கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
ஈழத் தலைமகனே! "அடிமை" என்னும் விலங்கறுக்க வந்த தலைவன் "மிடிமை" நீக்கி தலை நிமிரச் செய்த தமிழன் கொடுமை கண்டு பொங்கிய எரிமலை இவன் விடிவை நோக்கி பயணிக்க எழுந்த ஆதவன் பொங்கும் கடல் தந்த ஈழத் தமிழ்மகன்- தமிழ் வாழ வேண்டி தமிழன்னை ஈந்த தலைமகன் ஈழ அன்னையாவருக்கும் மூத்த பிள்ளை நாம் அழைப்போம் என்றும் எங்கள் அண்ணை" தமிழர்க்கொரு இன்னல் என்றால் வேங்கையாவான் தமிழீழப் பிள்ளைக்கெல்லாம் தமையனாவான் ஈழமே மூச்சென்று என்றும் வாழ்பவன்! எந்த இடர் வந்திடினும் சோர்ந்திடாதவன் உறுதிகொண்ட மனங்கள் சேர்த்து படையமைத்தவன் உலகம் வியந்துநிற்கும் வகையினிலே எமைச்சமைத்தவன் கலங்கிடாத களத்திற்கே இவன் தளபதி! அண்ணன் கட்டளைக்காய் காத்திருக்கும் புலிப்படையணி விழி…
-
- 0 replies
- 871 views
-
-
அம்மாவின் கனவு தம்பிகளின் தங்கையின் நம்பிக்கை சுதர்சனா ! நீயெப்படி ? நெருப்பில் எரிந்து கரித்துண்டமானாய்….? எப்போதோ செய்தியாய் சந்தேகமாய் கேள்விப்பட்டது…. அது மறந்து போன ஒருநாளில் தோழனொருவன் ஊடாய் தொடர்பில் வந்த உன் அம்மாவின் கண்ணீர் இன்னும் நனைத்தபடியிருக்கிறது நினைவுகளை…. அம்மாக்களுக்கு நிரந்தர துயராய் பிள்ளைகளின் இழப்புகள் எங்களுக்கென்ன எழுதப்படாத விதியா சுதர்சனா…? உன் நினைவாய் நீ போன இடம் வரப்போவதாய் புலம்புகிற அம்மாவின் கனவுகளில் ஏன் தீமூட்டினாய்…..? அக்காவின் ஞாபகங்களில் தொலை தூரங்கள் வரையாகத் தங்கள் கனவுகளை எறிகிற உன் உடன்பிறந்தோரின் உள்ளெரியும் தீயில் அவர்கள் உயிர்வாழ்வையே வெறுப்பதை….! எந்த வா…
-
- 1 reply
- 871 views
-
-
-
-
மாவீரர் ஒருவரைக் கண்டேன். மாவீரர் ஒருவரைக் கண்டேன். மனது திக்… திக்…என்றது. வணக்கம் மாவீரரே! என்றேன். மௌனமாக நின்றார். கையிலே மாலையும் இல்லை. காத்திகைப் பூவும் இல்லை தோளில் போர்க்கத் துண்டும் இல்லை என் செய்வேன் என்று இரு கைகூப்பி வணங்கினேன். அப்போதும் அவர் மௌனமாக நின்றார். மன்னித்துக் கொள்ளுங்கள் நீங்கள் மாலைக்கோ மணி மகுடத்துக்கோ மற்றெந்;தச் சலுகைகளையோ விரும்பாத சரித்திர நாயகர்கள். கதிகலங்கி நிற்கும் தமிழருக்கு கலங்கரை விளக்கங்கள்;; இதைப் புரியாத நான் உங்களை…. ……………….. நான் என்ன தவறு செய்தேன்? என்மேல் என்ன கோபம்? உங்கள் கனவைக் கலைத்தேனா? உங்கள் பெயரால் பணம் சேர்த்து என் மடியை நிறைத்தேனா? உதட்டளவில் விடுதலை என்…
-
- 1 reply
- 870 views
-
-
இளையராஜா. --------------------- நான் உயிர் வாழ கார்பன் - டை - ஆக்ஸைடே போதும் - அது உன் ஹார்மோனிய பெட்டியில் இருந்து வந்தால்.
