கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நான் மறுபக்கத்தைப் பார்க்க விரும்பவில்லை ஒரு நியாயத்தின் மறுபக்கம் நமது நியாயங்களை மறுதலித்துவிடும் ஒரு கண்ணீரின் மறுபக்கம் நமது கண்ணீரை அர்த்தமற்றதாக்கிவிடும் ஒரு மனிதனின் மறுபக்கம் அவனை நிரந்தரமாக நம்மிடமிருந்து பிரித்து விடுகிறது நான் மறுபக்கத்தைப் பார்க்க விரும்பவில்லை நாம் மறுபக்கத்தைப் பார்க்கும்போது நம் கைகள் கட்டப்பட்டுவிடுகின்றன நமது இதயம் கனத்து விடுகிறது நமது அம்புகள் முனை முறிந்துபோய் விடுகின்றன நமது எல்லா வழிமுறைகளும் பயனற்றதாகிவிடுகின்றன நான் ஒரு மறுபக்கத்திற்குள் நுழையும்போது ஒரு இருண்ட அறைக்குள் நுழைகிறேன் நான் ஒரு மறுபக்கத்தை தொடும்போது இருளில் வழுவழுப்பான எதையோ தொடுகிறேன் நான் ஒரு மறுபக்கத்தின் மூச்சுக்காற்ற…
-
- 0 replies
- 1k views
-
-
மன்னிக்க நண்ப....! வாசல் தாண்டி உன் மிதிவண்டி வைரவர் கட்டில் கால் தாங்கி நிமிரும். எங்கோ பார்வைகள் போவதாய் கொள்ளையிட்ட உன் மெளனப் புன்னகை இன்னும் விடுபடாமல்.... கண்ணுக்குள் கவிதையெழுதிய - நீ நெஞ்சுக்குள் இருந்த நினைப்பை ஏனோ நெடுங்காலம் அடைகாத்தாய் ? நேரம் வருமென்று காத்திருந்தா இல்லை நெருப்பிது சுடுமென்றா போகவும் வரவும் புரியாத பார்வை தந்தாய் ? கனவுக்குள் காதல் நினைவுக்குள் கரைந்த உன் பார்வைகள் நினைவுக்குள் அறுபடாமல்.... இன்னும் நினைவில் இருக்கிறாய்.... காலம் தந்தது உனக்காய் ஒரு கவிதை மட்டும் தான். மன்னிக்க நண்ப, மறுபடி ஒரு கவிதை உனக்காயில்லை மன்னிக்க நண்ப..... 20.12.2001
-
- 6 replies
- 1.8k views
-
-
அம்மா. உன்னை நினைக்கும் போது எனக்குள் எல்லா நரம்பும் இரத்தத்தை கடத்தவில்லை – உன் உருவத்தையே இரத்தமாய் கடத்துகிறது ….!!! பிள்ளை பருவத்தில் செல்ல காயம் வந்தால் கூட விளையாட்டுக் காயங்கலாக எடுக்காமல் -உன் கண்ணுக்கு திரியை வைத்து விடிய விடிய விளக்காய் எரிவாயே தாயே ….!!! சிறு வயதில் எல்லோருக்கும் பசியதிகம் -பள்ளி விட்டு வந்து படாத பாடு படுத்திவிடுவேன் உன் காலை உணவை எனக்காக வைத்திடுந்து நீ பட்டினீயிருப்பாய் தாயே ……!!! என் புத்தகச் சுமை உன் வலது தோலில் சுமப்பாய் … செருப்பில்லாத பாதங்களேடு…. இடுப்பில் என்னைசுமந்திருக்கிறாய். வீடு வந்தவுடம் களைத்து விட்டாய் மகனே என்று -உன் களைப்பை பொருட்படுத்தாத அதிசயப்பிறப்பு தாயே …..!!! …
-
- 11 replies
- 2.3k views
-
-
