கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
பணத்துக்காக .... திருமணம் செய்தேன்.... என்னை விட பணத்தை .... வட்டிக்கு கொடுப்பவன்..... சந்தோசமாய் ..... இருக்கிறான் .....!!! திருமணத்தை ...... மணவாழ்கையாக ..... செய்யாமல் .... பணவாழ்கையாய் ....... செய்தால் வாழ்க்கையும் .... சந்தை பொருள்தான் ....!!! ^ நினைத்து பார்த்தால் வலிக்கிறது கவிப்புயல் இனியவன்
-
- 1 reply
- 747 views
-
-
புத்தாண்டே நீ புதிதாய் வருகின்றாய் அத்தனை பேரும் ஆவலுடன் உனக்காய் அகமகிழ்ந்து எங்கும் காத்திருக்க எத்துனையும் அலுக்காது எப்படி நீயும் எழில் பொங்க வருகின்றாய் சாதிமத பேதமின்றி சண்டைகள் ஏதுமின்றி சமத்துவத்தோடு நீயும் சரிநிகராக சகலருக்குமாக எப்படி வருகின்றாய் புத்தாண்டிலாவது புதுவழி பிறக்குமென நம்பிக்கை கொண்டோரின் கனவை நனவாக்க நாடுகள் தோறும் நீ நளினத்துடன் வருகின்றாய் எத்துன்பம் வந்தாலும் அத்தனையும் களைய ஆவலுடன் உன்னை அத்தனை பேர் பார்த்திருக்க ஏற்றமுடன் நீயும் எப்படியோ வருகின்றாய் ஆனாலும் நாமும்தான் ஆசையுடன் உன்னை ஆண்டாண்டாய்ப் பார்த்திருந்தோம் ஆறுதல் தேடி ஊரூராய் அலைந்திட்டோம் ஆழக்கடல் கடந்து அகதியாய் அலைந்திட்டோம் ஊரெல்லாம் கூடி ஒப்பாரி வைத்த…
-
- 10 replies
- 746 views
-
-
ஈழப் போரில் ஆயுதப் படையலுடன் இந்தியம் தன் சிங்கள விவாசம் தலைக்கேற செய்து முடித்தது வன்னியில் ஓர் இன அழிப்பு முள்ளிவாய்க்கால் பேரவலம்..! முரசொலியில் கடன்வாங்கி எழுதித் தள்ளிய காகிதத்தாள்கள் போக.. பிரணாப் முகர்ஜி தந்த மந்திர ஆலோசனையில் முதுகு வலி பிறக்க.. மூன்று மணி நேர உண்ணா நோன்போடு ஈழம் காத்த கடமை செய்தது திராவிடம்..!! அங்கோ... ஈழமதில் ஆயிரம் ஆயிரமாய் அப்பாவிகள் உயிர் புதைகுழி ஏகின சிங்களப் பகைவர்களால்..! இன்றோ... ரெசோ ராசா என்ற விளம்பரங்கள்.. அண்ணலின் பெயர் வளர்க்க அண்ணலோ மீண்டும் அண்ணாவின் பெயரால் அடிக்கிறார் ஒரு குட்டிக்கரணம்... "பிரணாப் முகர்ஜிகே என் ஆதரவு" போடுகிறார் முழக்கம்..! …
-
- 2 replies
- 746 views
-
-
மறப்போமா மன்னிப்போமா நாம்....? பின் வாங்கினால் இன்று போய் நாளைவா என்ற பெருமையுடைய தேசத்திடம் பின் வாங்கினோம் கலைத்து கலைத்து தொலைத்ததென்ன நியாயம்... மறப்போமா மன்னிப்போமா நாம்....? உண்ணாவிரதமிருந்தால் உயிர் போகும் என்று கருணை காட்டும் தேசம் உயிரோடு கொழுத்தி முடி என உண்ணா நோன்பு இருந்ததை... மறப்போமா மன்னிப்போமா நாம்....? ஒரு ஊர் திரண்டாலே ஊசலாடும் உலகத்திடம் ஊர் ஊராய் ஊர்வலம் நடாத்தி உலகையே உலுக்கியும் எம் உறவுகளை உயிரோடு கொழுத்த சம்மதித்த உலகை... மறப்போமா மன்னிப்போமா நாம்....? மிருகவதை என்றாலே மினக்கட்டு சபை கூட்டி தடுத்திடும் உலகிடம் சதையும் பிணமுமாய் தமிழர் என்ற மனிதர் என்று சடுதியுடன் விபரித்தும் தடுக்காத உல…
