கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நட்பாய் என்னில் அமர்ந்து காதலாய் என்னில் உறங்கி இன்று கானலான எனது நாட்குறிப்பின் நனைந்து போன பக்கங்கள் கண்ணீரில்.... கடந்த காலத்தின் கசப்பில் மனப்புண்களால் முடமாகித்தானே முதலில் வந்தாய் என் முன்னில்.... எத்தனை இன்னல்களை எனதாக்கி உயிர்பித்தேன் உன்னை ,.. ஆழமாய் காதல்செய் பிரிந்து போனாலும் அவள் அடையும் அளவிலா தண்டனை அது மட்டுமே .. பொன்மொழியாய் உலகிற்கு நீயும் சொல்லி... என் உயிரதனை சிறகாக்கி பறந்து சென்றாய்.... புனிதமான நட்புக்கு கூட ஆண்வர்க்கத்தையே அணுக விடாமல் என் மனதை கல்லாக்கி விட்டு நீயும் காணாமல் போன மாயம் தான் என்னடா ... என் இதயத்தில் நெருடும் புழுக்களாய் …
-
- 27 replies
- 9.4k views
-
-
நாம் என்ன ஊமையா? இந்த நிமிடம் இதே வருசம்.. இமைகளின் மீது....... இரும்பு பறவைகள் .... எரிதிராவகம் வீசி போன நாள்! இந்த நாள்..! சிலுவை சுமந்த ஜீவனின் மடியில்..... சிதைகளாய் எம்மை - ஆக்கிவிட்டுபோன பேரினவாதத்தின் ...... தமிழன் குடல் வெளி எடுத்து.. கும்மி அடித்த நாள்! விலா எலும்பு நோக பெற்றவள் வயிறும் வைரம் என்றும் அவள் கருதிய மகனும் ஒன்றாய் குடல் கிழிந்து செத்தாரே.. உலகமே உனக்கு அது தெரியுமா? நாம் என்ன செய்தோம் இறைவா? நாம் என்ன உனக்கு தீராத பகையா? நெஞ்சு மீது மூட்டிய தீ இன்னும் ஈரம் பாயாமல் ஊரெல்லாம் இருக்கிறதே கொல்லுங்களேன்- எம்மை தொலைந்தோம் நாம் என்று.. யாருக்கும் சொல்லியும் விடுங்களேன்! இருக்கும் ப…
-
- 27 replies
- 3.6k views
-
-
கெந்தி விழையாடிக்கொண்டிருந்த அந்திமாலைப் பொழுதொன்றில் அடிவயிற்றில் வலி கோடு கீறப்பட்டு குந்தவைக்கப்பட்டேன் ஆளாயிட்டாள் அம்மம்மாவின் குரல் அக்கம் பக்கத்து பெடியளோடை அடிச்சுப் பிடிச்சு விழையாடுறதையும் விளக்கு வைச்சா பிறகு வெளியாலை போறதையும் நிப்பாட்டு அம்மாவின் குரல் இருக்கிற பிரச்சனைக்குள்ளை இவளும் குந்திட்டாளா ஒருத்தனிட்டை ஒப்படைக்கிறவரை ஒரே செலவுதான் அப்பாவின் குரல் என் தனிமையை போக்க எவராவது வருவாரா என வாசற்படிவரை வந்தேன் வயசுக்கு வந்த பெட்டைக்கு வாசல்லை என்னடிவேவை அண்ணனின் குரல் அன்று அடிவயிற்றில் தொடங்கிய வலி இதயத்திலேறி இன்று மூளையில் பைத்தியமாக்கி…
-
- 26 replies
- 4.1k views
-
-
உன் எழுத்தில் அம்சம் இல்லை உன் கருத்தில் ஆழம் இல்லை உன் சொல்லில் கூர்மை இல்லை உன் கவியில் உணர்ச்சிகள் இல்லை என்னை நோக்கிய கேள்வி என் பாணியில் போகட்டுமா நான் என்ன பெண்ணு பார்க்கவா போகிறேன் நான் என்ன கிணறு வெட்டவா போனேன் நான் என்ன சானை பிடித்தா தந்தேன் நான் என்ன பிட்டு படமா எடுத்தேன் என்னுள் எழும் இயல்பை உன்னுள் கொன்று புதைக்காமல் என் சமூகத்தின் முன் வீசி நின்றேன் பணம் என்றால் பிடித்து இருப்பார் தமிழ் ஆகிட்டே விலகி போகிறார் விமர்சனம் செய்கிறார் தெளிவெண்ணை கசக்கும் ஆனால் உடலுக்கு நல்லதாம் தமிழும் அப்டியே நான் பாரதி அல்ல பாமரன் .
