Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாலைவன ரோஜா...... கவிதை - இளங்கவி நம் வாழ்விழந்த சோகத்தில் வாயடைத்து நின்றேன்...... அழியும் நம் இனத்துக்காய் நடு வீதிக்கு சென்றேன்..... அந்த தருணங்கள் என் வாழ்வின் ரணங்களாய்..... எப்போதும் சுட்டெரிக்கும் பாலை வனங்களாய்........ அந்தப் பாலைவனத்தினிலே சோககீதம் பாடும் ஓர் சோலைக் குயிலாக..... திசையேதும் தெரியாமல் திசைமாறிப் பறக்கின்றேன்.... அந்த நெருப்பு மண்தரையில் பட்டுவண்ண ரோஜாவொன்று..... நட்பெனும் நிழல் தேடி நான் பறக்கும் திசை நோக்கி நட்புடன் சிரிக்கிறது.... சுட்டெரிக்கும் சூரியன் விட்டெறியும் கதிர்களினால்.... தொட்டாலே தீப்பற்றும் சுட்டெரிக்கும் மண் தரையில்...... வேரூன்றித் தவிக்கும் அந்த அழகான பூச்செடிக்கு..…

  2. பாலைவனத்தில் பந்தாடும் சிறுத்தைகளுக்கு... (05.06.2012 அன்று தமிழீழ தேசிய உதைபந்தாட்டஅணி முதன் முதலாக பாலைவனத்தில் பந்தாடியபோது வெளியிடப்பட்டது.) பாலைவன தேசத்தில் எங்கள் சிறுத்தைகளின் பந்தாட்டம் பக்கம் இருந்து பார்க்கின்ற கொடுப்பனவு எமக்கில்லை எட்ட நின்றாலும் பக்கம் வந்து உணர்வாலே உம்மை பாடி வைக்க தமிழ்தாய் வரம் தந்ததால் பாடுகின்றேன் உம்மை வெற்றித்திலகமிட்டு வாழ்த்துகின்றோம் வீரரே ! வென்று வாரும். சாவினிற்க்கு அஞ்சாதோர் மீது சாற்றிய கொடியொடு சென்றுள்ளீர் நிச்சயம் வென்றுதான் வருவீர்!!! குண்டடிபட்ட எம் தேசக்கொடி பந்தடிக்கும் வீரரே! உம்மால் பாரினில் பறக்குது இன்று காணொளியில் கண்டதுமே கை கூப்பித் தொழுகின்றோம் கதிரவன் உதிக்கும் திசை நோக்கி எத்தனை ஆயிரம் வீர…

    • 10 replies
    • 726 views
  3. அறிவினுயிர் கற்பனையென்றான் ஐன்ஸ்டீன். என்னுயிர் கற்பனைகளும் அவளாலே. அறிவியல் விந்தைகளும் அவளைப்போலவே... இவள் நெற்றிப்பிறை பூமிப்பெண் சூடும் வளர்பிறை இவள் விழிவீச்சு ஒசோனை ஊடுருவும் புறஊதாக்கதிர்வீச்சு இவள் சிரிப்பலை உலகமியங்கும் மின்காந்த கதிரலை இவள் கண்ணங் கருவிழிகள் விண்மீன்களை விழுங்கும் கருந்துளைகள் இவள் கவுல்கள் வெண்ணிலவின் பால்வண்ணப் பரப்புகள் இவள் செவ்விதழ்கள் செவ்வாய் கிரகத்தின் மண்வளைவுகள் இவள் மறைமேடுகள் ஆழ்கடல் பனிமுகடுகள் இவள் உந்திச்சுழி பால்மவீதிகளில் சுழலும் சூரியசூறாவளி கருந்துளைகள் – black holes சூரியசூறாவளி – solar wind

  4. பால்ராஜ் அமரனுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன் அமரா நீ மீட்ட ஆனையிறவில் சுடப் பட்ட செங்கால் நாரைகள் போல் வன்னியெங்கும் தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே. என் கவிதையிலே நீ இருக்க ஈழம் கதறியழும் நியாய மென்ன. நீயோ முடங்கிய காலில் மூண்டெரிந்த விடுதலைத் தீ. தீவெட்டியாய் உன்னைச் சுமந்து சென்ற தோழருக்கு 'இத்தாவில்' பகையிருட்டில் வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா. உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு. களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல் காலங்கள் ஊடே என் கவிதை இனிச் சுமக்கட்டும் அவனை ஆழப் புதைக்காதீர் ஆலயங்கள் கட்டாதீர். நாளை மணலாற்றை மீட்டு வாழ திரும்புகையில் நம் சனங்கள் மசிரை விட்டுதுகள் தம் மனம் நிறைந்த நாயகனை. …

