கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
எம் தேசம் மீட்டெடுத்தே... ------------------------- உலகின் கண் திறக்க உயிரை விதையாக்கி பெரும் சபதம் எடுத்தவரே மரணம் வருகையிலும் தமிழர் வாழ்கவென உரைத்தவரே உம் பாதம் தொழக்கூட அருகதையற்றோனாய் அன்னியத் தெருக்களில் அலையும் நிலையினிலும் உங்களை மறவோமே! தலைவன் வாழுமிடம் தமது இருப்பிடமாம் என்று அணியம் செய்தவரே பெரும் மனிதப் புதிர்கள் ஐயா மானம் மண் மீட்பில் என வாழ்ந்த தமிழ் மானிடரே உங்கள் பாதம் தொழுகின்றோம்! எமக்கும் சேர்த்தே நீவிர் ஒரு தேசம் படைக்கவென உயிர் தானம் செய்தீரே உமைச் சுமக்க முடியவில்லை! உம் நினைவைச் சுமந்தபடி எம் தேசம் மீட்பதென உறுதி எடுக்கின்றோம்! வலியின் துயர் சுமந்து உம் நினைவின் கருச்சுமந்து எம் தேசம் மீட்ட…
-
- 4 replies
- 983 views
-
-
துவேச துவசத்தின் திவசம்! ஆண்டாகி போனதுவோ மாண்ட கதை கேட்டு ? பூண்டோடு கொளுத்தி கொன்றான் இனவெறியன் ! தாங்க முடியாமல் பாராளுமன்ற சதுக்கம் சென்று இரவிரவாய் ஓலமிட்டு கதறிய காலம் அது ! பச்சிளம் குழந்தை தாயின் பிணத்தினிலே பால் தேடி புழுவோடு போட்டி போட்ட அந்த கேவலத்தை கண்டோமே ! பிறக்காத குழந்தைதனை வயிற்றை பிளந்து கொன்று இனவெறியின் கொடுமை அதை கொதித்தபடி பார்த்தோமே ! எத்தனை கொடுமை அதை என்னால் எழுத பலமில்லை ! இன்னும் என் இமைக்குள்ளே உறுதியாய் பதிந்த படம் ! தூக்கமும் வாராமல் கண் முழித்து வலையில் தேடி பார்த்தேன் எதாவது ஒரு "பதில்" செய்தி, அதை இன்றுவரை தேடுகிறேன் ! முள்ளிவாய்காலில் பாய்ந்து ஓடிய தமிழ் இனத்தின் ரத்தம் கடலோடு கலந்ததுவோ? இல்லை! உலக…
-
- 3 replies
- 1k views
-
-
(முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு அமெரிக்காவில் அஞ்சலி – 2010) கறுப்புத் தான் உன் உடம்பு மனசு என்னே வெள்ளை.. தமிழகம் ஆள வந்த முதல்வன் நீ எங்கப்பன் நீயென்று.. கறுப்பா.. கிழவா உன்னை நம்பிய ஈழத்து அப்பாவிகள் எண்ணங்கள் மரித்த நாள் மே 18...! "அன்னை" சோனியாவின் புன் சிரிப்பில் பொற்குவியல் கண்டவனே.. மேடைகள் தோறும் நடிகைகளை குலுங்கவிட்டு ரசிக்கும்.. கறுப்புக் கண்ணாடிக் கள்வனே.. கவிதையும் கடிதமும் உன் ஆயுதங்கள்.. அவையே "என் அக்னி ஏவுகணைகள்" என்றாய் ஈழத்தமிழரை காக்கும் "நாகாஸ்திரம்" என்றாய் ஆனால்.. அவை சாதித்ததுவோ தமிழரின் சாவிலும் உன் குடும்பத்து வாரிசுகளுக்கு நாற்காலி...! வீணனே.. குஷ்புவோடு வீணி வடித்தது போத…
-
- 10 replies
- 2k views
-
-