-
- 26 replies
- 2.1k views
-
-
இழப்பதற்கு எம்மிடம் ஏது இனி இழந்து விட்டோம் பிஞ்சுகளை சீதையிட்ட கண்ணீர் அங்கே இன்னுமா ஆறாய் ஓயவில்லை யார் இட்ட சாபம் அங்கே ஏன் இந்த அவலக்கோலம் வெந்தபுண்ணின் காயங்கள் இன்னும் அங்கே மாறவில்லை சொந்த மண்ணில் தமிழன் வாழ ஏன் அவனுக்கு உரிமையில்லை? இறைவன் படைத்த மண்ணில் தமிழனுக்கு ஏன் இறமையில்லை புத்தனின் பெயரினாலே கொடுமைகள் நடக்குது அங்கே புத்தனும் உயிர்த்து எழுந்து வந்தால் தமிழனுக்காக விம்மி அழுதிடுவான் தொப்பிள் கொடி உறவுகளும் தூங்கிப் போய் இருந்தனவே செஞ்சோலை படுகொலையால் உயிர் பெற்று எழுந்தனவே பிஞ்சுகளின் இழப்புத்தான் அங்கே மீண்டும் உறவுப்பாலம் அமைத்தனவோ இழப்புக்கள் இனி எமக்கு வேண்டாம் உறவுகளே இ…
-
- 26 replies
- 4k views
-
-
கல்லினில் இரு துளைவைத்து கண்ணென்று சொல்லி உலகையும் காப்பான் இவன், தன் கண் கொண்டு என கற்பனை வளர்த்த எமை மூடராய் ஆக்கி கயவனாய் போனாயே - கடவுள் இல்லை நீ கல் என்றே சொல்வேன் உனை.. கைலையில் உள்ளாயா - இல்லை போதியின் கிளையில் கீழுள்ளாயா? காமுகன் கையில் கணையாய் ஆனாயா. என்குல மங்கையர் கச்சை களைகையில் எங்கே ஒழித்தாயோ? களத்தினில் எம்மக்காள் கருணையின்றி கொலையுறுகையில் கழிவறையில் இருந்தாயோ?? கல்விப்பசி கொண்டு துள்ளித்திரிந்த கயல்விழிகளெல்லாம் அசுரர்கள் கலவிப்பசி தீர்க்க கையிழுத்து கழுத்தறுத்த வேளை - நீ கண்டு ரசித்தாயோ கொண்டு நடத்தினாயோ கல்லில் புதைந்த கடவுளே. கடல் கடந்தவன் மெய்யுரைக்க-மனம் கல்லானவன் பொய்யுரைக்க காலடியில் காலன் இன்று எ…
-
- 26 replies
- 7.9k views
-
-
பால்ராஜ் அமரனுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன் அமரா நீ மீட்ட ஆனையிறவில் சுடப் பட்ட செங்கால் நாரைகள் போல் வன்னியெங்கும் தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே. என் கவிதையிலே நீ இருக்க ஈழம் கதறியழும் நியாய மென்ன. நீயோ முடங்கிய காலில் மூண்டெரிந்த விடுதலைத் தீ. தீவெட்டியாய் உன்னைச் சுமந்து சென்ற தோழருக்கு 'இத்தாவில்' பகையிருட்டில் வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா. உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு. களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல் காலங்கள் ஊடே என் கவிதை இனிச் சுமக்கட்டும் அவனை ஆழப் புதைக்காதீர் ஆலயங்கள் கட்டாதீர். நாளை மணலாற்றை மீட்டு வாழ திரும்புகையில் நம் சனங்கள் மசிரை விட்டுதுகள் தம் மனம் நிறைந்த நாயகனை. …
