கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நேற்று கனடாவில் கிரவுண்ட் ஹாக் டே அது குழியில் இருந்து வெளியே தலையை நீட்டி தனது சுதந்திர நாளை எண்ணி போனது குழிக்குள் இன்று நவீன துட்ட கெமுனு தமிழீழ தலைநகரில் அறுபத்தி ஐந்து வருட அவலத்தை தொடருவேன் பண்டைய மன்னர்கள் புறாக்களை பறக்கவிட்டனர் சுதந்திரமாக அந்த பறவை போல நாமும் பறந்திடவேண்டும் எமது மண்ணில்..
-
- 4 replies
- 581 views
-
-
கலைவாணி நீ தந்தாய் எழுத்தாணி..! தலைவணங்கி வேண்டுகின்றேன் துணைவாநீ...!! ஞாலத்தின் ஒளியாகி... ஞானத்தின் வழியாகி... முத்தேவிகளில் முத்தானவளே...! முத்தமிழின் வித்தானவளே...!! தாய்த்தமிழுக்காய் எழுதுகின்றேன் -உனைத் தாயாகத் தொழுகின்றேன்! -என் தயவாக நீயிருந்து - என்றும் நான் தவறாமல் பார்த்துக்கொள்!
-
- 4 replies
- 1.5k views
-
-
''மண்ணை மீட்க யுத்தம் மூட்டு'' தமிழா உனக்கென்ன நாடா....??? கேட்குது சிங்களம் கேடா.... இனி என்ன தமிழா நீ மோடா....??? யுத்தத்தை மூட்டடா போடா.... நாளரை ஆண்டுகள் நீயடா... பேசியே கண்டது என்னடா...??? ஈர் பத்து ஆண்டுகள் மேலடா.... இன்னல்கள் சுமக்கிறோம் நாமடா... எத்தனை பேச்சுகள் நீயடா.... பேசியே போனது பாரடா.... ஆனாலும் இன்றது நீயடா.... கண்டது தீர்வது என்னடா....??? அகதியாய் எம்மவர் தானடா.... அலைகிறார் நித்தமும் பாரடா.... எத்தனை கொலைகள் இன்றடா.... எம் தமிழ் மீதினில் ஏனடா....??? செய்யிறான் சிங்களம் கேளடா..... இனி என்ன …
-
- 4 replies
- 1.3k views
-
-
உன் தோழியின் கல்யாணவீட்டில் தாலிகட்ட உதவிசெய்த உன்னைப் பார்த்தபின் தான் எனக்கும் ஆசை வந்தது தாலிகட்டி கல்யாணம் செய்ய * உன்னோடு கூடவர ஆசையின்றி விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு கூடவர என் ஆசையை வளர்த்தது * நான் முதல்த் தடவை பயணித்த விமானத்தில்த்தான் உன் நினைவுகளை தரையிறக்கிவிட்டு முதன்முதல் உன்னை கனவு காண ஆரம்பித்தேன் * வருசையில் நின்று வாங்கப் போன மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன் மருந்தே இல்லாத காதல் நோயை * உன்னை பலமுறை சந்தித்த போதும் என்னால் உன் மெளனத்தை கலைக்க முடியாமல்ப் போன போதுதான் எனக்கு உதவிசெய்து உறுதிப்படுத்தியது உன் கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று * தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்ட…
-
- 4 replies
- 2.1k views
-
-
