கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
பொய்யும் புரட்டும் ... சிரட்டையும் கையுமாம் .. என் அப்பத்தா அடிகடி .. முணுமுணுக்கும் சொல் .. வழி கேட்டா சொல்லார் பின் .. வக்கனையா விடுப்பு கேட்பார் .. எதுக்கு போறிங்க என்னத்துக்கு என்று .. கேள்வி மேல் கேள்வி வைப்பார் .. உள்ளதை உள்ளபடி சொல்லார் பொய்யர் .. சுற்றி வளைத்து சுழல விட்டு .. கெட்டித்தனம் என தமக்குள்ள எண்ணி .. அத்தனை முட்டாள் தனம் செய்யும் ... இவர்கள் வாய் திறந்தாள் வானவெடி .. மனிதனுள் மனிதனை விற்கும் .. வித்தை அறிந்தவர்கள் பொய்யர்கள் .. கேட்டால் வாழ வழி என்பார் ... வேறு நல்வழி தேடார் பொய்யர் .. நடுநிலை ..கரைநிலை என்று காரணம் வேறு .. கண்ணை பார்த்து மூக்கு என்று சொல்பவர் .. இல்லை என நீ சொன்னால் கொள்கைவாதி .. …
-
- 4 replies
- 1.2k views
-
-
பல பட்டங்கள் வாங்கினேன் அதைவிட நூல் இல்லை நூல் இல்லாத பட்டமாக அலைகின்றேன் நான் இங்கே வாழ்க்கைகே அர்த்தம் இல்லை ஏன் நான் பிறந்தேன் இந்தபூமியிலே சட்டங்கள் போட்டது யார்குற்றம் இங்கு நீ வந்தது உன்குற்றம் யுத்தததை கொண்டுவந்தது யார்குற்றம் பூமியில் பிறந்தது என் குற்ற்ம் என்னுடய கல்லறையில் ஆவது அந்த யுத்த அவல ஓசை இல்லாது ஒழியட்டும்
-
- 14 replies
- 2.1k views
-
-
மலருடன் காத்திருந்தான்.... மருத்துவப் பயிற்சியென்றால்... மாலையில் காண்போமென்றாள்.... மலருடன் காத்திருந்தான்.... அவன் கனவுக்காக கண்மூடினான்.. அவள் காடையரால் கண் மூடினாள்... இவர்கள் காதல் காலத்தால்.... விழித்திருக்கும்... காலமெல்லாம் விழித்திருக்கும்....
-
- 5 replies
- 1.6k views
-
-
எனது அறையில் எனது இரவுகளில் எல்லாம் உயிர்பித்திருக்கிறது உனது அன்பின் கிருபையால்... உன் கூந்தலின் கருந்சாந்தெடுத்து பூசிய மேற்கூரையின் இருண்ட வெளியின் தனிமை தீர்க்க உன் வெண்பற்கள் வெண்மைகொண்டு வரைந்த நட்சத்திரங்கள் போதாதென்று சமைந்தது பிறைநிலா நீ வெட்டியெறிந்த நகத்துண்டுகள் சேர்ந்து கோள்கள் சில செய்தேன் முகப்பருக்கள் அளவு கொண்டு புருவங்கள் இணைந்து வானவில் பிறந்தது சுவற்றில் கண்ணீர் பெருக்கில் சமுத்திரங்கள் கலந்தது நதிக்கு வடிவம் தராது திகைத்தேன் சுழித்தாய் உதட்டை மார்பு குவியம் மலைத் தொடரானது வேர்வையில் நனைந்த ரோமங்கள் மழைக் காடுகளாய் மாறியது நெற்றிப் பொட்டை சூரியனாய் தந்துவிட்டு போர்வையினுள் புகுந்தாய் மெல்லினம் வல்லினமாய் மிகுந்து உன் பெண்மையி…
-
- 28 replies
- 2.3k views
-
-
தந்து விடு.....!!! (01) என்னவனே என்னவனே என்னருகில் வந்து விடு.... உன் உள்ளமதில் குந்திவிட எனக்கு இடம் தந்து விடு.... உந்தன் கொஞ்சு மொழி வார்த்தை எல்லாம் கொட்டி வந்து தந்து விடு.... நான் கண்ணு மூடி உறங்கி விட கண்ணாளனே தந்து விடு.....!!! விட்டு விடு.....!!! (02) மங்கையவள் கவிதைகளை மணமில்லை என்றவனே..... அவள் சொர்ப்பணத்து வரிகளையே சொர்கம் இல்லை என்றவனே.... கிணத்து தவளை என்றவரை கிண்டலடிக்க வந்தவரே.... உந்தனுக்கு கவி தெரிந்தால் வந்துயிங்கு பாடி விடு... பெண்ணவளை கிண்டலடிக்கும் வேலைதனை விட்டு விடு....!!! இறந்து விடுகிறேன்....!!! (03) உன் இ…