    • 26 replies
    • 7.5k views
  5. தளபதி பால்ராஜ் ஈழப்போர் வரலாற்றின் மாதண்டநாயக்கன் ஜெனரல் என கொண்டாடப்பட வேண்டிய மாவீரனாவார். அவரது மரணச் செய்தி கேட்டவுடன் எழுதிய அஞ்சலியை இப்போ மீழ செம்மைப் படுத்தி எடிற் பணி பதிவு செய்கிறேன் பால்ராஜ் அமரனுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன் அமரா எங்கள் விடுதலைபோரின் மாதண்ட நாயக்கா நீ மீட்ட ஆனையிறவுக் கடற் கழியில் தரை இறங்கும் செங்கால் நாரைகளாய் வன்னியெங்கும் தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே. *என கவிதையிலே நீ வாழ ஈழம் கதறியழும் நியாய ம…

    • 7 replies
    • 1.2k views
  6. Started by kavi_ruban,

    'பூக்களைப் பறிக்காதே' என்கிறது எச்சரிக்கைப் பலகை! ஆனாலும் புற்றரை யெங்கிலும் பூக்களின் சிதறல்! காற்றைக் கோபித்துக் கொள்ளாதீர் பாவம் அதற்குப் படிக்கத் தெரியாது! ----இது ஒரு ஜப்பானியக் கவிதை...... எப்போதோ படித்தது....

  7. Started by priyaa,

    ஏழை குழந்தையின் கண்கள் மின்னியது.... மாற்று உடுப்பு கிடைத்தது எண்டு எண்ணி ... பாவம்.. தன்னை போல அதுவும் 'வேண்டாம்' என ஒதுக்க பட்டவை எண்டு அறியாமல் ...

  8. பாவலனா நீ..?...சீ....துா... தோளிலே துண்டிட்டு தோழனாகி நீ வந்தால் கட்சி தலைவனா நீ- உன்னில் காறி உமிழாரா..? குப்பைகளை கூட்டி உன்- இதய கூடையிலே போட்டு விட்டு நாற்றம் அடிக்குதென்றால்-உன்னில் நாறாமல் என் செய்யும்..? பட்டாடை கட்டி வந்த பா வரியை உதறிவிட்டு கவிதை இதுவென்று கருநெஞ்சே நீயுரைத்தால்- உன்னை கல்லால் அடிக்காரா காறி உமிழாரா..? சிலித்தெழுந்த வரிகளிற்கு சிரச் சேதம் செய்பவனே உன்னையா கவிஞனென்று-நீ உலகேறி பறையடிதாய்...?? நல்ல நாடகம் தான் நல்லாய் அரங்கேற்று கண்முன்னே நீ வந்தால்-உன்னை கல்லால் நானடிப்பேன்....! குறிப்பு..- ஒரு பத்திரிகைக்கு எழுதிய கவிதையை-அங்குள்ளவர் அதன் பொருளை வரிகளை சிதைத…

  9. பாவி இவனை மறுபடியும் பிறக்க வைக்காதே செய்த பாவமெல்லாம் தீரும் முன்னே இறக்க வைக்காதே பாவத்திற்கு கூலிதன்னை நிறுத்தி வைக்காதே இவனைப்போல் பாவிகளை இனியேனும் படைத்து வைக்காதே வஞ்சகனின் உடலெல்லாம் வாதம் வர வேண்டாமோ வாய் நிறைந்த பொய்யனுக்கு மூலம் வர வேண்டாமோ கால் அழுகி கை அழுகி காடு செல்ல வேண்டாமோ காதகனைக் கண்டு மக்கள் காறித்துப்ப வேண்டாமோ கோடி வகை நோய் கொடய்யா சாகும் வரை அழ விடய்யா இப்பிறவி முடிவதற்குள் இவன் கணக்கை முடித்திடய்யா உச்சி மரக்கிளையில் நின்று உயிர் வேரை அறுத்தவன் இவன் பச்சை இளங்கொளுந்தைக்கிள்ளி பாழ் நெருப்பில் எறிந்தவன் இவன் பாவி இவனை மறுபடியும் பிறக்க வைக்காதே ! முகநூல்

