கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
வெல்க தமிழ் இயல்பாய் எழுவாய்! புயலாய் சுழல்வாய்! தமிழா!..... இதுவே முடிவாய் முயல்வாய்! எழும் தழல் மூச்சில் தமிழ் முகம் சிரிக்க, விழும் கனி மடியினில் உலகமும் வியக்க. விழுதுகள் பலமெது? - இது விடை தரும் காலம் அழுது தொழுது அலைந்தது போதும். விழி மடல் திறவா விதியையும் தகர்ப்போம் விரைவீர்! எழுவீர்! வெல்க உரைப்பீர்! அழுகிய பண்டமாய், அனாதிப் பிணங்களாய், குருதிவடி நெஞ்சமாய் குமுறியது போதும். எழுவீர்! எழுவீர்! எண்திசை வெளிக்கும் எங்களின் எழுச்சியில் எல்லாமே சிறக்கும். அழகுறு அன்னையின் விழி நகை மலர, உலகொரு சொல்லதில் உயர்வதைப் பகர, தெளிவுறு தலைவனின் திறனது வெல்ல எழுவீர்! எழுவீர்! வெல்லும் தமிழ் சொல்ல. ப…
-
- 5 replies
- 3.4k views
-
-
போறன் என்றோ ... போயிட்டு வாறன் என்றோ .. சொல்லிவிட்டுப் போகாத என் அண்ணன் அடிக்கடி வந்து நினைவில் நிக்கிறார்! அவரைப் பாத்தா ரெண்டு கேள்வி கேக்கோணும்; எண்டுதான் நான் நினைச்சிருந்தன்! -ஆனால் நேத்திரவு கூட கனவில வந்தவர்... என்னால ஒண்டுமே கேட்க முடியேல. சத்தியமாச் சொல்லப் போனால்.... அண்ணை செய்தது மெத்தச் சரி! ஏன் தெரியுமோ...!?? எங்கட சனத்தின்ர குணம் உங்களுக்குத் தெரியாதே? போறன் எண்டு சொல்லிட்டுப் போனாலும்... போத்திக்கொண்டு படுத்திருப்பாங்கள்! போயிட்டுவாறன் எண்டு சொல்லிட்டுப் போனாலும்... போத்திக்கொண்டுதான் படுத்திருப்பாங்கள்! என்னைப் பொறுத்தவரையில்........ அண்ணை எல்லாத்தையும் செய்திட்டார்! இதுக்குமேலயும் அந்த மனுஷனே வரோணும் உங்களுக…
-
- 3 replies
- 857 views
-
-
-
நிலவே .... உன்னை உவமையாக கூறி .... காதல் செய்தும் காதலரை .... வாழ்த்திட ஒருமுறை வருவாயோ ..? உன்னையே உவமையாக கூறி .... காதலியை ஏமாற்றிய .... காதலனை சுட்டெரிக்க .... ஒருமுறை வருவாயோ ..? நிலவே உன்னிடம் .. நீர் ,நிலம், காற்று இருக்கிறதா ..? தொடரட்டும் விஞ்ஞான ஆய்வு ....! பூலோகத்திலோ உன்னால் ... நீர் ,நிலம், காற்றுமாசடைகிறது ....!!! நிலவே ஒருமுறை வருவாயோ .. சூழலை மாசுபடுத்தும் இவர்களை .... எச்சரிக்க மாட்டாயோ ...? நிலாவில் பாட்டி இருக்கிறார் .... இன்றுவரை நம்பும் குழந்தைகள் ....!!! பாட்டியுமில்லை பாட்டனுமில்லை ... வான் வெளி தூசிகளே அவை .... நிரூபிக்க ஒருமுறை வருவாயோ ...? மூடநம்பிக்கையை உடைத்தெறிய ... ஒருமுறை இறங்கி வருவாயோ ...?
