கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
கார்த்திகை-2020 – நிலாந்தன்… November 25, 2020 உன்னுடைய தாய் இப்பொழுதும் மடிப்பிச்சை எடுக்கிறாள் உன்னுடைய சகோதரி இப்பொழுது முது கன்னி ஆகிவிட்டாள் உன்னுடைய நண்பன் யாரிடம்சரணடைந்தானோ அவனிடமே வேலை செய்கிறான் விதைக்கப்பட்டயாரும் முளைக்கக் கூடாது என்று ஒவ்வொரு நாளும் கடவுளைப் பிரார்த்திக்கிறவன் உனது மக்களின் பிரதிநிதியாகி விட்டான் நிறைவேறாத கனவு நீ நீண்ட கடல் எல்லைகளின் சொந்தக்காரன் நீ எல்லாப்போகங்களிலும்விற்கப்படும்நினைவும் நீ எல்லா நீதிமன்றங்களிலும் அவமதிக்கப்படுகிறாய் ஈமத்தாழிஒன்றுதான் உனக்கிப்பொழுதுபாதுகாப்பான இடம் இல்லாத நடுகல்லின் மீது சிந்தும் சூடான துளிக்கண்ணீரில் இளைப்பாறு பீட்சாவுக்காகயாருமிங்கேபோர…
-
- 0 replies
- 495 views
-
-
தரையில் தமிழன் வீழ்ந்திட்ட நாள் இது அல்ல தன் நாடு மீட்க தன் உயிரை தமிழன் ஈய்ந்த நாள் இது மீண்டும் நாம் நிமிர்வோம் எப்போதும் நிமிர்ந்து நிற்போம் ஏகாதிபத்தியத்தின் எமாற்றலில் எமக்கானவை எல்லாம் இழந்தோம் தன் மானத்தை மட்டும் இழக்கவில்லை காத்திருக்கின்றோம் எம்மைக்கான காலம் வரும் வரை செருக்கிழந்து உருக்குலைந்து செல்வமெல்லாம் இழந்தபின்னும் சேர்ந்திடாதிருக்கிறோம் நாம் சேரும் நாளதனில் செழித்து வாழ்வோம் நாம் கொலைக்களங்கள் பல கண்டும் கொடுமைகள் நிதம்கொண்டும் அடிமைகளாய் வாழ மாட்டோம்.... விடுதலைத் தாகம் உண்டு... அதற்கான குரலும் உண்டு... கோழைகளாய் வீழ மாட்டோம்... …
-
- 14 replies
- 1.9k views
-
-
அன்பும் அறமும் சவப் பெட்டிக்குள் வைத்து அடைக்கப் பட்ட தினம்..! ******************************* மு.வே.யோகேஸ்வரன் ********************************* காடுகள் கண்ணீர்விட்டு அழுத தினம்.. அதுவே தமிழன் செந்நீர் விட்டு மடிந்த தினம்! கூடுகள் பிய்த்தெறியப்பட்டு எமது குஞ்சுகள் ஆதரவின்றிக் கூக்குரல் இட்ட தினம்..! நாடுகள் பல ஒன்றுசேர்ந்து ஒ..நாய்கள்போல் நிம்மினத்தை வஞ்சகத்தால் அழித்த தினம்.. நம்.. பேடுகளின் சிறகுகள் நடுத்தெருவில் பெருச் சாளிகளால் சிதைக்கப் பட்ட தினம்..! முள்ளி வாய்க்கால் என்னும் களப்போரில் மூர்க்கப் புலிகள் வீர காவியம் ஆன தினம்..! கொள்ளிதனைக் கையில் ஏந்தி..வீதி வீதியாய் கொத்திவாய்ப் பிசாசுகள் கொடூரம் புரிந்த தினம்! அன்பும் அறமும…
-
- 1 reply
- 622 views
-
-
