கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நன்றி: facebook. நன்றி: facebook. (மிகுதி தொடரும்..! நீங்களும் இணைக்கலாம் நீங்க ரசித்தவை.. ஆக்கியவை என்று.)
-
- 47 replies
- 13.4k views
-
-
சந்திர ஒளிதனில் சுந்தர விழிகளால் மந்திரம் இல்லாமலொரு தந்திரம் செய்ததென்ன.. அந்த இந்திரஜாலத்தில் என்னைத் தொலைத்து இன்னும் இதயம் வலிப்பதென்ன.. மாலை மயக்கத்தில் தேன்சுவை இதழ்களால் தீஞ்சுவை போலொரு வார்த்தை வடித்ததென்ன.. அந்தக் காவியவார்த்தை கண்களைக் கட்டி காலங்கள் தோறும் கண்ணீர் விடுவதென்ன.. காரிருள் வேளை மோகத்து முன்னிரவில் மேகம்போல் மென்மையாய் காதல் வரைந்ததென்ன.. அந்தக் காதல்கவிதை காணாமல் போய் வாழ்வில் வருந்தித் துடிப்பதென்ன..
-
- 5 replies
- 1.2k views
-
-
நீ இல்லாத நிகழ்காலம் இப்போதும் இனிக்கிறது உன் கவிதைகள் உன் காதலைச் சொல்லிய அந்தக் கணத்தின் இனிமையைப்போல! உன் அறையெங்கும் சுழல்கிறது சுவாசம் தீராத எழுத்தின் தாகத்தோடு! உன் கணினியில் வழிகிறது நலம் விசாரிக்கும் உன் நண்பர்களின் மின்னஞ்சல்கள்! உன் முடிவுறாத இரவின் உரையாடல்கள் கைபேசியில் உறைந்துகிடக்கிறது மௌனங்களாக! உன் கலந்துரையாடல்களால் களைகட்டும் நம் வீடு நிசப்தம் தாங்கிய மௌனத்தின் சாட்சியாய்... உன் வளர்ப்பு நாயின் உண்ணாநோன்பும்! உன் சாம்பல் கிண்ணம் கங்குகள் காணாது காத்துக்கிடக்கிறது நீயே சாம்பலானது அறியாமல்! பழுத்த இலையின் வெம்மைபோல் சுட்டெரிக்கிறது உன் நினைவுகள் நம் கிராமத்தின் பாதையெங்கும் ய…
-
- 5 replies
- 1.5k views
-
-
புழுதியப்பிய தெருக்களின் முனைகளில் அழுதபடி குழந்தைகளும் அனாதைகளான அவர்களுமாக தெருக்கள் இப்போது துயரங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. எல்லோரையும் எல்லாவற்றையும் அழித்துச் சென்றவர்களின் முகங்களால் நிறைந்து கிடக்கிறது நிலம். நீதியின் சாட்சிகளாய் அலைகின்றவர்களின் முகங்களில் பயமும் வறுமையும் பதியமிடப்பட்டிருக்கிறது….. ஆணிவேருடன் ஒரு சந்ததியும் அதன் குருத்துக்களும் கனவுகளும் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்ட அடையாளங்களை அழிக்க யார்யாரோ வருகிறார்கள் அறிக்கைகள் எழுதுகிறார்கள் எல்லாம் வளமைபோல் அவர்கள் போய்விடுகிறார்கள்…. இரவுகளில் தனித்துறங்கும் பயத்தில் ஊரில் குடும்பங்கள் ஓரிடத்தில் கூட அச்சமுறு இரவுகளோடு குழந்தைகளையும…
-
- 3 replies
- 927 views
-
-
