Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. என் கண்ணீரில் கப்பல்விட்டு விளையாடுகிறாள்! அந்தக் கப்பலைப்போலவே... நனைந்து பாரமாகிறது என் மனசும்! என் மனதின் மழைக்காலங்களில்... அவள் நனைந்து பூரிக்கின்றாள்! இடியும் மின்னலும் நிறைந்த கார்மேகமாய், என் வாழ்வும் வேகமாய் ஓடிப்போகிறது! என்னைப் படுத்தும் காலங்கள்... அவளைமட்டும் ஒன்றுமே செய்வதில்லை! வரவிருக்கும் வசந்தத்தையும்... வண்ணத்துப் பூச்சிகளோடும் பூத்துக் குலுங்கும் பூக்களோடும் அவள் இரசிப்பாள்! அதிகாலைப் பனித்துளிகள் போல... கொஞ்சங்கொஞ்சமாய் நான் மறைந்து போவேன்! மீண்டும் ஒரு மழை வரும்...! அந்த மழையிலும் அவள் கப்பல்விட்டுச் சிரிப்பாள்! சிரிக்கும் பொழுதில் தோன்றும் அவளின் கன்ன மடிப்புக்களில்... நான் அடங்கிப்போவேன்! சிறகடிக்கும் சிட்டுக்குருவிய…

  2. இங்கு விசமாகிபோகும் மனிதர்களும் உண்டு உணர்வுகளை புரிந்துகொள்ளாத மனிதர்களும் உண்டு உடுத்தியிருக்கும் உடையின் உள்ளிருக்கும் பாகத்தை பார்க்க துடிப்பவர்களும் உண்டு சக மனிதனை தாக்கி அளிக்க துடிப்பவர்களும் உண்டு சக மனிதனின் உணர்வுகளை கொச்சைபடுத்தும் மனிதர்களும் உண்டு ஆறறிவு படைத்த மனிதனுக்குள்ளே எத்தனை விதமான எண்ணங்கள் ஐந்தறிவு படைத்த விலங்கினங்களுக்கு இல்லாத அத்தனை குணமும் இங்கு மனிதர்களுக்கு இருக்கிறது அத்தனையும் வன்முறையா? இல்லை குரூரமா? புரியாத புதிராய்!

  3. புரியாத புரிதல். புரிதல்கள் இரண்டு தமக்குள் சந்தித்துக்கொண்டன தமக்குள் புரிந்துணர்வில்லாமலே பேசிக்கொள்ள ஆரம்பித்ததன புரிதல்கள்; புரிதல் பற்றியே புரிதல்கள் பற்றிய சர்ச்சை புரிதல்கள் இல்லாததால் புரிதல்களுக்குள் முற்றிக்கொண்டிருந்தது ஒரு புரிதல் தன் பங்குக்கு புரிதல் பற்றிய தன் விளக்கத்தினை பல்வேறுவகையில் புரியவைக்க முயற்சித்தது இன்னொரு புரிதலிடம் கொஞ்சமும் புரிந்துகொள்ள முடியாத இரண்டாம் புரிதல் முதலாம் புரிதலின் புரிதல் பற்றிய கொள்கைகளை புரிதல் இல்லாமலே விமர்சித்துக் கொண்டது. இந்த முறை புதிய கொள்கைகளோடு இரண்டாம் புரிதல் தன் பங்குக்கு ஆரம்பித்தது. முதலாம் புரிதலின் புரிதல் பற்றிய கொள்கைகள் எப்படி…

