கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
சிறையிலே வாடும் பெண்புலிக் கூட்டங்கள்........ கவிதை - இளங்கவி..... மனதிலே பட்டாம் பூச்சிகள் பறக்கும் நினைவுகள்..... காளைகள் பேச்சில் கிறங்கும் உணர்வுகள்..... பொத்தி வைப்பதில் பெட்டகம் போல் ஆசைகள்...... காதல் நினைவில் தென்றல் போல் குளிர்ச்சிகள்.... திராட்சை கண் கொண்டு ஓர் தினுசாய்ப் பார்ப்பாள்... நாம் ஓடிய சயிக்கிளும் உடைந்து விழுந்திடும்.... ஒழித்து நின்று மெதுவாகச் சிரிப்பாள் பசியால் ஒட்டிய வயிறும் உணவால் நிரம்பிடும்.... ஒரே பார்வையில் வா என்றும் சொல்லுவாள்..... போ என்றும் கலைப்பாள்...... அது புரியாமல் நம் சித்தம் கலங்கிடும்...... இப்படிச் சிக்க வைத்து சிரிக்க வைக்கும் வைத்தியம் தெரிந்த…
-
- 42 replies
- 5.1k views
-
-
தேடிக்கொண்டிருக்கிறேன்! --------------------------------------- என்னைத் துடைத்து அழகு பார்த்தவன் இன்னொருவனுக்கு பரிசாய்க் கொடுத்துப் புதைந்து போனான்! விதையென்றானதாய் விழி துடைத்தவள் என்னைத் தாங்கினாள் வீறுடன் நடந்தாள் பேருடன் வந்தாள்! பெரும் பேறினைப் பெற்றவள் தானென கருமையில் கலந்தாள் கடமை முடித்தாள்! மீண்டும் தோள்களில் மிடுக்குடனிருந்தேன் நாட்கள் கழிந்தன! வங்கத்திலாடிய வஞ்சகர் கூட்டம் நஞ்செடுத்தாடி நாயகர் சாய்ந்தனர் நானுமிப்போ தமிழீழ மக்களைப்போல அனாதையாய் சாய்தேன் யாருமிப்போ தீண்டுவதில்லை யார்வருவாரோ தேடிக்கொண்டிருக்கிறேன்!
-
- 6 replies
- 1.2k views
-
-
சைவ சமயம் உட்பட பல சமயங்களில் இறைவனைத் தொழ பதிகங்கள் இயற்றி கோவில்களில் தேவாலயங்களில் பாடி இறை நம்பிக்கைகளை பன்னெடும் காலம் வளர்த்து வரும் நிலையில்... எமது இனத்தின் இருப்பின் முதலாய் நிற்கும் தெய்வத்தையும் கடந்து நினைவில் என்றும் இருக்க வேண்டிய மாவீரர்களை நெஞ்சால் தொழுது இலட்சியத்தால் அவரின் கனவு வென்று நிற்க.. தோத்திரங்கள் பதிகங்கள் இயற்றி நிற்போம். அவை பண்.. தாளம் கொண்டு புனிதம் நிலைக்க.. பாடப்படும் நிலை இயற்றுவோம்..! வீழ்ந்த வீரரின்.. இலட்சியம் காவி நிற்போம். அந்த வரிசையில்.. எங்கள் பங்களிப்பு... உங்கள் பங்களிப்பையும் ஆற்றி நில்லுங்கள்...! பண் - தாளத்துடன் பாடக் கூடியது. பண் - தாளம் - அறியப்பட வேண்டியது. மாநிலத்தின் தமிழ் மரபு காத்தாராய் தமிழ்…
-
- 9 replies
- 918 views
-
-
