Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மௌனம் பேசும் வார்த்தைகள் தொலைந்து நின்ற தருணங்கள் கண்ணாடியில் மறைந்த வெட்கங்கள் கனவில் கலந்த ரகசியங்கள் உள்ளம் கேட்கும் ஓசையில் அடங்கிப் போகும் - உனக்குள் எனைத் தொலைத்த நாட்கள்!

  2. என் தேசப்பெருநிலமெங்கும் குவிந்து கிடக்கும் வெண் சாம்பல் மேடுகள் புன்னகைக்கின்றன....... தோழர்களே நன்றி. காலநீட்சியின் கனவுகள் சுமந்த வாழ்தலை ஈழமீட்சிக்காய் உதிர்த்துவிட துணிந்த வீரம் கண்டு, உமிழ முடியாத பெருவெப்பம் சுமந்து உறங்குமவர்கள் விழிகள் பனிக்கின்றன............ உங்களுக்காக............ தொண்டைமான் நீரேரியும் வழுக்கியாறும் -அழகிய சப்ததீவுக்கூட்டங்களும் தசாப்த உறக்கம் கலைத்து நோக்குகின்றன, சோழமண்டல உறவுகளே உங்களின் எழுச்சியை, வல்லைமுள்ளி வெளிகளுக்கும் பகைபணிந்த ஆனையிறவுக்கும், வலசைவரும் ஆயிரமாயிரம் பறவைகளிடம் வாழ்த்துக்களை பகிர்கின்றனர் கண்களால் எம்மவர்கள் -அவை நாளையாவது உங்களிடம் வரும் என்ற நம்பிக்கையில். கருக்கொண்ட மேகங்கள் எழத்தொடங்கிவிட்டன-…

  3. மனிதன் காட்டுக்குள் ..... நுழையும் போது...! குரங்குகள் தாவும் ...! நரிகள் ஊளையிடும் ...! குருவிகள் ஓலமிடும் ..! இத்தனையும் அவை சந்தோசத்தால் .. பயத்தால் செய்யவில்லை.... மரங்களுக்கு அவை .... கொடுக்கும் -சமிஞ்சை... மனிதர்கள் வருகிறார்கள்... மரங்களே விழிப்பாக ..... இருங்கள் எச்சரிக்கின்றன ....!!! & இயற்கை வள கவிதை கவிப்புயல் இனியவன்

  4. எமக்குத் தெரியும் எங்கு நீ இருக்கிறாய் என்பது அவர்கள் காட்டிய முகம் அவர்கள் காட்டிய உடல் இதிலெல்லாம் இல்லாதவன் எங்கிருப்பாய் என்பது எமக்குமட்டுமே தெரிகிறது நீ அடிக்கடி சொல்வாயே எங்கெல்லாம் பேரினவாதம் நடக்கிறதோ அங்கெல்லாம் இருப்பேன் என அப்படியெனில் இங்குதான் இருக்கிறார் பின் எவனுக்கும் தெரியவில்லையே... அதெப்படி தெரிவேன் பகையை மூட்டியவனுக்கும் புகையை மூட்டியவனுக்கும் என்கிறாய். அவர்கள் காட்டிய படத்தில் ஈழத்தை தவிர்த்து வானத்தைப் பார்க்கிறது உன் கண்கள் அப்போதே தெரிந்துக்கொண்டோம் அது நீ இல்லையென நீ இருக்கும் துணிவில் அனைத்தையும் உன்னிடமே விட்டுவிட்டோம் இப்போதுதான் புரிகிறது நாங்கள் என்னசெய்ய வேண்டுமென்பது …