இன அழிப்பின் இறுதிப் போர் மே மாதம் கவிதைகள் தீபச்செல்வன் 17 May 10 12:15 am (BST) ஆட்களை இழந்த வெளி வானம் நேற்றுக் காலைவரை உறைந்திருந்தது. இப்பொழுது சிதறி கொட்டிக்கொண்டிருக்கிறது. வானம் அழுகிறதென யாரோ சொல்லிக்கொண்டு போகிறார்கள். இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை. சனம் தகர்ந்து அடங்கிப்போயிறுக்கிறது. குடி எரிந்து முடிகிறது. டெலிகப்ரர்கள் அலைந்து கூடாரங்களின் சிதைவுகளை படம் பிடிக்கிறது எரிந்த வாகனங்களை மீட்டுக் கொண்டு போகிறது ஐ.நா. எல்லாம் நசிந்துபோக அடங்கிக் கிடக்கிறது ஆட்களை இழந்த வெளி. கைப்பற்றப்பட்டவர்களாக குழந்தைகளை தொலைக் காட்சிகள் நாள் முழுவதும் தின்று கொண்டிருந்தது. நான் தேடிக்கொண்டிருக்கிறேன். …
-
- 1 reply
- 1.9k views
-
-
காந்தி தாத்தா எம் தாத்தா இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்த "அச்சா" தாத்தா என மேடையில் முழங்கிடுவார்கள் எம் சிறார்கள் -புலத்தில் பாரதியார் எம் மாமா பார்தத்தின் மகா கவி,ஜெ கிந் என மேடையில் முழங்கிடுவார்கள் எம் சிறார்கள் -புலத்தில் இடுப்பையும் மார்பையும் குலுக்கி ஆடிடுவார்கள் மேடையில் போலிவூட் நாட்டியமாம் எம் குமரிகளும் கிழவிகளும்-புலத்தில் சின்னத்திரையில் சில நிமிடம் சிரித்தவளை அழைத்து சில்லறைகள் சேர்த்திடுவார் சபாகுழு எனும் எம்மவர்கள்- புலத்தில் இந்திய சாமிமார்களையும் சாத்திரிகளையும் அடைக்கலம் கொடுத்து அரவணைத்து மகிழ்ந்திடுவார் எம் மனிசிமாரும் மாமிமாரும் புலத்தில் ஜ.பி.எல்.இரவு முழித்திருந்து பார்த்து இந்தி…
-
- 9 replies
- 1.5k views
-
-
This day, previous year, More than quarter a million innocent lives Butchered by the brutal force of Chemical bombs, Cluster bombs And the most cruel ammunition Barred by the U.N. Blood-thirsty barbarians Destroyed tiny babies, innocent children And helpless ladies; Genocide carried in broad daylight When the U.N. stood as a passive spectator! No big powers dare open their mouths! No peace-brokers wished to mediate! The biggest democracy, U.S. Failed to condemn the genocide The Land of Lincoln Swerved from protecting The rights of minority! The country of George Washington Decli…
-
- 0 replies
- 683 views
-
-
எழில்மிகு அமெரிக்கா! - அரிமா இளங்கண்ணன் காலையிலே ஐந்தேகால் பரிதி தோன்றும் கடும்குளிரை விரட்டி நல்ல இதம்கொடுக்கும் மாலையிலே ஒன்பதிலும் வெளிச்சம் தந்தே மனங்கவரக் கதிரவனும் உறங்கப் போவான் காடுமரம் செடிகொடிகள் நிறைந்திருக்கும் கண்கவரும் மலர்க்கூட்டம் சிரிப்புதிர்க்கும் ஓடுகின்ற 'மிசிசிப்பி' ஆற்று நீரும் உடன் துணையாய் 'மிசெளாரியதும் வளம்கொடுக்கும் நாடியதிண் மீன்பிடிக்கச் செல்லு வோர்கள் நல்லபலன் கிடைத்ததெனக் களித்தி ருப்பர் ஆடுகின்ற சிறுவரெல்லாம் மாலைப் போதில் அமெரிக்கக் களங்களிலே மகிழ்ந்தி ருப்பர்! காலையிலே ஐந்தேகால் பரிதி தோன்றும் கடும்குளிரை விரட்டி நல்ல இதம்கொ டுக்கும் மாலையிலே ஒன்பதிலும் வெளிச்சம் தந்தே மனங்கவரக் கதிரவனும் உறங்கப் …
-
- 4 replies
- 1.2k views
-
-
