான சால்வேஷன் ஆர்மி ஆய்வு நடத்தி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில், 25 சதவீத கனடா பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான உணவளிப்பதற்காக தங்கள் உணவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்…
-
-
- 9 replies
- 731 views
-
-
ஒஸ்கார் பிறிஸ்டோரியஸ் மீது கொலைக் குற்றச்சாட்டு நிரூபணம் ஒலிம்பிக் பதக்கம் வென்ற தென்னாபிரிக்க தடகள வீரரான ஒஸ்கார் பிறிஸ்டோரியஸ் வேண்டுமென்றே தனது நண்பியைக் கொலை செய்தார் என்று தென்னாபிரிக்க மேன்முறையீட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தனது நண்பியான ரீவா ஸ்டீன்கம்பை, பூட்டப்பட்டிருந்த கதவினூடாக பிறிஸ்டோரியஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் உள்நோக்கமற்ற கொலையையே புரிந்தார் என தீர்ப்பு வழங்கப்பட்டு, ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், ஒரு வருட சிறைத்தண்டனையின் முடிவின் பின்னர் அவர் தற்போது வீட்டுக் காவலில் உள்ளார். …
-
- 0 replies
- 708 views
-
-
கொடுமையிலும் கொடுமை : இனி ஐ.எஸ். தீவிரவாதிகள் பாலியல் அடிமைகளை இப்படிதான் நடத்த வேண்டுமாம்! உலகையே மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பாலியல் அடிமைகளாக ஏராளமான பெண்களை பிடித்து வைத்திருக்கிறது. சிரியா மற்றும் ஈராக்கில் சில பகுதிகளை ஆக்கிரமித்து தனி ராஜ்ஜியம் நடத்தும் ஐ.எஸ். இயக்கம் பெண்களை படுத்தும் பாடு சொல்ல முடியாது. இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ராக்கா மற்றும் மொசூல் நகருக்குள் சென்று பெண்களை பிடித்து கூண்டு வைத்த வண்டியில் அடைத்து தங்கள் இருப்பிடத்திற்கு கொண்டு செல்கின்றனர். பெண்களை போதை பொருளாகவே கருதும் இந்த இயக்கம் தற்போது பாலியல் வன்கொடுமைக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து பட்டியல் வெளியிட்டுள்ளது. அதனை படிக்கும் போதே மனம் பதறுகிறது.…
-
- 4 replies
- 639 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஷியா மதகுருவுக்கு சவுதி மரண தண்டனை நிறைவேற்ற, மேலோங்கியது இரானின் ஆத்திரம்! ராஜீய உறவுகளைத் துண்டித்து இரானிய அதிகாரிகள் வெளியேற சவுதி விதித்தது காலக்கெடு! - இஸ்லாமிய அரசுக்கு எதிரான கடும் சண்டை நடக்கும் இராக்கின் ரமாடி நகரில் பிபிசி! போர் முன்னரங்கிலிருந்து மக்கள் நிலை குறித்து நேரடித் தகவல்! - நடக்கவே முடியாமல் போனாலும், உள்ளத்து உறுதியால் அக்ராவில் சக்கரம் கட்டிக்கொண்டு பந்து விளையாடும் போலியோ பாதித்தவர்கள்!
-
- 0 replies
- 452 views
-
-
[size="5"]ஜப்பானில் நில நடுக்கம்[/size] [size=2]ஜப்பானில் இன்று (18.09.2012) அதிகாலை 4.30 மணியளவில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. ஹோன்சு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அப்பகுதியில் வீடுகள் குலுங்கின. அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியுடன் கண் விழித்தனர். [/size] [size=2]நில நடுக்கம் ஏற்பட்டதை அறிந்ததும் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக சீன பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்கடலில் 40 கி.மீட்டர் ஆழத்தில் உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. [/size] [size=2]அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இங்கு 6.4 ரிக்டர் அளவில் பசிபிக் கடற்கரையில் உள்ள மொரியோகோவில் 31…
-
- 0 replies
- 411 views
-
-
தென்சீனக் கடல்- சீனாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக வியட்நாமில் போராட்டம் ஹனோய்: தென்சீனக் கடலில் வியட்நாம் கடற்பரப்பில் உள்ள தீவுகளுக்கு சீனா உரிமை கோரி வருவதைக் கண்டித்து வியட்நாம் தலைநகர் ஹனோயில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்சீனக் கடற்பரப்பில் உள்ள தீவுகள் அனைத்தும் தமது நாட்டுக்கே சொந்தம் என்கிறது சீனா. ஆனால் இந்தோனேஷியா, வியட்நாம், புருனே போன்ற நாடுகள் தங்களுக்கும் அந்த தீவுகள் சொந்தம் என்று உரிமை கோரி வருகின்றன. இந்நிலையில் வியட்நாமுக்கு சொந்தமான கடற்பரப்பில் எண்ணெய் அகழாய்வுப் பணியை மேற்கொள்ளப் போவதாக சீனா அண்மையில் அறிவித்திருந்தது. இதற்கு வியட்நாம் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து சீனாவின் அத்துமீற…
-
- 1 reply
- 533 views
-