கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
சுற்றமும் உற்றமும் ஊர் முற்றமும் முழு நிலவும் கவளச் சோறும் கருவாடும் பனங்கட்டியும் பணியாரமும் மண்சட்டியும் கல்லடுப்பும் தட்டை வடையும் எள்ளுப்பாகும் ஒடியல்கூழும் நண்டுக்கறியும் ஊறுகாயும் மோர்மிளகாயும் ஆலமரமும் பிள்ளையார் கோயிலும் வறுத்த கச்சானும் வில்லுப்பாட்டும் கிட்டிப்புள்ளும் கொக்குப்பட்டமும் மாட்டுவண்டியும் பொச்சுமட்டையும் பஞ்சுமுட்டாயும் இஞ்சித் தேநீரும் பூவரசும் நாதஸ்வரமும் வாழைமரமும் பாலைப்பழமும் வல்லைவெளியும் முல்லை நிலமும் பள்ளிக்கூடமும் பழைய நண்பரும் சித்திரைவெயிலும் செவ்விளநீரும் மாரி மழையும் மண்வாசமும் மதவடியும் உதயன் பேப்பரும் லுமாலா சைக்கிளும் குச்சொழுங்கையும் பேரூந்தும் ப…
-
- 9 replies
- 1k views
-
-
இது நான் எழுதியதல்ல இந்த லிங்கையும் தொலைத்து விட்டேன் மன்னிக்கவும் வெறுமே நிணமும் நீரும் கொண்ட ஒரு பிண்டமல்ல வீரமும் விடுதலை வேகமும் கொண்டவன் ஈகமும் மனதில் ஈழமும் கண்டவன் தானைகள் தகர்த்தொரு தடவழி சமைத்தவன் எங்கே போர்க்களம் எங்கே பகைவன்-என வானமும் நடுங்கிட வையகம் நடந்தவன் மார்பிலே குண்டேற்றி மரணத்தை அணைத்தவன் உறங்கிடும் கதை சொல்லும் உண்மையின் தலமிது கற்களும் முட்களும் காலடி நெருட புற்களும் புழுதியும் பாதம் மறைக்க கைகளில் சுடுபொறி கருத்துடன் ஏந்தி விழிகளில் விடுதலைச் செம்பொறி தாங்கி தலைவனின் காலடித் தடமது தொடர்ந்து-தன் விழுப்புண் வாங்கிய திண்ணுடல் நோக காகமும் கழுகும் உண்டிடவென்று எதிரியைக் கிழித்தவன் உறங்கிடும் புமி …
-
- 1 reply
- 1k views
-
-
மாதா பிதா குரு தெய்வம் முன்னிலை இழந்தது ஆணியம் தாய் நாடு தன்னிலை இழந்தது ஆணியம் கருப்பையில்லா உடல் உயிரின் உன்னத இயல்பு இழந்தது ஆணியம் தாயைப் போல சேய் அடையாளம் இழந்தது ஆணியம் மொத்தத்தில்... தங்கு நிலையில் தொங்கி வாழுது ஆணியம். திடம் படு தோள் திமிரிரு ஆண்மை வீர வசனங்கள் குறைசலின்றி.. தோளின் வலு சுமையோ தாங்க முடியாது திணறியே போகுது திறனிழந்த நெம்பாக துணையிழந்த ஆணியம். பூமிதனை மிதிக்காமல் பெண்ணினந்தான் வாழ்ந்திடுமோ? பூப்பாதம் என்ன பூம் பஞ்சால் ஆனதுவோ தசையும் எலும்பும் 45 முதல் 100 கிலோ.... பெண்ணே பெண்ணை மிதிக்கும் கொடுமை காண மறுக்கும் குருட்டு ஆணியம். கங்கை சரஸ்வதி காவேரி வற்றுதல் உயிர்க்கு இழப்பு பூமிக்கு வறட்சி. பெண்ணின் அன்பு பெண்ணி…
-
- 4 replies
- 1k views
-
-
