உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26859 topics in this forum
-
அவுஸ்திரேலிய கடற்கரையில் 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில், குறித்த திமிங்கிலங்கள் நேற்று (25) காலை கரை ஒதுங்கியுள்ளன. இவ்வாறு கரை ஒதுங்கிய திமிங்கிலங்களைக் காப்பாற்றுவதற்கு, கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கரை ஒதுங்கிய 26 திமிங்கிலங்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய திமிங்கிலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/300286
-
- 0 replies
- 377 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மிட்சுகோ டோட்டோரி கட்டுரை தகவல் எழுதியவர், மரிகோ ஓய் பதவி, வணிகச் செய்தியாளர் 33 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸின் (JAL) புதிய தலைவராக மிட்சுகோ டோட்டோரி (Mitsuko Tottori) நியமிக்கப்படார். அவரது நியமனம், அந்நாட்டின் பெருநிறுவனத் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜப்பான் ஏர்லைன்ஸின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டோட்டோரியின் வாழ்க்கைப் பயணம் உத்வேகமானது. ஆரம்பத்தில் ஒரு சிறிய அளவிலான விமான நிறுவனத்தில் கேபின் குழு உறுப்பினராக (விமானப் பணிப்பெண்ணாக) அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது ஜப்பான் ஊடகங்கள் டோ…
-
- 1 reply
- 299 views
- 1 follower
-
-
யூத மாணவர்களும் பங்கெடுப்பு அதிரும் அமெரிக்கப் பல்கலைகள். சுதந்திரப் பலஸ்தீனம் உருவாக்கப்படவேண்டும். பலஸ்தீனர்களின் வளங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி, அமெரிக்காவில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. பல்லாயிரம் யூத மாணவர்களின் பங்கெடுப்புடன் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் இந்தப் போராட்டங்கள் உலகின் கவனத்தை வெகுவாகவே ஈர்த்துள்ளதுடன், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் அமெரிக்க அதிபர் பைடனின் அரசாங்கத்துக்கு கனதியான அழுத்தத்தை வலியுறுத்தி வருவதாகவும் சொல்லப்படுகின்றது. அமரிக்காவின் கொலம்பிய பல்கலைக்கழகத்துக்கு முன்பாகவும், நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லொஸ் வெகாஸ் பல்கலைக்கழகங்களுக்கு முன்பாகவும் இடைத்தங்கல் மு…
-
- 1 reply
- 450 views
-
-
மாலைதீவு நாடாளுமன்றத் தேர்தலில், சீன ஆதரவாளரான மொய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று வரலாறு படைத்திருக்கின்றது. மொய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள இந்த இமாலய வெற்றி மாலைதீவுக்குள் மொய்சுவின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதுடன், பிராந்திய இயக்கவியலில் ஒரு முக்கியமான மாற்றத்தை நிகழ்த்தும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மாலைதீவு இந்தியாவின் ஆதிக்கத்திலிருந்து வெளியேறி சீன நிலைப்பாட்டில், பயணிப்பதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர் என்பதை வெளிக்காட்டும் வகையில் இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (ச) https://newuthayan.com/article/…
-
- 1 reply
- 492 views
-
-
அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது - அமெரிக்க அதிகாரிகள் தகவல் Published By: Rajeeban 25 Apr, 2024 | 10:36 AM அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை ரஸ்ய படையினருக்கு எதிராக உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச்சில் அமெரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கிய உக்ரைனிற்கான பாதுகாப்பு உதவியின் ஒரு பகுதியான இந்த ஏவுகணைகள் இந்த மாதமே உக்ரைனை சென்றடைந்துள்ளன. இந்த ஏவுகணைகளை ஆகக்குறைந்தது ஒரு தடவையாவது உக்ரைன் பயன்படுத்தியுள்ளது - கிரிமியாவில் நிலை கொண்டுள்ள படையினருக்குஎதிராக…
-
-
- 3 replies
- 471 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ் பார்ட்ரிட்ஜ் பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனுக்கான 61 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான இராணுவ நிதியுதவியை அமெரிக்க அளிக்கவுள்ளது. இதன் மூலம் யுக்ரேன் எந்த மாதிரியான ஆயுதங்களை பெறப் போகிறது? ரஷ்ய ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் யுக்ரேன் முயற்சிக்கு இது எப்படி கைகொடுக்கும்? வான் பாதுகாப்பு அமைப்புகள், நடுத்தர முதல் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகள் ஆகியவை யுக்ரேனுக்குத் தேவையான மிக முக்கியமான ஆயுதங்கள் ஆகும். இந்த மூன்று ஆயுதங்களையும் வாங்கவே அமெரிக்காவின் நிதியுதவி பயன…
-
-
- 15 replies
- 1.4k views
- 1 follower
-
-
சித்திரவதை குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை (Deshabandu Tennakoon) சந்தித்ததற்காக கனேடிய (Canada) பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றின் செய்தியின்படி, இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பீல் பிராந்திய பொலிஸ் தலைவர் நிஷான் துரையப்பா (Nishan Duraiappah), டிசம்பர் 29, 2023இல் தலைநகர் கொழும்பில் (Colombo) உள்ள பொலிஸ் தலைமையகத்தில் இலங்கையின் மூத்த அதிகாரிகளுடன் சீருடையுடன் இருந்ததை காட்டியுள்ளது. புகைப்படங்களில் இருந்த சட்ட அமுலாக்க அதிகாரிகளில் ஒருவரான இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு, ஒரு நபரை "இரக்கமின்றி" தாக்கியதற்காக, இலங்கை நீதிமன்றம் ஏற்கனவே …