தண்ணியில் இருக்கும்போது முதலைக்கு பலம் ஈழத்தில் இருக்கும்போது அண்ணனின் பலம் என் மண்ணில் நான் இருந்தால் தான் எனக்கு பலம் என் உறவுகள் அக்கம் பக்கம் கூட இருக்கும் பலம் ... அகதியா வந்தபின் எனக்கு ஏது பலம் அசூல் கிடைத்த பின் இரட்டிப்பு பலம் அங்கின இங்கின உரக்க பேசும் பலம் யாரு கேட்பார் என்னும் நினைப்பு பலம் .. எவரையும் கேள்வி கேட்பேன் என்னும் திமிர் எழுந்தமானமா கருத்து சொல்லும் என் திமிர் தேசியத்தில் புதைத்து போனவர் கொடுத்த திமிர் எம் தேகம் எல்லாம் தீயை மூட்டியோர் விட்டு போன திமிர் ... எல்லாம் இன்றுதான் பார்த்தேன் அவர் முகம் சோகமா என்ன கதைப்பது எதை கதைப்பது என ஏங்கும் முகம் பாவமா தேசியம் பேசவா புரட்சி பேசவா சமத்துவம் பேசவா வேகமா கேட்பவர்களுக்கு தெரியும…
-
- 0 replies
- 653 views
-
-
-
-
பைந்தமிழ் இனம் காக்க பணி நன்றே செய்திடுக! போர் பெய்த மழையினிலே ஊர் விட்டுப்போனவரே! பாரெங்கும் பரந்திருக்கும் பாசப் பிணைப்புகளே! ஆரெவரோ என்றுங்கள் அகம் மூடி நடிக்காமல் பைந்தமிழ் இனம் காக்க பணி நன்றே செய்திடுக! முண்டமாய் உடலும் - சதைப் பிண்டமாய் உறுப்புகளும் கண்ட கண்ட இடமெல்லாம் அழுகிய பிணங்களாக ஆர் பெற்ற பிள்ளைகளோ? அண்டை அயலொடு அவனியிலே பேர் பெற்ற அமைதிப் பெருநாடுகளும் கண்டாரோ? கருத்தில் கொண்டாரோ? ஈழத் தமிழினத்தின் இன்னல் நிலை. செப்ப ஒரு நாவிருந்தும் செப்பாத செந்தமிழா! உற்றாரும், உறவுகளும் ஊரோடு எரிகையிலே ஒப்பாரிப் பாட்டுக்கூட உனக்கெடுக்கத் தெரியலையோ? முத்துமணி ரத்தினமும் மெத்தையொடு மெல்லிடையும் சுத்திவரும் சுகம் தரவா சொந்தத…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஏமாற மாட்டேன் வேணாண்டா...வேணாண்டா.... உன்தன் ..ஆசை வார்த்தை......வேணாண்டா...... பாச...மொழி பேசி வந்து எனை பாவியாக்க..வேணாண்டா.... காதல் மொழி பேசி வந்து என்தன் கற்பை பறிக்க வேணாண்டா... உன்தன ஆசை கிளி என்று எனை அசிங்க படுத்த வேணாண்டா.... நல்ல மனம் நீங்க என்று நாடகம் ஆட வேணாண்டா..... இரவல் போகும் இதயம் உந்தன் இழிவுக் காதல் வேணாண்டா.......... பாசம் வைச்சு உன்னில் நானும் பைத்தியமாய் அலைய மாட்டேண்டா.... ஜய்யோ ராசா வேணாண்டா...... உந்தன் மோக காதல் வேணாண்டா..... சத்தியமாய் நீ வேணாண்டா......உந்தன் சாக்கடை காதல் வேணாண்டா..... உந்தன் போலி வாக்குறதியில் மயங்கி நானும்..... எந்தன் வாழ்வை தொலைக்க மாட்டேண்டா....... மொ…
-
- 8 replies
- 1.5k views
-
-