-
- 1 reply
- 746 views
-
-
தீபமே எங்கள் திலீபமே! தமிழீழ விடியலென்ற தீராத பசியோடு தண்ணீரும் அருந்தாது தியாக வேள்வியிலே தீபமாய் எரியும் திலீபமே யாரடா உள்ளனர் உந்தன் உணர்வையும் தமிழீழ உயிரொன்றையும் மறக்கடிக்கச் செய்வதற்கு யாரடா உள்ளனர்! நிலம் மீட்கும் துணிவோடு மண்ணின் மக்களின்று அகிம்சைப் போர் தொடுத்து ஆங்காங்கே நகர்கின்றார்! வேதியலுக்கும் புரியாத வேங்கையரின் வீரத்தை வீறுடனே பதியமிட்ட அகிம்சையின் வேந்தனே காந்தியைத் தலைகுனிய வைத்த கிந்தியத்தின் முகத்திரையைக் கிழித்தெறிந்து முரசறைந்தாய் திலீபமே! பெரும் புயலாக மேலெழுந்து திலீபமாய் மூட்டிய தீயின்று அணைந்து விட்டதாய் யார் யாரோ சொல்கின்றார் சிங்கத்தின் கால் கழுவி யானையின் கை தடவி அரசியல் பிழைப்புக்காய் அலைகிறது ஒரு கூட்டம் அ…
-
- 1 reply
- 746 views
-
-
-
- 0 replies
- 746 views
-
-
பிரேமினி அமீரசிங்க எழுதிய ஒரு சிங்களக் கவிதையின் தமிழாக்கம் இது துவேஷம் தனது முகத்தைக்காட்டி பல்லிளித்ததில்லை பாடசாலை நாட்கள் இரட்டைச்சடைகள் பறக்க நான் மலைகளின்மேல் ஷாரினா, நெலியா, லட்சுமியுடன் மிதந்தேன் பள்ளியின் பின்னால் நீளும் இந்நெடும்பாதை எப்போதும் விரைவில் முடிந்துவிடுகின்றது ஷாரினா இவ்வுலகில் எதற்கும் கவலைப்பட்டதில்லை அவளது தந்தைக்கொரு சொந்தக்கடையிருந்தது திருமணஞ்செய்வதே அவளது ஒரேயொரு விருப்பாயிருந்தது அதைவிட வேறொன்றுமில்லை நெலியா அவளது ஐரிஷ் தந்தையை அறிந்தவளில்லை அடர்த்தியான கறுப்புக்கற்றைகள், மாதுளம்பழமான கன்னங்கள் எல்லாப் பெடியங்களும் விரும்பக்கூடிய அழகானவளாயிருந்தாள் லட்சுமி நானிதுவரை பார்த்திராத தடித்த கண்ண…
-
- 3 replies
- 745 views
-
-
சப்த ரிஷிகளை ஏற்றிச் செல்ல ஒரு சிறு படகு பாற்கடலில் வரும் வரும் என்று சொன்னதெல்லாம் பொய். அதிசயங்கள் அற்புதங்களுக்காக காத்திருந்த காலமெல்லாம் வீண். கண்ணியமில்லாத யுத்தம் தலைப்பிள்ளைகளைக் கேட்டது. மரணம் பதுங்குகுழியின் படிக்கட்டில் ஒரு கடன்காரனைப்போல காத்திருந்தது பராக்கிரமசாலிகளின் புஜங்கள் குற்றவுணர்ச்சியால் இளைத்துப்போயின கள்ளத் தீர்க்க தரிசிகளும் கலையாடிகளும் ஏற்கனவே சரணடைந்து விட்டார்கள் நன்றியுள்ள ஜனங்களோ பீரங்கித் தீனிகளாய் ஆனார்கள். ரத்தத்தால் சிந்திப்பவர்கள் மட்டும் சரணடையாதே தனித்து நின்றார்கள். ஓரழகிய வீரயுகம் அதன் புதிரான வீரத்தோடும் நிகரற்ற தியாகத்தோடும் கடற்கரைச் சேற்றில் புதைந்து மறைந்தத…
-
- 2 replies
- 745 views
-
-
உயிரே நீ என்னை விட்டு சென்ற பின்பு நாம் இருவரும் பேசிக் கொண்டதை நினைத்து இரவில் போர்வைக்குள் அழுகிறேன் வேறு என்ன நான் செய்ய முடியும் உன்னை நோக அடிக்கவா முடியும் உன் இதயம் நொந்தால் என் இதயத்துக்குதானே வலி என் என்றால் உன் இதயம் என்னுடையது அல்லவா?