நான் இரசித்த கவிதை -காதல் நட்பு
-
- 0 replies
- 7.1k views
-
-
தமிழனே தமிழனுக்கெதிரி ஒற்றுமை ஓங்கின் உண்டு பலம்.! வேற்றுமை கொண்டது தமிழனின் மனம்! தன் சுகத்தை பார்ப்பவன் தன்னினத்தை வெறுப்பவன் தன்னையே நினைப்பவன் தரமற்ற தமிழனிவன்! வேற்றினம் இரங்கினாலும் விடமாட்டான் ஈனத்தான் மானத்தை ஈடுவைத்து மகிழ்ந்து நிற்பான் பாவத்தான்! கலை என்பான் கலாச்சாரம் என்பான் கற்புநெறி காத்தலென்பான். கைநிறைய காசுவந்தால் - தன் கற்பைக் கூட விற்றிடுவான்! இறைவனென்பான் இசையென்பான் இசையினூடே இறைவன் என்பான் தன்னினம் வாடிநின்றால் தனக்கேன் வம்பென்பான்! இறைவன்கூட பழித்திடுவான் இதுபோன்ற இழிவானை! தனக்கேன் தாய்நாடு இருக்கிறதே வெளிநாடு இனியேன் தமிழினம் இணைந்திடும் புதுவினம் பூண்டிடுவோம் புதுவேசம் போட…
-
- 2 replies
- 887 views
-
-
முதல் வசந்தப் பாடல் வ.ஐ.ச.ஜெயபாலன் சுனாமிக்குச் பிந்திய வசந்தத்தில் மீனவ குப்பங்களில். பூத்த மரங்களின் எச்சங்களில் குயில்கள் பாட மாலைசூடிய குழந்தைகள் எசப்பாட்டுப் பாடியதை கண்ணீரூடு பார்த்தது போல இன்றும் கரைந்தபடி.. . மனிதனின் வாழும் ஆசையை எந்தக் கொம்பனாலும் கொம்பியாலும் பறித்து விட முடியாது என்றபடி வருடந் தோறும் கீரோசீமா நாகசாக்கியில் செறிகள் மலர்கிறதுபோல என் மண்ணிலும் முறிந்த வேம்புகள் மலர்கின்றன.. . . இற்றை வசந்த இப்பூந் தென்றலில் சுட்டெரிக்கப் பட்ட எங்கள் சோலைகளின் எச்சங்களில் பிள்ளைகளின் மதளைக் கூவலில் காமுற்று குயில்கள் பாடுகின்றன பாதைகளில் கால் மிதிக்க உயிர் கிழிகிறது. குலதெய்வங்களின் கல்லறைகளை உடைத்து …
-
- 7 replies
- 1.7k views
-
-
என் தாயே மனையாண்ட என் மணிமகுடத்தாயே உனை வாழ்த்த எனக்கு அருள் தாரே கருவில் எனைத் தாங்கி கண்மணி போல் காத்தவளே உருவில் உனைப் போல் வந்த என்னை- உன் குருதி கொடுத்து வளர்த்தவளே- நான் ஒரு நூறு பிழை செய்தாலும் உன் உயிர் போல் எனைக் காத்தவளே கள்ளிப் பாலூற்றிக் கருவழிக்கும் மா நிலத்தில் பிள்ளைப் பாலூட்ட மறுதலிக்கும் மானிடத்தில் துள்ளி வரும் குழந்தைக்குத் தாய்ப் பாலூட்டித் தாலாட்டி வெள்ளிப் பால் நிலவை அள்ளித் தருவேன் என்று அமுதூட்டி பெண்குழந்தையென்றாலும் பொன்குழந்தை எனப் பாராட்டி கண்ணின் இமை போல் காலமும் நீராட்டி மண்ணின் பெருமையை மனத்தினில் இசையாக்கி பண்பின் சிகரமாய் எனைப் பாரினிலே வேராக்கி விண்ணில் நின்றும் இன்றும் எனைச் சீராக்கும் எ…
-
- 3 replies
- 692 views
-
-
உன்னை கண்டேன் ஓவியனானேன் உன்னிடம் கண்டேன் ஒளி(ழி)ந்தவன் ஆனேன் உன் கண்ணை கண்டேன் கவிஞனானேன் உன்னை கண்ணால் கண்டேன் காதலானேன் உன் உரைகள் கவனித்தேன் பேச்சாளன் ஆனேன் உன் உடைகள் கலைந்தேன் சிற்பி ஆனேன் உன் மனதை கண்டேன் மகிழ்வானேன் உன் மார்பு கண்டேன் மழலையானேன் உன் கழுத்தை கண்டேன் முத்து குளித்தேன் ( முத்து குளித்தேன் . சங்குதான் கிடைத்தது ) உன் கவின் மேனி கண்டேன் காம ராஜன் ஆனேன். உன்னதை வில(ள)க்கி வித்தகனானேன் விலகி விடாதே காவியமே . வில்லனாகி விடுவேன்
