கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
-
- 0 replies
- 690 views
-
-
-
- 0 replies
- 784 views
-
-
வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை -தீபச்செல்வன் 01 வண்டில் பூட்டி வந்து வயல் வெளியிலிருந்து கோவில் முற்றத்தில் பானை வைத்து பாற்பொங்கலிட்டு விடியும் பொழுதுவரை கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில் முகம் பரப்பியிருக்க ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி இம்முறையும் திரும்பவில்லை குருதியூறி ஓலங்களால் நிரம்பிய இதேபோலொரு வைகாசியில் அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான் சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க இருண்ட தாழைமரங்களுக்குள் கேட்கும் ஒற்றைக்குரல்கள் அவள் குறித்தொரு இரகசியமும் சொல்லவில்லை உடைந்த குரலில் ஆயிரம் கண்கள் கசிய தனித்தலைபவனின் காலடிகளைத் தொடரும் நாரைகளும் மௌனம் கலைத்தேதும் பேசவில்லை 02 …
-
- 1 reply
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்கால் பாடல் – தீபச்செல்வன்… May 18, 2019 நிலத்தைக் கிளர்ந்து உருவியெடுத்த நிறம் வெளுத்த ஆடையினை உடுத்தி உக்கிக் கரையாத எலும்புக்கூடுகளுடன் பேசுமொரு தாயின் உடைந்த விரல்களில் பட்டன தடித்துறைந்த இறுதிச் சொற்கள் சொற்களை அடுக்கினாள் மலைபோல் கையசைத்து விடைபெற்றுக் களம் புகு நாளில் வெகுதூரம் சென்றுவிட்ட பிறகும் படலையிற் கிடந்து பார்த்திருந்தது போல் பறவைகளின் சிறகுகள் அஞ்சலி மலராய் சிதறிய மணல்வெளியிற்தான் இன்னமும் புரண்டு கிடக்கிறாள் இதே கரையிருந்தே சீருடைகளை களைந்து, கடல் வெளியில் போட்டான் கடலில் கொன்று புதைக்கப்பட்டவர்கள் அதை அணிந்து கீழே செல்ல வாயிற்குளிரு…
-
- 0 replies
- 1k views
-
-
- சோதியா
-
- 7 replies
- 1.7k views
-
-
எஞ்சியுள்ள நாட்களுக்குள் எங்கள் போராட்டமும் வாழ்வும் பற்றி எழுத உட்க்கார்ந்தால் துக்க தினமாகும். உள்ளமும் உயிரும் சோர்ந்து போகிறது. 2009 மே 19ல் இருந்து முயன்று ஆறு மாதங்களாக எழுத முயன்று இறுதியில் 2009 டிசம்பரில்தான் என்னால் “தோற்றுப் போனவர்களின் பாடல்” அஞ்சலியை எழுத முடிந்தது. மே 19 என்னைபோலவே பல லட்சம் மக்களை ஆழுமைகளை உடைத்து நிரந்தர விரக்தியுள் முடக்கிய கரிநாளாகும். இருக்கிற கொஞ்ச நாட்களில் நான் சில விடயங்களை எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லவேண்டும் என நினைக்கும்போதெல்லாம் விரக்தியில் மனசு நொருங்கிப்போகிறது. வெளியில் இருந்து பார்கிறவர்கள் நினைக்கிறதுபோல வன்னியில் விவாதங்களேயற்ற சொல்வதைச் செய் என்கிற சூழல் எல்லா மட்டங்களிலும் நிலவியது என்பது உண்மையில்லை. முஸ்லிம்கள்…
-
- 0 replies
- 770 views
-
-
“Happy Birthday” என்ற ஆங்கிலப் பாடலுக்கு பதில் தமிழில் மனதார வாழ்த்தும் வரிகளைக் கொண்ட இந்த தமிழ் பிறந்தநாள் பாடலை இனி பயன்படுத்துவோம். நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்.! வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும்.! அன்பு வேண்டும்.! அறிவு வேண்டும்.! பண்பு வேண்டும்.! பரிவு வேண்டும்.! எட்டுத்திக்கும் புகழ வேண்டும்.! எடுத்துக்காட்டு ஆக வேண்டும்.! உலகம் பார்க்க உனது பெயரை நிலவுத் தாளில் எழுத வேண்டும்.! சர்க்கரைத் தமிழள்ளித் தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம் பிறந்த நாள் வாழ்த்துகள்.! பிறந்த நாள் வாழ்த்துகள்.! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.!
