Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சித்திரையில் கதிரோன் சிரித்திடுவான் நாளும் என எண் திசையும் விழி வைத்து எதிர் நோக்கிக் காத்திருந்தால் பெண்ணவள் நாளும் விழி உடைத்து பெய்திடும் கண்ணீர் போல் மூக்கை சிந்தி வான மகள் முகம் கறுத்துக் கிடக்கிறாள் புவி பூப்பெய்தும் காலமதில் - பனி பூத்து சொரியுது இங்கு காலம் தப்பி காலம் மாறி காலாகாலமா இருந்த கால நிலை மாறுவது காலத்தின் கோலமன்றோ... #ஈழத்துப்பித்தன் 26.04.2016

    • 3 replies
    • 742 views
  2. ஒரு ஈராக்கியனின் சப்பாத்து அடே ஜோர்ஜ் புஷ் கண்ணீரால் எம்மக்களின் வேள்வி அதனால் கேட்கிறேன் ஒரு கேள்வி எதற்காக எம்மீது படை எடுத்தாய் எண்ணற்ற உயிர்களைப் பலி எடுத்தாய் எண்ணெய் மேல் நீ கொண்ட பித்தத்தினால் தண்ணி போல் இரத்தத்தை ஓடவிட்டாய் பேரழிவு ஆயுதங்கள் எம்மிடம் இருக்குதென்றாய் பேரழிவுகளை எம்மிடம் ஏற்படுத்தினாய் இலட்சியம் நிறைவேறியதென முன்னர் முழங்கினாய் அதை ஏமாற்றமெனப் பின்னர் கலங்கினாய் சதாமைப் பின்னர் அழித்தவனும் நீதான் அவனை முதலில் வளர்த்தவனும் நீதான் நீ வருமுன் எம்நாடு நாசமயிருந்தது நீ வந்தபின் இன்னமும் மோசமாயிருக்கிறது இன்று என் கையில் சப்பாத்து முடிந்தால் உன் தலையைக் காப்பாத்து http…

  3. எட்டு ஆண்டானாலும் அவலம் மாறாத நிலை வேண்டும் என்று செய்து வேடிக்கை பார்த்தாயோ கடலம்மா தாய் என்று மதித்தோர்க்கு தயவற்ற செயல் செய்தாய் பேயாக நீமாறி பெருந்துயர் இளைத்தாயே கடல் அம்மா என்று வாயார வாழ்த்திய மக்களை வசைபாட வைத்தாயே உன் நியாயமற்ற செயலால் நடுத்தெருவில் எத்தனை பேர் நாதியற்று தனிமரமாய் சிறியோரும் பெரியோரும் சின்ன பச்சிளம் சிறாரும் சிதறி எத்தனை பேர் போனவர்கள் வருவார்கள் என பொய்த்த வரவுக்காய் வழியை வழிபார்த்தபடி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட ஆழாத் துயருடன் இன்றும் எத்தனை உள்ளங்கள் நன்றி : முகநூல்

  4. எப்போது விடுதலை எம் கைகள் எப்பொழுது அவிழ்க்கப்படும்? நினைத்ததை எழுதவும் எழுதியதை மீண்டும் நாம் படிக்கவும் காலம் வருமா? என்ன பிழை செய்தோம் ஏனிந்த காலவரையறையற்ற தண்டனை கொச்சைப்படுத்தியோரை பேனா கொண்டு தாக்கினோம் இது தப்பா? நாலு பேர் சிரிக்க மஞ்சல் தடவினோம் நாலு பேர் இன்பம் பெற நீலம் தடவினோம் இது பெரும் தவறா? மாதங்கள் வந்தன வருடங்களும் வந்தன 16 வயசுக்கொண்டாட்டமும் வந்தது விடுதலையை எதிர்பார்த்தோம் அப்படியே எமது கோரிக்கை நிராகதியாய்க்கிடக்கிறது நம்வீட்டுக்கதவை தட்டும்வரை தூங்கிப்பழகிவிட்ட இனம் இங்கும் அப்படியே தொடர்கிறது........... இன்னும் இரு சொற்கள் எழுதினால் மரண தண்டனை கைகள் கட்டப்பட்டு வார்த்தைக்கு வார்த்த…