-
- 4 replies
- 1.1k views
-
-
என்றென்றும் நன்றியுடன்..... முப்பாலுக்கு அப்பாலும் முதற்பாலாய் தாய்ப்பாலுடன் தமிழ்ப்பாலும் ஊட்டி நோய் ஏதும் அணுகாது நோன்பிருந்து சேயாய் எமை எல்லாம் செம்மையாய் வளர்த்தெடுத்த தாயே உனை வாழ்த்த தமிழில் வார்த்தையில்லை நீ தண்ணீர் ஊற்றி வளர்த்திருந்தால் நாம் தறுதலையாய் வளர்ந்திருப்போம் நீயோ கண்ணீர் ஊற்றி எம்மைக் கண்ணியமாய் வளர்த்ததனால் உன் கண்ணின் நீரெல்லாம் ஆனந்தக் கண்ணீராய் மாறியது கண்ணீரோடு விதை விதைப்போர் கம்பீரத்தோடு அறுத்திடுவார் என்று சொன்ன வேதமொழி என்றும் பொய்ப்பதில்லை எத்தனை இரவுகள் நீ உறக்கத்தைத் தொலைத்து விட்டு எம் இரவுகளைப் பகலாக்க உன் இரவுகளை இழந்திருந்தாய் எத்தனை தடவைகள் நீ உன் கனவுகளைத் தொலைத்து விட்டு எம் எதிர் க…
-
- 9 replies
- 2.1k views
-
-
எனக்கொரு அம்மா இருக்கிறாள். பத்து மாதம் சுமந்து பெற்று பால் ஊட்டி சீராட்டி தாலாட்டி பள்ளிவரை அனுப்பி வைத்தாள் கல்வியோடு ,கண்டிப்பும் பரிவும் பாசமும் ஊட்டியவள் . எது கேடாலும் பெற்று தருவாள் பள்ளிக்கு பணமா? சுற்றுலாவுக்கு அனுமதியா தோழிகளோடு ஊர் சுற்றலா? கடல் கடந்து நான் வெளி நாடு வந்த போதும் என்னுடன் ...வாழும் அம்மா பள்ளிக்கு செல்ல நேரமானால் காலைச்சாபாடு ..ஊட்டி விடும் அம்மா சகோதரிகள் இருவர் ..மணமுடித்து வெளிநாட்டில் கடைக்குட்டி நானும் பல்கலைக்கல்லூரியில் மணமுடித்து நான் மறுவீடு சென்றாலும் மறக்காமல் என்னுடனே வந்து விடு...... வெள்ளைக்காரர் நாட்டில் அன்னையர் தின விழாவாம் எனக்கு தினமும் என் அன்னை தின விழா தான்
-
- 6 replies
- 1.1k views
-
-
போதுமடா சாமி! கட்டிய கோவில்களும் போதும் வெட்டிய புதைகுழிகளும் போதும் அமைத்த ஆலயங்களும் போதும் தொலைத்த உறவுகளும் போதும் எரித்த தீபங்களும் போதும் எரிந்த சடலங்களும் போதும் படித்த பஜனைகளும் போதும் வடித்த கண்ணீரும் போதும் எடுத்த காவடிகளும் போதும் கடித்த குப்பிகளும் போதும் இழுத்த சப்பரங்களும் போதும் இழந்த சரித்திரங்களும் போதும் படைத்த படையல்களும் போதும் கிடைத்த வெகுமதிகளும் போதும் சாமியால் பிழைத்த மனிதர்களும் போதும் மனிதரால் பிழைத்த சாமிகளும் போதும் போதாமல் இருப்பதின்று மனிதருக்காய் வாழும் மனிதர்கள் http://gkanthan.wordpress.com/index/saami/
-
- 5 replies
- 1.1k views
-
-