அம்மா. உன்னை நினைக்கும் போது எனக்குள் எல்லா நரம்பும் இரத்தத்தை கடத்தவில்லை - உன் உருவத்தையே இரத்தமாய் கடத்துகிறது ....!!! பிள்ளை பருவத்தில் செல்ல காயம் வந்தால் கூட விளையாட்டுக் காயங்கலாக எடுக்காமல் -உன் கண்ணுக்கு திரியை வைத்து விடிய விடிய விளக்காய் எரிவாயே தாயே ....!!! சிறு வயதில் எல்லோருக்கும் பசியதிகம் -பள்ளி விட்டு வந்து படாத பாடு படுத்திவிடுவேன் உன் காலை உணவை எனக்காக வைத்திடுந்து நீ பட்டினீயிருப்பாய் தாயே ......!!! என் புத்தகச் சுமை உன் வலது தோலில் சுமப்பாய் ... செருப்பில்லாத பாதங்களேடு.... இடுப்பில் என்னைசுமந்திருக்கிறாய். வீடு வந்தவுடம் களைத்து விட்டாய் மகனே என்று -உன் களைப்பை பொருட்படுத்தாத அதிசயப்பிறப்பு தாயே .....!!! அ - வரிசையில் சொற்கள் சொல்லடா அம்மா என…
-
- 0 replies
- 519 views
-
-
மறுவாழ்வு பச்சை வர்ண ஆடைகட்டி பல நிறத்தில் மலர்கள் சூடி பார்ப்பவர்கள் நெஞ்சத்தினை பறித்திழுக்கும் அழகிகள் காலம் செய்த கோலத்தால் கட்டழகு தளர்ந்து பூவிழந்து பொலிவிழந்து போர்த்திருந்த போர்வை கழன்று ஆண்டிக்கோலம் கொண்டு: அல்லவையாய் நின்றபோது வெள்ளாடை கொடுத்து விதவைக்கோலம் ஆக்கினான் ஒருவன். இப்படி அமைந்ததே நிலையென்று ஏக்கமாய் பார்த்தேன் வேடிக்கை பார்க்காதீர்; - நாங்கள் விதவையாக்கப்பட்டவர்கள் பூத்துக் குலுங்கி புதுப்பொலிவு பெற எங்களுக்கு காலம் கைகொடுக்கும் வரை காத்திருக்கிறோம்; என்றார்கள் செண்பகன் 23.10.13
-
- 4 replies
- 821 views
-
-
மறுவாழ்வு பச்சை வர்ண ஆடைகட்டி பல நிறத்தில் மலர்கள் சூடி பார்ப்பவர்கள் நெஞ்சத்தினை பறித்திழுக்கும் அழகிகள் காலம் செய்த கோலத்தால் கட்டழகு தளர்ந்து பூவிழந்து பொலிவிழந்து போர்த்திருந்த போர்வை கழன்று ஆண்டிக்கோலம் கொண்டு: அல்லவையாய் நின்றபோது வெள்ளாடை கொடுத்து விதவைக்கோலம் ஆக்கினான் ஒருவன். ஏன் இந்த நிலையென்று ஏக்கமாய் நான் பார்த்தபோது வேடிக்கை பார்க்காதீர்; - நாங்கள் விதவையாக்கப்பட்டவர்கள் பூத்துக் குலுங்கி புதுப்பொலிவு பெற காலம் கைகொடுக்கும் அதுவரை காத்திருப்போம் என்றார்கள். செண்பகன் 23.10.13
-
- 11 replies
- 1.2k views
-
-
மறைந்துவிட்ட கரும்புலிகளுக்காய் மலராகக் கண்ணீர்த்துளிகள்..... கவிதை..... இரவின் நிசப்தத்தை குழப்பிவிடும் சத்தம்..... இனத்தின் விடுதலைக்காய் தம்முயிரை ஈந்துவிடும் வீரம்...... கரும்புலிப் படகொன்றில் லெப்.கேணல் '' நிதி''யுடன் சேர்ந்து கப்டன் ' வினோதன்'' உம் கரும்புலிகளாய் கடல்பயணம்.... இது விடுமுறைப்பயணமல்ல வீடு திரும்புதற்கு.... இது விடுதலைப் பயணம் வேரோடு தம்முயிரையும் மாய்த்து... பல எதிரியையும் வேரோடு சாய்த்து.... இறுதியிலே களம் மீண்டும் திரும்பா காவியப் பயணம்... இதுவே நம் கரும்புலிகளின் பயணம்...... கரும் நீலக்கடலினிலே காவிச் சென்ற வெடிமருந்தை எதிரியின் கலத்துடனே மோதி தணலாக எரிந்திடுவர்..... எ…
-
- 0 replies
- 843 views
-
-