வாரஇறுதி விடுமுறைகூட வருடங்களின் பின்புதான் ஓய்வின்றிய உழைப்பில்.. தொலைந்து மறையும் தொலைதூர உறவுகள் தொலைபேசி அழைப்பில்.. முழுநாளும் வேலைக்குள் தடம்மாறும் நண்பர்கள் முகம்பார்க்க முடியாமல்.. தொலைவில் இருந்து தொலைபேசிக்குள்ளே குடும்பம் நடத்தி.. தூங்கியெழ மட்டும் வீடுவந்து செல்லும் குடும்பத்து உறவுகள்.. பம்பரமாய் உழைக்கும் பரதேசி வாழ்க்கையின் பாழாய்போன கொள்கை.. பசிக்கும்போது உணவு களைத்தபோது தூக்கம் கிடைத்தாலே போதும்.. வருஷங்களுடன் சேர்த்து வாழ்க்கையை தொலைக்கும் வலிமையான வட்டத்துள்.. முடிவற்ற பாதையில் தெளிவற்ற பயணமாய் புரிந்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
அம்மா திரும்பியிருக்கிற ஆற்றங்கரை காணி நிலம் தீபச்செல்வன் புற்களும் பற்றைகளுமாய் கிடக்கும் நிலத்தில் வீடு கரியிருக்கும் உருக்குலைந்த காணியில் அம்மாவின் களைப்பு தணலூட்டப்பட்டிருக்கிறது கடவுள்கள் எங்களை கைவிட்டதாய் ஒரு நாள் உணர்ந்தபொழுது காணி நிலம் தரும் பராசக்தியிடம் அம்மா உணவிழந்து பசியிருந்தாள் ஆற்றங்கரையில் கிடக்கும் இந்தக் காணிநிலத்தை பராசக்தி ஏன் கைவிட்டாள்? யுத்தக் குற்றங்களுக்காக நிறைவேற்றப்பட்ட தண்டனைக்காலத்தின் எந்தச் சித்திரவதைகளையும் பகிரப்போவதில்லை என்று அம்மா ஒப்புதலளித்திருக்கிறாள். வீடு திரும்பியிருக்கிறோம் என்பதை இந்த ஆற்றங்கரைப் பறவைகள் கொண்டாடுகின்றன ஒரு நாள் ஆறு பெருக்கெடுக்கையில் என்னை கைகளில் அம்மா நிரப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
தியாக தீபம் திலீபன் அண்ணாவுக்கான நினைவுக்கவிதை கவிதை - இளங்கவி பாரதத்துக்கு அகிம்சை கற்பித்த பன்னிரு நாள் வேள்வி...... தீயிலல்ல தீயினும் கொடிய பட்டினி வேள்வி...... புலியொன்று பசி கிடந்து பாரதத்துக்கு அகிம்சையை சொல்லித்தந்த வேள்வி...... பசியதை மறந்தான் பன்னிரு நாளும் நீர்த்துளியதை மறந்தான்...... பத்திரமான தன் உயிரினைக் கூட பஞ்சு பஞ்சாய்ப் பிய்த்து எறிந்தான்..... பார்க்க வந்தோருக்கும் தன் புன்னகைப் பூவினைக் கொடுத்தான்.... பார்க்க மறந்தது பாரதம் அவன் கோரிக்கையை கேட்க மறுத்தது பாரதம்...... நாத்தம் பிடித்த சாக்கடைச் சகதியில் காந்தியின் அகிம்சையைப் புதைத்தது பாரதம்..... கோரிக்கைய…
-
- 10 replies
- 1.4k views
-
-
நீங்கள் சாகும்வரை நாங்கள் போராடுவோம்…! வேரோடு பிடுங்கி விசங்களால் நிறைக்கப்பட்ட நிலத்தில் அவலமுறும் உயிர்களுக்காய் போராட்டம் நிகழ்கிறது….! நீதி கேட்க ஐ.நா.ஐரோப்பிய ஒன்றிய வாசலெங்கும் நிலம்விட்டகன்று போனவர்கள் நீதி கேட்கின்றோம்….. ஆழுக்கொரு கொள்கை அத்தோடில்லாம் அடிதடி துரோகம் அநியாயம் வசைபாடல் நாடுகடந்த கடக்காத பேரவைகளின் கால்களில் போராடியோர் குரல்களும் உயிர்களும் நசுங்கிக் கொண்டிருக்க நீதிக்கான போராட்டம் நித்தமும் நடக்கிறது. செய்திகளும் அறிக்கைகளும் கர்த்தருக்காகவும் கருணையுளம் கொண்ட உயிர்களின் விலைகளுக்காகவும் சமர்ப்பணமாக…. எப்போதும் போல விசிலடித்து வீரம் விளைவிக்கும் புதிய கர்த்தர்களாலும் பழைய கடவுகள்களின் …