கல்லறைகளில் தெய்வங்கள் சபிக்கின்றன எங்கள் ஊர்களில் எம் தெய்வங்கள் கல்லறைகளில் தான் உயிர்ப்புடன் உறைந்திருக்கின்றன எம் தெய்வங்கள் கல்லாகிப் போனதில்லை எம் பிரார்த்தனைக்காக காத்திருந்ததும் இல்லை அவர்களின் நேர்த்திக் கடன்கள் எம்மை நோக்கியே இருந்தன கல்லறைக்கு போகும் முன் தம் கழுத்தில் தொங்கிய கனவை எம் உயிர்களில் மாட்டி விட்டே போயினர் எமக்காக பசித்திருந்தனர் எமக்காக விழித்திருந்தனர் எமக்காக நிலவற்ற இருள் வேளைகளிலும் தன்னந் தனியாக காடுகள் கடந்தனர் எதிரியின் இறுதி தோட்டா முடியும் வரைக்கும் உண்ணாதிருந்தனர் நெஞ்சம் தகிக்கும் கனவுகளை எம் தெய்வங்கள் கண்டன ஊரின் எல்லைவரைக்கும் எதிரியை துரத்துவதாக சன்னதம் க…
-
- 4 replies
- 1k views
-
-
வெந்நிப் பழசு கவிதை: தமிழச்சி தங்கபாண்டியன் - ஓவியம்: ஸ்யாம் அப்பாவிற்கு வெந்நிப் பழசு பிடிக்கும். அம்மா அருகிருக்க முன்னிரவுகளில் வெந்நிப் பழசும் சின்ன வெங்காயமும் நிலவும் நட்சத்திரங்களுமாய் எங்களுக்குக் கதை சொல்லும். கண்ணோரங்கள் சுருங்கி விரிய ருசிப்பின் சுவையை உதடு கடத்தும் அப்பொழுதில், ஒதப்பழம்போல் அப்பா கனிந்திருப்பார். எச்சிலூறப் பார்க்கும் என்னோடு கட்டெறும்புகளும் காத்துக்கிடக்கும் முழு நிலவொன்றில் சிந்திவிட்ட ஒரு சுடு பருக்கை நினைவின் குளிரிடுக்கில் உறைந்து போனது சுருங்கி விரியும் ஓதப்பழக் கண்களாய் இந்த இரவில் உணவு மேசையில் தனியொருத்தியாய்த் தட்டெடுக்கிறேன். மதியத்தின் எச்சமாய்ச் சுருங்கியதொரு பரு…
-
- 1 reply
- 2k views
-
-
எண்ணுவது எல்லாமே எனக்கு தவறென்று புரிந்தும் என் எண்ணங்களை அப்பால் எறிந்து விட முடியவில்லை நினைப்பவை யாவுமே நினைவாகவே போய்விடுமோ - என் நினைவுகளுக்கு சமாதி கட்ட நிஜமாகவே முடியவில்லை மறக்க நினைப்பவை மறைக்க நினைப்பவை மனதை விட்டு என்றும் மறைய மறுக்கின்றன கல்லான என் மனம் கனியாமல் இருந்ததேடா கண்ணில் இருந்த காந்தம் கொண்டு அன்று கவர்ந்து விட்டயே என்னை இன்று
-
- 12 replies
- 2.1k views
-
-
அல்லல் பிட்டி இல்லாத..உயிர்கள்... இறந்த உடல்கள்... சிதைத்த பிறகும்..... சிங்களம்.. சிதைக்கனுப்ப மறுப்பதோ....ஏனடா... துள்ளி விளையாடிய.. அல்லைப்பிட்டி அப்பாவி மக்களுடன்...தோட்டா கொண்டு விளையாடினாய்.... உயிர்களை வாங்கிய.. உன் அற்ப வெறி அடங்கியதா.... ஐயோ.....அழுகிப்போவதா.. தமிழன் உடல்.. யாருமறியாமல்..அழிந்துபோவதா.. தமிழன் நிலம்.. கண் திறவா ஆண்டவனும்... ஆணையிடாத் தலைவனும்.. பொறுமை...காப்பதேன்.. இதற்குமேல் இழக்க என்ன உண்டு எங்களிடம்.. பொறுத்தது போதும்... அல்லல் பிட்டியை... அல்லைப்பட்டியாய்த் திருப்பித் தாருங்கள்.