நாமொன்று நினைக்க தெய்வம் தானொன்று நினைக்கிறது !! எமக்கும், தமிழ் இனத்துக்கும் தலைவனாக தாயாக நண்பனாக சிறந்த வழிகாட்டியாக இருந்த உத்தமனே உலகத்தமிழரின் சூரியப்புதல்வனே எமை விட்டு எங்கு சென்றாய் ? உனக்கு நிகர் இவ்வுலகில் யாருமே இல்லார் என்று எண்ணியோ உலகமே திரண்டு உன்னை கொன்றோளித்ததொவோ ! மாவீரர் அழிவதில்லை, அவர்கள் காலத்தால் அழியாதவர்கள் என்று எமக்கு கற்று தந்தவன் நீ வருடந்தோறும் நவம்பர் 27 இல் அவர்களுக்கு நீ சுடர் ஏற்றிய பின்பே நாமும் எமது அக வணக்கத்தை செலுத்தினோம் இன்று எமை விட்டு பெரும் பயணம் ஏன் தொடர்ந்தாய்? நீ இன்னமும் எம்முடன் வாழ்வதனாலோ நீ சாகா வரம் பெற்றவன் ஆம் நீ ஒவ்வொருவரினதும் உள்ளத்திலும் அவரவர் இல்லத்தி…
-
- 4 replies
- 1.1k views
-
-
கண்ணெதிரே காண்பவை கானல் நீராய்த் தெரிகிறது மனிதமற்ற மனங்களின் ஆசைகளின் ஓலங்களில் அகப்படும் உயிர்கள் உன்னதம் இழந்து உயிர்வதை பட்டு உழல்வதே வாழ்வாகி உடைந்து நொறுங்கி ஓட்டமுடியாததான ஓர்மத்துடன் ........... நகர்வின் அபிநயங்களில் நல்லவராய் முகம் காட்டி புறத்தே புழுவாய் பேய் முகம் காட்டும் பேடியராய்ப் பலர் பித்தர்களாக்கி எமை பரிதவிக்க வைத்து பரவசம் கொண்டிடுவர் வடிவங்கள் பலவெடுத்து வக்கணையாய்ப் பேசி வஞ்சப் புகழ்ச்சியுடன் வாசனை அற்றவராய் வன்மம் புடைசூழ வஞ்சனையே அவராய் வலிந்த விதியினதாய் வடமிழுக்க முன்னிற்பர் வகை தெரியா மனமே வாழ்வைப் புரிந்திட வண்ணங்கள் அல்ல வாழ்வு ...... மேடுகள் காடுகள் பகை நிறைத்த மாந்தர் பகிர்தலற்ற பாள்மணம் மிகைப்பட அனைத்தும்…
-
- 4 replies
- 706 views
-
-
அம்மா............... இப்பூமியில் நான் விழும் முன்னே, உன் பாசத்தை அறிந்தவன் நானே....அம்மா...! இவ்வுலகம் காணும் முன்னே, என்னை முதலில் அறிந்தவள் நீயே......அம்மா...! உன் கரு அறையின் இருளில் என்னை, நிம்மதியாகவும்,சீறாகாவும், உறங்க வைத்தவள்........நீ அல்லவா.......! அக் கருவில் நான் உட்கி கிடந்தபோதும், எந்த வசதியும் இல்லாத போதும், அக் கருவிலே பாதுகத்தவள் .......நீ அல்லவா......! உன் உயிர் துடிப்பின் தொப்புல் கோடியிலிருந்து...என்னை, உயிரோடு இப்பூமியில் ஈன்றவளே.......என் அன்னயே.....! உன் தூக்கம் துறந்து, என் உறக்கம் தந்தவளே...........என் தாயே......! உன் மடியில் உறங்கும் தருணம், அந்த வானத்தை கொண்டும், இப்பூமியை கொண்டும், அந்த நிலவை கொண்டும், அந்…
-
- 4 replies
- 1.9k views
-
-
-