கூந்தல் நீளம் கொண்டமங்கை - என்னை கா(த்)தல் செய்ய வைத்தாள். காத்து காத்து நின்ற எந்தன் காலம் திருடிக் கொண்டாள் . தொலைவில் இல்லை வானம் என்றே தூரம் நடக்க வைத்தாள். தூரம் நடந்து முடித்த பின்னால் - துன்பப் பாரம் சுமக்க வைத்தாள் . வாழும் வாழ்வில் இனிமையேது வாதம் முடியவில்லை . வாதம் முடிவை அடையும்போது வாழ்வு இருப்பதில்லை. கனவில் தோன்றும் முகங்கள் பழைய நினைவை எனக்குள் தேடும். எனக்குள் தோன்றும் நினைவி லென்ன சுவைகள் இருக்கக் கூடும். பாலை நிலத்து நீரிலெங்கே பாசி முளைக்கக் கூடும். - நான் பார்த்த பெண்ணின் மனதிலென்று பாசம் தோன்றக் கூடும். பள்ளி வாழ்வில் நடந்ததெல்லாம் பழைய கதைகள் ஆச்சு. புதிய வாழ்வை தேட நானும் பாதை தேடல் ஆச…
-
- 2 replies
- 1.2k views
-
-
நீயிருந்த கருவறையில் நானும் இருந்தேன் பெருமை அண்ணா.... கல்லறையில் நீ உறங்க கண்ணீரில் நானும் இங்கே தாய் மண் காத்திடவே தலைவரின் வழியில் நின்றாய் தாய் தந்தை வாழ்வுக்காய் அகதியாக நானும் இங்கே கல்லறையில் நீயும் அன்பே நிம்மதி உறக்கமா அண்ணா??? நாலுசுவர் வீட்டினிலே இங்கே நரகப்பட்ட வாழ்க்கையடா நானும் வந்து இணைந்திடவே நாளங்கள் துடிக்குதடா நான் வந்து உனைக்கான காத்திருந்த வேளை அண்ணா..... வீரச்சாவு செய்தி கேட்டு என்னை நான் இழந்தேன என் குரல் கேட்காமல் எப்படி நீயும் உறங்குகின்றாய்? உன் இனிய குரல் ஓலி இன்னும் என் காதில் ஒலித்து ..... என் கண்களில் நீராய் கரையுது அண்ணா........ என்…
-
- 20 replies
- 2.8k views
-
-
காட்டுவழி பயணம்... கஸ்டப்படுறோம்.... கட்டைவண்டிதான்.... துடுப்பும் படகும்...!! சலங்கைகளை ... கழற்றிவிட்டு தூரம் போகலாம்.... யானை மிதித்து .......... இழுத்தவர் இறக்கலாம்... இன்னொருவன் ........... நானே அடுத்து என்று.... தானாய் செத்துபோக ... எம்மவர் தவம் கிடக்கலாம்! புரிகிறோமா? இழப்புகளின் மேடையில்.. "கதை" கச்சேரி ஏற்பாடு....! பாடகனே கிடைக்கவில்லை... இதில் பல்லவி சரணம் தகராறு!
-
- 1 reply
- 957 views
-
-
தமிழன் வரமாய் வந்த -புலி வாலிபர்கள் போட்ட கிலிக் குண்டுகளாய்.. குதங்களெல்லாம்.. எரியுதையா..எரிகிறதே.. எம்மேலே..வட்டமிட்டு.. வகைவகையாய்.. தீ முட்டையிட்டு.. மழலையையும் மாமனையும்.. மண்ணிலே மரிக்கவிட்டு இனவெறியாட்டம் போட்டவன் புரிந்திருப்பான்..உயிர்வலி மக்கள் மீது குண்டு போட்டு.. எம்மாவீரர்.. அழிப்பதில்லை கண்மூடிக் குண்டெறிந்து.. விளையாடிப் போவதில்லை ஆயிரம் குண்டு போட்டும் இலக்கெட்டா ஆணவத்தை.. பிசகாத குறியாலே பிய்த்தெரிந்த எம்மருமை அண்ணாக்களே.. கண்ணீர் பொழிய வாழ்த்துகிறேன்.. களிப்பிலே நீந்துகிறேன்.. வெற்றியில் நிலைத்து வேள்வியில் தளைத்து நூறாண்டு வாழுங்கள்..
-
- 6 replies
- 1.4k views
-
-
பிறந்தார் மரித்தார் உயிர்த்தார்!! மறுபடியும் பிறந்தார் மரித்தார் உயிர்த்தார்!! எனக்கோ பிறந்தான் காணவில்லை ஐயா..!!