மறவர் படை தான் புலிப் படை அதில் தனிப் படை தான் கரும்படை..! பாடை ஏகும் நாள் கணித்து மணித்துளியும் செத்தே வாழும் மனிதருள்.. சாவுக்கு மணி சமைத்து இனம் மண் காத்த படை தான் கரும் படை..! கந்தகப் புகைக்குள் உயிர் மூச்சு வாங்கி உடலை காற்றாக்கி சுழன்றடித்த புயல்கள் எதிரி படைகள் சிதறடித்த வெற்றிப் படை தான் எங்கள் கரும் படை..! பூமியில் வாழத் துடிக்கும் மானுட மனங்களிடை இன மானம் காக்க சாகத் துடித்த அர்ப்புதங்கள் நிறை அந்தப் படை தான் மில்லர் வழியில் வந்த கரும் படை..! தமிழர் படை தான் புலிப் படை அதில் தனிப் படை தான் கரும்புலிகள் படை..! யூலை 5 இல் உதித்த கரும் படை..! ஆக்கம்- ஜூலை-05,2015
-
- 3 replies
- 1.1k views
-
-
மறைவதில்லை ! -------------------------- அந்தச் சின்னஞ் சிறு நட்சத்திரமோ விடியலுக்குக் கட்டியம் கூறியவாறு எப்போதும் மறையாது ஒளிர்கிறது அந்தப் பெரிய நிலாவுக்கு அண்மையாக ஆனால் நிலாவோ அப்பப்போ மறைகிறது நட்சத்திரமோ என்றுமே மறைவதில்லை ! இவண் நொச்சியான்
-
- 0 replies
- 637 views
-
-
சின்னச் சின்ன பொன்மணிகள் செல்லச் செல்லக் கண்மணிகள் கனவுகள் சுமந்த வெண்புறாக்கள் இரத்ததில் ஊறைந்தன செல்வங்கள் மலரத்துடித்த இளம் மொட்டுகள் தரணியிலே அநாதைக் குஞ்சுகள் அன்புக்கு ஏங்கிய ஜீவன்கள் இப்படி உறங்கி இருப்பதைப்பாருங்கள் புத்தனின் போதனையும் இதுதானோ? இயலாதவன் வேலை சரிதானோ? உலகத்தின் பார்வைகுருடு தானோ? தமிழனுக்கு சாபம் இது ஏனோ? செஞ்சோலைக் தோட்டத்தில் மலந்தார்கள் உதவும் கரங்களில் தவழ்ந்தார்கள் மக்களுக்கு உதவ ஒன்று கூடினார்கள் இரும்புக் கழுகுக்கு இறையாகினார்கள் இறைவனே இல்லையோ இதைப்பாருங்கள் தமிழிழ்த்தாயும் தாங்குவாளா சொல்லுங்கள் இரத்தமே கொதிக்குது உறுதிகொள்ளுங்கள் இதற்குபாவிகள் விரைவில் பாடம் கற்பார்கள்
-
- 5 replies
- 1.4k views
-
-
மலரின் சிதைவொன்று காணொலியில்.......... கவிதை...... விடுதலைக்காய் விதையான எங்கள் வீரச் சின்னமொன்றை சிதைத்த காட்சி கன்டதுமே கண்களிலே இரத்தத் துளி...... கருகிய மலரைக்கூட கசக்கிய காட்சிகண்டால் புத்தரும் நடுங்கிடுவார்.. கிட்லரும் ஓடிடுவான்.... ஜேசு நாதர்கூட; மறுபடியும் சிலுவையிலே ஏறிடுவார்..... தன் தாயும் சகோதரியும் பெண்ணென்று நினைக்கவில்லை... அவள் போராளியென்றாலும் பெண்ணென்று நினைக்கவில்லை... கருகிய மலரையும் கற்பழித்த பயங்கரம்..... அதைக் கனவில் கண்டாலும் மனதில் மாறா வடுவாகும் மனதில் அது நிரந்தரம்...... நாயென்றும் சொல்லமாட்டேன் அது நன்றிக்கு வாலாட்டும்.... பேயென்றும் சொல்லமாட்டேன் பெண்ணென…
-
- 6 replies
- 2.6k views
-
-