    • 3 replies
    • 1.2k views
  5. தீண்டத் தீண்டத் துடிப்பவளே நோண்ட நோண்ட நெருங்குபவளே தொடுகை எனும் மந்திரத்தால் தூரம் எனும் இலக்கை தகர்ப்பவளே..! அழகு முகம் காட்டி உடல்தனை வருடத் தருபவளே சுகிப்பின் களிப்பில் சூடாகிச் சிணுங்குபவளே..! அணைப்புத் தப்பினால் அலங்கோலம் ஆகி நிற்பவளே..! தொடாமல் நானிருக்க விரதம் கொள்ளத் தூண்டுபவளே கொண்ட கொள்கை நீளாமல்.. சிணுங்கி அழைத்து சில்மிசத்தில் சிக்க வைப்பவளே..! மணிகளை வினாடிகளாக்கி இனிய பொழுதை நொடியில் விழுங்குபவளே.. நீ இன்றிய தருணங்கள் நினைச்சும் பார்க்க முடியல்லையடி..! எட்ட நின்றாலும் கிட்ட வந்து சட்டைப் பையில் அடங்கி விடும் அழகினவளே நீ ..சட்டென்று தொலைந்து விட்டால் பதைபதைக்குமே மனசு..! பெற்ற இடத்தில் சொல்லாத ரகசியம் உன்னிடத்தில் சொல்லி வை…

  6. Started by manthahini,

    எப்படி நான் வாழ்த்து அனுப்புவேன்? உலகெங்கும் அன்னையர் தினம் அன்பான வாழ்த்துக்களுடனும் அழகான பரிசுப்பொருட்களுடனும் இனியநினைவுகளாய் ஆயத்தமாக எங்கள் தாய்மண்ணில் எப்படி நகர்கிறது? பத்துமாதம் சுமந்து பெற்று பகலிரவாய் கண்விழித்து கண்ணுக்குள் மணியாய் காத்து வளர்த்த மகன், நட்ட நடுநிசியில் வந்த கொடுங்கோலர் கூலிகளால் அடித்து உதைக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட-அந்த கொடியநிகழ்விலிருந்து மீளாது துடித்து துவண்டு அழும் என் அன்பு அம்மா!-உனக்கு எப்படி நான் வாழ்த்து அனுப்புவேன்? உடைந்த உள்ளமும் உடையாத நம்பிக்கையுமாய் படைமுகாம்கள்தோறும் பதைக்கும் மனதுடன்-என் தம்பியை தேடி அலையும்-உனக்கு எப்படி நான் வாழ்த்து அனுப்புவேன்? உயிருடன் என் தம்பி மீள்வானா என இங்கிருந்து நான் தவிக்க, துள…

  7. மறக்க முயல்கிறேன் உன்னை மறக்க முயல்கிறேன் முடியவில்லை உன்னை வெறுக்க முயல்கிறேன் முடியவில்லை என்னை அறியாமலே உன்னை நான் விரும்புகிறேன் என்னை அறியாமலே நான் உன்னை காதலிகின்றேன் என் மந்தில் உன்னை கோவிலாக நினைத்து இருந்தேன் என் மனம் சில பொழுதுகளில் அழுகின்ற வேளையில் உள்ளிருக்கும் நீ நனைவாய் என்ற தயக்கம் வேறு அதனால் உள்ளத்தால் பொய் சிரிப்பு சிரிக்க முடியாத போதும் கற்றுக்கொண்டேன் இதற்க்கு மேல் என்னிடம் உனக்காக பொய்யாக்க என்னிடம் எதுவுமில்லையடா இதற்க்குமேல் நான் நானாக இல்லை இனியும் கொடுக்க இருப்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்... என் உயிர் தான் அது கூட உனதாகி பலகாலாமே...

    • 7 replies
    • 1.7k views
  8. எங்கே என் உயிரே..... உயிரே ஏன் என்னை வெறுக்கின்றாய் நான் கேட்டது என்ன... நான் உன்மேல் வைத்திருக்கும் அன்பு.பாசம்.காதல் பொய்யா என்று கேட்டேன் ஆணால் நீ என் மேல் காட்டும் வெறுப்பு நீ ஆம் எண்று சொல்லுவதைப் போல் உள்ளது. தயவு செய்து எனக்கு ஒரு மெயில் அனுப்பு நீ என்னை வெறுக்கவில்லை எண்றும் மறக்க வில்லை எண்றும் ஏன் எண்றால் என் பதிலுக்காக காத்திருக்கிறாள் இன்னொருத்தி உன் பதிலைக்கேட்டுத்தான் நான் அவளுக்கு பதில் சொல்ல வேண்டும். என்ன பார்க்கின்றாய் யார் அவள் என்றா? அவள் பெயர் மரணம் அவள் என் பதிலை எதிர் பார்த்து என் தலைமேல் தவமிருக்கின்றாள். என் உயிரே நீ எங்கே எனக்கொரு மெயில் அனுப்பு..... (இவை நேற்று நடந்த உண்மை சம்பவத்தை தழுவியது)