நினைவுகள் எல்லாம் .... இனிமையில்லை ....! அழகான ரோஜாக்கு கீழ் ... ஆபத்தான முள் ....! முள்ளை கவனிப்பாய் .... யாருமில்லை ரோஜா .... அழகாக இருப்பதால் .....! நெஞ்சுக்குள் ..... கள்ளிச்செடியை வைத்து .... முகத்தில் ரோஜாவுடன் ..... வாழும் காதலர்களே .... அதிகமாக இருக்கிறார்கள் ....!!! ^ நெஞ்சுக்குள் கள்ளிச்செடி கே இனியவன்
-
- 3 replies
- 1k views
-
-
மீண்டும் கலர் கலராய் தோரணங்கள் வடக்கு வீதியில் சின்ன மேளம் கிழக்கே மேளச் சமா தெற்கே காவடி மேற்கே கச்சான் கடைகளென தேர்தல் திருவிழா அரிதாரம் பூசியவர்களின் அணிவகுப்பு வானத்தை வில்லாய் வளைப்பவர்களாகவும் விடுதலையை வென்று தருபவராகவும் சிலர் ஒருபடி மேலே போய் தாயகத்தை தோண்டி பெருவாழ்வு பெற்றுத் தருவதாகவும் ஆளுக்கொரு மூடையுடன் அவர்கள் மூடைகளின் அளவுகளில் வேறுபாடிருந்தாலும் எல்லாம் புளுகுமூடைகள்தான் தொடுத்த வில்லிற்கும் கொடுத்த விலைக்கும் ஈடுதான் என்ன மாகாண சபைதானா ஆளுனர் தலையசைத்தால்தான் மூத்திரமே பெய்யலாம் கோவணம் இறுக்குவதற்கும் கொழும்பில்தான் அனுமதியாம் போக்கறுந்த சபைக்கு பொலீஸ் அதிகாரமும் இல்லை கந்தறுந்த ஆட்சியால் காணியும் இல்லை நீதிமான் சொல்கிறார் ம…
-
- 3 replies
- 1k views
-
-
மரங்களும் மனிதர்கள் போலவே தாம் செய்த வினைப்பயனில் வேண்டுவது போல் வளராது விதைத்தலுடனும் விடைபெறுதலுடனும் மனிதர்கள் மரங்கள் மட்டுமல்ல அத்தனை உயிர்க்குமானது தாம் விதைத்த வினையின் வடிவில் வினையறுக்க நாதியற்று விடியலை நோக்கியபடி அழகாய் நீண்டு நெடிதுயர்ந்து கொள்ளை அழகுடன் கிளை பரப்பி காண்போரை வசீகரிக்கும் அழகற்ற இலைகளும் வளர்வதர்க்கை வளர்ந்தபடி முட்களோடு முசுட்டை இலைகளுடன் வண்ண மலர் கொண்டு மயக்கும் மனம் கொண்டு காய்கள் கனிகள் என கவர்ந்திழுக்க கவனிப்பும் அதற்கானதாய் காலங்கள் முழுதும் காட்சிகளாய் காண்போரை மயக்கிடும் நெட்டையாய் குட்டையாய் நிறையவே காண்கின்றேன் தினமும் ஆனாலும் மனிதர் போல் அவை மற்றவரைப் பார்த்து ஏங்கித் தவிப்பதில்லை பொறாமை கொண்டு பொழுதைக் …
-
- 3 replies
- 1k views
-
-
உட்காரப் புல்வெளி. எதிரே நீர்வெளி. நீர்மேல் எண்ணெயாய் சூரியன் . பால் சொட்டுகளாய் பறவைகள் . முட்டாமல் மோதாமல் இணக்கமாய் காற்று . தூரத் தூர ரயிலோசைக்கும் செவிக் கூசும் நிசப்தம் . ....................................... .......................... எல்லாம் தவிர்த்து கவனமாய் காத்திருக்கிறான் கரையில் ஒருவன் . தொண்டையை கிழித்து கண்ணைத் துளைத்த தூண்டில் முள்ளுடன் துடிக்கும் ஒரு மீனைக் காணும் ஆவலுடன் .