"என் இறுதி சடங்கில்" "என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது" "ஓய்வு எடுக்க பெட்டியில் வைத்து ஒளி தீபங்கள் சுற்றி வைத்து ஒதுங்கி இருந்து தமக்குள் கதைத்து ஒழுங்கு படுத்துவது எனக்கு தெரிகிறது" "சிறந்த ஆடைகளை தேர்ந்து அணிவித்து சிறப்பான அலங்கார பாடை தருவித்து சிறார்கள் கையில் பந்தம் கொடுத்து சிரிப்பு இழந்து தவிப்பதை பார்க்கிறேன்" "நரம்பு நாடி தளர்ந்து போகையில் நம்மைநாடி நோய் வந்து சேர்கையில் நமக்கு பிடித்தவர் இல்லாமல் போகையில் நல்வரமாய் தான் இறப்பு இருக்குது" "மன்னனாய் பிறந்தாயென்று கர்வம் கொள்ளாதே மன்மத அழகனென்று லீலைகள் செய்யாதே மதுபோதை…
-
-
- 4 replies
- 386 views
- 1 follower
-
-
[size=4]இறைக்க இறைக்க கிணற்றில் மட்டுமல்ல கண்களிலும் நீர் வற்றிப்போயிற்று துயரப்பெருங்கடலில் அலைகளாய் உடல்களற்ற தலைகள் எழுந்தன உறைந்த குருதியை மாலையாக்கிய போலிச் சிங்கத்தின் பிடரி மயிர் சிலிர்த்தது எப்படி? நவீன உலகம் புலியை கொல்ல காட்டை எரித்தது அதனால் அனைத்தும் எரிந்தது போலிச் சிங்கத்தின் பிடரி மயிரும் சிலிர்த்தது [/size]
-
- 4 replies
- 739 views
-
-
-
யார் இவர்கள் மூன்று வயதில் - எனக்கு நல்ல சொக்கை - என்று பெற்றோர் என் கன்னத்தில் முத்தமிட்டார்கள்..... நான் பெரியவளானதும் - என் மாமன் மகன் மாம்பழக் கன்னம் - என்று வர்ணித்துக் கவிபாடினான்..... பதினேழு வயதில் காதல் வசனம் பேசி சகமாணவன் ஒருவன் என்னை முத்தமிட்டான்..... பத்தொன்பது வயதில் - அந்நிய கூலி நாய்கள் - என் உடம்பை பதம் பார்த்து... பின்பு ராணுவ உடையில் - காவல் பேய்கள் தங்கள் தேவைகளை தேகைக்கதிகமாகவெ பூர்த்தி செய்தன.... கெடுக்கப்பட்டவள்....முத்திரைய
-
- 4 replies
- 1.2k views
-
-
மீள் நினைவு கொள்வோம். Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Wednesday, July 11, 2012 கால விதிகளின் கட்டறுத்தெறிந்த வீரத்தின் விலாசங்களோடு வனவாசம் போனவர்களுடன் ஆழுமையின் வீச்சாய் அடையாளம் காட்டப்பட்டவள் நீ. பெண் விதியின் முழுமைகளை நீ பேசிய மேடைகள் பதிவு செய்து கொண்டதோடு நீயொரு பெண்ணியவாதியாய் பெருமை கொள்ளப்பட்டவள். உன்னையும் உனது ஆழுமைகளையும் உச்சத்தில் ஏற்றி எழுதியோரும் உன் குரலில் பதிவு செய்தோரும் எண்ணிலடங்காதவவை.... எழுச்சியின் காலங்களை இப்படித்தான் காலம் கௌரவப்படுத்துவது வரலாறு. வீழ்ச்சியின் பின்னரே யாவும் விழித்துக் கொள்கிறது. அதுவே உனக்கும் உன்போன்றோருக்கெல்லாம் நிகழ்ந்தது. 