  4. மழைத்துளியின் சோகங்கள் மண்ணுக்குத்தெரிவதில்லை மழலையின் இனிய மொழி மற்றவர்க்குப் புரிவதில்லை மலர்களின் வாசம் தன்னை மலர்க்கூந்தல் அறிவதில்லை மங்கையின் மன ஆழத்தை மன்மதனும் அறிந்ததில்லை இதயத்தின் உணர்வுகளை இதயங்கள் உணர்வதில்லை தந்தையின் சுமைகள் இளமையில் புரிவதில்லை தாயின் அன்புதன்னை தானிருக்கும்போது புரிவதில்லை கண்ணீரின் ஈர வலியது கண்களுக்குப்புரிவதில்லை வானவில்லின் வர்ண ஜாலம் சந்திரனுக்குத்தெரிவதில்லை உடலின் முடிவுதன்னை உணர்வுக்குப்புரிவதில்லை காலனின் வருகைதன்னை காலத்துக்கும் தெரிவவதில்லை காதலின் வலிகள் காமுகர்க்குப்புரிவதில்லை நட்பின் இலக்கனம் நயவஞ்சகர்க்குப்புரிவதிலை இலக்கியனின் உணர்வுகள் இங்கு உங்களுக்குப்பு…

  5. Started by அஞ்சரன்,

    உன் எழுத்தில் அம்சம் இல்லை உன் கருத்தில் ஆழம் இல்லை உன் சொல்லில் கூர்மை இல்லை உன் கவியில் உணர்ச்சிகள் இல்லை என்னை நோக்கிய கேள்வி என் பாணியில் போகட்டுமா நான் என்ன பெண்ணு பார்க்கவா போகிறேன் நான் என்ன கிணறு வெட்டவா போனேன் நான் என்ன சானை பிடித்தா தந்தேன் நான் என்ன பிட்டு படமா எடுத்தேன் என்னுள் எழும் இயல்பை உன்னுள் கொன்று புதைக்காமல் என் சமூகத்தின் முன் வீசி நின்றேன் பணம் என்றால் பிடித்து இருப்பார் தமிழ் ஆகிட்டே விலகி போகிறார் விமர்சனம் செய்கிறார் தெளிவெண்ணை கசக்கும் ஆனால் உடலுக்கு நல்லதாம் தமிழும் அப்டியே நான் பாரதி அல்ல பாமரன் .

  6. உலகத் தமிழர்க்கு தலைவனாம் எண்ணத்தில் கைக்கெட்டும்தூரத்தில் கொத்து கொத்தாய் கொலைகள். தடுக்க தைரியமில்லா தலைவா தப்பான சேர்க்கையில் தன்மானம் இழந்தாயோ? இல்லை வெள்ளை தோலினிலே தன்னிலை தளர்ந்தாயோ? அருகினிலே மாழ்வது உன்னினமே தட்டிக் கேட்க துப்பில்லை தரம் கெட்டவளின் பசப்பினிலே தடுமாறி போனாயோ? இல்லை உடல் தளர்ந்தும் உன் ஆசைகள் தளரவில்லையா? மதி கெட்டவனே அருவருப்பாயில்லை உனக்கு வாக்கெடுப்பு நடாத்தி பார் யார் தமிழினத் தலைவனென்று உன் கரங்களே எங்கள் தம்பிக்கு வாக்களிக்கும். அறிந்தும் அறியாதவன் போல் நாடகம் ஏன்? நாளைய சந்ததி படிக்கும் வர…

  7. இல்லாது இருப்பவன் இருந்தும் இல்லாதவன் வரிகொண்டவன் வரிப்புலிகண்டவன் முழுத்தமிழர்க்கும் முகவரிதந் தவர்மனங்களில் முடிசூடினன் இயற்கையின் நண்பன் இமாலய சாதனையின் தொண்டன் தமிழன்னையின் தவப்புதல்வா... தாயகத்துத் தங்கமகனே புறநானூற்றின் புதுத் தொடரே... உனக்கின்று இன்னோரகவையாம்... காலத்தின் கட்டளையே கரிகாலா... உனக்கும் அகவையேதுமுண்டோ? நீ வாழி.. நீ வாழிய பல்னூற்றாண்டு...!!!