-
- 5 replies
- 1k views
-
-
ஈழக் கவிஞனின், உள்ளத்தின் ஈரமும்.. இனத்தின் வலியின் ஆழமும்... புரியும், இக் கவியை கேளுங்கள். ஈழக் கவிஞர் கு.வீரா.
-
- 2 replies
- 1k views
-
-
தரிசனத்தின் சூக்குமப்பொழுதொன்றில் கண்ணீர் ரேகைளை அழித்து பிரியத்தின் கோடுகளை வரையத் தொடங்குகிறாய். பொன்னி, ஆராதனைக்குரியவளே, பிரபஞ்சப் பெருங்கோடுகளடியில் சிதறுண்டு கிடக்குமென் கனவுகளை பார். துருவ நிரலை மீறி நுழைந்த வலசைப்பறவையாய் அத்துவானவெளியில் ஒற்றறுத்துப் பாடுமென் குரலைக்கேள். துளைகளைத் தீண்டும் காற்றின் துயரங்களை நானறிவேன். பிரியமே, ஒரு பின்பனிக்கால குளிர் சுமந்துவரும் உன் பிரியத்தை எப்படி இழப்பேன். "உயிரே உயிரில் வலி எப்போதும் முடியாதென்றுரைக்கும் நீ" எந்தப் பருவத்தில் வந்தடையப்போகிறாய் ? உன்னிருத்தல் அன்பாலானது அன்பாலனதெல்லாம் பெருந்துயரானது. அன்பின் துயரப்புள்ளிகளில் மிதந்தலையும் சரீரம் நிர்மலமானது. நான் மிதந்தலைகிறேன். …
-
- 4 replies
- 1k views
-
-
நீங்கள் அத்தனை பேரும் ............. அத்தனை பேரும் வாழ்கையை ...வாழ்கிறீர்களா? மனைவியை மாதமுருமுறை என்றாலும் "வெளியில் " அழைத்துச்செல்கிறீர்களா?.. மனைவி பிள்ளைகளுடன் ....மரடிக்கிராலா? ....ஒரு மாற்றதிக்கு பிள்ளைகளை கவனிப்பீர்களா? இரவு வேலை பார்க்கிறீர்களா? நீங்கள் காலையில் வர பிள்ளைகள் பாடசாலை போய்விடுவார்கள்..பிள்ளைகள் பாடசாலையால் வர நீங்கள் போய்விடுவீர்கள்?....பிள்ளைகளுக்கு இரவில் தன் முத்தமா? மனைவி வேலைக்கு போவதானால் நீங்கள் இரவும் அவள் பகலும் .. ஒருவரை ஒருவரை கான்பீர்களா?......இரண்டு வேலை மூன்று வேலை என்று மாரடித்து விட்டு ...எங்கே இன்பம்?........... எங்கே நிம்மதி ?........ போதும் என்ற... மனமே ..வேண்டும் ....அவன் போல கார் வேண்டு…
-
- 1 reply
- 1k views
-
-
மலரோடு நேசம் வைக்க குருவிக்கு கற்றுத் தரத் தேவையில்லை.. நிலவோடு நேசம் வைக்க வானுக்குச் சொல்லித் தரத் தேவையில்லை.. இதழோடு நேசம் வைக்க முத்தத்துக்கு எச்சில்கள் தேவையில்லை.. சூரியனோடு நேசம் வைக்க சூரியகாந்திக்கு மின்னஞ்சல் தேவையில்லை.. தென்றலோடு நேசம் வைக்க தோப்புக்கு பேஸ்புக் தேவையில்லை.. காலத்தோடு நேசம் வைக்க வாழ்க்கைக்கு செல்போன் தேவையில்லை.. கருவோடு நேசம் வைக்க இலத்திரனுக்கு புவிஈர்ப்பு விசை தேவையில்லை.. என்னோடு நேசம் வைக்க.. மின்னணுக்களில் மின்னிய உன் காதலை அழிக்கத் தேவையில்லை.. காரணம்... உன் மின்னணுக்கள் என் உடலணுக்கள் எங்கும் நிலைபெற்று விட்டதால்..! Spoiler (யாவும் கற்பனை என்று சொல்ல முடியல்ல. பழைய மின்னஞ்சல்களை வாசித்த…
