கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நிஐம்!!! காற்றும் ஒருகணம் வீசமறந்தது கடலும் ஒருநொடி அமைதியாய்... போனது... தேற்றுவாறின்றி நம தேசம் தேம்பி நிற்குது தேசத்து உறவுகள் எல்லாம் ஊரூராய் அலையுது அம்மி மிதித்து அருந்ததி பார்த்து........ சோடிசேர்ந்த சோடிக் குயில்களின்....... மகிழ்ச்சிகள் எல்லாம். இன்று முட்கம்பி வேலிக்குள்... முடங்கிக் கிடந்திட நான்கு சுவற்றுக்குள் நடப்பவை எல்லாம் கந்தல் துணியால் கட்டிய முகாமில்..... வேட்டை நாய்களுக்கு நடுவில் வேதனையுடன் நடக்குது....... குளவி முதல் கிளவிவரை.... மாற்ற ஒர் உடையில்லை... அன்றொரு நாள் நம் இளசுகள் காத்திருந்து காதல்செய்த வீதிகள் எல்லாம் வேதனை தாங்கி விம்மியே நிற்கின்றன..... தண்ணீர் ஊற்றி நாம் வளர்த்த நந்தவன மரம…
-
- 21 replies
- 3.5k views
-
-
இளைஞனின் ஊக்குவிப்பான விமர்சனத்தை கருத்தில் கொண்டு மீண்டும் முயற்சி செய்து இருக்கிறேன். மீண்டும் பகுத்தறிவு!! மனிதன் நான் என்று சொல்லிக்கொள்வாய்........... ஆறறிவு கொண்டேனென்று அழகாய் ஒரு கிரீடம் ........... உனக்கு நீயே சூட்டிக்கொள்வாய்!.......... கண்ணுக்கு முன்னாலொரு சிசு பாலின்றியழுது தன் ஜீவன் கரைக்கையில்..... கண்ணுக்கு தெரியா கடவுளுக்கதை குடம் குடமாய் கொண்டு சென்று.. ஊற்றி கும்பாபிஷேகம் செய்வாய்! ஏழைச்சிறுவன் ஒருவனுக்கு கல்வி தராய்............ எரிகின்றதொரு வீட்டில் தணல் எடுத்து உன் வீட்டு உலை மூட்டுவாய்......... மஞ்சள் கயிறில்கூட ஒருதாலி கொள்ள முடியாமல் மலர்கள் சில.......... "மணமிழந்து" போகையிலே இல்லத்தாள் இருக்க.... இன்னொரு துணை தேட…
-
- 21 replies
- 3.7k views
-
-
அற்றைத் திங்களும் அவ் வெண்நிலவும் வ.ஐ.ச.ஜெயபாலன் இன்பம் துய்ததுடன் முடிந்து விடுகிறதா எல்லாம். பிடித்த புத்தகத்தில் இரசித்த பக்கமென தட்டிச் செல்ல முடியவில்லையடி. முட்டைகள் மீது பின்காலால் மணல்மூடி திரும்பியும் பாராத ஆமைப் பெண்ணாய்ச் சென்றாய். மாயை போலாயிற்று எல்லாம். இன்பம் இருவரும் நாடியதுதான். நட்பு நான் மட்டுமே தேடியதோ ? முதற் கண் பொழுதில் முதுகு சில்லிட ஒரு கணம் தரித்தாய். உன் இதயத்துள் இருந்து அடி வயிறு அதிர இறங்கிய இன்பச் சூனியம் மறைக்க சினந்து முகம் திருப்பினாய். நானும் கள்வன் என்பதறியாது. அடுத்த நாள் ஆயிரம் ஒத்திகையோடு வந்து மணி கேட்டேனே. ஏழனம் தெறித்தது உன் பார்வையில் …
-
- 21 replies
- 4k views
-
-