-
- 18 replies
- 2.6k views
-
-
ஆகாய வல்லூறுகள் மூவர்ணச் சக்கரங்கள் பூசி வந்து அரிசி அள்ளி வீசிய போது அண்ணாந்து கையசைத்து அகம் மகிழ்ந்து கொண்டாடிய வேளையில் ஒரு நொடி தானும் சிந்தித்திலோம் அவை எம் மகாத்மாவிற்கு வாய்க்கரிசி ஆகுமென்று. அசோகச்சக்கரம் ஈழத்தமிழதில் பாசம் வைத்து நேசக்கரம் நீட்டுவதாய் தேடி வந்த போது.. சிங்களத்துக்கு ஆப்படிப்பதாய் மெச்சி மோந்து மோட்டுச் சிங்களம் என்று பேசி பெருமை கொண்ட போது கணமும் நினைத்திலோம் அது எம் மகாத்மாவிற்கு பாடை கட்டும் என்று. டிக்சிற்றுகளும் சிங்குகளும் டாங்கிகள் கொண்டு அமைதிப்படை என்று அன்ரனோவ்களில் புகையடிக்க வந்திறங்கிய போது பெல்கள் கிலுக்கி வந்த மணிக் ஹெலிகளுக்கும் பூமாலை போட்டு வரவேற்ற வேளைகளில் …
-
- 3 replies
- 959 views
-
-
கோடி அழகுகள் கொட்டிக் கிடந்தாலும் ஆயிரம் அற்புதங்கள் அவனியில் இருந்தாலும் உயிரோடு உலவுகின்ற உவமையிலா ஓவியம் நீ கனவோடு காத்திருக்கும் கனிவான காதலன் நான் நதியாகி நான்வரும் திசைபார்த்து வழிமாறி விலகி ஓடுகிறாய் நீ பெண்ணே விரைவாக அலைகொண்டு கரைமோதும் கடலாகி ஓரிடத்தில் கனவோடு காத்திருப்பேன் கண்ணே உனக்காக
-
- 9 replies
- 1.5k views
-
-
என்றும் என்னுயிர் பேபிக்கு எண்ணிப்பார் ஒரு தடவை என்ற போது தள்ளிப் போ என்னை விட்டு என்றேன் இன்று தள்ளிப் போ என்று நான் சொல்லவில்லை அள்ளித் தா உன் அன்பை என்கின்றேன் கள்ளச் சிரிப்பால் என்னை மயக்கிய போது உன் கண்களைக் கண்டு வியந்தேன் இன்று உன்னைக் காணாத போது என் கண்களைக் கண்டு வியக்கின்றேன் ஆனால் உன்னைக் காணும் போது பட்டாசு போல் வெடிக்கின்றேன் ஏன் என்று எனக்குள் நான் இன்றும் வியக்கின்றேன் இன்று என்னுயிர் மனைவி நீ என்றும் என் குழந்தை நீ வாத்தியார் **********
-
- 12 replies
- 1.9k views
-
-
சிறகொடிந்த பறவையின் சுதந்திரம் இல்லாத வாழ்க்கை!!! இதயங்கள் கனத்திருந்தாலும் இதழளவில் புன்னகைப்பதால் தானோ எங்களுக்கு மென்பொறியாளர் என்று பெயர்!!! அரை அடி இடைவெளியில் ஆறுபேர் அமர்ந்திருந்தாலும் அந்நியப்பட்டவர்கள் போல் திசைக்கொருவறாக திரும்பியிருப்போம்!!! விருப்பங்களுக்கேற்ற நீராகாரம் விருந்தோம்பல் புரிய பணியாளர்கள்! விடிய விடிய வேலை விடிந்தபொழுதில் வீடுசேர்க்க வாகனம்! அழையாவிருந்தாளியாய் ஆன்ஸைட் கால்கள்! இன்னல்ப்படுத்தும் ஈமெயில்கள்! இவ்வாறாக இயந்திரத்தனமாக சுழலும் எங்கள் நாட்கள்! உள்ளத்தில் குடியிருக்கும் உறவுகளுக்குக்கூட தொலைப்பேசியில் தான் நலம்விசாரனை! மணநாளுக்குக்குட மின்னஞ்சலில் வாழ்த்து பரிமாற்றிக்கொள்வர் மனைவியும் கணவ…
-
- 0 replies
- 775 views
-
-