-
- 1 reply
- 1.5k views
-
-
ஈழத்து எழுத்தாளர்களில் கைக்கூ ரகக் கவிதைகள் அதிகம் எழுதுபவர்கள் இல்லையென்ற ஓர் கருத்தை ஓர் இணையத்தளத்தில் பார்த்தேன், ஏன் அதை முயற்சித்துப்பார்க்கக்கூடாது என்ற ஓர் முயற்சி இது.... எனது முதன் முதல் கைக்கூ கவிதைகள் சில... துரோகிகள் உரமிட்டு நெல் விதையிட்டு பார்த்திருந்த ஓர் விளை நிலத்தில் விளைச்சலைப் பாழ்படுத்த முளைத்த சில முட் செடிகள்....! --------------- பெண்புலிகள் அவலம் துப்பாக்கி காட்டி துரத்திய மிருகத்தின் வாயில் துர்ப்பாக்கியமாய் இன்று அவளின் முலைக்காம்புகள்... ------------- பெண்ணின் விழிகள் உடல்காயம் தராமல் உள்ளிருக்கும் இதயத்தை குளிர்விக்கும் அல்லது கூறுபோடும் இரு மந்திர வாள்கள்....
-
- 16 replies
- 161.2k views
-
-
Tribute to the profound personality who created Ariviyalnagar University Complex - தமிழை ஏந்திய திருமகனார் - தடங்களை வரிக்கும் பெருங்கவிதை! ******-*****-******-******-******-*****-****** தாயகத்துப் பயணத்திலே வழித்துணையாய் வாழ்ந்தவன் தலைமகனுக்கோர் அண்ணனாகி தனித்துவனாய் நின்றவன்!. கருத்தினிலே கண்ணியத்தை குருத்தினிலே கண்டதனால் உருத்துடனே உத்தமனின் உறவுமாகிக் கொண்டவன்! பெருத்தவோர் வங்கியை அழுத்தமாய் ஆண்டதால் பொருத்தமாய்ப் பொறுப்பினை விருத்தமாய்ப் பெற்றவன்! நிதித்துறை என்றவோர் நிகருயர் அலகினை மதிப்புடன் ஆண்டிடும் பொறுப்பினைப் பெற்றவன்!. இரண்டு பவுண் தங்கத்தினால் திரண்டு வந்த பங்களிப்பால் இருண்ட எங்கள் கிழக்கினுக்கோ…
-
- 0 replies
- 710 views
-
-
ஈழக் கவிஞனின், உள்ளத்தின் ஈரமும்.. இனத்தின் வலியின் ஆழமும்... புரியும், இக் கவியை கேளுங்கள். ஈழக் கவிஞர் கு.வீரா.
-
- 2 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 252 views
-
-
முடிவின்றி தொடரும் இந்த அவல நிலை என்று மாறும் ??
-
- 0 replies
- 890 views
-
-
இன்று கனடாவில் குடும்ப தினம் நன்றி தர்சினி.(CMR)
-
- 1 reply
- 1.1k views
-
-
சனி மாற்றம் நல்லதென்று சாதகத்தில் சொல்லக்கேட்டு பாதகமில்லையென்று பறந்தாயன்று பனி நாடு ஒன்றுக்கு கடன் பட்ட பணத்தை திருப்பியுடன் தருவேனென உடன் பட்டுப்போயங்கு உழைப்புத் தேடினாய் தமிழ் மட்டும் தெரிந்த நீ திடங்கொண்டு மட்டும் திக்கிதிக்கியொரு மொழியை தினமொன்றாய் விழுங்கி கைப்பாசையோடு முன் ஒரு காலத்தை தொடங்கி நின்றாய் சறங்கட்டி வெறும் மேலில் தண்ணிவார்க்கும் உனக்கு பனங்கட்டி போல் அளவில் பனிவிழும் தேசத்தில் அடங்கிப்போய் ஆடைக்குள் ஆள் மாறலானாய் வெண்கட்டி வயல்களாய் வீதியெங்கும் குவிந்த பனிக்கட்டி சறுக்கி பழுவில் அடிபட்டால் சுடுதண்ணி வைத்து ஓத்தித் தடவுதற்கும் ஒருவரும் கிடையாது அப்புவின் பனந்தோப்புள் அதிகாலை போய்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
கண்ணீரை வரவழைக்கும் வீராவின் கவிதை
-
- 0 replies
- 1.1k views
-
-
காலைக் கடிக்கமுன் கையைபலமாகக்கடித்தது புதுச்செருப்பு @ நித்தம் போனபோதும் முகம் சுழிக்கவில்லை மணிமுள் @ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 1.3k views