-
- 1 reply
- 604 views
-
-
கூடு திறந்தால் காடு ----- அந்த மரண வீட்டில் .... அப்படி ஒரு சனக்கூட்டம் .... ஆராவாரமான மரணவீடு .... ஓலமிடுபவர்கள் ஒப்பாரி ... சொல்பவர்கள் நிறைந்து ... காணப்பட்டனர் ..... மூன்று நாட்களாக ... கண்ணீர் விழா ....!!! சடலம் இருக்கும் பெட்டி ... அலங்காரத்தால் ஜொலிக்கிறது .... குளிரூட்ட பட்ட ஊர்தியில் ... சடலம் வைக்கப்படுகிறது .... மந்திரி வந்து அஞ்சலி செலுத்த .... வீதியெங்கும் வாகன நெரிசல் .... வீதி எங்கும் நிறுத்தி நிறுத்தி ... பறை சத்தம் காதை கிழித்தது ....!!! சடலம் போகும் பாதையில் .... விபத்தில் இறந்த எருமைமாட்டு ... சடலத்தை நாய்களும் காகங்களும் .... குதறி எடுத்தபடி இருந்தன ... இறந்தபின்னும் மற்றவைக்கு ... உதவும் அந்த எருமைய…
-
- 6 replies
- 2.3k views
-
-
இளைஞனே சாட்டை எடு. சவுக்கடி கொடு. சமுதாயம் அழட்டும் சத்தம் போட்டு அழட்டும். போதும் நிறுத்து - மதம் என்ற பெயரில் மனிதனை கொல்வதை. எடுத்திடு ஒரு தீ கொளுத்திடு சாதி தரித்திர தலைவர்கள் தலை சாய்க்கட்டும் சரித்திர தலைவர்கள் உருவாகட்டும். புரட்சிகள் படை புது யுகம் விடை.
-
- 3 replies
- 1k views
-
-
கிளிநொச்சி உன் பார்வைகாய்........ கவிதை...... கிளிநொச்சி..! கிளிநொச்சி...! வாயில் சொல்லப்பட்ட தடவைகள் அதிகம் எதிரியின் வாயிலல்ல தமிழனே..! இன்று உன் வாயால்.... கிளிநொச்சி போய்விட்டதாம்...! கிளிநொச்சி போய் விட்டதாம்...! அழுதழுது இன்றுடன் ஐந்து நாட்கள்மேல் போக்கிவிட்டாய்...! அழாமல் அடுத்த அடி வைத்திருந்தால் மறுபடியும் ஐந்து அடி முன்னெறியிருப்பாய்....! எம் மனவுறிதி போய்விட்டதா..? சொல்..! உன் கொள்கைதான் தோற்றதா..! சொல்..! தமிழீழமே உன் குறிக்கோள் கிளிநொச்சி அல்லவே...! கிளிநொச்சி எங்களின் தமிழீழத்தின் நகரம் தான் அழகான நகரந்தான் இன்று எதிரியின் வல்வளைப்பில் சிக்கிவிட்ட நகரந்தான்... முழுமையாய் செத…
-
- 23 replies
- 4.7k views
-
-
பலமுறை அவளைப் பார்த்ததால் எனக்கு உண்டானது அவள் மேல் காதல் அவளிடம் கேட்டேன் என்னை காதல் செய் என்று அவள் என் கன்னம் மீது மிதியடி தந்தாள் இம்சை காதலால் உழன்று நான் இறைவனிடம் கேட்டேன் எனக்கு கருணை செய் என்று அவன் தந்த கருணை மரணம் மகிழ்வோடு அவனடி சரணம். வல்வையூரான்.