-
- 78 replies
- 7.3k views
-
-
மாறும் உலகில் மாற உன் உறவே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை நிரந்தரம் நான் மாண்டபின்னும் உன்னில் உயிர்பது நிரந்தரம் தாயின் அன்பு சேய்க்கு நிரந்தரம் நான் சாயும்போது காப்பது நீயே நிரந்தரம் செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் நிலைவாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம அதன் விலையாக என்னை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்
-
- 4 replies
- 1.9k views
-
-
இலங்கை சிறு தீவில் சூழ்ந்தது போர் மேகங்கள் அணி வகுத்தது இரு தரப்புக்கள் ஆதிக்கவெறி இன வெறி கொண்ட ஒரு தரப்பும் சுதந்திரத்துக்காய் விடுதலைக்காய் மறுதரப்பும் உள்நாட்டு பிரச்சினை என உலகம் கண்ணை மூடிக்கொண்டிருக்க கொலை கொள்ளை பலாத்காரம் என இன அழிப்பில் கொக்காளம் இட்டது சிங்கள தரப்பு வீரம் கொண்ட தமிழ் இனம் தனது சொந்தக்காலிலே நின்று பதிலடி கொடுக்கத்தொடங்கியபோது விழித்துக் கொண்டது உலகம் மூன்றாம் தரப்பு இணைத்தலைமை அமைதிப்படை சமாதானத்தூதுவர் இன்னும் என்னவோ பெயர்களிலெல்லாம் போதும் போதும் இவர்களெல்லாம் மத்தியஸ்தம் செய்வதுக்கு நாங்கள் நடத்துவது விடுதலைப் போரா இல்லை குறுக்கெழுத்துப் போட்டியா?
-
- 5 replies
- 1.5k views
-
-
சூழ்நிலை: கணவன் வெளிநாட்டில் உள்ளான்; மனைவி இந்தியாவில் உள்ளாள். அவள் கையில் குழந்தை. அந்தக் குழந்தைக்கு இருவருமே தாலாட்டுப் பாடுகிறார்கள்!! இருவரும் மறுகரையை நோக்கிப் பாடுவதாக அமைத்துள்ளேன்! பெண்: அழகிய கண்விருந்தே, அம்மாவின் அருமருந்தே அணைச்ச கைய உதறாம, பிடிச்சுகிட்ட கண்ணுறங்கு..! அக்கரைப் பச்சையின்னு அவசரமாப் போனவரே அக்கரை இருந்தும் அக்கரையில் என்ன செய்வீர்? ஆண்: இன்பம் தந்த அற்புதமே, அப்பனுக்கு அச்சரமே இலமறவு காய்மறவா இருக்குதடீ எந்தன் பணி இக்கரைப் பச்சையின்னு இங்கு வந்த அப்புறந்தான் இனிக்கப் பேசி இடித்துரைப்பார் எப்படின்னு நானறிஞ்சேன்! பெண்: உமக்கென்ன மகராசா குளிர்வசதி மச்சுவீடு உய்யாரமாயுலவ உயர்த…
-
- 1 reply
- 933 views
-
-
கொஞ்சி விளையாட..!!! புலர்ந்தது பொழுது மலர்ந்தது என் வதனம் எழுந்தேன் படுக்கைவிட்டு தொழுதேன் உன்கால்களை ஏன் என்று நீ கேட்கிறாயா? எப்போதேனும் உன் கால்களை வார நான் குனியும் போது உனக்கு ஐயம் வராதல்லவா? சரியன்பே கொஞ்சம் சிரி உன்னிதழ்விரித்து... குளிர்த்து நீராடிவிட்டு குளிர்போக சுடுநீரில் அன்பைக் கலந்து அணங்கு நான் தேநீர் தயாரிக்க போகணும் அன்பே... சிரி ஒருமுறை சிரி குவி உன்னிதழைக் குவி கவி நீயானாலும் பல கவி நான் எழுதுவேன் உன்னிதழ் மேல்..! மங்கை நான் அருகிருக்க அங்கை அள்ளத் துடிக்கையில் அன்பே... கொங்கைகள் ஏங்குமடா! சங்குக் கழுத்தும் உன்னிதழ் முத்தத்திற்காக காத்திருக்குதடா! பொங்குகின்ற இன்பம் கோடி மங…
-