  5. கொத்துக்கொத்தாய் கொன்றொழித்தாயே... கொடுமைப்பசியில் வாட்டி வதைத்தாயே... முட்ட ஏதும் இன்றி முனுகவில்லை நாம்... முக்காளமிடுகின்றோம் கேட்கவில்லையா? வெட்டி எம்மைச் சாய்க்கும்போதும் வேலைப்பழுவிலா நீ இருகின்றாய்... சட்டங்களெல்லாம் செத்த போதிலும் சட்டைகள் மாட்டி ஏன் இருக்கின்றாய்?... ஐ.நா வே... உன் நாவை நம்பினோம்... நீயும் காறித்துப்புவாய் என்று எண்ணவே இல்லை நாம்... காத்திருக்கின்றோம்... மீண்டும் வருவாய்... எம் உறவுகளின் உயிரதனை காப்பாய் என்று... இனியும் வரத்தாமதித்தால்... எம்மை அல்ல எம் எலும்புகளை மட்டும் எடுத்துச்செல்... படிந்திருக்கும் படிமங்களை எடுத்துச்செல்... வாழும்போதே மடிந்த, மடியும்போதே படிமங்களான எம் வரலாற்றுச் சுவடுகளை எடுத்…

  6. Started by அபராஜிதன்,

    தந்தை ஒவ்வொரு தந்தைக்கும் சமர்ப்பணம் ஈரைந்து மாதங்கள் எனை சுமந்த அன்னைக்கு பின் இது வரைக்கும் என் வாழ்வை தோள் சுமந்த தோழன் என்னை கருவாக்க சில நேரம் இன்பம் கண்டார் .. என்னை உருவாக்க இன்று வரை எல்லாம் துறந்தார் இரவெல்லாம் கண்ணீர் இதழ் எல்லாம் உமிழ் நீர் அன்று மாடியில் தூங்கும் போது நிலவை ரசிதேன் _ அவர் மடியிலே தூங்கிய பின் நிலவை மறந்தேன் நான் கண்மூடி படுக்கும் வரை தூக்கம் இழந்தார் _ நான் கால் எடுத்து நடக்கும் வரை தோளில் சுமந்தார் மாலையில் கைபிடித்து மலையோரம் நட ப்போம் அவர் கை பிடித்து போனது வெறும் பாதை அல்ல நான் கால் வைத்த முதல் பள்ளிக்கூடம் அதுவே நிலவிலே மனிதன் போன கதைகள் சொன்…

  7. ''அச்சத்தில் நடுங்கும் சிங்களம்.....'' பகை ஏற்றியே வந்தது பேருந்து.... இன்று போனது வெடி குண்டில் அது சிதைந்து.... கூடியே வந்தது பகை நூறு... இன்று போனது குருதியில் அவை நூறு... காவியே வந்த கனரகங்கள் கொடுத்தது காவு அவை நூறு.... துகழ்களாய் பகை உடல் அவை நூறு.... தூரவே விழுந்தின்று அவை நாறு.... காகங்கள் கழுககுள் அணி வகுத்து கொத்தியே உண்ணுது அதை பாரு..... இனம் காண முடியா இவர் வேறு.... போனார் இன்றங்கு தடுமாறி.... அட அடிக்குது பிணமது அது வாடை.... இவர் கூடவே துப்புறார் அதில் காறி... தன் படை மீதினில் தான் காறி... துப்புர நிலையாச்சு இன…

  8. நாம் தான் தமிழ் மக்களின் அரசியல் வாரிசுகள்! தொடக்கி வைத்தவர் கொள்கை மறந்தார் இடையிலே கைவிட்டு எதிரிதம் வால் பிடித்தார் பயங்கரமாய் சட்டங்கள் ஆட்சியாளர் கைவர வாழாதிருந்தார்! அண்டையில் இருந்தவன் சொந்த நலனுக்காய் காய் நகர்த்த புரிந்தும் புரியாததுமாய் சொகுசு கண்டார்! தமிழன் கண்ணீர் கண்டு போலியாய் இரங்கி ஆளவந்தவனை ஆழக்கால்பதித்து வலுவாக உட்காரவைத்து கதிரைக்காய் சண்டையிட்டார்! வட்டம் என்றும் சதுரம் என்றும் மேசையில் உட்கார்ந்து வருடம் கடத்தினார் பயன் தான் ஏதுமில்லை! எதிரியோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வலுவாகி கொன்று குவித்தான் நாங்களோ தலை நகரிலே பஜ்றோவில் பவனிவந்தோம்! தமிழ் மக்களின் பிரதிநிதிகளாய்! அம்மாதான் விடிவின் விடிவெள்ளி என்று …