-
- 7 replies
- 825 views
-
-
நான் உன்னைப் பார்க்கையில் நீ என்னைப் பார்க்கின்றாய்… நான் என்னவள் நினைவோடு பார்க்கையில்… உன் முன்னாடி நின்று மணிக்கணக்கில் பேசுவேனே… தலைவாரி தலைவாரி முடி போனதே… நீ என்னை அறியாது சிரித்தாய் நான் என்னை அறியாமற் சிரித்தேன்…. இப்போது புரிகின்றது ஏன் நீ சிரித்தாய் என்று… கள்ளியடி நீ… முடிபோன என் தலை உன் சகோதரமாகப் போகின்றது என எண்ணித்தானே சிரித்தாய் குறும்புக் காரக் கண்ணாடி ஓ நான் அவளைக் காதலிக்கவில்லை… அப்படியானால் உன்னையா காதலித்தேன்?… www.nilavan.tk
-
- 0 replies
- 548 views
-
-
பல நாள் தவமிருந்து விரதங்கள் பல பிடித்து கிடைத்த வரம் இவள் கொட்டிக்கிடக்கும் சந்தோசத்தில் மணம் வீசும் மலராய் தினமும் வளர்ந்து மங்கையானாள் வந்தான் ஒருவன் மலர் என்றான் தேன் என்றான் உலகில் நீயே அழகி என்றான் அன்பிற்கு நீயே அகராதி என்றான் மயங்கிப் போனாள் அன்பிற்கு புது அர்த்தம் சொன்னான் காதலை கண்ணால் கற்பித்தான் உறவை புது வழியில் ஒப்பித்தான் அவனின் காதல் மொழியில் அவள் சிறைப்பட்டுப் போனாள் தன்னை மறந்து தன்னையே கொடுத்தாள் பழத்தை உண்டதும் அவன் பறந்து போனான் காத்திருந்தாள் காதலன் வரவில்லை காதல் பொய்த்த பின்னும் காத்திருக்கிறாள் காதலனுக்காக அல்ல சூதுவாது எதுவும் அறியா அந்த பிஞ்சு உயிருக்காய் ........
-
- 26 replies
- 3.1k views
-
-
துப்பாக்கி விழுங்கிய நரிகள் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் உயிர்களையும் பாராளுமன்றத்தில் குழிதோண்டி புதைத்த பயத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் இம்முறை ஊருக்கு வரும்போது துப்பாக்கி விழுங்கிய நரிகளை கூட்டி வந்தார் அவரது நரிகள் அமெரிக்க இராணுவம் போல ஊரெல்லாம் ஓடின முதலில் ஒரு எருமைமாடு நரிகளுடன் ஸ்நேகம் கொண்டது நரிகள் தாமரை மலர்களால் தேய்த்து எருமை மாட்டை சேற்றிலே நீராட்டின வாய்பார்த்திருந்த கழுதையையும் நரிகள் வாசசவர்க்காரம் பூசி குளிப்பாட்டின ஊர்நாய்களுக்கு குறிஞ்சியின் உரியை கற்றுக் கொடுத்தன ஆடுகளுடன் கட்டிப்பிடித்தவாறு பகல்தூக்கம் போட்டன மாடுகளுக்கு புண்ணாக்கு ஊட்டி விட்டன ரௌடிக் காளைகளுக்கு மதநீர் கொடுத்தன நரிகளை எ…
-
- 3 replies
- 972 views
-
-