- 24 replies
- 4.3k views
-
-
காண வல்லாயோ ? ------------------------------------------------------ நீ இக்கணத்தில் ஒரு ஆற்றங்கரையிலோ அன்றில் ஒரு கடற்கரையிலோ உலாவிக் கொண்டிருக்கிறாயென நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன். மிருதுவான ஒரு மணற்தரையில் உன் வெறும்பாதங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் நான் உன்னையெண்ணிக் கனவு கண்டுகொண்டிருக்கிறேனென நீ கனவு கண்டவாறே நிர்மலமான ஆகாயத்தையும் அடிவானத்தையும் மோகப் போதையுடன் பார்த்து முறுவலிப்பதாகவும் என் கனவுகள் விரிந்தவண்முள்ளன. நிறமிழந்து பெயர்களையிழந்து வயதிழந்து இருத்தலையும் இழந்து நித்தியமானவளாகவும் முழுமையானவளாகவும் ஆகிவிட்ட என் காதலியே ! காதலிப்போர் அனைவரினதும் காதலில் பதுங்கிக்கிடக்கும் என்னு…
-
- 4 replies
- 1.6k views
-
-
பூமி சூரியனைச் சுற்றினால் வருஷம்! தேர் ஊரைச் சுற்றினால் திருவிழா! தீ திரியைச் சுற்றினால் வெளிச்சம்! காற்று உடலுக்குள் சுற்றினால் உயிர்! உயிர் உயிரைச் சுற்றினால் காதல்! நீ என்னையும் நான் உன்னையும் சுற்றுவதே வாழ்க்கை! தாய்ச் அவர்களின் ஒரு கவிதை சிங்களம் தமிழைச் சுத்தினால் மங்களம்!!
-
- 7 replies
- 1.5k views
-
-
-
அண்மையில் கனடா சென்றபோது எழுதிய கவிதை. கவி நாயகி/ muse - வ.ஐ.ச.ஜெயபாலன் வெண்பனிக் கோலமும் இல்லாத புகை வண்ணக் கொடுங்குளிர் நாள். தேனீரால் உயிரை சூடாக்கியபடி கண்ணாடி மாளிகையுள் இருந்தேன் * தூரத்துக் கரும் அணில்கள் கோடையில் புதைத்த கொட்டைகளை மீட்க்க அலைந்தன. நானோ அந்த உறைந்த நெடும் பகலில் சென்ற வருகையில் எனக்காக நாளொரு பறவையும் பொழுதொரு பூவுமாய்க் கமழ்ந்த டொரன்டோ நகரின் நினைவுகளை மீட்டிக் கொண்டிருந்தேன். சில கவிதையாய் சிறகசைத்தபடி. * கடந்த வசந்தகால வருகையைவிட. இக் கொடுங் கூதிர் வருகை இனிதாகுமென ஒருபோதும் நம்பவில்லை. ஆனாலும் வாழ்வு …
-
- 7 replies
- 911 views
-
-
நாட்டைவிட்டு ஓடிவந்த நாதேறிகளை நட்புக்கரம் நீட்டி வரவேற்று அடைக்கலம் கொடுத்து தன் நாட்டையே அவனுக்குத் தாரை வார்ப்பான் தமிழன் ரொம்ப நல்லவன் காலம் காலமாய் கட்டிக் காத்த கொள்கைகளை கடாசிவிட்டு அறிவுக்கு உதவாத அவன் கொள்கைகளைப் பின்பற்றி அவனோடு கூத்தடிப்பான் தமிழன் ரொம்ப நல்லவன் மாற்று இனத்தான் தன்னை மெச்சுவதற்காக தன் இனத்தானை அவனிடம் காட்டிக் கொடுத்து அவனிடம் கைத்தட்டல் பெறுவான் தமிழன் ரொம்ப நல்லவன் தன்மொழி பள்ளி இருக்க பிறமொழி பள்ளிக்குத் தன் பிள்ளைகளை அனுப்பி அந்த மொழியில் தன் பிள்ளைகள் பேசுவதைக் கண்டு பூரித்துப் போவான் தமிழன் ரொம்ப நல்லவன் தன் தாய்மொழியைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு பிறர் மொழியில் உரையாடி அந்த மொழி வளர நீரூற…
-
- 5 replies
- 1k views
-
-
