கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
திலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார் திலீபனிற்கு தீபம் ஏற்றுவோரே பார்த்தீபனின் பாதம் தொழுவோரே ஈகச் சிகரத்திற்கு மாலை தொடுப்போரே அதிசய வள்ளலுக்காய் கசிகின்ற நெஞ்சோரே மனதிலேற்றுங்கள்… எங்கள் பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான் சிறுகச் சிறுகச் சேர்த்து நிமிரக் கட்டிய மனையும் உயிரைப் பிரியும் பொழுதில் தந்தை உயிலாய்த் தந்த வளவும் இன்பம் பெருகப் பெருக நாங்கள் ஓடித்திரிந்த தெருவும் உள்ளம் உருக உருகக் கண்ணீர் விட்டுப்பிரிந்த ஊரும் திரும்பக் கிடைக்கும் காலம் வரைக்கும், எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான் நாளும் பொழுதும் கண்ணைக் கரைத்து நாளை வருவார் நாளை வருவார் எ…
-
- 1 reply
- 822 views
-
-
இறைவா எம்மை ஏன் படைத்தாய் இறைவா எம்மை ஏன் படைத்தாய் இழிய வாழ்கை வாழ்வதற்கா ஈழத்தில் எம்மை ஏன் படைத்தாய் ஈன வாழ்கை வாழ்வதற்கா வன்னியில் எம்மை ஏன் படைத்தாய் வனத்தில் விலங்குகளாய் வாழ்வதற்கா யாழ்ப்பாணத்தில் எம்மை ஏன் படைத்தாய் யாருமற்ற அனாதைகளாய் வாழ்வதற்கா கிழக்கில் எம்மை ஏன் படைத்தாய் காணாமற்போனோர் கணக்கில் சேர்வதற்கா இந்துக்களாய் எம்மை ஏன் படைத்தாய் இன்னல்கள் சூழ வாழ்வதற்கா கிறிஸ்தவராய் எம்மை ஏன் படைத்தாய் கிலிகொண்ட வாழ்கை வாழ்வதற்கா முஸ்லிம்களாய் எம்மை ஏன் படைத்தாய் முடங்கி அடங்கி வாழ்வதற்கா தமிழராய் எம்மை ஏன் படைத்தாய் தலை குனிந்த வாழ்கை வாழ்வதற்கா பௌத்த சிங்கள வெறியர் பக்கம் பாவிகளாய் எம்மை…
-
- 0 replies
- 993 views
-
-
வலிநிறைந்த நாட்களின் வரிசையில்....! ----------------------------------------------------------- வலிநிறைந்த நாட்களின் வரிசையில் உனக்குமொரு இடம் ஒதுக்கினர்! உலகப்பொது மன்றின் ஊழியகாரரரும் சாட்சியாய் நின்றனர் சாவுகள் கண்டு சளைக்காதவரல்லவோ! கணக்கெடுத்தனர் காகிதம் நிரப்பினர் கண்டணம் தெரிவித்துக் கையைப் பிசைந்தனர்! செஞ்சோலை வளாகம் செங்குருதிச் சகதியாய் சோலைமலர்கள் சோபையிழந்தன வான்வழி வந்த சிங்களன் வல்லூறு பேயாட்டம் போட்டதை யார் கேட்டார்கள்! பயங்கரவாதிகள் ஒன்றாய்க் கூடி உலகை ஆளும் கொடிய காலத்தில் கொடுமை சூழ்ந்த உலகினில் நீதியை கொடுத்திடமாட்டார் எடுப்பதே எம் கடன் எம் கடன் முடித்து மண்ணுள் புதைந்தோர் பாதம் படைத்தலே மனிதராய் வாழும் மாந்தரின் பணியா…