-
- 0 replies
- 870 views
-
-
இனம் மதம் பணம் மொழி சாதகம் சாதி என்று இதுவரை அறியாத அந்த இதயம் மட்டும் உள்ள காதலுக்கு இறுதியில் கிடைப்பது என்ன????? இரக்கம் அற்ற முடிவு மட்டும் தானே?????
-
- 1 reply
- 870 views
-
-
எங்கள் கனவு சுதந்திர வாழ்வு உங்கள் ஆசை அகண்ட வேலி வேலியை அகட்டும் வேலைக்கான கூலியாய் எம்மை நினைத்தன் பொருட்டு கனவின் கைகளில் ஆயுதம் கொடுத்தீர் ஒன்றை ஒன்பதாய் பிரித்தீர் இருந்தும் கனவின் தினவை கண்களில் ஏந்தியோர் சொந்தக் கால்களில் நடக்கத் தொடங்கினர், புராணகாலப் பொழுதில் இருந்தே உமக்கு நாம் தான் போரும் புகைச்சலும் கடல் தாண்டி நீவிர் கதியால் போட வந்தவேளை மீண்டுமொருமுறை எங்கள் பூஞ்சோலை உங்கள் வானரங்களால் பிய்த்தெறியப்பட்டது அந்தப் பூக்களை தொடுத்தே நாங்கள் ஏவியோன் கழுத்தில் மாலையை ஏற்றினோம் சிதைதலின் வலி எத்தகையதென்பதின் நினைவூட்டல் அது, அதன் பின் காலம் சுழன்று நிழலின் பின்னே நிசமாய் அரசு நிகழ்ந்தது எத்தனை உயிர்களின் …
-
- 1 reply
- 869 views
-
-
சார்ள்ஸ் அன்டனிக்கள் களத்தில்தான் வீழ்ந்தார்கள் உன் பெயரை தன் மகனின் முகவரியாக்கினார் எம் தேசியத்தலைவர். அவர் வீட்டில் தினம் ஒலிக்கும்... உன் நாமம் ... சார்ல்ஸ் அன்டனி. மனம் தளர்ந்து ஒதுங்க நினைத்தவரை இழுத்து வந்து நிமிர்த்தியவன் நீ. அதைப் பெருமையாகக் கூறுவான் உன் தலைவன். அவருக்குத் தெரியாத விடயமெல்லாம் நீ கூறுவாயாம். பெருமைகொள்...அதையும் வெளிப்படையாய் கூறும் பரந்த மனமுடையோன் உன் தலைவன். உன் ஆளுமை பற்றிப் பேசுகையில் குழந்தை போலாகிவிடுவார் எம் தலைவன். நண்பனாய், தோழனாய்,சேவகனாய், மந்திரியாய், முதல் படைத்தலைவனாய் வாழ்ந்தாய். தலைவனின் போராட்ட வாழ்விற்கு சரியான அத்திவாரமடா நீ. உறுதிதளரா நெஞ்சங்கள் முதல் வித்துக்களாகி, இறுதிவரை போராடும் பேராளுமையை அளித்தீர். …
-
- 2 replies
- 869 views
-
-