என் தேசத்தில் இது கிளையுதிர்காலம்... -------------------------------------------------------------------------------- இலையுதிர் காலம் முடிந்து இப்போது இங்கே கிளையுதிர்காலம்... தினமும் இயற்கை மரணத்தை விட செயற்கை மரணம் மலிந்து போன மண் இது... சுவாசப்பைகளும் இருதயத்துடிப்பும் பலவந்தமாய் பிதுங்கியெறியும் கைகளை குலுக்கிக்கொண்டிருக்கின்றன சில ராட்சசக்கைகள்.. எம்மண்ணுமே இங்கே செம்மண்தான் குருதித்துகள்கள் கலந்து போனதால்... குழந்தைகள் தாலாட்டு தொட்டில் மூன்றும் தலைகீழாகி இப்போது சடலங்கள் ஒப்பாரி பாடை எங்கள் ரணங்களை உங்களுக்கெல்லாம் புரிய வைக்க எந்த உவமைகளை தேடிப்பிடிப்பது...? ஆயுதங்களும் ஆயுதங்களும் ம…
-
- 2 replies
- 1.1k views
-
-
என் அழகான ராட்சஷி கவிதை ஆசை காட்டி மோசம் செய்த அழகான ராட்சஷி ! அவள் அழகின் சிலையல்ல அனாலும் என் மனதின் மொழியானாள் ! அவள் சொல் கேட்டு நான் மகிழ்ந்திருந்தேன் ! அவள் நடை பார்த்து நான் நெகிழ்ந்திருந்தேன் ! அவள் புன்னகை பார்த்து நான் மலர்ந்திருந்தேன் ! இருந்தும் அவள் குணம் பார்க்க நான் மறந்து விட்டேன் பின்னால் அவள் மனம் பார்த்து நான் உடைந்து விட்டேன் ! நீதான் தன் மனம் என்றாள் நீயில்லா வாழ்வு தனக்கு மரணமென்றாள் அவள் சொல் கேட்டு மகிழ்ந்திருந்தேன் என் கண்களை மழையாக்கி காணாமல் சென்றுவிட்டாள் ! சென்ற பின்னர் ஓர் தடவை என் கண்ணில் தரிசனம் தரவந்தாள் ! அவளை கண்டதுமே என்னை பிரிந்ததற்க்கு காரணம் கே…
-
- 19 replies
- 2.6k views
-
-
சுதந்திர வான் நோக்கி தனிப் பறவையாய் நான் இணைச்சிறகடித்து பறந்திட மலரே உன்னை மலர்ச் சிறகாக்கி என்றோ என் நினைவுச் சிலையில் செதுக்கி வைத்தேன்...! தோப்பிருந்து புறப்பட்டு இலக்கு நோக்கிப் பறக்கும் வேளை மலரே உன் நினைவு மட்டும் மனதோடு இல்லைக் கண்டால் அடிக்கும் என் சிறகும் ஓய்தல் காண்கிறேன் அதற்காய் நான் உன்னடிமையில்லை...! உன் அன்புக்கு அடிமையாகி உன்னினைவின் சக்தியில் பறப்பதாய் மட்டுமே உணர்கிறேன் பார்...! அதுவும் ஓர் நிலை உந்துசக்தியாக....! நாளை என் சிறகுகள் பலமிழந்தால்.... உடல் வீழ்வது உறுதி என் இலட்சியம் என்னோடு கனவாகிச் சிதறவும் கூடும் அவ்வேளை உன் அன்பு மட்டும் எனைத் தாங்கும் கோலம் கண்டால் மீண்டும் எழுவேன்...! வேற்றுமையில்லா உன்னன்பு போதுமடி என் ச…
-
- 8 replies
- 1k views
-
-
நீ நினைத்திருக்கலாம் நான் அதுபற்றி கதைக்காமலே இருந்திருக்கலாம் என்று...! ஒரு வகையில் நீ நினைப்பது சரியாகப் பட்டாலும்...! ஒருவகையில் நான் பேசியதும் சரியாகத்தான் படுகின்றது....! ஒருவகையில் அது விழிச் சந்திப்புகளில் வெளிப்பட்டிருக்கலாம்...! அது புனிதமானது புனிதத்தின் நிழலைக்கூட தீண்டும் தகுதி எனக்கில்லை நீ.... இத்துணை ஆண்டுகளில் நான் கண்டெடுத்த அழகு பொக்கிசம்...! நானாக நினைத்தாலும் உன்னை இழக்கும் சக்தி... எனக்கில்லை...! இருந்தாலும்... விளக்கைக் காதலித்து அதன்நூடே மரணிக்கும் ஈசல் வாழ்க்கை என்னுடையது....! கடலைப் பார்த்திருப்பாய்...! எத்துணை முயன்றாலும் கரைகடக்க முடிவதில்லை அதனால் அலை கரை…
-
- 6 replies
- 1.4k views
-
-