-
- 26 replies
- 7.5k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், நட்பு என்று சகீரா அவர்கள் ஒரு கவிதையை எழுதி யாழில் இணைத்து அதுபல நீண்ட விவாதங்களை கண்டது. எமது தரப்பு நியாயத்தை வலுப்படுத்த நானும் ஒரு கவிதையை எழுதி இங்கு இறக்குகின்றேன். தமிழ்கூறும் நல்லுலகம் எனது கவிதையை - கருத்தை வரவேற்கும் என்று நினைக்கின்றேன். எழுத்துப்பிழைகள் ஏதாவது இருந்தால் திருத்தி படிக்கவும். நன்றி! உன்னையெனக்கு பிடிச்சிருக்கு! உடலாலும் மட்டுமல்ல உயிராலும் இணைவதற்கு கரங்கோப்பாய் என்தோழி! பூவே நான் உனக்கு பூச்சூடி மகிழ்வதற்கு தகுதியென்ன கேட்கின்றாய்? தயங்காது சொல்லு! சினேகிதனாய் இருப்பவன் காதலனாய் வருவதில் தடையென்ன கண்டாய்? தயவுசெய்து சொல்லு! அன்புடன் பழகியெந்தன் உள்ளத்தை கொள்ளையிட்ட நண்ப…
-
- 26 replies
- 5.8k views
-
-
வணக்கம் நண்பர்களே! இந்த யாழ்க்களத்தில் பொதுவாக பெண்களைப்பற்றியே கவிதைகள் எல்லாம் வர்ணிக்கின்றனவே எப்போதாவது பெண்கள் மனந்திறந்து ஆண்களை நோக்கி தங்கள் கவிதையை வரைவதில்லை என்ற குறைபாடுகள் நிறையவே இருக்கின்றன. இது யாழுக்குள் மட்டுமல்ல எல்லாவிடத்திலும் உண்டு. இந்தக்களத்திற்குள்ளேயே, ஆண்களை வைத்துக் கவிதை எழுதுங்கள் என்று யாரோ கேட்டதாக ஞாபகம். வாசித்துவிட்டு உங்களுடைய உண்மையான விமர்சனத்தை தாருங்கள் நண்பர்களே! பூக்களுக்கு வாசம் உண்டு கண்ணா உன்னைப்போல் - என் பாக்களுக்குள் வாசம் செய்யும் உயிரே நீதானே! கூகிலுக்குள் தேடிப் பார்த்தேன் அன்பே உன்முகத்தை - வந்த கோபத்தாலே சினந்தது உள்ளம் அதுவே உன் இல்லம். கண்ணில் வந்து மின்னல் வெட்டிக் கவனப்படுத்துகிறாய் - என…
-
- 26 replies
- 4.3k views
-
-
மழை சோ...... என்று பெய்த மழை சொல்லாமல் வந்த மழை சோம்பி இருந்த என் மனசு சோம்பலை ஓரத்தில் தள்ளி வைக்க..... சொட்டுச் சொட்டாய் வந்த மழை முற்றத்தில் முத்தமிட , வந்த புழுதி வாசம் மூக்கையடைக்க..... வண்டுவுக்கும் சிண்டுவுக்கும் கொண்டாட்டம் அவர் கொண்டாடம் காகிதகப்பலில் தெரியவர..... நானும் குழந்தையாகிப் போனாலும் , பெய்த மழையின் வேகத்தில் வீட்டுக்கூரை முகடு பிரிக்க !!!! என் வீட்டினுள் எட்டிப் பார்த்தது அழையாத விருந்தாளியாய் , நான் பானைகளால் கவசம் போட்டாலும் அங்கு என் ஏழ்மை சிரித்தது எக்காளமாய்..... மைத்திரேயி 05/02/2013
-
- 26 replies