    • 7 replies
    • 853 views
  8. [size=4]வீரவணக்கம் வீரவணக்கம் [/size] [size=4]தமிழினத்தின் குறியீடுகளே [/size] [size=4]தன்மானத்தின் நாயகர்களே![/size] [size=4]வீரவணக்கம் வீரவணக்கம்[/size] [size=4]சங்க காலத் தமிழினத்தின்[/size] [size=4]புறநானூற்றைப் புதுப்பித்தவர்களே![/size] [size=4]தமிழன் என்ற இனத்தை[/size] [size=4]உலகிற்கு அடையாளங் காட்டியவர்களே![/size] [size=4]மண்ணை மீட்க[/size] [size=4]மண்ணில் கலந்த மாவீரர்களே![/size] [size=4]மானமும் வீரமும் விளைய[/size] [size=4]எருவாகிப் போனவர்களே![/size] [size=4]மீண்டும் பிறப்பீர்; பகை அழிப்பீர்[/size] [size=4]அதுவரை[/size] உங்கள் உயிர்காற்றை [size=4]நாங்கள் உட்கொண்டிருப்போம்;[/size] [size=4]உங்கள் தடந்தோள்களில்[/size] …

    • 0 replies
    • 456 views
  9. Started by putthan,

    புல தமிழா!!!! உன் இருப்புக்கு ,இயங்கிகளுக்கும் உனக்கு தேவை சிங்க கொடி துடுபாட்டமும் சிவஜியின் நாயகன் ரஜனியும் சின்ன திரை மெகாசீரியலும் சிங்க கொடி பகிஷ்கரிக்க கோரின் சீ-விளையாட்டு வேறு அரசியல் வேறு என சிந்தாந்தம் பேசுகிறாய் சிவாஜி பகிஷ்கரிக்க கோரின் சினிமா வேறு அரசியல் வேறு என சீற்றம் கொள்கிறாய்....... சின்ன திரை வேண்டாம் எனின் சீரியல் இல்லை எனின் சீவியம் என்கிறாய் முடியவில்லை உன்னால் உறவுகளின் இருப்புக்கும் இயங்கிகளுக்கும் உன் பொழுதுபோக்கை இழக்க தயார் இல்லை.................

    • 16 replies
    • 2.3k views
  10. புலத்து இளைஞனின் புலம்பல் புரிந்திட முடியாப் புதிராம் எந்தனை புரிந்திட மறுக்கும் உறவுகள் சொல்கிறார் வெந்த என் மனதிலே வேலினைப் பாய்ச்சியே விடுப்பினை அறிந்திடும் விருப்பிலே துடிக்கிறார் கற்பனை ஆயிரம் காண்கிற வயசிலே களிப்புடன் வாழ்ந்திட வழியுள நாட்டிலே இல்லற வாழ்வினை தேடிடாக் காரணம் இயம்பிடச் சொல்லியே தினம்தினம் குடைகிறார் ஆண்டுகள் போகுதாம் ஆயினும் எந்தனை அண்டவே இல்லையாம் திருமண ஆசைகள் கிழவனாய்ப் போனபின் அண்டிடார் பெண்களாம் கிண்டலாய்ச் சொல்கிறார் கோபமும் கொள்கிறார் காதலில் தோல்வியோ கன்னிமேல் வெறுப்போ களவியல் வாழ்க்கையில் நாட்டமோ கேட்கிறார் வாழ்ந்திடும் நாட்டின் மக்களைப் போலவே வாழ்ந்திட மனதில் எண்ணமோ என்கிறார் பேரனைக் கொஞ்சிடும…

    • 8 replies
    • 1.8k views
  11. புலத்து இளைஞர்களே புலம்பெயர் மண் இளைஞர்களே ! சற்று செவிமடுப்பீர் சொந்த மண்ணை ஏன் பிரிந்தோம்? சொந்த மண்ணில் என்ன நடக்கிறது? உம் இதயத்தை நீங்கள் கேட்பதுண்டா? சொந்த மண்ணில் எம் உறவுகள் அழியும் செய்தி உம் காதில் விழுவதுண்டா? இங்கே குழு மோதலால் எம் இனத்தை நீங்கள் அழிப்பது உள்ளம் உறுத்தவில்லயா? ஒர் உயிரைப் பறிக்கும் உரிமையை உமக்கு கொடுத்தவர் யார்? ஒர் உயிரை ஒர் நொடியில் பறித்து விடுகிறீர் எம் தமிழ்த்தாயின் கதறல் உம் காதில் விழவில்லையா? சுற்றி இருக்கும் உறவுகளின் வேதனை உமக்கு வேடிக்கையா? பழிக்குப் பழி தீர்ப்பதில்த் தான் உம் வீரம் உணர்கிறீரா? இக்கோர உள்ளம் எப்படிப் பெற்றீர்? புலம் பெயர்ந்த மண்ணில் நடைபெறும் வன்முறைகளைக்…