000 2009 மே, காலச் சூரி…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஒத்தையா பிறந்தவனே பாசமா வளந்தவனே கத்ததை கண்டறிஞ்சு பேர்வாங்கி நடப்பாயா சொத்தையா போனபிள்ளை ஊரிலே பல இருக்கு மந்தையா வளத்தாரே அவர் பெத்தவரா செத்தவரா பதினெட்டு ஆயாச்சு பயிற்சிக்கும் அழைச்சாச்சு மினக்கெட்டு போயிப்போ ஒருவருசம் கழிஞ்சாச்சு தாய்நாடு காப்பதற்கு உன்போல மைந்தர்கள்-அதைத் தொட்டவனின் தலையெடுப்பர் அவரெல்லோ வீரர்கள். அமைதிப் படையாக ஈராக்கு சென்றுவர ஆசையாய் கேட்டாய்நீ பயந்துநான் போனேனே அமெரிக்கன் தனக்காக பலத்தோட ஆக்கிவைச்ச அரசியல் பலிக்களந்தான் பிறர்ஆவி போக்கிவைக்க அவனுக்கு ஒயில் வேணும் கால்மிதிச்சா நிலம்வேணும் சிவனுக்கும் மேலாலை புஸ்சுக்கு பவர்வேணும் கணக்குக்கு சொல்லிவைக்க வானளவு பணம் இருக்கு பிணக்கொன்றை தீர்ப்பதற்கு பிணக்குவியல் த…
-
- 4 replies
- 1.2k views
-
-
"தட்டி வான்" ------------------- 'தட்டி வான்' எங்கள் ஊர் எல்லைகளை தொட்டுச் செல்லும் 'சிற்றி' வான் அச்சுவேலி தொடங்கி ஆவரங்கால் ஊடறுத்து 'குரும்பசிட்டி'க்கு கூடச் சென்று சில்லாலை, பண்டத்தரிப்பில் சிலிர்த்து நிற்கும் 'கொத்தியாலடி' ஆசுப்பத்திரிக்கும் 'கூத்தஞ்சிமா' சந்தைக்கும் அத்தனாசியாரின் 'சித்த' வைத்தியசாலைக்கும் சிறப்பான சேவை செய்யும் காலைப் பொழுது 'தெல்லிப்பளை'யில் 'கரிக்கோச்சி' இரயிலின் வருகைக்காய் 'படலை' ஓரம் பார்த்து நிற்கும் விவசாயிகளின் விளைச்சல்களை சலிக்காமல் சுமந்து செல்லும் இரயிலடி அம்மனையும் 'தவளக்கிரி'முத்துமாரியை…
-
- 4 replies
- 1.8k views
-
-
தலைநிமிர்த்தி எழுந்திடுடா தமிழா தமிழைக்காப்போம் -உடல் தளர்வகற்றி புறப்படுடா தமிழா விடியல் காண்போம்- எழும் தடை தகர்த்திட தோள்கொடுடா தமிழா தமிழீழம் அமைப்போம். நேற்றுவரை வானேறினாய் காற்றாகி களமாடினாய் இன்றேன் போயுறங்குகிறாய் கோழைமகனாடா நீ -மாவீரன் பண்டாரவன்னியன் குலமடா மாற்றுவழி யேன்தேடி அலைகிறாய் ஏற்றடா ஏற்று போர்க்கொடி ஏற்று தோற்றிடில் மார்பில் குண்டை ஏந்து. திசையெட்டும் விடுதலைத்தீ மூட்டினர் தீந்தமிழோடு வாழ்ந்திட தமையீந்தனர் வசைகொட்டியவரை இகழ்கிறாய் -நீ வாழ்ந்திட அவர்புகழை போர்க்கிறாய் முறைகெட்டு பகைமடி அடைகின்றாயே -நீ திறங்கெட்டு போய்விடின் நாயென்றாகும் ஏற்றடா ஏற்று போர்க்கொடி ஏற்று தோற்றிடில் மார்பில் குண்டை ஏந்து. விலை கொண்டா வாங்குவ…
-
- 4 replies
- 672 views
-
-
மே 17 இன் பின்னரான முடிவில் எங்காவது ஒமு முகாமில் நீ அடைந்திருப்பாய் ஆராவது கொண்டு வரும் மொபைலில் தொடர்பு கொள்வாய் இருக்கிறேன்……, என்ற செய்தி வரும் சந்திப்போம் மீண்டுமெனக் காத்திருந்த காத்திருப்பு காலாவதியாகிறது தோழா….. நீண்டநாளின் பின்னர் நேற்றிரவு வந்த அழைப்பில் உன் அக்கா பேசினாள்……. ‚‘அவனைப்பற்றி ஏதும் அறிஞ்சியளோ…..? எங்கினையும் இருந்தா என்ர தம்பி தொடர்பு கொண்டிருப்பான்…. எங்கையிருக்கிறானோ‘‘…..? ஏதாவது தெரியுமோ….? அவளது இனிமைக்குமாறான கதையிலிருந்தும் அம்மாவின் வளமைக்கு மாறான பேச்சிலிருந்தும் நான் புரிந்து கொள்வது….. இல்லையோ நீயென்று அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நம்பத் தொடங்குகிறார்கள்…… அதிகம் கவலையுறுகின்றார்கள் …
