கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அன்னையே சக்தியே!..... மங்காப் பொன்னென மனதினில் நிறைபவள் கண்ணில் தெரிகின்ற காட்சியாய் இருப்பவள் அண்டங்கள் யாவிலும் அன்னை உறைபவள் கொண்டிடும் கோலங்கள் அனைத்திலும் பொலிபவள் என்னென்ன வேண்டுமோ தாயிடம் கேளுங்கள் பிள்ளையின் குறைதனை அன்பினால் தீர்ப்பவள் தீயவை எல்லாம் திரிசூலத்தால் அழிப்பவள் அன்பென்ற ஒன்றுக்காய் அகிலமே அளிப்பவள் குங்குமத் தாயவள் மங்களத் தாயவள் மடி ஏந்தி வேண்டினால் மனக்குறை போக்குவாள் தங்கிடும் வெற்றிக்கு சக்தியை வேண்டுவோம் விரைவினில் ஈழம் மலர்ந்திட வேண்டியே பாடுவோம்!
-
- 4 replies
- 1k views
-
-
அன்னை தேசம் சிந்தும் குருதி அகிலம் எங்கும் உறைய வைத்தும் ஈழத் தமிழன் ஈந்திடும் கண்ணீர் ஈரம் கண்டும் இரங்காத உலகம் சிங்கள வெறியன் சீண்டிடும் கைகள் சீறும் படையால் சிதைந்திடும் காணீர் எம் நிலம் வந்து எம்மையே கொல்லும் துரோகிகள் துரோகம் தூர்ந்திடும் விரைவில் தீந்தமிழ் வீரர் தியாகம் வேள்வி தன்னிலை மாறி தமிழீழம் பிறக்கும்...
-
- 8 replies
- 1.8k views
-
-
மாலை ஒன்று நான் தொடுக்க மலர்பறிக்கப் போயிருந்தேன். கைநீட்டிக் காம்போடு - நான் பூ பறிக்கு முன்னே 'பூ கேட்டது...' 'நாளை நான் வாடிப்போவேன் இன்று என்னை வாழவிடு' பூபதியின் நினைவுநாள் என்று நான் சொன்னதுமே நேற்று என்னை மொட்டோடு பறித்திருந்தால் பூபதித்தாயின் கழுத்தில் இரண்டு நாள் மாலையாய் வாழ்ந்திருப்பேன். வளைந்து கொடுத்தது பூ என்னை வாரி எடுத்துக்கொள் என்று. பூபதித்தாய் அவள் உருகி பூத்த தமிழினத்தின் வாடாத நினைவுப் பூ. வாழ்க்கையே உணவுக்காக வாழும் பிறப்பில் இனத்தின் வாழ்வுக்காய் உணவு மறுத்து உதிரம் உறைந்து உடலை உருக்கி உயிரை காற்றோடு கலந்து மாமாங்கப்பிள்ளையார் உள்ளே கற்சிலையாய் இருக்க உண்மை தெய்வமாய் நீ வீதியிலே கிடந்ததை நெஞ்சம் மறக்குமோ தாயே...? தத்த…
-
- 16 replies
- 4.2k views
-
-
தாய் மீது கொண்ட அன்பினால் தமிழ் வார்த்தைகள் என்னைக் கண்டு ஒழிந்திட துளியாய்க் கிடைத்த ஓர் துளியாம் தமிழ் எடுத்து கவிப்படையலுடன் கவியஞ்சலி செலுத்த வந்திருப்பது கோயிலும் சுனையும் கூடவே பனையும் தென்னையும் கடலோரக்காற்றிற்கு கவிதை பாடி நிற்கும் மேலல்வை பதி வாழ் வள்ளிப்பிள்ளை பெற்றெடுத்த பிள்ளை, உயிர் கொடுத்த தந்தையே உன் பணி ஓர் நாளில் உருக்கொடுத்த அன்னையே நீ என்னைக் கருவறையில் அமைதியாகத் து}ங்க வைத்து விளையும் காலம் வரும் வரை வரும் துன்பம் என்னும் வெய்யிலைத் தாங்கி உன் அன்பு என்னும் குடைக்குள் என்னைத் தாங்கி நிற்பாய் இயற்கையில் காலங்கள் மாறி மாறி வரலாம் இலத்திரனியல் நு}ற்றாண்டுகள் பல வந்தாலும் அணுவளவு கூட அன்னையே உன் அன்பு சிதைவதில்லை வ…
-
- 18 replies
- 2.8k views
-
-