  9. தேநீர் கவிதை: பகையொன்றுமில்லை பறவைகளே! எனக்கும் என் குடியிருப்புப் பகுதியின் பறவைகளுக்கும் பல ஆண்டுகளாகவே பகை நிலவுகிறது! மின் தடையால் ஊர் இருண்ட ஒரு முன் இரவு நேரத்தில் நெருப்பு விளக்கேந்தி - நான் தெருப் பக்கம் வந்தபோது குபீரெனப் பறந்த - என் வாசல் மரத்துப் பறவைகள், அந்த சம்பவத்திற்குப் பிறகு ஏனைய பறவைகளையும் எனக்கெதிராகத் தூண்டி வருகின்றன! அலைபேசியைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வெளியே - நான் ஓடிவரும் நேரங்…

  10. மனதினில் தோன்றும் மாயைகள் எல்லாம் முறியாத முட்களாகி சிந்தை முழுதும் சிதைத்து முந்தை வினை முழுதும் முடிவற்றதாக்கித் தினம் மதி கொன்று விதி வெல்ல வேளை பார்த்திருக்கிறது அன்பென்னும் அச்சாணி ஆட்டம் கண்டபடி என்றும் அச்சுறுத்தலைத் தந்து அகத்தின் அறம் தொலைய அல்லல் மட்டும் என்றும் அறிதியிடா நிலமாய் ஆணவத்தின் ஏணியில் எப்போதும் அமர்ந்தபடி எல்லைகள் அற்றதான எண்ணங்கள் விதையாகி ஏகமாய் எங்கும் பரவி எதிர்மறை விருட்சங்களை எங்கெங்கோ நாட்டி ஏக்கமுறச் செய்கிறதாய் எக்காளமிட்டபடி தினம் எதிர்வலம் வருகின்றன நீக்கமற நிறைந்திருக்கும் நிகழ்வுகளில் நிழல்கள் நாற்ற மனம் துறந்து நேர்வழி சென்றிடினும் நூற்பதற்கான நிலையற்று நகர்வதற்காய்த் தினம் நிறம் மங்கியதான ந…

  11. குழந்தைகள் அலையபூமியில் வெளிச்சம் அணைந்த பொழுது ஒரு யுகத்தின் தாய் இறந்திருந்தாள்பூமி பேரதிர்ச்சியில் நடுங்கியதுதாய்மாருக்காய் அழுதழுது கண்ணீர் விடும்குழந்தைகள் வாழும் யுகத்தில் கனத்தன வீடுகள்குழந்தைகளுக்காய் அழுதழுது கண்ணீர் விடும் தாய்மார்கள் வாழும் யுகத்தில் கனமடைகிறது பூமி தாய் கட்டிய சுவர்களில் கனவின் காட்சிகள் நெளிந்தன நிலம் மெழுகும் தாயின் விரல்களில் சிக்காத புதல்வர்களின் பதச்சுவடுகள் தொலை தூரத்தில் தவித்தன அடுப்பில் பொங்கியது துயரம் இலட்சம் குழந்தைகள்தாய்மாரை இழக்க இலட்சம் தாய்மார் குழந்தைகளை இழந்தனர் தாய்மார்கள் குழந்தைகளாகி அழும் யுகத்தை சபித்தது யார்? ஏங்கும் விழிகளை துடிக்கும் வார்த்தைகளை கண்ணீர் படிந்த முக…

    • 0 replies
    • 739 views
  12. கண்ணுக்குள்ள நிக்கிறியே -என்ன (னை) விண்னுக்குள்ள தள்ளுறியே, அடியே...... எ எண்ணத்தில தீய வைக்கிறியே........ செவ்விதழை மடிக்கிறியே-என்ன(னை) செவ்வாயில புதைக்கிறியே, கொடியே.... ஏஞ்சிந்தையில புது சிந்துபாடுறியே............... ஒத்திவச்ச காணிய கடக்கயில பத்தியெளும் பெருமூச்சு-உன்ன பாக்கையில தோணுதடி! பொத்திவச்ச ஆசையெல்லாம் முத்திவந்து முனுங்குதடி!! நெத்தி சுருக்கி நீ பாக்கையில நெட்டுருகி போகுதடி! எட்டுவைச்சு பாதகத்தி நீ நடக்கையிலயென் சத்திகெட்டுப்போகுதடி!! மனச சுத்தி அடிக்கிறியே மலைய சுருக்கி சுமக்கிறியே....... கனவ அள்ளி தெளிக்கிறியே கையளவிடை மறைக்கிறியே....... ஊன உருக்கி -புது உருவம் திரட்டுறியே கானக்குயிலாய் உருவேத்திறியே........... …

