கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
உலகத் தமிழர்க்கு தலைவனாம் எண்ணத்தில் கைக்கெட்டும்தூரத்தில் கொத்து கொத்தாய் கொலைகள். தடுக்க தைரியமில்லா தலைவா தப்பான சேர்க்கையில் தன்மானம் இழந்தாயோ? இல்லை வெள்ளை தோலினிலே தன்னிலை தளர்ந்தாயோ? அருகினிலே மாழ்வது உன்னினமே தட்டிக் கேட்க துப்பில்லை தரம் கெட்டவளின் பசப்பினிலே தடுமாறி போனாயோ? இல்லை உடல் தளர்ந்தும் உன் ஆசைகள் தளரவில்லையா? மதி கெட்டவனே அருவருப்பாயில்லை உனக்கு வாக்கெடுப்பு நடாத்தி பார் யார் தமிழினத் தலைவனென்று உன் கரங்களே எங்கள் தம்பிக்கு வாக்களிக்கும். அறிந்தும் அறியாதவன் போல் நாடகம் ஏன்? நாளைய சந்ததி படிக்கும் வர…
-
- 2 replies
- 1.2k views
-
-
வன்னி வான்பரப்பு நீலமில்லை. கூரைகள் இல்லை படுத்துறங்கக் குடிசையுமில்லா மரத்தடி வாழ்வு மடுவிலிருந்து ஆரம்பம் கற்காலம் இதுவல்ல கடந்த காலத் தொடர். சமாதானம் சமாதானமென்று சொன்னோர் பிணதானம் வாங்கி உயிரெடுக்கும் பலிகால ஆரம்பம். போனது பாதி போகாதது மீதியென பதுங்குளி வாழ்வு மீளவும். பலாலியில் ஆரம்பித்து வலிகாமம் வடமராட்சி தென்மராட்சி வன்னியென போர்க்கதவுகள் திறபட தசாப்தங்களைத் தின்கிறது தமிழர் கதை. வன்னி வான்பரப்பு நீலமில்லை தமிழர் குருதியின் நிறமாக வானும் தரையும் ஒளிவர்ணக் கலவையின்றி உடைவுகளும் சிதைவுகளும் ஒவ்வொன்றாய் தொலைகிறது. கூரைகளற்று விமானக் குண்டுகள் தாங்கும் நிலமாக வன்னிமண். உதவிக்கும் ஆ…
-
- 2 replies
- 1.3k views
-
-
வித்தகக் கவி நானென்று விண்டுரைக்க வரவில்லை முத்திரைக் கவி நானெழுதி மூண்டெள முயலவில்லை கொத்துக் கொத்தாய் எம்மவர்கள் செத்து விழுந்தபோதும் தத்துவங்கள் பேசியிங்கே தரித்திரராய் வாழ்ந்திடுவோம் மன்னுயிர் மண்மேல் வீழ்ந்து மடிந்திடும் நிலைதான் கண்டும் என்னுயிர் பிழைத்தல் வேண்டி ஒதுங்கிநான் நிற்கக் கண்டு முன்வாயிற் சொற்கள் சேர்ந்து முரண்டு பிடித்தெனைக் கொல்ல என்னுடல் நிமிர்ந்து நானும் ஏற்றந்தான் காண்பதெப்போ சாப்பாடு இன்றியங்கே தமிழ்ச்சாதி சாகக்கண்டும் காப்பீடு ஏதுமில்லாக் காரியங்கள் நாங்கள் செய்து ஏற்பாடு ஏதும் இன்றி ஆர்ப்பரித்தே எழுந்திடாமல் கூப்பாடு போட்டு இங்கே கும்ம…
-
- 2 replies
- 752 views
-
-
எனக்குள்ளே புதைந்து போன ஈழம் நீ உன்னை விட உன் நினைவுகளையே அதிகம் நேசிக்கிறேன் ஏன் தெரியுமா உன் நினைவுகள் மட்டும் என்னோடு இருப்பதால்
-
- 2 replies
- 842 views
-
-
