Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஒரு கூதல் மாலை ............. குளிருக்குப் பயந்து ஒதுங்கிய பகலவன். இருட்டின் அரசாட்சி. பனி மூடிய மலைகள் வழிய வழி இல்லை. நாட்கள் விறைத்தபடி. காற்றில் ஈரம் இறுகி பனிப் பாதையாகி, வழுக்கி வழுக்கி தெருவில் திரிவதோ செப்படி வித்தையாய். உடைகள் பாதணிகள் பாரமாய் மனம் அதைவிட கனமாய். என்றாலும் ஓர் இதம் பனியின் உறைதலில். பனி கிழித்து சாணகம் தெளித்து கோலம் வரைய நினைக்கிறேன். நிமிடங்கள் சேமித்து ரசிக்க மறுக்கும் தெருப்பாடகனின் பாடலாய், அவரவர்க்கான அவசர அழைப்புக்களாய் அலுவல்கள். கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள். பூச்சாண்டி மனிதர்கள். பனி ரசித்து பார்வைகள் கண்ணாடி உடைக்கும் படியோடு நடை நிறுத்தும் பூனைக…

  2. முயற்சி இல்லாமல் இருப்பதும் .... வைத்திய சாலையில் கோமாவில் .... இருப்பதும் ஒன்றுதான் ..!!! *********************** முதுகில் வெறும் கையால் குத்துவதை விட .... கண்முன் கத்தியோடு நின்று ..... மிரட்டுபவன் எவ்வளவோ மேல் ...!!!

  3. வரவும் வாழ்த்தும் மலர்வும் விதிப்படி உணர்வோம் ஈழமென்போர்க்கு மலரும் நாளை எதிர்பார்க்கும் சூழலாம் தமிழர்க்கு மகிழ்வு கிட்டும் -பிரபாகரனை நெஞ்சில் நினைப்பார்க்கு நினைப்பது கைகூடும் தம்வாழ்வு சிறப்போங்க வாழ்த்தும் அவரை. தமிழர் இடர் தீர சமரும் புரிந்த தமிழர் தலைவனடி நெஞ்சே வாழ்த்து தமிழர்க்கு என்றும் தனிநாடு உண்டு தாழ்ந்தவர் மேலோர் பேதங்கள் நீங்கி சிந்தையியில் என்றும் குறிக்கோள் ஒன்றாய் முந்தையோர் நினைவில் மூழ்கிடும் உறவால் தந்தையாய் வேலுப் பிள்ளையின் கருவால் வந்தவ தரித்தார் பிரபா கரனும் ஆழ்வது கடமை அதையறிந் தவரும் பாழ்படு சிங்களம் எதிர்த்தவர் சமர்க்களம் புகுந்தவர் படைகள் முழங்கிய போரால் எதிரிகள் பலரும் எதிர்க்களம் மாண்டது …

  4. என் தேசத்து உறவுகளே நாசமாகி கொண்டிருக்கும் -ஒரு நகரத்தின் குரல் இது இப்போ பேரம் பேசப் படுவது - அங்கே உயிர்களும் உடல்களும் நாடு விட்டு நாடு வந்து கூடு இழந்தவர் நாம் -பெரும் பாடு பட்டு நாம் வளர்த்த -நல் தேசியத்தில் பிறந்தவர் நாம் காடு வெட்டி களனி ஆக்கி -நெற் சுடு அடித்து வாழ்ந்தவர் நாம் -இப்போ அநாதியற்று இப்புமியிலே அனாதைகளாகி விட்டோம் - நம் தேசம் ஒன்றின் விடிவிக்காய் பாசங்களை தொலைத்தவர் நாம் கூடு இழந்த குருவிகள் போல் - இத் தெரு கோடியிலே கதறுகிறோம் காப்பரும் ஒபாமாவும் என்ன மகிந்கவின் கைப் பொம்மைகளா...? சிங்களவன் மகிந்கனுக்கு சின்ன வீடா எங்கள் மண் அடிக்கடி அங்கு வந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு வாயிருந்தும் கண்ணிருந்தும் -…