ஓ துகிலுரியப்பட்ட தங்கையே துட்சாதனன்களோடு நவகண்ணன்களும் கைகோர்த்துச் செய்த கொடுமை... பிணங்களின் நினங்களின்மேல் அபிவிருத்திப் பாடைகட்டும் அரக்க உலகே எப்போது உன் மனச்சாட்சி திறக்கும்... மனமிருக்கிறதா இருந்தால்.............. இன்றேனும் இல்லை நாளையேனும் உன் மனதைத் திறப்பாயா இல்லை சிங்களத் திமிரோடு சங்கமித்து சங்கமித்திரையையும் சாகடித்துப் புணர்வாயா? புணர்வதற்கு பெண்ணெண்ண பிணமென்ன.... தூ........... சிங்கம் புணர்ந்தெடுத்த சிங்களத்து வம்சமது செங்களத்தில் பட்டபாட்டை இப்படித்தான் தீர்த்ததுவோ! இதன்பின்னும் ஈனர்களாய் ஒரு கூட்டம் வீணர்களாய் ஒரு கூட்டம் வெட்டிகளாய் ஒரு கூட்டம் வேண்டாம் தாயே நீ எம்மை மன்னிப்பாய்! காத்திடவும் முடியாது நீதி காண்பதற்கும் முடி…
-
- 10 replies
- 868 views
-
-
பெருமழைக்கான பிரார்த்தனைகளுடன்... -எஸ். ஹமீத் *இன்னும் எரிகிறது நெருப்பு... போதாதைக்குப் பெருங் காற்று வேறு; தீக் கங்குகள் எட்டுத் திசைகளிலும் எழுந்து பறக்கின்றன *பற்ற வைத்தவன் தூரத்தில் பத்திரமாய் ஒரு மாளிகைக்குள்; பாழும் நெருப்புக்கது தெரிந்துதான் பற்றி எரிகிறது...! *தொடங்கியவன் அவன் தொடங்குவதற்கும் தொடர்வதற்கும் உதவியது காற்று! *எல்லாவற்றையும் எரித்துவிடும் பொல்லாத ஆவேசம் நெருப்புக்கு; காற்று நன்றாகவே போட்டுக் கொடுத்தது..! *பைத்தியக்கார நெருப்புக்குப் பச்சை மரங்கள் கூடப் பலியாகிக் கொண்டிருக்கின்றன நேற்றந்தப் பசுங் கிளைகளைத் தழுவிய அதே காற்றின் உபயத்தில்..! *காட்டிக் கொடுத்தலே தொழிலாயான பின்னர் காற்றுக்கு வளர்ந்த மரமென்ன…
-
- 8 replies
- 868 views
-
-
நண்பர்களே நான்தேடும் பாடல் உங்களிடம் இருக்கிறதா அல்லது எங்கு தரவறக்கம் செய்யலாம். இன்று என்னிடம் ஒரு நண்பர் பாடல்கள் சிலவற்றை போட்டு காட்டினார் அவையனைத்தும் தமிழில் பிரசித்தி பெற்ற சினிமா பாடல்களின் உல்டா மிகவும் நகைச்சுவையாக இருந்தன நாதம்.கொம்மில் தரவிறக்கம் செய்ததாக கூறினார் ஆனால் இப்பாடல்கள் தற்போது அங்கு காணமுடியவில்லை உங்களில்யாருக்காவது தெரியுமா சுறுளியின் குரலில் கேட்கவே மிக நகைச்சுவையாகவிருக்ம்.