பகல்கள் மீதான நினைவுகளால் இறக்கும் இரவின் பாடல்.. ------------------------ காற்றையும் கடந்துபோகும் நிலவையும் கரைந்துபோகும் இரவையும் நினைவுகளால் கழுவிக்கொண்டே தொலையும் இந்த நாளொன்றில் கசிந்துகொண்டிருக்கின்றன கண்ணீர்த்துளிகளாய் ஞாபகங்கள்... அன்புச்சிதைவுகளின் காலப்படுக்கைகளுள் புதைந்துபோய்விடாமல் இன்னமும் என் இமையோரத்தில் எஞ்சி இருக்கின்றன உன் மேலான பிரியத்தின் படிமங்கள்.. ஒப்புக்காகவும் ஒப்பனைக்காகவும் சிரித்தபடி உப்புக்கரிக்கும் இமைகளின் ஓரங்களில் ஓலமிடும் விசும்பல்களாய் கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறது மனது தனியாக... முன்னொரு நாள் சேர்ந்து நடந்த நீயில்லாத தெருவொன்றில் துருவக்காற்றில் ஒடுங்கிப்போகும் ஓரிரு ஓர்க் மரங்களும் நடுங்கியபடியே கடந்துபோகும் நாலைந்து ச…
-
- 21 replies
- 1.6k views
-
-
கடற்கரையில் ஒரு தென்றல்..!! தென்றலுடன் தனிமையில் பேச தனிமையில் நான் கடற்கரை மணலில் தென்றல் என்னை வருடி சென்றது ஆனால் மெளனம் கொண்டது தான் ஏனோ..?? தென்றலின் மெளனம் என்னை மெல்ல கொல்ல. இதமாக தென்றல் என்னை வந்து அணைத்து செல்ல.. ஓசையில்லாமல் வந்த இன்னொருத்தி என் கால்களை முத்தமிட்டு சென்றாள். அந்த சுகத்தில் என்னை நான் மறக்க அவள் தன் முத்தத்தால் என் கால்களை நனைக்க.. என் மனம் தடுமாறி தென்றலை மறந்து தென்றலாக அலை பாய. என் காலில் முத்தமிட்டவள் மெல்ல நகைத்த வண்ணம் செல்ல. அவளுடன் நானும் மெல்ல செல்ல அவளுகுள் ஆதவன் மூழ்குவதை கண்டு என் விழி சிவக்க. அவள் மேனி சிவக்க. மீண்டும் என்னிடம் வந்தவள் என் காலை வாறிவிட்டு…
-
- 21 replies
- 7.6k views
- 1 follower
-
-
தலைவன் வழியிலே.. தலைவன் வழியிலே.. புலிகள் பாய்ந்திடும் வேளை வந்ததே தோழா... தரணியாண்டிட தமிழைக் காத்திட நேரம் வந்ததே தோழா.. நான் சொல்வதெல்லாம் நடக்கும்.. ஈழமெலாம் புலிக்கொடிகள் பறக்கும்... வெற்றிச்சேதி வீடு தேடி வருதே.. கவலை ஏனடா கைகள் இணைய வா தோழா.. அடிக்குமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமடா.. அம்மனை நகர்த்திவிட்டார்... அங்கு புத்தர்சிலை பூக்குதடா.. திருவிழாத்தேர்கள் இழுத்திட்ட வீதியில் எதிரிக் கவசங்கள் உறுமுதடா குழந்தையும் தாயும் கொஞ்சிய முற்றத்தில் முட்களின் சோலையடா..அதற்கு தமிழ்ப்பிணங்களே உரங்களடா.. ஐயனைத்தெருவில் இராணுவம் மிதித்தால் ஐரோப்பாவில் பிள்ளை ஐயையோ என்பார்.. துடிப்பவர் தலைவரடா.. துண்டிப்பார் அரக்கரின்…
-
- 21 replies
- 3.3k views
-
-
[size=5][size=4] இனம் தின்னும் ராஜபக்சே................. [/size][/size] [size=4]சொந்த நாய்களுக்குச் சொத்தெழுதி வைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நிலம் மீட்டுத் தாருங்கள் பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தை தொட்டு மனித குலம் நிற்கிறதே! மனம் இரங்கி வாருங்கள்! வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நோக்கோடு ரொட்டி ரொட்டியென்று கைநீட்டிடும் சிறுவர்க்குக் கைகொடுக்க வாருங்கள்! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்கள வெறிக…