-
- 0 replies
- 745 views
-
-
இனியவளே .... உன்னை நினைக்காவிட்டால் ... இதயம் இருந்து பயனில்லை ... உன்னை பார்க்கா விட்டால் ... கண் இருந்தும் பயனில்லை .... நீ என்னவள் என்று தான் ... அனைத்தையும் இழந்து ... வருகிறேன் .....!!! + என்னவளே என் காதல் பூக்கள் கவிதை பூ - 01
-
- 2 replies
- 744 views
-
-
விரல் இடுக்கில் வீழ்ந்து கிடக்கிறது உயிரும் உலகமும் .. கடைசித் துளியினை இரசித்து விட்டு இறந்து போகலாம் நா . தேடுகிறது ... பொங்கி வழியும் சம்பெயின் விம்மி நிக்கும் நீ ..
-
- 5 replies
- 744 views
-
-
மொழியென்று ஒன்றாய் திரண்டாலே...! ------------------------------------ தமிழரின் உடல்கள் அடுக்கப்பட்டன நிலத்தின் இருப்பைத் தக்க வைக்க ஒற்றுமை மணி சிதறியதால் ஒற்றர்களாகப் பலர் நுளைந்தார் சத்தியம் காப்பதே உறுதியென சளைக்காது உடல்களால் எல்லையிட்டார் சத்தியம் வெல்வது உறுதியெனச் சண்டாளர் கணித்தார் கவனமுடன் பட்டினியாலும் மடியவில்லை பரிசுகளாலும் வீழவில்லை உறவாடி வீழ்த்துதல் நல்லதென உலகெங்குமிருந்து உள்நுளைந்தே அரசொன்றை வீழ்திய மகிழ்வினிலே நரந்தின்னும் நாடுகளானதன்றோ நாடுகள் வாழ நாம் சாகும் சூனியமான சூழலன்றோ சூனியமான சூழலை நாம் எம் சாதுரியத்தால் மாற்றிடவே மதமென்று நின்றால் தோல்விகளே மொழியென்று ஒன்றாய் திரண்டாலே உலகெங்கள் உரிமைக்கு வழிவிட…
-
- 8 replies
- 744 views
-
-
அன்று அடைமழைகாலத்தில் அழுதகண்ணீர் ஆழக் குழியில் விதைத்த விதைகளை நனைத்து உயிர்ப்பித்தது. இன்று விதைத்த விதைகளை தோண்டி எடுத்து வித்தை காட்டும் காலம் தோப்பாக வேண்டிய விதைகளை முளைக்கக்கூட விடுவதில்லை அறுபடைக்காக அன்றி அடையாளத்திற்காக விதைத்த வயலுக்குள் மீண்டும் நூறுவகைத் தானியத்தை விதைக்கின்றார்கள் எதுவும் முளைக்கவும் வளரவும் முடியாமல் செத்துப்போகின்றது தன்னை விட பெரிய சாணி உருண்டைகளை தள்ளிக்கொண்டுபோன வண்டுகள் தந்த நம்பிக்கையை கூட எதுவும் தருவதில்லை மாமரத்தடியில் ஈன்ற கன்றின் துவாலைகளை நக்கும் தாய்ப்பசு போதித்த பரிவுபோல் எதையும் எங்கும் உணர்வதில்லை கோடிக்குள் இருந்த கோழிக்கூட்டில் கக்காவுக்கு கூட போகாமல் அடைகாத்த…
-
- 1 reply
- 744 views
-
-