-
- 8 replies
- 1.1k views
-
-
மடிகளை உள்ளிழுத்த மாடுகள் காலவெற்றிடத்தில் உறுமத் தொடங்கி நாணயக்கயிற்றுக்குள் வளைந்து உடல் சிலுப்பி நிலம் விறாண்டி மூச்செறியவும் செய்தன.. புளுதிகளையும் மூச்செறியும் கனதியையும் வலியேதுமில்லாமல் வழிந்த வீணீர்களையும் முகர்ந்த உண்ணிகள் தாமும் கூட உறுமமுயன்று உருத்திரதாண்டவமாடின... எரிந்து கிடக்கும் நிலத்தின் எச்சங்களை தின்றும், உறைந்துபோன மனங்களின் மர்மங்களை கொன்றும், ஈரமிழந்த வேர்களிலாலும் உயிர்ப்பை சுமக்கும் புனிதர்கள் தோள்கள் மீதேறியும், இன்னலற்ற சுவரோரம் முதுகு தேய்த்து உண்ணவும் உறங்கவும் ஆகுதிகளை வைத்து அவிபாகம் பெறவும் மடிகளை மறைத்து உறுமத்தொடங்கின கறவைமாடுகள்.. மேச்சல்நிலம் கொண்ட மாடுகளின் ஏவறைகளுக்கும் ஓய்வுநேர அசைபோடலுக்கும் அர்த்தமாயிரம் க…
-
- 5 replies
- 923 views
-
-
பதின்மங்களின் படிமக்கனவுகள்; புதினங்களாய் பேசிக்கொள்ளும் இரகசிய வார்த்தைகள்; இளசுகளின் சுத்தல்களில் பெருசுகளுக்குப் புரியாத தலைமுறை வளர்ச்சியின் வழக்கமான அதே காதல்! எப்போதும் புத்தம் புதிதாய் மின்னும் எண்ணங்களுடன் தோன்றும் மின்னல்கள்! மின்சாரம் இல்லாத ஊரில் மனசுக்குள் விளக்கெரியும்! இரு ஜோடி இதழின் அழுத்தத்தில் பலகோடி 'வோல்ற் ' மின்னழுத்தம் பிறக்கும்! முதல் முத்தம் எப்பொழுதும் தலைக்கேற்றும் பித்தம்! முதன்முதற் காதல்.... காலத்தால் அழியாத இதயத்தின் மோதல்! சூரிய உதயங்கள் வரை வண்ணக் கனவுகள் ஆக்கிரமித்த வாலிப பருவத்தின் வலிந்த போர்க்காலங்கள் ! கருவேப்பிலை மரத்தைக்கூட பெருவிருப்போடு பார்த்து ரசிக்க வைத்து நெருப்பாக தேகம் கொதிக்க வைத்து பார்வையாலே …
-
- 5 replies
- 1.1k views
-
-
நான் கேட்காமல் கிடைத்த ஆலயம் என் தாய் நான் கேட்டதும் கிடைத்த தெய்வம் என் தாரம் * இறைவனிடம் வரம் கேட்டேன் அவன் தன்னை கேட்டதாய் நினைத்து தானே என் மனைவியானான் * எல்லோரும் ஆறுதல் தேடி ஆலயம் போவார்கள் நான் உன்னைத் தேடி வருவேன் * என் கவிதைக்குள் யாரும் இல்லை கிறுக்கல் ஆனது என் காதலுக்குள் நீ இருக்கிறாய் கவிதையானது என் வாழ்க்கை -யாழ்_அகத்தியன்