மலருக்கு மட்டுமல்ல……. ஊருக்குள் புகுந்த இராணுவத்தால் உருக்குலைந்த தெருக்கள் ஊமையாய் அழுதன தெருவில் தேடுவாரற்ற ஒரு கட்டாக்காலி நாயின் தீனமான ஊளைஒலி நிலவுகூட முகம் மறைத்து முக்காடிட்டக் கொண்டது விண்மீன்கள் மட்டும் விட்டுவிட்டு விழிமலர்த்தி என்னை நோட்டமிட்டன சோதிக்கவென்று கொண்டு சென்ற ஏன் அண்ணன் வேலிக்கு அருகில் பிணமாக பள்ளிக்குச் செல்லவென துள்ளிச் சென்ற என் தங்கை வெள்ளி முளைத்த பின்னும் வீடு திரும்பவில்லை வேலைக்குச் சென்ற வேளையில் என் அப்பா ஸெல் அடியில் சிக்கி சிதறிப் போய் விட்டார் அடுப்பங் கரையினிலே ஆரவாரமேதுமின்றி அடுத்த வீட்டுப் பூனையின் அமைதியான தூக்கம் அங்கு அம்மா மட்டும் அசைவதிலிருந்து இன்னும் உயிரிருப்பதை…
-
- 7 replies
- 1.3k views
-
-
உங்களைச் சுற்றி மௌனம் மட்டுமே மலர்ந்து நிற்கிறது மனதுக்குத் தெரியாத மர்மங்களில் .. எங்களைச் சுற்றி இனங்கள் மட்டுமே இடித்துக் கொண்டு நிற்கிறது.. மனதுக்குத் தெரிந்த மர்மங்களில் ...! http://tamilpaingili.blogspot.com.au/2011_11_01_archive.html
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழ் எழுத்தாளர் இணைய அகம் எமது வேணடுகோளை ஏற்று கவிதைத் தொடரில் பங்குபற்ற ஆதரவு தந்த தங்கள் அனைவருக்கும் தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் சார்பாக பணிவன்பான நன்றிகளை வணக்கத்துடன் தெரிவித்து இத்திட்டத்தில் இணைந்துள்ள படைப்பாளிகளின் பெயளர்களை இங்கே மகிழ்வோடு பதிவு செய்கின்றோம். திரு.பொலிகை ஜெயா - சுவிஸ் திருமதி. கோசல்யா சொர்ணலிங்கம் - ஜேர்மனி திருமதி.சுமதி பாலசசந்தர் - பிஜித்தீவு திருமதி. சுபாஜினி சிறீரஞ்சன் - டென்மார்க் திருமதி. ரஜனி அன்ரன் - ஜேர்மனி திரு. ஆதவன் கதிரேசர்பிள்ளை – டென்மார்க் திருமதி. பாமா இதயகுமார் - வன்கூவர், கனடா திருமதி.வேதா இலங்காதிலகம் - டென்மார்க் திருமதி. மாலினி மாலா – ஜேர்மனி செல்வி. சறீகா சிவநாதன் - ஜேர்மனி திரு. நோர்வே நக்கீரா – நோர்வே திரும…
-
- 25 replies
- 3.1k views
-
-
-
- 7 replies
- 1.9k views
-
-
மலர் கொண்டு வருவன் .......... புலம் பெயர் நாட்டிலே என் தாய்க்கு ஒரு நினைவலை தாலாட்டு பத்து மாதம் சுமந்து பெற்று பண்புமிகு பாசமுடன் பேறு எடுத்த கடைக்குட்டிபேட்டை நான் ,பாலுட்டி தாலாட்டி பண்புடன் ,நல்ல பழக்கமுடன் பாங்கை அனைத்து வளர்த்திடாள் பள்ளி சென்று நானும் படிகையிலே பக்குவமாய் இ பாடங்கள் பலதும் சொல்லிதந்தவளிகாட்டி கடை குட்டி என் மீத கூடிய கரிசனம் கண்ணன் மணி போல காத்து கல்லூரிக்கு அனுய்பி வைத்தாள்விடுதி விட்டு வீடு வந்தால் விசேடமாய் சாப்பாடு விதவிதமாய் பல்கலைக்கு காலடி நான் வைத்த போது கண் கான தேசம் கவனமடி கன்ன்மனியே கருத்தாக படித்து பட்டமும் பெறப்பட்ட போது .................