  12. புலத்துக் கரும்புலியாய் ஓர் பேரொளி.... கவிதை - இளங்கவி போரின் கூக்குரல்கள் புகுந்தது தமிழ் நெஞ்ச்சுக்குள்... போரை நிறுத்தென்று மக்களில் ஒருவனாய்ப் புலம்பினான்.... உலகின் காதில் எம் குரல்கள் கேட்கவில்லை..... ஈழத்து அழுகுரல்கள் அவன் ஆயுளைப் பிழிந்தது.... அவன் கைகள் எழுதியது மரண சாசனம்..... கால்கள் இலக்கு நோக்கி ஓர் நீண்ட பயணம்..... திடீரென தோன்றிய முடிவல்ல அவன் சிந்தனையில் தோன்றிய தெளிவு..... பல்லாயிரம் உயிருக்கு பார்காத ஐ. நாவா பாவம் இவன் உயிரைப் பார்க்கும்.... அவனுக்கும் தெரிந்திருக்கும் ஆனாலும் ஈழத்து அழுகுரலில் அவன் ஆன்மா கரைந்திருக்கும்... அமைதி காக்க தோன்றிய ஐ.நா பொய் முகம் காட்ட..... புலத்துக் கரும்…

  13. மஞ்சளும் மண்ணும் கலந்த நிறத்தில் பொன்வண்ண அச்சுடன் என்றோஎடுத்த இன்சுரன்சிற்கு இன்றும் அனுப்புகின்றான் டயரி எழுதாத சில பக்கங்களுடன் கிறுக்கிய பல குறிப்புகளுடன் பழையதை தூக்கி அட பதினொன்றாவதா என அடுக்குகின்றேன். சிரிக்கும் புதுப்பக்கதில் படுக்கும் நேரத்தில் சிவப்பு பேனாவால் வைய படபோகும் மாந்தர் அல்லது மானிடம் எதுவுமாகலாம். அன்றைய நாள் தலைப்பில் எனக்கு எதிரியாக எவன் பட்டாலும் அன்று அவனுக்கு தான் அத்தனை பூசைகளும் அபிசேகமும் போனவருட டயரியின் பக்கங்கள் சில இப்பவும் மணக்குது செம்புதூக்கி சோபா, விட்டுவாங்கி யோ.கா, நாய்வைத்தியன் நடேசன் இலக்கிய கள்ளன் பூபதி என்று மூத்திரம் தொட்டு எழுதியதால், நேரில்காண்கையில் நடுமூஞ்சையில் பிசகாமல் அடிப்பேன் து…

  14. Started by ஈழவன்85,

    புலதினில் இயந்திரத்தோடு இயந்திரமாக உறவுகளை பிரிந்து தனிமரமாக புறாக்கூட்டுக்குள் அடைந்திருக்கும் ஏதிலித்தமிழன் நான் வயல் வெளியில் நடக்க ஆசை கினற்றில் குளிக்க ஆசை குடும்பத்தினருடன் கூடி இருக்க ஆசை ஆனால் முடியாது என்னால் விடுமுறையில் நண்பர்கள் தம் நாடு செல்கையில் எரிச்சலுடன் அவர்களை பார்கிறேன் நீ போகவில்லையா எண்ட கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன் அப்படி மீறி ஊருக்கு போனாலும் சிறைக்கைதியாக நான் வீட்டில் சொந்த நாட்டில் குற்வாளிபோல ஒழித்திருக்க நான் செய்த ஒரு தவறு தமிழனாய் பிறந்தது சுதந்திர தமிழீழம் விடியலுக்காய் காத்திருக்கிறது அந்த விடியலுக்காய் நானும் காத்திருகிறேன் வீர புருசர்களின் இரத்ததால் விடியும் தமிழீழத்தை ஆவலுடன் எ…