    • 0 replies
    • 765 views
  5. புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல் முனைவர் இரா.செங்கொடி மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை மனிதகுலத்துக்கே அவமானச் சின்னமாக இன்றுவரை இருந்து வருகிறது. போரின் போது முதலாவது பாதிக்கப்படுவதும் பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்ற ஒரு கருத்து உண்டு. போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுக்க பதிவாகியுள்ளது. இதை ஹிட்லரின் நாசிப்படைகள் முதற்கொண்டு அண்மைய ஈழப்போர் வரையிலும் காணமுடியும். போர்க்க…

  6. பெண்ணின் பெருமை பேசி பெண்ணை அடிமை கொள்வார் பெண்ணைப் புகழ்ந்து பாடி பேதைமை கொள்ள வைப்பார் பொன்னே மணியே என்றும் பூவின் வாசமென்றும் பேசிப் பேசிப் பெண்ணைப் பேச்சிழக்க வைத்திடுவார் பூரணை நிலவுபோல் புகுந்தவீடு வருபவள் பத்தும் தேய்த்து தான் தேய்ந்து பழையதாய் ஆகியபின் பெண்ணா நீ என்று பேசியே கொன்றிடுவர் பாலைவனத்தின் பசுந்தளிரே போதை கொள்ள வைக்கும் பணக்கள்ளே பவளமே பென்னரங்கே பொன்மணியே போற்றி உனைத் தொழுவேன் பவளமே எனக் கூறிப் பத்திரமாய்ப் பூட்டிவைப்பார் பாவையரை வீட்டினுள்ளே பாழாய்ப் போன பெண்கள் பூட்டியது தெரியாது பெண்ணென்றால் இதுவென்று பெருமை மிகக் கொண்டிடுவார் பண்பாடு இதுவென்று பட்டிகள் போல் நடத்துவதை பெருமிதமாய் எண்ணி பொங்கும் மனதடங்க புத்தகமாய் ஆகிடுவார் பேதைப் பெண்ணே …

  7. கொடுமை கொடுமை .... காட்டுமிறான்டிகளின் உச்ச கட்ட கொடுமை .... ஈழத்தமிழிச்சிகள் தொடர்ந்து ... கொடூரமாய் கொல்லப்படும்... கொடூர கொடுமை ......!!! அந்நிய படையின் ஆதிக்கத்தில் ... கற்பிழந்த ஈழச்சிகள் .....! ஆக்கிரமிப்பு படையின் வெறியில் ... செம்மணி வெளியில் .... வேம்படி மாணவி ....!!! வெறி நாய்களிடம் அகப்பட்ட ... வெள்ளை முயல்போல் .... புங்குடுதீவில் வித்தியாவின் .... கொடூர கொலை ...!!! நான் சொல்லும் தீர்ப்பு ....!!! வெறிகொண்ட .... காட்டுமிறாண்டிகளை.... உடன் கொல்ல கூடாது .... அணுவணுவாய் அனுபவித்து .... சாகவேண்டும் .....!!! இவர்கள் பெற்றெடுத்த பெண் .... குழந்தைகளை இவர்களிடம் இருந்து ..... பாதுகாக்க வேண்டும் ....!!! இல்லாவிட்டால் பெற்ற பிள்ளைகளுக்கே .... இவர்களிடமிருந்து பாத…

  8. பொய்கையில் பூத்த பொற்தாமரை என்று பொழிவாய் கூறியவன் பொருள் தேடி வந்தவுடன் பொதியில் புதைந்தானே பொறுத்தது போதுமென்று பொம்மையாய் வாடி நிற்க பொன்னி அல்லவே நான் பொங்கல் வந்தால் பொற்காலம் பிறக்கும் என்று பொது அறிவு கொண்டவள் பொருட்படுத்தவும் தயங்க மாட்டேன் பொருத்தமான தருணம் வரும் பொறுத்தது போதுமென்று பொங்கி எழ நேரம் வரும் பொருளாதாரத்தில் நானும் உயர்ந்து பொறுப்பதிகாரியாய் இருப்பேன் உனக்கு - மீரா குகன்