-
- 0 replies
- 868 views
-
-
ஏ மிலேச்ச நாடே! எத்தனை கொடுமைகள் செய்து விட்டாய் எங்கள் தமிழினத்திற்கு.... எத்தனையோ வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும் காலில் விழுந்தும் கதறியும் கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்த்தாயிற்று... எதுவுமே காதில் விழாத உங்களுக்கு இன்னும் தராத ஒன்று மிச்சம் உண்டு என்னிடம்... பட்டினியால் சுருண்டு மடிந்த பிஞ்சுக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து அழுது வீங்கிய கண்களோடும் அரற்றிய துக்கத்தோடும் கலைந்த கூந்தலோடும் வயிறெரிந்து இதோ விடுக்கிறேன்... கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்! குறள்நெறியில் வளர்ந்து அறநெறியில் வாழ்ந்தவள் அறம் பாடுகிறேன்! தாயே என்றழைத்த வாயால் பேயே என்றழைக்க வைத்து விட்டாய்! இனி நீ வேறு, நான் வேறு! ஏ மிலேச்ச நாடே! ஆ…
-
- 0 replies
- 868 views
-
-
பதின்மூன்று கிடந்து படும் பாடு போதும் -பா.உதயன் இந்த முறையும் இந்தியா சொல்லலாம் 13 ஐ பார்த்து கொடுக்கச் சொல்லி செய்கிறோம் என்று இலங்கை சொல்லும் பின் தெரியாதது போல் மறந்து போய் இருக்கும் கொடுங்கள் என்றும் கொடுக்கிறோம் என்றும் சும்மா சொல்லிச் சொல்லியே காலம் போச்சு அவர் அவர் நலனில் அக்கறையே தவிர அது பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை ஏமாத்துக் காரன் இலங்கை என்று இன்னும் இந்தியாவுக்கு தெரியாமல் இல்லை இந்தியாவுக்கு தலையும் சீனாவுக்கு வாலும் காட்டும் இந்து சமுத்திரத்தில் கிடக்கும் நழுவல் மீன் இது என்று இந்தியாவுக் இன்னும் புரியாமல் இல்லை இருவரும் சேர்ந்து இன்றும் ஏமாத்துவது ஈழத் …
-
- 5 replies
- 867 views
-
-
ARM INAS வாகனத்தில் பெரிதாய் நாங்கள் மாஷாஅல்லா ஒட்டினோம் அவர்கள் புதுசரணய் ஒட்டினார்கள் நாங்கள் லாஹிலாஹஇல்லாவை ஒட்டினோம் அவர்கள் தெருவன் சரணய் ஒட்டினார்கள் நாங்கள் Proud to be a Muslim என்று ஒட்டினோம் அவர்கள் சிங்கலே ஒட்டினார்கள் நாங்கள் கஃபா பொம்மையை வைத்தோம் அவர்கள் புத்தர் சிலையை வைத்தார்கள் நாங்கள் மூளை முடுக்கெல்லாம் பள்ளி கட்டினோம் அவர்கள் சந்திகளில் எல்லாம் சிலை வைத்தார்கள் நாங்கள் ஊருக்கே கேட்க பயான் போட்டோம் அவர்கள் உலகத்துக்கே கேட்க பண போட்டார்கள் நாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்தோம் அவர்கள் பூமிபுத்ரா கட்சியை ஆரம்பித்தார்கள் நாங்கள் S….TJ…
-
- 0 replies
- 867 views
-
-