வீழ்ந்த வீரர்களும்... வென்ற கோழைகளும்....... கவிதை - இளங்கவி....... முள்ளிவாய்க்கால்.... தமிழர் பிணங்கள் பல வீழ்ந்து.... மலைகள் பல சாய்ந்து..... இரத்தத்தில் நிலமெல்லாம் குளமாகி...... தசைகளிலே மண்ணெல்லாம் சேறாகி..... இறுதிவரை வீரம் சொல்லிய மண்..... வேங்கைகை பல சாய்ந்த மண்.... வல்லரசின் வீரர்களைச் சேர்த்து.... வாங்கி வந்த குண்டுகளைப் போட்டு.... பறந்து வந்து எரிமலையை போட்டு.... பாய்ந்து வரும் பீரங்கியால் தாக்கி... எத்தனை படுகொலையை இலகுவாய் செய்துவிட்டு...... வெற்றியாம் வெற்றி....! அவர்கள் வீரராம் விரர்....! கோழையின் வெற்றி உன் கொல்லைப்புறம் மட்டும் தான்.... வந்தவர்கள் போய்விட்டால் உன் வ…
-
- 13 replies
- 2.5k views
-
-
அன்று எங்களை 1983 கலவரமும் தமிழர் போராட்டங்களும் உலுப்பியதுபோல கோபம் கொள்ள வைத்ததுபோல இன்று கலைஞர்களை, குறிப்பாகச் சமகாலக் கவிஞர்களை முளிவாய்க்கால் உறங்கவிடாமல் கோபத்தில் கொதிக்கவும் சபிக்கவும் வைக்கிறது. எமது வன்னி மண்ணின் இரட்டையர்களான கருணாகரனும் தீபச்செல்வனும் எழுதிய இரண்டு கவிதைகளை அதன் பொருத்தப்பாடு கருதிப் பதிவு செய்கிறேன். முள்ளிவாய்க்கால் 2017 - கருணாகரன் ( Sivarasa Karunagaran ) -------------------------------------------- இரத்தமும் உயிரும் உறைந்து அனலடிக்கும் இந்த மணல் வெளியில் நேற்றும் பட்டி பூத்திருந்தது இன்றும் பூத்திருக்கிறது நாளையும் பூக்கும் நேற்றைய பட்டிப் பூக்கள் தனித்திருந்தன. இன்று வெள்ளை உடைகளில் விருந்தாளிக…
-
- 2 replies
- 1.9k views
-
-
தலைவியை இழந்த வானம் போருக்குப் புதல்வர்களை தந்த தாயாக வானம் அழுகிறதென எழுதிவளுக்காய் கவிழ்ந்து கிடக்கிறது பூமி பாலையை கிழிக்கும் குரலில் பேரன்பு கந்தகம் படிந்த முகத்தில் அழகிய புன்னகை இரும்பு மனுசியின் கம்பீரத்தில் சீரழகு தாய்மை நிறைந்த நிகரற்ற தலைவி வீரக் கதைகளில் சீருடைகளுடன் இன்னும் உலவும் தலைவியின் மௌனத்திலும் இறுதி வார்த்தைகளில் உறைந்திருந்தது மாபெரும் நெருப்பு வாதையின் பிணியே சூழ்ச்சியாய் தன் புதல்வியை தின்றதென புலம்புகிறாள் தாயொருத்தி நெஞ்சில் மூண்ட காலத் தீயே தன் தலைவியை உருக்கியதென துடிக்கிறாள் சேனைத்தோழியொருத்தி மௌனமாகவும் சாட…
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ் அது எனது வாழ்வு அதன் உறவுகள் எனது உடன் பிறப்புக்கள் யாழ் எனக்கு எல்லாம் தந்திருக்கிறது ஐயா அண்ணன் அக்கா தங்கை தம்பி மாமன் மச்சான்......... யாழ் எனக்கு தாய் அமைதி வழி நடந்து அடிவாங்கி ஆயுதம் தூக்கி நரித்தனமாய் அழிக்கப்பட்டு உருக்குலைந்து இனி என்ன செய்ய என்ற நிலையில் நான் சாய்ந்த மடி யாழ்........... யாழ் என் தங்கை போல அழகு செய்ய ஆசை நடந்த நல்லவை அனைத்திலும் நானும் பங்காளி ஆபத்து வந்தபோது காவலன் யாழ் என் பெண்டாட்டி போல அதன் அருமை எனக்கு தெரிவதில்லை எனது பலவீனங்களை நான் ஒரு போதும் வெளியில் சொல்வதில்லை யாழில்லையென்றால் நான்? சொல்லமாட்டேன்.............. அவள் வாழிய பல்லாண்டு....... தமிழிருக்கும் வரை அவள் இருப்பாள்.