என்றும் போல.... நிலவுக் கதிர்களை விழுங்கிச் செல்கிறது மழைக்கால வானம். மாவீரம் சொன்னபடி மழைத்துளிகள் நிலம் நனைக்க கருவறை வாசம் நினைவேற்று நித்திரை அறுகிறது..... ஒளிக்காட்சியொரு பொழுதில் உயிர் அதிர்த்த ஞாபகத்தில் விழிக்காட்டிக்குள்ளிருந்து துளித்துளியாய் சொட்டுக்கள்..... சென்று வருவதாய் சொல்லிப் போனவனின் கடைசிக் கடிதத்தின் சொற்கள் கசங்சி மங்கலாகி பல்லாயிரம் தரங்கள் படித்துப் படித்துப் பாடமான பின்னாலும்.... அவனைக் காணும் அவசரம் என்றும் போல..... இரவுக் கரி திரட்டி ஒளியின் விழி தன் உயிரில் திரிமூட்டி ஊரதிர உயிர்க்காற்று பேரதிர்வாய் நிறைகிறது. சொல்லாமல் கொள்ளாமல் சென்றவனின் சிரித்த முகம் கொல்லாமல் கொல்…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழில் கலவரம் நீ யாரென நினைத்தால் யானென்ன செய்வேன் நீ உரைத்தே குரைத்தால்- நானென்ன உறங்கியா போவேன்?? நீ நினைத்ததை திணிக்கின்ற நினைப்பதை மறந்திடு கருத்து சுதந்திர கன்னியம் காத்திடு. தலைமேலே ஆணவம் தலைமேலே அமர்ந்தால் தடக்கியே விழுவாய் தடமது அழிவாய்... யாழது நிலவரம் யாழினில் என்றால் அன்னியன் நீயுமே- உனை அடித்தே உதைப்போம்.... தட்டியே கேட்காமல் தவறதை விட்டால் வருந்தியே அழுகின்ற வம்சமாய் ஆவோம்.. காத்த பொறுமைகள் காற்றோடு பறக்கட்டும் இனியும் பொறுத்தால் இமயங்கள் தகரும்... சுதந்திர ஊடக சுதந்திரம் மிதித்தால் - உனை சுடுகாடு அனுப்பாது விடுவது முறையோ...??? - வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1k views
-
-
கரைந்து ஓடும் காலங்களின் கரை சேரா நாட்களுடன் கனவுகளைச் சுமந்து கால்கடுக்க நடக்கின்றனர் கண்களை மூடியபடியே காரணம் அற்றவர்கள் காற்றும் சென்றிடமுடியா கனதியான வெளிகளினூடே கர்ப்பம் சுமக்க முடியாதவராய் கருகிப் போனவர் முன்னே கபடு நிறைந்த முகங்களுடன் கல்லறை தேடுகின்றனர் கிரகிக்க முடியாத கணக்குகளை கிஞ்சித்தும் காணமுடியாது கிளர்ந்தெழும் கீற்றுக்களாய் கீழ்ப்படிய மறுப்போர்க்கான கடைநிலைக் கருவறுப்பாய் காகங்களின் கரைதல்கள் கோரமுகங்கள் உருமாற கொடுவினையின் உருவங்களாய் கொள்கைகள் அற்றவராய் கூற்றுக்கள் குதிர்களாக கும்மாளத்துடன் அலைகின்றன காற்றின் கடும் வீச்சில் கலைந்தே குலைந்துபோகும் கனமற்ற கடதாசிக் குருவிகள்
-
- 2 replies
- 643 views
-
-
ஈழக் கவிஞனின், உள்ளத்தின் ஈரமும்.. இனத்தின் வலியின் ஆழமும்... புரியும், இக் கவியை கேளுங்கள். ஈழக் கவிஞர் கு.வீரா.