-
- 12 replies
- 2.2k views
-
-
(முல்லை செஞ்சோலை வளாகத்தில் சிறீலங்காவின் வான் படையினரால் 61 சிறுமிகள் கொல்லப்பட்டதின் எதிரொலி... ) கண்மணிகள் சோலை மீது வான் பறவை பறந்தது! வடிவான வளர் இளம்பிறைகளை வாடி வதங்கச் செய்தது! தலைவன் அடி தாங்காது ஓடி மறையும் கோளைகாள்... பேடித் தனம் செய்தனீர்! - உம் கோர முகம் காட்டினீர்! கொலர் உயர்த்திக் கொக்கரிக்காதீர்... மலர்களைப் பறித்த உங்களுக்கு மரணப் படுக்கை ரெடி! 'கலர்' கனவு ஏதேனும் இருந்தால் தீர்த்துக் கொள்ளும்! உம் 'உயிர்'ப்பறவை பறக்குமடா சீக்கிரம்! அழுது வடிவதால் ஏதும் ஆகாது தோழரே! சர்வதேச அரச மேடைகளில் குருத்துகளில் குருதி பூசியவன் …
-
- 1 reply
- 1.4k views
-
-
என்னைக் கவர்ந்த மலர்களே நான் சண்டை போடுவதும் பொறாமை கொள்வதும் உங்கள் மீது மட்டுமே அதெப்படி ஒர் நாளைக்கூட அழகாய் வாழ்கின்றீர்கள் என்னால் ஒர் மணித்தியாலத்தைகூட வாழ முடியவில்லையே இதனால் நித்தமும் தோற்றுப் போகின்றேன் உங்களிடத்தில் என்றாலும் உங்களின் மென்மையை எனக்குள் சேகரித்து வெற்றி கொண்டேன் இதற்காக என்னை தண்டித்து விட்டதே உங்கள் விதி உங்களைப் போல் நானும் சருகாய் காய்கிறேன் எனை கவர்ந்த மலர்களே உங்களின் மெளனச் சிரிப்பபை எனதாக்கி உங்கள் மென்மைக்குள் இன்னும் வாசம் செய்கிறேன் என்றோ ஒர் நாள் …
-
- 7 replies
- 1.5k views
-
-
மலர்ந்தது புத்தாண்டு !! காலமகள் பெற்றெடுத்தாள் மீண்டும்ஒரு மழலை - நம் கண்ணெதிரே தவழவிட்டாள் புதியதொரு வரவை! ஞாலமெலாம் மகிழ்ந்திருக்க மலர்ந்தது புத்தாண்டு - எழு ஞாயிறுபோல் உதித்ததம்மா நம்மையெலாம் ஆண்டு! ஆண்டுதொறும் அவனிதனை ஆண்டுகொள்வ தால்தான் - இதை "ஆண்டு"எனநாம் அழைத்தோமோ! அரியதொரு பேர்தான்! மீண்டுமொரு படிக்கல்லைத் தாண்டுகின்ற தால்தான் - நாம் மென்மேலும் புத்"தாண்டு"என் றழைத்தோமோ? நேர்தான்!... வான்புகழ்சால் தமிழா,நீ தாண்டுவதற் கென்று - இவ் வையகத்து வாழ்க்கைதனில் எத்தனையோ உண்டு! தான்பிறந்த மண்சிறக்க, தடைகளெலாம் வென்று - நீ தாண்டிடுவாய்! தழைத்திடுவாய், சாதனைகள் கண்டு!…
-
- 6 replies
- 2.6k views
-
-
வாளெடுத்தவன் எலாம் வீரனென்றாவானா? தூரிகை தூக்கியவர் அனைவரும் -ஓவியர் ஆவாரா? பாரடா நண்பா - பகை -மெல்ல வெல்கிறது-! நீ இரு - நானும் இருக்கிறேன் என்பதா வேண்டுமிப்போ? நாம் இருக்கணும்- இதை நாவரழ சொல்லியும் - கேட்பார் யாருமிலை - நீயாவது - கேளடா! பச்சைக்கிளியின் சொண்டில் -பற்றி எரியும் அமிலம்-ஊற்றுவார்- பாவமிது என்று நீ சொன்னால் அந்த பகுதியையே இழுத்து மூடுவார்! ஏனடா இப்பிடி-? எலும்பும் தசையும் மட்டுமா- மனிதன் என்றாகும்-? உணர்வென்ற ஒன்று வேண்டும்-! நீ - உறைக்க சொல்லேண்டா - அவருக்கு! பார் பார்- கருத்து விடுதலை என்று பேசாதிருந்து கழுகுகள் - உன் தலையில் கூடு கட்டும் காலம் வந்தாச்சு - சீ போடா- அப்போ- எமக்காய் சிரித்துக்கொண்டே செத்தவர் கனவ…