    • 8 replies
    • 765 views
  9. வர்ணப் பட்டதாரி சிலந்திகள் கூடு கட்டி கரப்பொத்தான்கள் குடியிருக்கின்றன பட்டத் தொப்பியில் தூசி பிடித்துக் கிடக்கிறது பட்டச்சான்றிதழ் பிரதியெடுத்து களைத்துப்போய்க்கிடக்கிறது பெறுபேற்றுப் பத்திரங்கள் வாசிக்கப்படாதிருக்கும் சுயவிபரத்துடன் இனி சேர்த்துக்கொள்ளலாம் சுவருக்கு வர்ணம் பூசும் அனுபவத்தையும் நாட்கூலி செய்து பல்கலைக்கழகம் அனுப்பிய பிள்ளை நாட்கூலியுடன் வீடு திரும்புவதை பார்திருக்கும் வயதான தந்தைக்கு அதிகரித்தது நெஞ்சுவலி தோய்த்து அயன் செய்து மடிப்புக்குலையாமலருக்கும் மேற்சட்டையை …

    • 0 replies
    • 765 views
  10. மனசுக்கு மட்டும்... சரித்திர சுவடுதான் கல்லறை பேசும் இலங்கையின் இலக்கை..! காக்கையும் ஏற்க்கும் குயில் முட்டை மனசுக்கு மட்டும்-ஏன் முட்டுக்கட்டை...!! உத்திர மழையில் நனைந்த வீதிகள் .. உயிர்த்துடிப்பின் ஓசைகள்.. தரிசு நிலத்து உர மேடுகளாய் சவமலர்கள்!! காலம் ஓடும் வரை கடந்து வருமா யுத்தம்.. நீதியின் தலைமகளே! கருப்பு கயிறு கட்டிய விழிகள் அவிழும் வரையிலுமா?!! ஆக்கம் : - மீனலோஷினி

    • 0 replies
    • 764 views
  11. கேதா ஊருக்கு போய்விட்டு வந்தவுடனேயே “தொதல் கொண்டுவந்தியா? பருத்தித்துறை வடை கொண்டுவந்தியா?” என்று கேட்காமல், நல்ல போட்டோ எடுத்துக்கொண்டு வந்தியா? என்று தான் கேட்டேன். எல்லோர் கையிலும் இருக்கும் அதே கமரா தான், அவன் எடுக்கும் போது மட்டும் கவிதை பாடும். விண்ணைத்தாண்டி வருவாயாவில் கார்த்திக் ஜெஸ்ஸியை பார்த்து “நீ அழகா இருக்கே, நிறைய பசங்க உன்னை சுத்தி வந்திருப்பாங்களே” என்று கேட்க பதிலுக்கு அவள் “ஒருவேளை அவங்க உன் கண்ணால என்னை பாக்கலியோ என்னவோ” என்பாள். கேதாவின் கமரா கண்கள்! படம் கவிதை சொல்லுது. பதில் கவிதை சொல்ல, படலையின் அரசவைக்கவிஞரும் இன்றைக்கு பிறந்தநாளை கொண்டாடும் மன்மதகுஞ்சுவுக்கு அழைப்பு விடுத்தேன். தல ஐந்து நொடியில் கவிதை ஒன்றை துப்பினார். வைரமுத்து கூட “வெட்ட…

  12. Started by பாகன்,

    உதரத்தில் சுமந்தவள் உதிரப் பால் தந்தவள் உறங்காமல் விழித்தவள் உள்ளன்போடு வளர்த்தவள் சாதித்த போது மகிழ்ந்தவள் சோதித்த போது அழுதவள் பாதிப்பின் போது பயந்தவள் நீதி கேட்டு நிமிர்ந்தவள் கருக்கலில் ஒளியவள் சிருஷ்டியின் சிறப்பவள் உரு இழந்தும் வாழ்பவள் திரு உருவாய் நிலைப்பவள்

  13. ஆனந்த புரத்தில் எழுதப்பட்டது.. ************************************* புற நானூற்றின் புதிய பக்கம்.! ********************************** மு.வே.யோகேஸ்வரன் ************************** சுடச் சுட எழுந்தனர் புலிகள் .. சுற்றிவர நின்று .. 'படப் பட'வென்று பொழிந்தது ராணுவம்.. விழ விழ எழுந்தனர் வீரர்..! ஆனந்த புரமா அது ?..இல்லை... இலங்கை அரசின் தானென்ற அகங்காரத்தை தகர்த்த மண்! வானிறங்கி வந்து மேகங்கள் மழை பொழிவதுபோல்.. குண்டுமழை நடுவே.. புறநானூற்றின் புதிய பக்கமொன்றை பொறித்த மண்.! முன்னூறு மூர்க்கப் புலிகள் தளபதிகள்..சுற்றிவரப் 'பெட்டிகட்டி'.. விண்ணோரும் போற்றும் வீரத் தலைவனை காக்கப் போர்புரிந்து.. கருந்தீயைக் கக்கும் 'பொஸ்ப…