உடைந்த மூங்கிலானேன்: ஒரு உடைந்த மூங்கில் பற்றி யாரும் கவலைப் பட வேண்டாம் உடைந்த மூங்கிலால் புல்லாங்குழல் ஆக முடியவில்லை அது முகாரி பாடியதா இல்லை புரட்சி பாடியதா இல்லை தன்னையே உடைத்து அழுகுரலை இசைத்ததா யாரும் கவலைப் படவேண்டாம் மூங்கிலின் மேலிருந்த குருவி தன் காதலனின் வீரச் சாவு கேட்டு அழுது குளறியது மூங்கிலை கடந்த காற்று தன் தலைவனின் வீர மரணம் பற்றி ஓங்கி அறைந்து ஒப்பாரி வைத்தது மூங்கில் அழவில்லை மூங்கில் ஒப்பாரி வைக்கவில்லை தன்னை கடக்கும் காற்றனைத்தும் அழுகை அல்ல இசை என்றது அதன் உடைவு ஆரம்பித்து இருந்ததை அது அறியவில்லை இன்னும் புல்லாங்குழல் ஆகலாம் எனும் கனவில் அது மிதந…
-
- 15 replies
- 1.9k views
-
-
சூரியனாய் இரு! சூரியனாய் இரு! சூரியனாய் இருப்பதில் பெரும் சுகம் பூமியும் கூடவே சுற்றிச்சுற்றிவரும்! கொடும் வெம்மை என்று வைதாலும் தன் பாதையை விட்டு விலகுவதில்லை "பரிதி" என்பதுதான் எத்தனை பொருத்தம் துவைத்து வைத்த ஆடைக்கும் - வற்றல் வடாம் மிளகாய் என நாக்குக்கு சுவைதேடும் பல இங்கு உலர்த்தவும் மழைக்கும் இவனே காரணமாகவும் மலர்கள் மலைகள் செழிப்பின் வண்ணமும்! உடலின் உறுதி சுறு சுறுப்புக்கும் இவனே காரணம் ஆம் இவனெம் தாமரையின் காதலன்! மேகம் மறைக்க கூடும் நாயும் குரைத்து ஓடும்! இவன் சிரிப்பின் ஒளிர்வே கதிராய்! என்றும் தன் கடமை விட்டு விலகா சூரியனாய் இருப்பதன்றோ பெரும் சுகம்!
-
- 6 replies
- 1.2k views
-
-
சாம்பலாக்கப்பட்ட நிலத்தின் நடுவிலிருக்கிற சிதைக்கப்பட்ட நகரம் ‐ தீபச்செல்வன்: :தீபச்செல்வன் 01 மாடுகள் அலைந்து திரிந்து கண்ணிவெடிகளையும் மண்ணையும் மேய்ந்து கொண்டு சாணியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக நகரத்திற்கு வேறு பக்கம் திரும்புகின்றன. எரிந்து கருகிப்போயிருக்கிறது சனங்களின் நிலம். அழிந்து சமதரையாகிப்போன வெளியில் பேய்கள் வாழ்ந்து திரிகிறது. நிலம் எரிந்து சாம்பல் பூத்திருக்க தலைகள் பிடுங்கப்பட்ட மரங்கள் மண்ணில் குத்துண்டு நிற்கின்றன. தலையிழந்த பனைகளால் மிகுந்த வெளியில் நோடட்மிடுகிற காவலரண்களை சுமந்து நிற்கிறது வேர் பட்ட பனங்குத்திகள். உப்பு விழைந்த வாடிகளில் இல்லாத சனங்களின் குருதியும் துயரும் சேர்ந்து விளைந்து…
-
- 5 replies
- 1.1k views
-
-
1993.... சிங்களரும் தமிழுரும் மரமும் கொடியும் சிந்தனை செய்து டிங்கிரி பண்டா தமிழின அழிப்புக்காய் ஏவி விட்ட ரஷ்சிய டாங்கிகளின் அணிவகுப்பாய் யாழ் தேவி....! ஆனையிறவு தாண்டி கிளாலி வெளியில் புலிப் பாய்ச்சலில்.. தடம்புரண்டு போச்சுது அது..! தோல்விக்கு விலையாக சங்கத்தானையில் போட்ட விமானக் குண்டில் பலியான தமிழினம் இன்னும் அலறுது வேதனையில்...!! 2013... முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நாயகன்... "வடக்கின் வசந்தம்" மகிந்த சிந்தனையின் பிறப்பிடம்.. மகிந்த பண்டா ஏவும் இந்த வெற்றி மமதை யாழ் தேவி ஹிந்தியத் தடமதில் சீன உருவமாய் தடமுருண்டு வந்தாலும் தமிழர் நிலத்தில் - அது ஓர் பாழ் தேவி..! இதன் வரவில் பாழாகப் போகுது எம் தமிழ் தேசம்..! விபத…