-
- 5 replies
- 1k views
-
-
கிழிக்கப்பட்ட தாள்களில் வரையப்பட்ட ஓவியமாய் உடைந்த சிதைவுகளில் செதுக்கப்பட்ட சிற்பமாய் அதிகாலை கனவில் அவளின் அருகாமை வீணாய் போனது விடியலின் பொழுது விரிக்காத படுக்கை மடிக்காத உடைகள் வேண்டாத உணவு தீண்டாத தேநீர் காலையை தின்று மதியம் கொன்றது மங்கையின் நினைவு மரண வலியாய் தனிமை பயணத்தின் ஒவ்வொரு தரிப்பிலும் தடுக்கி விழுந்து மீண்டும் தொடர்ந்து கற்பனைகளில் சுழன்ற சுந்தர வதனம் கூரிய வாள்முனை குரல்வளை அறுப்பதாய் வேதனை தந்தது அந்தி சாய்ந்து ஆதவன் அணைகையில் மெல்லத் தவழ்ந்து கள்ளம் கலந்து கொல்லத் துடித்த கொள்ளை அழகில் உருகி…
-
- 7 replies
- 1k views
-
-
விடிவெள்ளி மீண்டும் வானில் தெரிகிறது வெடி கண்ட நிலம் போல் சிதறிய மனம் மீண்டும் விண்மீன்கள் கண்டு சிரிக்கின்றது கொடுவானின் இடி மின்னல் கொடுங் காற்று எல்லாம் கோரத் தாண்டவம் ஆடி முடித்து காற்று அலைகளின் சீற்றம் குறைந்து கோலங்கள் காட்டி நிற்கிறது வேருடன் மரங்கள் வீழ்ந்தன எனினும் வாடை அடங்கி மீண்ட வானின் மிதப்பின் வேகத்தில் மருண்ட மேகங்களின் மகிழ்ச்சி ஒலியாய் மீண்டும் மின்னல் கீறி மறைகின்றன ஓசை அடங்கக் காத்திருந்தேன் என் ஆசை அடக்கி மேகத் தீயுள் மோதும் உன் முகம் காண முடிவேதும் இல்லா மழை வானின் எல்லையில் மண்ணொடு மண்ணாய் மங்கியும் நானும் மகிழ்ந்திருப்பேன் முடிவுற்ற வெளியின் முகில்கள் கடந்து முடிவற்ற என் பயணம் முடிந்து மலர் கண்ட வனமாய் மலர்கின்ற மனம் க…
-
- 9 replies
- 1k views
-
-
-
கனடாவில் தாயகமக்களின் இன்னல் துடைக்க ரொரன்ரோ பெருநிலத்தில் ரொரன்ரோ மத்தி கலைபண்பாட்டுக்கழகம், ஸ்காபுரோ கலைபண்பாட்டுக் கழகம், பீல் கலை பண்பாட்டுக் கழகம், மார்க்கம் கலைபண்பாட்டுக் கழகம் ஆகிய நான்கு கலை பண்பாட்டுக் கழகங்களும் இணைந்து வழங்கிய “சிறங்கை” எனும் 27 மணித்தியாலத் தொடர் நிகழ்வில் களத்துமேடு எனும் கவியரங்கில் ஆற்றப்பட்ட கவியுரை இங்கு யாழ்க்கள நண்பர்களுக்காக பதிவிடுகிறேன். நாமுள்ளோம் அஞ்சற்க. என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே! புன்னகை அழகே! பொதிகையின் அரசே! விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே! நின்னடி பணிந்தேன். தாயே!... என்னுளம் நுழைக. முத்தாய்த் தாங்கி முன்னூறு நாட்சுமந்து இத்தரையில் எனை ஈன்ற பெத்தவளை, மெத்தை மடிவிரித்தென் தத்துநடை பார்த…
-
- 2 replies
- 1k views
-
-
மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி. மகானே! மீண்டும் பிறந்து வா! குண்டுகளுக்கும் தோட்டாகளுக்கும் பயப்படாதவன் நீ! ஆகையால் மீண்டும் பிறந்து வா! தலைவனை இழந்து துயரப்படும் குழந்தைகள் நாங்கள்! 'இன்று' எங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுத்தருகிறது அம்மை அப்பனை முதியோர் இல்லத்தில் சேர்க்க! சகோதரனை சொத்துக்காக ஹர சம்ஹாரம் செய்ய! மனைவியை மந்தையாக்க! எதிரிகளை முதுகில் குத்த! என எல்லாவற்றையும் இன்றைய இன்று எங்களுக்குக் கற்றுத்தருகிறது. விலைமகளிடம் போய்விட்டு விலை போகாமல் வந்தவன் நீ! இன்று விலைமகளிடம் போய்விட்டு விலைகொடுத்து வாங்கி வருகிறோம் நாங்கள்! காலத்தைப் பார்த்தாயா மகானே! வா! வந்து படித்த சிலருக்கேனும் வாழு…
-
- 2 replies
- 1k views
-
-
உனக்கு காக்க வைப்பதில் சுகமென்றால் எனக்கு காத்திருபதில் அதிக சுகம் உன் தூக்கம் கலைக்க விரும்பவில்லை உன் தூக்கம் கலையும் வரை காத்திருக்கத்தான் விரும்பவில்லை கவிதைக்காய் காத்திருபதில் கவிதை பிறப்பது எனக்கு மட்டும்தான் உனக்காய் காத்திருந்து என் எழுத்துக்களுக்கு கால் வலிக்கிறது தயவு செய்து வரும் போது வெறும் கையோடு வந்துவிடாதே என்னைக் காக்க வைத்து விட்டு வரும் போது கவனம் நீந்த நேரிடலாம் என் கவிதையின் கண்ணீரில் இன்றாவது காதலைச் சொல்லத்தான் தினமும் காத்திருப்பேன் இதுவரை சொல்ல விட்டதில்லை காதல் காதலனா கத்தான் காத்திருக்கிறேன் கவிதையே காதல் கவிஞனாய் கன நேரமாய் காத்திருந்தாலும் நீ கேட்டால் ஏன்தான் ச…
-
- 3 replies
- 1k views
-
-
நம்பிக்கை நண்பா! மேற்கில் மலரும் சூரியன்-மீண்டும் கிழக்கில் உதயமாவதில்லையா? ஒருநாளில் வாடிப்போகும் பூ கூட சிரிக்கவில்லையா? மேலிருந்து விழுந்த நீர்வீழ்ச்சி-மீண்டும் எழுந்து அருவியாய் ஓடுவதில்லையா? வண்ணங்களை காட்டி மகிழ்விக்கும் வானவில் கூட தோன்றியவுடன் மறையும் ஆனால் திரும்பவும் தோன்றும் தானே அது போல் தோல்வியென்று எண்ணாதே நம்பிக்கை வை நீ உயர்வாய் வசந்தம் உன் வாசல் தட்டும்!
-
- 3 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=OCsAMIe_kdY&NR=1 Thank you! for C S Baskaran
-
- 1 reply
- 1k views
-
-
மரணத்தை வென்ற மனித வித்துக்களின் மா வீரம் பாடும் நேரம்-இது மணி விளக்கேற்றும் நேரம். மனிதத்துவத்தின் மேலான பண்புடன் மற்றவருக்காய் உடம்பதனில் மணிக்கணக்கில் ஆயுதங்கள் ஏந்தி மறத் தமிழனாய் வாழ்ந்த காவியச்செம்மல்கள். தமிழர்கள் அடிமைப்படுவதையும் தம் தாயகம் பறிபோவதையும் -கண்டு வீறுடன் துடித்தெழுந்தவர்கள். தம் இனம் தரணியில் தன்மானத்துடன் வாழ்வதற்காய் தம் வாழ்வைத் தந்து தன் உயிரைத் தியாகம் செய்தவர்கள்.