-
- 2 replies
- 1k views
-
-
தம்பி ராஜாவும்... அண்ணன் டவாலியும்..! எதை பற்றி பேச வேண்டும் அதற்கெல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள் வியாபாரம் என்ன என்று சொல்லுங்கள் இடம் வாங்க வேண்டுமா அதற்கும் எங்களிடம் நபர்கள் இருக்கிறார்கள் அணைத்து வியாபாரமும் இணைய தளம் மூலம் வைத்துக் கொள்வோம் கவிதை எழுத்து பதிவுகள் பிண்ணூட்டங்கள் இவை அனைத்தையும் எரித்து விடுவோம் அல்லது எறிந்து விடுவோம் பத்தாயிரம் அல்ல சில பத்தும்... பத்தும் போதுமானவை..? கியாரண்டி கொடுக்கப்பட்டு விட்டன..! மரணம் நிகழ்கிறது கொண்டு போய் எறிப்பீர்களா மண்ணுக்குள் செம்முவீர்களா..? ஆனாலும் ஏதோ ஒன்று மீன் முள் குத்தியதைப் போல நல்ல விருந்து உண்டு வாந்தி எடுத்ததைப் போல …
-
- 2 replies
- 699 views
-
-
மரணத்தின் முதல் படியில்...... தூக்கம்......... மரணமெனும் வீட்டின் கனவு எனும் ஜன்னல் கொண்ட கவலை மறந்து களைப்பு ஆறும் தங்குமிட விடுதி......! உள்ளே செல்வதற்கு அனுமதி உனக்கு மட்டும் தான்.... உன் எந்த உறவும் உன்னுடன் செல்வதற்கு அங்கே அனுமதி மறுப்பு...... தனிமையிலே இனிமை காணும் மாய மண்டபம்...... ஒவ்வொரு நாட்களும் உனக்கு அங்கிருக்க அனுமதி சிலமணி நேரம் சில வேளைகளில் வெளியே வரும் கதவுகள் மூடப்பட்டால் உன் ஜன்னல்களும் சாத்தப்படும் அன்றுடன் உன் வெளியுலகத் தொடர்புகள் அனைத்தும் துண்டிப்பு உனக்கும் நிரந்தர விடுமுறை அதுதான் உன் மரணம்..... வாழ் நாளில் பெருமளவை சிலர் இங்கே கழித்திடு…
-
- 2 replies
- 867 views
-
-
அடுத்த கணம் நோக்கி எதிர்பார்ப்புக்களேதுமற்று பார்த்திருப்பதைத் தவிர முதலாமவனாகவோ இறுதியானவனாகவோ ஆவதற்கு நான் பிரார்த்தித்திருக்கவில்லை எவ்வளவுதான் சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தபோதிலும் அவர்களது அன்பற்ற குட்டுக்களிலிருந்து தப்பிக்கொள்ள முடியவில்லை சித்திரவதைக் கூடத்தில் கழித்த முதல் மணித்தியாலத்திலேயே எண்ணங்கள் காணாமல் போயின துயர்தோய்ந்த இறந்த கால நினைவுகள் உடல்சதையைச் சுழற்றும் மோசமான வேதனைகள் மரண ஓலங்கள் அசாதாரண உருவங்களோடு மனங்கவர் வர்ணங்கள் பயங்கரக் கனவுகளிடையே உணர்வுகளைத் தூண்டுகின்றன பயங்கரத்தைத் தவிர இங்கிருப்பது மனிதத்தன்மையில் கையேதுமற்ற நிலை சித்திரவதைக் கூடத்தில் சந்திக்கக் கிடைக்கும் ஒரே அன்பான தோழன் மரணமே அவனும் …
-
- 2 replies
- 538 views
-
-
-
நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம் நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும் குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை பேசவைக்க வேண்டுமே என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள் உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும் உயிர் பெற்று விடுகின்றது மழை விட்டது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இருந்தும் என் குடைக்குள் இன்னும் நீ கோவம் வரும் போது உன்னை நினைக்க சொன்னாய் வராத போதும் உன்னை நினைத்தேன் இப்ப என்னை நினைப்பாயோ -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 1.2k views
-
-
கெட்ட கனவு. ஆழ் மனத்தின் வடு.... ஆமி சுற்றி வளைத்தான் ஆட்காட்டியும் கூட நின்றான் அடையாள அட்டையைக் காணவில்லை திடுக்கிட்டு எழுந்தேன் சிறிது நேரத்தின் பின் புரிந்தது அது கெட்ட கனவு என்று. சுடுகாட்டின் மத்தியில் படுத்திருந்தபடி கண்விழித்தேன் சுற்றும் முற்றும் பார்த்தேன், என் சுற்றம் எல்லாம் பிணக்குவியலாக.. அலறியடித்து எழுந்த்தேன் அப்புறம் தான் புரிந்தது அது கெட்ட கனவு என்று.