-
- 13 replies
- 948 views
-
-
தீர்வுகள்தராத தினமேன்? தீர்வுகள்தராத தினமேன்? ————————————— தினமொரு தினம் வைத்துத் தீர்வுகள் ஏதுமின்றிக் கண்ணாடி மாளிகையில் காகிதத் தீர்வுக்காய்க் கூடிக் கலைகின்ற ஐநாவே உனக்குத் தெரியாது உயிரடங்கும் வேதனைகள்! வேதனைகள் சுமந்தபடி உலகின் மூலை முடுக்கெல்லாம் அலைகின்ற மாந்தரினம் அடிப்படை உரிமைக்காய் அன்றாடம் பிணமாகி அலைக்கழிந்து வீழ்கின்ற அவலநிலை தொடர்கையிலே நீயேன் இருக்கின்றாய் ஐநாவே! உனக்கு எதற்காகத் தினங்களென உரிமையற்ற மாந்தர்கள் உரத்துக் கேட்பது உனக்குப் புரியாது காற்றுக்கூடப் புகாத கண்ணாடி மாளிகையில் கழுத்துப்பட்டியுடன் அமர்ந்து குளிரூட்டிக் காற்றுவர குளிர்பாணம் குடித்தபடி எத்தனையாம் என்றுகேட…
-
- 0 replies
- 881 views
-
-
என் இனிய தேசமே என்று உன்னை காண்பேனோ தெரியவில்லை எனக்கு உன்னைப் பிரிவதென்றால் உயிர்விட்டுப் போவதுபோல் வலியொன்று உணர்கின்றேன் என் செய்வேன் நான் ஏனிந்த நிலையெனக்கு என் வீட்டு முற்றத்தில் தினந்தோறும் எழுந்து வந்து ஆனந்தமாய் அனுபவிக்கும் இளங்காலை இனிமை மஞ்சள் இளவெயிலின் தகதகக்கும் மோகனத்தில் உணர்வழிந்து உறைந்துவிடும் மாலை மயக்கங்கள் என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும் அழகான காலையிலே அவசரமாய் உணவு தேடி பரபரப்பாய் பறந்து வந்து பாட்டிசைக்கும் புள்ளினங்கள் பச்சை இலைகளிலே பதுங்கி ஒழிந்திருந்து கதிரவன் வெளிப்படவே ஒளிவீசும் பனித்துளிகள் என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும் கொத்து கொத்தாய் காய்காய்க்கும் முற்றத்து மாமரங்கள் பழு…
-
- 10 replies
- 1.8k views
-
-
அன்பு என்பதன் அர்த்தம்தான் என்ன? அந்த ஒரு சொல்லின் கருதான் என்ன? தாய்தன் பிள்ளை மீது கொண்ட அன்பு என்ன? கணவன் மனைவி மீது கொண்ட அன்பு என்ன? காதலன் காதலி மீது கொண்ட அன்பு என்ன? நண்பன் நண்பன் மீது கொண்ட அன்பு என்ன? கண்கள்மீது இமைகள் கொண்ட அன்பு என்ன? இதயத்துக்கு இசை மீது கொண்ட அன்பு என்ன? மொழிமீது கவிஞனுக்கு கொண்ட அன்பு என்ன? இருளின் மீது சந்திரன் கொண்ட அன்பு என்ன? மழைத்துளிகள் பூமி மீது கொண்ட அன்பு என்ன? மலர்கள் மீது வண்டுகள் கொண்ட அன்பு என்ன? ஒளி மீது மரங்கள் கொண்ட அன்பு என்ன? அலை கடல் மீ…
-
- 9 replies
- 1.4k views
-