  10. பாவிகளை மன்னிப்பாய். புலிக்குப் பிறந்தவனே, போர்க்களத்தில் சிறைபட்டு எலிக்கு கருவாடாய் இட்டதைத் தின்றாயோ? இனங்காத்த தந்தை இல்லாது போனதனால் பிணந்தின்னிப் பேய்தந்த பிஸ்கட்டை தின்றாயா? வஞ்சக உலகில் வாழ வேண்டாமென நெஞ்சிலே தோட்டாக்கள் நீ-வாங்கி னாயா? நீயுறங்க தாலாட்டு நின்அன்னை இசைப்பதற்கு பீரங்கி முழக்கங்கள் பின்னணியாய் கேட்டதடா வீட்டோரம் வெடிகுண்டு வேலியெல்லாம் துப்பாக்கி தோட்டாக்கள் எல்லாம்நீ தொட்டுவிளை யாடியவை ஒரு தோட்டா போதாதா உன்னைக் கொல்வதற்கு மறுபடியும் சுடடா வென மார்பைக் காட்டினாயா ? " அப்பா" வென அலறியதால் அச்சமுற்று சிங்களவன் அப்பாவி உன்னை ஐந்துமுறை சுட்டானோ ? வளர்ந்தால் தந்தைபோல் வரலாறு படைப்பாயென மலர்ந்ததும்…

  11. காதலுக்குள்ளும் மனிதத்திற்குள்ளும் கரைந்துவிட்ட நேசம் பணத்திற்குள்ளும் பகட்டுக்குள்ளும் பனித்துளியாகி விட்ட பாசங்கள் உறவுகளை தேடி உரைத்திட மொழியின்றி படித்திட வரியின்றி கண்களில் கண்ணீர் கனவுகளும் கற்பனைகளும் காணமல் போய்விட்டது சோகமும் வேதனையும் கண்ணுக்குள் வந்து விட்டது தேற்றுவார் அன்றி தேடுவார் அன்றி இருக்கும் காலமும் வந்துவிட்டது தேடவேண்டும் உணர்வுகளை சல்லடை போட்டு அவர்களிடம் வழியும் கண்ணீரை துடைத்திட மனமின்றி வழி மேல் விழி வைத்து காத்திருந்த உறவுகள் நீலக்கண்ணீர் வடித்து நிஐம் என நிருபிப்பார்கள் வென்றிட வழியின்றி வெற்றியின் பாதையில் அநியாயங்கள் ஆனந்தமாய் அரவணைத்து ஆறுதல் சொல்பவர்கள் போல் ஆயிரம் முறை ஆப்பு வைக்க …

    • 25 replies
    • 4.2k views
  12. பாவேந்தரின் 131 பிறந்தநாள் இன்று 60 Views பாவேந்தரின் 131 பிறந்தநாள் இன்று ************** கம்பீர தோற்றம், கர்வமில்லா போர்குணம், எழுத்தின் வீச்சு, எரிமலையாய் வெடிக்கும், பகுத்தறிவு பாதையில் சாதிகளை நொறுக்கும், பெண்ணடிமை வேரறுத்து பேரருமையின் உச்சம், பேச்சில் இடி முழக்கம், சமத்துவ பாதையில் கர்ஜித்தக் குரல், விதவை மனம் ஏற்பு, மனுதர்ம கழுத்தறுப்பு, ஏற்றத்தாழ்வு இடிப்பு, சமத்துவமே இவரின் உயிர்த்துடிப்பு, அடிமை விலங்கை உடைத்தெரிந்த ஆயுத நெருப்பு, ஆரியத்தின் தோலை உரித்த …

  13. POETRY AND THE FATE கவிதையும் விதியும் என் அன்புக் கவிஞன் சே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ”புலவனும் வறுமையும் பிரிக்க முடியாதவை” என்று சொன்னதாக கனடா சென்றிருந்தபோது விஜயன் சொன்னான். இது ஆயிரம் ஆயிரம் வருடங்களாக ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கவிஞர்கள் கலைஞர்களால் சொல்லப் பட்டு வருகிற வார்த்தைதான். சில நாட்க்களின் முன்னம் பாவைக்கூத்து கவிதையை எழுதி முடித்தபோது எனக்கும் அப்படித்தான் தோன்றியது. கவிதையை எழுதியபின்னர் என்னை துக்கம் சூழ்ந்தது. என் அப்பா அம்மா இருவருக்குமே கவிதைப் பைத்தியம் பிடித்திருந்தது. இரு துருவங்களான அவர்களைக் கவிதை மட்டும்தான் சேர்த்து வைத்திருந்தது. நான் பிறந்தபோது …