-
- 2 replies
- 984 views
-
-
1970ல் எழுதிய என்னுடைய இரண்டாவது மூன்றாவது கவிதைகள் இவை . இரானுவ புவியில் ஆர்வத்தில் ஈழத்து காடுகளைத் தேடி அலைந்தபோது எழுதியவை. அது வன்னி நமது விடுதலை வரலாற்றின் மையமாகாத காலமாகும். விரக்தி கனலும் கடும் கோடையில் மாரிதனைப்பாடும் வன்னிச் சிறுவன் காலமுள்ளளவும் ஈழத்தின் மீண்டும் நிமிரும் நம்பிக்கையின் படிமமாக இருப்பான். 1 நம்பிக்கை துணை பிரிந்த கயிலொன்றின் சோகம் போல மெல்ல மெல்ல கசிகிறது ஆற்று வெள்ளம். காற்றாடும் நாணலிடை மூச்சுத் திணறி முக்குளிக்கும் வரால் மீன்கள். ஒரு கோடை மாலைப்பொழுது அது. என்ன ருகே வெம் மணலில் ஆலம்பழக் கோதும் ஐந்தாறு சிறு வித்தும் காய்ந்து கிடக்கக் காண்கின்றேன் என்றாலும், எங்கோ வெகு தொலைவில் இனிய குரல் எடுத்து மாரி தன்னைப் பாடு…
-
- 2 replies
- 595 views
-
-
உயிரே என் உயிரே ஒரு வார்த்தை சொல்லாயோ உறவே என் உறவே ஓர் நாளில் மறந்தாயோ ........ மனசே என் மனசே அவள் மனதை சொல்லாயோ உணர்வே என் உணர்வே அவள் உணர்வை சொல்வாயோ உனை நான் பிரிந்தும் உடலால் இழந்தும் உனையே நினைத்தேன் உயிராய் தானே சுரங்கள் இல்லா கவிதையா இருந்தும் உனையே நினைத்தேன் இசையா தானே உயிரே என் உயிரே ...... ஒரு வார்த்தை சொல்லாயோ உறவே என் உறவே ........ ஓர் நாளில் மறந்தாயோ ........ music உன் உணர்வை நான் புரிந்தேன் என் உணர்வை ஏன் மறந்தாய் உனக்கென்று நான் பிறந்தேன் ஏன் இங்கு எனை மறந்தாய் சாலை ஓரம் தவிக்கின்றேன் பிணமாக நடக்கின்றேன் நீ போகும் இடமெல்லாம் தனியாக தவிக்கின்றேன் உய…
-
- 2 replies
- 1k views
-
-
வா மச்சான் வா மச்சான் உனக்கு கவலை எதுக்குடா காதல் என்பது மூன்று எழுத்து வாழ்க்கை என்பது நான்கு எழுத்து காதலை விட வாழ்க்கைதான்டா பெருசுட நிம்மதி உனக்கு நிச்சயம் கிடைக்கும்ட தோல்வியும் நமக்கு தோழன்ட வருந்தாதே நண்பா நினைச்சவங்க கிடைச்ச காதலிட இல்லை என்றால் வாழ்க்கை காதலிட காதல் தோல்வி மரணம் வேண்டாம்ட லட்சிய வெற்றிய குறி வைச்சட நிச்சயம் நமக்கு இருக்குட வரலாறு வாழ்க்கை என்றும் உந்தன் கையில்ட...
-
- 2 replies
- 786 views
-
-
கண்ணிமைக்கும் நேரத்தில் நீ தோன்றினாய் கண்கள் இரண்டையும் ஏன் திருடிச்சென்றாய் கள்ளி என்று உன்னைக் கூற - ஏனோ கன்னியே என் உள்ளம் மறுக்குதே காலம் காலமாய் கதவு மூடி காத்த இந்த கனத்த கல் நெஞ்சம் இன்று காற்றில் பறக்கும் பஞ்சாய் மாறிப் போகுதே கனவில் கண்ட நீ இன்று நிஜத்தில் உதித்தாயோ ஆயிரமாயிரம் அழகிகளைக் கண்டேன் / ஆனால் ஆணவத்துடன் அசைக்க முடியாத ஆம்பிளையாய் நின்றேன் அக்கு வேறு ஆணி வேறாய் என்னை அழித்தாயே அடிமனத்தில் அடித்த ஆணியைப் போல் இறங்கினாயே ஊமையாய் நாடகமாட உருகுகிறேன் நான் ஊதுவத்தியைப்போல் உச்சத்திலிருந்தவனை உலைய விட்டு உருக்கி விட்டாய் பாவியே உன்னால் முடியுமா இவ் உண்மையை உணர உறக்கத்திலிருந்து எழுமா உந்தன் உள்ளம் முகநூலில் தேடுகிறேன் …