-
- 21 replies
- 9.9k views
-
-
உச்சியில் வட்டம் ஒன்று வரைந்து நடிவில்.. வடிவாய் ஓர் கோடிழுந்தேன். பின்.. ஆங்கே கோளங்கள் இரண்டு சரியாய் பொருத்தினேன். கோடும் வளைய வளையிகள் கொண்டு சரி செய்தேன். ஈர்ப்பு மையம் மாறிப் போக பிறை ஒன்று உச்சத்தில் வைத்தேன் சமநிலை குழம்ப முக்கோணம் ஒன்று கூடச் சேர்த்தேன்..! கோடுகள் சேர்ந்து ஓவியமாக.. உயிரற்று நின்றது. கணிதத்தில் வகையீடு தொகையீடு சமன்பாடுகள் பல போட்டு திரிகோண கணிதமும் கேத்திர கணிதமும் எல்லாம் கலந்து அட்சர கணிதத்தில் ஒருபடி.. இருபடி எல்லாம் தாண்டியும்.. பயனில்லை..! அலுப்புத்தட்ட கட்டிலில் சாய்ந்தேன் நித்திரை வெளியில் கோடுகளின் எண்ணத்தில் உயிர் பெற்றது ஓவியம். வார்த்தைகள் தேடினேன் முந்திக் கொண்டு.. ஓவியம் பேசியது "உன்னவள…
-
- 21 replies
- 1.6k views
-
-
தகிக்கும் தாபங்களின் உச்சக் கட்டமாய், தளர்வதற்காய்த் தள்ளாடும்... தேகங்களின் தேடல்களுக்கு, இடுக்களில் வடிந்தோடும் - மன்மத நீரில் நீந்தியபடியே... உயிர் பிரியும் போராட்டம்!!! பதின்மங்களில் பெற்றதை பலமுறை பழகிப் பார்க்க, தவறிய சந்தர்ப்பங்களை... இப்பொழுதேனும் முறையாய் நிறைவாய் பயின்றிடத் துடிக்குது, நெஞ்சம் - கொஞ்சம்! ஆனாலும் பக்கத்தில் இல்லையே... என் மஞ்சம்!!! "இயற்கையின் தவிப்பு இயற்கைதான் ! -அப்படியானால், அதை அடக்குதல் என்பது செயற்கையோ???"
-
- 21 replies
- 4.7k views
-
-
தாங்கவியலா வெறுமைகளில் அமிழ்ந்து விழிகளில் நீர்வர நினைவுகள் கரைந்தழிகிறது... எழுதுகோலும் வெற்றுத்தாளுமாய் என் எதிரிலே... எதை எழுதுவது...? முகவரி இழந்து முகமிழந்து முற்றத்து நிழல் இழந்து ஊர் சுமந்த கனவிழந்து உள்ளே வலி சுமந்து அகதியாய் உருக்குலைந்து கிடக்கும் கதை எழுதவா..? ஒளித்து ஒளித்து - தன் இணையுடன் விளையாடும் ஒற்றைப்பனை அணிலுக்கும் விரத விருந்துண்டு களைத்து முற்றத்தில் துருத்திக்கொண்டு நிற்கும் வேம்பில் கரகரத்த குரலில் கரையும் காக்கைக்கும் கிடைத்த சுதந்திரம் என் மண்ணில் என் முற்றத்தில் எனக்கு மறுக்கப்பட்டதை எழுதவா..? என் பாடு பொருளாய் பலகாலம் இருந்த கொலுசொன்றின் ஒலிக்காக மனசெல்லாம் காத்த…
-
- 21 replies
- 2.3k views
-
-
சோழப் பெருமன்னர் சிந்தனையில் உதித்த கொடி குமரி முதல் இமயம் வரை பறந்த கொடி தமிழன் இராய்ச்சியம் இந்து முதல் பசுபிக் வரை நின்ற கதை சொன்ன கொடி.. எங்கள் பெருந்தலைவன் பிரபாகரன் தானை தாங்கி நின்ற கொடி... நம் தமிழர் உயிர் மூச்சில் அசையும் கொடி.. தமிழீழத் தேசியக் கொடி..! முள்ளிவாய்க்கால்தனில் சாட்சியங்கள் இன்றி... மண்ணோடு புதைந்திட்ட மண்ணின் புதல்வர்கள் மானம் காத்த கொடி... புலம்பெயர் மண்ணில் ஈழத்தமிழன் அடையாளம் காட்டும் கொடி...! நாம் தமிழராய் ஓரணியில்.. தமிழகம் தாங்கி நிற்கும் கொடி எங்கள் புலிக்கொடி..! இத்தனை பெருமையும் இருந்து என்ன பயன்... 1948 முதல் 2009 வரை சிங்களம் எமை வெறியாட தூண்டிய கொடியாம்... இன்று எம் …