    • 4 replies
    • 739 views
  13. Started by வல்வையூரான்,

    [size=3]தேடல்கள் நீண்டாலும்[/size] [size=3]தீர்க்கமாய் முடிவெடுத்து[/size] [size=3]தேடு பொருளை சரியாய் தெரிந்து [/size] [size=3]திசைதனையும் ஆய்ந்து[/size] [size=3]தேடலை மேற்கொண்டால்[/size] [size=3]திருப்திதான் திருப்பதி தேடுபொருள் கிடைக்கும் திடமாகத் தான் நம்பு தொலைத்தவை நிறையத்தான் தமிழன் தேடத்தான் வேண்டும் தேடு தொலைத்தது ஒன்றும் தொலைவிலில்லை தேடத்தான் வேண்டும் தேடு ஒற்றை காலில் நிற்கும் கொக்கு கூட தேடித்தான் நிற்கிறது ஒற்றுமையாய் தேடிப்பார் [/size] [size=3]தேடுபொருள் நிச்சயம் கிடைக்கும்[/size] வல்வையூரான்

  14. Started by pakee,

    [size=4]என்னிடம் தான் சொல்லவில்லை நான் இறந்த பின் என் கல்லறையிலாவது ஒரு முறை எழுதுவாய இதில் உறங்குவது என் இதயம் என்று...[/size]

    • 2 replies
    • 739 views
  15. அகன்று திரண்டு அன்பு கனிந்தொரு அன்னை வளர்த்தாலும்-பிள்ளை தெருவில் நடந்தொரு பள்ளி பயின்றிட எதிரி தடையாக. நிமிர்ந்து எழுந்தனர் கருவி சுமந்தனர்-புலி தமிழர் படையாகி களங்கள் திறந்தனர் சமரில் உயர்ந்தனர் உலகம் வியந்தாக. படையில் விழுவதும் எழுந்து நிமிர்வதும் புதிய விதியல்ல விழுந்த மாவீரர் விதையா யாயினர் எழுவார் என்றென்றும். படலை திறந்தொரு தெருவில் இறங்கிட பயந்து சிலரோட நடுத்தெருவில் பலர் கதை முடிந்து சாவொரு மலிந்த நிலையாக, களங்கள் திறந்து சுழன்று சமரிடை புலி நிமிர்ந்த மாவீரன் குருதி படிந்து புதைந்து கிடந்தமண் கோவில் லாகாதோ. சதிகள் குவிந் தொரு நிலையில் மனமது தளந்து போகாமல் விமானத் தளங்கள் அழிந்தன களங்கள் எரிந்தன தமிழர்…

  16. Started by s.kumaar,

    ஏங்கும் மனதாலும் தாங்கும் செயலாலும் தூங்கும் நிலை மறந்து தூயதான விடியலிற்காய் தூய்மைகள் அங்கே வியூகமாய் பொங்கும் நாள் தேடி பூம்புனல் தானாகி எங்கும் மங்களமாய் எங்கள் மண் எமதாக்க துய்ப்பதற்காய் சுதந்திரத்தை தூயவர் அவர் படைக்க,கங்குலாகியவர் களம் காண நோக்குகையில், புலம் பெயர்ந்து நிலம் நோக்கும் பலம் வேர்க்க உளம் நோகும் இங்கெவர்க்கு பொங்கல் இதமாக இனித்திருக்கும் இனம் நோக இதனை நீ இயல்பாக நோக்காதே ஈழ மலரங்கு, ஈகையாய் முரசொலிக்க மண்வாசம் நமதாக மனமெல்லாம் நிறைவாக இனியவர்களுடன் இழைந்திருந்து இயல்பாக பொங்குதலே இமயமான , இங்கிதமான இணையிலாப் பொங்கலாகும்.

    • 0 replies
    • 738 views
  17. திரும்பும் திசையெல்லாம் திருடப் பார்க்கிறார்கள். தமிழனின் தன்மானத்தை.. வறண்ட தீவாய் முல்லை மண் வந்து போகிறது கனவில்.. ஈரப்பதம் இல்லை அதிலெங்கும்.. கண்களில் கூடத்தான் தினமழுது தீர்ந்துவிட்டது என் செய்வேன் யார் யாரோ சொல்கின்றனர், தனி நாடு அமைப்போம் என்றும் தனி ஆட்சி செய்வோம் என்றும் உரிமைகள் தொலைத்து, உயிரையும் தொலைத்து, சலனமற்ற சடலங்களால், செய்யப்போகிறோமா அதை.? கேள்விக்குறியாக இருக்கும் எம்மிடம் கேள்வி கேட்க ஆயிரம் பேர் முற்றுப்புள்ளி வைக்க எவனும் இல்லை முடிந்த கதை முடிந்த கதை என்று எம்மை முடக்க தான் பார்கிறார்கள்.