-
- 5 replies
- 1.3k views
-
-
விலையற்ற உயிர் மீது மலிவாய் போகிறது காதல் -சில கழிவுகளின் கருத்துக்களில் கனிவான காதல் மொழி கேட்டு கல்லும் கரைந்திடும் என்பர் கருத்துதென்றும் -தன் பிறப்பின் புகழென்றும் தளம்பும் கருத்துக்கள் தடை தாண்டி பெற்றவரின் விடை தாண்டி பொறுமையின் எல்லை தாணடி வறுமையில் வலி தாண்டி மனம் கொண்ட சலனம் நீக்கி மனதார வாழ வழி செய்யும் காதல் காமத்திற்காய் என்றும் காமமின்றி காதலில்லை என்றும் கருதுகின்ற வாலிபர் கருத்தில் காதல் ஒரு புூசனிக்காய்! வாயிருக்கு என்பதற்கா வந்ததெல்லாம் பேசுவதால் வந்ததென்னவோ!? –வலி கொள்ளும் வழிதன்னில் வார்த்தைகளை விதைப்பதென்னவோ!? வழியுண்டு சொல்ல மொழியுண்டு ஆனாலும்… பதிலொண்டு நாம் சொன்னால் பாரின் எனக்கும் உனக்கும் வேறுப…
-
- 4 replies
- 1.2k views
-
-
சிறையிருக்கும் சிந்தனைகள்.. சிறு வயது - எம் சிந்தனைகள் சிறையிலிருந்த காலம்... தாயின் சொல்லே - என் தாரக மந்திரம்... தந்தையின் சிந்தனைகள் என் செயல் வடிவாகும்... ஆசிரியறின் அறிவியல் என் தீர்மாணங்களாயின...... பிரம்புகளும் முறைப்புக்களும் - என் சிந்ததனைக்கு சிறையாயிருந்தன..... எனினும் .... அடங்கும் வரை தானே அடக்குமுறை .... அணையிருக்கும் நீர் உயர்ந்ந்து உரத்து சொல்வதில்லையா..? திறவுங்கள் -அன்றேல் திறக்கப்படும் என்று.....! அது போன்றே -என் சிந்தனையும் சிறகெடுத்தது புதுத் திசை நோக்கி......! கற்பெனில் கண்ணகி - இது கற்காலக் கருத்து.... கோவில் எடுத்து குடமுழுக்காடி... கற்ப…
-
- 8 replies
- 1.6k views
-
-
புலத்து இளைஞனின் புலம்பல் புரிந்திட முடியாப் புதிராம் எந்தனை புரிந்திட மறுக்கும் உறவுகள் சொல்கிறார் வெந்த என் மனதிலே வேலினைப் பாய்ச்சியே விடுப்பினை அறிந்திடும் விருப்பிலே துடிக்கிறார் கற்பனை ஆயிரம் காண்கிற வயசிலே களிப்புடன் வாழ்ந்திட வழியுள நாட்டிலே இல்லற வாழ்வினை தேடிடாக் காரணம் இயம்பிடச் சொல்லியே தினம்தினம் குடைகிறார் ஆண்டுகள் போகுதாம் ஆயினும் எந்தனை அண்டவே இல்லையாம் திருமண ஆசைகள் கிழவனாய்ப் போனபின் அண்டிடார் பெண்களாம் கிண்டலாய்ச் சொல்கிறார் கோபமும் கொள்கிறார் காதலில் தோல்வியோ கன்னிமேல் வெறுப்போ களவியல் வாழ்க்கையில் நாட்டமோ கேட்கிறார் வாழ்ந்திடும் நாட்டின் மக்களைப் போலவே வாழ்ந்திட மனதில் எண்ணமோ என்கிறார் பேரனைக் கொஞ்சிடும…
-
- 8 replies
- 1.8k views
-
-