-
- 21 replies
- 2.2k views
-
-
மே மே மே... என்ன சத்தம் அங்க.. போதும் போதும் முயலு கதை.. கேளுங்க என் சோகக் கதை..! எனக்கு மொத்தம் நாலு காலு.. மகிந்த சொன்னா மூனு காலு நானு சொன்னே நா நா நா.. அடிச்சுப்புட்டா ஆட்லறி ஆக்கிப்புட்டா மூனு காலா..! மனிசப்பயலா மகிந்த நீ.. ஆட்டுக்குட்டிக்கு அடைக்கலந் தந்தா புத்தனு.. வெள்ளை வேட்டிக் கள்ளனு நீயோ சொல்லுறா புத்தன் வழின்னு புத்தி கெட்டு..! பாரு மகிந்த பாரு காலு கூட இல்ல நானு நிக்கிற மண்ணில..! இது புலி பிறந்த மண்ணு.. சோரத்தான் முடியுமா சோகம் தான் கூடுமா எழுந்து நிக்கிற பாரு.. படையெடுத்து வரும் சிங்கத்துக்கும் வைப்ப ஒரு நாள் ஆப்பு..! மனிசப் பயலா மகிந்த நீ..! போடாத கூத்து ஆடாதே ஆட்டம்.. வைப்ப …
-
- 21 replies
- 3.2k views
-
-
கடலைக் கொத்திய பறவை- உடலிலிருந்து பிரிந்த மென்னிறகை காற்று கடலிடம் சேர்த்தது ராஜாவின் உத்தரவின் பேரில் சேவகர்கள் இறகை இழுத்து வந்து கரையில் எறிந்துவிட்டார்கள் கடுஞ் சினம்கொண்ட பறவை வேதனை மிகுதியால் கடலைக் கொத்தி விழுங்கியது தானியம் என்றுதான் அது கடலை நினைத்திருக்க வேண்டும் எச்சமாகி வெளியேறிவிடும் என்றுதான் மரக்கிளையில் ஓய்வாக அமர்ந்திருக்க வேண்டும் முதன் முதலில் பறவைக்குள் ஆழ் கடல்தான் உற்பத்தியானது அமைதியாக அமர்ந்திருந்த பறவைக்கு கண்ணி குத்தியவர்கள் அப்படித்தான் நினைத்தார்கள் திடீரென பறவைக்குள் அலை அடிக்கத் தொடங்கியது கரையை உருவாக்கிக் கொள்ளுமளவுக்கு இதயத்தில் இடவசதி இருக்கவில்லை கடல் ஸ்தம்பித்துவிட்டது தனக்குள் மிதக்கும் இறகை …
-
- 21 replies
- 2.1k views
-
-
வேலைக் களைப்பில் அவன் தேவைக் களைப்பில் அவள்... நாலு சுவருக்குள் நடத்தும் நள்ளிரவுக் கூத்துக்கு சாட்சி யாரு... வாயே பேசாத பாப்பா தங்கச்சி பாப்பா கேட்டானாம்...! அருமையான பூமிப் பந்தில் அனுதினம் நிகழும் கருக்கலைப்புக்கும் அவனே சாட்சி...! கன்னத்தில் ஒரு முத்தம் தந்து அம்மா சொல்லுறா... "அப்பாக்கு இந்த தங்கச்சி பாப்பா வேணாமாம் பிள்ளைக்கு அடுத்த முறை பெத்துத் தாறன்..!" கருவறை எல்லாம் கழிவறையாக.. இரத்தக் கட்டிகளாய் பிறக்குது உயிரற்ற கலக்கூட்டம்..! உனக்கும் ஆபத்து உயிர்க்கும் ஆபத்து இருந்தும் தொடருது உறைகளற்ற உறவுகள்..!!! தொடர்ந்தும்.. வேலைக் களைப்பில் அவன் தேவைக் களைப்பில் அவள்..!