-
- 2 replies
- 716 views
-
-
நீ சொல்லும்வரை நானும் நினைக்கவில்லை மனசெல்லாம் பாரம் ஆனாலும் அது கனக்கவில்லை. எவளைப் பார்த்தாலும் ஏதாவது எழுதிப்பார்ப்பது ஒரு காலம்! ஆவி உயிர் ஆன்மா முன்றும் ஒன்றானாலும் ஒருத்தியிடம் ஒன்றிப்போனேன் இந்தச் சில காலம். என் பழைய கவிதைகளையெல்லாம் தூசு தட்டி படித்து ரசித்தாள்! "கவிதை ஒன்று கவிதை படிக்கிறது" எங்கோ படித்ததை சொல்லிக்காட்டி அசத்தினேன்! ஆர்ப்பாட்டமான மகிழ்ச்சியில் இன்னும் சில கவிதைகளுக்காய் எண்ணங்களைப் போட்டு கசக்கினேன். தொடர்ந்து வந்த இருவருக்குமான தனிமையில் முத்தங்களுக்கான முனைப்புக்களில் சில முன்னகர்வுகளுடன் வெற்றியின் உதயக்களிப்பில் நான்... இடையில் கைமறித்தவள் "யாரந்த கவிதையில் வந்தவள்!" "எவள் அன்ற…
-
- 9 replies
- 1.9k views
-
-
ஆயுள் கைதி அந்த வெள்ளைப் புடவைக்காரி என் வேதனைக்குச் சொந்தக்காரி சின்ன உதட்டுக்காரி சிலர் சிந்தனைக்கு உந்துசக்தி சொந்த மனங்களுக்குள் சந்தமிடும் சலங்கைக்காரி புள்ளித் தீ விழித்து புன்னகைக்கும் புகைபோக்கி கள்ளத்தை உள்ளே வைத்து களிப்பூட்டும் வித்தைக்காரி மெல்ல மேகமதில் மனம் மிதக்க வைக்கும் மாயக்காரி கொள்ளை சுகம் கொடுத்து கொள்ளையிடும் கொடுமைக்காரி பள்ளம் அருகே வைத்து பார்வை வீசும் பகட்டுக்காரி உள்ளம் இணைந்த பின்னும் உரிமை கொள்ளும் சக்களத்தி துள்ளும் இளமையையும் துரத்திவிடும் சாலக்காரி வெள்ளைப் பல்லின் வண்ணம் வித்தை மாற்றும் வேசக்காரி உள்ளும் புறமும் புற்று நோய் விதைக்கும் மோசக்காரி சுருள்சுருளாய் வளையமிட்டு சுகம் கொடுக்…
-
- 7 replies
- 2.3k views
-
-
பசியின் வலி பார்வையில் தெறிப்பு முல்லையின் மைந்தர்கள் மற்றவர்களுக்கு பசி போக்கிய காலம் போய் ஒரு பிடி சோறுக்காய் நாலுகால் பிராணிபோல் ஆணவத்தின் பின்னால் ஆரோகணிக்கும் அவலம்தான் என்ன ? புலத்திலே புறணி படிக்காமல் பேச்சைக் குறைத்து செயலை கூட்டினால் நாலுகால் இருகாலாக வருமே!! ஒருநாளிற்கு ஒரு யூறோ போக்கிடுமே என் இனத்தின் இழிநிலையை ஒருவேளை சிங்கவம்சங்களுக்கும் நாளை இதே நிலை வரலாமோ ?? இப்பொழுது சிங்கங்கள் சிங்காரமாய் எம் நிலைகண்டு சிரிக்கலாம் அவர்களுக்கும் பசி ஆழிப்பேரலையாய் வந்தபொழுது கைகொடுத்தோமே ஏனெனில் நாங்கள் தமிழர் !!!!!
-
- 6 replies
- 1k views
-
-
உலகைப் பார்த்து ரசிக்க வேண்டிய இவர்கள் தொட்டும் தடவியும் பார்க்கிறார்கள் ஆச்சரியத்தோடு.. வியப்புக்குறிகள் கூட விரல்களின் தொடுகையில்.. விடியலின் நிறம் கூட விடியாத நம் மனம் போல.. வீணாக மண்ணில் புதைப்பதை விட்டு விதையாக விதைப்போம் இவர்களின் முகத்தில்.. விழிகளைக்கொடுத்து வெளிச்சம் பெறுவோம் இறப்புக்குப் பின்பும் இவர்களால் உலகைக் காண்போம்..