-
- 4 replies
- 778 views
-
-
கணவன் கடிந்து கொண்டான் மனைவியை எத்தனை தடவை சொன்னேன், அந்த கறுப்புப் பை கவனம் என்று மனைவி கவலைப்பட்டாள், அடடே அவர் சொல்லியும் நான் மறந்து விட்டேனே... காதலன் இறுக ஒரு முறைஅணைத்துக்கொண்டான் அவளோ அவன் இதழில் அழுத்திப் பதித்தாள் இன்னும் 10 நாட்கள் கடற்கரையில் உன்னை என்னசெய்கிறேன் பார் ரகசியம் பேசினாள் ... இன்னும் ஒருவன் கண்ணாடியை சரிசெய்து கொண்டு தொலைபேசி செய்தியில் மூழ்கிப் போனான் நாளைய நாள் கண் முன்னே நடமாடியது, அலுவலகத்தில் முக்கிய மூன்று சந்திப்பு, நண்பனை காண வேணும், பழைய கதைகள் பேச வேணும் அவன் விரும்பும் மதுப் புட்டி வாங்கவேணும் ... முதியவர் மனதுக்குள் பேசிக்கொண்டார், நேரத்துக்குப் போய்விட்டால் மகனுக்கு சுலபம் மருந்துகள் வாங்கவேணும், மனைவியும் பாவம்…
-
- 16 replies
- 1.9k views
-
-
நம்மை மறந்த நமது நட்சத்திரங்கள் ! காவிரியில் தண்ணீர் வரவில்லை கால் நடையில் சென்றீர்கள் உங்களின் கடமையுணர்வு தெரிந்தது! கார்கில் வீரர் காயம் ஆறவில்லை கைகள் கோர்த்து நின்றீர்;கள் உங்களின் கண்ணியம் புரிந்தது! ஈழத்திலே போர் இன்னும் ஓயவில்லை குஞ்சுகளின் தலையில் குண்டுமழை உங்களின் கட்டுப்பாடுதான் தெரிகிறது! மக்கள் திலகம் எம்.ஐp.ஆர் போல்;; நடிகர் திலகம் சிவாஐpயும்-எங்கள் மண்ணையும் மக்களையும் நேசித்தார்! உலகம் முழுதும் திரைவானிலே உங்கள் திரைபடம் ஓடவேண்டுமா அங்கே ஈழத்தமிழன் ஓடிவருவான்! உரிமைக்காக குரல் எழுப்பி உலகம் முழுதும் அலையும்-ஈழத் தமிழனுக்காய் நீங்கள் ஓடிவரவில்லை! தலைமுடி கோதும் படையப்பா தர்மத்தின் தலைவனாய் ந…
-
- 5 replies
- 1.3k views
-
-
கனடாவில் மொன்றியலில் வசிக்கும் கே.செல்வகுமார் இயற்றிய இந்த 2 பாடல்களை கேட்டு உங்கள் அபிப்பிராயங்களை சொல்லுங்கள். http://www.esnips.com/doc/e2dffaf4-f393-4d...ngam-(Srilanka) http://www.esnips.com/doc/93efb0c8-d1f3-4d...---Krishnarajah உயிரான காதல் என்ற பாட்டில் வரும் " நீ ஓம் என்று சொன்னால் நான் ஒழுங்காக படிப்பேன்" நாங்கள் ஊரில் யாருக்கோ சொன்ன ஞாபகம் வருகிறது அல்லவா ? ஒழுங்கை, புளிய மரம், பங்குக்கிணறு ஞாபகமா? பாடிய நிலுக்ஷி ஜெயவீரசிங்கம் எங்கள் பாடகி. இனிமையான குரல் வளமுள்ளவர்!