இல்லை நான் உன்னை நேசிக்கின்றேன் இல்லை நான் அவனை நேசிக்கின்றேன் இல்லை எனக்கு வேண்டும் நீ என் உயிர் இல்லை என் உயிர் என்னிடம் இல்லை நீ என்றால் நானும் இப்பூமியில் இல்லை எனக்காக உன் வாழ்வை ஏன் இல்லை இது நம் வாழ்க்கை இல்லை முடிவாக என்னை விட்டு விடு இல்லை உன்னை மட்டுமல்ல என் உயிரையும் இல்லை சற்றுப் பொறு நான் யோசிக்க இல்லை நான் அவனை நேசிக்க இல்லை என் மனதில் உன் முகம் மட்டுமே இல்லை நீ வாழ வேண்டும் உனக்காக இல்லை உன் காதலுக்காக என்னுடன் இல்லை என் உணர்வுகளுடன் இல்லை உனக்காக நான் காத்திருக்க இல்லை சில நாள்கள் சில மாதங்கள் இல்லை பல வருடங்கள் தேவை இல்லை என் வாழ்க்கை நிச்சயம் இல்லை நான் இன்று சொல்கிறேன் நீ இல்லை எ…
-
- 17 replies
- 3.2k views
-
-
வெறுமையாய் தனிமைக்குள் சுழல்கின்ற பயணம் அமைதிக்குள் தொலைந்துவிட நினைக்கின்ற மனம் இவைகளை இயல்பாய் இணைக்கின்ற கோடாய் நின் புன்னகையின் சாயல் நினைவுகளில்-அன்னையே வாழ்க்கைப் பாதையில் வலிமிகும் பொழுதுகளில் ஏக்கங்கள் எழுந்து எரிக்கின்ற வேளைகளில் உணர்வுகள் உடைந்து உயிர்சுடும் கணங்களில் தாங்க முடியாமல் தவிக்கும் தருணங்களில் உணர்வற்ற ஜடமாய் வார்த்தைகள் வடிந்து வலியோடு வருமொரு முனகல் ’அம்ம்ம்மா’ மெல்ல வலிகுறைந்து கண்ணில் நீர் நிறைந்து ஏக்கப் பெருமூச்சொன்று எழுந்து அடங்கிவிட மீண்டும் முன்புபோல் முட்டி மோ…
-
- 6 replies
- 1.3k views
-
-
இமைகள் இரண்டின் இரக்கமற்ற பிரிதலில் முட்டாள் விழிகள் முரணாய் ரசித்தன கணநேரம் கூட கதறி அழவில்லை கனத்துப் போன கண்ணிமை இரண்டும் மெதுவாய் வீசிய மெல்லிய தென்றலில் வளியில் மிதந்து விழியில் விழுந்தன தூசித் துகள்கள் விழுந்து உருண்ட தூசித் துகள்களில் கலங்கித் துடித்தன கரிய விழிகள் கலங்கித் துடித்த கரிய விழிகளை இதமாய் வருடி இழுத்து அணைத்தன இமைகளிரண்டும் இமைகள் இரண்டின் இதமான தழுவலில் கடைவிழியோரம் கண்ணீர் துளிகள் புரிதலற்ற நேசத்தின் எரிந்துப…
-
- 8 replies
- 1.7k views
-
-
தற்போது தொற்றியுள்ள ஒரு நோய் இப்படியே தொடர்ந்து நிமிர்ந்து நிற்கின்றோம் என்று சொல்லி மக்களை பலி கொடுக்கப்போறியளே என்ற கேள்வி ஒரு நோய்போல் தொற்றி நிற்கிறது எல்லாத்தையும்ஒருவன் பார்ப்பான் என்று தறுதலையாய் திரிந்த கூட்டத்திடம் வேறு எதை எதிர்பார்ப்பீர் நீவிர் தோல்வியுற்ற அந்த கணப்பொழுதிலிருந்து கை பட்டாலும் கால் பட்டாலும் குற்றப்பணம் ஒருவருக்கே தமிழனிடம் தெரிவு இரண்டானாலும் முடிவு ஒன்றுதான் எல்லாவற்றையும் விட்டு இன்றே உலக நடப்பை புரிந்து சிங்களவனோடு சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய்கூண்டோடு அழிந்து போவது... இல்லை தனியே நின்று மலையுடன் மோதி கூண்டோடு அழிந்து போவது தமிழனிடம் தெரிவு இரண்டானாலும் முடிவு ஒன்றுதான்
-
- 2 replies
- 1.1k views