-
- 4 replies
- 1.3k views
-
-
மே 18க்கு……! அழைத்தாலா வருவாய்? யார் யாரை அழைப்பது? அழைத்தாலா வருவாய் யார் யாரை அழைப்பது அறியத் தருவாயா ஊரூராய் பிணக்காடாய் உன் உறவும் பிணமாக போனதந்த நாளினிலே எதுவும் கேட்காதே புறப்பட்டு வாவென்று சொல்ல வேண்டுமெனில் வினாவொன்று இருக்கிறது நீ தமிழனா! வெற்றியிலே பங்கேற்று வீரமுடன் வீறுகொண்டாய் வீழ்ச்சியிலே யாரென்று விலகி நிற்பதென்ன காலத்தின் நகர்வுகளோ காட்சிகளாய் விரிகிறது அன்னை மண்ணிருந்து அழகாய் வளர்ந்தவனே உன்னை உருவாக்கி உலகில் வாழவைத்த அன்னை மண்பட்ட அவலம் உரைப்பதற்கு அழைப்பு உனக்கெதற்கு அழைப்பு வேண்டுமெனில் வினாவொன்று இருக்கிறது நீ தமிழனா! நீ தமிழனா இல்லை மனிதனா மனிதம…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஒரு கூதல் மாலை ............. குளிருக்குப் பயந்து ஒதுங்கிய பகலவன். இருட்டின் அரசாட்சி. பனி மூடிய மலைகள் வழிய வழி இல்லை. நாட்கள் விறைத்தபடி. காற்றில் ஈரம் இறுகி பனிப் பாதையாகி, வழுக்கி வழுக்கி தெருவில் திரிவதோ செப்படி வித்தையாய். உடைகள் பாதணிகள் பாரமாய் மனம் அதைவிட கனமாய். என்றாலும் ஓர் இதம் பனியின் உறைதலில். பனி கிழித்து சாணகம் தெளித்து கோலம் வரைய நினைக்கிறேன். நிமிடங்கள் சேமித்து ரசிக்க மறுக்கும் தெருப்பாடகனின் பாடலாய், அவரவர்க்கான அவசர அழைப்புக்களாய் அலுவல்கள். கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள். பூச்சாண்டி மனிதர்கள். பனி ரசித்து பார்வைகள் கண்ணாடி உடைக்கும் படியோடு நடை நிறுத்தும் பூனைக…
-
- 4 replies
- 762 views
-
-
முள்ளிவாய்க்கால் தனில் அழித்திட்டோம் புலிக் குகை கலைத்திட்டம் தமிழ்க்குடி.. எக்காளமிட்டது துட்டகைமுனு வம்சம்..! கலைத்திட்டது தமிழ் குடியல்ல தேன்கூடு.. தமிழ் உலகெங்கும் - அது கட்டுது வதைவதையாய் பெரும் கூடு..! தேடி வந்து அழித்த பகை திகைத்து நிற்கும் தருணங்கள் பல காத்திருக்குது..! வெற்றி முழக்கமிட்ட சிங்களம் விழி பிதுங்க முழங்குது விடுதலைக் கோசம் தமிழ் மாணவர் பாசறையெங்கும்..! செம்மொழியாம் தமிழ் மொழியில் தாய் நிலமாம் தமிழகத்தில் மையம் கொண்டு....! வீழ்த்திவிட்டோம் சோழப் பெருங்கொடியாம் புலிக்கொடி..! மமதையில் நின்ற மகிந்த கூட்டம் முன்னிலையில் பறக்குது மீண்டும் புலிக்கொடி சர்வதேசம் எங்கும்..! உச்சரிக்கக் கூட முடியாது.. பிரிவினை…