-
- 10 replies
- 2.1k views
-
-
எத்தனை அழகாய் சிரித்துவிட்டுப் போகின்றாய் நீ... இங்கே ஒருவன் சிறைப்பட்டதை அறியாமல்....! உந்தன் நினைவுச் சிலந்தியில் சிக்கிய என்னைக் கொஞ்சம் விடுவி... இரவுகளோடு நான் படும் அவஸ்தை போதும்! சிரிப்பில் கூட போதை இருப்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது! "களுக்" என நீ சிரிக்கின்றபோது மனசுக்குள் எங்கோ உளுக்கிக் கொள்கிறது! புன்னகை கூட இத்தனை அற்புதமாய் இருக்கும் என்று நான் அறிந்ததில்லை மயில்பீலியாற் மனதை வருடுகின்ற மகா சுகம் "ரெடிமேட்" சிரிப்பை உதடுகளில் ஒட்டவைத்துக் கொள்பவர்களும் உண்டு அதற்கு ஒரு சாமர்த்தியம் வேண்டும் நீ, எல்லாம் கடந்து புன்னகையால் உதடுகளில் புதுக்கவிதை எழுதுபவள்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கண்ணும் கண்ணும் பேசினும் கண்ணுக்குத் தெரியாதது... தொட்டுத் தொட்டு பேசினும் புலனுக்கு புலப்படாதது... சோடி போட்டு சுத்தித் திரியினும் சாட்சி சொல்லாதது... கட்டிப் பழகி கழற்றி விடினும் மெளனமாய் இருப்பது... புளுகித்தள்ளி உசத்தியாக் காட்டி ஏமாற்றினும் அலட்டிக் கொள்ளாதது... மாற்றி மாற்றி பலது வந்து போயினும் குற்றம் காணாதது... இடையில் ஒன்றைவிட்டு ஒன்று தாவினும் கண்டுக்காதது... மனசில் ஆயிரம் வைச்சுப் பழகினும் காட்டிக் கொடுக்காதது... ஓசிக் காரில, காசில பவனி வரினும் கெளரவமாய் நினைக்க வைப்பது... பூங்காவில பீச்சில ஒளிச்சிருந்து கும்மாளம் அடிப்பினும் சாட்சிக்கு வராதது... அப்பா அம்மா கண்டுபிடிக்க முடியாதது... நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்…
-
- 29 replies
- 3.9k views
-
-
உன் ஆதரவாய் நான் இருந்தேன் நீ என் ஆதரவாய் இருந்தாயா?? நம் உறவுக்குள் பல வீழ்ச்சிகள் இருந்தாலும் அதை தாங்கி பிடித்தேன் இருந்தாலும் நமது காதலை தாக்கியது ஒரு சுனாமி அதையும் தாங்கியது என் காதல் ஏன்? நீ என் அருகில் இருந்ததால் வந்த நம்பிக்கை நம் காதலுக்காக எதையும் செய்ய துணிந்தேன் என் துணிவுக்கு தந்தாயடா தண்டனை என்னும் அழகிய பரிசு பாசம் வைப்பது பாவமா??? என் காதல் தப்பாகி போனதோ?? ஏன், இந்த வேசமடா?? உண்மைப் பாசத்துக்கு இந்த உலகில் கண்ணீர் தான் பரிசா????
-
- 59 replies
- 7.5k views
-
-