-
- 0 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=29KnF92oRog&feature=player_embedded பார்த்ததில் விரும்பி ரசித்தது.உங்களுக்காக இங்கே இணைகிறேன். நன்றி : முகநூல்
-
- 6 replies
- 1k views
-
-
களம் காண களம் தந்த யாழ் களமே! காவியமாய் வாழ்ந்திடு கார் இருள் அகற்றும் கதிரவன் போல் பாரினிலே தமிழர் நிலம் மீளும் வரை நித்திலத்தில் நின் பணியும் களப் பணிகளும் காத்திரமாய் தொடர்ந்திட்ட்டும் கணனி உலகிலே கன்னித் தமிழின் காப்பரணாய் கண்டம் விட்டு கண்டம் தாண்டி வாழும் தமிழரின் வரமாய் திகழ்பவளே வாழிய! வாழியாவே. #ஈழத்துப்பித்தன்
-
- 10 replies
- 1k views
- 1 follower
-
-
வெளிநாட்டின் இன்பம் துன்பம் இங்கு இன்பமே துன்பம் ,துன்பமே இன்பம் முதல் முதலில் விமானப்பயணம் வாழ்நாளின் சாதனைப்பயணம் என தேன்றும் வந்த பிறகுதான் இது சாகவந்த பயணம் என்று தெரியும் இங்கு நான்கு சுவத்துக்குள் சிறை அது தான் எங்களின் அறை அது உள்ளவே சமையல் அறை சிக்கன்,மீனு எல்லா பொருளும் கிடைக்கும் குளிர்சாதன கிடங்குல அந்த ஏதிலிலும் சத்துயில்ல நாங்கள் உண்ணுவது தான் உணவு நாக்கு சுவைக்கு இல்லை என பழகு இது தான் எங்கள் முதல் மந்திரம் இங்கு ஜன்னல் என்ற ஒரு பெயருக்கு ஒன்று இருக்கு அதை திறந்தாள் புழுதிக்காற்று அடிக்கும் இதை யாருக்குத்தான் பிடிக்கும் சுவாசிக்க காற்று தேவை இங்கு சுவாசிக்கவே நல்ல ஒரு காற்று தேவை அனைத்து காய்ச்சலுக்கும் ஒருமாதிரி மாத்திரை கம்பெனிக்கு எங்கமேல இல்ல அக்கறையும் …
-
- 0 replies
- 1k views
-
-
தவிக்க விட்டாய் யாரையுமே விரும்பக்கூடாது என்றிருந்தேன் யாரையும் இதயத்தினுள் விடக்கூடாது என்றிருட்ந்தேன் எங்கிருந்து வந்தாய் நீ என்னை அருகில்... எப்படியடா என்னை இழக்கவைத்தாய் உன்னிடம் மனம் நெருங்கத்தொடங்கிய வேளை உன்னுடைய மனம் வேறொருத்தியை நாடியது நான் வளர்த்த ஆசைகள் அனைத்தும் ஒரே நொடியில் தேய்பிறை போலல்லவா தேயத்தொடங்கியது உங்கள் மனமே உங்களிடம் இல்லையே பின்னர் நான் எப்படி உங்களை நினைப்பது... நீங்களே வேறொருத்தியை நினைத்தபின் நான் உங்கள் நிழல்மேல் ஆசைபடுவது தவறன்றோ.. என்னையே நான் வெறுக்கத்தொடங்கினேன் எண்ணங்களை மறக்கத்தொடங்கினேன் என் ஆசைகள் அனைத்தும் நிராசைகள் ஆகின என் கனவுகள் என் கண்களை போல் கலங்கின உன்னை நினைத்த இந்த மனதி…
-
- 2 replies
- 1k views
-
-
இலங்கை ராணுவத்தை கவிதை மூலம் சாடுகிறார் (கவிஞர் வாலி ) அவர்கள். http://www.youtube.com/watch?v=_L3lpj80ItU
-
- 0 replies
- 1k views
-