-
- 21 replies
- 1.9k views
-
-
எங்களது வாழ்க்கையின் அவலங்களை, அதன் வலிகளை, என்னைப்பாதிக்கும் நிகழ்வுகளை, நான்வாழும் சூழலது சமகால மாற்றங்களை எழுத்துருவாக்க முனைகின்றேன். 1. இடப்பெயர்வு அவசரத்தில் அவிழ்க்காமல் விட்டு வந்த மாடு பூட்டிய கூட்டுக்குள் கோழியும் , குஞ்சும் உலையில் புட்டு வரும்போது அரையவியல் எரிந்துபோயிருக்கும் இப்போது யார் சோறுவைக்கப்போகிறார்கள் பூனைக்கும் , நாய்க்கும் வெட்டி அடுக்கியமாதிரி வேலிக்கான கதிகால்கள் வாஞ்சையுடன் வளர்த்த பயிர்கள் வாடிப்போய்விடும் பராமரிப்பில்லாமல் பாழாய்ப்போன யுத்தம் வீடுகூடப் பூட்டவில்லை வாழ்ந்தவரெல்லாம் மாண்டுவிட மிஞ்சி இருப…
-
- 21 replies
- 4.1k views
-
-
முன் சிரித்து உள்ளத்தில் ஒன்றை வைத்து உண்மையில்லா வார்த்தைகளை பேசுகின்ற மனிதர்களோ நாமெல்லாம் ஓரே இனம் ஆனால் என் குலம் தான் உயர்ந்தது நாமேல்லாம் இறைவனின் பிள்ளைகள் ஆனால் எங்கள் கடவுள் உயர்ந்தவர் அன்பென்றும் பண்பென்றும் செல்லிக்கொண்டு வேஷம் போடும் சுயநலவாதிகளோ எது உண்மை ? எது பொய்? இதைவிட எது நன்மை என்று பார்க்கும் மனிதர்களோ துன்பங்களையும் , துரோகங்களையும் அவமானங்களையும் கண்டு வாடிப்போகாதே மனமே
-
- 21 replies
- 5.3k views
-
-
பரீட்சை(பிரசவம்!) தாய்மார்கள் மாத்திரமே பிரசவ வலியுடன் பிள்ளைகள் பெறுவதாய் எவர் சொன்னார்? பள்ளியில் கற்கின்ற மாணவர் நாமுந்தான் வருடத்தில் மூன்றுமுறை மகப்பேறு அடைகின்றோம்! கற்பிணிப் பெண்களிற்கு இருக்கையைவிட்டு எழுந்தால் மட்டும் வேதனை! மாணவர்களிற்கோ இருந்தாலும் வேதனை! எழுந்தாலும் வேதனை! தைமாதம் பள்ளியில் தொடங்கும் தேனிலவு சித்திரை புது வருடத்தில் பிரசவ வலியாகி எமது உயிரைக் கொல்லும்! தொடர்ந்து தேனிலவு தொழிலாளர் தினத்துடன் தொடங்கி மூன்று மாதங்களில் எமக்கு மறுபடியும் பிரசவம்! மார்கழியில் குழந்தை யேசுவின் பிறப்பு வரும்வரை தேனிலவும் பிரசவமும் பள்ளியில் எமைச் சக்கரமாய் சுற்றிவரும்! மூன்று மாதங்களில் வருந்த…
-
- 21 replies
- 3.3k views
-
-
முதுமை இரவுகள் களைப்பின் முடிவில் அடைபட்ட பின்னாலும் காத்திருந்து கனவை துணைக்கழைத்து பதறி விழிக்க வைத்துப் பறந்து விடுகின்றது பாதி இரவுகள் திறந்த கூடைக்குள் மாலை வந்தடையும் கோழிகள் போல் இனி என்றுதான் வசப்படுமோ இந்த உறக்கம் உயிரினும் மேலான சுகதையல்லவா இந்த முதுமை எடுத்து கொள்கின்றது வேண்டியபடி செல்லும் உடல் கேளாத செவிகள் பாராத விழிகளும் உடன்வராத கால்களும் ஒலிகாணாத குரல்களும் ஒடுங்கி சுமையாகும் எனில் முதுமை சுமைதனே .