-
- 30 replies
- 3.9k views
-
-
சாந்த முகமதியாள் - அவள் சந்தண மணத்தழகாள் காந்தள் மலர் விரலாள்- என் கவிதைக்கு கருப்பொருளாள் கவரி மானொத்த மானத்தாள் கனிரசக் குரலழகாள் பாவலனாய் என்னைக் கவி படைக்க வழி சமைத்தாள் சின்ன இடை ஒடிந்து விழும் - அவள் சிங்கார நடையழகாள் அன்பொழுக பேசுவதில் -என் அன்னையையே வெண்றுவிட்டாள் சின்னக் குடைபோல் விரியம் செம்பவள வாய் திறந்தால் மின்னுகின்ற நட்சத்திரப் பல்லழகு கவிபடைக்கும் விம்மித் ததும்புகின்ற பொன் வண்ண அழகு அவள் தீபம் அவள் பெயரில் - எனக்கு அளவுக்கு மேல் ஆசை பட்டுத் தளிர் மேனி அவள் பாதம் செந்தாமரை -வெண் பட்டுத் துகில் உடுத்து நான் கவிஎழுத வைத்தவள் தான் என் கவிக்கு நாயகியாள் கற்பனைக்கு கருப்பொருளாள் ஆனால் இன்னும்…
-
- 18 replies
- 2.8k views
-
-
விடுதலை வேண்டும் என்கின்ற மானிடா இறக்கை அடிக்கும் பச்சைகிளிதான் நானடா என்னை சிறைப்படுத்தி அழகு பார்ப்பது ஏனடா அழகா இருப்பது என் தப்பா நீயும் சொல்லடா உனக்கு இருக்கும் உரிமை எனக்கு ஏன் இல்லையா? இது என்ன நியாயம் நீயும் சொல்லடா?
-
- 16 replies
- 1.3k views
-
-
மனதெங்கும் எத்தனையோ மாயங்கள் அலைகளாய் எண்ணத்தில் தோன்றுவது எழுத்தில் வடித்திட முடியாததாய் காணும் காட்சிகள் கண்விட்டுப் போவதுபோல் நினைவுகளின் நீட்சிகள் தொடராதிருந்தால் எத்தனை இன்பம் மனம் எப்போதும் கொண்டிடும் காலத்தின் பதிவுகள் கனவின் கோலங்களாய் மனதில் மகிழ்வு தொலைத்து கண்கட்டிவித்தையில் கபடியாடுகின்றன கண் மூடும் வேளைகளில் கூட பகுக்க முடியாத எண்களாய் பகிரப்படும் நாட்கள் பம்பரமாய் சுழன்று மீண்டும் பரிதவித்து நிற்பதுவாய் நிமிடங்கள் நகர்த்தும் நாட்களாய் நெடுந்தூரம் செல்கின்றன தவிர்க்கவும் மறுக்கவும் மறக்கவும் முடியாததான பிணைப்பின் வலிமையில் மறுதலிக்கும் மனதின் செயல் எத்தனை கடிவாளமிடினும் எதுவுமற்றதாய் ஆகிவிடுகையில் எப்போதும் போல் என்னிலை ஏக்கங்…
-
- 1 reply
- 640 views
-
-
இதய அறைக்குள் புதைந்து கிடந்த என் சந்தோசங்களை மீட்டுக்கொண்டது உன் முத்தங்கள். என்இதழ் தந்த முத்தங்களும் என் மொழி தந்த கவிதைகளும் நீ..பருகிடும்போதா.. என்னை குயில் என அழைத்து இந்த குயிலில் முத்தங்களை வருடிச்சென்றாய். உன் முத்தப்புயலின் வேகத்தில் அவஸ்தைப்படும் நான். தித்திக்கும் முத்தங்கள் நித்தம் நித்தம் உன்னிடம் இருந்து கிடைக்குமானால் என் வாழ்வையே.. உன்னிடம் அர்ப்பணித்து கொள்வேன்.