இது நான் எழுதியதல்ல இந்த லிங்கையும் தொலைத்து விட்டேன் மன்னிக்கவும் வெறுமே நிணமும் நீரும் கொண்ட ஒரு பிண்டமல்ல வீரமும் விடுதலை வேகமும் கொண்டவன் ஈகமும் மனதில் ஈழமும் கண்டவன் தானைகள் தகர்த்தொரு தடவழி சமைத்தவன் எங்கே போர்க்களம் எங்கே பகைவன்-என வானமும் நடுங்கிட வையகம் நடந்தவன் மார்பிலே குண்டேற்றி மரணத்தை அணைத்தவன் உறங்கிடும் கதை சொல்லும் உண்மையின் தலமிது கற்களும் முட்களும் காலடி நெருட புற்களும் புழுதியும் பாதம் மறைக்க கைகளில் சுடுபொறி கருத்துடன் ஏந்தி விழிகளில் விடுதலைச் செம்பொறி தாங்கி தலைவனின் காலடித் தடமது தொடர்ந்து-தன் விழுப்புண் வாங்கிய திண்ணுடல் நோக காகமும் கழுகும் உண்டிடவென்று எதிரியைக் கிழித்தவன் உறங்கிடும் புமி …
-
- 1 reply
- 1k views
-
-
ஆயிரம் கைகள் சேர்ந்து செய்த மெத்தையில் படுத்திருக்கிறேன் உன் இருகையில் மட்டும்தான் தூங்கி இருக்கிறேன் * அம்மா உனக்கு அவ்வளவு பாரமாய் இருந்தேன் என்றா பால் கொடுத்து என்னை வளர்த்தாய் நீ தூக்கவே முடியாதளவுக்கு * வெற்றி பெற்றால் தேடி வந்து வாழ்த்த ஆயிரம் உறவுகள் தோற்றுப்போனால் தேடி வந்து அணைக்க உன்னைத் தவிர யார் எனக்கு * ஆயிரம் முறை தலை சீவிய சந்தோசம் நீ ஒரே ஒரு தடவை தலை கோதிவிடும் போது * எல்லாம் சேலைதான் எனினும் நீ கட்டிய சேலையில்தான் என் நிம்மதியான தூக்கம் அவிழ்ந்து கிடக்கிறது * என்னை நடக்க வைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட …
-
- 5 replies
- 1.4k views
-
-
உலகே மாந்தநேயம் இழந்தாயே!-மா.பு.பாஸ்கரன் – யேர்மனி. Posted on December 29, 2024 by சமர்வீரன் 33 0 அன்பின் மொழியில் பேசுங்கள் ஆண்டவன் மொழியில் சிந்தியுங்கள் என்று கூறிடும் மேற்கும் கிழக்கும் உன் வசதிக்கேற்ப நியாயங்களை நினைத்தவாறு வளைத்தபடி நீள்வளமாகக் கிடப்பதுமேன்? காஸா மனித வேட்டையை வேடிக்கைபார்க்கின்ற சிந்தனையை மாற்றிடும் போக்கைக் காண்பாயா மூன்று வாரமேயான குழந்தை சிலா(SILA) குளிரில் வாடியே இறந்ததை அறியாது மருத்துவமனைக்கு கொண்டு போனதும் மரணம் பற்றி அறிந்து கொண்டதும் தாயின் மனதையும்; தந்தையின் நிலையையும் விபரிக்க வார்த்தைகள் ஏதும் உண்டா? உலகுக்கென்ன ஆறாந்தலைமுறை ஆயுதங்களுக்…
-
- 0 replies
- 329 views
-
-
முள்ளிவாய்க்கால் ஓரத்திலே விடிவு முடிவான காலத்திலே அங்கும் இங்கும் எங்கும் ஒப்பாரிகள் முதுமையான பசுமை நினைவை சுமக்கும் வாய்க்கால் இப்போது பயங்கரமாய் இரத்தம் கலந்த சிவப்பாய் மனிதரை அல்ல சடலங்களை சுமக்கிறது கந்தகப்புகையை சுவாசித்து வாழ்ந்த மக்கள் கையில்லாமலும் காலில்லாமலும் சிறைப்பிடிக்கப்பட்டார்கள் - ஓவியா- முற்காலத்தில் மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர் நேற்று அழுகுரல் எழுந்து ஊழித் தாண்டவமாடி இன்று சுடுகாட்டுச் சாம்பலாய்க்கிடக்கிறது தொடர் வேவுவிமான இரைச்சலில் மழையாயிற்று எறிகணை இழந்த உறவுகள் போக எஞ்சியவர் சித்தம் இழந்தனர் எல்லாம் சூன்யமாயிற்று அழுகுரல் நிரம்பிய மண் அதிர்விலிருந்து …
-