    • 6 replies
    • 2k views
  9. கழிவறையில் ஓவியம் தீட்டுவதில் அலாதி சுகமெனக்கு. மனதிற்கு உகந்தவளை சுவற்றில் தீட்டுவதும் மனதார இகழ்ந்தவர்களை சொல்லத்தகா திட்டுவதும் இங்கேதான்.. சில புகழ்பெற்ற ஓவியங்கள் வரையக்கற்றுக் கொண்டதும் இங்கேதான். இங்கே சுழிப்பவர்கள் அங்கே இளிப்பார்கள். கழிவறைக் கதவைத் திறந்து வெளியே செல்லுகையில் ஆழ்ந்த திருப்தி எனக்கு. இன்னும் நால்வர் அதைக் காணக்கூடுமல்லவா?

  10. சுற்றி சுற்றி வட்டமிட்டாய் உள்ளம் எங்கும் முத்தமிட்டாய் தேன் குழைய பேசி என்னை தேனி போல மொய்கவைத்தாய் காத்திருந்து கதைகள் பேசி காதல் வலை வீசிச் சென்றாய் கள்ளமில்லா எந்தன் நெஞ்சில் காதல் விதை தூவிச் சென்றாய் எட்டி நின்றேன் ஏணிப்படியில் கிட்டவந்து இறக்கி விட்டாய் என் உள்ளம் எல்லாம் உன் சிந்தை என்றாய் சிக்கித் தவித்து தேடிவந்தேன் தேடாமல் நீயும் போனது ஏனோ

  11. "எரியுண்ட நூலகம் / முருகேசு மயில்வாகனன்" யூத கவிஞரான ஹெயினின் வார்த்தைகள் இவை. “எங்கே புத்தகங்களை எரிக்கிறார்களோ, அங்கே ஈற்றில் மனிதர்களையும் எரிப்பார்கள்” எவ்வளவு உண்மை. Quoting from the Jewish poet Heinrich Heine. “Where they burn books, at the end they also burn people” How true is it.

  12. அம்மா ஆயிரம் உறவு எம்மைத் தேடியே வந்தாலும் அம்மா உன்போல் அன்பான உறவெமக்கு அகிலத்தில் இனி வருமா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா - உன் பரிவிற்கா? பாசத்திற்கா? நட்பிற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா. நல்லதொரு மனையாளாய் நானிலத்தில் வாழ்ந்ததற்கா? பெற்றவர்கள்தான் உவக்க பெருமையுடன் வாழ்ந்ததற்கா? உற்ற உம் உறவுகளை உயர்வுடனே சுமந்ததற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா எம் உயர்வுக்காய் உனை உருக்கி ஓடியோடி உழைத்ததற்கா? - நாம் உடைந்துபோன நேரங்களில் உறுதுணையாய் நின்றதற்கா? எம் திறமைகள் அனைத்திற்கும் திறவு கோலாய் இருந்ததற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா. கருத்தாய் கல்விக்கண் ஊட்டியே வளர்த்ததற்கா? கடமையே உயர்வென்று கண்ணியத்தை போதி…