-
- 12 replies
- 7.8k views
-
-
வருவாளா… அழகிய றோசா மலர் ஆடி ஆடி வந்ததுபோல் மெல்லென அருகில் வந்தாள் - என் மேனியெங்கும் சிலிர்த்ததுவே. கண்களால் தூண்டில் போட்டாள் கௌவ்வினேன் மீனாய் நானும். கையினால் பிடிப்பாளென களிப்புடனே முன்னே போனேன். அருகிலே இழுத்து என்னை அணைப்பாள்தானே என்ற ஆசையில் மனமும் பொங்க அமைதியாhய் நின்றேன் அங்கே கண்ணினால் சாடை செய்த கனிமுகத்தைப் பாhத்து நிற்க மண்ணிலே தள்ளி விட்டாள் மரம்போல வீழந்தேன் நானும் கொல்லெனச் சிரித்தாள் பார்;த்து கொவ்வையின் இதழ்கள் விரிய சட்டென எழுந்து நின்று தட்டினேன் உடலின் மண்ணை. சோகமாய் பார்த்தாள் என்னை துடித்தன விழிகள் மீனாய்; - அவை ஈரமாய் நனைந்து வடிய என் இதயமும் வாடியதப்போ நிலத்தினை நோக்கி நி…
-
- 4 replies
- 1.7k views
-
-
அ ஃ றினை [size=3] படுக்கை விரிப்பு[/size][size=3] சரி செய்யப்பட்டு விட்டன[/size][size=3] மற்ற வாசனை திரவியங்கள்[/size][size=3] எல்லாம் சரியாக பரந்து உள்ளன[/size] [size=3] குளியல்களை இருவரும்[/size][size=3] சரி செய்து விட்டோம்[/size][size=3] பிறகு என்ன[/size][size=3] என்ற பொழுதில்[/size] [size=3] ஒரு அழைப்பு அவளுக்கு[/size][size=3] பொறுமையுடன் நான் பால்கனியில்[/size][size=3] நேரம் ஆக ஆக[/size][size=3] பற்ற வைத்த சிகரெட்[/size] [size=3] அழைப்பை அணைத்து விட்ட[/size][size=3] அவளுக்கு சிகரெட் நெடி[/size][size=3] மூச்சை முற்ற[/size][size=3] ஆஸ்பத்திரிக்கு அவளும்[/size] [size=3] பாருக்கு நானும்[/size][size=3] என்று கழிந்தது[/size]…
-
- 1 reply
- 668 views
-
-
[size=5]ஹைக்கூக்கள் 2 அப்பல்லோ இல்லை சந்திரனையும் கடந்து காதலர்கள். இணைபிரியா தோழன் ஏழைக்கு பசி சும்மா இருந்தாலும் இருக்க முடிவதில்லை இணையம். கடவுளும் பயந்தான் கொடுப்பதற்கு கடன் நாற்று நடுகையில் நனைந்தது மனசு இடைவிட்டு இறங்கத்துடித்தன காற்சட்டைகள் வாலிபவயசு சிதறின சில்லறைகள் இறந்தவன் பிச்சைக்காரன் வல்வையூரான்.[/size]
-
- 4 replies
- 1.1k views
-
-
தை பிறந்தால் வழி பிறக்கும் தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கும் மாசியில் மங்களம் சூடிடும் புது வரவுகள் பொங்கிடும் பங்குனியில் ஊரெங்கும் திருவிழா தெருவெங்கும் தேரோட்டம் சித்திரை வெயிலை இளநீர் பதநீர் தணிக்க சித்திரை விழாக்கள் கோலாகலமாகும் வைகாசியில் வைபோகம் கன்னியரும் காளையரும் மணமாலைகள் சூடிட மங்களமாகிடும் ஆனியில் உச்சிவெயில் தணியும் ஊரெல்லாம் மெல்லிய தென்றல் வீசும் ஆடியில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும் உழவு ஆடிப்பட்டம் தேடி விதைக்கும் ஆவணி வந்ததும் நல்வரவும் வந்திடும் தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நிகழ்ந்திடும் புரட்டாசி விரதம் மாந்தரின் மனதை பக்குவப்படுத்த உதவிடும் ஐப்பசி மழை அடை மழை ஊரெல்லாம் தீவுபோல் காட்சியளிக்கும் கார்த்திகையில் இல்லம…
-
- 0 replies
- 507 views
-
-