  14. காதல் மொழியை புரிய வைத்த அகராதியே காலை எனை எழுப்பும் காணக் கடிகாரமே மாலை எனை மயக்கும் மந்திர மகுடியே உன்னை தனிதனியாக வர்னித்தால் சக அங்கம் என் மீது வழக்கு தொரலாம் என முழுதாய் வர்னிக்க வார்தைகளை தேடினால் பாவிக்கவிஞர்கள் சகலதையும் திருடி விட்டார்கள். காப்புரிமை இல்லையாம்.அதானாலென்ன உன் மீது எனக்கும் என் மீது உனக்கும் இருக்கும் உரிமை பிரிவு இல்லாது நிலைக்கும்

  15. ____________________ இன்று விடுவிக்கப்படாதவர்கள் மற்றொரு பக்கத்தில் கம்பிகளுக்குள் நிற்கிறார்கள். அவர்களின் இடுப்பில் இருந்த குழந்தைகள் அழுகின்றன. இந்தக் குழந்தை கொண்டாடத் தொடங்கிய மகிழ்ச்சி முட்பம்பிகளில் மோதி சிதறுகிறது. தனது அம்மா அப்பபாவின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறதா என உறுதி செய்யப்பட்டு ஒலிபெருக்கியில் அறிவித்துவிட்டு குழந்தையை ஒலிபெருக்கியில் அவர்கள் புன்னகைக்க விட்டார்கள். உன்னை வரவேற்பதற்காக சொற்களை கொண்டு வந்திருக்கிறேன். கைளில் கட்டியிருந்த அடையாள இலக்கை அவிழ்த்து உன்னை வெளியில் அழைத்துச் செல்லுகிறேன். குழந்தை முகத்தைப் பொத்திக்கொண்டு புன்னகைத்துக்கொண்டிருக்கிற

  16. போருக்குப் புதல்வர்களை தந்த தாயக வானம் அழுகிறதென எழுதிவளுக்காய் கவிழ்ந்து கிடக்கிறது பூமி பாலையை கிழிக்கும் குரலில் பேரன்பு கந்தகம் படிந்த முகத்தில் அழகிய புன்னகை இரும்பு மனுசியின் கம்பீரத்தில் சீரழகு தாய்மை நிறைந்த நிகரற்ற தலைவி வீரக் கதைகளில் சீருடைகளுடன் இன்னும் உலவும் தலைவியின் மௌனத்திலும் இறுதி வார்த்தைகளில் உறைந்திருந்தது மாபெரும் நெருப்பு வாதையின் பிணியே சூழ்ச்சியாய் தன் புதல்வியை தின்றதென புலம்புகிறாள் தாயொருத்தி நெஞ்சில் மூண்ட காலத் தீயே தன் தலைவியை உருக்கியதென துடிக்கிறாள் சேனைத்தோழியொருத்தி மௌனமாகவும் சாட்சியாகவும் வாழட்டுமென நினைத்திருந்த தலைவியையும் இழந்தோம் பரந்தன் வெளியில் அலறி விழுமொரு பறவையை தேற்ற வார்த்தையற்றிருக்கிறது துயருண்ட தேசம் …

  17. பாராட்டு பாராட்டு மத்திய அரசுக்கு பாராட்டு ஜல்லிக்கட்டை பரணி எங்கும் தொரியப்படுத்திய அரசுக்கு பாராட்டு விளையாட்டு விளையாட்டு விளையாட்டை மாறிப்போனதா எங்கள் ஜல்லிக்கட்டு திமிரை கொண்டு திமில் பிடிக்கும் தமிழரின் வீரம்டா காளைகளையும் அடக்குவேம் தடையையும் உடைப்போம் விளையாட்டை மாறிப்போனது உங்களுக்கு தமிழரின் வீரத்தை மீண்டும் பதிப்போம் ஜல்லிக்கட்டுக்கு நடக்கும் இதை யார் தடுக்கும் மு.க.ஷாபி அக்தர்