-
- 5 replies
- 1.6k views
-
-
இது எதோ ஒரு காதலர் தினத்தில் எழுதிய கவிதை .... பெண்ணென்று பிறந்து கண் முன்னே அங்கம் அங்காங்கே காட்டி நடந்து கொல்லாமல் கொல்கின்றார் அம்மா கொழும்பில் எம் குலத் தமிழ்க் கிளிகள்! பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் என்று பறந்து கொட்டும் பனியில் கொட்டாவி விடக்கூட மறந்து அண்ணனுடன் அப்பா சேர்த்து அனுப்பும் பணம் கையில்லாச் சட்டை வாங்கவும் அங்கம் கொப்பளிக்கும் ஆடை வாங்கவும் உதட்டுக்குச் சாயம் அடிக்கவும் இன்னும் பலப்... பல... செய்யவும் வீணாகக் கரைகின்றது. இந்த 'மேக்கப்' பின் பின்னால் உள்ள உண்மை உருவம் அறியாது நீண்ட 'கியூ' வில் நிற்கின்றாரம்மா பாவம் எம் இளைஞர்! சி…
-
- 18 replies
- 2.6k views
-
-
Posted by சோபிதா on 19/08/2011 in புதினங்கள் | 0 Comment நேசித்த இதயத்திற்கு பாசம் அதிகம் என்றார்கள் ஆனால் உன்னால் அறிந்து கொண்டேன். காதலித்த இதயத்திற்கு வலிகளும் அதிகம் என்று நான் உறவுகள் அற்று தனிமையில் துடித்த போது சொல்லாமல் வந்த உறவு நீ. முகவரி இல்லாத என் வாழ்க்கைக்கு முழு நிலவாய் வந்தவளே. இன்று நான் காதல் பைத்தியத்தில் கண்ணீரோடு அலைகின்றேன். உன்னை நேசித்த பாவத்திற்கு விடை கூறாமல் சென்றவளே விடை பெறும் நேரத்திலும் நினைவுகளை மட்டும் தந்தவளே இன்று உன் கழுத்தில் தாலி என்னும் பாசக்கயிரை கட்டி கணவன் என்னும் நாடகம் போடுபவனை பார்த்து எரிகின்றது என் இதயம்…… உன் வாழ்வின் எல்லை வரை சந்தோசங்கள் மட்டுமே நடை போட வாழ்த்துகின்றது என் உள்ளம் http://ww…
-
- 2 replies
- 1.9k views
-
-
உனக்காக ஏதாவது எழுதும் போதுதான் எழுத்துக்களின் நெருக்கடியில் சிக்கி மூச்சு விட இடம் தேடுகிறது என் காதல் * என்னைப் போல் யாரும் கண்ணைத்தானம் செய்வதை பார்த்துவிட்டு இறந்து போயிருக்க மாட்டார்கள் ஆனால் கண்ணுக்கும் தெரியாது நான் இறந்து போனது அவள் திருமணவீட்டில் என்று * உனக்காகவே உழைத்ததில் உன்னை வாங்க மறந்துவிட்டேன் என் மனதையும் உன்னிடம் கொடுத்ததால் * நதியாக ஓடி வா என்றாய் வந்த பின்தான் தெரிந்தது என்னை உன்னோடு கலக்க அல்ல கரைக்கத்தான் வரச் சொன்னாய் என்று * உன் ஆடையின் அழகில் உன்னழகு யாருக்கும் தெரியக் கூடாது என்பதிலும் நான் அக்கறையாக இருந்ததில் தோற்த்தான் போனேனடி உன் ஆசைக் கணவரிடம் …
-
- 1 reply