  15. *** இலை ஓன்று கிளையில் இருந்து பெயர்ந்து விழுகிறது அதன் ஓலம் கேட்டு திரும்புகிறேன் மிகுந்த வலியோடு மண்ணில் புலம் பெயர்ந்து கிடக்கிறது இனி ஒரு போதும் கிளைக்கு திரும்ப முடியா மரண வேதனையோடு மட்கி போக துணிகிறது மண்ணோடு . http://www.saraladevi.com/2013/06/blog-post.html

  16. புலம் பெயர் சிட்னி தமிழனே புண்ணியம் தேடி அழைகிறாய் ஆடி கலவரத்தை ஏன் மறந்தாய் ஆடி கலவரத்தை காட்டி அவுஸ்ரேலியா வந்தாய் :x மெழுகாய் உருகிய எம்மவருக்கு மெழுகுவர்த்தி ஏற்ற ஏன் மறந்தாய் அழைக்கவில்லை உன்னை ஆயுதம் ஏந்த, ஆயுதம் ஏந்தும் எம்மவருக்கு குடைபிடிப்பதற்கும் :evil: . சூரசம்சாரத்துக்கு விடுமுறை எடுத்து குடும்பத்துடன் செல்லுகிறாய் தமிழ் தெய்வமான முருகனுக்கு நன்றி சொல்லுகிறாய் அசுரர்களால் அழிக்கபட்ட தமிழனை நினைவு கூற ஏன் மறந்தாய் :?: உலக சமாதானம் வேண்டி யாகம் செய்கிறாய் உன் ஊரே சுடுகாடாய் கிடக்குதே உறவுகள் சமாதான போர்வையில் அழிக்கபடுகிறார்கள் உலக சமாதானம் செய்யதான் முடியுமா உன்னால் :?: புட்டபத்தி செல்கிறாய் விடுமுறையில் புளுகுக…

    • 20 replies
    • 3.4k views
  17. காய்ந்து போய் விட்ட, காலப் பூக்களின் இதழ்களாய். சருகாகிப் பறக்கும்,, சரித்திரங்களின் சாட்சிகள்! கடாரம் வரைக்கும், கப்பற்படை நடத்திக், கோவில் குடமுழுக்கு நடத்தியவனின், குலக் கொழுந்துகள்! அலை புரளும் கடல்களையும், ஆகாய வீதிகளையும் நிதமும், அளந்த படி அலையும், ஆதரவில்லாத அகதிகள்! இரவுப் புறாக்கள் மட்டும், குறு குறுக்கும் பேரிருளில் பனி படிந்த கண்ணாடி ஜன்னல்களில் பார்வை நிலை குத்தப், பேய்கள் உறங்கையிலும் காவல் வேலைக்காய் விழித்திருக்கும் விழிகள்! மரக்கறிக் கடைகளின், மூட்டை தூக்கிகள் ஓய்வெடுக்க, முதுகெலும்பை மலிவாக்கி, மூட்டையடிக்கும் தோள்கள்! மீசை மயிர் கருக்கும்,. மின்னடுப்புக்களின் வெக்கையில் பாண்களைப் பதம் பார்க்கும், பழகிப…