நோர்வீஜிய கலாச்சார அமைப்பும் ஒஸ்லோ குல்த்தூர் ஸ்கூலும் என்னிடம் உலகம் வெப்பமயமாதல் பற்றி நாடகம் ஒன்று எழுதும்படி கோரினர். உலகம் வெப்பமயமாகி உருகி பிரளயம் ஏற்பட்டபின்னர் நிலத்தை தேடி படகுகளில் அலையும் மக்களை அடிப்படையாக வைத்து மறை முகமாக எங்கள் கதையையும் சொல்லும்வகையில் நாடகம் ஒன்று எழுதியிருக்கிறேன். நாடத்தில் தமிழ் மாணவர்களும் ஒஸ்லோ பலே பள்ளி நோர்வீஜிய மானவர்களும் ஒஸ்லோ நாட அமைப்புகளைச் சேர்ந்த நோர்வீஜியர்கள் ஆபிரிக்கர்களும் நடிக்கின்றனர். ஆங்கில நோர்வீஜிய கதைச் சுருக்கமும் வசனங்களும் உண்டு. இறுதி முடிவில் இயற்க்கை அன்னை இரக்கப் பட்டு வெள்ளத்தை உறைய வைக்கிறாள் எல்லோரும் சேர்ந்து பனியை பந்துகளாக்கி விழையாட்டு விழையாட்டாய் மலை முகடுகளுக்கும் துருவங்களுக்கும் எறிகிறார்…
-
- 13 replies
- 1.7k views
-
-
இழப்புக்கள் பிறந்தது அவைகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றது காலத்தால் தேற்றமுடியாத காயங்களில் குருதி வழிந்துகொண்டே இருக்கின்றது அன்றும் அசுரர்களை அழிக்க கடவுள்தான் வேண்டும் இன்றும் எம்மை அழிப்பவனை யாரோ ஒருவன் அழிக்கவேண்டும் அப்படி நடந்தால் கொண்டாடுவோம் எமது பெருவிருப்பங்களுக்காக சிலுவை சுமந்தவர்கள் கல்வாரிக்குள் இருந்து எழவே இல்லை இலக்கை அடையமுடியாதவர்களின் மோட்சத்தை நாமே பிரகடனப்படுத்திவிட்டு இலக்கை நோக்கி போரை மீண்டும் தொடர்கின்றோம் போரின் முடிவு இம்முறை நிறைவாக இருக்கவேண்டும் சூரனின் வயிற்றுக்குள் சேவலை மட்டுமே விடுவது வழக்கம் இம்முறை மயில்க்குஞ்சையும் சேர்த்து விடவேண்டும் கடசியாக முருகன் வேலெறிந்து சூரன் பாட்ட…
-
- 20 replies
- 2.3k views
-
-
உயிரை வருத்தி நீங்கள் செய்த தியாகங்கள் வீணாகிவிடக் கூடாதேயென நித்தம் நித்தம் ஏங்கியேங்கி நாங்கள் இப்போது மூச்சுத்திணறி நிற்கின்றோம்! தாயகம் சுமந்துவரும் உங்கள் நினைவுகள் எம் ஒவ்வொருவர் மூச்சுக்காற்றிலும் கலந்து மண்ணை மீட்பதில் நாம் கண்ணாயிருக்க ஆன்ம பலத்தை எங்களுக்கு தரட்டும்! http://karumpu.com/wp-content/uploads/2010/song.mp3 தகவல்: நிதர்சன் | வன்னித்தென்றல்
-
- 1 reply
- 1.1k views
-
-
வரலாற்றுப்பழி ஏற்காதீர் இரா. செம்பியன் மகேந்திரன் எட்டப்பராசன் எழுதியது சற்றெண்ணிப் பாருங்கள் தமிழ்ச்சான் றோரே! சரிதானா கோவையிலே மாநா டின்று? வெற்றிடமா யாக்கிவிட்டே ஈழ நாட்டை வெற்றிவிழாக்கொண்டாடப் போகின் றீரா? வெற்றார வாரத்தில் மிதப்போ ரெல்லாம் விலைகொடுத்து வாங்குகின்றபொருளா நீங்கள்? மற்றவர்க்கு வழிகாட்டும் மாண்புள் ளோரே வரலாற்றுப் பழி ஏற்றுக் கொள்ளா தீர்கள்! குன்றனைய குறையுடலார் முள்வே லிக்குள் கொட்டிவைத்துக் கிடக்கின்றார் தமிழீ ழத்தில் சென்றங்கே கண்டவர்கள் இங்கு வந்து சிறப்பாக நடத்துவதாய்ச்செப்பு கின்றார்! என்னையடா கொடுமையிது! சொல்லக் கூசும் இழிநிலையில் நடத்துவதை மறைக்கு மிந்…
-
- 0 replies
- 926 views
-
-
-