    • 0 replies
    • 835 views
  14. என் அன்புக் கவிஞன் சே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ”புலவனும் வறுமையும் பிரிக்க முடியாதவை” என்று சொன்னதாக கனடா சென்றிருந்தபோது விஜயன் சொன்னான். இது ஆயிரம் ஆயிரம் வருடங்களாக ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கவிஞர்கள் கலைஞர்களால் சொல்லப் பட்டு வருகிற வார்த்தைதான். சில நாட்க்களின் முன்னம் பாவைக்கூத்து கவிதையை எழுதி முடித்தபோது எனக்கும் அப்படித்தான் தோன்றியது. கவிதையை எழுதியபின்னர் என்னை துக்கம் சூழ்ந்தது. என் அப்பா அம்மா இருவருக்குமே கவிதைப் பைத்தியம் பிடித்திருந்தது. இரு துருவங்களான அவர்களைக் கவிதை மட்டும்தான் சேர்த்து வைத்திருந்தது. நான் பிறந்தபோது ஜாதகம் எழுதிய அப்பாவின் நண்பர் சிறீபதி மாஸ்ட்டர் என் பெற்றோரை மகிழ்விக்கவோ என்னவோ . இவர் கவிஞராவார் என எழுதி வைத்திருந்தார்.…

    • 2 replies
    • 1.3k views
  15. அகதியாக வந்த பறவை ஏன்அங்கு துடிதுடித்தது கடல் கடந்து வந்த உள்ளம் ஏன் பதைபதைத்தது சிங்களத்து படைகளினால் அகதியாகி புலம்பெயர்ந்தது அமைதியாக வாழ என உங்கு வந்தது அகதியாக வந்தவனை தமிழகம் ஏன் மிதித்தது விழுந்தவனைத் தான் அங்கு மாடும் முட்டுது பச்சைபாலன் என்பது அறியாமலா நாய் கடிதது செய்தி படித்த என் மனமோ பதைபதைக்குது ஈனமான தமிழனாக இவனும் தன்னைக்காட்டுது

  16. பிஞ்சு நிலவு கவிதை - இளங்கவி.... பருவ ஏக்கத்தில் படுக்கைகள் நனைய...... என் கனவு பேரழகித் தேர்வுக்காய் பாதச் சுவடுகள் நடந்தன.... நிலவை மட்டும் தேடும் நேசக் கண்களுக்கு... என் மனதைக் குளிரவைக்க ஓர் நிலவு இன்னமும் கிடைக்கவில்லை.... சிறு தூரம் நடக்கிறேன்.... நடு நிசியின் நட்சத்திரக் கூட்டம் போல் வீதியோ ஜொலி ஜொலிக்க என் வேதனைக்கு விருந்தாக ஓர் வெண்ணிலவு... ஆம்.. அவள் ஓர் வெள்ளை நிலவு.... இவள் வேண்டாம்.... எனக்கு என் சொந்த மண்ணீன் காந்த நிலவு வேண்டும்... என் நடை தொடர சின்னச் சிரிப்பொலியொன்று என்னைச் சிறிதாய் கவர்ந்திழுக்க திசை நோக்கிப் பார்க்கிறேன் நம் தேசத்தது நிலவு அவள்.... அவள் கண்களோ பேசியது பல கதைகள்.... …

  17. பிஞ்சுகளைப் பிளந்த பிசாசுகள் செஞ்சோலையில்-எங்கள் பிஞ்சுகளின் செங்குருதி குடித்த இரும்புப் பறவைகளே முல்லையின் மரண ஓலம் கேட்கிறதா..? வானம் பார்த்து விழிமூடிக் கிடக்கும்-எங்கள் வண்ணப் பூக்களை வந்து பாருங்கள் யுத்தவெறி பிடித்த புத்தமுகம் கிழியும்! உங்கள் தாகம் தீர்த்துக் கொள்ள தமிழனின் குருதியென்ன மதுபானமா? பிணவெறி பிடித்த இனவெறிகளே! எங்கள் வலிகளைக் சேமிக்கும் இதயங்கள் இனியும் தாங்காது வலிகளைச் செலவு செய்ய வருவோம்! எங்கள் குருதியால் எழுதப்படும் சிங்கள மகிந்தவின் சிந்னைக்கு எரிமலைப் பிழம்புகள் கொடுப்போம்! எல்லை மீறிய எதிரிகள் கூட்டமே-இனி எழுது கருவிகள்கூட ஏவுகணையாகும் எட்டுத் திக்கிலும் வெற்றி எமதாகும!; கனத்த நெஞ்சுட…