கண்கள் அழகிய காதலியைத் தேடியலைகிறது. அழகிய பெண் இவள் அழகியா காமக் காதலி. அவள் அழகென்பதற்கல்ல, அவளை பார்க்கின்றேன். அவள் என் காதலை ஏற்க்க மறுத்த காதலியை விட அழ்காய் இருப்ப்தால். இது இயற்கையாகவே இருக்கிறது. காதலியை மறப்பதற்கு அவைலை விட அழகிய காதலி தேவைப்படுகிறது. அவளுக்கு இளந்துவிட்டோமே என்ற உணர்வு உண்டாக்குவதற்கு. நினைவுகளை சரிசெய்து கொள்ள ஒரு சதி. இயற்க்கைக்கு அற்ப்பாட்ட மனஉறுதி தேவைபடுகிறது. கற்பனையின் நினைவை கொள்வத்ற்கு ஆயூதம் தா மனமே www.tamil4u.wordpress.com உன்னை மறப்பதற்கு முயற்சிகள் படுதோல்விகலாகுதடி உன்னை மறப்பதற்கு முயற்சிகள் படுதோல்விகலாகுதடி. மனம் துடிக்கிறது மறப்பதன்ற சிந்தை மூளையில் தோன்றமுன். உன்னை மீண்டும் சந்திக்க ஆர்வம் கொள்லுது…
-
- 1 reply
- 984 views
-
-
அகதியாய் அலைந்து ஆழ்கடல் கடந்து இன்னல்கள் சுமந்து ஈழத்தைப் பிரிந்து உறவுகளைத் தேடி ஊட்டி வரை ஓடி எல்லாம் இழந்து ஏங்கித் தவித்து ஐயோ அம்மாவென ஒரு பாத்திரம் கொண்டு ஓடும் எங்கள் நிலை கண்டால் ஒளவைப் பாட்டி மட்டும் ஃமாய் நிற்பார் !
-
- 6 replies
- 1.7k views
-
-
செடியின் துயரம் பலநூறு மொக்குகள் மலர புன்னகையுடன் பேசத் தொடங்கியது செடி முந்திக் கொண்ட ஒவ்வொரு மலரும் முணுமுணுத்தது தனித்தனி மொழியில் தானாகக் கண்டறிந்து சேர வழிகேட்டது கூந்தலுக்கும் கோயிலுக்கும் தோட்டத்தைச் சுற்றி இலைகளாய்ச் சிதறின சொல்சொல் என அவை முன்வைத்த வேண்டுகோள்கள் ஆளற்ற வெளியில் பரிதவிக்கும் பார்வையற்றவர்களென காற்றின் திசைகளில் விடைவேண்டி கைதுழாவி நடுங்கிக் களைத்தது காலம் சற்றே கடந்தாலும் ஒப்பந்தப்படியும் உரிமைப்படியும் பறித்தெடுத்தன பூக்காரனின் விரல்கள் போகுமிடம் தெரியாத இழப்பின் வலியில் கிளைகழற்றிக் குமுறியது செடி
-
- 9 replies
- 1.9k views
-
-
[size=4]மழைக்கூதல் தேகம் தீண்டிப்பரவியவள் சோம்பல் கலைத்தது. கிளைகளின் ஆலாபனை இடம்மாறும் புறாவின் குறுகுறுப்பு கடகத்துள் கிடந்த நாயின் முனகல் கட்டையை சுற்றும் ஆடுகளின் அரவமென, அறிகுறிகளால் அவஸ்த்தைகளை உள்வாங்கி இயங்கத்தொடங்கினாள்.[/size] அள்ளிவந்திருந்த [size=4]கொக்காரை பன்னாடைகளை தாவரத்து ஓரம்தள்ளி மழைநீரேந்த பானைகளை அடுக்கி, தூவானம் தொடாதவிடத்தில் காயாத ஆடைகளை கட்டி, உவனிக்காதவிடம் பார்த்து அடைக்கோழியின் கூட்டையரக்கி, பெருமூச்சுடன் வான்பார்க்கையில் விழுந்தது துளிகள் முகத்தில்.[/size] பாத்திரங்களில் ஒழுக்கு நீர் [size=4]ஒசைலயத்துடன் விழ, தெறித்ததுளிகளால் நனைந்தது நிலம் சாம்பலற்ற அடுப்போரம் வாயிலேதுவுமின…