  18. அனுமானங்களை சுமந்து பரவிக்கொண்டிருந்தது இருளடைந்த சொல்லொன்று. உப்புக்கரிக்கும் அதன் ஓரங்களில் உறங்கிக்கிடக்கும் விசும்பல்களை ஆதங்க பெருமூச்சுக்களை ஓரந்தள்ளி, வக்கிர நிழல்களை பூசினார்கள். பின், திசைகளை தின்று வியாபித்த கரிய நிழலில் ஒளிந்துகொண்டு, அவர்களுக்கான போதனையை ஆரம்பித்தார்கள். அது நிர்வாணத்தை துகிலுரித்தது இருளடைந்த சொல்லின் மறுபக்கம் பற்றிய கவலையேதுமின்றி கொண்டாடத்தொடங்கினார்கள் தங்களுக்குள். அவள் காற்றில் நிறைந்த வக்கிரங்களின் வெப்பத்தால் உருகத்தொடங்கினாள் கொஞ்சம் கொஞ்சமாக ..................

  19. நெல்லும் உயிரல்ல நீரும் உயிரல்ல முல்லை நிலத்தில் அலைந்து உழன்றவரை கொல்லும் எறிகணைகள் கூட்டாக வீசியவன் மன்னாதி மன்னனென மார்தட்டிக் கொள்கின்றான் எண்ணிக்கை யாருக்கு வேண்டும்? மொழியால் அமைந்த நிலம் எனச் சங்கத் தமிழோடும் செம்மொழியின் வனப்போடும் புதைகுழிக்குள் போனவர்கள் நாங்களன்றோ? குழந்தைகளின் மென்கரத்தை அரிந்து நெருப்பில் எறிந்தவனுக்குத் தாம்பூலம் தந்து தாலாட்டுப் பாடி கால்கள் வருடி தலைமயிருக்கு நிறம் தீட்டி அவன் பேழ் வயிறை வழிபட்ட அப்பாலும் அடிசார்ந்தார் இப்பாலும் இருப்போர்கள் முப்பத்து முக்கோடி படையினர்கள் எல்லோரும் பட்டழிவதன்றி வேறென்ன கேட்கும் என் கவிதை? படித்துப்பிடித்தது . ஈழத்துக் கவிஞர் சேரன்.

  20. வித்தகக் கவி நானென்று விண்டுரைக்க வரவில்லை முத்திரைக் கவி நானெழுதி மூண்டெள முயலவில்லை கொத்துக் கொத்தாய் எம்மவர்கள் செத்து விழுந்தபோதும் தத்துவங்கள் பேசியிங்கே தரித்திரராய் வாழ்ந்திடுவோம் மன்னுயிர் மண்மேல் வீழ்ந்து மடிந்திடும் நிலைதான் கண்டும் என்னுயிர் பிழைத்தல் வேண்டி ஒதுங்கிநான் நிற்கக் கண்டு முன்வாயிற் சொற்கள் சேர்ந்து முரண்டு பிடித்தெனைக் கொல்ல என்னுடல் நிமிர்ந்து நானும் ஏற்றந்தான் காண்பதெப்போ சாப்பாடு இன்றியங்கே தமிழ்ச்சாதி சாகக்கண்டும் காப்பீடு ஏதுமில்லாக் காரியங்கள் நாங்கள் செய்து ஏற்பாடு ஏதும் இன்றி ஆர்ப்பரித்தே எழுந்திடாமல் கூப்பாடு போட்டு இங்கே கும்ம…

    • 2 replies
    • 763 views
  21. அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் தாத்தாவும் பாட்டியும் இந்நேரம் முசிறியில் மூச்சோடு இருந்திருப்பார்கள்! அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் அக்கா அமெரிக்காவிலும் என் அண்ணன் கனடாவிலும் நான் இலண்டனிலும் சொகுசாகப் படித்துக் கொண்டிருப்போம்! என் அப்பாவா நீ இல்லையப்பா நீ நீ நீ எங்கள் அப்பா! எங்கள் என்பது... அக்கா அண்ணன் நான் மட்டும் இல்லை! எங்கள் என்பது... செஞ்சோலை காந்தரூபன் செல்லங்கள் மட்டும் இல்லை! எங்கள் என்பது... உலகெங்கிலும் உள்ள என் வயது நெருங்கிய என் அண்ணன்கள் என் அக்காள்கள் என் தங்கைகள் என் தம்பிகள் அனைவருக்குமானது! ஆம்...அப்பா! நீ எங்கள் அனைவருக்குமான 'ஆண் தாய்' அப்பா! அதனால்தான் சொல்கிறேன்... நான் மாணவனாக இருந…