எனது சின்னஞ் சிறிய முகம், உனது முகம் பார்க்கும் கண்ணாடியென, உற்றுப் பார்த்த படியிருப்பாய்! உன் முகத்தின் இளமைக் காலப் புன்னகை, இன்னும் நினைவிருக்கின்றது! உனது அணைப்பின் இதமும், இதயத் துடிப்புக்களின் ஓசையும்,, இன்னும் கேட்கின்றது! மொட்டை வழித்த போது, முதற் பல் தோன்றியபோது, முழங்கால் மடித்துத் தவழ்ந்த போது, முதன் முதலாய் நடந்த போது..... எல்லா முதல்களிலும் , அருகிலிருந்து பூரித்தாய்! நிலாக் காட்டி, நீ ஊட்டிய பால் சோறு, இன்னும் இனிக்கின்றது!, நான் சிரிக்கையில் சிரித்து, நான் அழுகையில் அழுது, உனக்கென்று,ஏதுமின்றி, உணர்ச்சியில்லா ஜடமானாய்! எங்கோ அனுப்பி வைத்தாய்! எத்தனை போராட்டங்கள்? எத்தனை இடம்பெயர்வுகள்? ஆயிரம் …
-
- 15 replies
- 3.7k views
-
-
அன்னையர் தினம்- “அன்னை என்பவள் அனைவர்க்கும் தாய் இவள் பெண்மை என்பவள் போற்றுதலுக்கு உரியவள் இவள் இன்றி இவ்வுலகில் உயிர் இல்லை.” தான் பெற்ற பிள்ளைகள் மாத்திரம் இன்றி தன் கணவனைக் கூட பிள்ளை போல் காப்பாற்றக் கூடிய வீரமும் பெருமையும் பெண்மைக்கு மட்டும் தான் உண்டு அவள் தான் தாய். இன்று நோர்வே அம்மாக்களின் தினத்தை கொண்டாடுகிறது என் அம்மாவுக்கும் எல்லா அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.🙏 ———————————————————————————————————————————- அம்மா-பா.உதயன் எத்தனையோ கவி சொல்லி எதை எதையோ எழுதி வந்தேன் பொய்யை கூட மெய்யாக்கி புதுக் கவிதை என்று போட்டுடைத்தேன் இன்னும் நான் எழுதவில்லை என் அம்மாவுக்காய் ஒரு கவிதை அவளி…
-
- 3 replies
- 454 views
-
-
அன்னையர் தினமதில் ஆயிரம்பேர் வாழ்த்திடுவர் அக்கம் பக்கம் எல்லாம் காணும் பெண்களுக்கு முகம் மலர வாழ்த்தி முகமன் செய்திடுவர் முலை தந்த அன்னை முனகிக் கிடக்கையிலே மனம் வந்து ஒன்றும் மாற்றுவழி செய்திடார் மக்கள் என்று கூறி மாய்மாலம் செய்திடுவர் மலர்ந்த முகத்துடனே மண்ணிற்குத் தந்தவள் மனம் கோண நடந்திடுவர் மதிகெட்டு நின்றிடுவர் மலர் ஒன்று வாழ்வில் மயக்கம் தந்தவுடன் மாற்றான் போல் நின்று மார்தட்டிப் பேசிடுவர் மக்களை பெறுகையிலும் மலர் மேனி நோவெடுக்க மற்றவற்றை எண்ணாது மனதாலும் காத்திடும் தாய் முதுமையின் கொடுமையிலும் மெலிந்த மனம் தளராது மேன்மைகள் செய்தே மேதினி விட்டகல்வாள் மாதெனும் மகத்தானவள் மாண்பில் மலையானவள்
-
- 0 replies
- 544 views
-
-
அன்னையின் ஆஸ்தி போராட்டம் என்பது சோத்துக்கல்ல நாம் போராட்டப்புறப்பட்டது படிப்புக்கும் அல்ல தொழில் வாய்ப்பு, மொழிப்பற்று ......இவைக்குமல்ல மனிதனாக வாழவிடாமை என்னை, என் குடும்பத்தை, என் உறவுகளை,... உயிர்வதை செய்தமை சிங்களம் அப்படியேதான் உள்ளது அதற்கு மனிதமொழி புரியாது தர்மவழி தெரியாது கடைசி சாட்சி எனது அன்னையின் இறுதி ஆஸ்தி இது போதும் நாம் ஒன்றாகி புறப்பட.......