-
- 5 replies
- 687 views
-
-
அகழிகள் சுற்றிப் படர்ந்த கோட்டையின் மதில்களுக்கப்பால் சிம்மாசனத்தில் நீ! மானுட நேயமேதும் சுவாசத்தில் கலக்காமலிருக்க நரமாமிசம் தின்னும் முதலைகளை மிதக்கவிட்டிருகிறாய் எச்சரிக்கை முயற்சியாக... நானாய் இறங்கி மீனாய் மாறி நானாகவே கரையேறுகிறேன் நாக்கில் சொட்டும் நீரோடு பின் தொடருமவற்றின் பசி தீருமுன் வாயிலைத் திறந்துவிடு வாழ்க்கை என்பதன் அர்த்ததைக் கற்பித்துவிட்டு இரையாகிப் போகிறேன் என்றேனுமொரு நாள் தெளிவுற்ற நீ உப்பரிகையில் என்னை நினைத்து கண்ணீர் சிந்தலாம் வந்தேறிய நோக்கத்தை வரலாற்றில் வரவு வைத்துவிட்டு கூட்டுக்குள் உடல் சுருக்கிக் கொள்ளும் என் கவிதை! http://kayalsm.blogspot.fr/2012/11/blog-post_30.html
-
- 0 replies
- 374 views
-
-
ஆதாம், ஏவாளாய் வாழ்ந்த காலத்தில், ஆண்டவன் உனக்குக் கட்டளையிட்டானாம்! அந்தக் கனியை மட்டும் புசித்து விடாதே, என்று! ஆசை உன்னை விட்டுவிடவில்லை, கனியிலேயே உன் கண்ணிருந்தது, கடவுள் மறைந்ததும் கனி உன்னிடமிருந்தது! இராமன் ஒரு சிறு குழந்தை, மண்ணுருட்டி விளையாடுகிறான்,, உன் கூனல் முதுகில் பட்டு விட்டது! உலகமா அழிந்துபோய் விட்டது? ஓடோடிப்போய் கைகேயிக்கு உருவேற்றினாய்! காடேகினான் ராமபிரான், மாயமானாகி மாரீசன் வந்தான், மயங்கிப் போய் நின்றாள் சீதாதேவி, மணாளா, எனக்கு அந்த மான் வேண்டும், மானைத் தேடிப்போனவனைக் காணவில்லை,, காவலிருந்த இலக்குவனைக் கலைத்தாள, அண்ணன் திரும்பி வருவான், கவலை விடு, அண்ணன் இறந்து போன பின்னர், என்னை அடைய நினைக்கிறாயா, இலக்குமணா? பேதலித்துப்ப…
-
- 16 replies
- 2.1k views
-
-
தளபதிகள் தவறு செய்வதில்லை! அவர்கள் தவறுகளே செய்வதில்லை, அது அவர்கள் எதையுமே செய்யாதலாலில்லை. அவர்கள் செய்கிற எதிலும் சரியான அனைத்தும் அவர்களுடையதாகவும் தவறான அனைத்தும் மற்றவர்களுடையதாகவும் உரிமைப் படுத்தப் படுகின்றன. அதைவிடவும், மற்றவர்கள் செய்கிறவற்றிலும் சரியானவற்றின் வழிகாட்டலுக்கான உரிமையும் அவர்களையே சாருகிறது. தவறானவற்றைப் பகிர பலருங் காத்திருக்கின்றனர். எனவே, அவர்கட்கு எல்லோரையுந் திருத்திக் கொண்டிருக்க முடிகிறது. என்ற போதும், அதே தவறுகள், நாள் தவறாமல் திரும்ப திரும்ப நிகழ்கின்றன. ஒவ்வொரு தடவையும், ஒவ்வொரு தவறும் அவர்கட்கன்றி மற்றவர்கட்கே உரித்தாகுகின்றன. அவர்கள் தவறுகளே செய்வதில்லை, ஏனெனில் அவர்கள் தளபதிகள். தளபதிக…