------------------------------------------------------------------ எல்லா அறிவிப்புகளும் முடிந்துவிட்டன. செய்திகளும் புகைப்படங்களும் எல்லோரையும் நம்பவைத்து சென்றுவிட்டன. அதே முட்கம்பிகளுக்குள் அம்மாவின் முகம் சுருங்கிக்கிடக்கிறது. தங்கையின் கூந்தல் வளராமலிருக்கிறது. எங்களுக்கிடையில் அதே முட்கம்பிச் சுருள்கள் அம்மாவின் அருந்திக்கொண்டு வந்த புன்னகையை காயப்படுத்திக்கொண்டிருக்கிறது. தங்கையின் கையிலிருக்கிற புத்தகத்தை கிழித்துக்கொண்டிருக்கிறது. எனக்காக அம்மா பிட்டினைச் சுமந்து வந்தாள். காத்திருப்பின் எல்லைகளை வீடு செல்லுகிற கனவினை நகரத்திற்கு மீள்கிற நம்பிக்கையை அம்மா முட்கம்பிகளில் சொருகியிருக்கிறாள். நுளம்புகள் கூடாரத்தை தூக்கிச் செல்லும்…
-
- 0 replies
- 743 views
-
-
அதிகம் யாரையும் வெறுக்காதீர்கள் அது எதிரிகளை அதிகம் உருவாக்கிவிடும் யாரையும் அதிகம் நேசிக்காதீர்கள் அது ஏமாற்றத்தை கொடுத்துவிடும்...
-
- 0 replies
- 743 views
-
-
ஈனப் பிறவிகளின் இழிசெயலைத் தாங்காமல் ஈழம் துறந்தெங்கோ இருக்கை அமைத்தவரே வேசப் பிறவிகளின் வெங்கொடுமை தாங்காமல் வேரை விட்டேங்கோ விழுதாய்ப் படர்ந்தவரே எங்கே சென்றாலும் எவ்விடத்தில் தரித்தாலும் எமக்காக நீரிருப்பீர் எப்போதும் நினைத்திருப்பீர் என்று நினைத்தோமே எண்ணிக் களித்தோமே எல்லாமே பொய்யாச்சே எம்நினைப்பும் மண்ணாச்சே உக்ரேய்ன் எல்லையிலே உருக்குலைந்து போனவர்க்காய் உருக்கத்தை பிழிகின்றீர் உரிமையுடன் கொதிக்கின்றீர் காசா மண்ணினிலே கண்மூடிப் போனவர்க்காய் கவலை கொள்கின்றீர் கண்ணீரை விடுகின்றீர் புலத்து மண்ணினிலே எம்தமிழர் சேர்ந்தாலும் புற்றீசல் போல்கிடக்கும் பத்திரிகை மேய்ந்தாலும் முகநூலில் நீர்பதியும் பதிவுகளைப் பார்த்தாலும் முகமனுக்காய்க் என்றாலும் எங்களுக…
-
- 3 replies
- 743 views
-
-
[size=4]இறைக்க இறைக்க கிணற்றில் மட்டுமல்ல கண்களிலும் நீர் வற்றிப்போயிற்று துயரப்பெருங்கடலில் அலைகளாய் உடல்களற்ற தலைகள் எழுந்தன உறைந்த குருதியை மாலையாக்கிய போலிச் சிங்கத்தின் பிடரி மயிர் சிலிர்த்தது எப்படி? நவீன உலகம் புலியை கொல்ல காட்டை எரித்தது அதனால் அனைத்தும் எரிந்தது போலிச் சிங்கத்தின் பிடரி மயிரும் சிலிர்த்தது [/size]
-
- 4 replies
- 743 views
-
-