-
-
- 16 replies
- 1.4k views
-
-
ஜெர்மனியில் சீனாவுக்கு உளவு பார்த்த 3 பேர் கைது Posted on April 23, 2024 by தென்னவள் 20 0 ஜெர்மனியின் டஸ்ஸல்டோர்ப் நகரில் வசித்து வந்த தம்பதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். பின்னர் ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் அவர்கள் போர்க்கப்பல்களின் எந்திரங்கள் தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் செய்தனர். இதற்கிடையே சீன பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒருவருடன் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஜெர்மனி ராணுவ தொழில்நுட்பங்களை அவருக்கு அறிவித்தனர்.இதனையடுத்து சீனாவுக்கு உளவு பார்த்ததாக அந்த தம்பதி உள்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஷியாவுக்கு உள…
-
- 0 replies
- 466 views
-
-
ஆப்கானிஸ்த்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியபோது நடந்த படுகொலைகளில் அரைவாசிக்கும் அதிகமானவை அமெரிக்க வீரர்களால் நடத்தப்பட்டவை 2021 ஆம் ஆண்டு ஆவணியில் அமெரிக்கப்படை அவசர அவசரமாக ஆப்கானிஸ்த்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த பொழுது, அவர்களுடன் பணியாற்றிய ஆப்கானியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் அமெரிக்கப் படைகளுடன் விமானம் ஏறித் தப்பித்துக்கொள்ள காபூல் விமான நிலையத்தைச் சுற்றி முற்றுகையிட்டு நின்றனர். இந்தச் சனக்கூட்டத்தை அவதானித்த ஐஸிஸ் பயங்கரவாதிகள், மக்கள் கூட்டத்திற்கு நடுவே தற்கொலைத் தாக்குதல் ஒன்றினை நடத்த பலர் கொல்லப்பட்டார்கள். இவர்களுள் 13 அமெரிக்கத் துருப்பினரும், 170 ஆப்கானியர்களும் அடங்கும். இத்தாக்குதல் குறித்த ஆ…
-
- 1 reply
- 246 views
-
-
Published By: RAJEEBAN 24 APR, 2024 | 11:01 AM அமெரிக்காவின் பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கொலம்பிய பல்கலைகழகம் வகுப்பறை கற்றல் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது. நியுயோர்க் பல்கலைகழகத்திலும் யால் பல்கலைகழகத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை அமெரிக்காவின் பல பல்கலைகழகங்கள் ஹமாசிற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்தினால் உருவாகியுள்ள பதற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. கொலம்பிய பல்கலைகழகத்தின் வெளியே முகாமிட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆர்ப…
-
-
- 24 replies
- 1.2k views
- 1 follower
-
-
போரில் 5 இலட்சம் இராணுவ வீரர்களைப் பறிகொடுத்த உக்ரேன். ரஷ்யா உடனான போரில் உக்ரேன் இதுவரை 5 இலட்சம் இராணுவ வீரர்களை பறிகொடுத்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் இராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு கருத்துத் தெரிவிக்கையில் ”போர் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை உக்ரேன் இராணுவமானது சுமார் 5 லட்சம் இராணுவ வீரர்களை இழந்துள்ளன. அத்துடன் உக்ரேன் இராணுவத்தின் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரோன்கள், 1,000 ஏவுகணைகள், சுமார் 900 விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களை ரஷ்யா அழித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.…
-
- 4 replies
- 717 views
-
-
நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு பிரித்தானிய நாடாளுமன்றம் அங்கீகாரம்! பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவாண்டா நாட்டுக்கு அனுப்புவது குறித்தான, ருவாண்டா நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்மூலம், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள், இன்னும் 10 முதல் 12 வாரங்களுக்குள் விமானம் மூலம் ருவாண்டா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்கள். இதனை செயற்படுத்துவதற்காக பிரித்தானிய அரசாங்கம், வாடகை விமானங்களை ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும், இவ்வாறு சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை அனுப்பி வைக்க தடுப்புக்காவல் இடத்தை அதிகரித்துள்ளதுடன், வழக்கறிஞர்களையும்…
-
- 0 replies
- 335 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அல்ஹரேத் அல்ஹாப்ஷ்னேஹ் பதவி, பிபிசி அரபு சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலிய ராணுவத்தில் உள்ள யூத பழமைவாத படைப் பிரிவான நெட்ஸா யெஹூதா (Netzah Yehuda) என்ற படைப்பிரிவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கத் திட்டமிடுவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதற்கு இஸ்ரேலிய அரசியல்வாதிகள் கோபமாக எதிர்வினையாற்றியுள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏக்சியோஸ் (Axios) செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு அமலுக்கு வந்தால், …