- 794 views
-
-
நிகழ்காலம்,எதிர்காலம் என எல்லாமே... நமக்கு... இறந்தகாலமாய்த்தான் இருந்தது! ஆறுதலுக்காய் ஆதரிக்க யாரும் அருகிருக்கவில்லை! அரவணைக்கக் கூட ... தம் அனுகூலம் பார்த்தார்கள்!! அனாதை நாய்களைவிட... அநியாயமாய் அழிந்தோம் நாம்!! எங்களுக்காய் குரல்கொடுக்க யாருமில்லையே!? என்ற... ஏக்கத்தவிப்பின் துர்ப்பாக்கிய முடிவாய்த்தான், துப்பாக்கியையும் சுமையாய்ச் சுமந்தோம்!!! துப்பாக்கி வேட்டுக்கள் எமைக் கொன்றுபோட்டபோதெல்லாம்... அதுக்கான அதே சத்தத்துடன் அடங்கின பல பொழுதுகள்!!! "ஆயுதம்" என்பதும் தற்காத்துக்கொள்ளவென காத்துக்கிடந்த காலம்போய், பேராயுதங்கள் போராயுதத்தினால்... நம்மைத் தின்றபோது... உயிராயுதங்களும் உணர்வோடு மெளனித்துப் போயின போல்!? கரிகாலன் தாங்கிய…
-
- 14 replies
- 2.2k views
-
-
(2004 கவிதை மீண்டும்.. நினைவுகளை மீட்க) இஸ்ரேல் இருப்புக்காய் அனுப்பியது கிபீரும் ஆட்லறியும் இந்தியா இரகசியமாய் அனுப்பியது மிக்கும் மிரண்டாவும் அமெரிக்கா அண்டப்புளுகுக்காய் அனுப்பியது பெல்லும் கிறீன்பரேட்டும் ரஷ்சியா டொலருக்காய் அனுப்பியது தரையில் தாங்கியும் ஆகாயத் தாங்கியும் சீனா சிங்களத்தோடு உறவுக்காய் அனுப்பியது எப் 7ம் ரி 56 உம் பாகிஸ்தான் பகட்டுக்காய் பரிசளித்தது மல்டிபரலும் பல்டி அடியும் சிம்பாவே சிம்பிளாய் அனுப்பியது சிணுங்க ஒரு ஆயுதக்கப்பல் இன்னும் விட்டது குறையாய் தொட்டது குறையாய் யார் யாரோ எல்லாம் ஆயுத வியாபாரச் சந்தை விரித்தார் எங்கள் அன்னை பூமியின் அழிவுகளின் மேல்....! இத்தனைக்கும் சாட்சியாய் இதோ அவள்....…
-
- 4 replies
- 1k views
-
-
எங்கிருந்தோ எனை ஆழ்கின்ற என்னவளே... முன்னொருபோதும் இத்தனை சந்தோசம் அடைந்தவனில்லை நான்! பின்பு ஒருநாள் தேவதை நீ வருவாய் எனும் அசரீரி ஏதும் கேட்டதில்லை... ஆனாலும் உன் தரிசனம் கிடைத்தது... காதலெனும் புதுசுகம் மலர்ந்தது! நீ இல்லாத போது வலிக்கின்ற நெஞ்சம் அருகில் வந்தபின் கவனிப்பதே இல்லை பிரிவின் போது தான் உள்ளிருக்கும் காதல் விழித்துக் கொள்கிறது! கண்ணே கலங்காதே... நகருகின்ற நாட்களில் எம் வாழ்வு எங்கே என்று தேடாதே... நாட்களின் வரையறைக்குள் இல்லையடி நம் வாழ்வு! பூக்களைப் பார் மாலையில் மரணம் என்றாலும் காலையில் இதழ்விரித்துச் சிரிக்கின்ற பக்குவம் அதற்கு... …
-
- 4 replies
- 1.5k views
-