- 6 replies
- 10.8k views
-
-
கீழுள்ள இந்தப்புகைப்படத்தை பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை கவிதையாக தரமுடியுமா? கவிதையாக வடிக்க முடியாதவர்கள் வசனங்களிலாயினும் கூறுங்கள். இப்புகைப்படம் பற்றிய எனது எண்ணங்களை கவிதையாக அல்லது வசன நடையில் இறுதியாக தருகின்றேன். நன்றி! (மேலுள்ள புகைப்படத்துடன் சம்மந்தப்பட்ட செய்தியை பார்க்க இங்கே அழுத்தவும்)
-
- 11 replies
- 1.6k views
-
-
பொங்கலுக்கு தேவையான பொருட்களெல்லாம் வாங்கிவிட்டேன்.. பொங்கலிட முற்றமதை எங்கே போய் வாங்குவேன் .. சிங்களனின் பாசறையாம் என் வீடு அவனாடும் மைதானம் என் முற்றம் . எங்க போய் பொங்கலிட ??? ««««««««««««°»»»»»»»»»»»»»» "பொங்கலிட முற்றமில்லை.. சொந்தமென யாருமில்லை .. வெந்தமனம் நொந்துதினம் வாடுகையில்.. எங்குபோய் இவர் பொங்கலிட தைத்திங்களதில் ? தை பிறந்தால் வழிபிறக்கும்.., பொய்யானால் மனம் சலிக்கும்.., இருபத்தைந்தாண்டுகள் ஆண்டுகள் நொந்தகதை யாரறிவார்? போர் ஓய்ந்து ஏழாண்டு.., பொய்மட்டும் ஒளியாண்டு... …
-
- 2 replies
- 717 views
-
-
[size=5]திருவிழா[/size] கோயிலுக்கு திருவிழா என்பதை விட அது எங்களுக்குத்தான் திருவிழா! ஐஸ்கிறீம், கரஞ்சுண்டல், கச்சான் என வகை வகையா சாப்பிட்டும் அடங்காமல்... பஞ்சு முட்டாய்க்காரன் பின்னால போய், இடம் மாறி தொலைஞ்சு போக... இன்னாரைக் காணவில்லை என ஒலிபெருக்கி அறிவித்தல் வருவதும் நடந்திருக்கு! நன்றி : கவிதையின் கவிதைகள்
-
- 1 reply
- 2.4k views
-
-
அபயக் குரல்.... ஈழத்தில் கேட்கிறது ...... அனைத்துலக அபய நிறுவனம் எங்கே .?.... என் இனமே ஜனமே .எம்மை உனக்கு தெரிகிறதா ? . குண்டுகள் தலை மீது மழையாக பொழிகிறது பிஞ்சுகள் ,குரல் கண்ணீருடன் கதறிக்க்கேட்கிறது .... உலகே கண் இல்லையா ..தமிழ் ஈழ மண் உனக்கு இழிவானதா ? உன் உயிர் தான் உயிரா , உணவின்றி நீருடன் வாழ்வா ? குண்டு மழையை .. போரை நிறுத்து ...மனிதர் மட்டுமா உன் இலக்கு மாடுகள் ஆடுகளும் தான் ..பாலகர் பசி தீரவில்லை , பள்ளியில் பாடம் நடக்கவில்லை ..பரீட்சையும் .முடியவில்லை ? .பதட்டத்துடன் வாழும் எமக்கு ஏனையா இந்த வேதனை ? எம் குரல் கேட்க யாருமே இல்லயா ? ஏன்.... இந்த நீள் மெளனம் ? நிறுத்துக ....உடனே ......போரை .........குண்டு மழையை ........…
-
- 0 replies
- 885 views
-
-
நெல்லெடுப்பது யார்? என்னவாயிற்று? ஏனிந்தப் புலம்பல்? ஒப்பாரிச் சொற்களை கூட்டிப் பெருக்கிக் குப்பையிலே கொட்டுக. நெல்லெடுத்து மழலையின் ஈறில் கீறிவிட்டாலே பல் வெளிக்கிளம்ப பாதை திறக்கும். வலியும் குறையும். இது இயற்கை மருத்துவம். நெல்லெடுப்பது யார்?