  13. சிந்தனை எனை விட்டு என்றோ போனதனால் கேட்கும் எதுவும் மனதில் பதிய மறுக்கின்றது பசிதாகம் கூட எடுக்காமல் கிடக்கின்றது நாவின் சுவை மறந்து நாளாகி விட்டது பச்சைத் தண்ணீர் மனம் மறுக்க எப்போதும் பழசெல்லாம் வந்து வந்து போகின்றது காதில் கலகலப்புக் கதைகேட்டு நாளாகி கட்டியவன் கூட காலாண்டாய் இல்லாமல் தொட்டதுக்கும் துணைவேண்டி துயரோடு தூக்கமிழந்து கிடக்கிறேன் கடைகண்ணி சென்றும் கனகாலம் ஆகி கண்ணாடி கூடக் கறுப்பாகிப் போச்சு கண்பார்வை போயும் கனநாளாய் ஆச்சு கோயில் குளமுமில்லை கூடிப்பேச யாருமில்லை கொண்டை மயிர் முடியக் கூந்தலில்லை கோதிக் காயவைக்கும் நிலையுமில்லை பத்துப் பிள்ளை பெற்றும் பசியாற வழியுமில்லை பட்டினி கிடக்கவும் பாள்மனது கேட்குதில்லை பக்கத்தில் இருப்போரின் பாசம் இழந்…

  14. ஒப்பாரி வீட்டிலும் அழகு ஒன்றுகூடலிலும் அழகு -------மலர் மாலை--------- @@@ தொண்டனுக்கு பிழைப்பு தலைவனுக்கு உழைப்பு -------தேர்தல் ----------- @@@ உடல் முழுதும் நெருப்பு த்துளை வருத்தினாலும் இன்பம் தருகிறது -------புல்லாங்குழல் ------- @@@ இன்பமென நினைத்து இன்பத்தை இழக்கிறான் -----குடிகாரன் ----- @@@ வானம் திரவமாய் தரும் தங்கம் நிலம் தங்கமாய் மாற்றும் திரவம் -----பருவ மழை ------

  15. ஆனந்தபுரம்: நஞ்சுண்ட வீரம் ஓரினத்தை அழிக்கும் யுத்தத்தில் சுற்றி வளைக்கப்பட்ட களமொன்றில் ஈற்றில் நஞ்சை ஆயுதமாக்க உயிரை வேலியாக நிலத்தில் ஊன்றி தடுத்து நின்றனர் போராளிகள் வெற்றியடைந்த எண்ணற்ற சமர்களின் கதைகளை அலங்கரிக்கும் கனவு வீரர்களின் கருணையான முகத்தை அன்புறைந்த வார்த்தைகளை சனங்களுக்காய் களமாடும் வீரத்தை கடக்க முடியா நஞ்சு தன்னலமற்று நஞ்சருந்திய போராளிகளின் கனவுகளால் பச்சை நிறமானது நிலம். பொறிக்குள் வைக்கப்பட்டிருந்த எல்லா வகையான தந்திரங்களையும் முறியடிக்க நெடுநேரம் போராடினார் சூழ்ச்சியால் அபாயமாக்கப்பட்ட நஞ்சு வலயத்தில் காற்றுக்குத் தவித்தனர் குழந்…

    • 0 replies
    • 989 views
  16. பள்ளி காதலை நினைத்துப் பார்க்கிறேன் அமைதியான ஒடையின் - சிறு அலையெழுப்பும் சத்தங்களாய் என் மனதில் சிறு சலனங்கள். ஆரம்ப கல்வியின் பின் அடுத்ததாய் ஆறாம் வகுப்பு முதல் சில நாட்களில் முன் அறியா பல முகங்கள் பல்வேறு திசையிருந்தும் பாடசாலையை மொய்த்திருக்க என் வகுப்பிலே பளிச்சென்று ஒர் முகம் பட்டாம் பூச்சிபோல் என்கண்களில் ! பயமொரு பக்கம் மீண்டும் பார்க்க துடித்தது என் முகம் காரணம் புரியவில்லை அவளை பட்டாம் பூச்சியென்பதா பால் நிலவு என்பதா பயமறியாது துள்ளி ஓடும் மான்குட்டி என்பதா? அவளின் பார்வையொன்று என்மேல் விழுவதற்கு கண்களை மூடிக்கொன்று கணபதிக்கு கற்பூர நேத்தி வைக்கிறேன் மூடிய கண்களை மறுபடியும் திறப்பதற்குள் உணர்கிறேன…