-
- 2 replies
- 614 views
- 1 follower
-
-
அமெரிக்க குடிமகனான இளவரசர் ஹாரி 20 Apr, 2024 | 03:40 PM பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அரியணையில் ஐந்தாவது இடத்தில் உள்ள இளவரசர் ஹாரி தன்னை ஒரு அமெரிக்க குடிமகன் எனக் கூறியுள்ளார். பிரித்தானிய மன்னரான சார்ல்ஸின் மகனான ஹாரி, 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்திருலிருந்து தனது குடும்பத்துடன் வெளியேறினார். தற்போது, அமெரிக்காவில் கலிபோர்னியாவில் மனைவி மேகன் மார்க்கல், குழந்தைகள் ஆர்ச்சி, லில்லிபெட் ஆகியோருடன் வசித்து வருகிறார். 2019 இல் அமெரிக்காவில், `Travalyst' என்றொரு பயணம் சார்ந்த நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். அந்தச் சமயத்தில், ஹாரி அந்த நிறுவனத்தின் ஆவணங்களில் தனது வ…
-
- 5 replies
- 600 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குவாங்சி மாகாணத்தில் ஒரு கட்டிடம் இடிந்து விழும் காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், மேட் மெக்ராத் பதவி, சுற்றுசூழல் செய்தியாளர் 20 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் பெரிய முக்கியமான நகரங்களில் பாதி, பூமிக்குள் புதைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீர் பெரியளவில் சுரண்டப்படுவதும், வேகமாக நகரமயமாக்கம் செய்யப்பட்டு விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுவதும் பூமியின் நிலைத்தன்மையை பாதிப்பதால், நிலப்புதைவு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். சில நகரங்கள் வேகமாக பூமிக்குள் புதைந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 715 views
- 1 follower
-
-
கென்யாவில் இராணுவ ஹெலிகொப்டர் நடுவானில் வெடித்துச் சிதறிய விபத்தில் இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எல்கியோ மராக்வேட் என்ற பகுதியிலிருந்து இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று நைரொபி நோக்கி கிளம்பியுள்ளது. அதில் பிரான்சிஸ் ஒமோண்டி ஒகோலா என்ற கென்யா நாட்டு இராணுவ தளபதி உட்பட 12 பேர் பயணித்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி நேற்று மதியம் 2.20 மணியளவில் அந்த விமானம் கிளம்பியது. ஆனால், கிளம்பிய சற்று நேரத்திலேயே அந்த ஹெலிகொப்டர் நடுவானில் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இந்த விபத்தில் ஒகோலா உட்பட 10 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக …
-
- 1 reply
- 368 views
- 1 follower
-
-
ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன. …
-
- 3 replies
- 489 views
-
-
ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
-
-
- 10 replies
- 999 views
- 1 follower
-
-
கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக …
-
- 3 replies
- 379 views
-
-
இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC
-
-
- 20 replies
- 1.7k views
- 1 follower
-
-
அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை …
-
-
- 42 replies
- 2.9k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினை…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
18 ஏப்ரல் 2024, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனில் ரஷ்ய ராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கை இப்போது 50,000ஐ கடந்துவிட்டதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்யா இரண்டாவது ஆண்டிலும், இறைச்சி அரவை (Meat Grinder) உத்தி என்றழைக்கப்படும் அதன் தாக்குதல் உத்தியின்படி – அதாவது யுக்ரேனிய படைகளை வலுவிழக்கச் செய்வதற்காக கூட்டம் கூட்டமாக ராணுவ வீரர்களை களமிறக்கும் ரஷ்யாவின் உத்தி – பல ராணுவ வீரர்களை போருக்கு அனுப்பியது. அதன் விளைவாக ஏற்பட்ட ரஷ்ய வீரர்களின் இறப்புகள் முதல் ஆண்டைவிட தற்போது கிட்டத்தட்ட 25% அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. பிபிசி ரஷ்ய சேவை, சுயாதீன ஊடக குழுவான மீடியாசோனா மற்றும் தன்னார்வலர்கள், பிப்ரவரி …
-
- 2 replies
- 647 views
- 1 follower
-
-
கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது! கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378752
-
-
- 12 replies
- 1.3k views
-
-
ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்! உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் 3.2% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறது என்றும் இது பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட கணிசமாக வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேவேளை சர்வதேச நாணய நிதியம், எண்ணெய் ஏற்றுமதி “நிலையாக” இருப்பதாலும், உயர்வாக இருப்பதாலும், அரசாங்க செலவினங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என கூறுகிறது. மொத்தத்தில், ரஷ்யப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்கான சிற…
-
-
- 12 replies
- 876 views
-