-
- 3 replies
- 1.1k views
-
-
எதுவரை நீளுமோ அதுவரையும் எதுவரை தொடருமோ அதுவரையும் அந்தங்கள் இல்லா அறுபடாச் சங்கிலியாய் தொடருமடி - நம் நட்பின் சங்கீதம் ………………………………………….. எங்கோ இருந்தபடியே என்னை கடிகார பொம்மையாய் ஆட்டி வைக்க உன் நட்புக்கு மட்டுமே முடிந்ததடி ………………………………………….. நீ உனக்காக உனக்காக என்று கவிதைகள் கேட்கிறாய் நான் உனக்காக உனக்காக என்று என்னையே எழுதுகின்றேன் ………………………………………….. நீ நேசிக்கின்றாய் என்றெண்ணி மகிழ்ந்து போகிறேன் என்னையல்ல நிழல்படங்களை என்றறியாத சின்னக் குழந்தையாய் ………………………………………….. என்னைப் போலவே எந்தன் கவிதைகளும் உன்னால் நிராகரிக்கப்பட்டவுடன் உடைந்து துண்டாகின்றன …
-
- 2 replies
- 950 views
-
-
முத்துக்குமரனுக்கு ஒரு அஞ்சலி ................ தாய் தமிழகம் தந்த முத்து தரணியில் வந்துதித்து தொப்புள் கொடி உறவுகளுக்காய் ஈந்த மாபெரும் பரிசு தன் இனிய உயிர் , பத்திரிகையாளனாய் சாதித்தது போதாதென்று தமிழ் ஈழ சரித்திரத்திலே முத்தாக பதிந்து விடான் தமிழக முத்துக்குமரன் ஐயா முத்துக்குமரா .... நட்புக்கு இலக்கணம் உயிர் கொடுத்தல் இதை மிஞ்சியும் ஒரு கொடை உண்டோ ? உன் ஆன்மா சாந்தியடையட்டும் , உன் எண்ணம் நிறைவேறும் , ஆழ் துயிலில் ,நீ சாந்தி அடைவாய் சாந்தி... சாந்தி ...சாந்தி ........... ,
-
- 1 reply
- 962 views
-
-
போய்வா காதலா போய்வா !!! என்னை பிடித்த என் காதலா..... என்னை சீண்டுவதிலே என்ன இன்பம் உனக்கு?? உள்ளம் குமுறியே ஊமையான நான் , பாடுவேன் என்று ஏன் நினைக்கின்றாய்?? உன் பார்வையில் நான் ஒரு கொடுமைக்காரி.... அப்படியே இருப்பேன் நான் உனக்கு. வார்த்தை ஊசியால் என் மனதை குத்துவதை விட்டுவிடு... என் மனம் பாறையாகி நாளாச்சு என்காதலா . எங்கள் காதல் வளரும் என்று எனக்குத் தெரியவில்லை ... என் கை பிடிக்க முதலே என் கண்ணீல் நீர் வருவது உனக்கு இன்பம்....... உன் நினைவை மறக்க நான் நினைக்கின்றேன் போய்வா காதலா போய்வா... நாம் நடந்த கடற்கரையில் என்கால் ஒற்றைத்தடம் பதிக்கும் ........ போய்வா காதலா போய்வா!!!! மைத்திரேயி 23 02 2013
-
- 22 replies
- 1.6k views
-
-
ஈழத்துப் பாப்பா பாடல் – தமிழரின் அவலம் ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா சிங்களப் படை வரும் பாப்பா - வானில் சீறும் விமானம்வரும் பாப்பா எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர் எவரும் இல்லையடி பாப்பா சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா வனத்தோடு விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம் மனத்தோடு சோகங்கள் ஆயிரம் பாப்பா பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன் வகைவகையாய் வீசினான் குண்டை புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து நகை கொள்கிறான் எதிரி பாப்பா தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி நாய்கள் சூழ…
-
- 0 replies
- 734 views
-