போ புயலே.. போய்விடு... ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்?..நிவர் புயல் - வைரமுத்து கவிதை சென்னை : நிவர் புயல் வலுப்பெற்றுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து புயல் குறித்த கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், போ புயலே போய்விடு பச்சைமரம் பெயர்த்துப் பல் துலக்காமல் வேய்ந்தவை பிரித்து விசிறிக் கொள்ளாமல் குழந்தையர் கவர்ந்து கோலியாடாமல் பாமர உடல்களைப் பட்டம் விடாமல் சுகமாய்க் கடந்துவிடு சுவாசமாகி விடு ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்? ” என்று பதிவிட்டுள்ளார் https://m.dinakaran.com/article/news-detail/633780
-
- 0 replies
- 538 views
-
-
எனக்கு மறுக்கப்பட்ட சுதந்திரம்..... கவிதை - இளங்கவி...... பிறந்ததும் இருளில் சிறிதாய் வளர்ந்ததும் இருளில் கொஞ்சம் வாழ்ந்ததும் இருளில் அது அடிமை வாழ்வெனும் சிறையில்..... சின்னஞ்சிறு வயதினிலே அண்ணாந்து பார்த்திடுவேன் அழகான விமானமல்ல எமை அழிக்கவரும் விமானத்தை..... அனைவரும் பதுங்கு குளி நான் மட்டும் அதன்வெளியில் அது நான்மட்டும் அனுபவித்த சிறிதாய் நடமாடும் சுகந்திரம்.... தென்னை ஓலைமட்டை வெட்டி தெருக்களிலே பந்துகொண்டு துடுப்பாட்டம் ஆடிடுவேன் சந்தோசத்தில் மனமகிழ்வேன் ஆமியின் கெலி வருவான் கிட்டவந்து சுட்டுடுவான் ஏனென்று தெரியாது; உயிர்காக்க வீதியிலே படுத்திடுவேன் விளையாட்டு ஒத்திவைப்பு என் ரன்களெல்லாம் வீனடிப்பு; அது என…
-
- 6 replies
- 1.3k views
-
-
விடிவைத் தேடிப் பாதளக் குழிக்குள் முடிவை நாடிச் செல்வது போல் ஏதுமில்லா மாகாண சபை போதுமென்பார் இருக்கையிலே தமிழிங்கு வாழு மோடி - தோழி எம் கலையிங்கு தேறு மோடி சூத்திரத் தமிழன் ஆளக்கூடாது எனச் சாத்திரம் பேசிச் சதி செய்யும் ஆத்திர ஆரியர்கள் இங்கிருக்கையில் தமிழ்தான் வளருமோடி தோழி எம் கலைதான் மிளிருமோடி பெருவிளக்காயிருந்து பெருந்தியாகம் புரிந்து எமக்காக அணைந்த மாவீரர்க்கு ஒரு விளக்கேற்ற ஒற்றுமை இல்லாத போது தமிழை வளர விடுவாரோடி தோழி எம் கலையை ஒளிர விடுவாரோடி வந்தாரை வாழவைப்பது பண்பாடடி வந்தேறிய தெலுங்கனையும் கன்னடத்தியையும் ஆளவைத்து அடிமையாய் இருப்பது இளிச்சவாய்த்தனமடி தோழி கையாலாகக் கூட்டமடி நம்மை நாம் ஆள வேண்டுமடி நம் மொழியோடு க…
-
- 4 replies
- 577 views
-
-
ஆகையால் உதிர்ந்துகொண்டே இருக்கட்டும்.. ---------------------------- பூக்களைப்பிய்த்தெறிந்த காற்றுக்கு தெரியப்போவதில்லை பூக்கள் மென்மையானவை அழகானவை அன்பை பரப்புபவை என்று... ஆற்றாமையுடன் துவண்டுவிழும் இதயமொன்றின் பாடல்களைகேட்கும் பொறுமையும் அதற்கு இல்லை.. ஆயினும்... இதயத்தின்பாடல்களை கிழிந்து தொங்கும் இதழ்களின் ஓவியத்தை ஒடிந்த பல இறக்கைகள் சுமந்துகொண்டுதான் செல்லும்.. அவற்றில் ஒன்றாய் என் கவிதைகளும் பயணிக்கலாம்.. என் நேற்றைவரை எழுதி முடித்த விதிக்கிழவன் மார்பை பார்த்து என் மலர் மனதை பிய்த்தெறிய காற்றை ஏவிவிட்ட கதைக்கு நீதி கேட்க, அவன் எழுப்பிய ஆயிரமாயிரம் சிலுவைகளில் அறையப்பட்டு கனவழிந்து கண்ணீராய் செத்துப்போன காதல்களின் மொழியாய் பேச பூத்திருக்கலாம் என்கவித…
-
- 22 replies
- 1.4k views
-