வித்து காசு பாத்துறாதண்ணே எம்புட்டு நேரம் நிற்கிறது சீக்கிரமா படமெடுண்ணே அம்மாக்கு ஒத்தாசையா செங்கல் தூக்கனும் அழுக்குத் துணி மாத்தி கலைஞ்ச முடியை வாரி பூச்சுடி அழகா போஸ் கொடுக்க வருச பொறப்புக்கு வாண்ணே இந்த படத்தை எங்கயும் வித்து காசு பாத்துறாதண்ணே பள்ளிக்கூட போற வயசில்ல பக்கபலமா அம்மாக்கு இருக்கேன் குழந்தைத் தொழிலாளினு சொல்லி பொழப்பை கெடுத்துராதண்ணே உழைச்சாத்தான் பசிக்கிற வயிறும் சந்தோசப்படும் இந்த விசயம் படத்தில தெரியுமாண்ணே! http://www.greatestdreams.com/2010/03/blog-post_04.html
-
- 5 replies
- 1.2k views
-
-
கவனம் தமிழா! கவனம்! வைகாசித்திங்கள்( ஆங்.) 18ம் நாள். முள்ளிவாய்க்கால் படுகொலை என்று அறியப்பட்டதினம் இது! அறிந்தும் அறியாததுபோல் - தெரிந்தும் தெரியாததுபோல் உலகமே கண்ணைமூடிக் கொண்டிருக்க, இந்தியக்கோட்டான்களும் சிங்களக்குரங்குகளும் சேர்ந்து ஆயிரக்கணக்கான அப்பாவித்தமிழர்களை உயிரோடு புதைத்ததினம் இது!! தமிழுறவுகளைத்தொலைத்தமையை எண்ணி, முழுத்தமிழினமுமே கலங்கிநிற்கும் நாள் இது! மனிதத்தைத்தொலைத்தமைக்காக முழு உலகமுமே வெட்கித்தலைகுனியவேண்டிய நாள் இது! தமிழனாகப்பிறந்த ஒவ்வொருவனும் தலையிலடித்துக்கதறியழ வேண்டிய நாள் இது!! அழுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் ,அன்னைதமிழ் துயர்போக்கும் அடுத்தகட்ட நகர்வுக்காக வீறுகொண்டெழவேண்டியநாள் இது !!! …
-
- 1 reply
- 979 views
-
-
அன்பு பெருக்கும் கனிவு வேண்டும், துன்பம் உதிர்க்கும் உறவு வேண்டும், ஊக்கம் கொடுக்கும் உளம் வேண்டும், ஏக்கம் தணிக்கும் பரிவு வேண்டும், வீழ்வு தடுக்கும் உறுதி வேண்டும், தாழ்வு போக்கும் விரிவு வேண்டும், சஞ்சலம் நீக்கும் தெளிவு வேண்டும், அஞ்சாமன மாக்கும் பக்தி வேண்டும், வேற்றுமை விலக்கும் வலிவு வேண்டும், ஒற்றுமை படைக்கும் புத்தி வேண்டும், வாழ்வு பெருக்கும் சக்தி வேண்டும், ஈழம் அமைக்கும் பலம் வேண்டும்! தமிழ் ஈழம் அமைக்கும் தவம் வேண்டும்!! - சயனி
-
- 25 replies
- 2.5k views
-
-
அண்டம் சதிராட பிண்டமாய் நான் பிண்டத்தில் குடியிருந்து பிண்டமும் பிண்டத்தைச் சுமக்க நீரினுள் குடியிருந்தேன் நான். முக்கிலும், வாயிலும் நிணமும் நீரும் சூழ்ந்துருக்க நாபியில் சுவாசித்துப் பிண்டமாய் நான், தவிக்கின்ற பிண்டமாய் நான் கையும் காலும் சுருட்டிக் கொள்ள அசைய முடியா சூழலில் அசைந்தாடும் பிண்டமாய் நான் ஓசையின்று அழும் பிண்டமாய் நான் தவிர்ப்பு ஏறி. இடம் போதாமல் கை,கால் அசைத்து உதைத்து எழும்பிப் பிண்டமாய் சுழன்று உதைத்து உதைத்து பிண்டம் வெளி வர பனிக்குடம் உடைத்து வெளிவர பிண்டத்தில் இருந்து உயிர்ப்பு நிலை எய்திப் பிண்டமாய் நான், எடுத்துக் கொஞ்சிய கைகளில் குழந்தையாய் நான். நான் வளர்ந்து,வாழ்ந்து நரை,திரை எய்தி மரணி…
-
- 2 replies
- 764 views
-
-
எங்கேனும் இருந்தால் எழுது ஒரு பதில் நீ வருவதாய் கனவுகள் நீ எம்மோடு வாழ்வதாய் நினைவுகள்.... நினைவுகள் தின்று நெஞ்சில் துயர் மீதமாய்க் கனக்கிறது..... இரத்தம் செறிந்த புழுதியில் நீயும் புழுதியாய் கலக்கையில் ய…
-
- 5 replies
- 1.7k views
-