  18. எனக்குத் தெரியாத தமிழ்மீதான என் கோபம் இன்னும் குறையவில்லை ஏனெனில் எப்பொழுதெல்லாம் அதை தெரிந்த கொள்ள் நினைக்கிறேனோ அப்பொழுதெல்லாம் தனி அறைகளில் சில கவியரசுகளிடம் மட்டும் மனம்விட்டு பேசிக் கொண்டிருக்கும் தமிழே நீயும் வசதியானவர்களின் வர்க்கம்தான் அதனால்தான் என்னைப் போண்ற ஏழைக் கிறுக்கன்களை உன் கண்களுக்கு தெரிவதே இல்லை -யாழ்_அகத்தியன்

  19. Started by vanni mainthan,

    பரிதாப மரணம்.... உண்ண உணவின்றி ஒரு சொட்டு நீர் இறங்கா ஒட்ட வயிரொட்டி ஓலமாய் இறந்தாயோ....??? குழுமி வந்து குளிர் கூட அடிக்கையிலே குறண்டி நடுங்கி - நீ குமுறி இறந்தாயோ....??? அக்கம் பக்கத்திலே ஆளுதவி யாருமின்றி ஜயா பாவி -நீ அநாதையாய் இறந்தாயோ...?? தூங்கியெழ கூட துண்டு நிலமின்றி ஊரார் கோடியினுள்ளே -நிதம் உறங்கியெழுந்தாயோ....?? சத்துணவின்றி சக்தி நீ இpழந்து சாவை நீ ஏற்றாயோ....??? கடமையாக நீ கதிரை பின்னி யே தினம் காலம் கழித்தாயே... வந்த யுத்தமதால் வருமானம் நீ இழந்து வறுமை உனையாழ வாடி இறந்தாயே.... ஒத்தாசைக்கு ஒருத்தரும் உனக்கில்லா அட..பாவி ஜயா நீ பரிதாபமாய் இறந்தாயே....!!! -வன்னி …

  20. அம்மாவின் டிரங்குப் பெட்டி - கவிதை லீலாதர் மண்டலோயி இந்தியிலிருந்து மொழிபெயர்ப்பு : மணிபாரதி, ஓவியம்: செந்தில் மூன்றாம் நாளுக்குப் பின் பொறுமையிழந்த வீட்டுப் பெண்டுகள் ஒன்றுகூடித் திறந்துவிட்டனர் அம்மாவின் டிரங்குப் பெட்டியை சற்றே விவாதத்தின் பின் பகிர்ந்து கொள்ளப்பட்டன நகைகள் பெரிய பூசல் ஏதுமின்றி பெண்கள் மூன்றுபேர் ஆனதால் சேலைகளின் பகிர்தல் எளிதாக இருக்கவில்லை பூச்சி அரித்துவிட்ட கல்யாணப் புடவை மூலையில் கிடக்க உடைந்த மூக்குக் கண்ணாடி இன்னொரு பக்கம் இளமை தொட்டு வயோதிகம் வரையிலும் அம்மா கண்ட ஈரம் நிறைந்த காட்சிகள் அதில் பதிந்திருந்தன ஆனால், அவர்களுடைய கண்களுக்குத் தெரியவில்லை ஒரு மடிச்சீலை இருந்தது ர…

  21. எங்கிருந்தோ ஒரு பட்சி வந்து சொன்னது மங்குவது போலிருக்கும் யாவும் மங்குவது கிடையாதென்று! எத்திசையும் எக்காளச் சிரிப்பு... சுற்றி வரப் பகைவனின் இருப்பு... வீழ்ந்துவிட்டோம் என்று இவர் நினைப்பு விழ விழ எழுந்த கதை பல இருக்கு! அப்போது தெளியும் மகிந்தனின் கிறுக்கு! கால காலமாய் நாமிருந்த மண் வேழம் போல் பொருதும் வீரம் நிறைந்த மண் நாணல் போல் விழுவதும் நேரம் பார்த்து எழுவதும் கூனல் வீரம் கொண்ட பகைவனுக்குப் புரியாது! புரியும் போது அவனுடலில் உயிர் தரியாது! அப்பாவிகள் பலர் இப்ப ஆவிகள்! புலி வேட்டையென்ற பெயரில் ஹெலியில் கூட வந்து குண்டு போடுகின்றீர் ஹெகலிய ரம்புக்வல்லவிற்கு தீனி போடுகின்றீர்! …