- 3.2k views
-
-
ஒன்பதாம் ஆண்டு.... சைவ சமய பரீட்சை குனிந்து கரிசனையோடு எழுதுகிறேன்..... என் கண்ணும் விடைத்தாளும் விளையாடிகொண்டிருக்கும் வேளை ஏதோ ஒன்று அந்நியமாய்... என் கண்ணில் இடர்ப்பட... என் மனதிலோ.. வெட்கம் பூரிப்பு...... ஓர் இனம் புரியாத மாற்றம்... இப்புவியை வென்றுவிட்ட நினைப்பு.. அது... என் மூக்கின் கீழோரம் ஆடவனின் வீரச்சின்னம் எட்டிப்பார்க்க தொடங்கியிருந்தது.... பரீட்சை எழுதவில்லை... ரசித்திருந்தேன்.. அன்று தான் பிறந்திருந்த என் மீசையை..... வருவாயா வருவாயா என பார்த்து.. களைத்திருந்து... காத்திருந்து.. என் மூத்தோர்... மீசையை.... நான் பார்த்து அவாப்பட்டு.... இறுதியில் …
-
- 26 replies
- 5.3k views
-
-
பல நாள் தவமிருந்து விரதங்கள் பல பிடித்து கிடைத்த வரம் இவள் கொட்டிக்கிடக்கும் சந்தோசத்தில் மணம் வீசும் மலராய் தினமும் வளர்ந்து மங்கையானாள் வந்தான் ஒருவன் மலர் என்றான் தேன் என்றான் உலகில் நீயே அழகி என்றான் அன்பிற்கு நீயே அகராதி என்றான் மயங்கிப் போனாள் அன்பிற்கு புது அர்த்தம் சொன்னான் காதலை கண்ணால் கற்பித்தான் உறவை புது வழியில் ஒப்பித்தான் அவனின் காதல் மொழியில் அவள் சிறைப்பட்டுப் போனாள் தன்னை மறந்து தன்னையே கொடுத்தாள் பழத்தை உண்டதும் அவன் பறந்து போனான் காத்திருந்தாள் காதலன் வரவில்லை காதல் பொய்த்த பின்னும் காத்திருக்கிறாள் காதலனுக்காக அல்ல சூதுவாது எதுவும் அறியா அந்த பிஞ்சு உயிருக்காய் ........
-
- 26 replies
- 3k views
-
-
எழு! எழு! பெண்ணே!! எழு! எழு! எழு! எழு! பெண்ணே!! எழு! எழு! எதிரிகள் மனபலம் உன்னடி விழ விழ எழு! எழு! பெண்ணே!! எழு! எழு! காப்பினைத் தந்திடா... உலகமும் விழிக்கட்டும்! தூக்கிய பொருளினால் துயர் துடை! களங்களில் நின்று கலிகளை வெல்! வெல்! புதுப்பலம் படைத்துப் பெண்சினம் சொல்! சொல்! வெஞ்சினம் கண்டு வேற்றுவர் ஓட... பிஞ்சுகள் பிய்த்தவர் பிணமாய் வீழ... நஞ்சினை அணிந்தவர் வாகை சூட... வஞ்சியர் வீரம் வான்வரை ஆள... எழு! எழு! பெண்ணே!! எழு! எழு! எதிரிகள் மனபலம் உன்னடி விழ விழ எழு! எழு! பெண்ணே!! எழு! எழு!! கனல் விழி வீசு! கவிஞனின் கோல்கள் கர்வம் ஏற்றி எழுதட்டும்! புனலாய்க் கிடந்தவள் கனலாய்ச் சிவந்திட காலம் காட்…
-
- 26 replies
- 6.3k views
-
-