  17. கம்முனிகேசன் வெற்றி..! தந்தி ட்ரங்கால் தந்தி ஆபிஸ் டெலிபோன் போஸ்ட் கார்டு கடிதம் ஏர் மெயில் போஸ்ட் ஆபீஸ் செல்போன் சிம் கார்ட் நெட் வொர்க் டாப் அப் மெமரி கார்ட் சரியில்லை என்றாலும் சிம் கார்ட் சரியாக இருக்கிறது சார்ஜ் மட்டும் தான் குறைவாக உள்ளது ஒருவேளை பேட்டரி சரியில்லையோ செல்போன் ரிப்பேர் கடைகளில் குவியும் செல்போன் விரும்பிகள்..! இவ்வாறு எவ்வளவோ இருக்கிறது தமிழக மக்களுக்கு..? ஆனால் இரண்டு சிம் கார்டு போட்டு எப்படி பேசுவது என்ற கேள்விகளை புறந்தள்ளி நிரம்ப பின் தங்கி இருக்கிறோமோ என்ற அச்சம் வந்தவுடன் எப்பொழுது நாம் வீட்டுக்கு போய் ஒரு ஓவியமான நமது செல்போனை நோண்டுவது என்ற ஆர்வம்…

  18. இவர்கள் ராஜீவுக்காக அழ மாட்டார்கள் ! 1991 ஆம் ஆண்டு ராஜீவின் கொலையின் பின்னான நாட்களில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நடத்திய கொலை வெறியாட்டத்தையும், காலம் காலமாக அக்கட்சி நடத்திவரும் கொடுன்கோல் அரசியலையும் கண்டித்து எழுதப்பட்ட கவிதை இது. அண்மையில்த்தான் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்! பரோவா. எகிப்திய மன்னன். தான் இறந்தவுடன் தனது பட்டத்தரசியையும், ஆசை நாயகிகளையும், மந்திரிப் பிரதானிகளையும், தனது ஆடை ஆபரணங்களையும், பொக்கிஷங்களையும், அடிமைகளையும் தன்னுடன் சேர்த்துப் புதைக்கச் சொன்னான் அந்த மன்னன். பூவுலக வாழ்வைச் சுவர்க்கத்திலும் தொடரவேண்டுமென்பது அவன் ஆசை. ஆசை நி…

  19. அழுகின்ற பிள்ளைக்கு கொடுக்க உணவில்லை.. குளிரைத் தாங்கிட போதிய உடுப்பில்லை.. விழுகின்ற குண்டுகளின் வேகத்தை பொறுத்தே, அடுத்த நிமிடங்கள் உயிர்வாழ்கிற நிலை.. எங்கெல்லாம் குண்டுகள் விழுகின்றனவோ அங்கெல்லாம் அழுதபடி தமிழ்த் தாய்மார்கள்... இங்கெல்லாம் நடக்கிற இன்னல்கள் கண்டும் இனிக்குமா நமக்கு புத்தாண்டும் பொங்கலும்? காந்தியம் பேசிவிட்டு களவாணித் தனமாக "இந்தி"யன் அளித்த ஆயுதங்கள் கொண்டு, சிங்கள வெறியன் தொடுக்கிறப் போரில் "இந்தி"யர் என்பதால் நமக்கும் பங்குண்டு..! கொல்லாதே என்று கூக்குரல் எழுப்பினால் தேசத் துரோகமாம் இந்தியம் சொல்கிறது... கொலைகார "இந்தி"யனாய் வாழ்ந்து தொலைப்பதைவிட தமிழனாய் தேசத் துரோக…

    • 4 replies
    • 2.4k views
  20. கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு-பா.உதயன் 😂 —————————————————————- இஞ்சியும் உள்ளியும் ————————— இஞ்சியும் உள்ளியும் தன்னையா கொல்லுமாம் கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. பயம் ——- மனிதரை கண்டு மனிதர் பயந்ததை பார்க்க கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. முகம் தொலைந்த மனிதன் ———————————- முகத்தை எல்லாம் மூடிப் போகும் மனிதரை பார்த்து கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. கடுகு சிறிது காரம் பெரிது ———————————- கண்ணுக்கே தெரியாத என்னைக் கண்டு வீட்டுக்க ஒழிக்கும் மனிதனைக் கண்டு கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. கொல்ல முடியல்ல ————————- எத்தினை யுத்தம் செய்தீர் எவ்வளவு மனிதரை கொண்டீர் என்னை மட்டும் கொல்லவா முடி…