அண்ணனின் அருகமரும் அதிகாரம் உடையவரே சிங்களத்தை சிதறடித்த சூறாவளியே சுற்றும் பூமிக்கும் சுழலும் காற்றுக்கும் பேசக்கற்றுக்கெடுத்த ஆசானே பார் முழுதும் புலிக்கொடி பறக்க தேசமெங்கும் தமிழர் குரல் ஒலிக்க தண்ணீரில் வந்து தாயகம் தொட்ட தனையனே என் களதில் சிங்களம் எம் குரல்வளை நசுக்கி சூதுரைத்து நிண்றபோது உன்மைய்காய் ஒலித்தகுரலே பாலா அண்ணா திரைகடலோடியும் தமிழீழம் காண்போம் எண்றுரைத்த தமிழே கொடிய நோய் வந்து தேகத்தை வாட்டினாலும் வேகத்தைக்குறைக்காமல் கொடிது கொடிது மண்டியிடும் தமிழன் வாழ்வெண்ற வரிப்புலியே வெள்ளைத்தலைகளுக்குள் சரியாசனம் பெற்ற தளபதியே பாலா அண்ணா வஞ்சகரெல்லாம் வாழ்வாங்கு வாழ ஆழப்பிறந்த அண்ணன் தளபதியே கொடிய புற்றுநோயுங்களை காவு கொள்வதா …
-
- 0 replies
- 743 views
-
-
செயற்படுவோம்! -------------------------- கதைத்தோம் ஓடினோம் ஏறினோம் போனோம் கூடினோம் குரல்கொடுத்தோம் கலைந்தோம் ஆனாலும் ஓயோம் தமிழீக் கொடியதனை ஐநாவில் ஏற்றும்வரை ஓயோம்! ஓயோம்! என்றே நாம் உறுதிகொண்டே செயற்படுவோம்!
-
- 3 replies
- 743 views
-
-
கார்த்திகை நாயகர்கள் உடலைத் திரியாக்கி உதிரத்தை நெய்யாக்கி உயிரை ஒளியாக்கிய உத்தமரே – எம் உணர்வுக்கு வித்தாகி – தமிழ் உலகுக்கு சொத்தாகி தமிழீழ விடிவுக்கு விளக்காகிய வித்தகரே! தீபத்தின் சுடரிலே உங்கள் தியாகம கண்டோம்- அது சுடர் விடும் நிறங்களிலே உங்கள்; முகம் கண்டோம் காத்திகை மலர்களிலே உங்கள் கனவு கண்டோம் - அதைக் கையினில் எடுக்கையிலே உங்கள் அழகு கண்டோம் கார்த்திகை மாதத்தின் நாயகராய் நீங்கள் காட்சியளிக்கும் காலம் இது கைகூப்பி நாங்கள் வணங்குகிறோம். காவல் தெய்வங்களாய் போற்றுகிறோம். செண்பகன் 21.11.2013
-
- 3 replies
- 743 views
-
-
தமிழீழ விடுதலை முடியாட்சி அதிகாரதில் முடங்கிய நான் குடியாட்சிக் காலத்தில் குதுகலமடைந்தேன் ஆதிக்க வெறியர் அதிகாரம் ஓங்க ஆளுமையிழந்து அவதிப்பட்டேன். நாடுகள் தோறும் புரட்சிகள் ஓங்க நானும் அங்கே மறுபிறவி எடுத்தேன் விடுதலை என்று நாமம் சூட்டி விருப்புடன் என்னை வளர்த்தனர் மக்கள். இலங்கைக்கு வந்த அன்னியர் பிடிக்க இழுபட்டுத் தவித்தேன் பல காலம் இனத்துவேசிகளிடம் அவர் விட்டுச் செல்ல இன்னல்கள் பட்டேன் சில காலம் சுயநலம் கார்த்து அரசியல் பேசியோர் சுதந்திரமென்று கோசமிட்டார்கள் தமிழீழம் என்று பெயரை வைத்து தரணியிலே அவர்தம் புகழ் சேர்த்தார்கள். உணர்வுள்ள தொண்டர்கள் ஒருசிலர் சேர்ந்து உணர்ச்சியுடன் என்னைத் தத்தெடுத்தார்கள் தமிழரின் விடுதலை தமிழீழமென்று சாத்வீக வழியில…
-
- 3 replies
- 743 views
-
-