-
-
கடல்நாகம் சடை விரிக்கும் காட்சியினை இரசித்தபடி கண்ணாடி மணல்வெளியில் கால் புதைய நடக்கவேண்டும்
-
- 45 replies
- 7.6k views
-
-
இன்றைய மது வ.ஐ.ச.ஜெயபாலன் . (கவிதைக்கு முன்னம் இடம்பெறுகிற இந்த முன்னுரையின் சாரம்சம். ``என் கலைஞானம் பெண்கள் தந்த வரம். நான் இன்று உயிரோடு இருப்பது நான்கு இனங்களையும் சேர்ந்த எனக்கு தெரிந்த தெரியாதா பலர் நான் வாழ வேண்டுமென நினைத்ததால்தான் சாத்தியமாயிற்று. ``) . இது என்னுடைய முக்கியமான கவிதைகளில் ஒன்று. என்றும் பதினாறான என் வாழ்வுதான் என் கவிதைகள். பாதி மானுடமாகப் படைக்கப் பட்டு பாதி மனசு பாதி அறிவு பாதி அனுபவமென வாழ்கிற என் ஒத்தைக் கண் ஆண்பால் வாழ்வில் எதை முழுமையாக கற்றுக்கொள்ள முடியும்? . ஆனால் பெண்களுக்கு ஒரு அனுகூலமிருக்கு. ஆண்களோடு வாழ்ந்து, ஆண்களைப் பெற்று. ஆன்களைக் கைவிடாமல் வளர்த்து பேணுவதால் ஆண்களின் பாதி உலகை அவர்களால் தரிசிக்க முடியுது. . …
-
- 4 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி கவிஞர் இன்குலாப் நினைவுப் படலத்தில் குருதிக் கோடுகளாய்ப் படர்ந்த கொடிய நாட்கள் அவை வானம் மறுக்கப்பட்ட பறவைகளை நான்கு திசைகளிலிருந்தும் நச்சு அம்புகள் துரத்திய நாட்கள் கலைக்கப்பட்ட கூடுகளிலிருந்து அடைகாக்கப்பட்ட முட்டைகள் உடைந்து சிதற, மண்ணெல்லாம் உதிரக்கொடி படர்ந்த நாட்கள் பறவைகளின் நெஞ்சப்படபடப்பில் காற்றும் நெளிந்து கூகூவெனக் கூக்குரலிட்ட நாட்கள் வேடுவனின் இறையாண்மையில் குறுக்கிடமுடியாதென்று நாக்கைச் சப்புக்கொட்டி பறவைகளின் பச்சைக் கறிவிற்கக் கடைதிறந்த சந்தை வணிகர்களின் பங்கு நாட்கள். கிளிகளுக்கு இரங்குவதாய் அழுத பூனையொன்று ஒரு சிட்டு…
-
- 0 replies
- 730 views
-
-
புலியென உறுமும் பெருந்தீ நாரை தலைகுனிந்திருக்கும் எல்லாப் பூக்களும் சிவக்கும் ஒரு பறவையாய் அசையும் நிலத்திற் புரள்வாள் தாய் வானம் மண்ணில் உருகித் தீரும் காந்தளின் விழிகள் கசியும் சிறகுகளில் விளக்குகளை சுமந்து துயில் நிலங்களை வட்டமிடும் பறவைகள் வரையும் தேச வரைபடத்தை எல்லோரும் குரலெடுத்து அழைப்பர் தாய் நிலம் கேட்டு கல்லறைகள் கண் விழிக்கும் வீரத் தலைவனின் பேருரை கேட்க ஒரு புலியென உறுமும் தேசம் மிலாசும் பெருந்தீயாய். ¤ தீபச்செல்வன் http://deebam.blogspot.com/2018/11/blog-post.html?m=1
-
- 0 replies
- 1.2k views
-
-
மாவீரர் நாள் கவிதைகள்!!! (புதுவை இரத்தினதுரை) மாரிமழை பொழியும். மண்கசியும் ஊர்முழுதும் வாரியடித்து வெள்ளம் வான்பாயும் கார்த்திகையில் பூமி சிலிர்த்துப்போய் பேறடையும். துயிலுமில்லச் சாமிகளுக்கான சந்தனநாள் வந்தடையும். மாவீரச்செல்வங்கள் மண்கிழித்து வெளிவந்து சாவீரச்செய்தி சாற்றி உறவுரைத்து பேசும் நாள். விழியில் பொலபொலன்று நீர்த்தாரை வீசும் நாள். தமிழீழம் விடியும் என நம்பி பாடும் நாள். விதைத்த பயிர்கள் நிமிர்ந்தழகாய் கூடும் நாள். தமிழர் குலம் குதிக்கும் நாளிதுதான். குன்றிக் குரல் நடுங்கி குற்றேவல் செய்த இனம் இன்றிந்த நிமிர்வுக்கு இட்ட முதல் விதைப்பு. …