-
- 1 reply
- 959 views
-
-
அன்னையின் வீடு வ.ஐ.ச.ஜெயபாலன் இது ஓர் அதிஸ்டம் இல்லாத போராளியின் கவிதை மேலும் சரியாகச் சொல்வதெனில் ஒரு போர்க் குணமுள்ள கவிஞனின் மரண வாக்குமூலம் போன்ற அதிஸ்டமில்லாத கவிதை இது. எரிகிற அன்னை வீடில் நின்று என்னை வசைப்பாடிகிற சகோதரரே நான் எதிர்பார்ததில்லையே ஒரு துண்டு நிலத்தை செப்புச் சல்லியை ஒரு வாக்கை அல்லது ஆதரவான உங்கள் பாராட்டுதலை. என் பிள்ளைகளின் உணவை உண்டும் என் மனைவியின் தண்ணிரை அருந்தியும் பாடுகிறேன் நான். அன்னைவீட்டுக் கூரை எரிகிறது என் சகோதரர்களோ பாகப் பிரிவினைச் சண்டையில். தண்ணீர் ஊற்றுவதானால் அவன் பக்கத்துக் கூரையில் ஊற்றாதே …
-
- 4 replies
- 1.2k views
-
-
தாயே அன்று உந்தன் மடியில் மறந்து போன என் எல்லா சோகமும் ஒன்று சேர்ந்து என்னைக் கொல்கிறது எனைத் தூங்க வைக்க தூரத்தில் நீ என்பதால் * இந்த உலகில் எந்த மூலையிலும் கிடைக்கவில்லை உந்தன் கருவறையில் கிடைத்த எனக்கான பாதுகாப்பு * என் மேலான உந்தன் கவனத்துக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் குழந்தையாய் பிறக்கலாம் உனக்கு நான் * எந்தப் பாசப்படியைக் கொண்டு நிறுத்தாயோ தெரியவில்லை உன் எல்லா குழந்தைக்கும் ஒரே அளவிலான அன்பையே காட்டுகிறாயே * என் தாரத்தின் மறுபிறவியில் உணர்ந்து கொண்டேன் நான் பிறக்க நீ தாங்கிய பிரசவ வலியை * உன்னில் தடுக்கி நான் விழுந்தபோதும்…
-
- 8 replies
- 1.5k views
-
-
ஆயிரம் கைகள் சேர்ந்து செய்த மெத்தையில் படுத்திருக்கிறேன் உன் இருகையில் மட்டும்தான் தூங்கி இருக்கிறேன் * அம்மா உனக்கு அவ்வளவு பாரமாய் இருந்தேன் என்றா பால் கொடுத்து என்னை வளர்த்தாய் நீ தூக்கவே முடியாதளவுக்கு * வெற்றி பெற்றால் தேடி வந்து வாழ்த்த ஆயிரம் உறவுகள் தோற்றுப்போனால் தேடி வந்து அணைக்க உன்னைத் தவிர யார் எனக்கு * ஆயிரம் முறை தலை சீவிய சந்தோசம் நீ ஒரே ஒரு தடவை தலை கோதிவிடும் போது * எல்லாம் சேலைதான் எனினும் நீ கட்டிய சேலையில்தான் என் நிம்மதியான தூக்கம் அவிழ்ந்து கிடக்கிறது * என்னை நடக்க வைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட …
-
- 5 replies
- 1.4k views
-
-
அன்னையே போய்வா! ---------------------------------- அன்னையே போய்வா தமிழுக்குத் தாயகனைத் தந்த அன்னையே போய்வா! இது விடை பெறும் நேரமென்று விதியெழுதிப் போகிறது வென்று வரும் காலமதில் விண்ணிருந்து போற்றுகையில் மண்ணிருந்து வணங்கிடுவோம் தேசத்தின் பேரன்னையே! மண்ணிருந்து வணங்கிடுவோம் தேசத்தின் பேரன்னையே! காலவெளியறுத்துத் தேசமதை மீட்டு பாசமுடன் தழுவுகின்ற வேளையொன்றில் உந்தனுக்கு ஆலயங்கள் அங்கிருக்கும் அந்தக் காலம் வரை எம் நெஞ்சமதே ஆலயமாய் வீற்றிருக்கும் வீரருடன் வந்திருப்பாய் எம் தாயே! குமுறியழுகின்ற தாய்மாரை தேற்றுதற்கு முடியாது தேசமது துடிக்கிறது எம் தெருவெங்கும் பகை சூழ்ந்து எம்மினத்தை அழிக்கிறது பகை மீண்டு தலைநிமிரும் காலம் …
-
- 0 replies
- 1.3k views
-
-
அன்னையே! ஆங்கில மோகத்தில் அனைவரும் திளைத்து ஆனந்தப் படுகையில் அன்னைத் தமிழை எண்ணி ஏங்கிட என்னை ஏன் பெற்றாய்?! பெண்ணடிமைத்தனத்தை பெண்களே ஏற்று பெருமைப் படுகையில் பெண்ணின் விடுதலையை நேசிக்கும் ஒருவனாய் என்னை ஏன் பெற்றாய்?! சாதியால் இணைந்து சமூகமாய் முன்னேறும் சந்ததியினர் மத்தியில் சாதியை வெறுக்கும் சமரசப் பித்தனாய் என்னை ஏன் பெற்றாய்?! பொன்னையும் பொருளையும் பொக்கிஷமாய்க் கருதும் பொல்லாத உலகில் பொது நலம் விரும்பும் போக்கிரி மைந்தனாய் என்னை ஏன் பெற்றாய்?!
-
- 4 replies
- 1.6k views
-
-
நான் உனக்கு அன்பான மனைவிதான் உன் சுதந்திரத்தில் நான் தலையிடாமல் இருக்கும் வரை; நான் உனக்கு அன்பான மனைவிதான் உனக்கு மட்டுமே நான் வேலைக்காரியாக இருக்கும் வரை; நான் உனக்கு அன்பான மனைவிதான் உன் குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை நான் உனக்கு அன்பான மனைவிதான் நம் குழந்தையை நானே வளர்க்கும் வரை நான் உனக்கு அன்பான மனைவிதான் என் விருப்பங்களை உன் மேல் திணிக்காத வரை நான் உனக்கு அன்பான மனைவிதான் உனக்காகவே வாழும் வரை!