-
- 21 replies
- 3.6k views
-
-
அம்மாவாணை எனக்கொரு ஆசை அம்மாணை எனக்கொரு ஆசை ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல... ஒப்பனுக்கெண்டாலும் நிம்மதியா நித்திரை கொள்ள.. எத்தனை நாளைக்கு இங்க குளிரில கிடந்து சாக இஞ்சை ஒரு கோதாரியும் இல்லை காசைத் தவிர.! சில்லம்பல்லமாய் சிதறிப்போச்சு எங்கட வாழ்க்கை மக்கரிப்பாங்கள் எங்கட ஊருக்குள்ள வந்ததால.! கடல் தண்ணி குண்டி நனைக்க கக்காவுக்கு இருந்த சுகம் "ஏசிக்" கக்கூசுக்குள்ள ஒப்பனுக்கும் இல்லை. கரவலை மீனில ஒரு சொதியும்.. கறுத்தப்பச்சையரிசி சோறும்... கறுமொறெண்டு அப்பளப்பொரியலும்... சுட்ட பத்தாம்பட்டி கருவாடும்... உந்த "சைனீஸ்" காரண்ட "பிறைட் றைஸ்" பிச்சை வாங்கும். சாதுவா கோப்பிறேசன் கள்ளைப்போட்டு தென்னை மர நிழலில சாரத்தை…
-
- 21 replies
- 2.8k views
-
-
ஆணைப் படைத்தான்...! பெண்ணையும் படைத்தான்...!! இயற்கையை படைத்து... அவர்களை இயங்கவும் வைத்தான் !! அந்த வித்தைகாரன் பெயர்தான் - கடவுள் !!! ஆணுக்கு பெயர் வைத்தான், அது 'கணவன்' ! பெண்ணுக்கு பெயரிட்டான், அது 'மனைவி' ! இருவரையும்.... சேர்த்து வைக்க திட்டமிட்டான் அது 'திருமணம்' !! அத்தோடு விட்டானா....?!! 'காமம்' என்றும்... 'காதல்' என்றும்... எதிரும் புதிருமாய், எதையெதையோ வைத்தான் ... அதன் இடையில்!!! 'ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்' அப்படியொரு பழமொழியை... எவன் வைத்தான்... தெரியவில்லை!? தொண்ணூறு நாளின் பின்தான், பெரும்பாலும்... தொல்லைகள் ஆரம்பிக்கும்..!!! எல்லையில்லா அன்பென்றார்...!? தொல்லையில்லாமல் பிரிவோம் என்பார்...!! பிரியமாக இருந்தோரெல்…
-
- 21 replies
- 2.1k views
-
-
கொட்டட்டும் - போர் முரசு கொட்டட்டும் எட்டும் திசை யெட்டும் விடுதலை உணர்வு பொங்கட்டும்! போடட்டும் - குண்டு போடட்டும்...- பின் தமிழ் பெண்ணோடு வீரம் கண்டு - எதிரி மண்ணோடு சாயட்டும்! போடும் வரையும்- யாரும் தடையும் போடட்டும்... தமிழ் மானம் கண்டு-பின் தம் வாயை மூடட்டும் ! எட்டும் வரை எட்டி வெற்றிப் புலிக் கொடி வானை முட்டட்டும் ! இந்தத் தாயினம் செய்திடும் சத்தியம் - நாளை சரித்திரம் சொல்லிடும் தமிழீழம்! (என்று) கொட்டட்டும் - போர் முரசு கொட்டட்டும் எட்டுத் திசை யெங்கும் எதிரி சிதறி ஓடட்டும் இல்லை- சாகட்டும்! இந்தத் தாயினம் செய்திடும் சத்தியம் - நாளை சரித்திரம் சொல்லிடும் தமிழீழம் !