-
- 13 replies
- 2.4k views
-
-
மல்லுக் கட்டி நிற்கின்றோம் ஜல்லி கட்டை நடத்திவிட கொள்ளிக் கட்டை கொண்டு வந்து தமிழ் குல தொன்மம் அழித்துவிட மல்லுக் கட்டும் உலகமயமாக்கலோடு நாமும் மல்லுக்கட்டி நிற்கின்றோம். புல்லுக் கட்டு போல எங்கள் புராதன தொன்மைகளை புதைத்துவிட்டு பல்லுக்காட்டி நிற்கச் சொல்லி பாடம் சொல்லும் கயவரோடு மல்லுக்கட்டி நிற்கின்றோம் #ஈழத்துப்பித்தன் 19.01.2017
-
- 0 replies
- 821 views
-
-
-
மழை - கிரிதரன் ஊரே வேண்டி நிற்க எனக்குமட்டும் மழை விருப்பமில்லை ஏனென்றா கேட்டாய் தோழி? காலடியில் நீரோடையும் சுவரெல்லாம் நீர்வீழ்ச்சியும் அடுப்பில் எரியும் நீரும் பார்த்திருக்கிறாயா நீ? வா வந்துபார் எம் குடிசையில்!! அடுக்களையும் அடுக்குமிடமும் ஒன்றாயிருக்க படுக்கையும் கூரையும் பகலில் கைகோர்க்கும் ஒற்றையறைக் குடிசைக்குள் பார்! கொஞ்சம் முயன்றால் எண்ணிவிடலாம் வின்மீண்களையும் எம்குடில் கூரைக்கண்களிடம் பலிக்காது உன் திறமை! ஓட்டைக்கு ஒன்றாய் இறங்கினாலும்போதும் காலடியில் ஓடையென்ன, ஓராழியே ஓடும் தோழி! ஒருநாள் இல்லை ஒவ்வொரு நாளும் பிழைத்திருக்க இருட்டுமுதல் இருட்டும்வரை ஓடவேணும் நாங்கள் ஓரிடம் முடங்கினால் உண்டியேது? கையூன்றிக் கர…
-
- 3 replies
- 1.2k views
-
-
வெண்ணிற பனி படலம் போர்த்தியஆடையுடனும், தலையில் மல்லிகை பூ வைத்து அலங்காரத்துடன் பவனி வரும் எங்களை தத்தெடுத்த இங்கிலாந்து தாய் கன மழை என்னும் கண்ணீரால் நனைவதேன். இயற்கை தனது பாதையில் சீராக நடக்கிறது நாம் மனிதர்கள் தான் சீரற்ற நடவடிக்கைகளால் இந்த பூமியை அழித்து கொண்டு இருக்கின்றோம் மனிதர்களே சிந்தியுங்கள் இந்த பூமி தாயை காப்போம்
-
- 4 replies
- 705 views
-
-
மழை சோ...... என்று பெய்த மழை சொல்லாமல் வந்த மழை சோம்பி இருந்த என் மனசு சோம்பலை ஓரத்தில் தள்ளி வைக்க..... சொட்டுச் சொட்டாய் வந்த மழை முற்றத்தில் முத்தமிட , வந்த புழுதி வாசம் மூக்கையடைக்க..... வண்டுவுக்கும் சிண்டுவுக்கும் கொண்டாட்டம் அவர் கொண்டாடம் காகிதகப்பலில் தெரியவர..... நானும் குழந்தையாகிப் போனாலும் , பெய்த மழையின் வேகத்தில் வீட்டுக்கூரை முகடு பிரிக்க !!!! என் வீட்டினுள் எட்டிப் பார்த்தது அழையாத விருந்தாளியாய் , நான் பானைகளால் கவசம் போட்டாலும் அங்கு என் ஏழ்மை சிரித்தது எக்காளமாய்..... மைத்திரேயி 05/02/2013
-
- 26 replies
- 3.2k views
-