-
- 23 replies
- 7k views
-
-
தரிசனத்தின் சூக்குமப்பொழுதொன்றில் கண்ணீர் ரேகைளை அழித்து பிரியத்தின் கோடுகளை வரையத் தொடங்குகிறாய். பொன்னி, ஆராதனைக்குரியவளே, பிரபஞ்சப் பெருங்கோடுகளடியில் சிதறுண்டு கிடக்குமென் கனவுகளை பார். துருவ நிரலை மீறி நுழைந்த வலசைப்பறவையாய் அத்துவானவெளியில் ஒற்றறுத்துப் பாடுமென் குரலைக்கேள். துளைகளைத் தீண்டும் காற்றின் துயரங்களை நானறிவேன். பிரியமே, ஒரு பின்பனிக்கால குளிர் சுமந்துவரும் உன் பிரியத்தை எப்படி இழப்பேன். "உயிரே உயிரில் வலி எப்போதும் முடியாதென்றுரைக்கும் நீ" எந்தப் பருவத்தில் வந்தடையப்போகிறாய் ? உன்னிருத்தல் அன்பாலானது அன்பாலனதெல்லாம் பெருந்துயரானது. அன்பின் துயரப்புள்ளிகளில் மிதந்தலையும் சரீரம் நிர்மலமானது. நான் மிதந்தலைகிறேன். …
-
- 4 replies
- 1k views
-
-
அன்பின் சிறிய நிமிடங்கள் - கவிதை மனுஷ்ய புத்திரன் - ஓவியம்: செந்தில் கடற்கரையில் தோளோடு தோளாகச் சாய்ந்துகொள்வதில் அப்படி என்ன கிடைத்துவிடும்? இருசக்கர வாகனப் பயணத்தில் தோளைப் பிடித்துக்கொள்வதில் என்ன நிறைந்துவிடும்? அவ்வளவு அவசரமாக பத்து விநாடிகள் கைகளை இறுகப் பற்றிக்கொள்வதில் எதை நாம் கடந்துவிடுவோம்? எல்லா கதவுகளும் திறந்துகிடக்கும் முற்றத்தில் மின்னலென அணைத்து விலகும் பொழுதில் அப்படியென்ன சாகசம் இருக்கிறது? லிஃப்ட்டின் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு முத்தமிட்டுக்கொள்வதில் என்னதான் நிகழ்ந்துவிடும்? அன்பின் சிறிய நிமிடங்கள் நம்மை ஆட்கொள்கின்றன அவை நிகழ்கிறபோது அப்படியொன்றும் அவை அவ்வளவு சி…
-
- 0 replies
- 1.2k views
-
-
எத்தனை கடவுளிடம் எனக்காக வேண்டியிருப்பாய்! எத்தனை மணித்துளிகள் எனக்காக காத்திருந்தாய்! எத்தனை இரவுகள் என் வரவுக்காக விழித்திருந்தாய்! எத்தனை ஆண்டுகள் இரவில் விழிக்காமல் நானிருக்க விழித்து கொண்டு நீ இருந்தாய்! * கருவறையில் இருக்கும் கல்லைவிட,கள்ளகபடமில்லாத, கருவறையில் சுமந்தவளே, கடவுள் என்பதை நீ உணர்த்தினாய்! * என் வலிக்காக நான் அழுதேன். வளர்த்தவளுக்காக நான் அழுததில்லை... காரணம் தெரியாமல் என்னோடு நீ அழுதாய்! * இதயத்தை உதைத்தவளுக்காக வலியால் நான் அழுதேன்... காரணம் ஏதும் கேட்காமல் அப்போதும் என்னுடன் நீ அழுதாய்! * அன்பு ஒன்றே உலகில் சிறந்தது என்பதை தெரியவைத்தாய்! அன்புதான் அழுகையாக வெளிப்படுகி…
-
- 7 replies
- 1.7k views
-
-
அன்பிற்கும் உண்டோ..... பத்து வருடங்கள் முன் அப்பொழுது என் மகளுக்கு வயது பதினைந்து அழகான வா்ணக் காகிதத்தில் அன்பான வாிகளிட்டு அளித்தாள் தந்தையா் தின வாழ்த்து அத்தனையும் நனவாகி அதுவே இறுதி என்று தொியாத இறுமாப்பில் முத்தமொன்று கூட முழுதாய்க் கொடுக்காமல் முறுவலித்தேன் இப்பொழுதும் ஆண்டு தோறும் வருகிறது தந்தையா் தினம் எனக்காக மலா் வைத்து அஞ்சலிக்க மகளும் வருகின்றாள் காற்றில் முத்தமிட்டு கண்ணீருடன் விடை பெறுகின்றாள் எனக்காக என் அன்பிற்காக ஏங்கும் மகளுக்காகவேனும் நான் மறந்திருக்க வேணும் புகையெனும் மாயப் பேயை எண்ணுகின்றேன் ஆனாலும் எடுத்தியம்ப முடியவில்லை மனைவியின் வேண்டுக…