  18. சூழ்நிலை: கணவன் வெளிநாட்டில் உள்ளான்; மனைவி இந்தியாவில் உள்ளாள். அவள் கையில் குழந்தை. அந்தக் குழந்தைக்கு இருவருமே தாலாட்டுப் பாடுகிறார்கள்!! இருவரும் மறுகரையை நோக்கிப் பாடுவதாக அமைத்துள்ளேன்! பெண்: அழகிய கண்விருந்தே, அம்மாவின் அருமருந்தே அணைச்ச கைய உதறாம, பிடிச்சுகிட்ட கண்ணுறங்கு..! அக்கரைப் பச்சையின்னு அவசரமாப் போனவரே அக்கரை இருந்தும் அக்கரையில் என்ன செய்வீர்? ஆண்: இன்பம் தந்த அற்புதமே, அப்பனுக்கு அச்சரமே இலமறவு காய்மறவா இருக்குதடீ எந்தன் பணி இக்கரைப் பச்சையின்னு இங்கு வந்த அப்புறந்தான் இனிக்கப் பேசி இடித்துரைப்பார் எப்படின்னு நானறிஞ்சேன்! பெண்: உமக்கென்ன மகராசா குளிர்வசதி மச்சுவீடு உய்யாரமாயுலவ உயர்த…

  19. [size=5]மண்ணின் வாசனை,[/size] [size=5]மனதை நெருடுகின்றது![/size] [size=5]நினைவுகள் பின்னிப் பிணைந்து,[/size] [size=5]கண்ணாமூச்சி விளையாடுகின்றன![/size] [size=5]உப்புக் கலந்த காற்றின் நினைவில்,[/size] [size=5]நாசித் துவாரங்களின் அடைப்புக்களும்,[/size] [size=5]விலகி வழி விடுகின்றன![/size] [size=5]ஏனிந்தப் பிணைப்பு என்பதை,[/size] [size=5]அறிய மனது துடிக்கிறது?[/size] [size=5]அந்த மண்ணின் நினைவில்,[/size] [size=5]உடம்பின் உழைவுகள் கூட,[/size] [size=5]ஒவ்வொன்றாய் விடை பெறுகின்றன![/size] [size=5]காலைப் பொழுதின் புதுமையில்,,[/size] [size=5]கெக்கலித்துச் சிரிக்கும் பறவைகளே![/size] [size=5]உங்கள் கீதங்களில் உயிர்ப்பு இல்லை![/size] [size=5]எங்கள் குயில…

    • 40 replies
    • 3.5k views
  20. (2004 கவிதை மீண்டும்.. நினைவுகளை மீட்க) இஸ்ரேல் இருப்புக்காய் அனுப்பியது கிபீரும் ஆட்லறியும் இந்தியா இரகசியமாய் அனுப்பியது மிக்கும் மிரண்டாவும் அமெரிக்கா அண்டப்புளுகுக்காய் அனுப்பியது பெல்லும் கிறீன்பரேட்டும் ரஷ்சியா டொலருக்காய் அனுப்பியது தரையில் தாங்கியும் ஆகாயத் தாங்கியும் சீனா சிங்களத்தோடு உறவுக்காய் அனுப்பியது எப் 7ம் ரி 56 உம் பாகிஸ்தான் பகட்டுக்காய் பரிசளித்தது மல்டிபரலும் பல்டி அடியும் சிம்பாவே சிம்பிளாய் அனுப்பியது சிணுங்க ஒரு ஆயுதக்கப்பல் இன்னும் விட்டது குறையாய் தொட்டது குறையாய் யார் யாரோ எல்லாம் ஆயுத வியாபாரச் சந்தை விரித்தார் எங்கள் அன்னை பூமியின் அழிவுகளின் மேல்....! இத்தனைக்கும் சாட்சியாய் இதோ அவள்....…

  21. அகதிக்காதல் நான் இடம் பெயர்த்தேன் என் இதயத்தில் இருத்து நீ புலம் பெயர்த்தாய்.! #கேள்வி .! மழை இடியுடன் கூடியது காதல் வலியுடன் கூடியது வாழ்க்கை வேதனையுடன் கூடியது மனிதம் சுயநலத்துடன் கூடியது மரணம் மட்டும் தனியே போகுது ஏன் ? அனுபவிப்பு நீயூட்டனின் மூன்றாம் விதி பொய்த்து போவது மனைவியிடம் அடிவாங்கும் போது ..! (மொக்கை )