-
- 21 replies
- 3.6k views
-
-
கண்கள் மேய விரல்கள் தடவ வெளிச்சத்தில் இது நடக்க.. அவள் வேண்டும். பக்கம் பக்கமாய் பாகம் பாகமாய் பிரித்துப் படிக்க.. காரியம் முடிக்க சித்தி பெற அவள் வேண்டும். சிந்தனைக்கு ஓர் புத்துணர்ச்சி இரத்த நாளங்களுக்கு ஓர் கிளர்ச்சி..! அவள் சேவை தேவை வாழ்க்கை எங்கும்..! சோம்பல் போக்க படுக்கையில் கூட எனக்கு அவள் வேண்டும். இன்றேல் பைத்தியம் தான் பிடிக்கும்..! இத்தோடு சிந்தனைக்கு சிறையிடுங்கள் அவள் வேறு யாருமல்ல.. நான் படிக்கும் பாடப் புத்தகம்..! Spoiler படுத்திருந்து புத்தகம் படிப்பதே எனக்கும் பிடிக்கும். இதில் பல இலாபம் அதில் ஒன்று.. அப்படியே நித்தாக்குப் போயிடலாம்.
-
- 21 replies
- 1.4k views
-
-
ஜம்முபேபி நிலாக்காவின் பிறந்ததினத்தை மறந்து நின்ற பொழுது எதிர்பாராத நாளில் யாழில் வெண்ணிலாவின் பிறந்ததினம் என்பதை அறிந்து மறாந்துபோயிட்டேன் என ரொம்ப ரொம்ப கவலைப்பட்டு நின்ற ஜம்முபேபியை ஆறுதல் படுத்த நான் அடைந்த கஸ்டத்தை என்னவென சொல்ல முடியும்? ஜம்முபேபிக்காக என் அன்பளிப்பு கவிதை
-
- 21 replies
- 3.2k views
-
-
இவளும் இரவும்..!! விண்மினி வானை கண் சிமிட்டி தாலாட்டிட வான் மெல்ல கண்ணயர கனவில் நிலா வந்து செல்லமாக வானை அணைத்திட... இவள் மட்டும் மெழுகு விளக்கேற்றி சாரளம் வழியே வானை ரசித்தாள் தனிமையில்... நம் இரவுதான் மின்மினியின் பகலோ எவ்வளவு ஆனந்தமாக சுதந்திரமாக பறந்து இரவை அழகூட்டுகிறது என அதிசயித்தாள்.. மின்னி மின்னி ஒளிர்வதால் இவை மின்மினி ஆயினவா என் கேள்வி எழுப்பினாள்..!! விடைதெரியாது தோற்றுப்போய் கடைக்கண்ணால் நோக்கினாள் இவள் அழகை ரசித்த வானிலாவை பரந்த வானில் தவழும் வட்ட நிலாவை நினைத்து பெருமூச்சு விட்டாள் என்ன அழகு என்ன ஒளி எல்லாம் இயற்கையே என்று எண்ணியவள் நட்சத்திரங்களோடு கதைபேச எத்த…
-
- 21 replies
- 3.3k views
- 1 follower
-
-
வேட்டு வைக்காதே தமிழா வேட்டு வைக்காதே ஒருவனுக்கொருவன் வேட்டு வைக்காதே நாட்டை மீட்கப் போகையிலே நல்ல பாம்பும் நாடி வரும் கெட்ட பாம்ப்பும் தேடி வரும் நல்ல பாம்பை சேர்த்துக் கொள் கெட்ட பாம்பை விலத்திச் செல் நாதி கேட்ட நாம் இன்று நாகரிக உலகினிலே நமக்குள்ளே வேண்டாம் நம்பியார் வேலைகள் ஆயுத பலம் வேண்டாம் அழிவுகள் நமக்கு வேண்டாம் வேண்டும் எமக்கு இப்போ மனிதபலம் இதற்கு ஒப்பு உண்டா உலகில் நிகர் ஒருவன் வருவான் என்று ஒவ்வொரு நாளும் நாம் ஏங்குவதை விடுத்து எழுவோம் ஒன்றாகி ஒரு நாள் இந்த உலகிற்கேதிராக கூட்டுவோம் நம் உறவுகளை காட்டுவோம் நம் பலத்தை கொட்டுவோம் முரசைத் தமிழன் விட்டுக் கொடுக்கமாட்டான் என்றும் …
-
- 21 replies
- 2.1k views
-