-
-
நாடிருந்தும் நாடோடியாய் நாளேல்லாம் நாடெல்லாம் ஓடுகின்றேன் ஓடுவதற்கு உடல்வலு தேவையில்லை மனவலு இருந்தால் மட்டும் போதும் ஓடுவதற்கு கால் எனக்கு தேவையில்லை போதிய உள வரம் வேண்டும் ஓடுவதால் மீண்டும் மீண்டும் உரம் பெறுகின்றேன் நாம் ஓடாமல் இருப்பதற்கு ஓர் சுதந்திர நிலம் அமைக்க வேண்டும் என்று இதை நான் எழுதவில்லை...எழுதியவர் ஒரு முன்னால் காலம் சென்ற புலிகளின் தளபதி...யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்
-
- 1 reply
- 840 views
-
-
அவன் அந்த அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவனுக்கு அங்கு எல்லாமே புதுமையாக இருந்தது. அழகாகவும் இருந்தது. எதையுமே புதிதாக பார்க்கும்போது அப்படித்தான்.. அவன் தன்னுடைய சொந்தபந்தங்கள், நெருங்கிய நண்பர்கள் என எல்லோரையும் பிரிந்தே அந்த வேலைக்காக வந்திருந்தான். அந்தப் பிரிவு அவனுடைய மனதில் ஒரு நிரந்தரமான வெறுமையை உருவாக்கி இருந்தது. இருந்தபோதும் அவன் தானும் தன்னுடைய வேலையுமாக ஒரு குறுகிய வட்டத்தினுள் புதைந்து போனான். அவனுடைய வாழ்க்கையில் நிகழ்ந்து விட்டிருந்த இழப்புகள், சோகங்கள், வலிகள் மட்டுமே அவனுக்கு இப்போது துணையாக இருந்தன. சிலவேளைகளில் தான் தன்னுடைய சொந்த ஊரை, குடும்பத்தினரை, நண்பர்களை விட்டு வெகுதூரம் விலகி சென்று விட்டதாக அவன் கற்பனை செய்துகொண்டான்.…
-
- 2 replies
- 830 views
-
-
ஆடிப்பிறப்பு விடுதலையைத் தேடி... ... எத்தனையோ ஆடிகளை கடந்து போயிற்று என் வாழ்க்கை. இன்னமும் நானும் சேர்ந்துபாடிய பாட்டின் மகிழ்ச்சிக்குள் இருந்த விடுதலையை நான் அனுபவித்ததேயில்லை. நாளைகள் கடந்து நிரம்ப நாட்களாயிற்று. இப்போ என் தோழர்களுமில்லை. ஆனந்தமுமில்லை. கொழுக்கட்டையும்..கூழும்.. கனவாகிப் போன வாழ்க்கைகளில் கொதித்துக் கொண்டிருக்கிறது மனசு. இப்போதும்.. பற்கள் விழுந்து போன என் தாய்.. என்னையும் நினைத்தபடி தன் சுருக்கம் விழுந்த கைவிரல்களால் கொழுக்கட்டைக்கு பற்கள் பதித்துக் கொண்டிருப்பாள். எமது கனவுகளைப் போலவே குமிழிகளாய் வந்து வந்து வெடித்து வெடித்துப் போகிற கொதிக்கும் தண்ணீருக்குள் கூழுக்காக மா உருண்டைக…
-
- 3 replies
- 2.9k views
-
-
எப்போதும் கண்கள் பார்த்துப் பேசும் பழக்கம் எனக்கு. முகம் பாராமல் நட்பொன்று வளரலாம் என்பதே தொலைபேசியில் நீ அறிமுகமானபோதுதான் தெரிய வந்தது. உன் குரல் வசீகரமும் சரளமான பேச்சும் உனக்கோர் முகத்தை என் மனதில் வரைந்தது. நீயும் எனக்கோர் முகம் வரைந்திருப்பாய். நம் நட்பு வளர்வதில் உடன்பாடுதான் என்றாலும், சந்திப்பு நிகழ்வதில் உடன்பாடில்லை. உனக்கான என் முகமும் எனக்கான உன் முகமும் அழிந்து போவதில் எனக்கு விருப்பமில்லை. நன்றி சௌம்யா.......