  21. இரத்தினக் குவியலிலே - சில பித்தளைத் தகடுகள் இனிய கவிதையிலே - சில இலக்கணப் பிழைகள் மருத்துவ மனையிலே - சில மலேரியா நுளம்புகள் விருந்துப் பந்தியிலே - சில வேண்டாத கரப்பான்கள் நெல்விளை வயலிலே - சில நச்சுள்ள செடிகள் நல்லரிசி மூட்டையிலே - சில சுண்டெலிப் புழுக்கைகள் ஞானிகளின் சபையிலே - சில ஞான சூனியங்கள் சாமிகளின் சந்நிதியிலே - சில சாத்தான்களின் குஞ்சுகள் புலிகளின் காட்டிலே - சில பெருச்சாளிப் பீடைகள் தமிழரின் இனத்திலே - சில தரங்கெட்ட ஜென்மங்கள் http://gkanthan.wordpress.com/index/eelam/peruchaali/

    • 7 replies
    • 3.4k views
  22. மெய்வலியும் செல்நிலையும் வாழ்நாளும் தூ ஓழுக்கும் மெய்யா யளிக்கும் வெறுக்கையிலார் வையத்து பல்கிளையும்வாட பணையணைதோள் சேய்ந்திரங்க நல்லறமும் பேணாது நின்றே யார்ப்பரிக்க திரைகடலும் ஓடியங்கே தம்முயிரைப் பேண விரண்டவர்க் கெல்லாம் எங்கனம் ஆவலுண்டு கருமையின் மேனியர் எனவசைமொழி கூற கருமயிர் தன்னை நரையிராக்கி கவலையுமறந்து மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களுள் பற்றிய செய்கையும் பரப்பிடு கொள்கையும் கற்றிட நம்மவர் காரணி யாதெனில் மற்றவர் புகழ்ந்திட முழுதுமே தழுவி தரணியில் தமிழினம் பொய்தழிவெய்தி காரணியின்றிக் கண்ணீர்க் கோலமாய் பூரணவாழ்வு புரிந்திட்ட வகையில் தாய்த்தமிழீழம் தறுகண் மிலேச்சரால் மாய்த்திடலறியா மாற்றலர் தொழும்பராய் தாய்பிறர் கைப்பட சகிப்பவனாகி…

  23. Started by kayshan,

    நிரந்தரக் காயங்களின் தற்காலிக மருந்து எரிக்கும் நினைவுகளைத் தணிக்கும் எழுத்து துயரச் சாகரத்தின் சிறுதூரப் படகு மரணித்த மனந்தனிலே மலரமுயலும் குறிஞ்சி

    • 13 replies
    • 841 views
  24. Started by வாலி,

    துடியிடை உடை இழந்து- இளமுலை மடிமடை கசங்கி வருமுயிர் சுமந்து கொடியிடை நடை தளர்ந்து - இளநகை பிடிநடை பயின்று வருமழகே பெண்ணழகு!

    • 7 replies
    • 1.6k views
  25. காதல் ....எந்த. .....? நிச்சயித்து காதல் செய்தால் -பாசம் .. நிறத்திற்காக காதல் செய்தால் -காமம் . அழகிற்காக காதல் செய்தால் -மோகம் . பணத்திற்காக காதல் செய்தால் -வேஷம். குணத்திற்காக காதல் செய்தால் -நேசம். கண்டவர்களை யெல்லாம் காதல் - செய்தால் நாசம். இதில் நாம் காதல். .எந்த.....? எங்கெங்கு போவேனோ. என்னென்னஆவேனோ . தலையில் எழுதியது தலைகீழாக போகுமோ. சுற்றித்திரிந்தும் கிடைக்காத வரமென்றெண்னி உன்னை பார்க்க செருப்பாய்தேய்ந்தேன். வாழ்வென்னும் வெகுமதியை கடவுள் நமக்கு வழங்கியிருக்கிறார். நம் வாழ்தலைப் பொறுத்தே அது மகிமையடைகிறது என காட்டியவன் நீ. எந்த கனவையும் நன…

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.