வணக்கம் நண்பர்களே! இக்கவிதைப் பூங்காவில் ஒரு புதிய அறிமுகம், 'வேங்கையன் பூங்கொடி" எனும் தொடர் காவியம். கவிதையா? உரை நடையா? பிரித்துப் பார்க்காமல் இரண்டுக்குள்ளும் பயணிக்கும் ஒரு கதைவடிவம். பல அங்கங்களைக் கொண்ட சில பாகங்களான இக்காவியம் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் ஒவ்வொரு அங்கமாக இத்தளத்தில் வெளியாகும். தொடர உள்ள இக்காவியத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்களை இவ்விடத்தில் இணைக்கும் திரியில் பதியுங்கள். 'வேங்கையன் பூங்கொடி" எண்ணப்பதிவு விமர்சனப்பகுதி
-
- 26 replies
- 8.9k views
-
-
அம்மாவைத் தேடி.. அம்மா...அம்மா...அம்மா -உன் பிள்ளை அழைக்கிறேனம்மா.... கண்ணீர்ச்சுூட்டில் கரைந்து இமை கனக்குதே அம்மா... மடி தேடும் நான் அன்பு மகனல்லவோ... தலைமுடி கோதும் விரலெங்கு தூரத்திலோ.. தாயே நான் செய்த தவறென்ன சொல்லு.. ஜீவனிரண்டை சுமந்த தாயே எந்தன் நெஞ்சும் ஈரம்தானே.. அன்பு என்பது ஆதாரம் தாயினன்போ பெரிதாகும்.. கண்கள் கருணைக்கடலல்லவோ.. எந்தன் உருவம் தந்ததுன்னுடல்லவோ... கருவறை ஒளியும் தாய்நெஞ்சு வலியும் மனதுக்குத்தானே தெரியும் அன்னையினன்பைப் பிரித்திட நினைத்தால் புூலோகம் தீயினில் எரியும்... இடிஇடியென பல இன்னல்கள் நேரிலும் தாயின்நிழலின் கீழ் மனம் தாங்கும்.. வேரின்றி மரமில்லை தாயின்றி வாழ்வில்லை நீய…
-
- 26 replies
- 8.2k views
-
-
வந்தோரை வாழவைத்து வீட்டிலே தூங்கவைத்து வாசலில் படுத்தறங்கும் இனம் எம்மினம் சண்டை என்று வந்தாலும் சமாதானம் என்று சொன்னாலும் சமனாக மதிப்பளித்து இன்று போய் நாளை வா என இன மானம் காத்த இனம் உலக வரைபடத்தில் யேசு கேட்டதை காந்தி கனாக்கண்டதை வள்ளுவன் சொன்னதை அரங்கேற்றி அரசமைத்த இனம் நரிக்குண நாட்டவனின் நடிப்பில் மயங்கி சுற்றி வந்த வர்த்தகஅரக்கர்களின் பிடிக்குள் சிக்காது செய் அல்லது செத்துமடியென செய்து காட்டிய இனம் முள்ளிவாய்க்காலில் தன்னை தானே பெட்டியடித்து சர்வதேசத்துக்கு குறிவைத்த தலைவன் சொல்லிய செய்தி கொன்றால் விடுதலை விட்டாலும் அது தான்.. தீர்க்க தரிசனம் அவனது ஆயுதம் இனி போராட்டம் உங்கள் கையில் அவன் கை காட்டியது வெளியில் எல்லாம…
-
- 26 replies
- 2.6k views
-
-