-
- 6 replies
- 1.4k views
-
-
கண்ணீரில் கரையும் தலையணைகள் கண்ணீரில் கரையும் தலையணைகள் கணத்திற்குக்கணம் காந்தவலையுளே பதிந்து நீந்தும் கணக்கிலா இணையத் தகவல் மீன்களாய் எல்லைகாணா மனவெளி முழுதும் அழுந்தப் பதிந்த உன் குரலொலிகள் சொர்க்கமே! உனை பாலிக்க வேண்டிய பொழுதுகளில் ஏனெனக்கு இன்னுமோர் பணியும் அதற்கான பயில்வுகளும்? ஊட்டமுடியாத தொலைதூரமதில் ஒரு நெடுநாட்துயர்போலே இறுகிக்கிடக்குதென் கலங்களுள்ளே உனக்கேயான திருவமுது சொந்தங்களில்கூட எந்தப் பெண்மையுமே எனக்கீடாய் உனக்கில்லையென்றே உணர்ந்திருந்துங்கூட நாட்களாய்………! வாரங்களாய்………! மாதங்களாய்………! விலகியிருக்கின்றேனே இனிக்குமுந்தன் இதழ்முத்தமிழந்து. கற்பூரதீபமே! வேண்டுமானால் இக்கலாசாலை விடுதிக் கட்டில் தலையணை…
-
- 0 replies
- 792 views
-
-
நிமிர்வாய் தமிழா. http://kuma.lunarservers.com/~pulik3/2010/03.2010/27.03/Kavithai.mp3 http://www.pulikalinkural.com/
-
- 1 reply
- 1.1k views
-
-
எழில்மிகு அமெரிக்கா! - அரிமா இளங்கண்ணன் காலையிலே ஐந்தேகால் பரிதி தோன்றும் கடும்குளிரை விரட்டி நல்ல இதம்கொடுக்கும் மாலையிலே ஒன்பதிலும் வெளிச்சம் தந்தே மனங்கவரக் கதிரவனும் உறங்கப் போவான் காடுமரம் செடிகொடிகள் நிறைந்திருக்கும் கண்கவரும் மலர்க்கூட்டம் சிரிப்புதிர்க்கும் ஓடுகின்ற 'மிசிசிப்பி' ஆற்று நீரும் உடன் துணையாய் 'மிசெளாரியதும் வளம்கொடுக்கும் நாடியதிண் மீன்பிடிக்கச் செல்லு வோர்கள் நல்லபலன் கிடைத்ததெனக் களித்தி ருப்பர் ஆடுகின்ற சிறுவரெல்லாம் மாலைப் போதில் அமெரிக்கக் களங்களிலே மகிழ்ந்தி ருப்பர்! காலையிலே ஐந்தேகால் பரிதி தோன்றும் கடும்குளிரை விரட்டி நல்ல இதம்கொ டுக்கும் மாலையிலே ஒன்பதிலும் வெளிச்சம் தந்தே மனங்கவரக் கதிரவனும் உறங்கப் …
-
- 4 replies
- 1.2k views
-
-
சில கவிதைகள் திரைப்படத்துறையில் இருந்து
-
- 1 reply
- 712 views
-
-
Print this Page கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் பிறந்த தீபச்செல்வன் கவிதை, பத்தி எழுத்து, ஆவணப்படம், திறனாய்வு, ஊடகவியல் எனப் பல்துறைகளில் இயங்கிக்கொண்டிருப்பவர். ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ (காலச்சுவடு 2008), ‘ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்’ (உயிர்மை 2009), ‘பாழ் நகரத்தின் பொழுது’ (காலச்சுவடு 2010) ஆகிய நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. போரைக் குறித்தும் போரின் வடுவைக் குறித்தும் அலைந்து திரியும் ஏதிலி வாழ்வு குறித்தும் தொடர்ச்சியாக எழுதிவரும் தீபச்செல்வன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டவர். ‘தீபம்’ என்ற வலைப்பக்கத்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் நடத்திவருகிறார் (deebam.blogspot.com). தற்போது யாழ் பல்கலைக்கழக ஊடக நிலையத்தி…
-
- 5 replies
- 1.3k views
-