  18. Started by pakee,

    [size=4]கடவுளுக்கு தான் என்னை பிடிக்கவில்லையென தினமும் கண்ணீர் துளிகளை தருகிறார் அந்த மரணத்திற்கு கூட என்னை பிடிக்காமல் போய் விட்டது இன்றுவரை என்னை தேடி வரவில்லை...[/size]

    • 0 replies
    • 504 views
  19. காணும் காட்சியெல்லாம் கறைபடிந்த சிறைச்சுவர்கள் .கனவில் வருவதெல்லாம் அம்மா உன் கண்ணீர் கன்னங்கள். இதழால் ஈரம்செய்து நான் இனிக்கத் தந்த முத்தங்களை கண்ணீர் ஓடி ஓடி கரைத்தே விட்டதாம்மா? குழந்தைப் பருவத்தேநீ கொஞ்சி மகிழ்ந்த தெல்லாம்நினைவில் வந்துவந்துநிதமும் வதைக்குதாம்மா? பாசம் காட்டி என்னை - நடைபழக்கிய இடங்களெல்லாம் தீயாய் நினைவில் நின்றுமனதை கருக்குதாம்மா? கண்ணீராலும் கரையாதகவலைகள் கூடிக்கூடி - உன்நெஞ்சம் புண்ணாகநிதமும் வதைக்குதாம்மா? என்னம்மா நான் செய்ய? இரும்புக்கம்பிகளின் விலகாத பூட்டுகளால் என்னை விடுதலைசெய்துவிடமுடியாமல் இருக்கிறதே. பந்தம் பாசமெல்லாம் தூரத்தில் கிடந்தாலும் சொந்தம் என்று சொல்லிக்கொண்டு நீ சிறைக்கு வருவதால்தான்உறவுகள் …

  20. Started by slgirl,

    தாய் பிடிக்கும் என்மேல் பாசத்தை பொழிவதால் அண்ணன் பிடிக்கும் எனக்கு குடும்பதை வழி நடத்துவதால் அக்கா பிடிக்கும் எனக்கு தாய்க்கு ஆறுதலாய் இருப்பதால் தம்பி பிடிக்கும் எனக்கு சிறுவனாய் இருந்தும் என் தங்கையை படிப்பிப்பதால் தங்கை பிடிக்கும் எனக்கு என உயிர் தோழியாய் இருப்பதால் நட்பு பிடிகும் எனக்கு வழி நடத்தி செல்வதால் காதல் பிடிக்கும் எனக்கு காயங்களை கற்பித்ததால் மௌனம் பிடிக்கும் எனக்கு அது உன்னிடம் நிறையவே இருக்கின்றதனால்... காத்திருப்பு பிடிக்கும் எனக்கு உனக்காகவே காலம் பூராகவும் காத்திருக்க போவதால்.

    • 8 replies
    • 2.1k views
  21. Started by karu,

    எமது தேசிய விடுதலைப் போராட்டம் ஈழத்தில் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலட்சக்கணக்கான அப்பாவி உயிர்களைப் பலி வாங்கியது ஆளும் வர்க்கம். வன்னியில் இறுதிப் போரின்போது பச்சிளம் பாலகரிலிருந்து பல்விழுந்த முதியவர்கள் வரை எரிகுண்டுகள் வீசப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்போதெல்லாம், நெஞ்சுவிம்ம நாடிநரம்புகள் புடைக்க என்ன செய்வது ஏதுசெய்வது என்று அறியாது தவித்தோம். எல்லாவற்றையும் விட க் கொடிதினும் கொடிதாய், எம் அக்கா தங்கைகளின் மானத்தைச் சூறையாடியதுமல்லாமல் அவர்கள் கழுத்துகளைத் திருகிக் கொன்றான் எதிரி. எப்படிப் பொறுப்போம். இரதகஜதுரகபதாதிகளையிழந்து வெறுஙகையராய் நாம் நின்றோம். கையிலிருந்த வில்லம்புகளுக்குப் பதிலாகச் சொல்லம்புகளே எமக்கு மிஞ்சின. அனியாயங்களைச் செய்தவன் ய…