    • 6 replies
    • 1.3k views
  22. புலம்பெயர் ஈழத் தமிழர்களே புலம்பெயர் ஈழத் தமிழர்களே-உங்கள் போக்கில் வேண்டும் மாற்றங்களே நிலவிட வேண்டும் ஒற்றுமையே-உடன் நீங்கிட வேண்டும் வேற்றுமையே வலைதனில் காணும் கருத்துகளே-கவிதை வடித்திட காரணம் பொறுத்திடுக நிலைதனை தெளிவாய் அறிவீரே-நீர் நிச்சியம் ஈழம் பெறுவீரே இதுவரை நடந்ததை எண்ணாதீர்-கடந்த எதையும் பெரிது பண்ணாதீர் புதுவழி காணல் ஒன்றென்றே-அறப் போரினை தொடங்குவீர் நீரின்றே அதுவரை நடக்கும பேயாட்டம்-சிங்கள ஆணவ நாய்களின் வாலாட்டம் எதுவரை இந்தியா கைகொடுக்கும்-அதை எதிர் வரும் காலம் காண்பிக்கும் வஞ்சக சிங்களர் சொயலாலே-உங்கள் வாழ்வில் வீசிய புய லாலே தஞ்சம் தேடி உலக கெங்கு…

  23. புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல் முனைவர் இரா.செங்கொடி மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை மனிதகுலத்துக்கே அவமானச் சின்னமாக இன்றுவரை இருந்து வருகிறது. போரின் போது முதலாவது பாதிக்கப்படுவதும் பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்ற ஒரு கருத்து உண்டு. போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுக்க பதிவாகியுள்ளது. இதை ஹிட்லரின் நாசிப்படைகள் முதற்கொண்டு அண்மைய ஈழப்போர் வரையிலும் காணமுடியும். போர்க்க…

  24. கூட்டினோம் பெருக்கினோம் கழித்தலையும் துடைத்திட்டோம் எட்டு மணி வேலை என்பதை எழுத்திலும் நாம் அறியோம் இரவு பகல் வந்ததாக சொல்கிறர்கள் அதை நாம் என்றுமே பார்த்ததில்லை சுமந்தோம் பெற்றோரை உடன் பிறந்தோரை அவரது பிள்ளைகளை உற்றார் உறவினரை தாயகத்தை......... வீட்டுக்கு கலோ என்றால் கிலோ எவரானாலும் அய்யோ என்றால் அஞ்சோ பத்தோ வயிற்றைக்கட்டினாலும் வட்டிக்கெடுத்தாலும் எம் நிலையை வாய்திறந்து சொல்லோம் களவெடுக்கவில்லை கையேந்தி வீதியிலும் நிற்கவில்லை சொல்லொணா துயரங்கள் துரத்தியபோதும் வாய்ச்சொல் தவறியதில்லை எவன் வயிற்றிலும் என்றுமே அடித்ததில்லை மூழ்கும் நிலைவந்தால் அடுத்தவேலை எடுப்பதுண்டு அதற்கு அடுத்தவேலையும் பார…

  25. புலவரின் சாபம் பொய்க்காது...... http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-ash4/c126.0.403.403/p403x403/404322_545401095474745_294603601_n.jpg தமிழ் தேசியத்தின் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ஈழத் தமிழர்களை கொன்றொழித்த ராஜீவ் காந்திக்கு ராஜீவ் உயிரோடு இருக்கும் போதே அறம் பாடினார். அவர் விட்ட சாபம் அடுத்த இரண்டாண்டுகளில் பலித்தது. புலவர் வாக்கு பொய்க்காது என நிரூபித்தவர் பெருஞ்சித்திரனார். எவ்வாறு ராஜீவ் சாக வேண்டும் என்று அறம் பாடினாரோ அவ்வாறே செத்து மடிந்தார் ராஜீவ் காந்தி. ஆனாலும் புலவரின் சாபம் இன்னும் மிச்சமிருக்கிறது. பாடலை நீங்களே படியுங்கள். ---------------------------------------------------------- சிங்களக் கொலைஞன் செயவர்த்தனன் எனும் வெங்கண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.