-
- 4 replies
- 1.2k views
-
-
கார்த்திகைப் பேரொளியில், விழியோரக் கசிவோடு மீட்பர்களே!..... நீங்கள் விதையான தாய்மடிநோக்கி உமைநாடி அணி வகுத்தோம். பார்த்தொருக்கால் விழிதிறந்து உம் பூத்தமலர் முகங்காட்டி புன்னகைத்துக் கதைபேசி கண்மணிகாள் உறங்குங்கள். நெஞ்சப் பெருவெளியில் நினைவெல்லாம் விக்கிநிற்க அஞ்சாத் தேவர்காள் அகமெல்லாம் நிறைகின்றீர்! வெஞ்சமர்க் களமாடி வேர்மடிக்குக் காப்புடுத்தி காயத்தை மறைத்து கண்மறைத்து கரைந்தோரே! காற்றின் வழி எங்கள் மூச்சின் சுழல்களுக்குள் வீச்செடுத்து உலவுகின்றீர்! உணர்கின்றோம்..... உவக்கின்றோம். கண்ணுணராப் பொருளாக எம்கடிமனதில் உறையும் காவல் தெய்வங்களே! கடுங்கோபங் கொள்ளாதீர்! கண்மீறி வழிகின்ற ஈரத்தின் உப்பினை வடிகட்டி நிறுத்த கண்ணிமைக்குத்…
-
- 4 replies
- 1.6k views
-
-
கஞ்சி குடிக்கும் கனவில் கதறியழும் பதுங்குகுழிகள் நிலங்களை விழுங்கும் சிங்கத்தின் திறந்த வாய்க்குள் எறும்புகள் போல் நுழைந்து போர்முகங்கள் தற்கொலை செய்கிறது ஒருவேளை கஞ்சிக்காய் உயிர் சுமக்கும் கோப்பையில் உச்ச துன்பங்களை அணைத்தபடி உறங்கும் எலும்புக் கூடுகள் தொண்டு நிறுவனங்களும் எட்டாத தூரத்தில் தொலைந்து போனது எலும்புக் கூடுகளில் பட்டினிப் பதாகைகள் ஏந்தியபடி காலில்லாத கைகள் அசைகிறது அழித்து அழித்து ஆனா எழுதிய மண்ணில் உயிர்எழுத்தும் மெய்யெழுத்தும் உயிர் இழந்து கிடக்கிறது கண்ணீர் வெடித்துச் சிதறியபடி ”ஐயோ அறுவான்கள் பல்குழல் அடிக்கிறாங்கள்” மௌனக் குரல்கள் கொதிக்கிறது வல்லினம் மெல்லினம் இடையினம் எல்லாம் வ…
-
- 4 replies
- 1.2k views
-
-
காத்திருக்கு மனசு . நெஞ்சில் நீறு பூத்திருக்கு.. இதயம் வேர்த்திருக்கு நீ வந்து விசிறிவிட்டு போ..
-
- 4 replies
- 1.4k views
-
-
கனவுகள் தோன்றாவிட்டால் ....இரவுகள் அழகுபெறுவதில்லை ....!காதல் தோன்றாவிட்டால் ....மனித பிறவிக்கு அழகில்லை ....!காதலே நீ நீடூடி வாழ்க ...!!!+கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!!கவிதை எண் 01
-
- 4 replies
- 1.9k views
-
-
வா தோழியே .... எல்லோரும் பொறாமை படும் ...... அளவுக்கு நட்பாய் இருப்போம் ...... இப்படியும் நட்பாக இருக்க ..... முடியுமா என்பதை ...... நிரூபிப்போம் .......!!! கையில் முத்தமிட்டால்...... காதலியாகிவிடுவாள் ..... கை கொடுத்து உறவுவந்தால் ..... நண்பியாகிறாள் - நீ நண்பி .......!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
-
- 4 replies
- 22.5k views
-