-
- 0 replies
- 1.8k views
-
-
தேவனுக்கு ஒரு திறந்த மடல் அன்பான பாலகனுக்கு , உலகமே உம் வரவை உற்சாகமாய் கொண்டாட என் மண் மட்டும் ஏன் ஐயா சிரிப்பைத் தொலைத்தது ??? ஆழிப் பேரலையாய் ஆவேசமாய் வந்தீரோ ? ஆரவாரமாய் என்மக்களை உம்மிடம் இழுத்தீரோ? பல வடுவை சுமந்த எமக்கு உம் வருகை உவப்பாய் இல்லை....... வெளியே நாம் சிரித்தாலும் உள்ளே நாம் உறைந்துதான் போனோம். வருடங்கள் பல பறக்கும் காலங்கள் கலகலக்கும் ஆனாலும் நீர் வைத்த ஆழ வடு ஆறவில்லை எங்களுக்கு. வாரும் பாலகனே வாரும் .. என்மக்கள் நிலையில் மற்றதை தாரும்.. கோமகன் மார்கழி 24 2013
-
- 6 replies
- 798 views
-
-
அசோகன் பேசுகிறான் மீண்டும்..... வரலாறுகள் மாற்றி எழுத முடியாதவை ....கடந்த சில காலங்களில் பல ரணங்களை எமக்குள்ளே விட்டு சென்ற எமது தேசத்தின் அழிவுகளும் கூட..இறந்து கொண்டு இருக்கிறோம் என்பதை தவிர எதையுமே அறிந்திராமல் இறந்து போனது எத்தனை பேர்.... அதன் வலிகள் என்னை இன்றுவரை சுகமாக தூங்க விட்டதில்லை.... புத்தம் இந்த உலகிற்கு பரவியது அசோகனின் மூலமே...... அன்பு ஒன்றை தவிர ஏதும் இல்லை இவ்வுலகில் பெரிதாக என்ற வார்த்தை எல்லாம் பொய்த்து போனது எம் மண்ணில்... தமிழனை கொள்வோம்.... தமிழனை கொள்வோம்.... தாரக மந்திரம் இதுவென சொல்வோம் என்று கொள்வதை தவிர வேறு ஒன்றும் செய்ய வில்லை தமிழனுக்காக சிங்கள அரசு... எல்லாம் முடிந்தது தடையங்களும் அழிந்தது ... இன்று சில அசோக மனங்கள் மட்டும் உ…
-
- 3 replies
- 702 views
-
-
-
பல வருடங்களுக்கு முன்னம் வாசுகி பாடுவதற்க்காக எழுதிய பொங்கல் வாழ்த்துப் பாடல் . பொங்கல் வாழ்த்துப் பாடல் -வ.ஐ.ச.ஜெயபாலன் * வெண்பனி மீது பொன்மலர் சூடும் செங்கதிரோனை வாழ்த்துகிறோம் கண்பனி சூடி எம் நினைவோடு ஏங்கும் எம் தேசத்தை வாழ்த்துகிறோம் * பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே * பனை நிழல் வீழும் முற்றத்தில் நின்று பாசத்தில் வாடும் நெஞ்சங்களே பனியையும் மீறி பசுமையில் நிமிரும் பைன்மரம் போன்ற சிங்கங்களே * பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே * பூமியில் என்றும் அகதிகள் என்று புழுதி மண் போல சுழலுவதோ தாயகம் மீண்டு துயர்களை வென்று தலைநிமிர்ந்தே நாம் வாழுவதோ * பொங்கல் …
-
- 3 replies
- 1k views
-
-