-
- 2 replies
- 465 views
-
-
சாத்தான்களின் வருகையால் …. மனிதம் நசுங்கும் பொழுதொன்றில் வரும் என் அவலக்குரல் -உங்களுக்கு ஒப்பாரிப் பாடாலாய் தோன்றலாம் இதுதான் வாழ்க்கை எமக்கு நித்தம் சப்பாத்துக் கால்களில் மிதிபட்டு நசுங்குகிறது எம் குரல்வளை... உயிர் உறையக் கதவடைத்து துயில்கையில் நாய்களில் ஓலத்தில் எமனின் பிரசன்னம் ! மூச்சு விட மறந்து உயிர் பற்றி தவிக்கையில் இடித்து உடைகிறது கதவு தாழ்ப்பாள் தெறிக்க ... இராணுவ மிருகங்கள் ஊர் புகுந்தபின் அன்றாட வலிகளாய் போனது இதுவும் .. ஆண்பிள்ளைகள் கைதாக்கி முற்றத்திலே சோதனை என தொட்டுத் தடவுகையில் செத்துப் போகிறாள் முதல் தடவை தமிழிச்சி .. பெற்றவர், கட்டினவர் கண்முன்னே அடித்து உதைத்திழுத்து செல்லுகையில் யார் கதறலு…
-
- 2 replies
- 684 views
-
-
இதழில் மட்டுமல்ல உன் இறப்பிலும் மொழியுண்டு. "தீபன்" என்ற பெயர் ஓராயிரம் தீப்பொறிகளின் அடையாளம். தளபதியாய் தலைவனின் பெறுமதியாய் எல்லாமுமாய் எங்கள் வல்லமை நீ. பலங்கொண்டு வந்தவர்கள் எவரெனினும் பலம் திரட்டிப் படைநடத்திப் படைத்தவை விரல்களுக்குள் எண்ணி முடித்திட முடியாத வரலாறு நீ. களமாடி வெல்ல முடியாப் பலம் நீங்கள் என்பதறிந்தோர் நச்சுக்காற்றனுப்பிக் களக்கொலை புரிதலில் வெல்வதே வென்றியென்று முழக்கமிட்டுப் புலம்புகின்றார். வீரங்களே எங்கள் விடுதலையின் ஆழங்களே....! இது வீழ்ச்சியல்ல எழுச்சி. வண்ணப்படங்கள் காட்சியிட்ட உங்கள் முகம் இன்றும் எங்களுக்கு வரலாற்றுக் காட்சிகள் தான். புலிவீழ்ச்சி புலிவீழ்ச்சியென விட்டத்தை அ…
-
- 2 replies
- 924 views
-
-
ஈரவிழி உலர்த்தி இகப்பரப்பை உலுப்பு! பண்பட்டுப் பண்பட்டு புண்பட்டுச் சிதைகிறோமே... பார்த்தெவரும் விழி நனைத்து வேதனைகள் தீர்த்தாரா? மண்பட்டு மரணம் தரும் கந்தக அமிலங்களைக் காட்சிப் படுத்தி எவரேனும் கணக்கெடுத்துக் கொண்டாரா? தாயக புூமியிலே.. பேய் ஏவும் கூர்முனைகள் பிண ஓலம் வளர்க்கிறதே... தீ ஏறி உலவிட - எம் தேச முகம் கருகிறதே.. வாயாறச் சொல்லின்றி விம்மி அழும் குரல் கொண்டு வீணர்களின் வேட்டுக்களால் - எம்மினம் வீதியெங்கும் சாகிறதே.... கணப் பொழுதும் இடைவிடா வேதனையைச் சுமத்தி - எங்கள் இனத்துவாழ் குடிநிலங்கள் பறித்தெடுக்கப் படுகிறதே.. இனவாதக் கோரப் பேய் - எம் இன இரத்தம் பருகத் தினவெடுத்துத் தினவெடுத்துத் திருமலையில்…
-
- 2 replies
- 1.5k views
-
-
வாழ்க்கை என்பது என்ன வாழ்வின் அர்த்தம் என்ன வாழாதிருந்தால் என்ன வாழ்வை அனுபவிப்பதென்பதென்ன அழகான பெண்ணை மணப்பதாலா அழகாக உடலை அமைப்பதாலா பகட்டாக வாழ்வதாலா "சத்தான" உணவுண்டு ஆயுளை பெருக்குவதாலா பிள்ளை குட்டி பெற்று பெருவாழ்வு வாழ்வதாலா.. தினம் தினம் ஏக்கங்கள் வயிற்றுப்பசி உடல்பசி பொருள்பசி ஓ.... பலவாயிரம் ஆண்டுகள் மனிதம் இப்படித்தானே கழிந்தது, உனக்கென்ன அர்த்தம் தேவை... "சும்மா" வாழ்ந்துவிட்டு போ.. உன் மூதாதயரை வாழ்ந்துவிட்டுப் போ... மூதாதயர் வாழ்ந்தது தான் வாழ்வா "சமயம்" பல வழி கூறும் பிரிவுகளை மேலும் பெருக்கி உள குளப்பத்தை தான் தூண்டும் பொய்யான, "நம்பிக்கை" தான் வாழ்க்கை என்று விளங்காமல் ஏற்கச் சொல்லும் கிறிஸ்து…