யாழிலை எவ்வளவோபேர் வவந்து கவிதைகள் எழுதி தள்ளினம் அதை பாத்த எனக்கும் ஒரு ஆசை கவிதைதஒண்டு எழுதவேண்டும் என்று அதுவும் காதல் கவிதை கண்ணைமுடிஎன்ரை முனியம்மாவை நினைச்சன் கவிதையா வந்து கொட்டிச்சுது அதிலை நீங்களும் நனைந்து கருத்தை சொல்லுங்கோ அப்பதான் அடுத்த கவிதைஎழுதுவன்* கோதுமை மா நீ கொதி தண்ணி நான் இருவரும் சேர்ந்தால் ஆசையயாய் சாப்பிடும் தோசையாகலாம் உள்ளி நீ மல்லி நான் இருவரும் சேர்தால் இரசம் ஆகலாம் மிதுவான தேங்காய்் பூ நீ மிளகாய் செத்தல் நான் சேர்த்தரைத்்தால் சம்பல் ஆகலலாம் வழிப்பான புளி நீ வாடல் மரக்கறி நான் வா சேர்ந்து சாம்பாறு ஆகலாம்
-
- 26 replies
- 4.2k views
-
-
தனி ஒருவனுக்குள்ளே உள்ளே, ஒரு பிரபஞ்ஜமே மறைந்திருக்குமா?? இவன் மனவெளி ரகசியம், அதை நாசா பேசாதா?? க்ரகங்களை கைப்பந்தாட விரும்பிடுவானே, கருங்குளிக்குள்ளே சென்று திரும்பிடுவானே... --இது ஒரு வில்லனைப் பற்றிய பாடல் என்றாலும் பிரபஞ்சம் பிச்செறிஞ்ஜேன் என்ற வைரமுத்துவின் வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது...
-
- 26 replies
- 9.7k views
-
-
ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை ஏக்கக் கூண்டுக்குள் அடைக்க இனியும் எம்மால் முடியாது. உயிர் முட்டி எழுகிறது உணர்வு. காதுமடலை உராயும் காற்றின் வழியே உங்கள் மூச்சின் இளஞ்சூடு படர்கிறது. அருவமாய் வந்தெங்கள் அருகிருக்கிறீர்கள்... உப்பேரி கரையுடைக்கும் எங்கள் விழிகளுக்குள் உக்கிர நெருப்பை தேடுகிறீர்கள். உமக்கான மொழியெடுத்து உம்மோடு பேச முடியாது, ஊமையாகி தலை குனிந்தே உங்கள் முன் குற்றக் கூண்டேறி நிற்கிறோம். வெற்று வார்த்தைகளால் கவிபாட முடியவில்லை பொய் கலந்தென் புனைவிருப்பின் சத்திய நெருப்பு சுத்தி வந்து தீய்க்கிறது. கார்த்திகை 27, 1982 முதல் மாவீரன் மண்ணில் சரிந்து இன்றுடன் ஆண்டு 27 ஆகிவிட்டது. காலநதி என்னவோ ஈழவர் வாழ்வைக…
-
- 26 replies
- 5.2k views
-
-
:P :wink: பிற்குறிப்பு:- சத்தியமா அவளுக்கு சர்க்கரை வியாதி இல்லை
-
- 26 replies
- 4.1k views
-
-
எல்லாமே வீணாய்ப் போச்சு! இன்னும் என்ன இருக்கு? இதைச் சொல்லிச்சொல்லியே சமாதான புறாக்களாக பூரிப்போடு பறக்கின்றோம்! வேண்டும் என்று எதைக் கேட்டு நின்றோமோ; இன்னும் ஆரம்பத்திலேதான் நிற்கின்றோம்! தேவையென்று எதைத் தேடினோமோ; அதைத் தொலைத்துவிட்டுத்தான் தேடுகின்றோம்! என்னதான் தேவை எங்களுக்கு....? ஒன்றுமே தெரியவில்லையா உங்களுக்கு??? என்ன மனுஷரடா நீங்கள்??? அயல்நாடாம் தமிழ்நாட்டின் கொதிநிலை கூட, உங்கள் கண்ணீரில் இல்லையே! அச்சச்சோ... தவறாக சொல்லிவிட்டேனோ??? கண்ணீர் வந்தால்தானே...அதைப்பற்றி பேசமுடியும்! தமிழராய் இல்லாட்டியும் பரவாயில்லை... குறைஞ்சது, மனுஷராத்தன்னும் ஒருமுறை நினைச்சுப் பாருங்கோ! நடந்ததை எல்லாம்.... நடக்கின்றவை எல்லாம்... நடக்கப்…