வான்மகளின் துயரத்தில் கண்ணீராய் நீ துளி துளியாய் வழிந்து மழையாக நீ தூயவள் நீ துள்ளலுடன் குதித்து ஓடி நீரோடையில் தேங்காது நெகிழ்வாய் நடை பயின்று கள்ளங் கபடமில்லா உன் சிரிப்பில் கனவுகள் பல நெஞ்சில் சுமந்து காதலில் கரைகண்டு காவியங்கள் படைக்க எண்ணி தன்னலம் நீ கொண்டாயில்லை தார்மீக பொறுப்பை மறந்தாயில்லை கடந்து செல்லும் பாதை எங்கும் அன்பினால் நனைத்தாய் உலகை கருணை, நெஞ்சில் ஊற்றெடுக்க கதிர்களை வளர்த்தாய் தாயாய் ஆயிரம் இடர்கள் இடைமறித்தாலும் கவனத்தை மட்டும் சிதறடித்தாயில்லை பாறைகள் தடைக்கல்லாயின கற்கள் சேர்ந்து வலிகள் தந்தன காலபோக்கில் உன் சிரிப்பை மறந்தாய் கண்களில் சுமந்து வந்த உன் கனவை துறந்தாய் எத்தனை துன்பம் கொண்டாய் பெண்ணாக நீ பிறந…
-
- 3 replies
- 867 views
-
-
காலாறத்துடிக்கும் மீட்பர்களும்...கண்டுகொள்ளாத மந்தைகளும்.... காலையும் மாலையுமாய்க் கனவுபோல முடிந்துபோன நாட்களில் முடிவின்றிப் பயணித்தன விடுதலைக்காய் அவர்கள் கால்கள் சுதந்திரத்திற்கான கனவுகளைச் சுமந்துகொண்டு எப்போதும் நிழலைப்போலக் கூடவே தூப்பாக்கிகளைச் சுமந்தன அவர்கள் தோள்கள் மாதங்களையும் ஆண்டுகளையும் மறந்துவிட்டு வயதுகளைத் தியாகம் செய்தவாறு போர்க்களத்தில் கரைந்துபோயின அவர்கள் வாழ்க்கை எல்லாச் சிலுவைகளையும் எங்களுக்காய்ச் சுமந்துவர்கள் இன்று ஆயிரம் ஆயிரம் இயேசுநாதர்களாய் அறையப்படுகின்றனர் தடுப்புமுகாம்களில் கனவுகளையும் இளமையையும் தொலைத்தவர்கள் காலநதியின் நீள ஓட்டத்தில் …
-
- 0 replies
- 867 views
-
-
சுமையிழுக்கும் காளைகளுக்கு......... புல்லு கூட கொடுத்ததில்லை... வக்கணையாய் ............. காத தூரம் நடந்தே நொய்ந்துபோன அதன் - கால்களில் பிழை பிடிப்பார்..............! களிம்பு தடவ - நினைத்ததுண்டா? முகில்களுக்கு இறுதி அஞ்சலியாம்.............. மழைவந்தால்மட்டும் -பிறந்த நாள் வாழ்த்தாம்! என்னயிதுவோ -கருத்து கப்பலோ? வயிறுகிழிந்து கொட்டிய வான ....... குருதி உடலில் ஏனோ கறையான் கள் பெயரில் கப்பல்? தாய் தேசமது விடியலையே தந்தை தேசமெதுவென்று தெரிந்தாலும்....... அவர்களெமை நம்பலையே...........! போகயெண்ணிய வாகனம்............ விரைவு பாதை நடுவே உருளைகள் ........ செயலற்றதால் உடைந்ததாய் ஆச்சு வாழ்வு..! நீ வெட்டி வீரம் காட்டு ....... வெள…
-
- 2 replies
- 867 views
-
-
புன்னகைத்து பாருங்கள் நட்புகள் கிடைக்கும் பிரார்த்தனை செய்யுங்கள் நல்ல மனம் கிடைக்கும் நம்பிக்கை வையுங்கள் வெற்றி கிடைக்கும் உண்மையாய் உறுதியோடு உழைத்து பாருங்கள் வாழ்க்கையில் எல்லாமே கிடைக்கும்... {படித்ததில் பிடித்தது}
-
- 1 reply
- 867 views
-
-
கண்களில் தொடங்கி கருத்தினில் வளர்ந்து, உருவமில்லாமல் உயிரை வதைக்கும் இன்ப சித்திரவதை காதல். காதல் கனிந்து கல்யாணத்தில் முடிவதும் உண்டு. களிப்பு பொங்கும் வாலிப வயதில் வரும் பாலினக் கவர்ச்சியாக அற்பாயுசில் முடிவதுமுண்டு. அப்படிப்பட்ட காதல் கூடாவிட்டாலும், கல்லறை வரை அதைப் பொக்கிஷமாய் வைத்திருப்பவர்களும் உண்டு. “அன்று, நான் அவள் மனதிலும், அவள் என் மனதிலுமாய் எங்கள் காதலை வளர்த்தோம் கம்மங்காட்டின் கடைசியிலும் காளியம்மன் கோயிலிலும் சோளக்காட்டின் சந்தினிலும் செம்மண் புழுதியிலும். கதிராய், காவியமாய், செங்கரும்பாய், செந்தாமரையாய் செழித்து வளர்ந்த காதல் சூழ்நிலைச் சூறாவளியால் சொந்தமின்றி போனது. இன்று, அவள் அவளின் வீட்டில் கணவனுடன் நான் என் வீட்ட…