-
- 2 replies
- 1.3k views
-
-
முகம் தெரியா முகநூலில் நட்புறவாட மறந்து கலவி செய்ய எத்தனிக்கும் கயவர்களை இனம் காணுவோம்... ஓட ஓட விரட்டிடுவோம்... வளைதளத்தில் வக்கிரம் வரையறை மீறி இன்று முகப்புத்தகத்தில் முடிவில்லாமல் தொடரும் தொடர்கதையாய்.... முகப்புத்தகம் சிலருக்கு அவர்கள் காம இச்சையை தீர்க்கும் வடிகால் என்றே உருவாக்கிவிட்டார்கள்.... முகம்தெரியா ஆண் பெண்ணுடனோ அல்லது பெண் ஆணுடனோ அந்தரங்கங்களை பகிர்வதால் வருகிறது இந்த வினை.... எதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது யார் அந்த கோட்டை தாண்டினாலும் அந்த உறவுக்கு அன்றோடு முற்றுப்புள்ளி வைக்க அறிய வேண்டும் அனைவரும்... உலகில் வாழவே தகுதியற்ற சில ஈனப்பிறப்புகள் போலி அடையாளத்தில் உலவும் இடமாக மாறிபோய் இருக்கிறது முகப்புத்தகம்...... ஒருபுறம் நல்லவர் போல் உறவ…
-
- 2 replies
- 841 views
-
-
Let us discuss The problem Faced by Tamil of the nation. Nation ... தமிழ் மக்களே தமிழ் மக்களே தேர்தல் வருதே திட்டும் சோங்கா வருதே உங்கள் பின்னே வோட்டும் வருதே வாக்குறுதிகள் பொய் பொய்யா வருதே ஐ.நா.விசாரணை வருதே உள்நாட்டு விசாரணை வருதே தீர்வும் ஸ்ரோங்கா வருதே Yeah, wow What a music ..!! Aaaaahhhhhh வி ஆர் so cool.. மறததமிழர்களே ,ஆண்ட தமிழர்களே நீங்க அழுவதை நாங்கள் இனி பார்க்கமாட்டோம் மறதமிழர்களே ,ஆண்ட தமிழர்களே வோட்டு போட்டுத்தான் மாட்டி விட்டிட்டீங்கள் சொக்கி தவிக்கிறோம் நாங்கள் வோட்டு கேட்டுத்தான் நைசா பேசுறோம் காக்க பிடிக்கிறோம் நாங்கள் வி ஆர் சோ கூல்
-
- 2 replies
- 687 views
-
-
[size=4]“என்னங்க சாப்பிட்டீங்களா?” “ம்ம் சாப்பிட்டேம்மா”[/size] [size=4]“நேரத்துக்குத் தூங்குறீங்களா?” “தூங்குறனே?”[/size] [size=4]“மாத்திரையெல்லாம் போடுறீங்களாங்க?” “ம்ம்…”[/size] [size=4]“ஏங்க தனியா கஷ்டமா இருக்கா?“ கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போவாள்..[/size] [size=4]எனக்கு அவள் உடனில்லாததை விட பசியோ, உறங்கா விழிகளோ மாத்திரைகளின்றி உள்ளிறங்கும் மரணமோ தொண்டைக்குழி அடைப்பதில்லை..[/size] [size=4]மாத்திரைகளை விழுங்கக் கூட மறந்து அவளை நினைத்துக் கொள்கையில் குணமாகிப் போகிறது என் மனசும் உடம்பும்..[/size] [size=4]மரமெல்லாம் பூக்கும் பூக்களும் துளிர்க்கும் இலையும் வருடந்தோறும் உதிர்ந்துப்போகையில் தனித்து விடப்பட்ட வெற்றுமரத்தின் கிளைகளாக வல…
-
- 2 replies
- 523 views
-