    • 2 replies
    • 2.2k views
  22. கனவும்...கவியும்... நல்ல கவிதை வரி ஒன்று கனவில் வந்தது! எழுந்து பக்கத்தில் கிடந்த தாளில் குறிப்பெழுதி வைத்து உறங்கிப் போனேன்! காலையில் தாள் காணமல் போயிருந்தது! அடுத்தநாள் கனவில் வந்தது அதே வரி! இந்த முறை நாட்குறிப்பில் எழுதிவைத்தேன்! அதனால் எழுந்து ஓட முடியாது என்ற தைரியத்தில்! காலையில் நாட்குறிப்பு இருந்தது! வரிகள் இல்லை! - அடடா பேனாவில் மையில்லை! அதற்கு அடுத்த நாளும் அதே கனவு அதே வரி குறிப்பெடுத்து வைத்தேன் என்பதை கண்ணாடிப் போட்டு உறுதிப்படுத்தியப் பின் உறங்கிப் போனேன்! மறுநாள் காலையில் என் கையெழுத்து எனக்கே புரியவில்லை! இன்றைக்கு அந்த வரிகளை கனவில் கண்டவுடன் எழுந்து அமர்ந்து …

    • 12 replies
    • 2.5k views
  23. தனி ஒருவனுக்குள்ளே உள்ளே, ஒரு பிரபஞ்ஜமே மறைந்திருக்குமா?? இவன் மனவெளி ரகசியம், அதை நாசா பேசாதா?? க்ரகங்களை கைப்பந்தாட விரும்பிடுவானே, கருங்குளிக்குள்ளே சென்று திரும்பிடுவானே... --இது ஒரு வில்லனைப் பற்றிய பாடல் என்றாலும் பிரபஞ்சம் பிச்செறிஞ்ஜேன் என்ற வைரமுத்துவின் வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது...

  24. பிணக் காடுகளில்..... கவிதை - இளங்கவி.... பிணக் காடுகளில் பேய்களின் ஊர்வலம் நடக்க..... நாம் பிறந்த தேசம் நாயின் வாயில் கேவலமாய்க் கிடக்க..... ஈழத்து வளங்களெல்லாம் எதிரியின் காலடியில் நசுங்க.... எம் உறவின் எலும்புகளை அவன் நாய்கள் திண்டு ருசிக்க.... ஆடுகிறான் பேயாட்டம் அதை அடக்க இல்லை ஓர் கூட்டம் உலகத்தின் அசிங்க அரசியலில் அழிந்தது எம் உயிரோட்டம்.... அன்றொரு நாள் இரவில்.... ஓலைக்குடிசை இடுக்கினிலே ஒற்றை நிலவைப் பார்த்துக்கொண்டு மயங்கிய பூவினிலே மது அருந்தும் வன்னிவண்டு.... இன்றைய இரவினிலே..... இரவின் கோரப்பல்லின் இடுக்கினிலே கொடிமல்லிகைகள் சிக்கிக்கொண்டு எதிரியின் கோரப்பசிக்கு சிதையும் நம் மலர்கள் இன…

  25. உனது ஆட்சிக்கான சாவுமணியை நீயே அடிக்கிறாய்.. நாமென்ன செய்ய..? உன் அழிவுக்கான குழியினை நீயே வெட்டுகிறாய்… யார் என்ன செய்ய..? உனது அகங்காரங்கள் உனக்கான பாடையை அலங்காரம் செய்து கொண்டிருப்பதை நீ அறிய மாட்டாய்… உனது கொடுங்கோலின் நுனி உனக்கான கல்லறையைச் செதுக்கும் உளியென்பதை நீ உணர மாட்டாய்… மனிதத்தையும் மனிதர்களையும் எரித்துக் குளிர் காய்பவனே… பிணங்களின் மீதமர்ந்து பிறைச் சோறுண்பவனே… உன் அரசாசனத்தை அக்கினி சூழ அதிக நாட்களில்லை…! ஆமாம்… உனது ஆணவ நடை ஓயும்.. உன் அகம்பாவக் குடை சாயும்…! உனது மாட மாளிகைகள் மண்ணோடு புதையும்; கூட கோபுரங்கள் குப்பை மேடாகும்! எங்களின் தயவாலும் நீ சூடிக் கொண்ட மகுடம் இன்னும் சில மாதங்களில் எரி…

    • 1 reply
    • 783 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.