    • 5 replies
    • 763 views
  22. காட்டை அளித்து வீட்டை கட்டியவன் காரும் சோறும் கடையில் தின்றவன் மூட்டை கட்டி முதலீடு செய்தவன் நாட்டை காக்க மறந்துவிட்டான்...... சொகுசும் பவுசும் போதுமென்று சொக்காய் போட்டு திரிந்தவன் பரம்பரை வழக்கத்தை மாற்றவே பவுடர் பூசி வாழ்கிறான்.... கோடி கோடி சேர்க்கவே குற்றம் நிறைய செய்கிறான் கணினி யுகம் மாறியும் கடமை மறந்து வாழ்கிறான் சுமைகள் கோடி இருந்துமே சுகமாய் வாழ தெரியாமல் பகைமை கொண்ட நோக்கிலே பார் உலகை மறந்துமே வேறுலகில் சென்றுமே வேண்டிய வசதி பெற்றுமே நாசம் கொண்ட ஆசையால் நாடும் வீடும் மறந்துமே நன்மையெல்லா தொலைத்துமே பாதி உயிர் போகவே மீதி உயிர் மண்ணிலே சேரும்போது சொர்க்கமே... இனியாவது திருந்திட இமயம் வென்று காட்டடா! ஹிஷாலீ http://w…

  23. அண்டம் சதிராட பிண்டமாய் நான் பிண்டத்தில் குடியிருந்து பிண்டமும் பிண்டத்தைச் சுமக்க நீரினுள் குடியிருந்தேன் நான். முக்கிலும், வாயிலும் நிணமும் நீரும் சூழ்ந்துருக்க நாபியில் சுவாசித்துப் பிண்டமாய் நான், தவிக்கின்ற பிண்டமாய் நான் கையும் காலும் சுருட்டிக் கொள்ள அசைய முடியா சூழலில் அசைந்தாடும் பிண்டமாய் நான் ஓசையின்று அழும் பிண்டமாய் நான் தவிர்ப்பு ஏறி. இடம் போதாமல் கை,கால் அசைத்து உதைத்து எழும்பிப் பிண்டமாய் சுழன்று உதைத்து உதைத்து பிண்டம் வெளி வர பனிக்குடம் உடைத்து வெளிவர பிண்டத்தில் இருந்து உயிர்ப்பு நிலை எய்திப் பிண்டமாய் நான், எடுத்துக் கொஞ்சிய கைகளில் குழந்தையாய் நான். நான் வளர்ந்து,வாழ்ந்து நரை,திரை எய்தி மரணி…

    • 2 replies
    • 762 views
  24. http://www.youtube.com/watch?v=encZArh2wrY&NR=1 வாழ்க்கை இருளுக்குள் அடங்கி பரிதவித்து மடிகின்றது எங்கள் அவலக்குரல்கள் உலக ஜனநாயகத்துள் அமைதியாகின்றது வல்லவர்கள் வெல்வார்கள் என்பது இயல்பாகின்றது மனிதாபிமானம் வேடிக்கை பார்க்கின்றது வல்லரசுகளின் போட்டி இயந்திரத்தால் நாம் விழுங்கப்பட்டோம் இயந்திரத்தின் செமித்த கழிவுகளாய் எஞ்சி நிற்கின்றோம் கழிவுகளையும் மீள இரையாக்கும் புதிய உலக ஒழுங்கின் முன்னால் மண்டியிட்டு மெளனித்து நிற்கின்றோம் என்னை சாதி சொல்லி உதைத்த கால்களை இறுக்கப்பற்றிக்கொள்கின்றே

  25. Started by kayshan,

    மறந்தும் வலிக்கும் நினைவு மறைந்தும் தெரியும் தழும்பு அணைந்தும் எரியும் அகல் காய்ந்தும் தளிர்க்கும் காம்பு ஓய்ந்தும் வீசும் காற்று உறைந்தும் மீளும் உணர்வு அடங்கியும் எழும் ஆன்மா இறந்தும் வாழும் உயிர் எரியும் அகலில் வலிகள் விலக தளிர்க்கும் காம்பால் தழும்பு மறைய வீசும் காற்று உணர்வை மீட்க எழும்பும் ஆன்மா வாழும் இனி....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.