Tamil civilian lives are in your hands the Diaspora pleaded in desperation; To Canada, US, Britain, EU, Norway and the UN; had you heeded with compassion; Twenty to forty thousand need not have perished in one sweep without identification; From a cruel regime’s and its ally’s fire power, chemical weaponry and ammunition. You have to act fast before it’s too late we wailed and protested; Lay down on highways, burnt our bodies, fasted, begged and prayed; In a tiny sliver of land our people are holding out, we cried, To their last vestige of freedom and dignity, still brave but petrified. You would have prevented a HOLOCAUST from happening; If you did…
-
- 0 replies
- 983 views
-
-
இனம் மதம் பணம் மொழி சாதகம் சாதி என்று இதுவரை அறியாத அந்த இதயம் மட்டும் உள்ள காதலுக்கு இறுதியில் கிடைப்பது என்ன????? இரக்கம் அற்ற முடிவு மட்டும் தானே?????
-
- 1 reply
- 870 views
-
-
திருமலை தந்த சீலனே திரும்பி பார்க்க மறந்தனர் புல தமிழன் புலிகளின் மூத்த தாக்குதல் தளபதி நீ உன் முதல் இலக்கு சிங்க கொடி உயிர் குடிக்கும் ஆயுததாரிகளின் முன்னே தனித்து நின்று தீக்கிரையாக்கினாய் அக்கொடியை தந்தையும் தனயனும் நெஞ்சில் சுமந்தனர் அக்கொடியினை புலத்தில் சுமந்தாய் நீ தமிழை நெஞ்சில் விளையாட்டு வேறு அரசியல் வேறு விளக்கம் கொடுத்தனர் கனவான்கள் விளையாட்டு பருவத்தையே துறந்தாய் விடுதலைக்காக,மறந்தனர் புல தமிழர் படைத்தான் தலைவன் உன் பெயரில் படையணி உன் உறவுகள் தொடர்ந்த்னர் உன் பணியினை தகர்ந்தன சிங்க கொடி இராணுவ தளங்கள் கொடி காவி விமானங்கள்,நிலையங்கள் காவுகின்றனர் கொடியினை கையில் புல தமிழர்கள் விளக்கம் கொடுக்கின்றனர் நடுநி…
-
- 23 replies
- 3.6k views
-
-
சாம்பலில் இருந்து மீண்டும்.. எழுத்து பறக்க நான் ஒன்றும்.. பீனிக்ஸ் இல்லை.. என் வலுவை திரட்டி... பாய்ந்து போகக் கூட .. பந்தைய குதிரையும் இல்லை.. சிறுக சிறுக சேர்த்து.. கட்டி எழுப்பிய தேன்கூடு.. என் காதல் வீடு ... நீ ஒற்றையாளாய் கல்லெறிந்து.. போக எப்படி மனசு வந்தது உனக்கு .. வரிகளில் ஆழம் புகுத்தி .. சொல்களில் ஜாலம் காட்டி .. கவிதை புனையக் கூட .. கற்று கொள்ளவில்லை நான் .. உன் உதட்டில் நாண் ஏற்றி .. வார்த்தை அம்பை இழுத்து .. எப்படி குறி தவறாது என் .. இதயத்தில் செலுத்தினாய் நீ .. உயிர் ஊசல் ஆடும்போது கூட .. என் மனவானில் நீ.. ஊஞ்சல் ஆடுகிறாய் காதலே .
-
- 5 replies
- 900 views
-