-
- 26 replies
- 2.5k views
-
-
தீரமும் துயரமும் தோய்ந்த திருநாடு (சிறுவன்) ஆடடா கண்ணா அதற்கு நான் பாடுறேன் அம்மா சோச்சி ஆறிபோச்சேயென் றோடிப்போன காலம் போச்சு ஆனதென்ன ஆகாததென்னென் றாராஞ்சு பார்க்க நேரமாச்சு. (எல்லோரும்) ஆடடா கண்ணா........ (சிறுவன்) அப்பாக்கும் துணிசல் இருக்கு பலே பலே அவர் அநியாயத்தை எதிர்த்திருக்கார் கூறே கூறே சிங்களது சேகுலரை திருப்பி அனுப்பி செந்தமிழில் வரையுமென்று செப்பி நிற்க கோபம் கொண்ட கூலிகள் குழிபறித்து கோள் சொல்லி கொள்ளி வைச்சு வேலை தள்ள வேலை இன்றி வீடு வந்தார் எங்கள் அப்பா (எல்லோரும்) வேலை இன்றி வீடு வந்தார் எங்கள் அப்பா வேலை இன்றி வீடு வந்தார் எங்கள் அப்பா (சிறுவன்) சிங்களமே வெளியேறு செந்தமிழ் நாட்டால் செய்யாட்டில் செய்ய வ…
-
- 26 replies
- 2.5k views
-
-
ஓ... காலனே, இந்த வேசம் போடாத வெண்பஞ்சு முடிபேசும் கதைகள் கொஞ்சமல்ல அவற்றைப் பேசி முடித்தபின்னால் ஓலை அனுப்புகிறேன் அதுவரைக்கும்....
-
- 26 replies
- 5.2k views
-
-
மறுத்ததேன்....? பலமுறை தொலைவில் பார்த்தேன் பார்வைகளால் ரசித்தேன் ஆர்வத்தில் தொடர்ந்தேன் தினம் உன்னையே சிந்தித்தேன் காதலை வளர்த்தேன் ஆதலால் சிலிர்த்தேன் ஆசையோடு இருந்தேன் திசை எங்கும் நடந்தேன் கற்பனையில் மிதந்தேன் பற்பல கவிதைகள் வடித்தேன் வானளவு உயரந்தேன் கானம் பாடி திரிந்தேன் கனவுகளில் உன்னோடு பறந்தேன் நினைவுகளை எனக்குள் சுமந்தேன் ஊன் சுவைதனை மறந்தேன் உறக்கத்தையும் துறந்தேன் உன் உருவை வரைந்தேன் கண்களுக்குள் காத்தேன் வெட்கத்தில் சிவந்தேன் துக்கத்திலும் சிரித்தேன் இன்றுனை சந்தித்தேன் தெத்திப்பல் தெரிய சிரித்தேன் காதல்மனசை திறந்தேன் அன்பே நீ மறுத்ததேன் என்னையும் வெறுத்ததேன்..?
-
- 25 replies
- 3.5k views
-
-
காகங்களே! மேகங்களே!... காகங்கள் கரைந்தால் குயிலின் பாட்டு கேட்காது மேகங்கள் நிறைந்தால் நிலவின் அழகு தெரியாது ஆயினும் காகங்களே! மேகங்களே! குயிலின் சத்தம் குறைந்திருப்பதாலும் நிலவின் ஒளி மறைந்திருப்பதாலும் அவைகள் இல்லையென்று அர்த்தம் இல்லை இதோ! அவைகள் வெளிக்கிளம்பி விட்டன ஆகவே காகங்களே! மேகங்களே! கூவுகின்ற ஆவலையும் வண்ணமாய் மின்னுகின்ற எண்ணத்தையும் விட்டு கரைதலையும் கலைதலையும் மட்டும் செய்யுங்கள்
-
- 25 replies
- 4k views
-