ஆசையாய்ப் பெயரிட்டு மெல்ல நடை பழக வைத்து சிந்திய சோற்றுப் பருக்கைகளை சிரித்தவாறு சாப்பிட்டு " **கா " வை மிதிக்காதே என்று அதைக் கையினால் எடுத்ததுவும் பல முறை தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு நெஞ்சின் மேல் தாலாட்டியதவும் பள்ளியில் சேர்ப்பதற்கு பல மணிநேரம் வரிசையில் நின்றதுவும் மானத்தை விற்றுக் கடன் வாங்கி் இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்ததுவும் தினமும் துடைத்து அதற்கு பெட்ரோல் வாங்கக் காசு கொடுத்ததுவும் இருந்த நிலத்தை விற்றுக் கல்லூரிக்கு அனுப்பியதுவும் கண் பார்வை மங்கிய பின்னும் அதிகாலை எழுந்து பால் வாங்கி வந்ததுவும் இல்லாத பரிட்சைக்குப் பணம் கொடுத்ததுவும் வேலைக்கு சேர்வதற்காக உயிராய்க் கலந்திட்ட வீட்டை விற்ற…
-
- 0 replies
- 743 views
-
-
பிஞ்சுப் பருவத்தில் பாலுக்காய்க் காத்திருந்தேன் பள்ளி நாட்களில் விடுமுறைக்காய்க் காத்திருந்தேன் கொட்டும் மழையிலே வெயிலுக்காய் காத்திருந்தேன் கொளுத்தும் வெயிலிலே வான்மழைக்காய்க் காத்திருந்தேன் கல்லூரிக் காலத்தில் காதலிக்காய்க் காத்திருந்தேன் கடமைகள் வந்ததும் காசுக்காய்க் காத்திருந்தேன் காத்திருப்பே வாழ்க்கையாய் காலமெல்லாம் தொடர்கையில் காத்திருப்பற்ற வாழ்க்கையொன்றைக் கண்டறியக் காத்திருக்கிறேன் http://gkanthan.wordpress.com/index/waiting/
-
- 1 reply
- 742 views
-
-
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஒளியின் நர்த்தனம்! மின்னொளியே! என்னரும் ஒளியே! உள்ளத்துக் கினிய ஒளியே! விழிகள் முத்தமிடும் ஒளியே! உலகை மூழ்க்கிடும் ஒளியே! என் கண்மணியே! நர்த்தனம் ஆடும் ஒளிக்கதிர்கள், வாழ்வின் வாலிபக் காலத்தில்! மோதி மீட்டும் ஒளிச் சிதறல், காதல் வீணையின் நாண்களை! மின்னலிடி திறக்கும் விண்ணை! மீறிக் கொண்டு ஏறி அடிக்கும் காற்று! என் கண்மணியே! வானத்தின் மின்னல் வெடிச்சிரிப்பு ஞாலத்துக்கும் அப்பால் தாவிச் செல்லும்! தமது பாய்மரத்தை விரித்துப் பட்டுப் பூச்சிகள் படகாய் மிதந்தேகும் ஒளிக் கடல் மீது! அல்லி மலர்களும், மல்லிகைப் பூக்களும் ஒளியலைகளின் சிகரத்தில்…
-
- 0 replies
- 742 views
-
-
என்ட வாழ்க்கையில நான் கன தடவை திரும்பத் திரும்பக் கேட்ட ஊர்ப் பாட்டு இதுதான் (இயக்கப் பாடல் தவிர்த்து).... மயங்கீட்டென் இசையில.
-
- 3 replies
- 742 views
- 1 follower
-