-
- 1 reply
- 866 views
-
-
ஓரு பயணம் தொடங்கினேன் பல வருடங்களுக்கு முன் பாதி தூரம் கடந்தாயிற்று ஏன் முக்கால்வாசித் தூரமாயுமிருக்கலாம் சிலவேளைகளில் முடியும் தருவாயிலுமிருக்கலாம். முன்பெல்லாம் திருவிழாக்கூட்டமாய் பலர் உடன் வந்தார்கள் பயணங்கள் இனிமையாய் அமைந்தன பாதையின் விதிகள் கற்பிக்கப்பட்டன அவற்றை மீறியபடியும் விதிகளை கற்றுக கொண்டேன் பாதையின் கிடங்குகளைக் கடக்கையில் கைபிடித்து அழைத்தப்போயினர் சிலர் பாதையின் தன்மைகள் மாறிக்கொண்டே இருந்தன விழுந்தால் வலிக்காத மணற்பாதையில் தொடங்கி பாதுகாப்பான ஒழுங்கை, சாலை என்றாகி காலப்போக்கில் பாதைகள் அகன்று நெடுஞ் சாலையாயிற்று அதிலும் நடக்கக் கற்றுக் கொண்ட போது பயணத்தின் கால்வாசி கடந்திருந்தே…
-
- 0 replies
- 866 views
-
-
'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும். நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட…
-
-
- 4 replies
- 866 views
-
-
தை பிறந்தால் வழிபிறந்தது அன்று எத்தனை தை பிறந்தும் தமிழனுக்கு மட்டும் வழி பிறக்க வில்லையே ஏர் கொண்டு உழுது பயிர்கள் தான் செய்தோம் ஊரெங்கும் பச்சை வயல் பசுமைகள் கண்டோம் எவரையும் நம்பாது நாம் விழைத்து நம் மண்ணில் தன்னிறைவு கொண்டோம் செம்பாட்டு மண்ணில் செழித்து வளர்ந்திடும் செவ்விளநீரொடு மா பலா வாழை என வாயினிக்க நாமணக்க வகை வகையாய் வாழையிலை மஞ்சள் வானுயர்ந்த கருப்பு கட்டிப் பொங்கி மகிழ்ந்திட்டோம் யார் கண்ணோ பட்டதனால் நாமிருந்த பூமியெல்லாம் நாசமாய் போனதனால் நாள் கூட நமக்கின்றி நாதியற்றுப் போனோம் ஏர்கொண்டு ஏற்றமுடன் எமைக் காத்தோம் இன்று ஏழைகளாகி எதிர்பார்த்து ஏந்தி எம் கைகளை எல்லோரை நோக்கி ஏளனப் பொருளாகி எதுமற்ரோராகி எச்சில் இலைகளாய்…
-
- 9 replies
- 866 views
-
-
கேப்பாபுலவு கவிதைகள் – தீபச்செல்வன் கேப்பாபுலவு – 1 முன்பொருகாலத்தில் எனது தேசம் கடலாலானது இப்போது இராணுவத்தினாலானது எனது தொன்மங்களின்மீதெழுப்பட்ட இராணுவமுகாங்கள் எனது வீட்டின் தளபாடங்களிலானது எப்போழுதும் வீழா நந்திக்கடலருகே பூவரசம் தடிகளில் செய்த வில்லினால் இராணுவமுகாமை நோக்கி அம்பெய்கிறான் கேப்பாபுலவுச் சிறுவன். பனியும் வெயிலும் தின்றது குழந்தையரின் புன்னகையை எனினும், வாடிய மலரைப்போல மரங்களின் கீழே தூங்கும் தொட்டில்களில் அவர்களுமை சுற்றி வளைத்தே உறங்குகின்றனர் துப்பாக்கிகளுக்கு அஞ்சாது வெஞ்சினத்துடன் கொதித்தெழுகின்ற…
-
- 0 replies
- 865 views
-
-