-
- 4 replies
- 14k views
-
-
விழிநீரால் குளிப்பாட்டி எனக்கு விடை தருவாயா? ஆணதாய், பெண்ணதாய் பிம்பங்கூட பேரன்பில் மாய்ந்ததாய் மனதில் தோன்றி ஊரதும், உலகதும் உறைந்தே போக – உன் உறவது மட்டுமே உயிர் மேவுமோ? தோளிலே சாயவே வரத்தைக் கேட்டேன் தோல்வியில் சாயெனச் சாபம் பெற்றேன் வாயது விட்டழா வலிந்த பெண்மை – உனைக் கண்டதும் கண்ணீரில் கரைவதென்ன? நேற்றுவரை மோகித்த கனவு எல்லாம் நெடுந்துயர் தந்ததன்றி வேறு இல்லை ஆற்ற வா…. அன்பே! அருகே நீதான் – அன்றில் ஆற்றாத துயரோடு……. உயிர் போகுமோ? எதையுமே கேட்டதில்லை உன்னிடத்திலே என்னையும் தந்ததில்லை உன் கரத்திலே பிரிவினை மட்டுமே பேறாய் பெற்றேன் – இந்தப் பேதையின் நெஞ்சம் செய…
-
- 20 replies
- 4.8k views
-
-
பயங்கரவாதி -தீபச்செல்வன்.. பனை மரங்களை பிடுங்கி கித்துல் மரங்களை விதைப்பாய் என் பூர்வீக வீடுகளை சிதைத்து இராணுவ முகாங்களை எழுப்பி எனை பயங்கரவாதி என்பாய் ஆலமரங்களை வீழ்த்தி வெள்ளரச மரங்களை நடுவாய் என் ஆதிச் சிவனை விரட்டி புத்தரை குடியேற்றி எனை பயங்கரவாதி என்பாய் எனதுடலை நிர்வாணமாக்கி இராணுவச் சீருடையை போர்த்துவாய் எனது வீரர்களின் நடுகற்களை உடைத்து உனது வெறிச் சின்னங்களை எழுப்பி எனை பயங்கரவாதி என்பாய் பிழையாய் எழுதியென் மொழியை அழித்து உனது மொழியை திணிப்பாய் எனது பாடல்களை அழித்து புரியாத உன் பாடல்களையென் செவிகளுக்குள் சொருகி எனை பயங்கரவாதி என்பாய் எனது நிலங்களை அபகரித்து உனது பெயர்களை சூட்டுவாய் எல்லைகளை மெல்ல …
-
- 0 replies
- 938 views
-
-
முள்ளிவாய்க்கால் பரணி! 01 கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென ஒருவரும் கொல்லப்படவில்லையென யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்பென அவர்கள் கூறினர் ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாமென யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோமென பின்னர் கூறினர் போராளிகளே மக்களைக் கொன்றனரென பின்னர் கூறினர் படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோமென இறுதியில் சொல்லினர் யுத்தம் போராளிகளுக்கு எதிரானதென எமை மீட்கும் யுத்தமென்றனர் மீட்பு என்பது இருதயங்களை கிழித்தலா? மனிதாபிமான யுத்தமெ…
-
- 0 replies
- 909 views
-
-
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் குறிகளை அடையாளம் காட்டும் சிறுமி பள்ளிக்கூடம் செல்ல ஓர் தெருவைக் காட்டவில்லை காவலரணற்ற ஓர் நகரைக் காட்டவில்லை துள்ளித்திரிய ஒரு புல்வெளியையோ ஊஞ்சலாட ஒரு பூங்காவையோ காட்டவில்லை பூர்வீக நிலத்தையும் மூதாதையரின் வீட்டையும் காட்ட முடியவில்லை சிறு அமைதியையோ அச்சமற்ற ஓர் பொழுதையோ காட்டவுமில்லை காட்டினோம் பாதுகாப்பற்ற நிலத்தை அலைகடலையும் எழும் சூரியனையும் காயங்களற்ற ஒரு பொம்மையையும் கிழியாத பூக்களையும் பறவைகள் நிறைந்த வானத்தையும் காட்ட முடி…
-
- 1 reply
- 995 views
-