  22. 2012 டே எப்படி உனை நான்... ---------------------------------------- மகிழ்ச்சி வெள்ளத்தில் அகதியாய் நான் வாழும் நாடு யுத்தச் சூறாவளியுள் தொலைந்த எம் தேசமே எப்போது எம் வாழ்வில் புத்தாண்டு மலருமென ஏக்கமுடன் பார்த்திருக்கும் குழி விழுந்த கண்களுடன் கூன் விழுந்த தோற்றமுடன் தேற்றுவாரற்ற இனமாக என் இனமே துவண்டு துரும்பாகிக் கிடக்கையிலே எப்படி உனை நான் மகிழ்வோடு... 2012 டே எம்மினத்தின் ஒற்றுமை கொணரும் ஆண்டாக வேற்றுமை களையும் ஆண்டாக எம் தலைநிமிரும் ஆண்டாக மலராதோ மலராதோ...... மலர்விக்கும் கடனெமதானால் வரும் ஆண்டுகள் யாவும் எமதே!

  23. எண்ணுக்கணக்குக்கு அப்பால் எங்கள் உணர்வினை புரிந்து கொள்ள முயலுங்கள் எங்களைத் தெரிகிறதா? எம் நிலை புரிகிறதா எங்களின் எண்ணிக்கை அடிக்கடி கூறப்படும் எண்ணிக்கைகள் மாற்றப்பட்டு கருத்துக்கள் பரிமாறப்படும் ஆனால் எங்களை எவருக்கும் தெரியாது எங்கள் வாழ்நிலையும் எவருக்கும் புரியாது இப்போதாவது எம்மைத் தெரிகின்றதா? குடும்பத்தலைவர்களை இழந்தவர்கள் என சுட்டிச்சொல்லப்படுபவர்கள் நாங்கள். எண்ணுக்கணக்குக்கு அப்பால் எங்கள் உணர்வினை புரிந்து கொள்ள முயலுங்கள் எத்துணை இடர்களுக்குள் எம் வாழ்வு தொடர்கின்றது என பாருங்கள் வாழ இடம், வசிக்க வீடு உழைப்புக்கு வழி உண்பதற்கு உணவு உடுக்க உடை இப்படி எதற்குமே வழியின்றி தனித்து விடப்பட்டு மெல்ல செத்துக்கொண்டிருக்கின்றோம் பசித்து அழும் குழந்தையை ஆ…

    • 4 replies
    • 736 views
  24. பிறக்குமா புத்தாண்டு ...........? பிறக்குமா புத்தாண்டு எதிரிக்கு பார் சோறு எங்களுக்கு கந்தக காற்று இறைவா என் இந்த வேற்றுமை உலகெங்கும் போராட்டம் தமிழ் மக்கள் மன்றாட்டம் ஓயாத போரை நிறுத்து கொல்கிறது கொத்துக்குண்டு சிந்தும் ரத்தம் ஆறாய் ஓடுது கண்ணீர் விட்ட கண்களும் வெறுமையாய் சுரபிகள் வற்றி விட உண்ண உணவும் குடிக்க நீரும் சுவாசிக்கும் காற்றும் கந்தக வாசம் ஏன் இந்த அவலம் ஈழத்தமிழனுக்கு புலம் பெயர் உறவுகளும் ஓயாத போராட்டம் பட்டினிச் சாவுக்கும் பலர் முன்னேற்றம் உறவுகளின் துயரால் உலகமே ஏக்கம் ஆறாத வலி ,மாறாத சோகம் தீராதா இந்த பழி ,நெஞ்சிலே ஓயாத வலி ........

  25. ஈழத்துப் பாப்பா பாடல் – தமிழரின் அவலம் ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா சிங்களப் படை வரும் பாப்பா - வானில் சீறும் விமானம்வரும் பாப்பா எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர் எவரும் இல்லையடி பாப்பா சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா வனத்தோடு விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம் மனத்தோடு சோகங்கள் ஆயிரம் பாப்பா பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன் வகைவகையாய் வீசினான் குண்டை புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து நகை கொள்கிறான் எதிரி பாப்பா தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி நாய்கள் சூழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.