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
மகிழ்ச்சியாய் வாழ அழகாய் வழிகாட்டுகிறது அன்பு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 922 views
-
-
[size=3][size=4]அன்பு மகனுக்கு,[/size][/size] [size=3][size=4]உன் தந்தை எழுதுவது, இது நீண்ட கடிதம்தான் ஆனால்,[/size][/size] [size=3][size=4]இதுவே இறுதியாகலாம்.[/size][/size] [size=3][size=4]ஏனெனில் உன் நினைவுகள் நெஞ்சடைக்க இருமுறை சுவாசம் இழந்துவிட்டேன்.[/size][/size] [size=3][size=4]உனக்கு நேரமில்லை எனக்குத் தெரியும். முடியும்போது முடிந்தால் படி.[/size][/size] [size=3][size=4]இந்த நிலவினைப் பார்க்கும் போதெல்லாம் உன் ஞாபகம்தான்.[/size][/size] [size=3][size=4]மேலே தெரியும் உத்தரத்து வெண்ணிலவும், கயிற்றுக் கட்டிலும், நான் சொன்ன நட்சத்திரக் கதைகளும், உனக்கு நினைவிருக்குமோ என்னவோ...[/size][/size] [size=3]…
-
- 9 replies
- 976 views
-
-
அன்பு என்பதன் அர்த்தம்தான் என்ன? அந்த ஒரு சொல்லின் கருதான் என்ன? தாய்தன் பிள்ளை மீது கொண்ட அன்பு என்ன? கணவன் மனைவி மீது கொண்ட அன்பு என்ன? காதலன் காதலி மீது கொண்ட அன்பு என்ன? நண்பன் நண்பன் மீது கொண்ட அன்பு என்ன? கண்கள்மீது இமைகள் கொண்ட அன்பு என்ன? இதயத்துக்கு இசை மீது கொண்ட அன்பு என்ன? மொழிமீது கவிஞனுக்கு கொண்ட அன்பு என்ன? இருளின் மீது சந்திரன் கொண்ட அன்பு என்ன? மழைத்துளிகள் பூமி மீது கொண்ட அன்பு என்ன? மலர்கள் மீது வண்டுகள் கொண்ட அன்பு என்ன? ஒளி மீது மரங்கள் கொண்ட அன்பு என்ன? அலை கடல் மீ…
-
- 9 replies
- 1.4k views
-
-
-
-
அன்புக் கரம் நாடும் அகதிகள் இறைவன் படைப்பால் தமிழர் ஆனோம் தமித்தாய் வயிற்றுப் பாவி ஆனோம் தாய் நாட்டில் அகதி ஆனோம் தவமது இருந்தோம் பசியது தாங்கினோம் ஆண்டுகள் பல ஓடியும் ஆதரிப்பார் யாருமின்றி அந்நியர் நாட்டில் அகதிகள் ஆனோம் அன்புக்கரம் நீட்டி ஆதிரித்தான் அந்நியன் அந்நியன் உணர்வுகள் நமக்கு இல்லையே? நம்மவர் உணர்வுகள் உறங்குவது ஏனோ ? அகதிக்கு அகதி நாம் நம் நாட்டில் அகதியாம்! எம்மவர் காத்திட அன்புக்கரம் நீட்டுவோம் வாரீர்..? வரிகள் : வசீகரன் அச்சில் : 12.03.93 நன்றி : தமிழன் (பத்திரிகை)
-
- 2 replies
- 1.1k views
-
-
எழுத்துப் பிழையின்றி எழுத நினைக்கும் காதல் எழுத்துப் பிழையின்றி வாசிக்க நினைக்கும் நட்பு * என் நண்பனை அறிமுகப்படுத்தினேன் சந்தோசப்பட்டனர் என் நண்பியை அறிமுகபடுத்தினேன் சந்தேகபட்டனர் * காதலி கொடுத்த பூ வாடிப்போனது நண்பி கொடுத்த பூ வாடவில்லை அதுதான் நட்பு * காயப்படுத்திய கரம் நட்பென்றாலும் அதே கரத்தையே தேடும் குணப்படுத்த நட்பு -யாழ்_அகத்தியன்
-
- 8 replies
- 2.1k views
-